Everything posted by நன்னிச் சோழன்
-
தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
/
- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
இதுமட்டுமில்லை, நான் வாழும் நாட்டில் நடைபாதையில் நடந்து செல்லும் போது ஒரு சிவப்பு நிற திரவமொன்றை துப்பித் துப்பிச் செல்கின்றனர். மண்ணிற நடைபாதையில் இந்த சிவப்பு நிறத்தைப் பார்கும் போதே அருவெருப்பாக இருக்கிறது.... குப்பை வாளிகள், இவங்கள். 🤮
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
படுகொலை விரிப்புகள் புத்தகம்: தமிழினப் படுகொலைகள் 1956-2008 எழுத்துருவாக்கம்: வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம் பக்கம்: - நூல் வெளியீட்டு ஆண்டு: 2005 சேவியர்புரம் படுகொலை, 7 ஆகஸ்ட் 1990 படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I குறவர் பழங்குடியினர் 1950ல் குடியமர்த்தப்பட்ட இடத்தின் பெயர்தான் அம்பாறையில் உள்ள சேவியர்புரம். 7ம் தேதி ஆகஸ்ட் மாதம், 1990 குறவர் பழங்குடியினரின் வீடுகள் கொழுத்தப்பட்டு, அந்த சமூகத்தைச் சேர்ந்த கொல்லப்பட்டனர்.இவர்களது இளைஞர்களும் கோயில்கள், பாடசாலைகள் சமூகப் பொதுமண்டபங்கள் யாவும் இடிக்கப்பட்டதோடு, இச்சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என அனைவரையும் மனிதவதைக்கு இந்த நாளில் உள்ளாக்கப்பட்டனர். குறவர் சமூகத்தின் மீது எவ்வித காரணங்களுமின்றி வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இச்சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இஸ்லாமிய ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர்கள் என பின்னர் தெரியவந்தது. விடுதலைப்புலிகள் இச்சமூகத்தோடு உறவு வைத்திருந்தார்கள் என்னும் குற்றச்சாட்டோடு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மினியக்கா என்ற பெண்மணி சேவியர்புரம் தாக்குதல் குறித்து சொல்லிய போது, சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார், மாசன்னா என்ற வயதான பெண்மணி குறவர் பழங்குடியினர் வாழ்ந்து வந்த சேவியர் புரத்திலிருந்த மற்றொரு பாதிக்கப்பட்ட நபராவார். அந்த வயதான பெண்மணி தாக்குதல் நடத்தியவர்கள் எல்லோரையும் தனக்கு தெரியும் என்று கூறினார். இப்பெண்மணி வாழ்ந்து வரும் இடத்தின் அருகிலே இருந்த நெல் உற்பத்தியாளர்கள்தான் அன்று தாக்குதல் நடத்திய வன்முறையாளர்கள். அந்த இஸ்லாமிய நெல் உற்பத்தியாளர்களின் வயல்களிலேயே அந்த குறவர் சமூகத்தினர் வேலை செய்து வந்தனர். அம்மாதிரியான உறவுள்ள மக்களின் கிருத்துவகோயில், பாடசாலை, வீடுகள் என அனைத்தையும் நிர்மூலம் ஆக்கினது மட்டுமல்லாது அம்மக்களையும் அன்று கொன்று குவித்தனர். வீடுகளை இழந்து தமது வாழ்வாதரங்களை தொலைத்து அன்று கண்ட கொடுமைகளை தாங்க முடியாத அம்மக்களில் சிலர் பின்னர் தற்கொலை செய்து மாண்டனர். *****
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
படுகொலை விரிப்புகள் புத்தகம்: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I பக்கம்: 134-137 மொழிபெயர்ப்பு: நன்னிச் சோழன் நூல் வெளியீட்டு ஆண்டு: 2007 திராய்க்கேணி படுகொலை, 6 ஆகஸ்ட் 1990 படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I திராய்க்கேணி முதலில் அம்பாறையின் மிகவும் இதமான கோட்டத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் தென்னை பெருந்தோட்டமாக இருந்தது. ஒலுவில், மீனோடைக்கட்டு மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய இடங்களில் காணியற்ற முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் ஆகிய இருதரப்பு மக்களினதும் இன்னல்களைக் கண்டு இரக்கப்பட்ட முதலாளியால் அந்தத் தோட்டம் ஒரு ஏக்கருக்கு 200/- என்ற மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டது. காரைதீவைச் சேர்ந்த நாகப்பர் சுப்ரமணியம், பெரிய கணபதிப்பிள்ளை உபாத்தியார் போன்ற பல்வேறு குமுகாய தலைவர்கள் இவ்வூரை வெற்றிகரமான கமக் கோட்டமாக வளர்ச்சியடைய கடுமையாக உழைத்தனர். 06.08.1990 அன்று ஊர் மக்களின் அமைதியும் கடும் உழைப்பும் அழிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் ஊரிற்குள் நுழைந்து தமிழர்களின் வீடுகளுக்கு தீ வைத்து, தமிழ் ஊர் மக்களைத் தாக்கியதோடு அவர்களின் சிதைந்த சடலங்களை அருகிலுள்ள இந்து கோவிலில் வீசினர். இந்த கொடூரமான குற்றத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளிடமிருந்து பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள், அத்தகைய தாக்குதலுக்கு தமிழர்களிடமிருந்து எந்த தூண்டுதலும் இல்லை என்பதை வெளிப்படுத்துகின்றன. நிகழ்வுகளின் பின்னணி, தாக்குதலுக்கு வழிவகுத்த நோக்கங்களும் முன்னங்களும் (intension) மற்றும் அது எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பவற்றை ஒரு பெண் சாட்சி வெளிப்படுத்தினார். சாட்சி | படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I ** சான்றுரைக்கப்பட்ட அறிக்கையின்படி, ஒரு சிறுமி பிடிபட்டு வன்புணரப்பட்டு, அதன் பிறகு, நெருப்பில் வீசப்பட்டார். பாதி எரிந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்பாளர்கள் மீட்டு புதைத்தனர். *****
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
sathhturukkondan massacre by muslims and sinhalese.png
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
saththurukkondaan.png
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
adsa.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
,
- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
-
uruththirapuram kuuzhavadi junction massacre.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Eravur hospital massacre
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
படுகொலை விரிப்புகள் புத்தகம்: தமிழினப் படுகொலைகள் 1956-2008 எழுத்துருவாக்கம்: வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம் பக்கம்: - நூல் வெளியீட்டு ஆண்டு: 2005 திராய்க்கேணி படுகொலை, 6 ஆகஸ்ட் 1990 படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I 1954ஆம் ஆண்டு அமரர் தர்மரட்ணம் என்பவரின் தென்னந்தோட்டத்தில் அமைக்கப்பட்ட குடியேற்றக் கிராமம் திராய்க்கேணியாகும். திராய்க்கேணிக்கு கிழக்குப் பக்கத்தில் ஒலுவில் கிராமமும் தெற்குப் பக்கத்தில் பாலமுனையும் அமைந்துள்ளது. இக்கிராமம் அட்டாளைச்சேனை உதவிஅரசாங்க அதிபர் பிரிவின் கீழும் அக்கரைப்பற்று நீதிமன்று நியாதிக்கத்தின் கீழும் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் முன்நூற்றெழுபதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் முன்நூற்றைம்பது வீடுகளில் வாழ்ந்து வந்தார்கள். இவர்களின் பிரதான தொழில் விவசாயமாகும். 05.08.1990அன்று திரியாய்க்கேணியில் வசித்து வந்த முசுலிம்களில் ஒருவர் காட்டுக்குச் சென்றவேளை மர்மமான முறையில் உயிரிழந்ததனைத் தொடர்ந்து 06.08.1990அன்று அக்கிராமத்திலிருந்த நூறு-நூற்றைம்பது பேர் கொணட் முசுலிம் குழு திரியாய்க்கேணியிலிருந்த தமிழர்களைத் தாக்கினார்கள். தாக்கக் கத்தி, வாள், பொல்லு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தியதுடன், வீடுகளையும் அவர்களின் உடைமைகளையும் தீயிட்டு எரித்தார்கள். முசுலிம்களின் தாக்குதல் தீவிரமடைய கிராமமக்கள் அருகிலிருந்த பிள்ளையார் கோயிலில் அடைக்கலம் புகுந்தார்கள். கோயிலுக்குள் நுழைந்த முசுலிம் குழுக்கள் அடைக்கலம் புகுந்த மக்களை வாள்களால் வெட்டியும் கத்தியாற் குத்தியும் தாக்கினார்கள். இவர்களின் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு முசுலிம்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் போது கோயிலுக்கு வெளியில் சிறீலங்கா இராணுவத்தினர் பவள் கவச வாகனத்தில் தாக்குதல் நடத்துபவர்களிக்குப் பாதுகாப்பினை வழங்கிக்கொண்டிருந்தார்கள். எஞ்சியிருந்த நூற்றிஐம்பது குடும்பத்தினர் அகதி முகாமுக்குச் சென்றனர். தாக்குதலில் தொண்ணூறிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். முன்நூற்றுநாற்பதிற்கும் மேற்பட்ட வீடுகளும், எழுபது மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதியான சொத்துக்களும் எரிக்கப்பட்டன. இச்சம்பவத்தில் கொல்லப்பட்டோர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது) இளையதம்பி மயிலாப்போடி இராமக்குட்டி மயில்வாகனம் - தொழிலாளி 18 இராசதுரை பிரகலா - நாகலிங்கம் தம்பிராசா - நல்லதம்பி புலேந்திரன் தொழிலாளி 27 கனகரத்தினம் அழகையா ஊழியர் 35 கனகரட்ணம் சுப்ரமணியம் கந்தக்குட்டி பூபாலப்பிள்ளை - தொழிலாளி 19 கந்தக்குட்டி வேலாயுதம் கா.பாஸ்கரலிங்கம் தொழிலாளி 39 கா.சாமித்தம்பி - விவசாயம் - 43 காந்தன் நவரட்ணம் - காளிக்குட்டி பாக்கியராசா காளிக்குட்டி தம்பிப்பிள்ளை கதிரன் கணபதி கதிரன் பாக்கியராசா தொழிலாளி 34 கணபதி காளிக்குட்டி ஊழியர் 50 கணபதி காளிமுத்து வைத்தியர் 45 கணபதிப்பிள்ளை கிருஸ்ணன். கணபதிப்பிள்ளை அமிர்தலிங்கம் பூபாலப்பிள்ளை புலேந்திரன் தொழிலாளி 30 பூபாலப்பிள்ளை ஏகாம்பரம் தொழிலாளி 24 தம்பியப்பா கோபால் தொழிலாளி 50 தம்பிமுத்து ஆனந்தராசா மு.கணபதி தொழிலாளி 76 மா.குஞ்சித்தம்பி தொழிலாளி 50 மா.ஜெயசீலன் தொழிலாளி 24 மார்க்கண்டு கிருபை தொழிலாளி 30 மார்க்கண்டு மயில்வாகனம் மார்க்கண்டு ஜெயக்குமார் - முருகன் இளையதம்பி தொழிலாளி 39 முருகேசு நாகேந்திரன் தொழிலாளி 28 பொன்னன் அழகையா தொழிலாளி 29 செல்லையா பாக்கியராசா தொழிலாளி 26 செல்வம் சீனித்தம்பி செல்லத்துரை கிருஸ்டியன் - செல்லத்துரை பாலச்சந்திரன் -- செல்லத்துரை அமிர்தலிங்கம் வேலன் கதிரேசப்பிள்ளை தொழிலாளி 44 வேலுப்பிள்ளை குணராசா வேலுப்பிள்ளை பாஸ்கரலிங்கம் தொழிலாளி 35 சாமித்தம்பி நாகராசா சாமித்தம்பி சௌந்தராஜன் - சின்னத்தம்பி கன்னி சின்னத்தம்பி தம்பிப்பிள்ளை சின்னத்தம்பி சிவசிதம்பரம் - சற்குணம் இளையதம்பி - சற்குணம் விஜயலட்சுமி வ.பாக்கியராசா தொழிலாளி 26 விஸ்வலிங்கம் அழகை *****
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
thaaynilak kaarru.jpg
From the album: Tiger Era Tamil Eelam Album Covers
-
Sea Black Tigers part 9.jpg
From the album: Tiger Era Tamil Eelam Album Covers
-
eeraninaivukal.jpg
From the album: Tiger Era Tamil Eelam Album Covers
-
தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
.
- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
-
IMG_6363.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
afsa.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
படுகொலை விரிப்புகள் புத்தகம்: தமிழினப் படுகொலைகள் 1956-2008 எழுத்துருவாக்கம்: வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம் பக்கம்: - நூல் வெளியீட்டு ஆண்டு: 2005 பொத்துவில் படுகொலை, 30 சூலை 1990 படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I 1990ஆம் ஆண்டில் மீண்டும் யுத்தம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இலங்கையில் கிழக்குப் பகுதியில் இராணுவத்தினராலும் சிங்கள முசுலிம் குழுக்களாலும், ஊர்காவற்படையினராலும் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் தாக்கப்பட்டனர். 15.06.1990 பொத்துவில் கிராமத்தில் இராணுவத்தினரும் முசுலிம் குழுக்களும் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களின் காரணமாக பாதுகாப்புத் தேடிய மக்கள் இடம்பெயர்ந்து கோமாரி அகதி முகாமில் தஞ்சமடைந்தனர். இராணுவத்தினரதும் அரச அதிகாரிகளினதும் வேண்டுகோளையும் வாக்குறுதிகளையும் நம்பி 30.07.1990அன்று பொத்துவில் கிராமத்திற்கு மீண்டும் திரும்பி வந்து பார்தத் போது வீடுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டிருந்ததுடன், வீடுகள் எரித்து அழிக்கப்பட்டிருந்தன. இதனால் மக்கள் தமது வீடுகளை விட்டுப் பொத்துவில் மெதடிஸ்த மகா வித்தியாலயத்தில் மீண்டும் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர். பொத்துவில் மெதடிஸ்த மகாவித்தியாலயத்தில் தங்கியிருந்த மக்களில் இளைஞர்கள், யுவதிகள் தமது குடும்பத்தினைக் காப்பாற்றுவதற்காக வேலைக்குச் சென்றார்கள். இவர்களில் நூற்றுமுப்பத்திரண்டு பேர் இராணுவத்தினராலும் முசுலிம் குழுக்களாலும் கைதுசெய்யப்பட்டு பொத்துவில் காவற்றுறை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இவர்களில் சிலர்சிலராகத் தெரிந்தெடுத்து காவற்றுறை நிலையத்திலிருந்த வெட்டவெளியில் கை கால்களைக் கட்டி உயிருடன் போட்டு எரித்தார்கள். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சிலர் தப்பித்துக் கொள்ள எஞ்சியோரை 02.08.1990அன்று பொழுது விடிவதற்கு முன்னர் ரயரில் உயிருடன் போட்டு எரித்தார்கள். இவ்வாறு இராணுவத்தினராலும் முசுலிம் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நூற்றுயிருபத்தைந்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். இச்சம்பவத்தில் கொல்லப்பட்டோர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது) மூத்ததம்பி இராசநாயகம் - 33 இளையதம்பி கிருபாகரன் தொழிலாளி 39 இளையதம்பி கருணாகரன் 23 இராஜதுரை கமலநாதன் குழந்தை 3 இராமலிங்கம் ஈஸ்வரன் 23 - சத்தியநாதன் பத்மநாதன் - 32 நாகமணி குணசீலன் 25 நாமணி சிந்தாத்துரை கடற்றொழில் 45 நடராசா சவுந்தரராசா 19 நல்லதம்பி பாக்கியராசா. - 23 சன்னாசி சுப்பிரமணியம் 34 கனகசபை நவராஜா 26 கனகசபை கிருபைராசா தொழிலாளி 30 கனகசபை தவராசா தொழிலாளி 26 கனகரத்தினம் சின்னராசா 52 கனகரட்ணம் சின்னராசா 27 கந்தையா நல்லதம்பி. - 33 கந்தையா கணேஸ் மாணவன் 16 கந்தையா தருமரத்தினம் 32 கந்தையா சிவகுமார் 27 கந்தையா சிவகுமரன் 22 கந்தையாப்பிள்ளை சிவசுப்ரமணியம் 26 கந்தையாப்பிள்ளை சிவசுந்தரன் 26 கந்தன் நவரட்ணம். 21 கந்தப்பன் ஆனந்தன் தொழிலாளி 26 காத்தமுத்து சுனில் தொழிலாளி 35 காளிக்குட்டி அமிர்தலிங்கம் - 27 கணேசபிள்ளை சந்திரன் 36 கிருஸ்ணன் அழகையா தொழிலாளி 24 கண்ணாச்சி சுப்பிரமணியம் 34 கணபதி பத்மநாதன் தொழிலாளி 25 கணபதிப்பிள்ளை தருமரட்ணம் தொழிலாளி 51 கணபதிப்பிள்ளை யோகநாதன் தொழிலாளி 20 கணபதிப்பிள்ளை செல்வரட்ணம் தொழிலாளி 35 கணபதிபிள்ளை தெய்வேந்திரன் 23 பக்கிரி சிற்றம்பலம் 30 - பாலன் ஜெயானந்தம் தொழிலாளி 25 பத்மநாதன் விக்னேஸ்வரன் தொழிலாளி 14 பத்மநாதன் ரவீந்திரன் தொழிலாளி 40 ஐயப்பன் செல்வராசா தொழிலாளி 41 தர்மலிங்கம் பாஸ்கரன் 13 தம்பியர் தேவசுந்தரம் பாதுகாவலர் 70 தம்பிப்பிள்ளை பூபாலப்பிள்ளை தொழிலாளி 32 தம்பிமுத்து கிருஸ்ணபிள்ளை - 52 தம்பிராசா இராசகுமார் தொழிலாளி 18 தம்பிராசா மனோகர் தொழிலாளி 38 தம்பிராசா தேவசுந்தரம் தொழிலாளி 65 திசாநாயக்க ஒபேசேகர தொழிலாளி 42 திசாநாயக்கா சபேசர் மாணவன் 19 திலகரட்ணம் பாரதி தொழிலாளி 24 திலகரட்ணம் லலித் தொழிலாளி 23 தங்கராசா மகேந்திரன் தொழிலாளி 17 தருமலிங்கம் இராசேந்திரன் 26 - தருமலிங்கம் கணேசமூர்த்தி தொழிலாளி 23 தருமலிங்கம் முத்துலிங்கம் தொழிலாளி 24 தருமலிங்கம் சந்திரன் -21 தருமலிங்கம் சாந்தலிங்கம் 23 மாரிமுத்து மகேந்திரன் - 18 மாணிக்கம் பரமசிவன் - 31 மாணிக்கம் தம்பிராசா தொழிலாளி 26 மாணிக்கம் செல்வராசா தொழிலாளி 27 மாணிக்கம் ரவிச்சந்திரன் தொழிலாளி 32 முத்தையா சத்தியநாதன் 18 அந்தோனிபிள்ளை மகேந்திரகுமார் 16 அழகையா சியாம்சேகர் தொழிலாளி 36 அருளம்பலம் வாசு 19 ஆறுமுகம் இராசரட்ணம் - தொழிலாளி 20 ஆறுமுகம் கணேசமூர்த்தி மாணவன் 19 ஜோசப் சிறிராமு தொழிலாளி 32 கோபால் ரமேஸ் 20 கோபாலகிருஸ்ணன் பத்மநாதன் - தொழிலாளி 26 கெங்காதரன் ஜெயக்குமார் தொழிலாளி 22 பொன்னன் மோசன் தொழிலாளி 25 சோமலிங்கம் விஸ்வலிங்கம் தொழிலாளி 42 செல்வராசா சுவேந்திரன் தொழிலாளி 20 செல்லத்துரை கந்தசாமி 35 செல்லத்துரை சந்திரன் - 20 செல்லமுத்து சுப்பிரமணியம் தொழிலாளி 18 வேலாயுதம் கருணாநிதி தொழிலாளி 32 ஞானச்செல்வம் உதயகுமார் தொழிலாளி 18 சந்திரப்பிள்ளை வினாயகமூர்த்தி தொழிலாளி 20 சுந்தரராகன் தருமலிங்கம் 21 சுப்பிரமணியம் இராசு - 20 சுப்பையா கதிர்காமநாதன் 22 சுப்பையா அர்சுனன் 26 சுப்பையா ஆறுமுகம் தொழிலாளி 39 சபாபதி மகேந்திரன் வியாபாரி 26 சாந்தி சற்குணம் 40 சத்தியநாதன் யோகநாதன் தொழிலாளி 26 சதாசிவம் வேலுப்பிள்ளை தொழிலாளி 50 சதாசிவம் சிவலிங்கம் தொழிலாளி 45 சின்னப்பிள்ளை விஜயகுமார் 20 சின்னத்துரை பத்மநாதன் - 26 சின்னத்துரை யோகராசா 29 சின்னத்தம்பி நடராசா 34 சின்னத்தம்பி சுந்தரம் தொழிலாளி 30 சின்னத்தம்பி சபானந்தம் தொழிலாளி 28 சின்னராசா தெய்வேந்திரன் 23 சீனித்தம்பி கந்தசாமி - 45 சீனித்தம்பி சுப்பிரமணியம் தொழிலாளி 26 வடிவேல் முத்துகுமார் தொழிலாளி 17 வடிவேல் அழகநாயகம் தொழிலாளி 30 வடிவேல் தெய்வநாயகம் தொழிலாளி 17 வடிவேல் சந்திரசேகரராகன் தொழிலாளி 42 வண்ணமணி மணிவண்ணன் 20 வீரன் இராசையா 35 வீரன் புஸ்பராசா 32 வீரன் செல்வராசா 29 ரட்ணம் ஜெயசீலன் - 24 லலித் துரைராசா தொழிலாளி 49 *****
- 170 replies
-
-
- 1
-
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
Thiraykeni massacre by muslim ordinary civilians.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
படுகொலை விரிப்புகள் புத்தகம்: தமிழினப் படுகொலைகள் 1956-2008 Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I எழுத்துருவாக்கம்: வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம் பக்கம்: - மொழிபெயர்ப்பு (சாட்சிகள் மட்டும்😞 நன்னிச்சோழன் நூல் வெளியீட்டு ஆண்டு: 2005 2007 வீரமுனைப் படுகொலைகள், 20 யூன் 1990 படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I அம்பாறை மாவட்டத்தில் காரைதீவிற்கு மேற்காக நாற்பத்தைந்து கி.மீ தூரத்தில் வீரமுனைக் கிராமம் அமைந்துள்ளது. வீரமுனைக் கிராமத்திற்கு வடக்கே சொறிக்கல் முனையும் தெற்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் செழிப்பான வயல் நிலங்களும் அமைந்துள்ளன. வீரமுனை தமிழ்மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். சம்மாந்துறைப் பிரதேசம் போர்த்துக்கேயர் காலத்தில் இலங்கையின் தென் கடற்கரையோரங்களிலிருந்து போர்த்துக்கேயரால் விரட்டப்பட்ட முசுலிம்கள் இடம்பெயர்ந்து குடியேறி வாழும் பிரதேசமாகும். இவ்விரண்டு பிரதேசங்களையும் இணைத்து சம்மாந்துறை நகரசபை அமைந்துள்ளது. 1954 ஆம் ஆண்டு நடைபெற்ற தனிநபர்களுக்கிடையே தகராற்றினால் சம்மாந்துறை முசுலிம்கள் ஒரு சிலரால் வீரமுனைப் பிரதேசம் தீயிட்டு எரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீரமுனை மக்கள் இடம் பெயர்ந்து காடுகளில் கணபதிபுரம், வீரச்சோலை போன்ற புதிய கிராமங்களை உருவாக்கினார்கள். 1990 யூன் மாதம் மூன்றாம் வாரத்தில் இராணுவத்தினரால் வீரமுனைப் பிரதேசம் சுற்றி வளைக்கப்பட்டது. சுற்றி வளைத்த இராணுவத்தினர் ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களை அருகிலுள்ள வீரமுனைப் பிள்ளையார் ஆலயத்திற்குச் செல்லுமாறு பணித்தனர்.ஆலயத்திற்குச் செல்லாது வீடுகளிலிருந்தவர்களை இராணுவத்தினர் சுட்டுப் பின்னர் வீட்டுடன் சேர்த்து எரித்தார்கள் வீதிகளில் நடமாடிய பலரும் இராணுவதத்தினராற் சுடப்பட்டார்க்ள். 1990.06.20 ஆம் திகதி மாலை 2.00 மணிக்கு கனரக வாகனங்களில் வீரமுனைப் பிள்ளையார் கோயிலுக்கு வந்து இறங்கிய இராணுவத்தினா வீரமுனைப் பிரதேசத்தில் பல பிரதேசத்திலுமிருந்து தஞ்சமடைந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைச் சுற்றிவளைத்து பதினைந்து வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரையும் கோயிலின் பின் வீதியில் ஒன்று சேருமாறு பணித்தார்கள். இவர்களில் அறுபத்தொன்பது இளைஞர்களை உறவினர்களின் முன்னிலையிற் கைதுசெய்து அழைத்துச்சென்றனர். இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அனைவரும் சம்மாந்துறையிலுள்ள மார்ஜன் பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவர்களில் ஐம்பது பேர்வரை இராணுவத்தினரால் சம்மாந்துறையிலுள்ள மலைக்காட்டுக்குள் உயிருடன் எரிக்கப்பட்டனர். மிகுதிப் பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். 1990.06.29ஆம் திகதி மீண்டும் மக்கள் தங்கியிருந்த கோயிலுக்கு வந்த இராணுவத்தினர் அங்கிருந்தவர்களில் பலரைக் கைது செய்து இராணுவ முகாமிற்கு அழைத்து சென்றார்கள். இவர்களில் எவருமே திரும்பி வரவில்லை. வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் தஞ்சமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவ அச்சுறுத்தலிலிருந்து தப்புவதற்காக இடம் பெயர்ந்து காரைதீவு மகாவித்தியாலயத்திற் தஞ்சமடைந்தார்கள். 1990.07.03 அன்று காரைதீவு மகாவிதத்தியாலயத்தை சுற்றி வளைதத் இராணுவதத்தினர் பாடசாலையிற் தங்கியிருந்தவர்களில்பதினொரு இளைஞர்களைக் கைதுசெய்து இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். இவர்களிலும் எவருமே திரும்பி வரவில்லை. 1990.07.05 மீண்டும் பாடசாலைக்கு வந்த அதிரடிப்படையினர் அங்கிருந்த இளைஞர்கள் பதின்மூன்று பேரைக்கைது செய்து இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். காரைதீவு மகா வித்தியாலயத்தில் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட அனைவரும் சித்திரவதைகளின் பின்னர் உயிருடன் ரயர் போட்டுஎரிக்கப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்களைத் தேடிச்சென்ற உறவினர்களும் இராணுவத்தினரின் தாக்குதல்களுக்கு உள்ளானார்கள். இதனைத் தொடர்ந்து மக்கள் மீண்டும் வீரமுனைக்கு அருகிலுள்ள அகதிமுகாமிற்குத் திரும்பினார்கள். 1990.07.10 அன்றும் வீரமுனை அகதிமுகாமைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர் பதினைந்து இளைஞர்களைக் கைதுசெய்து, இராணுவ முகாமிற்கு அழைத்துச்சென்று கடுமையான சித்திரவதைகளின் பின்னர் அவர்களையும் உயிருடன் எரித்தார்கள். 1990.07.16 அன்று வீரமுனை அகதி முகாமிலிருந்து தமது வீடுகளைப் பார்க்கச்சென்ற பெண்களில் எட்டு இளம்பெண்கள் மல்வத்தையிலிருந்த இராணுவ சோதனைநிலையத்தில் இராணுவத்தினராற் கைது செய்யப்பட்டு முப்பதிற்கும் மேற்பட்ட இராணுவத்தினரால் பாலியல்வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டார்கள். இவர்களும் இராணுவத்தினரால் பின்னர் எரிக்கப்பட்டனர். 1990.07.26 இல் மீண்டும் வீரமுனை அகதிமுகாமைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர் முப்பத்திரண்டு இளைஞர்களை கைது செய்தார்கள். இவர்களில் இருபத்துமூன்று பேர் பாடசாலை மாணவர்கள். இவர்களில் எவருமே திரும்பி வரவில்லை. 1990.07.29ல் வீரமுனைப் பிரதேசத்தில் தமது குடும்பத்தினருடன் பயணம் செய்துகொண்டிருந்த எட்டுப் பாடசாலை ஆசிரியர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் எவரும் திரும்பிவரவில்லை. 1990.08.01 ஆம் திகதி வீரமுனையிலுள்ள சவளக்கடை வீதி வழியாக நாவிதன் வெளிக்குச் சென்ற பதினெட்டு பொதுமக்கள் இராணுவம், காவற்றுறை மற்றும் ஊர்காவற்படையினராற் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் ஒரு குழந்தையும் நான்கு பெண்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களால் துண்டுகளாக வெட்டப்பட்டு சவளக்கடை கோயிலுக்குள் போட்டு எரிக்கப்பட்டார்கள். 1990.08.12 ஆம் திகதி வீரமுனை அகதிமுகாமிற்குக் கூரிய ஆயுதங்கள் துப்பாக்கிகளுடன் வந்த முசுலிம் குழு முகாமிலிருந்தவர்களை வெட்டியும் சுட்டும் தாக்கினார்கள். இவர்களின் தாக்குதலில் பத்துப் பேர் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தார்கள். உயிரிழந்தவர்களில் கோயில் அறங்காவலர் தம்பிமுத்து சின்னத்துரை, இரண்டு குழந்தைகள், மூன்று பெண்கள் உள்ளடங்குவார்கள். 1990.08.12 இல் முசுலிம்களின் தாக்குதலில் காயப்பட்டவர்கள் முதலில் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார்கள். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேரில் மூன்று பேர் இராணுவத்தினராற் கடத்திச் செல்லப்பட்டார்கள். மிகுதி நான்கு பேர் வீரமுனைக்குத் தப்பி வந்தார்கள்.வீரமுனையில் 600 வீடுகளும் வீரமுனைக்கு அருகிலுள்ள கிராமங்களான மல்வத்தை, மல்லிகைத்தீவு, நியூ ரவுண், கணபதிபுரம், வலாத்தபிட்டி, சம்மாந்துறை ஆகிய கிராமங்களில் 1352 வீடுகளும் எரிக்கப்பட்டன. 1990.06.20 தொடக்கம் 1990.08.15 வரை வீரமுனை, காரைதீவு மற்றும் அயற்கிராமங்களிலுமாக இருநூறிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள் அல்லது காணாமற்போனார்கள். 2000 வீடுகள் வரை இராணுவத்தினரால் எரிக்கப்பட்டன. இந்த சம்பவங்களின் சாட்சிகளின் சில கணக்குகள் பின்வருமாறு. சாட்சியாக இருந்த கணபதிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது: மல்வத்தை எல்லைக்குள் இராணுவம் நுழைந்தபோது, இராணுவத்தினர் மக்களை கண்ணில் பார்த்தபடி சுட்டுக் கொன்றனர், வீடுகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. நாங்கள், துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு, எரியும் வீடுகளில் இருந்து தீப்பிழம்புகள் எழுவதைப் பார்த்து, பெண்கள் மற்றும் குழந்தைகளைக் காப்பாற்ற குடும்பத்துடன் ஓடி வந்தோம். நடந்தே வீரமுனை கோவிலை சென்றடைந்தோம், வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் முன்னதாக கோவிலுக்கு வந்திருந்ததை கண்டோம். அதனைத் தொடர்ந்து அம்பாறை, மல்லிஹைத்தீவு, சம்மாந்துறை தமிழ்ப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் எம்முடன் இணைந்தனர். இந்த நிகழ்வுகளின் சாட்சிகள் சிலரின் வாக்குமூலங்கள் பின்வருமாறு. சாட்சியாக இருந்த கணபதிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது: "மல்வத்தை எல்லைக்குள் தரைப்படை நுழைந்தபோது, படையினர் கண்ணில் பட்ட மக்களையெல்லாம் சுட, அதே சமயத்தில் வீடுகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. நாங்கள், வேட்டொலி கேட்டும் எரியும் வீடுகளில் இருந்தெழும் பிழம்புகளைக் கண்டும் பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்ற குடும்பத்துடன் ஓடி வந்தோம். நடந்தே வீரமுனை கோவிலை சென்றடைந்தோம், வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் முன்னதாக கோவிலுக்கு வந்திருந்ததை கண்டோம். அதனைத் தொடர்ந்து அம்பாறை, மல்லிகைத்தீவு, சம்மாந்துறை தமிழ்ப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் எம்முடன் இணைந்தனர்." வீரமுனையைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது: "படையினர் அச்சுறுத்தலான சூழலை ஆக்குவதைக் கண்டோம். மக்கள் தங்கள் வீடுகள், வீதி மற்றும் நெல் வயல்களில் இருந்து கொண்டுவரப்பட்டனர். சாத்தியமான கைது மற்றும் மரணத்திலிருந்து தப்பிக்க, நாங்கள் அகதிமுகாமாக மாற்றப்பட்ட கோவிலுக்குச் சென்றோம். அரசாங்கத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள் வேலைக்குச் செல்லும் வழியில் கொலைசெய்யப்பட்டு ஆண்டி சந்திப்பு என்ற இடத்தில் எரிக்கப்பட்டதை நான் அறிவேன்." வீரமுனையில் தரைப்படையினரின் செயற்பாடுகள் பற்றி ஒரு தாய் விரித்தார்: "1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் பல படைய ஊர்திகள் ஆயிரக்கணக்கான மக்கள் (தமிழர்கள்) தஞ்சமடைந்திருந்த வீரமுனை ஆலயத்திற்குள் நுழைந்தன. 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் கோவில் முற்றத்தில் ஒன்று கூடும் படி கோரி ஒலிபெருக்கி மூலம் படைவீரர்கள் அறிவிப்பு விடுத்தனர். அங்கு கொலைவெறியில் ஈடுபட்ட படைவீரர்களுக்கு அஞ்சி அகதிகளாக ஏற்கனவே வீடுகளை விட்டு வெளியேறியிருந்ததால் மக்கள் கொந்தளித்தனர். ஆண்கள் ஒருவர் பின் ஒருவராக கோவிலுக்கு எதிரே உள்ள திறந்த வெளியில் சென்று நின்றனர். பெண்கள் மிகவும் குழப்பமடைந்து நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். "கோவிலுக்குள் நுழைந்த வீரர்கள் உள்ளே யாராவது பதுங்கி இருக்கிறார்களா என்பதை அறிய, உள் கருவறையை சோதித்தனர். யாரும் இல்லாததால், கோவிலுக்கு எதிரே நின்றிருந்த இளைஞர்களை உண்ணோட்டமிட தொடங்கினர். கணக்கெடுக்கப்பட்ட எண்ணிக்கையில், படைவீரர்கள் சில இளைஞர்கள் மற்றும் உடல் திறன் கொண்ட சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து, தாங்கள் கொண்டு வந்த CTB பேருந்தில் ஏற்றிச் சென்றனர். "பெண்கள் படைவீரர்களுக்கு முன்னால் சென்று என்ன செய்ய முயல்கிறீர்கள் என்று கேட்டார்கள். அவர்கள் உசாவலுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும், உசாவலுக்குப் பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார். தங்கள் குழந்தைகள் எந்த வகையிலும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல என்றும், படையினரால் பிடிக்கப்பட்ட ஒவ்வொருவரும் அப்பாவி இளைஞர்கள் என்றும் பெண்கள் படைவீரர்களிடம் கெஞ்சினர். பெண்களின் கண்ணீரைப் புறக்கணித்த படைவீரர்கள், இளைஞர்களுடன் கோவில் வளாகத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர். "நாங்கள் ஊர்திகளுக்கு முன் விழுந்து எங்கள் பெடியங்களை விட்டுச்செல்லுமாறு படைவீரர்களை மன்றாடினோம். சோதனைக்கு தலைமை தாங்கிய அதிகாரியோ ஊர்தியை தடுக்கும் ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் சுடச்சொல்லி தனது ஆட்களுக்கு உத்தரவிடுவேன் என்று புலம்பிய பெண்களான எங்களிடம் கடுமையாக ஏசினார். மோசமான நிலைக்கு அஞ்சி பெண்கள் பின்வாங்கிட தரைப்படையினர் எங்கள் குழந்தைகளை கொண்டு சென்றனர். கடுமையான சித்திரவதையால் அடிவேண்டியும் காயமுமாக ஒரு சிலர் பின்னர் திரும்பினர்." கைது செய்யப்பட்ட பின்னர் நிச்சயமான சாவிலிருந்து தப்பிய இளைஞர் ஒருவர் பின்வரும் கூற்றுரையை தந்தார்: "ஜூன் 20ஆம் திகதி வீரமுனை கோவிலில் இருந்து கைது செய்யப்பட்டவர்களில் நானும் ஒருவன். கோவிலில் அகதிகளாக இருந்த பல இளைஞர்களை படையினர் ஏற்றிக்கொண்டு சம்மாந்துறை அல்-மட்ஜான் முஸ்லிம் பாடசாலைக்கு எங்களை கொண்டு சென்றனர். படையினர் முதலில் சுடுகல பிடங்குகளால் எங்களைத் தாக்கினர், அதன் பிறகு எங்களை உதைத்து எங்கள் முகங்களில் குத்தினார்கள். அகதிமுகாமிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இளைஞர்கள் பின்னர் ஒரு பொதுநிறமான கொழுத்த வேற்றுவன் (தலையாட்டி) முன் அணிவகுத்துச் செல்லப்பட்டனர். என்னை அத்தலையாட்டி முன் நிறுத்திய போது, “இல்லை” என்று கூறி, என்னை ஒதுக்கி வைத்தார். அன்று மாலை அவன் முன் நிறுத்தப்பட்ட பெரும்பாலான இளைஞர்களுக்கு "ஆம்" என்று தலையாட்டுவதை நான் கண்டேன். “ஆம்” என்று அவர் தலையாட்டிய மக்கள் வேறு கட்டிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். “இல்லை” என்று தலையாட்டப்பட்டவர்கள் புறிம்பாக்கப்பட்டு மற்றொரு அதிகாரி முன் நிறுத்தப்பட அவர் தமிழில் உரையாற்றினார். அவர் சொன்னதை புரிந்துகொள்ளும் மனநிலையில் நான் இல்லை. சிறிது நேரத்திற்கு முன்பு நான் அனுபவித்த சித்திரவதை என் வலிமையையும் உயிர்ப்பையும் பறித்தது. ஒரே நேரத்தில் சுமார் 15 பேர் என்னைத் தாக்கியதால் என்னால் நிற்கவே முடியவில்லை. நாங்கள் எடுத்துவரப்பட்ட கோயிலுக்குத் திரும்பிச் செல்லும்படி அதிகாரி கூறினார். எங்களிடமிருந்து பிரிந்த மற்றவர்கள் மலைக்காடு என்ற இடத்திற்கு - புதர் அடவிகளில் உள்ள பாறைசார் இடம் - படையப் பாரவூர்திகளில் கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டதாக நாங்கள் அறிந்தோம். கோவிலில் உள்ள அகதிமுகாமில் இருந்து கொண்டு வரப்பட்டவர்களில் 20 பேர் மட்டுமே திரும்பி சென்றனர். மலைக்காட்டில் பாதி எரிந்த சடலங்கள் அழுகிக்கொண்டிருப்பதையும் உக்கிக்கொண்டிருக்கும் சடலங்களின் நெடியை தாங்க முடியாமல் முஸ்லிம்கள் பல இழுபொறிப் பெட்டிகளில் உமிகளை காவிச் சென்று அழுகிய சடலங்களை மூடி எரித்ததையும் அறிந்தோம். மாடசாமி கதிர்காமமூர்த்தி | படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I "நான் அம்பாறையில் உள்ள வீரமுனை என்ற கிராமத்தில் வசித்து வந்தேன். நாங்கள் மிகவும் ஏழையாக இருந்தோம். எங்களுக்கு அப்பா இல்லை. பாடசாலை போகாத சமயங்களில் வேலை நிமித்தமாக அம்பாறைக்கு செல்வது வழக்கம். ஒரு நாள் வேலைக்குச் செல்லும் வழியில் சிக்கல் என்று கேள்விப்பட்டேன். அதனால் வீடு திரும்பினேன். அனைவரையும் தாக்கத் தொடங்கியுள்ளனர், அதனால் நாங்கள் வீட்டில் இருப்பது ஓம்பமானது அல்ல என்று என் அம்மா கூறினார். "திருமணமான எனது சகோதரி ஒரு கிலோமீட்டர் தொலைவில் வசித்து வந்தார். அம்மாவை ஆயத்தமாகும்படி சொல்லிவிட்டு சகோதரியை அழைத்துவரச் சென்றேன். என் அக்காவும் அம்மாவுடன் கிளம்ப வேண்டும் என்றாள். என் அம்மாவை அழைத்துச் செல்லும் வழியில், அவரது வீட்டிற்கு ஐநூறு மீட்டர் முன்பு - ஒரு படைய பாரவூர்தி நின்றது. யாரும் சீருடையில் இல்லை. அவர்கள் அனைவரும் குடிமை உடையில் இருந்தனர், எனினும் அவர்கள் ஆயுதங்களை ஏந்தியிருந்தனர். நான் ஒரு சிற்றூரில் சுமார் பத்து அல்லது பதினைந்து குடும்பங்களுடன் வசித்து வந்தேன். இந்த பாரவூர்தியை பார்த்ததும் எனக்கு உடனே அச்சம் வந்தது. என் உந்துருளியை நிறுத்திவிட்டு உறவினர் வீட்டுக்குள் சென்றேன். இந்த ஆயுதம் ஏந்தியவர்கள் மக்களைத் தாக்கத் தொடங்கினர் - அவர்கள் சிங்களத்தில் பேசி என்னை பாரவூர்தியில் ஏறச் சொன்னார்கள். நாங்கள் 9 பேர் அடிவேண்டி பாரவூர்தியில் ஏறச் செய்யப்பட்டோம். ஒன்பது பேரில் சிலருக்கு அரத்தம் வழிந்து. எங்களில் இருவர் இளையவர்கள், மீதமுள்ளவர்கள் திருமணமான குழந்தைகளுடனுள்ள ஆண்கள். அவர்களைத் தடுக்க மனைவிமார் வந்தபோது, அவர்கள் வழியில் வந்த மனைவிகளையும் குழந்தைகளையும் தாக்கினர். "பாரவூர்தில் எங்களை படுக்கச் சொல்லி அம்பாறையில் உள்ள ஒரு பெரிய காட்டிற்கு அழைத்துச் சென்றனர். எங்கள் சறங்களைக் கழற்றி, கைகளை முதுகுக்குப் பின்னால் கட்டுவதற்குப் பயன்படுத்தினார்கள். அவர்கள் எங்களுக்கு முன்னால் நின்று, தங்கள் இயந்திர சுடுகலன்களை தாணித்து (loaded) அனைவரையும் சுட்டனர். "நான் என் பக்கம் திரும்பினேன் - என் காலும் கையும் சன்னங்களால் தாக்கப்பட்டிருந்தன. என் காலில் பெரிய தழும்பு உள்ளது. மக்கள் எழுந்திருக்க முயன்றபோது, அவர்கள் தரையிலேயே இறக்கும் வரை மீண்டும் சுடப்பட்டனர். அதனால் கண்களை மூடிக்கொண்டு அப்படியே படுத்திருந்தேன். என் காலில் மோசமான காயம் ஏற்பட்டது. எனக்கு ஒரு கால் இருப்பது கூட எனக்கு உறுதியாக தெரியவில்லை. என் காலை இழுத்துக்கொண்டு மெள்ளமாக நடந்து சென்றேன்." இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம்: (பெயர் - தொழில் - வயது) இளையதம்பி கணபதிப்பிள்ளை இளையதம்பி செல்லம்மா இளையதம்பி சின்னப்பிள்ளை இராசையா பரமேஸ்வரி இராசையா சுபாசினி - மாணவி - 16 இராமநாதன் வாணிதாசன் - இராமக்குட்டி பொன்னம்மா - 65 இராசலிங்கம் அழகையா இருளாண்டி அமிர்தலிங்கம் - மாணவன் - 20 யு.நடராஜா - 5 நாகலிங்கம் தியாகராசா - மேசன் - 31 நாகலிங்கம் தவராசா நாகலிங்கம் மாரிமுத்து -- நமசிவாயம் தேவராசா நடராஜா உதயகுமார் - 7 நடராசா இளங்கோ நடராசா கிருபைராசா - தொழிலாளி - 39 நல்லதம்பி தவராசா நல்லதம்பி கோபால் நல்லதம்பி வடிவேல் நல்லதம்பி விக்னேஸ்வரன் க.கறுவல்தம்பி க.மாரிமுத்து- க.அழகையா கனகரெட்ணம் யோகராசா -- கனகசபாபதி இளங்கோ கந்தையா நவரட்ணம் கந்தையா கணேசமூர்த்தி கந்தையா கணபதிப்பிள்ளை. -- கந்தையா திசாநாயக்க கந்தையா தருமலிங்கம் கந்தக்குட்டி பாக்கியராசா. கந்தக்குட்டி தருமலிங்கம் - கந்தசாமி விஜயகுமார் கந்தவனம் கந்தசாமி கந்தவனம் குமார் கந்தவனம் ஆறுமுகம் கந்தவனம் சோமசுந்தரம் காத்தமுத்து நாகேந்திரன் காத்தமுத்து சண்முகநாதன் - கமம் - 40 காளிக்குட்டி உலகநாதன் கதிர்காமத்தம்பி கருணாகரன் கதிரேசப்பிள்ளை சந்திரசேகர் கதிராமத்தம்பி இராசையா கதிரவேலு இராசலிங்கம் - கமம் கதிரவேல் இராஜேந்திரன் கதிரவேல் ராதிகாகிருஸ்னன் குமாரன் சின்னத்தம்பி குலேந்திரன் அஜந்தன் - 3 கிருஸ்ணபிள்ளை கனகசூரியம் கிருஸ்ணபிள்ளை மோகனராஜ் கிருஸ்ணபிள்ளை சுந்தரலிங்கம் கிருஸ்ணபிள்ளை சிதம்பரமூர்த்தி - தொழிலாளி - 21 கிருஸ்ணபிள்ளை விஜயகுமாரி கிருபானந்தம் அமிர்தலிங்கம் கறுப்பையா சிவசாமி - கமம் - 40 கறுவல்தம்பி திருச்செல்வம் கணபதி குகநாதன் -- கணபதிப்பிள்ளை இராஜேஸ்வரி கணபதி சந்திரன் கணபதிப்பிள்ளை புஸ்பலதா கணபதிப்பிள்ளை பரசுராமன் கணபதிப்பிள்ளை தவராசா கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை கணபதிப்பிள்ளை சிவபாலன் - தொழிலாளி கணபதிப்பிள்ளை சிவலிங்கம் - சாரதி - 49 கணபதிப்பிள்ளை சண்முகநாதன் - தொழிலாளி 35 கணபதிப்பிள்ளை சண்முகம் குணரெட்ணம் சிவகௌரி பாவில் சண்முகம் பாலன் மகேந்திரன் பாலன் கேதரன் பாலசுந்தரம். பாண்டியன் முனியாண்டி பத்மநாதன் விநாயமூர்த்தி பழனித்தம்பி மாணிக்கம் - 46 பீ.ஜி.பியாந்தன் பீ.நந்தசிறி பீ.மாரியான் பீ.சுசிபன் ரீ.மாதவன் ஐயாத்துரை மகேஸ்வரன் - ஐயாத்துரை கோவிந்தன் கைலாயபிள்ளை தேவராசா - மாணவி - 8 வை இராசதுரை வை.பிரான்சிஸ் -- வைரமுத்து கற்பகம் வைரமுத்து கோபாலபிள்ளை - வைரமுத்து தெய்வானை வைரமுத்து சிவம் தர்மலிங்கம் பொன்னத்துரை - தம்பிப்பிள்ளை இராசலிங்கம். தம்பிப்பிள்ளை கந்தையா தம்பிமுத்து கந்தையா - கமம் - 77 தம்பிமுத்து தயாபரன். தம்பிமுத்து சின்னத்துரை - அறங்காவலர் - 52 தம்பிமுத்து சிந்தாத்துரை - கமம் - 70 திருநாவுக்கரசு கணேசமூர்த்தி திருநாவுக்கரசு கருணாநிதி - கமம் - 18 திருநாவுக்கரசு புஸ்பராசா தங்கநேசம் வேலுப்பிள்ளை தங்கராசா உதயசூரியன் தங்கராசா மனோகரன் - 18 தங்கராசா ராகினி மார்க்கண்டு தங்கவேல் மார்க்கண்டு யோகராசா மார்க்கண்டு சிவானந்தன் - 29 மாசிலாமணி தருமலிங்கம் - மாசிலாமணி செல்வரட்ணம் மாசிலாமணி விநாயகமூர்த்தி - கமம் - 26 மாணிக்கம் பாலு மாணிக்கம் முருகேசப்பிள்ளை - கமம்- 21 மாணிக்கம் ஜெகநாதன் முத்துலிங்கம் பாலபாஸ்கரன் முத்துலிங்கம் பரமேஸ்வரி ஆசிரியர் 32 முத்துலிங்கம் செல்லையா முருகுப்பிள்ளை தங்கரெத்தினம் - முருகுப்பிள்ளை தங்கராசா முருகுப்பிள்ளை ஞானம்மா - மருதுரிஸ் செல்வராசா முருகேசு உதயகுமார் - - முருகேசு பாஸ்கரன் முருகேசப்பிள்ளை பத்மநாதன் மணியம் சோமசுந்தரம் ஆ.யோகநாதன் ஆர்.மயில்வாகனம் -50 அம்பாரக்குட்டி தியாகராஜா - அழகையா இராமச்சந்திரன் -- அழகையா சாமித்தம்பி அழகையா சிவா அழகையா வீரசேனன் - அழகையா ரகுநாதன் அரசரெத்தினம் கதிரமலை அரசரெட்ணம் மகேந்திரன் அரசரட்ணம் வள்ளியம்மை - 58 அருளப்பா இந்துருஜன் - அருணாசலம் இராசரெட்ணம். அருணாசலம் சின்னப்பிள்ளை - 55 ஆறுமுகம் கந்தசாமி. ஆறுமுகம் கலா ஆறுமுகம் தெய்வேந்திரம் - தச்சுத்தொழில் - 34 யோகராசா கிருபானந்தி கே.அழகையா கே சிவலிங்கம் - 48 கே.ரவிச்சந்திரன் பொன்னம்பலம் இராஜேந்திரன் -- பொன்னம்பலம் இராசமணி பொன்னுச்சாமி கந்தசாமி - தொழிலாளி - 24 பொன்னுச்சாமி கணேசமூர்த்தி - ஆசிரியா - 26 பொன்னையா உதயகுமார் பொன்னையா மகேஸ்வரன் பொன்னையா வள்ளியம்மை - 67 தேவநாயகம் மகேந்திரன் சொலமன் சகாயநாதன் - செல்லையா கிருஸ்ணபிள்ளை -- செல்லையா அசோகன் - மின்சாரசபை ஊழியர் - 24 செல்லையா சோமசுந்தரம் செல்லையா வடிவேல். செல்வன் சிவநாதன் செல்லன் அருளம்மா செல்லத்துரை தர்மலிங்கம் செல்லத்தம்பி கருணாநிதி கடதாசி - ஆலை ஊழியர் - 24 வெள்ளையன் - மாணவன் - 7 வேல்முருகு முத்து - வேலுப்பிள்ளை நாகேந்திரன் வேலுப்பிள்ளை காசியானந்தன் வேலுப்பிள்ளை கதிரமலை - வேலுப்பிள்ளை திருச்செல்வம் - தொழிலாளி - 22 வேலுப்பிள்ளை யோகராசா வேலுப்பிள்ளை தெய்வநாயகம் வேலுப்பிள்ளை சந்திரகுமார் வேலுப்பிள்ளை சுதாகரன் ரெட்ணம் செல்வராசா - கமம் - 20 சு.மனோகரன் சந்திரன் அருளப்பன் சுப்பிரமணியம் நடேஸ்வரன் சாமித்தம்பி கணபதிப்பிள்ளை சாமித்தம்பி குணசீலன் சாமித்தம்பி தங்கவேல் - மாணவன் - 17 சாமித்தம்பி சுப்பிரமணியம் சதாசிவம் புவனேந்திரன் சதாசிவம் தேவராசா -கமம் - 18 சின்னத்துரை காளிக்குட்டி சின்னத்தம்பி குகதாஸ் சின்னத்தம்பி திலகேஸ்வரி - சின்னத்தம்பி அண்ணாதாசன் சின்னத்தம்பி வன்னியசிங்கம் சின்னதம்பி ரவிச்சந்திரன் - சாரதி - 22 சின்னையா முத்தையா சீனி இந்திரன் சீனி தவசீலன் - சீனி ஜெயசீலன் சீனித்தம்பி மாரிமுத்து - சீனித்தம்பி வேல்முருகு சித்தாத்துரை காளிக்குட்டி கமம் 47 சித்தாத்துரை செல்வராசா சித்தாத்துரை சம்பந்தன் - கமம்- 24 சித்தாத்துரை தவராசா சித்தாத்துரை தேவராசா -- சித்தாத்துரை வேவி சித்தாத்துரை சம்மந்தன் = கமம் - 24 சித்திரவேல் பத்மநாதன் சிவனடியார் ரவிச்சந்திரன் சிவானந்தன் இந்திரன் - சிவானந்தன் பாலச்சந்திரன் சிவானந்தன் ரவிச்சந்திரன் - சிவஞானம் கணேசன சிவசம்பு தேவராசா -- சங்கரப்பிள்ளை அற்புதராசா சங்கரப்பிள்ளை வில்வராசா - கமம் - 20 சலமன் மோகனராஜன் சகாயநாதன் - வியாபாரம் - 22 சண்முகம் இளஞ்சேகர் -மாணவர் விநாயகமூர்த்தி பாலு வீரக்குட்டி கிட்ணன் வீரபாண்டியன் ஜமுனா வள்ளியம்மை ராமன் ரவி தில்லையம்மா ஏ.ஈ.தேவதாசன் ஏ.கனகரெத்தினம் ஏ.பரமநாதன் ஏ.முருகேசபிள்ளை -- ஏ.சுபாசினி மாணவி 17 ஏ.சின்னப்பிள்ளை 50 ஏ.சித்திரவேல் - ஏ.சிவநேசன் ஏ.ஏ.சண்முகவேல் எஸ்.மாணிக்கம் 35 என்.இராசன் -- என்.சந்திரகுமார் -- ஏகாம்பரம் தருமலிங்கம் - - எம்.முத்துக்குமார் - - எம்.அருள்மணி - - வீரமுனையில் வேறு தினங்களில் உயிரிழந்த சிலரது விபரங்கள் (பெயர் - தொழில் - வயது) 15.03.1985 சதாசிவம் சண்முகராஜா கமம் 23 25.10.1985 சின்னத்தம்பி நவரட்ணராசா விவசாயம் 19 08.09.1988 காளிக்குட்டி நவரெட்ணம் தொழிலாளி 23 13.01.1989 சேதுமதி குணரட்ணம் கமம் 33 11.06.1990 கணபதிப்பிள்ளை கந்தசாமி தொழிலாளி 27 15.06.1990 பாலசந்திரபோஸ் சுபாஸ்சந்திரபோஸ் தொழிலாளி 16 செல்லத்துரை விக்னேஸ்வரன் கமம் 21 செலடன்ஸ்பெக் பிறிங்கேஸ்பெக் தச்சுத்தொழில் 19 சிவராசா சதீஸ்குமார் 19 சங்கரப்பிள்ளை சிவகுருநாதன் மாணவன் 18 சவரிமுத்து ரஞ்சன் கமம் 22 சற்குணநாதன் ரஞ்சிதகுமார் வியாபாரம் 22 ***** தொகுப்பாளர் குறிப்பு: 12.08.1990 அன்று சிந்தாயாத்திரைப் பிள்ளையார் கோவில், மற்றும் வீரமுனை இராமகிருஸ்ண மிசன் பாடசாலை ஆகியவற்றுக்குள் அடைக்கலம் புகுந்திருந்த தமிழர்களை தரைப்படையினரின் பாதுகாப்புடன் அத்துமீறி உள்ளே புகுந்த முஸ்லிம் ஊர்காவல் படையினர் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட 97பேரை காதினர். பாடசாலையில் இருந்த சிறுவர்களைத் தூக்கி சுவரில் அடித்து படுகொலைசெய்தனர். இந்த காதத்தில் பெண் பட்டதாரியான பரமா என்ற பெயருடைய ஆசிரியர் முஸ்லிம் ஆயுததாரிகளிடம் இருந்து மக்களை காப்பதற்காக போராடி தனது உயிரைவிட்டார். இவர் வீரமுனையின் முதல் பட்டதாரி ஆவார்.
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
படுகொலை விரிப்புகள் புத்தகம்: மௌனப் புதைகுழிக்குள் எழுத்தாளர்: மணலாறு விஜயன் பக்கம்: ??? நூல் வெளியீட்டு ஆண்டு: 2004 வீரமுனைப் படுகொலை வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. 1954ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டுவரை சிங்கள இராணுவத்தினராலும் முஸ்லீம்களாலும் தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டது. 1954ம் ஆண்டு முஸ்லீம் காடையர்கள் இவ்வழகிய கிராமத்தை இரத்தக் களறியாக்கினார்கள். வாள் வெட்டுக்கும், கத்தி வெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க்குடும்பங்கள் வீரச்சோலை வளதாப்பிட்டிய மல்லிகைத்தீவு, மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழத்தலைபட்டனர். 1954ம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் துன்பத்தையே சுமந்தனர். கொண்டவெட்டுவான் இரானுவ முகாமும் இக்கிராமத்தைச் சூழ இருந்த முஸ்லீம் கிராமங்களும் தமிழர்களை இங்கிருந்து அகற்றிவிடவேண்டுமென்ற திடமானமுடிவுடன் செயற்பட்டனர். 1990ம் ஆண்டு ஆனி மாதமும் ஆடி மாதமும் இனி மேல் அங்கே தமிழ் மக்கள் வாழவோ காலடிவைக்கவோ முடியாதென்ற நிலையை உருவாக்கியது. ஆனிமாதம் 20ம் திகதி வீரமுனை இவளத்தாப்பிட்டிய வீரஞ்சோலைக் கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்டன. கொண்டவெட்டுவான் இராணுவ முகாமிலிருந்து வந்த இராணுவத்தினரும் அவர்களோடு இணைந்துவந்த முஸ்லீம் காடையர்களும் மக்களெல்லோரையும் வீரமுனைக் கோயிலடிக்கு செல்லுமாறு கட்டளையிட்டனர். ஒருசில நாட்களின் முன் கல்முனையில் தமிழர்கள் கொல்லப்பட்டதையறிந்த மக்கள் அச்சத்துடன் ஆலயத்தில் ஒன்று கூடினர். ஆலயத்தில் வைத்தே கொல்வதற்குரியவர்களை தெரிவு செய்தார்கள். தட்டிக்கேட்க யாருமில்லை. முதற்கட்டமாக ஐம்பத்தியாறு ஆண்கள் தெரிவு செய்து எடுக்கப்பட்டனர். மரணக் குழிநோக்கி அவர்கள் தள்ளி கொல்லப்பட்டார்கள். கட்டிய மனைவிமாரும், பெற்ற தாய்மாரும் கதறி அழுதார்கள். கையெடுத்து கும்பிட்டார்கள். தாலிப்பிச்சைக் கேட்டு காலடியில் விழுந்தார்கள். கொலை வெறியோடு வந்தவர்கள் எக்காளமிட்டுச் சிரித்தார்கள். எங்கள் மக்களின் கண்ணீரும் வேண்டுதலும் அவர்களுக்கு கேளிக்கையாக மாறியது. சம்மாந்துறை மலைக்காட்டிற்குள் தீ பற்றி எரிந்தது. முப்பத்தியேழு பேரையும் சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் தூக்கி வீசினார்கள். இராணுவத்தினரின் இச்செயலினை சுற்றிநின்ற முஸ்லீம் காடையர் கைதட்டி மகிழ்ந்தார்கள். எமது மக்களின் வாழ்வும் வளமும் பற்றி எரிந்தது. வாய்விட்டுச் சொல்ல முடியாத எங்களுறவுகளுக்காக குரல் கொடுக்க யாரும் இருக்கவில்லை. காலையில் கைதுசெய்து சென்றவர்களை சுட்டுப்பொசுக்கிய போதும் இராணுவத்தினரின் கொலைப்பசி மாறவில்லை. ஒரு வாரம் கூட மறையவில்லை. 29ம் திகதி மீண்டும் கைது. எச்சஞ்சொச்சமாயிருந்த ஆண்களில் ஐம்பத்தியாறு பேரை துப்பாக்கிமுனையில் தள்ளிச்சென்றார்கள். கொண்டைவெட்டுவானில் பெரு நெருப்பெரிந்தது. சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் எறியப்பட்டார்கள். சொல்லியழ வார்த்தைகளின்றி கையில் தூக்கிய பொருட்களோடு காரைத்தீவிற்குத் தப்பியோடினார்கள். காரைத்தீவுப் பாடசாலை அகதி முகாமாகியது. சொந்த மண்ணிலேயே எமது மக்கள் அகதியாக்கப்பட்டார்கள். அகதி வாழ்வோடு விட்டிருந்தால் கூடப் பரவாயில்லை. அகதி முகாமையும் கொலை முகாமாக சிங்கள இராணுவத்தினர் மாற்றினார்கள். தமிழ் மாணவர்களின் கல்விக்கூடம் கொலைக்கூடமாக்கப்பட்டது. ஆட்டுப்பண்ணைகளில் இறச்சிக்குத் தெரிவாகிய கிடாப்போல அகதிமுகாமில் வைத்துக் கொலை செய்வதற்குரிய ஆண்களை தெரிந்தெடுத்தார்கள். இம்முறை காரைத்தீவு விசேட அதிரடிப் படையினர் தங்கள் கைவரிசையினைக் காட்டினார்கள். ஒரு மாதங்கூட மறையவில்லை ஆடிமாதம் 4ம் திகதி காரைதீவு அகதிமுகாமில் அழுகுரல் ஓங்கி ஒலித்தது. முதல்த் தெரிவில் பன்னிரெண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். ஓரிருநாள் கழித்து படை முகாமுக்குச் சென்ற தாய்மாருக்கு படையினர் கொடுத்த பதில் விசித்திரமானது. “உங்கட ஆக்கள நாங்க கொண்டு வரல்ல ஆக்கள் இனம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று பதிவு செய்துவிட்டு கச்சேரியில காசு எடுங்க”. பாடசாலையிலிருந்த அகதிமுகாமுக்குள் மீண்டும் 10ம் திகதி விசேட அதிரடிப் படையினர் புகுந்தனர். பதினொரு ஆண்கள் பிடிக்கப்பட்டனர். எஞ்சியிருந்த ஆண்கள் இவ்வளவுதான். எச்சசொச்சமின்றி எல்லோரையுமே கொண்டுபோய் சுட்டுவிட்டு எரித்தார்கள். வீரமுனைக் கிராமத்து மக்கள் எங்கிருந்தாலும் அவர்களைக்கொன்றொழித்து விடுவதென்று சிங்களப்படையினர் முடிவெடுத்து விட்டனர். 1990ம் ஆண்டு ஆடிமாதம் கணவன்மாரைப் பறி கொடுத்த துயரோடு காரைதீவு அகதி முகாமிலிருந்து தமது கிராமத்துக்கு திரும்பினார்கள். யாரைப் பறிகொடுக்கக் கூடாதென்று காரைதீவுக்கு ஓடினார்களோ அவர்களைக் காரைதீவில் பறிகொடுத்துவிட்டதால் இனிமேல் எது நடந்தால் என்ன என்ற விரக்தியோடு திரும்பினார்கள். வரும் வழியில் மல்வத்தை இராணுவ முகாமிலிருந்த இராணுவத்தினர் தமது கொலைப்பசியையும் தீர்க்க விரும்பினர். நடந்துவந்தவர்களில் எட்டுப்பேரைப் பிடித்திழுத்துச் சென்றனர். பசிதீரும் வரை மாறி மாறி குதறினார்கள். கடைசி மூச்சு அடங்கும் வரை மிருகத்தனமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள். பிணமாகிப்போனதும் கிண்டிப் புதைத்தார்கள். 26ம் திகதி கொண்டவெட்டுவான் படை முகாமிலிருந்து வந்த படையினர் மல்வத்தை, வீரமுனை, கலைதிபுரம், புதுநகர் கிராமங்களிலிருந்து எட்டுப்பேரை கைது செய்து சென்றார்கள். இன்றுவரை அவர்களின் கதையில்லை மரண அத்தாட்சிக்கு இராணுவத்தினர் கிராமசேவகர்களுக்கு அனுமதி வழங்கிய போதுதான் முடிந்துபோன இவர்களின் கதையும் தெரியவந்தது. ஆனி மாதம் ஆரம்பித்த இன அழிப்பு ஆடி மாதமும் தொடர்ந்து. ஆவணிமாதத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஆவணி மாதம் 8ம் திகதி சிங்களப் படையினருடன் இனைந்து வந்த சிங்கள ஊர்காவற்ப்படையினரும் முஸ்லீம் ஊர்காவற்ப்படையினரும் எங்களாலும் தமிழர்களை கொள்ள முடியுமென்பதை காட்டினார்கள். ஓடி ஒழிந்து வாழ்ந்த ஆண்களில் எட்டுப்பேரினைக் கைதுசெய்து கண்டதுண்டமாக வெட்டிக் கிணற்றில் போட்டார்கள். வீரமுனையிலோ வளத்தாப்பிட்டியிலோ அல்லது மல்வத்தையிலோ இனிமேல் வாழமுடியாது எனக்கருதிய எமது மக்கள் மண்டூருக்குச் சென்று வாழவிரும்பி கையில்த் தூக்கிய பொருட்களோடு நடந்தார்கள். 11ம் திகதி சவளைக்கடை இராணுவ முகாமில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். வீதியில் முகாமுக்கு முன்னால் வைத்தே பதினெட்டுப்பேரை வெட்டிக்கொன்றார்கள். தப்பி ஓடிய மக்கள் மீண்டும் தங்கள் கிராமத்துக்கே வந்து சேர்ந்தனர். சவளைக்கடை இராணுவத்தினரும் தமிழர்களைக் கொல்வதில் தாங்களும் சளைத்தவர்களல்ல என்பதைக் காட்டினார்கள். 'புதைகுழிகளைத் தோண்டட்டும். அதற்கு பின்னர் சிறு வயதில் நாங்கள் ஆயுதம் தூக்க வேண்டிவந்ததற்கான தீர்ப்பை சட்டப் புத்தகத்தில் தேடட்டும்.' என அந்த போராளி நீதிக்கான போரின் பக்கமொன்றை புரட்டி வைத்தான். அனாதைகளாய் ஆதரவின்றி ஓடிவந்த மக்களை கொண்டவெட்டுவான் படையினர் விட்டு வைக்கவில்லை. 12ம் திகதியே இக்கிராமங்களுக்குள் புகுந்தார்கள். முஸ்லீம் காடையர்களும் துணைக்கு வந்தனர். வீடுகள் தீயிடப்பட்டன. சொத்துக்கள் சுறையாடப்பட்டன. எரியும் நெருப்பில் உயிருடனேயே எமது உறவுகள் தூக்கி வீசப்பட்டனர். தப்பி ஓடியவர்கள் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகினர். இருபத்தைந்து பேர் இக் கொடிய கொலைவலைக்குள் சிக்கி மடிந்தனர். காயங்களோடு அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முப்பதுபேரைக் கூட இராணுவத்தினர் விடவில்லை. வைத்தியசாலையை 12ம் திகதி சுற்றிவளைத்து காயமுற்று படுக்கையிலிருந்த அத்தனை பேரையும் தூக்கி ஏற்றிச் சென்று கொன்றனர். நாட்கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் தொடர்ச்சியாக நடந்துமுடிந்த வீரமுனைக் கிராமமக்களின் துயரக்கதைக்கு நீதி யார் தருவது? ஓடி ஓடி தப்பிகொண்ட பதினைந்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் தர்ம யுத்தத்திற்காய் களம்புகுந்தனர். களத்தில் போராடிக்கொண்டிருக்கும் மருத்துவப் போராளி கிருஸ்ணபிள்ளை நித்தியானந்தன் தன் மனதில் உறைந்து கிடந்த பிறந்த மண்ணின் கறைபடிந்த நாட்களை பகிர்ந்து கொண்டார். “இளம் வயதில் நாங்கள் ஏன் துப்பாக்கி ஏந்தினோம் என்பது மனித உரிமை அமைப்புகளுக்கு விளங்காது. விளக்கவும் முடியாது. அவர்களுக்கு தெரிவது சிங்களவர் உயிரே ஒழிய தமிழர் உயிர்களல்ல. இவர்கள் முதலில் இந்தக் கொலைகளை ஆராயட்டும்". பதினொரு ஆண்டுகளாய் போர்க்களம் கண்டு நிற்கும் அந்த இளைஞனிடம் தனது கிராமத்தை மீற்கமுடியுமென்ற நம்பிக்கை பிரகாசமாய்த் தெரிந்தது. *****
- 170 replies
-
-
- 1
-
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
xavierpuram massacre by sri lankan muslims.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
Poththuvil massacre by sri lankan muslims.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
படுகொலை விரிப்புகள் புத்தகம்: தமிழினப் படுகொலைகள் 1956-2008 எழுத்துருவாக்கம்: வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம் பக்கம்: - நூல் வெளியீட்டு ஆண்டு: 2010 சம்மாந்துறைப் படுகொலை 10 ஜூன், 1990 படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறைப் பிரதேசசெயலர் பிரிவில் சம்மாந்துறைக் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் வயல்களைக் கொண்ட விவசாயக் கிராமம் ஆகும். இப்பிரதேசத்தில் கண்ணகி அம்மன் கோயில் காளிகோயில் போன்ற பல ஆண்டுகள் பழைமை வாய்ந்த வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன. 1990.06.10 இல் முசுலிம் குழுக்கள் இராணுவத்தினருடன் இணைந்து பொதுமக்கள் மீது இங்கு தாக்குதல் நடத்தினார்கள். இவர்களின் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக ஓடிய பொதுமக்கள் மீது இராணுவத்தினர் சுட்டதில் பலர் உயிரிழந்தனர். அன்று இராணுவத்தினரும் முசுலிம் குழுக்களும் நடாத்திய தாக்குதலில் முப்பத்தேழு பொதுமக்கள் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தார்கள். இச்சம்பவத்தில் கொல்லப்பட்டோர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது) இராசரட்ணம் இராமச்சந்திரன் - கூலி - 19 க.வடிவேல் - - த.தாசன் - - தம்பிராசா உருத்திரன் - மாணவன் - 16 மா.கணபதிப்பிள்ளை சு.கணேசன் சின்னத்தம்பி மார்க்கண்டு *****
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
உதவி தேவை: விடுதலைக்கு வலுச்சேர்த்த தமிழ்நாட்டுத் திரைப்படப் பாடல்கள்
அருமை அருமை... மிக்க நன்றி ஐயனே...