Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. சமர்க்கள விரிப்புகள் 4 நாட்கள் இனி, அந்த தரையிறக்கம் நடந்த நாளில் இருந்து தரையிறங்கிய அணிகளுக்கு தரைவழி பாதை திறக்கும் வரை அங்கு என்ன நடந்தது என்பதை 'படைய மருத்துவர் தணிகை' தெரிவித்ததை வாசிப்போம். இவையாவும் 2021 ஆம் ஆண்டு அம்மருத்துவரால் எழுதப்பட்டவையாகும். ஆகையால் அனைத்தும் போருக்குப் பின்னான சூழ்நிலையில் எழுதப்பட்டவை என்பதை மனதில் நிறுத்துக. குடாரப்புத் தரையிறக்கம்: இரண்டாம் நாள் காலை மூலம்: vayavan.com, மார்ச் 28, 2021 இரத்தப் பெருக்கினை கட்டுப்படுத்துவத்தும் வேலைகளை மருத்துவப் போராளிகளைப் போலவே பெரும்பாலும் எமது எல்லா போராளிகளும் கச்சிதமாகச் செய்வார்கள். களத்தில் நிற்கும் எல்லா போராளிகளிடமும் எப்போதுமே இரண்டு அல்லது மூன்று குருதிதடுப்பு பஞ்சணைகள் (Field compressor) வைத்திருப்பார்கள். ஒரு காயத்திற்கு எப்படி கட்டுப்போட வேண்டும் எந்தெந்த காயங்களை எப்படியெல்லாம் நகர்த்த வேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்கும் தெரியும். எங்களிடம் காயமடைந்தவர்கள் கொண்டு வரப்ப்பட்ட போது அந்தக் கட்டுக்களை அவிழ்த்து மணலும் சேறும் சகதியுமாய் இருந்த காயங்களை சேலைன் மூலம் கழுவித் துப்பரவு செய்தோம். இப்போது காயங்களில் கிருமித் தொற்றுக்கள் (Infection) ஏற்படாது தடுப்பதற்காக நோயுயிர் முறிகள் (Antibiotics) போடப்பட வேண்டும். நோயுயிர்முறிகளில் பொதுவாக பென்சிலின் (Penicillin) வகை மருந்துகள் சிறந்தவை. இரண்டாம் உலகப்போர் காலத்திலிருந்து இன்று வரை பக்ரீரியாக்களுடன் அல்லது நுண்ணுயிர்களுடன் போரிட்டு மாந்தரின் உயிர்காக்கும் அந்த மருந்துகளை ஊசி மூலம் நாளத்தினூடக (Intravenous) ஏற்றவேண்டும். இரவு முழுவதும் அதிகரித்த தாக்குதல் காரணமாகவும் மின்சூழ் வெளிச்சம் கூட பாவிக்க முடியாத காரணத்தால் பென்சிலின் போடுவதற்கான சோதனை ஊசி (Penicillin sensitive test) போடுவது சாத்தியமற்று இருந்ததது. எதிரியின் சண்டை உலங்கு வானூர்தி வட்டமிட்டு வட்டமிட்டு தாக்கிய வண்ணம் இருக்க அநேகமான பெரிய காயக்காரருக்கு அம்பிசிலின் ஊசி மருந்துகளையே (Ampicillin Injection) ஏறினோம். இன்று காலையும் காயமடைந்தவர்களை வன்னிப் பெருநிலப்பரப்புக்கு அனுப்ப முடியாதிருப்பதை புரிந்திருந்தாலும் நாங்கள் மீண்டும் மீண்டும் கட்டளையாளர்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தோம். யாழ் மாவட்ட முன்னாள் கட்டளையாளர் திருமிகு செல்வராசா அவர்கள் தளமிட்டிருந்ததால் அவரின் மூலம் கடலில் எங்கள் படகுகள் வரக்கூடியதாக உள்ளதா என்பதை அறிந்து கொண்டோம். பெனிசிலினிற்கான சோதனை ஊசிகளை பெண் மருத்துவர் வித்தகி ஏற்றி பரிசோதித்துக் கொண்டிருந்தார். செறிவான குண்டுத் தாக்குதல்கள் நடைபெறும் ஒரு கொலைவலயத்தில் காயமடைந்தவர்களை ஒரே இடத்தில் வைத்திருந்தால் ஒரு எறிகணையிலேயே நிறைய பேரை இழக்க வேண்டிவரும் என்ற போரியல் பட்டறிவு எம்மிடம் இருந்தது. ஜெயசிக்குறுய் எதிர்ச்சமரின் போது தமிழீழத்தின் பரவலறி பாடகர் சிட்டு விழுப்புண் அடைந்து பண்டுவம் அளிக்கப்பட்ட பின்னர் தற்காலிக மருத்துவநிலையின் மீது வீழ்ந்த குண்டினால் மீளவும் பாரிய காயமடைந்தே வீரச்சாவு அடைந்தார். அந்தச் சம்பவம் போல இங்கேயும் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதால் அதிக முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டோம். வெவ்வேறு மரங்களின் கீழும் வெவ்வேறு இடங்களிலும் உள்ள பதுங்ககழிகளில் பாதுகாத்தோம். வெம்மை கூடிய அந்த மணல் பிரதேசத்தில் பென்னம்பெரிய மரம் ஒன்று கூட இருக்கவில்லை. பரட்டையான மரங்களும் நாவல் மரங்களும் அதிகம் இருந்தன. சிறுபராயத்தில் வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்குப் போனால் கடற்கரைக்கும் செல்வோம். எழில் மிகு மணல் திட்டிகள் தாண்டிச் செல்வது கனி பறிக்கஇ ஆம் நாவல் கனி பறித்துச் சுவைத்து உண்பதற்கு! இன்றும் அதே கடற்கரையின் சற்றுத் தெற்கே வெற்றிக்கனி பறிப்பதற்காய் தரையிறங்கி நிற்கின்றோம் என்பதை மனம் எண்ணிக் கொண்டது! அந்த அருங்கனிக்காக நண்பர்களின் இன்னுயிர்களையும் அங்கங்களையும் கொடுக்கவேண்டி இருக்கின்றதே என நினைத்த போது நெஞ்சு கனத்தது. குண்டுகளால் நிலம் அதிர்ந்து கொண்டிருந்தாலும்இ நம்பிக்கைகளுடன் காலை விடிந்தது. தங்கை அருள்நங்கை ஈரத்துணியால் காயமடைந்த பொதுமக்கள் போராளிகளின் முகங்களை தாயன்புடன் துடைத்துக் கொண்டிருந்தாள். “உண்ண எதாவது கொடுக்கலாமா?” என்று அருள்நங்கை கேட்டாள். ஆம் எனச் சொல்லிவிட்டு சாப்பிடு வதற்கு என்ன கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டார் பொறுப்பு வைத்தியர். அப்போதுதான் எங்களின் உலர் உணவுப் பொதிகளும் தீர்ந்துவிட்டமை அவளிற்கு நினைவில் வந்தது. மூன்று நாட்களுக்குத் தேவையான உலர் உணவு தந்து அனுப்பப்படிருந்தாலும் சண்டையில் நின்ற போராளிகளும் தங்களது ஆயுதங்களையே அதிகம் கவனம் கொண்டிருந்ததால்இ மீதமிருந்த கொஞ்ச உணவுகளையும் தவறவிட்டுவிட்டார்கள். நாங்களும் உயிர் காக்கும் உன்னத பணியினை மிகச்சரியாக செய்ய வேண்டும் எனும் உந்துதலே மேலிட்டு நின்றதால் மருந்துப் பொருட்களையும் மருத்துவ தளபாடங்களையும் காவி வந்தோமே ஒழிய உலர் உணவுகளை கொண்டு வருவதில் ஆர்வம் காட்டியிருக்கவில்லை. இப்போது நோயாளருக்கு உணவு இல்லையே என்ற போது அனைத்து களமருத்துவ போராளிகளின் முகமும் வாடிவிட்டது. குடாரப்புத் தரையிறக்கம்: இரண்டாம் நாள் மாலை மூலம்: vayavan.com, ஏப்ரல் 3, 2021 குடாரப்பு தரையிறக்கத்தில் பல நூறு போராளிகளை சில மணி நேரத்தில் தரையிறக்கிய பணியில் பங்கு கொண்டு சிறப்பான பணிதனை ஆற்றியவர்களை கடந்து ஆனையிறவு வெற்றியை பற்றி கதைக்க முடியாது. அந்த வகையில் அலைகடலை தாண்டி தரைப்புலிகளை பக்குவமாய் தரையிறக்கிவிட்ட கடற்புலி லெப்.கேணல் எழில்கண்ணன் முதன்மை பங்கினை வகித்தார். பல்வேறு படையணிகளை வெற்றிகரமாக தரையிறக்கம் செய்துவிட்டு தொடர்ச்சியாக வந்த நடைகளில் ஆயுத உணவு வழங்கல் செய்திட தன்னால் இயன்றளவு முயற்சிகளை எடுத்தவர். வெற்றிகரமாக தரையிறக்கம் நடைபெற்ற இரண்டாவது நாள் எதிரி எமது நடவடிக்கையினால் அதியுச்ச விழிப்பு நிலையினை அடைந்துவிட்டதால் சிறீலங்கா கடற்படையினர் முழுமையான தமது பலத்தையும் மாங்கனித்தீவின் வடகிழக்கு திசையில் திருப்பிவிட்டிருந்தார்கள். நூறு கடல்மைல்களை துல்லியமாக அவதானிக்க கூடிய அதிநவீன இசுரேல் தயாரிப்பான “மிதக்கும் கோட்டை”கள் போன்ற கப்பல்கள் உட்பட பல சுப்ப டோரா படகுகள் வடமராட்சி கிழக்கின் கடல் முழுவதையும் ஆக்கிரமித்தன. காங்கேயன்துறை, திருகோணமலை கடற்படை தளங்களில் இருந்து விரைந்து வந்த எதிரியின் சுப்பர் டோறாக்கள் ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் பயங்கரத்தையும் விஞ்சியே நின்றன. அத்தனை கடல் படைவகுப்புகளையும் உடைத்துக் கொண்டு லெப்.கேணல் எழில்கண்ணன் தலைமையிலான கலத்தொகுதி சுண்டிக்குளம் கடலோரம் இருந்து தன் பயணத்தை தொடர்ந்தது. தாழையடியை அண்டிய கடலோரம் வரை வெற்றிகரமாக பெருமளவு உடன் சமைத்த உணவு, உலர் உணவு மற்றும் தகரி எதிர்ப்பு ஆயுதமான எஸ்.பி.ஜி-9(ஸ்PG – 9) உட்பட சில கனவகை ஆயுதம் உட்பட நடைபேசி(வோக்கி)களுக்கான மின்கலம் உட்பட அந்த களத்துக்கான இன்றியமையா பொருள்களுடன் அந்த கலத்தொகுதி வந்து கொண்டிருந்தது. வளர்ச்சியடைந்த நாடுகளின் உயர் கடற்படை பயிற்சி மற்றும் அதிநவீன கண்காணிப்பு வசதிகளுடன் கடலில் நின்று கொண்டிருந்த எதிரியின் தாக்குதல் படைவகுப்பினுள் ஈற்றில் அந்தப் படகு அகப்பட்டுக்கொண்டது. 'கடற்சூரியன்' என புகழப்படும் இந்த வீரன் அந்த நிலையிலும் தன்னையும் கலத்தொகுதியையும் சம நிலைப்படுத்தி தனது படகினை விடுதலைப் புலிகளினால் தரையிறக்கத்தின் மூலம் புதிதாக தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்த செம்பியன்பற்று கடற்கரையினை நோக்கி செலுத்திவிட்டிருந்தார். படகு தரைதட்டிய சில விநாடிகளில் மயக்க நிலையினை அடைந்தார். தலையில் ஏற்பட்ட பலமான காயமே இந்த வீரனை கோமா நிலைக்கு இட்டுச் சென்றது. கலத்தொகுதிக் கட்டளையாளரான லெப்.கேணல் எழில்கண்ணன் விழுப்புண் அடைந்த நிலையில் செம்பியன்பற்றில் அன்றிருந்த களமுனை வைத்தியசாலையில் எங்களால் சிகிச்சை அளிக்கப்பட்டார். அங்கேயே பராமரிக்கப்பட்ட எழிற்கண்ணன் தரைப்பாதை பிடிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து கட்டைக்காட்டில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவர் தூயவன் அவர்களின் கடமையிலிருந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். உடல் தேறிய பின்னரும் பல களங்களை கண்ட இந்த வீரன் ஒரு ஊர்தி நேர்ச்சியில் சிக்கி 2006 ஆண்டு புரட்டாதி மாதம் சாவடைந்தார். ******
  2. எங்கள் இனத்திற்கு தாங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி... சென்று வாருங்கள்.
  3. படுகொலை விரிப்புகள் புத்தகம்: தமிழினப் படுகொலைகள் 1956-2008 பக்கம்: - மொழிபெயர்ப்பு: நன்னிச் சோழன் நூல் வெளியீட்டு ஆண்டு: 2005 ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, 12 ஆகஸ்ட் 1990 படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I 11.08.1990 அன்று இராணுவத்தினர் செங்கலடி, கிரான் போன்ற கிராமங்களைச் சுற்றிவளைத்து மக்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். இராணுவத்தினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் காயமடைந்தவர்களில் பத்துப் பேரிற்கும் மேற்பட்டவர்கள் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்கள். 12.08.1990 அன்று இரவு 11.00 மணிக்கும் 12.00 மணிக்கும் இடையில் இராணுவத்தினரும் முசுலிம் குழுக்களும் இணைந்து வைத்தியசாலையிற் சிகிச்சைபெற்று பொதுமக்கள் பத்துப் வைத்தியசாலையினுள் வைத்தே வெட்டியும் சுட்டும் படுகொலை செய்தார்கள். ஏறாவூர் வந்த பேரையும் *****
  4. இதுமட்டுமில்லை, நான் வாழும் நாட்டில் நடைபாதையில் நடந்து செல்லும் போது ஒரு சிவப்பு நிற திரவமொன்றை துப்பித் துப்பிச் செல்கின்றனர். மண்ணிற நடைபாதையில் இந்த சிவப்பு நிறத்தைப் பார்கும் போதே அருவெருப்பாக இருக்கிறது.... குப்பை வாளிகள், இவங்கள். 🤮
  5. படுகொலை விரிப்புகள் புத்தகம்: தமிழினப் படுகொலைகள் 1956-2008 எழுத்துருவாக்கம்: வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம் பக்கம்: - நூல் வெளியீட்டு ஆண்டு: 2005 சேவியர்புரம் படுகொலை, 7 ஆகஸ்ட் 1990 படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I குறவர் பழங்குடியினர் 1950ல் குடியமர்த்தப்பட்ட இடத்தின் பெயர்தான் அம்பாறையில் உள்ள சேவியர்புரம். 7ம் தேதி ஆகஸ்ட் மாதம், 1990 குறவர் பழங்குடியினரின் வீடுகள் கொழுத்தப்பட்டு, அந்த சமூகத்தைச் சேர்ந்த கொல்லப்பட்டனர்.இவர்களது இளைஞர்களும் கோயில்கள், பாடசாலைகள் சமூகப் பொதுமண்டபங்கள் யாவும் இடிக்கப்பட்டதோடு, இச்சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என அனைவரையும் மனிதவதைக்கு இந்த நாளில் உள்ளாக்கப்பட்டனர். குறவர் சமூகத்தின் மீது எவ்வித காரணங்களுமின்றி வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இச்சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இஸ்லாமிய ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர்கள் என பின்னர் தெரியவந்தது. விடுதலைப்புலிகள் இச்சமூகத்தோடு உறவு வைத்திருந்தார்கள் என்னும் குற்றச்சாட்டோடு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மினியக்கா என்ற பெண்மணி சேவியர்புரம் தாக்குதல் குறித்து சொல்லிய போது, சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார், மாசன்னா என்ற வயதான பெண்மணி குறவர் பழங்குடியினர் வாழ்ந்து வந்த சேவியர் புரத்திலிருந்த மற்றொரு பாதிக்கப்பட்ட நபராவார். அந்த வயதான பெண்மணி தாக்குதல் நடத்தியவர்கள் எல்லோரையும் தனக்கு தெரியும் என்று கூறினார். இப்பெண்மணி வாழ்ந்து வரும் இடத்தின் அருகிலே இருந்த நெல் உற்பத்தியாளர்கள்தான் அன்று தாக்குதல் நடத்திய வன்முறையாளர்கள். அந்த இஸ்லாமிய நெல் உற்பத்தியாளர்களின் வயல்களிலேயே அந்த குறவர் சமூகத்தினர் வேலை செய்து வந்தனர். அம்மாதிரியான உறவுள்ள மக்களின் கிருத்துவகோயில், பாடசாலை, வீடுகள் என அனைத்தையும் நிர்மூலம் ஆக்கினது மட்டுமல்லாது அம்மக்களையும் அன்று கொன்று குவித்தனர். வீடுகளை இழந்து தமது வாழ்வாதரங்களை தொலைத்து அன்று கண்ட கொடுமைகளை தாங்க முடியாத அம்மக்களில் சிலர் பின்னர் தற்கொலை செய்து மாண்டனர். *****
  6. படுகொலை விரிப்புகள் புத்தகம்: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I பக்கம்: 134-137 மொழிபெயர்ப்பு: நன்னிச் சோழன் நூல் வெளியீட்டு ஆண்டு: 2007 திராய்க்கேணி படுகொலை, 6 ஆகஸ்ட் 1990 படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I திராய்க்கேணி முதலில் அம்பாறையின் மிகவும் இதமான கோட்டத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் தென்னை பெருந்தோட்டமாக இருந்தது. ஒலுவில், மீனோடைக்கட்டு மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய இடங்களில் காணியற்ற முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் ஆகிய இருதரப்பு மக்களினதும் இன்னல்களைக் கண்டு இரக்கப்பட்ட முதலாளியால் அந்தத் தோட்டம் ஒரு ஏக்கருக்கு 200/- என்ற மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டது. காரைதீவைச் சேர்ந்த நாகப்பர் சுப்ரமணியம், பெரிய கணபதிப்பிள்ளை உபாத்தியார் போன்ற பல்வேறு குமுகாய தலைவர்கள் இவ்வூரை வெற்றிகரமான கமக் கோட்டமாக வளர்ச்சியடைய கடுமையாக உழைத்தனர். 06.08.1990 அன்று ஊர் மக்களின் அமைதியும் கடும் உழைப்பும் அழிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் ஊரிற்குள் நுழைந்து தமிழர்களின் வீடுகளுக்கு தீ வைத்து, தமிழ் ஊர் மக்களைத் தாக்கியதோடு அவர்களின் சிதைந்த சடலங்களை அருகிலுள்ள இந்து கோவிலில் வீசினர். இந்த கொடூரமான குற்றத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளிடமிருந்து பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள், அத்தகைய தாக்குதலுக்கு தமிழர்களிடமிருந்து எந்த தூண்டுதலும் இல்லை என்பதை வெளிப்படுத்துகின்றன. நிகழ்வுகளின் பின்னணி, தாக்குதலுக்கு வழிவகுத்த நோக்கங்களும் முன்னங்களும் (intension) மற்றும் அது எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பவற்றை ஒரு பெண் சாட்சி வெளிப்படுத்தினார். சாட்சி | படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I ** சான்றுரைக்கப்பட்ட அறிக்கையின்படி, ஒரு சிறுமி பிடிபட்டு வன்புணரப்பட்டு, அதன் பிறகு, நெருப்பில் வீசப்பட்டார். பாதி எரிந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்பாளர்கள் மீட்டு புதைத்தனர். *****
  7. படுகொலை விரிப்புகள் புத்தகம்: தமிழினப் படுகொலைகள் 1956-2008 எழுத்துருவாக்கம்: வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம் பக்கம்: - நூல் வெளியீட்டு ஆண்டு: 2005 திராய்க்கேணி படுகொலை, 6 ஆகஸ்ட் 1990 படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I 1954ஆம் ஆண்டு அமரர் தர்மரட்ணம் என்பவரின் தென்னந்தோட்டத்தில் அமைக்கப்பட்ட குடியேற்றக் கிராமம் திராய்க்கேணியாகும். திராய்க்கேணிக்கு கிழக்குப் பக்கத்தில் ஒலுவில் கிராமமும் தெற்குப் பக்கத்தில் பாலமுனையும் அமைந்துள்ளது. இக்கிராமம் அட்டாளைச்சேனை உதவிஅரசாங்க அதிபர் பிரிவின் கீழும் அக்கரைப்பற்று நீதிமன்று நியாதிக்கத்தின் கீழும் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் முன்நூற்றெழுபதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் முன்நூற்றைம்பது வீடுகளில் வாழ்ந்து வந்தார்கள். இவர்களின் பிரதான தொழில் விவசாயமாகும். 05.08.1990அன்று திரியாய்க்கேணியில் வசித்து வந்த முசுலிம்களில் ஒருவர் காட்டுக்குச் சென்றவேளை மர்மமான முறையில் உயிரிழந்ததனைத் தொடர்ந்து 06.08.1990அன்று அக்கிராமத்திலிருந்த நூறு-நூற்றைம்பது பேர் கொணட் முசுலிம் குழு திரியாய்க்கேணியிலிருந்த தமிழர்களைத் தாக்கினார்கள். தாக்கக் கத்தி, வாள், பொல்லு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தியதுடன், வீடுகளையும் அவர்களின் உடைமைகளையும் தீயிட்டு எரித்தார்கள். முசுலிம்களின் தாக்குதல் தீவிரமடைய கிராமமக்கள் அருகிலிருந்த பிள்ளையார் கோயிலில் அடைக்கலம் புகுந்தார்கள். கோயிலுக்குள் நுழைந்த முசுலிம் குழுக்கள் அடைக்கலம் புகுந்த மக்களை வாள்களால் வெட்டியும் கத்தியாற் குத்தியும் தாக்கினார்கள். இவர்களின் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு முசுலிம்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் போது கோயிலுக்கு வெளியில் சிறீலங்கா இராணுவத்தினர் பவள் கவச வாகனத்தில் தாக்குதல் நடத்துபவர்களிக்குப் பாதுகாப்பினை வழங்கிக்கொண்டிருந்தார்கள். எஞ்சியிருந்த நூற்றிஐம்பது குடும்பத்தினர் அகதி முகாமுக்குச் சென்றனர். தாக்குதலில் தொண்ணூறிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். முன்நூற்றுநாற்பதிற்கும் மேற்பட்ட வீடுகளும், எழுபது மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதியான சொத்துக்களும் எரிக்கப்பட்டன. இச்சம்பவத்தில் கொல்லப்பட்டோர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது) இளையதம்பி மயிலாப்போடி இராமக்குட்டி மயில்வாகனம் - தொழிலாளி 18 இராசதுரை பிரகலா - நாகலிங்கம் தம்பிராசா - நல்லதம்பி புலேந்திரன் தொழிலாளி 27 கனகரத்தினம் அழகையா ஊழியர் 35 கனகரட்ணம் சுப்ரமணியம் கந்தக்குட்டி பூபாலப்பிள்ளை - தொழிலாளி 19 கந்தக்குட்டி வேலாயுதம் கா.பாஸ்கரலிங்கம் தொழிலாளி 39 கா.சாமித்தம்பி - விவசாயம் - 43 காந்தன் நவரட்ணம் - காளிக்குட்டி பாக்கியராசா காளிக்குட்டி தம்பிப்பிள்ளை கதிரன் கணபதி கதிரன் பாக்கியராசா தொழிலாளி 34 கணபதி காளிக்குட்டி ஊழியர் 50 கணபதி காளிமுத்து வைத்தியர் 45 கணபதிப்பிள்ளை கிருஸ்ணன். கணபதிப்பிள்ளை அமிர்தலிங்கம் பூபாலப்பிள்ளை புலேந்திரன் தொழிலாளி 30 பூபாலப்பிள்ளை ஏகாம்பரம் தொழிலாளி 24 தம்பியப்பா கோபால் தொழிலாளி 50 தம்பிமுத்து ஆனந்தராசா மு.கணபதி தொழிலாளி 76 மா.குஞ்சித்தம்பி தொழிலாளி 50 மா.ஜெயசீலன் தொழிலாளி 24 மார்க்கண்டு கிருபை தொழிலாளி 30 மார்க்கண்டு மயில்வாகனம் மார்க்கண்டு ஜெயக்குமார் - முருகன் இளையதம்பி தொழிலாளி 39 முருகேசு நாகேந்திரன் தொழிலாளி 28 பொன்னன் அழகையா தொழிலாளி 29 செல்லையா பாக்கியராசா தொழிலாளி 26 செல்வம் சீனித்தம்பி செல்லத்துரை கிருஸ்டியன் - செல்லத்துரை பாலச்சந்திரன் -- செல்லத்துரை அமிர்தலிங்கம் வேலன் கதிரேசப்பிள்ளை தொழிலாளி 44 வேலுப்பிள்ளை குணராசா வேலுப்பிள்ளை பாஸ்கரலிங்கம் தொழிலாளி 35 சாமித்தம்பி நாகராசா சாமித்தம்பி சௌந்தராஜன் - சின்னத்தம்பி கன்னி சின்னத்தம்பி தம்பிப்பிள்ளை சின்னத்தம்பி சிவசிதம்பரம் - சற்குணம் இளையதம்பி - சற்குணம் விஜயலட்சுமி வ.பாக்கியராசா தொழிலாளி 26 விஸ்வலிங்கம் அழகை *****

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.