Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. இறுவட்டு அட்டைகள் வேர் விடும் வீரம்/ வல்லமை தரும் மாவீரம் இவ்விரு பெயரிலும் வெளிவந்த இறுவட்டிலிருந்த பல பாடல்கள் தான் புலிகளால் இறுதியாக இசையமைக்கப்பட்ட பாடல்களாகும். அவை முறையாக ஒரு இறுவட்டாக்கப்பட்டு தகுந்த வெளியீட்டு நிகழ்வினூடு வெளியிடப்பட முன்னரே இறுதிப் போரின் கடைசிக் கட்டம் நடந்தமையால் அவை புலிகளால் வெளியிடப்படவில்லை. எம்மவர்களின் அழிவிற்குப் பின்னர் - தமிழீழ ஆதரவாளர்களால் இப்பாடல்கள் மீட்டெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர், அவை வெளிநாட்டிற்கு கொண்டுவரப்பட்டு இங்கிருந்து இரு பெயர்களில் வெளியாகின. இதற்குள் உள்ள "கண்ணுக்குள்ளே வைத்துக் காத்திடும் வீரரை" என்ற பாடல் 2009இற்கு முன்னரே புலிகளால் தனிப்பாடலாக வெளியிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இவை தமிழீழ நடைமுறையரசின் நேரடி அலுவல்சார் வெளியீடுகள் இல்லாமையாலும் இவ்விறுவட்டுகளின் பெயர்கள் தமிழீழ நடைமுறையரசால் வழங்கப்படமாயாலும் நான் இவற்றின் அட்டைகளை இங்கே இணைக்கவில்லை.
  2. இறுவட்டு அட்டைகள் வேங்கைகளின் விடுதலை வேதங்கள் இது தமிழீழத்திலிருந்து வெளியான இரண்டாவது வெளியீடாகும். இதற்கு எழுதப்பட்ட ஓர் பாடலில் தலைவர் விரும்பியது போல சில வரிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு மாவீரர் துயிலமில்லத்தில் பாடுவதற்கான "துயிலுமில்லப் பாடலாக" வெளிவந்தது. இந்த இறுவெட்டின் மேல் 2009இற்குப் பிறகு நடைமுறையரசின் "புலிகளின் குரல்" நிறுவனத்தின் பெயரால் வணிகம் செய்யும் இவ் வலைத்தளம் தன்னிடம் கிடைக்கப்பெற்ற இவ்விறுவட்டினை நாசமாக்கியுள்ளது; இதனது அட்டையின் மேல் தன் நிறுவனத்தின் முத்திரையை பொறித்தது மட்டுமின்றி, ஒவ்வொரு பாடல்களிற்கும் நடுவில் 'www.pulikalinkural.com' என்ற ஒலியை ஒலிக்கவிட்டு அப்பாடல்களை உடனடியாக மீளப் பாவிக்கேலாத நிலமைக்கு ஆக்கியுள்ளது. இருப்பினும் அவ்வொலியை நீக்க இயலும். இந்து போன்ற புலி வியாபாரிகளால் தான் எம்மினம் இன்று இந்நிலைக்கு ஆளாகியுள்ளது.
  3. இறுவட்டு அட்டைகள் வெஞ்சமரின் வரிகள் நீளும் இசைவெளியில் 'வெஞ்சமரின் வரிகள்' திறனாய்வு: அமரதாஸ் மூலம்: எரிமலை (மார்ச் 2003) பக்கம்: 38-40 இசையும் மொழியும் மனிதனுக்கேயுரிய தனிப்பெரும் சொத்துக்கள். இவை, இல்லா உலகை மனிதனால் ஜீரணிக்க முடியாது. மொழியும் இசையும் முழுமனித இனத்திற்கேயுரிய தனிப் பண்புகள் என்று கூறுகின்றது 'த மியூசிக்கல் மைன்ட்' என்ற நூல். மொழியும், இசையும் மனிதனின் தொடர்பாடல் முறைகளுக்கு உயிர்நாடிகள். மொழியைப்போலவே இசையும் பேசக்கூடியது. இசை மொழி உணர்வுகளுடன் பேசுவது. இசை பேசும் போது மனிதனின் உணர்வுகள் கேட்கின்றன; உள்வாங்கிக் கொள்கின்றன. இசையானது உணர்வுகளைச் சுண்டி இழுக்கக் கூடியது. அலைபாயும் மனதை ஆசுவாசப்படுத்தக் கூடியது. இசை குறிப்பிட்டதொரு மனநிலையை உருவாக்குகிறது அல்லது மாற்றுகிறது. 1930கள் மற்றும் 40களில் கிட்லருடைய வசீகரிக்கும் பேச்சை மக்கள் கேட்பதற்காக உணர்வைத் தட்டியெழுப்பும் அணிவகுப்பு இசையை 'நாஸிகள்' பயன்படுத்தினர் என்று சொல்லப்படுகிறது. இதிலிருந்து இசையின் வலிமையைப் புரிந்துகொள்ளலாம். இசை புதிது புதிதாக உணர்வுகளைக் கட்டமைத்துச் செல்லும் வித்தை. இசையே ஒரு தனி மொழி. இது உலகெங்கும் எல்லாத்துறைகளிலும் ஊடுருவி வேலை செய்திருக்கிறது. இசையால் மனத்தை மயக்கமுடிகிறது. அதனால் நன்மையோ தீமையோ செய்யத் தூண்டுவிக்க முடிகிறது. சிலவகை இசையை சிறுபிள்ளைகள் கேட்டுக் கொண்டே இருந்தால், அது அவர்களது அறிவுப் புலமையையும் உணர்ச்சி ரீதியலான வளர்ச்சியையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. "நகர முடியாமல் தவிக்கும் நரம்புக் கோளாறுகளுடைய நோயாளிகள் மீதும் இசை ஏற்படுத்தும் தாக்கம் சில சமயங்களில் மலைக்க வைக்கிறது" என்று 'இசையும் மனமும்' என்ற நூலில் 'அந்தோனி ஸ்ரோ' கூறுகிறார். இசை தனிவலிமையால் ஏராளமான நன்மைகளை விளைவிக்கின்றது. இந்த இசையே வேறுவிதமாக தீமைகளுக்கு தூபம் போடவும் செய்கிறது. சுய உணர்வையும், பகுத்தறிவையும் இழந்து நுகர்வோரை ஒருவித போதை உணர்ச்சிகளுக்கு அடிமைகளாக்கவும் செய்கிறது. எனவே இசையைக் கையாள்பவர்களும் நுகர்வோரும் அதை அறிவுபூர்வமாகவும் அணுக வேண்டிய தேவை உணரப்படுகிறது. உணர்ச்சிகளை வர்ணிக்க பல வாக்கியங்கள் தேவைப்படக்கூடும். ஆனால், இசையில் உணர்ச்சிகளை எளிமையாக ஓரிரு சுர அடுக்கிலேயே வெளிப்படுத்திவிட முடியும். தமிழரின் இசை முயற்சிகள் மிகவும் தொன்மையானவை. தமிழ்மொழி பண்டைக்காலத்தில் இயல், இசை, நாடகம் என மூன்று வகைகளாக பாகுபாடு பெற்று வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. முதற்சங்கப் புலவரில் ஒருவராகிய அகத்தியரால் இயற்றப் பெற்ற அகத்தியத்திலேயே தமிழ் மூன்று வகைகளாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் இக்காலத்திலே முதுகுருகு, முதுநாரை, களரியாவிரை, இசைமரபு, இசைநுணுக்கம், பஞ்சபாரதீயம், இந்திரகாளியம் போன்ற இசைத்தமிழ் நூல்கள் எழுந்திருக்கின்றன. அவை மறைந்து போயின. எனினும் பண்டைக்கால இசைத்தமிழ் வளர்ச்சியை அறிய தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, உதயணன் காதை போன்ற நூல்களும் இடைக்கால நூல்களான தேவாரம், பெரியபுராணம் போன்ற நூல்களும் இன்று உதவும். இன்றைய கர்நாடக இசைக்கு தேவாரப் பண்ணிசையே ஆதிமூல வடிவமாக விளங்குகின்றதென இசை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இசையானது தமிழரின் வாழ்வோடு இரண்டறக் கலந்திருக்கின்றது. பிறப்பிலிருந்து இறப்பு வரையான, வாழ்வின் பகுதிகளையெல்லாம் தாலாட்டிலிருந்து ஒப்பாரி வரையாக இசையால் நிறைத்து வந்த பாராம்பரியம் தமிழருடையது. இசைப்பாடல்களுக்கான தேவைகள் இன்றுவரை இருந்து வந்திருக்கின்றன. இனியும் இசைப்பாடல்களுக்கான தேவைகள் இருந்து கொண்டிருக்கும். வார்த்தைகளை அல்லது எண்ணங்களை உணர்ச்சிகளோடு சங்கமமாக்க இசை உதவுகிறது. பெரும்பாலும் இசைப்பாடல்களில் வார்த்தைகள் அவ்வளவு கருத்தாளம் மிக்கதாகவோ இலக்கியச் செறிவுள்ளதாகவோ அமைவதில்லை. பின்னணியில் பொருத்தமான இசை இசைந்து வருகையில் வார்த்தைகள் அல்லது எண்ணங்கள் கேட்போரின் உணர்வை எளிதாகவும் விரைவாகவும் கவர்ந்திழுத்து விடுகின்றன. இசையின் தன்மையிலேயே உணர்வு, செய்தி பெருமளவுக்கு வெளிப்படுத்தப்பட்டு விடுகின்றன. இசைப்பாடல் எழுதுவதென்பது இலகுவான காரியமல்ல. இசைப்பாடல் அடிப்படையில் கேட்டல் ஊடகமாக புரியும்படியானதாகவும் உள்ளதால் கேட்கும்போதே எளிமையானதாகவும் சூழ்நிலை புலப்படும் படியாகவும் ஒத்திசைவுடனும் அழகியல் அம்சங்களுடனும் எழுதப்படவேண்டி இருக்கிறது. பாடலைக் கேட்கும்போதே அப்பாடலின் சூழ்நிலையும் மைய உணர்வும் எம்முள் விரியவேண்டும். இதைச் செய்வதில் இசைக்கு முக்கிய பங்குண்டு. அகத்துள் ஊடுருவி படிமங்களை நிகழ்த்தக் கூடியதாக இசை இருக்கிறது. அதுவே ஒரு தனிமொழியாக இயங்கும் தன்மை கொண்டது. எனவே இசைப்பாடலில் வரிகளுக்கு அதிக முக்கியத்துவம்மில்லாது போகக்கூடிய நிலை தோன்றக்கூடும் விடுதலைப் போராட்ட சூழலில் வெளிப்படும் இசைப்பாடல்களில் வரிகளுக்கான முக்கியத்துவத்தைத் தவற விடுதல் நல்லதல்ல. வரிகளுக்கான விழிப்புணர்ச்சியை புதிய சிந்தனைகளை காலப்பதிவைச் செய்யவேண்டிய தேவை விடுதலைப் போராட்ட கால இசைப்பாடல்களுக்கு உண்டு. இசையும் வரிகளும் இணைந்த இசைப்பாடல்கள் தமிழீழ விடுதலைப் போராட்ட சூழலில் அதிகம் வெளிப்பட்டிருக்கின்றன. இவை, தென்னிந்திய தமிழ் சினிமாப் பாடல்களின் தாக்கம் அதிகமுள்ள ஈழத்தமிழ்ச் சூழலில் புதிய வரவாக புரட்சிப்போக்காக அமைந்திருக்கின்றன. போராட்டச்சூழல் இந்தப் புதிய போக்கின் தேவையை அதிகமதிகம் கொண்டிருந்தது. புதிய இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள்,பாடகர்கள், இசைக்கலைஞர்கள் தோன்றினர். இந்தப் போக்கில் போராளிகளும் பொதுமக்களும் கலந்திருந்தனர். பிரதானமான போராட்டசக்தியான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பல்வேறு பிரிவினரும் தனித்தனியாக இசைப்பேழைகளை உருவாக்கினர். தேவைகள் அதிக விளைச்சலை ஏற்படுத்தியிருக்கின்றன. அவற்றுள் கணிசமானவை வளர்ச்சி நிலையைக் காட்டுவன. அவற்றுள் பல காலப்பெறுமதி வாய்ந்தவையாயும் கலைத்தனமானவையாயும் வெற்றிபெற்ற படைப்புகளாகவும் நின்று நிலைக்கக் கூடியவை. அண்மைக் காலத்தில் புதிய வரவாக தமிழீழ இசைக்குழுவின் அமைப்பாளர் எஸ்.பி.ஈஸ்வரநாதனின் இசையமைப்பில் மலையவனின் ஒலிப்பதிவில் 'வெஞ்சமரின் வரிகள்' என்ற இசைப்பேழை மாலதிபடையணியின் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. 2002.10.10 அன்று 2ம் வெப். மாலதி நினைவு நாள் மற்றும் தமிழீழப் பெண்கள் எழுச்சிநாள் நிகழ்வில் அது வெளியிடப்பட்டது. "எல்லை கடந்துவரும் பகைவருக்கு அருகிலேயே எப்போதும் இருக்கும் எங்களின் ஓய்வேயற்ற களவாழ்வு வித்தியாசமானது. உறவுகளை நினைவுகளில் சுமந்தவாறு நெருப்பெரியும் நிலமெங்கும் உலவும் எங்களின் ஆன்மாவின் குரலாகவே இந்தப் பாடல்களை நாங்கள் உருவாக்கினோம். தென்றலையும் தீயாய் மாற்றும் ஆற்றல் மிக்க எங்கள் பெருந்தலைவர் பிரபாகரனின் விழிகளே எங்களின் ஊற்றுவாயாக இருக்கின்றது. களத்திலேயே வாழும் எங்களிடம் தலைவர் காட்டும் தாயன்பு ஈடிணை அற்றது. எங்களின் ஒவ்வொரு அசைவும் அவரின் ஆற்றலால் நெறிப்படுத்தப்படுகின்றது. தலைவரின் நினைவோடு தாய்மண்ணின் கனவைச் சுமந்து களமெங்கும் நடக்கின்ற நாங்கள் இதுவரை வெற்றிச் செய்திகளாகவே எங்கள் செவிகளை வந்தடைந்தோம். இப்போது விடுதலைப் பாடல்களாக வருகிறோம்" என்ற அறிமுக உரையுடன் தொடங்கி ஒன்பது பாடல்களைத் தாங்கி வந்துள்ளது இந்த இசைப்பேழை. ஏற்கனவே விடுதலைப்புலிகள் மகளிர் படையணியினர் 1993இல் 'விழித்தெழுவோம்' என்ற பெயரிலும் 1995இல் 'நெருப்பு நிலவுகள்' என்ற பெயரிலும் 2000 இல் 'சூரியப்புதல்விகள்' என்ற பெயரிலும் இசைப்பேழைகளை வெளியிட்டுள்ளனர். மகளிர் படையணிகளில் ஒரு படையணியான மாலதி படையணி இப்போது 'வெஞ்சமரின் வரிகள்' என்ற பெயரில் 2002 இல் ஒரு இசைப்பேழையை உருவாக்கி வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இம்முயற்சிகள் விடுதலைப் போராட்டத்தில் பெண்போராளிகளின் தீவிர ஈடுபாட்டையும், பங்களிப்பையும் ஆர்வத்தையும் புலப்படுத்துகின்றன. இனி, 'வெஞ்சமரின் வரிகள்' இசைப்பேழைபற்றி ரசனைத்தளத்தில் எழுந்த சில கருத்துக்களை சுருக்கமாக முன்வைக்கலாம். மாலதி படையணி, போராட்டப் பாதையில் எதிர்கொண்ட சவால்களையும், அனுபவங்களையும், சாதனைகளையும் 'வெஞ்சமரின் வரிகள்' இசைப்பேழைவாயிலாக பதிவு செய்யும் முயற்சியில் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. இசைப்பேழையினது 1ஆவது பாடலாக "மாலதி என்னும் எம் போரணி..." என்ற பாடல் உள்ளது. படையணிப் போராளிகள் படையணிபற்றிப் பாடுவதான பாடல் இது. 2ஆவது பாடலான "காவலரண் மீது காவலிருக்கின்ற..." என்ற பாடல் பெண் போராளியின் தகப்பன் அவளைப் பற்றிப் பெருமிதமாகப் பாடுவதாக அமைந்திருக்கிறது. வரிகளுக்கேற்ப மெட்டும் இசையும் கையாளப்பட்டிருக்கிறது. 3ஆவது பாடலான "தென்றல் தீயாய் மாறும் காலம்..." என்ற பாடல் போராளிகள் தமது தலைவனின் கருத்துக்களை முன்வைத்துப் பாடும் பாடலாக வித்தியாசமான பாடல் எழுத்து முயற்சியாக இருக்கிறது. 4ஆவது பாடலான "மின்னல் இடி மழை கொண்டதோர்..." என்ற பாடல் புரட்சிப் பெண் எனும் படிமத்தை அதன் பரிமானங்களைச் சுட்டும் பாடலாகத் தோன்றுகிறது. இசைப்பேழையினது 5ஆவது பாடலான "தோளின் சுமைகளில் பங்கேற்று..." என்ற பாடல் பெண் போராளிகளின் போராட்டப் பங்களிப்பை வெளிப்படுத்தி பெருமிதமாக ஆண் போராளிகள் பாடும் பாடலாக அமைந்துள்ளது. பொருத்தமான மெட்டும் இசையும் கையாளப்பட்டிருக்கிறது.6ஆவது பாடலான "கோப்பாய் வெளிக்காற்றில்..." என்ற பாடல் மாலதி பற்றியும் மாலதி படையணிபற்றியும் பெண்போராளி பாடுவதாக அமைந்துள்ளது. 7ஆவது பாடலான "இருளின் திசைகள் புலரும் வரையும்..." என்ற பாடல் மாலதி படையணியின் எழுச்சிப்பாடலாக அமைந்துள்ளது. வீறார்ந்த மெட்டும், இசையும் பொருத்தமாகக் கையாளப்பட்டிருக்கின்றன. பாடும்குரல் ஆண்குரலாக அமைந்திருப்பது பொருத்தமற்றுத் தெரிகிறது. பெண்கள் படையணியின் எழுச்சிப்பாடலுக்கு பெண்குரலே அதிகம் பொருத்தமாய் இருந்திருக்கும். 8ஆவது பாடலான "கல்லறைகள் உங்களுக்காய்..." என்ற பாடல் வீரச்சாவடைந்த போராளிகளுக்கானதாய் அவர்களின் உயர்வை, தியாகத்தைப் பதிவு செய்வதாக அமைந்திருக்கிறது. வரிகளுக்கேற்ற அமைதியான மெட்டும், இசையும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 9ஆவது பாடலான "வெல்லும் தலைவன் விழியில்..." என்ற பாடல் மாலதி படையணிப் போராளிகள் பாடுவதாக உள்ளது. இதன் மெட்டு கர்நாடக சங்கீத பாணியில் அமைக்கப்பட்டிருக்கிறது. மெட்டு நல்லதாகவே உள்ளது. ஆனால் பாடல் வரிகளின் உணர்வுகளுக்குப் பொருந்தாமல் ஒத்திசையாமல் நர்த்தகிப்பதாகவே படுகிறது. பெருமளவு நிறைவாக பாடல்களுக்கேற்ற மெட்டும், இசையும், குரலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவே உணர முடிகிறது. சில பாடகர்கள் பாடும்போது குரலில் அநாவசியமான பாவங்களைக் காட்டுகிறார்கள் போலிருக்கிறது.'வெஞ்சமரின் வரிகள்' இசைப்பேழையை முழுதாகக் கேட்டு முடித்ததும் நல்ல பாடகர்களும், பாடலாசிரியர்களும், இசைக்கலைஞர்களும் நம் மத்தியில் இருக்கிறார்கள் என்று நம்பிக்கை கொள்ள முடிகிறது. சில பாடல்களின் வரிகள் உணர்வு பூர்வமானவையாகவும் கவித்துவமாகவும் அமைந்திருக்கின்றன. சில பாடல்கள் ஒத்திசையாத வரிகளாலும் வலிந்து புகுந்த வார்த்தைகளாலும் இடறுப்படுவதாகத் தோன்றுகிறது. மெட்டமைப்பிலும் இசையிலும் சில சறுக்கல்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பாடல்களின் இசைக்கோர்ப்பில் இசையமைப்பாளரின் திறமை பளிச்சிடுகிறது. ஒவ்வொரு பாடல்களுக்கும் இடையில் உள்ள இடை வெளிகளில் பாடலாசிரியர், பாடியோர், இசைக்கலைஞர்கள் ஆகியோரது விபரங்களைச் சேர்த்திருக்கலாம். இப்படிச் செய்வதனூடாக அவர்களது பங்களிப்பை கௌரவிக்க முடியும். அவர்களது பங்களிப்பும் முயற்சியும் பொருத்தமாகவும் சரியாகவும் பதிவு செய்யப்படவேண்டியது அவசியம். இல்லையேல் எந்தப் பாடலை யார் எழுதினார் அல்லது பாடினார் என்று தெரியாமலேயே போய்விடும். இசைப்பேழையின் இறுதியில் பொதுவாகப் பெயர் விபரங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றனவெனினும் தனித்தனியாக இனங்காட்டப்படவில்லை. இந்த இனங்காட்டலை இனிமேலாவது இசைப்பேழைகளை உருவாக்குவோர் செய்வது நல்லது. இந்தியாவில் திரைப்படங்களிலேயே அதிக இசைப்பாடல்கள் வருகின்றன. திரைப்பாடல்களுக்கு அப்பால் இசைப்பாடல்கள், இசைக்கோலங்கள் 'அல்பங்களாகவும்' வெளிவருகின்றன. அவை பெருமளவுக்கு வெகுசன ஆதரவினையும் பெறுகின்றன. ஈழத்தமிழரின் இசைப்பாடல்களும், இசைக்கோலங்களும் அதிக அளவில் 'அல்பங்கள்' ஆக்கப்பட்டு வெகுசனங்களிடையே எடுத்துச் செல்லப்பட வேண்டும். அவற்றை மேலைநாடுகளிலோ இந்தியாவிலோ அவ்வப்போது நிகழ்த்தப்படும் இசை அபத்தங்களுக்கு மாற்றாக ஆற்றுப்படுத்த வேண்டும். இசைப்பாடல் என்பது ஒரு கூட்டுக்கலை. பாடகரின் குரல் வளமும், இசையமைப்பாளரின் மெட்டும், இசையும், பாடலாசிரியரின் வரிகளும் ஒத்திசைந்து வளரும்போதுதான் ஒரு நல்ல இசைபாடல் கிடைக்கிறது. இசைப்பாடலின் வெவ்வேறு கூறுகளில் ஈடுபடுவோரது தேர்ச்சியும், பிரக்ஞையும் ஆழமாகும்போது விநோதமான, வினைத்திறன்மிக்க, வித்தியாசமான ஒத்திசைவுகள் நிகழும், நவீன இசைவழி நீளும். *****
  4. இறுவட்டு அட்டைகள் வீழமாட்டோம் இந்தியத் தமிழ்க் கவிஞரான திரு. வைரமுத்துவால் வெளியிடப்பட்ட "வீழமாட்டோம்" என்ற இறுவட்டையும் புலிகளால் அதே பெயரில், 2009 இற்கு முன்னர் வெளியிடப்பட்ட "வீழமாட்டோம்" என்ற இறுவட்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். இவ்விறுவட்டும் ஊழியால் அழிந்து போனது. இதனது அட்டை கூட கிடைக்கப்பெறவில்லை.
  5. இறுவட்டு அட்டைகள் விழித்தெழுவோம் முன் பக்கம்: பின் பக்கம்: இவ் ஒலிநாடாவின் கீழ் புதுயுகம் ஒன்று படைத்திட வேண்டும், படையணி நகரும், தவித்த தமிழினம் விழித்து எழுந்தது, துயரப் புதர் முட்கள் ஆகிய 4 பாடல்கள் வெளிநாட்டு இணையங்களில் பிழையாக இணைக்கப்பட்டவை. இப்பாடல்களுக்கான சரியான ஒலிநாடாப் பெயர்கள் பின்வருமாறு: புதுயுகம் ஒன்று படைத்திட வேண்டும் - உதயம் படையணி நகரும் - கூவுகுயிலே தவித்த தமிழினம் விழித்து எழுந்தது - விடியலைத் தேடும் பறவைகள் துயரப் புதர் முட்கள் - கூவுகுயிலே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.