Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. தமிழ்நாட்டில் , காலம் அறியில்லை (Period Unknown)
  2. --->வல்வை குமரன்(தேவரண்ணா...) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று உலகின் பல நாடுகளாலும் பேசப்படுகின்ற ஒரு அமைப்பாக விளங்குகின்றது. தரைப்படை,கடற்படை,விமானப்படை என முப்படைகளையும் வைத்திருந்து பல்வேறு கட்டுமானங்களோடு தமிழீழ மண்ணில் ஆட்சி செலுத்த முடிந்ததென் றால் இந்த இயக்கம் கட்டி எழுப்பப்பட்ட வரலாற்றை நாம் அறிய வேண்டும். தேசியத்தலைவர் அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை மாபெரும் அமைப்பாக மாற்றினார் என்றால் அதற்கு அத்திவாரக் கற்களாக, அத்திவாரமாக ஆரம்ப காலத்தில் செயற்பட்டவர்கள் தமிழக உறவுகள் தான் என்பதை நாம் என்றுமே மறந்துவிட முடியாது. 1982 காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரும் பேபி சுப்பிரமணியம் என அழைக்கப் பட்டவருமான பேபி அண்ணா தமிழகத்தில் கட்சி வேறுபாடுகள் இன்றி ஐயா.பழ.நெடுமாறன் அவர்களது காமராசர் காங்கிரசு,திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட்ட அனைத்து அமைப்பினர்களுடனும் தொடர்பு கொண்டு தேசியத்தலைவர் அவர்கள் பற்றியும்,அவரால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றியும்,தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றியும் எடுத்துக் கூறி எமக்கான ஆதரவுத் தளத்தினை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.அதன் தொடர்ச்சியாக தமிழக மக்கள் மத்தியிலும் அந்தப் பிரச்சாரம் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற நோக்கில் திராவிடர் கழகத்தில் அப்போது செயற்பட்டுக் கொண்டிருந்த தோழர் கோவை ராமகிருஷ்ணன் அவர்களின் ஒத்துழைப்போடு 'தமிழீழ விடுதலைப் புலிகள் தோழமைக் கழகம்' என்றோர் அமைப்பை 1984 காலகட்டத்தில் உருவாக்கினார். 1983 இன் ஆடிக் கலரத்தினைத் தொடர்ந்து சிங்களவர்கள் இலங்கையில் நடத்திய படுகொலைகளைக் கண்டு வேதனையுற்ற இந்திரா காந்தி அம்மையாரின் அரசு சிறிலங்கா அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமன்றி, இலங்கையில் அப்போது செயற்பட்டு வந்த தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சிகளையும் வழங்க முன்வந்தது.அதன்படி 1983 நவம்பர் மாதம் முதல் டிசம்பர் கடைசிவரை இந்திய அரசின் பயிற்சி முகாம்கள் வட இந்தியா வில் நடைபெற்றன.அங்கு இரண்டு முகாம்களிலும் சில நூறு எண்ணிக்கையிலான புலிகளுக்கே பயிற்சிகள் வழங்கப்பட்டு இருந்தன. அத்தோடு தேசியத்தலைவர் அவர்கள் திருப்தி அடைந்து விடவில்லை. தமிழ்நாட்டிலும் பயிற்சி முகாம்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்,ஆயிரக் கணக்கான வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என விரும்பினார். அந்த விருப்பம் மணி அண்ணாவின் (கொளத்தூர் மணி)ஒத்துழைப்போடு நிறைவேறியது. பின் நாட்களில் தேசியத் தலைவர் அவர்களால் 'புலிகளின் மூத்த போராளி' என அழைக்கப்பட்ட மணி அண்ணாவின் மேட்டூர் கொளத்தூர் பாப்பாரம்பட்டியில் உள்ள மணி அண்ணாவின் இடம் அன்று போராளியாக இருந்த ராகவன் மற்றும் கோபி என்பவர்கள் சென்று பார்த்து ராகவனால் போராட்ட பயிற்சி முகாம் நடத்துவதற்கு பொருத்தமான இடம் என ஏற்றுக்கொள்ளப்பட்டு மணி அண்ணாவின் பூரண சம்மதத்துடன் அங்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. அப்பையா அண்ணர் அவர்களே மூன்றாவது பயிற்சி முகாமுக்கான (முதல் இரண்டும் வட இந்தியாவில் நடைபெற்றிருந்தன) போராளிகளை அழைத்துச் சென்றிருந்தார்.அங்கு ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பயிற்சி முகாம் அது.3,6,10 ஆகிய மூன்று பயிற்சி முகாம்கள் அங்கு நடத்தப்பட்டன. 3 ஆவது பயிற்சி முகாம்,1984 ஜனவரி 5ஆம் நாள் ஆரம்பமானது.ஒவ்வொரு முகாமிலும் பயிற்சிகள் இடம்பெறும் போது தேசியத்தலைவர் அவர்கள் அங்கு சென்று வருவார். அந்தக் காலப்பகுதிகளில் தலைவருக்கும் மணி அண்ணாவுக்குமான உறவு நெருக்கமாக வளர்ந்தது. அங்கு நடைபெற்ற 3 பயிற்சி முகாம்களும் பொன்னம்மானின் மேற்பார்வையிலேயே நடைபெற்றன. 3ஆவது பயிற்சி முகாமினை புலேந்தி அம்மான் பொறுப்பேற்று நடத்தினார். அவருக்கு உதவியாக நம்மாள் என்பவரும் பணியாற்றினார். 3ஆவது பயிற்சி முகாம் நடாத்தப்பட்ட காலகட்டத்தில் இயக்கத்திடம் பெருமளவில் நிதி வசதி இருக்கவில்லை.அந்த நேரங்களில் மணி அண்ணாவின் பங்களிப்பு பெருமளவில் இருந்தது.உள்ளூர் மக்களிடமும்,கட்சிப் பிரமுகர்களிடமும் நிதி பெற்று வழங்கினார்.அந்தக் காலகட்டத்தில் மணி அண்ணாவின் குடும்பத்திற்கு என சாராயக் கடைகள்,கள்ளுத் தவறணைகள் என்பன இருந்தன.அந்த வருவாய்களும் போராளிகளின் செலவுகளை ஈடு செய்தன.அது மட்டுமன்றி தனது நண்பர்களிடமும் சென்று ஒவ்வொருவரிடமும் மூன்று மூடை நெல், 1 கிடாய் ஆடு என்ற விதமாகவும் பெற்று வருவார்.அவ்வாறு சேகரிக்கப்பட்ட நெல் மூடைகளும், கிடாய் ஆடுகளும் போராளிகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்தது. அது மாத்திரமன்றி வாணியம்பாடி, பெங்களூர்,சேலம்,திருப்பூர் போன்ற இடங்களிலும் பலரையும் தொடர்பு கொண்டு நிதியுதவிகளைப் பெற்றுக் கொடுத்தார்.வாணியம்பாடியில் அண்ணா தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் 1லட்சம் ரூபா நிதி திரட்டி வழங்கினார்கள். பெங்களூர் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் ஐயா 2லட்சம் ரூபா நிதியுதவி வழங்கியிருந்தார். கரூரில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பழ.ராமசாமி அவர்கள் முகாமின் பாவனைக்கென ஜீப் வண்டி ஒன்றை அன்பளிப்புச் செய்திருந்தார்.அது மட்டுமன்றி முகாமில் ஆழ்குழாய்க் கிணற்று வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். ஈரோடு திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் தேசியத்தலைவர் மீது மிகுந்த பற்றும்,மரியாதையும் கொண்டவர்.பயிற்சி முகாம் காலத்தில் 6 ஆவது முகாம் நடைபெற்றபோது அரிசி மூடைகளும்,வாரத்திற்கு 1000 முட்டைகள் வீதமும் வழங்கி உதவியவர். அது மட்டுமன்றி நமது போராளிகள் காயப்பட்டு வந்த வேளைகளில் ஈரோட்டில் அவர்களுக்கு சிகிச்சைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து அவர்களைப் பராமரித்தவர்.குறிப்பாக சீலன்,புலேந்தி, ரகுவப்பா காயப்பட்டு வந்திருந்த வேளையில் அவர்களுக்கான சிகிச்சை வசதிகளையும் செய்து தந்தவர். 6ஆவது பயிற்சி முகாம் பொன்னம்மானின் மேற்பார்வையில் லூக்காஸ் அம்மான்,மேனன் ஆகியோர் பொறுப்பில் நடைபெற்றன.அந்தப் பயிற்சி முகாமின் போது போராளிகளுக்கு சின்னம்மை(பொக்குளிப்பான்) நோய் வந்து போராளிகள் மிகவும் துன்பப்பட்டார்கள்.அந்த நேரம் வண்டிமாடு கட்டிச்சென்று வேப்பிலைகளை பெருமளவில் கொண்டு வந்து முகாம்களில் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் குடில்களில் அவற்றைப் பரப்பி வைத்து அவற்றின் மேல் அவர்களைப் படுக்க வைத்து பராமரித்து பழ வகைகளை வாங்கி வந்து அவர்களுக்கு வழங்கி அவர்களுக்கான அனைத்துப் பணிவிடைகளையும் செய்தவர் மணி அண்ணா. 4ஆவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற ஒரு போராளிக்கு சின்னம்மை வந்து மாறியிருந்தது.6ஆவது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்துக்கொண்ட தனது தம்பியைப் பார்ப்பதற்காக அவர் அங்கு வந்திருந்தார்.அவர் மூலமே அந்த நோய் அங்கு பரவியிருக்கலாம் என மணி அண்ணா தெரிவித்தார். ஆரம்பத்தில் 5 பேரில் தொடங்கி 50 பேர் வரை அது பரவியிருந்தது.மணி அண்ணாவின் பெரு முயற்சியினா லேயே அது மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டிருந்தது. கொளத்தூரில் நடைபெற்ற மூன்று முகாம்களின் போதும் மணி அண்ணாவின் பங்களிப்பு தேசியத் தலைவர் அவர்களால் பாராட்டும்படி யாக அமைந்திருந்தது.பயிற்சிப் பாசறைகளின் பணிகளோடு மட்டும் மணிஅண்ணா நின்றுவிடவில்லை. 1986 ஆம் ஆண்டு ஏழாம் நாள் டெல்லியில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் ஒன்றிற்கு கலந்து கொள்ளச் சென்றிருந்த மணி அண்ணா தன்னோடு பள்ளியில் பயின்றவரும்,பெரியாரிய பற்றாளரும்,விடுதலைப்புலிகளின் ஆதரவாளருமான நண்பர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அந்த நண்பர் இந்திய இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றி வந்தவர்.அவர் படைத்துறை அறிவியல் சார்ந்த கிட்டத்தட்ட 50 அரிய நூல்களைச் சேகரித்து வைத்திருந்தார். அவை புலிப்படைக்குப் பயன்படட்டும் என்று கூறி மணி அண்ணாவிடம் கையளித்துள்ளார்.சென்னை திரும்பிய மணி அண்ணா அவற்றை தேசியத் தலைவர் அவர்களிடம் கொடுத்துள்ளார். அவற்றைப் பார்த்ததும் தேசியத்தலைவர் அவர்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. தலைவர் அவர்கள் மணி அண்ணாவிடம் மீண்டும் புதுடில்லி சென்று வருமாறு கேட்டுள்ளார். இரண்டு லட்சம் ரூபாய்களை மணி அண்ணாவிடம் கொடுத்து அப்போது விடுதலைப் புலிகளின் படைத்துறைத் செயலகத்தில்( MO) பணியாற்றி வந்த ஜான் மாஸ்டரையும் அழைத்துக்கொண்டு செல்லுமாறு கூறி அதற்கான ஏற்பாட்டையும் செய்தார் தலைவர்.முன்பு மணி அண்ணா கொண்டுவந்த நூல்களின் தொகுதியில் ஒரு புத்தகத்தின் இரண்டாம் பாகம் இருந்துள்ளது.முதலாம் பாகத்தையும் எப்படியாவது தேடி வாங்கி வருமாறும் கூறியுள்ளார்.அடுத்த நாளே ஜான் மாஸ்டரோடு டெல்லிக்கு பயணமானார் மணி அண்ணா.டெல்லிக்குச் சென்ற அவர்கள் புத்தகக் கடைகள்,பல்வேறு பதிப்பகங்கள் என அலைந்து திரிந்து மேலும் ஏராளமான படைத்துறை சார்ந்த அறிவியல் நூல்களை வாங்கி வந்து தலைவர் அவர்களிடம் ஒப்படைத்தார் மணி அண்ணா. இவ்வாறு மணி அண்ணா அவர்கள் அனைத்துப் பணிகளையும் இயக்கத்தில் ஒருவராக இணைந்து நின்றே செய்து முடிப்பவர். அமைதிப்படையென்று கூறி இலங்கைக்கு சென்று விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்கில் புலிகளுக்கு எதிராக படை நடவடிக்கைகளை மேற்கொண்டபோது நடைபெற்ற சமர்களில் எம்மவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளானார்கள்.அவ்விதம் காயப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்ட லெப்டினன்ட் கேணல் நவம் சிகிச்சைகள் பலனின்றி மரணத்தை தழுவிக் கொண்டார். நவம் அவர்களது உடலை மருத்துவ மனையில் இருந்து எடுத்துச் சென்று அவருடைய உடலைக் குளிப்பாட்டி புலிச்சீருடை அணிவித்து அப்போது தமிழ்நாட்டில் தங்கியிருந்த புலி உறுப்பினர்கள் மற்றும் திராவிடர் கழக உடன்பிறப்புக்கள் பலர் அணிவகுத்துச் சென்று நவம் அவர்களது உடலுக்குத் தீ மூட்டப்பட்டது.அவரது அஸ்தி சேகரித்து வைக்கப்பட்டு 31ஆம் நாள் அஞ்சலி நிகழ்வையும் நடத்தி முடித்து அந்த அஸ்தியை தமிழீழ மண்ணுக்கு அனுப்பி வைத்தவர் மணி அண்ணா. இந்தியப்படை நடவடிக்கை களின்போது காயமடைந்து தமிழ் நாட்டுக்கு கொண்டு வரப்படும் புலிப் போராளிகளுக்கு தனது ஏற்பாட்டிலேயே சேலம்,ஈரோடு,போன்ற இடங்களில் அமைந்திருந்த தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சைகள் அளித்து பலரை ஈழத்திற்கு அனுப்பியது மட்டுமன்றி,தமிழகத்தில் சிகிச்சைகள் பலனளிக்காது மரணித்த ஒன்பது பேர்களின் உடல்களுக்கு தகுந்த மரியாதைகள் செய்து தனது சொந்த குடியிருப்புப் பகுதியிலேயே தகனம் செய்தவர் மணி அண்ணா. தேசியத்தலைவர் அவர்கள் மணலாற்றுக் காட்டில் தங்கியிருந்த வேளையில் 1987 நவம்பர் 27ஆம் நாள் முதலாவது மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது.அந்த நிகழ்வில் மணி அண்ணாவும் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பிய தேசியத் தலைவர் அவர்கள் மணலாற்றுக் காட்டுக்கு வந்து திரும்புமாறு மணி அண்ணாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.அந்தக் கடிதத்தில் மாவீரர்நாள் நிகழ்வு பற்றி தலைவர் அவர்கள் குறிப்பிட்டிருக்கவில்லை.கடல் பயணம் தடைப்பட்டதன் காரணமாக குறிப்பிட்ட நவம்பர் மாத காலப்பகுதியில் மணி அண்ணாவுக்கு தமிழ் ஈழம் செல்ல முடியாது போய்விட்டது. 1987 டிசம்பர் மாதம் முதல் வாரத்திலேயே மணலாற்றுக் காட்டுக்கு சென்று தேசியத்தலைவர் அவர்களைச் சந்திக்க முடிந்தது.தலைவர் அவர்களுடன் தங்கியிருந்த நாட்களில் கண்ணிவெடி தயாரிப்புத் தொழிற்சாலை சீருடைகள் தைக்கும் பாசறை,மொழி பெயர்ப்புப் பணிகள் செய்துவந்த தனிப்பகுதி,பெண்புலிகள் பாசறை, கமாண்டோ பயிற்சிப் பாசறை என பல பகுதிகளுக்கும் தேசியத்தலைவர் அவர்களோடு சென்று மணி அண்ணாவினால் அனைத்தையும் பார்க்க முடிந்தது. தேசியத்தலைவர் மணலாற்றுக் காட்டில் தங்கியிருந்த வேளையில் இந்திய அமைதிப்படை நடவடிக்கை களின்போது மாத்தையாவால் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் பொய்யான தகவல் ஒன்றும் பரப்பப்பட்டிருந்தது.மணி அண்ணா காட்டில் தலைவரைச் சந்தித்து, தலைவரோடு நின்று எடுத்த புகைப் படங்களைக் காண்பித்து ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலின் மூலம்தான் அந்தத் தகவல் பொய்யானது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொண்டார்கள். தலைவரைச் சந்தித்து வந்த பின்பும் மணி அண்ணாவின் இயக்கம் சார்ந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்றே வந்தன.இயக்கப் போராளிகள் கஷ்டம் என்று யார் வந்தாலும் முகம் சுழிக்காமல் உதவிகள் செய்பவர். 2014 இல் ஒரு நாள் மணி அண்ணாவிடம் இருந்து எனக்கு கைபேசி அழைப்பு." சொல்லுங்கோ அண்ணா" என்றேன் நான்.ஒரு பெயரைச் சொல்லி " இவர் மைசூர் பக்கம் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கின்றாராம்.நம்ம ஆளா?" என்றார்.அவர் சொன்ன பெயரைக் கேட்டதும் அதிர்ந்து போய்விட்டேன். மு.வே.யோகேஸ்வரன் என்ற பெயரில் முகநூலில் எழுதிக் கொண்டிருந்த வாஞ்சிநாதனே அவர்.தான் ஜேர்மனியில் இருப்பதாகத்தான் சொல்லிக் கொண்டிருந்தார். " அண்ணா அவரை உடனை சென்னைக்கு எடுக்க வேணும்.நான் வீட்டில் வைச்சுப் பார்க்கிறன்.கொஞ்ச காசு அனுப்புங்கோ" என்று கூறி வங்கி இலக்கத்தையும் வாஞ்சியிடம் இருந்து வாங்கி மணி அண்ணாவுக்கு தெரிவித்தேன்.மணி அண்ணா உடனடியாக 10 ஆயிரம் ரூபா அனுப்பி இருந்தார்.பணம் கிடைத்த இரண்டொரு நாட்களில் வாஞ்சி சென்னைக்கு வந்து சேர்ந்தார்.வாஞ்சி ஆட்டோவில் வந்து எங்கள் வீட்டு வாசலில் இறங்கியபோது அவரை அடையாளம் காண முடியாமல் இருந்தது.சரியாக மெலிந்து நடக்கவும் முடியாமல் முதுகு வளைந்தபடியே வந்து சேர்ந்தார். நான் மறு நாளே அண்ணா நகரில் உள்ள ஒரு சிறந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பூரண உடற்பரிசோதனைகள் செய்வித்தேன்.அவருக்கு கான்சர் என்ற மாதிரித்தான் முதலில் கதை பரப்பப் பட்டிருந்தது.அவருக்கு கான்சர் இல்லை. ஒழுங்காக நேரத்திற்கு சாப்பிடாமல் அல்சர் முற்றிய நிலை. பின் இரண்டு மாதங்கள் வரை அவருக்கு சிகிச்சைகள் மேற்கொண்டு எனது வீட்டில் நானே பராமரிப்பு செய்து பூரண நலமடைந்து பின்பே திரும்ப மைசூருக்கு அனுப்பி வைத்தேன்.அதன் பின்பும் மணி அண்ணா வாஞ்சியோடு தொடர்பில் இருந்து நிதியுதவிகளும் செய்துள்ளார். 90 காலப்பகுதியில் கப்டன் றோய் நாட்டில் காயப்பட்டு சிகிச்சைக்காக மணி அண்ணாவிடம் அனுப்பப்பட்டிருந்தார். முதலில் ஈரோடு L.K.M மருத்துவமனையில் வைத்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் பெங்களூரில் Peoples Hospital இல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.சிகிச்சை பலனின்றி றோய் மரணத்தைத் தழுவிக் கொண்டபோது அவரின் உடலைப் பொறுப்பேற்று எடுத்துவந்து அவருக்குரிய மரியாதைகளோடு றோய் வாழ்ந்த கொளத்தூர் கும்பாரப்பட்டியிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் நினைவாக அந்த இடத்திற்கு புலியூர் என பெயர் மாற்றம் செய்து பொன்னம்மான் நினைவு நிழற்கூடம் ஒன்றினையும் உருவாக்கி புலியூர் பகுதியில் வருடாவருடம் தமிழீழ மாவீரர் நாளை வெகு விமரிசையாக செய்து வருகின்றார் மணி அண்ணா. அத்தோடு நினைவு நிழற்கூடத்திற்கு பின்புறமாக ஒரு ஏக்கர் காணியைப் பெற்று மாவீரர் நினைவு மண்டபம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார் மணி அண்ணா. 'ஈழப்போராளிகளுக்கு ஆதரவாக தன் சொந்தப் பணத்தையே செலவழித்திருக்கின்றார்.ஈழப் போராளிகளின் இலட்சியம் நிறைவேறுவதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்' என 1994 இல்'கியூ' பிரிவினர் மணி அண்ணாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை சமர்ப்பித்திருந்தனர். 08.02.91-27.04.91காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையிருந்தவர். 28.05.94-02.01.95 விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இயங்கியதாக தடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறை. 10.09.95-08.09.96 வேலூர் சிறப்பு முகாமில் இருந்து தப்பிய விடுதலைப் புலிப் போராளிகளுக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தவர். இந்த வழக்கில் தனக்காக தானே வாதாடி விடுதலையானார். 28.02.2009-04.05.2009 ' ராஜீவ் கொலை அல்ல மரண தண்டனை' என்று திண்டுக்கல்லில் பேசியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டும் சிறை. 02.11.2013-15.02.2014 இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று கூறி சேலம்,மற்றும் சென்னையில் நடைபெற்ற பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட வழக்கில் இணைக்கப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறை சென்றார். இவ்வாறு 1984 காலகட்டத்தில் இருந்து தேசியத்தலைவர் அவர்களுக்கு விசுவாசமாக விடுதலைப்புலிகளில் ஒருவராக செயற்பட்டு வரும் மணி அண்ணா தனது சொத்துக்களில் பெரும் பகுதியை எமக்காகவே இழந்தவர்.பல வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தும் இன்றுவரை இலட்சியத்தோடு வாழ்ந்து வருபவர். பயிற்சி முகாம் நடைபெற்ற தோட்டத்தில் 15 ஏக்கரை முன்பே விற்றிருந்தார்.மீதியாக இருந்த 12 ஏக்கர் காணியையும் சமீபத்தில் விற்பனை செய்துள்ளார் என்பதைக் கேள்விப்படும் போது வேதனையாக இருக்கிறது.பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்த மணி அண்ணா சொந்த வீடும் இன்றி வாடகை வீட்டிலேயே இன்று வாழ்ந்து வருகின்றார். மணி அண்ணாவின் விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்த அனைத்துப் பணிகளுக்கும் உடனிருந்து உதவி வருபவர் மணி அண்ணாவின் இளவல் தா.செ.பழனிச்சாமி அவர்கள். அவர்கள் இருவர்க்கும் என்றென்றும் தமிழீழ மக்கள் சார்பில் நன்றிகள் பல கோடி!
  3. 15 ஆண்டுகளுக்கு முன்னர் வீரச்சாவடைந்த தலைமகனுக்கு வீரவணக்கம் நடைபெறுகிறது வீரவணக்கம் தலைவர் மாமா
  4. 2020 எதிரிக்கு தன் இனத்தைக் காட்டிக் கொடுப்பது மட்டும் துரோகமல்ல;இனத்தின் வரலாற்றை சில தனிநபர்களினதோ, ஊர்களினதோ, எதிரியின் தேவைக்கேற்றவாறோ, அரசியல்வாதிகளின் நோக்கத்திற்காகவோ மாற்றியோ ; திரித்தோ வெளியிடுவதும் மகா துரோகமே. அடுத்த சந்ததியினரைத் தவறாக வழிநடத்தும் முயற்சி இது. இத்தகைய புல்லுருவிகளைச் சரியாக அடையாளம் காணாவிட்டால் வரலாற்றைத் தொலைத்தவர்களாகி விடுவோம். இந்த வரலாற்றுப் புரட்டு இணையத்தின் துணையுடன் புலம்பெயர் தேசங்களிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றது. பொதுத் தேர்தலொன்றுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்தத் தருணத்தில் கற்பனைகளை வரலாறாக்கும் முயற்சியும் நடைபெறுகிறது. இன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்பது இரவலாக அல்லது கடனாகப் பெற்ற பெயரே. உண்மையான ரெலோவின் தலைவரின் பெயர் தம்பித்துரை முத்துக்குமாரசாமி. இவர் , திருநெல்வேலி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் தற்போது இவர் உயிருடன்தான் புலம்பெயர் தேசமொன்றில் வாழ்கிறார் . ஆயுதப் போராட்டம் என்றால் அதன் வரலாறு கிழக்கு மாகாணத்தில் இருந்தே வெளிப்பட்டது. 1958 இல் குடியேற்றவாசிகளான சிங்களவர்களுக்குச் சார்பாக தமிழர் மீது தாக்குதல் நடத்த இராணுவத்தினர் வந்தனர். இவர்களை ஷொட்கன் துப்பாக்கியால் சுட்டு விரட்டியதுடன் அவர்கள் வந்த ஜீப்பையும் எரித்தனர் துறைநீலாவனை இன உணர்வாளர்கள். இவ்வாறு விரட்டியேரில் ஒருவரான கனகசூரியம் என்பவரும் அவரது துணைவியாரும் பின்னர் கல்முனை பட்டின சபையாக விளங்கியபோது அதன் உறுப்பினர்களாக விளங்கினர். இவர்களது மகன்தான் அம்பாறை மாவட்டத் தளபதியாக விளங்கிய மேஜர் அன்ரனி. எம்.ஜீ.ஆரை மட்டந்தட்ட கருணாநிதி பயன்படுத்துவது அவர் மலையாளி என்று. அதனால்தான் பாதிக்கப்படும் தமிழர் தொடர்பாக எம்.ஜீ.ஆர். அக்கறை காட்டுவதில்லை என்ற சாரப்படப் பேசி வந்தார். பொறுமை இழந்த எம்.ஜீ.ஆர். ஒரு கட்டத்தில் ‘குட்டிமணியை இலங்கை அரசிடம் ஒப்படைத்தவர்தானே கருணாநிதி”, என்றார். இந்தப் பீரங்கித் தாக்குதலில் நிலைகுலைந்து விட்டார் கருணாநிதி. எப்படியோ ஓடித் திரிந்து குட்டிமணி குழுவில் எஞ்சியோரில் சிறீசபாரத்தினத்தைத் தொடர்பு கொண்டனர் தி.மு.கவினர். ‘குட்டிமணி தீவிரவாதி என்ற விடயம் கருணாநிதிக்குத் தெரியாது. வேறு வழக்கு விடயமாகக் கைதாகியிருந்தவர் என்ற அடிப்படையில்தான் இலங்கையிடம் அவரை ஒப்படைத்தார் அப்போதைய முதல்வர்” என்று ஓர் அறிக்கை விடுத்தார். அப்போதுதான் தன்னை செயலதிபர் எனப் பிரகடனப்படுத்திக் கொண்ட சிறீசபாரத்தினம். அந்த அறிக்கையில்தான் தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயர் வெளியுலகுக்குத் தெரிந்தது. இந்த அறிக்கைக்கு முன்னதாக பந்தண்ணா என்றழைக்கப்படும் ராசப்பிள்ளையே இதனை வழிநடத்தி வந்தார். இதற்கு முன்னதாக இக்குழு இயங்கிய விதம் குறித்து ஐயர் தனது புத்தகத்தின்33,34 ஆம் பக்கங்களில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘குட்டிமணி, தங்கத்துரை போன்றோர் இந்தியாவிலிருந்து திரும்பி வருகிறார்கள். அவர்களது தொடர்புகளும் எமக்கு மறுபடி கிடைக்கிறது. அவர்கள் எமக்கு வெளியில் தாமே திட்டமிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அவையெல்லாம் வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் அவர்களுடைய நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் நோக்கோடு அவர்களில் இருவருக்கு துப்பாக்கி சுடக் கற்றுக் கொடுப்பது என்ற முடிவுக்கு வருகிறோம். இந்த முடிவின் அடிப்படையில் எமது புளியங்குளம் முகாமில் தங்கதுரை மற்றும் ராசப்பிள்ளை ஆகியோருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்குகிறோம். இவர்கள் புதிய புலிகள் அமைப்பில் இல்லாதிருந்தாலும் நட்பு சக்தி என்ற அடிப்படையில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகின்றது. அவர்கள் அப்போது ரெலோ (TELO) என்ற அமைப்பை உருவாக்காவிட்டாலும் தனியான ஒரு குழுவாகச் செயற்பட்டனர். பிரபாகரனோ அல்லது புதிய புலிகள் அமைப்பில் இருந்த எவருமே அவர்களை எம்முடன் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் வேறுபட்டவர்களாக இருப்பதையே நாம் அனைவரும் விரும்பினோம். தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் பிரதானமாக கடத்தல் தொழிலையும், வன்முறை எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பகுதி நேரமாகவும் மேற்கொள்கின்றனர். இதனடிப்படையில் அவர்களை உள்வாங்காமல் நட்பு சக்தி என்ற அடிப்படையில் அவர்களுக்கு உதவிகள் வழங்கினோம்.” இதே பெருந்தன்மை குட்டிமணி அண்ணா, தங்கண்ணா ஆகியோரிடமும் இருந்தது. தம்மால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு உரிமை கோரி இலச்சினையுடனான அறிக்கையை ஊடகங்களுக்கு (வீரகேசரி உட்பட) வெளியிட்டனர் புலிகள். இதில் மொத்தம் 11 பேரின் மீதான நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் ஆறாவது பெயரான தங்கராசா (முன்னாள் எம்.பி. அருளம்பலத்தின் செயலாளர்) மீதான நடவடிக்கையை குட்டிமணி குழுவினரே மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு ஒரு அறிக்கையை தாங்கள் வெளியிடப் போவதாகவும் எனவே தங்கராஜாவின் சம்பவம் குறித்து என்ன செய்வது என குட்டிமணி, தங்கத்துரையிடம் கேட்டபோது,’ நாங்கள் உங்களைப் போல கட்டுப்பாடாக இருப்பது சிரமம். எங்களின் தொழிலுடன் (கடத்தல்) உணர்வு ரீதியாக செய்யக்கூடியவற்றையே செய்யப் போகிறோம். எனவே அதனையும் புலிகளின் பேரிலேயே உரிமை கோருங்கள்”, எனக் குறிப்பிட்டதாக ஒரு சந்திப்பில் இளங்குமரன் தெரிவித்தார். இதனையே ஐயரும் தனது நூலில், ‘தங்கராஜா கொலை முயற்சி புலிகளால் மேற்கொள்ளப்படவில்லை. அப்போது ஒரு குழுவாக சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட குட்டிமணி, தங்கதுரை சார்ந்த குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அப்போதும் இந்தியா – இலங்கைக்கு இடையிலான கடத்தல் வியாபரத்தை மேற்கொண்டிருந்தனர். அக்குழுவினர் தமது நடவடிக்கைகளையும் புலிகள் பெயரிலேயே உரிமை கோருமாறு ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையிலேயே தங்கராசாவின் பெயரும் எமது பிரசுரத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டது.” (பக். 117) எனக் குறிப்பிடுகிறார். http://www.ilakku.org/wp-content/uploads/2020/02/WhatsApp-Image-2020-02-22-at-08.57.07.jpeg புலிகள் – குட்டிமணி குழு ஒன்றாக இணைந்து செயற்பட்ட காலத்தில் வெளியிடப்பட்ட’துரோகத்துக்குப் பரிசு” (சுந்தரம் மீதான சாவொறுப்புக் காரணங்கள்)நாடு கடத்தப்பட்ட நிலையில் தமிழீழ அரசு (கிருஷ்ணா வைகுந்தவாசனின் 1982 தைப்பொங்கலன்று தமிழீழப் பிரகடனத்துக்கு எதிரான நிலைப்பாடு) என்ற தலைப்பிலான பிரசுரங்களும் புலிகளின் இலச்சினையுடனேயே வெளியிடப்பட்டன. சில விரும்பத்தகாத நிகழ்வுகளின் விளைவால் இனி தனித்தனியாக இயங்குவோம் எனப் பிரபாகரன் முடிவெடுத்தபோது இரு பகுதியினரும் இணைந்து மேற்கொண்ட நீர்வேலி மக்கள் வங்கி வாகனத் தொடரணியை மறித்துக் கையகப்படுத்திய பணத்தின் மீதியையும், வாங்கிய ஆயுதங்களையும் இவர்களிடம் ஒப்படைத்தார். இம்முடிவுக்கு ஆட்சேபனை தெரிவித்த சீலனிடம்,’எனக்கு உங்கள் மீது நம்பிக்கை உள்ளது. இதைப் போல பல விடயங்களை உங்களால் செய்ய முடியும். குட்டிமணி அண்ணா, தங்கண்ணா இல்லாத நிலையில் அவர்களால் இது போன்ற ஒன்றைச் செய்வது சாத்தியமற்றது”, எனக் கூறினார். ஏற்கெனவே தங்கண்ணா, குட்டிமணி அண்ணா முதலானோரை தற்கொலைத் தாக்குதல் மூலமேனும் விடுவிப்போம் என்று தான் சொன்ன கருத்துத் தொடர்பாக மௌனமாக இருந்தவர்களிடம் ‘நாங்கள் தனித்தனியாகச் செயற்பட்டாலும் இவர்களின் விடுதலை தொடர்பாக நீங்கள் ஏதாவது முயற்சி மேற்கொண்டால் எமது உச்சக்கட்டப் பங்களிப்பை வழங்குவோம்”, எனத் தெரிவித்திருந்தார் பிரபாகரன். இதெல்லாம் நடந்தது இந்தியாவில். அப்போது செல்வம் இலங்கையில் இருந்தார். (அன்று அக்குழுவில் இருந்தவர்களில் இவர் மட்டுமே நாட்டில் எஞ்சியிருக்கிறார்.) 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் உருவானது. தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கும் புதிய அரசியலமைப்பு உருவாக்கமே தமிழீழ விடுதலைப் போராட்டம் உருவாகக் காரணமானது. தரப்படுத்தல் சட்டம் மாணவர்களுக்கு பாதகமாகக் கொண்டு வரப்பட்டபோது இந்தக் கருத்து வலுவானது. வீரபாண்டிய கட்டப்பொம்மன் படத்தில் ‘எண்ணிக்கை தெரியாத குற்றம்”, என்றொரு வசனத்தை சிவாஜி பேசுவார். அதுதான் செல்வத்தின் நிலையும். 1969 இல் ரெலோ உருவானதாக சொல்கிறார். பொதுவாழ்வில் ஈடுபடுவது என்பது சில வரைமுறைகளுக்கு உட்பட்டது. இதன் அடுத்த கட்டம் தமிழீழக் கோரிக்கை முன்வைத்த பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறியது. வரலாற்றைத் தவறாகப் பதியக்கூடாது. ஒரு சட்டவிரோத கடத்தல் தொழில் செய்பவர்களுக்கும் பொலிஸ_க்கும் இடையே முரண்பாடு ஏதாவது ஏற்பட்டிருக்கலாம். அதனை விடுதலைப் போராட்ட நடவடிக்கை என நிறுவ முற்படுவது வரலாற்றுத் தவறு. அடுத்த தேர்தலிலும் தனது எம்.பி. பதவியை உறுதிப்படுத்தவே 50 வருடக் கதை விடுகிறார் செல்வம். அப்போது இவருக்கு என்ன வயதாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். எதிர்வரும் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ரிஷாட் பதியுதீன், சாள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன் போன்றோர் தெரிவாவது உறுதியாகி விட்டது. ஏற்கனவே கட்சியில் முதலாவது எம்.பியாகத் தெரிவு செய்யப்பட்ட செல்வம் அந்த நிலையை இழந்து விட்டார். எம்.பி. பதவியையேனும் தக்கவைக்கவே இந்த வரலாற்றுப் புரட்டு. மீண்டும் வலியுறுத்துகிறோம். தமிழரின் எதிர்ப்பு ஆயுத முனையில் முதலில் புரிய வைக்கப்பட்டது துறைநீலாவணையில். பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டமாக ஆயுதவழியில் ஆரம்பித்தது 1972 இல். அது சரி மாவைக்குமா வரலாறு தெரியாது? காசி ஆனந்தனின் ‘அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்” என்ற பாடல் ஒலிக்கும்போது யார் யாருக்கு பிரபாகரன் சுட்டுக் காட்டினார் என்று சுட்டிக் காட்ட வேண்டுமா? ஐயரின் நூலில் 56 ஆம் பக்கத்தில் ‘சேனாதிராசா, காசி ஆனந்தன், பிரபாகரன் மூவரும் கலைஞர் கருணாநிதியை மெரீனா பீச்சில் சந்திக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறிருக்கும்போது ரெலோவின் பொன்விழகுறித்த அழைப்பு விடுக்கும்போது வரலாற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் மௌனமாக இருந்தது ஏன்? சுதுமலை முற்றுகையின்போது கிட்டு உட்பட புலிகளுக்கு இழப்பு நேராமல் முற்றுகையை முறியடித்தது தானே என்று (இச்சமரில் மேஜர் அல்பேட் வீரச்சாவு) கதை விட்ட ஜனா இப்போதும் 50 வருடக் கதை சொல்கிறார். உண்மை இப்படி இருக்கப் புதிய வரலாற்றுப் புனை கதைகளைக் கூற செல்வம், ஜனா, போன்றோர் முற்படுகின்றனர்.வரலாற்றை மறந்தவர்களுக்கு வரலாற்றில் இடமில்லாமல் போகலாம். வல்வெட்டித்துறைக்கெனத் தனியான வரலாறு உண்டு. பெருமைக்குரிய விடயங்களில் தலையானது பிரபாகரன் பிறந்த மண் என்பது. அன்னபூரணி என்ற பாய்மரக் கப்பலினை அமெரிக்காவுக்கும் வல்வெட்டித்துறைக்கும் இடையே ஓட்டிச் சென்ற கடலோடிகளைக் கொண்டது. இராட்சதப் புகைக்கூண்டுகளை இலங்கை மண்ணுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் இந்தக் கடலோடிகள், பர்மாவுக்கான வணிகப் பயணத்தின்போது பறந்து சென்ற புகைக்கூண்டு ஒன்று இந்தப் பாய் மரக் கப்பலுக்கு அகே வந்தபோது அதனை எட்டிப் பிடித்து அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து இலங்கை மண்ணில் இதனை உருவாக்கினர். பட்டத் திருவிழா வல்வையின் தனித்துவம், யாழ்ப்பாணக் கச்சேரிக்கு முன்னால் நடைபெற்ற சாத்வீகப் போராட்டங்களில் முன்னணியில் நின்ற இராசலட்சுமி என்ற துணிச்சல்காரி பிறந்த மண். புலிக்குப் பிறந்தது பூனையாகாது எனக் களமுனையில் நிரூபித்தவர் இவரது மகன் கிட்டு என்ற சதாசிவம் கிருஷ்ணகுமார். முன்னுக்குப் போ என்ற வார்த்தையை விட எனக்குப் பின்னே வா என்றே போராளிகளை வழிநடத்திய தளபதி இவர். போராளிகள் மட்டுமல்ல பொதுமக்களும் இவரது படை நடத்தும் ஆற்றலையும் துணிச்சலையும் வான் வழியாக சுதுமலையில் களமிறங்கிய சிறப்புப் பயிற்சி பெற்ற படையினரின் முற்றுகையை முறியடித்த விதத்தை நேரடியாகக் கண்டு வியப்புற்றனர். இதன் பின்னர் சுதுமலை முகாமை விட்டுப் புலிகள் விலகத் தீர்மானித்தபோது, ‘போராளிகளே உங்களது ஆற்றலை, அர்ப்பணிப்பை, வீரத்தை நேரடியாகப் பார்த்தோம். தயவு செய்து எங்கள் ஊரை விட்டுப் போய்விடாதீர்கள்”, எனத் துண்டுப் பிரசுரம் வெளியிட்டனர். இத்தகைய வரலாறு தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் உதித்த 36 இயக்கங்களுள் வேறு எவற்றுக்கும் இல்லை. அத்தகைய தளபதி தனது சாவின் போதும் சரித்திரம் படைத்தான். இத்தகைய பெருமைகள் கொண்ட வல்வெட்டித்துறையின் சாதனைப் பட்டியல் மிக நீண்டது. உபசரிப்பிலும் இந்த மக்கள் தனித்துவமானவர்கள். போராளிகளோ மற்ற எவரோ சாப்பாட்டுக்காகக் காத்திருக்கையில் பார்சலிலோ, கிண்ணத்திலோ கறி வரும். இங்கோ தூக்கு வாளியில் கொண்டு வந்து தமது அன்பை வெளிப்படுத்துவர். இத்தகைய ஊருக்குப் பலம் சேர்க்கிறோம் என்றெண்ணி கற்பனைகளை வரலாறாக்கவோ, அதற்குத் துணை போகவோ தேவையில்லை. இன்று ச.ச.முத்து என்பவர் மூத்தபோராளி என்ற பெயரில் புலம்பெயர் நாடுகளிலும் இந்தியாவிலும் சக்கைப் போடுபோட்டு வருகிறார். 1980 இற்குப் பின் இயக்கத்துடன் தொடர்பு வைத்த – இணைந்து கொண்ட எவருக்குமே இந்த முகம் பரிச்சயமற்றது. தான் மட்டுமே தலைவர் மீது விசுவாசம் கொண்டவராக நடிக்கும் நடிப்புக்கு சிவாஜி, கமல் போன்றோரெல்லாம் பிச்சை வாங்க வேண்டும். ‘ஒரு விளக்குக் கொழுத்த ஆசைப்படுகிறார்கள்”, என்று தலைவரின் இழப்பை ஒத்துக்கொள்வோரைச் சாடுகிறார். 1979 இல் சுமார் இரு வார காலம் வீரவாகு என்ற பெயரில் விபத்தாக இயக்கத்தில் இணைந்து கொண்டவர்தான் இந்த ச.ச.முத்து. இவர் குறித்து ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள்” என்ற தலைப்பில் கணேசன் (ஐயர்) எழுதிய நூலில் பின்வருமாறு காணப்படுகின்றது. "சில நாட்களின் பின்னர் மாணவனாகக் கற்றுக் கொண்டிருந்த சிறுவனான வீரவாகு இயக்கத்தில் இணைந்து தலைமறைவாக வாழ்வதாக அவரது குடும்பத்தினர் அறிந்து கொள்கின்றனர். இது தெரிய வரவே குமரப்பா, மாத்தையா போன்றோரூடாகப் புலிகளைத் தொடர்பு கொள்ளும் அவரது குடும்பத்தினர் வீரவாகுவை வீட்டுக்கு அனுப்பி விடுமாறு கோருகின்றனர். வீரவாகும் வீட்டுக்குச் செல்ல விரும்பியதால் பிரபாகரன் அவரை அனுப்பி வைக்கிறார். வீட்டுக்குச் சென்ற அவர் பொலிஸில் சரணடைந்து விடுகிறார்.” இத்தகைய வரலாற்றைக் கொண்ட ச.ச.முத்து பிரான்ஸில் இருந்து வெளிவரும் ஈழமுரசு ஆசிரியர் குழுமத்தில் இடம்பெற்றுள்ளார். எங்கள் மண்ணின் வரலாற்றை நா.யோகேந்திரநாதன், சாந்திநேசக்கரம் போன்றோர் தத்ரூபமாக எழுதினாலும் இவர்கள் என்றும் போராளிகளாக இருந்ததில்லை. போராளி என்று பொதுவெளியில் சொல்லிக் கொண்டதுமில்லை. அவ்வாறு மற்றவர்கள் அறிவிக்கவும் அனுமதித்ததில்லை. 2016 மாவீரர் நாளன்று பிரான்ஸில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக வெளிவந்த குறிப்பில் ஈழமுரசு ஆசிரியர் குழுமத்தைச் சேர்ந்தவரும் – சமர்களப் போராளியும் – பெருந் தளபதிகளின் நண்பரும் – தேசியத் தலைவருடன் ஆரம்ப காலத்திலிருந்து செயற்பட்டவரும் – வரலாற்று ஆய்வாளருமான ச.ச. முத்து அவர்கள் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களினதும் மாவீரர்களினதும் ஒப்பற்ற தியாகங்களை நினவு கூர்ந்ததுடன் வரலாறுகள் பதிவு செய்யப்பட்டு நூல் வடிவில் ஆவணமாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்” எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐயரின் குறிப்பை வாசித்தபின் சமர்க்களப் போராளி என்று குறிப்பிடுவது எவ்வளவு பெரிய வரலாற்றுப் புரளி என்பது புலனாகிறது. யாழ்ப்பாணத்தில் கிட்டுவிடம் ஒரு பத்திரிகையாளர், இயக்கத்தில் வல்வெட்டித்துறையின் முக்கியத்துவம் பற்றிக் கேட்டார். அதற்குக் கிட்டு, ‘புலிகள் ஒரு தலைமறைவு இயக்கம். இதற்கு இரகசியம் பேணப்பட வேண்டும். அதனைத் தலைவர் ஆரம்பிக்கும்போது தனது பாடசாலை சகாக்கள், நண்பர்கள் போல நம்பிக்கைக்குரியவர்களை இணைத்துத்தான் ஆரம்பிக்க வேண்டியிருந்தது. அந்த வகையில்தான் மாத்தையா, குமரப்பா, ரகு, பண்டிதர், சங்கர் போன்றோர் படிப்படியாக அவருடன் இணைந்து கொண்டோம். இன்று அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பொறுப்பில் உருவாகி வருகின்றனர். உதாரணத்திற்கு மன்னாரில் விக்ரர், இனி மட்டக்களப்பு, திருமலை போன்ற இடங்களைச் சேர்ந்தோர் பொறுப்பெடுப்பர். வன்னியிலும் மாத்தையா இனங்காணப்பட்டவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பார்.” எனக் கூறினார். இதுதான் யதார்த்தம். கிட்டு குறிப்பிட்டவாறே வரலாறும் நடந்தது. இந்த விடயத்தில் இரு முக்கிய விடயங்களைக் குறிப்பிட வேண்டும். 1983 ஏப்ரல் 07 அன்று கந்தர்மடம் வாக்குச் சாவடியில் நிகழ்ந்த தாக்குதலில் முதன்முறையாக ரி-56 ஆயுதம் கைப்பற்றப்பட்டது. கொக்குவிலில் புலிகள் இருந்த அறையொன்றுக்குள் இது கொண்டுவரப்பட்டது. பொன்னம்மான் அதனை தலைக்கு மேலே தூக்கி வைத்துக் கொண்டு சில நிமிடம் நடனமாடினார். அடுத்தடுத்த நாட்களில் இன்னொரு தாக்குதலை விரைவாக நடத்த வேண்டும் என தலைவரிடம் வலியுறுத்தினர் சில போராளிகள், ‘நான் இயக்கத்தை ஆரம்பித்த பின்னர் இந்தப் போராட்டத்தில் எத்தனையோ பேர் வந்து போய்விட்டார்கள். எனக்கு மிஞ்சி இருப்பது இந்த 30 பேரும்தான். ஆகவே அவசரப்படாமல் நிதானமாக நாங்கள் காலடி எடுத்து வைக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டார். வந்து போனவர்களின் முகங்களில் எது எது அவரது ஞாபகத்துக்கு வந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. 1983 இல் நிகழ்ந்த இன்னொரு நிகழ்வு பற்றியும் குறிப்பிட வேண்டும். பல்வேறு தொடர்புகள் மூலம் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் படகு மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். அவர்கள் அங்குள்ள லொட்ஜ்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதில் இரு இளைஞர்களுக்கிடையே சிறு முரண்பாடு. அதில் ஒருவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். அவர் மற்றவரிடம், ‘றெயினிங் முடிச்சு வல்வெட்டித்துறைக்குள்ளாலதானை போவாய். அப்ப பார்த்துக் கொள்ளுறன்”, என்றார் மற்றவரிடம். இந்த விடயம் தலைவருக்குத் தெரிய வந்ததும் ‘அவரை அடுத்த வண்டியிலேயே (படகு) ஊருக்கு அனுப்பி வையுங்கள். இவ்வாறான சிந்தனையுள்ளவர்கள் இயக்கத்துக்குச் சரிவர மாட்டார்கள்”, என உத்தரவிட்டார். இவ்வாறு சொன்ன இளைஞனுக்கு 18 அல்லது 19 வயதுதான் இருக்கலாம், அவன் செய்த தவறுக்காக மட்டுமல்ல ; இயக்கத்தில் இனி எவருக்குமே இந்த மாதிரிச் சிந்தனைகள் வரக்கூடாது என்பதற்காகவே இந்நடவடிக்கையை அவர் மேற்கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் ’30 பேர் கொண்ட இயக்கமாக இருந்த புலிகள் இயக்கம் சீலன், ஆனந்த், செல்லக்கிளி அம்மான், என மூவரை இழந்து நிற்கிறது. இந்திய அரசு 200 பேருக்கு பயிற்சி வழங்க முன் வந்துள்ளது. ஆனால், 250 பேரளவில் இப்போது வந்துவிட்டார்கள். திடீரெனப் பருத்து விட்டோம். இனித்தான் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துவதில் சவாலை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கும். எல்லோரும் ஒரே காலகட்டத்தவர் என்றவகையில் இந்தச் சவால் சாமானியமானதல்ல” என்று பண்டிதரும் குறிப்பிட்டிருந்தார். மூன்றாவது விடயம் புலேந்திரன் – குமரப்பா தொடர்பானது. 1983 என்றொரு எல்லையை (திருநெல்வேலித் தாக்குதல்) தலைவர் கணிப்பிட்டிருந்தார். உண்மையில் குமரப்பா இயக்கத்தில் பிரிவு ஏற்படுவதற்கு முன்னரே அங்கம் வகித்திருந்தார். (அதிலும், புலேந்திரன் இயக்கத்துக்கு வருவதற்கு முன்னரே.) இருவருமே மாவட்டத் தளபதிகளாக விளங்கியவர்கள். எனினும் இயக்கத்தில் பிரிவு ஏற்பட்டபோது குமரப்பா, காந்தன், சாள்ஸ் போன்றோர் விலகியிருந்தனர். இவர்கள் திருநெல்வேலித் தாக்குதலுக்குப் பின்னர் மீண்டும் இணைந்து கொண்டனர். செல்லக்கிளி அம்மான், யோகன் பாதர் போன்றோர் திருநெல்வேலித் தாக்குதலுக்கு முன்பாகவே மீண்டும் இணைந்து கொண்டனர். புலேந்திரன் மத்தியகுழு உறுப்பினர் என்று அறிவிக்கப்பட்டாலும் குமரப்பாவுக்கு இந்த நிலை வழங்கப்படவில்லை. ஒட்டுமொத்த இனத்தின் தலைவனாகத்தான் பிரபாகரன் நடந்து கொண்டார். தான் வகுத்த விதியை அவர் மீறவில்லை. இந்த விடயத்தைத் தேவர் அண்ணா போன்றோர் புரிந்து கொள்ளாமல் ச.ச. முத்து தொடர்பான விடயங்களில் நெகிழ்ச்சிப் போக்கினால் வரலாற்றைத் திரிக்க முயல்வது கவலைக்குரியது. தேங்காய், மாங்காய் வியாபாரிகள் என்ற சாக்கில் வீடெடுத்தார்கள் அப்பையா அண்ணன், சீலன் என்று கதை விடுவதும் ச.ச.முத்துவின் அழகான கற்பனை. திருநெல்வேலி தாக்குதலுக்கு முன்பாக தலைவர் சொன்னதாகவே சில விடயங்களைக் குறிப்பிட்டு தான் அந்தக் காலத்தில் இருந்ததாக நிறுவ முயல்வதும் மோசடியானது. இவற்றுக்கெல்லாம் 800 – 900 என்று Like வேறு. வரலாறு எவ்வாறு திரிக்கப்பட்டு பரவலாக்கப்படுகின்றது என்று தெரிந்தும் ஊரவன் என்ற ஒன்றுக்காக மோசடிக்கு துணைபோவது சரியானதல்ல. தேசத்தின் பாலம்”, என்ற அமைப்பு போராட்டத்தின் பங்காளர்களாக விளங்கிய மற்றும் யுத்தத்தால் பாதிப்புற்ற மக்களுக்குப் பல்வேறு வகையில் உதவி வருகிறது. குறிப்பாக மூதூர் மற்றும் வாகரைப் பகுதிகளில் கல்வியைத் தொடரச் சிரமப்படும் பொருளாதார நெருக்கடியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலன், விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மட்டக்களப்பு நகர் போன்ற இடங்களிலிருந்து பயிற்சியாளர்களை வரவழைத்தல், தேவையான குடும்பங்களுக்கு குழாய்க் கிணறு அமைத்தல் போன்ற பல்வேறு வழிகளில் உதவி வருகிறது. இதனை ஒருங்கிணைத்துச் செயற்படுத்துபவர் முன்னாள் போராளியான லூக்காஸ் அம்மான். அரசியற்துறைப் பொறுப்பாளராக விளங்கிய பா.நடேசனின் சகோதரர் இவர். தான் பிறந்த வல்வை மண்ணுக்கும் உதவத் தவறுவதில்லை இவர். 2002 இல் தலைவரைச் சந்தித்தபோது போராட்டத்திலிருந்து விலகிய உங்களைப் போன்றோர் பொருளாதார ரீதியில் நலிவுற்றோருக்கு இம்மாதிரி உதவலாமே என அறிவுறுத்தியதுடன் உதவி தேவைப்படுவோர் பட்டியலையும் இவரிடம் வழங்கியுள்ளார். வரலாற்றைத் திரிபுபடுத்துபவர்கள் லூக்காஸ் அம்மானைப் பின்பற்றி உருப்படியாக பணியாற்றுவதுதானே வல்வை மண்ணுக்குப் பெருமை சேர்க்கும். நன்றி – ஈழநாடு https://www.ilakku.org/வரலாற்றை-திரிபுபடுத்துவ/
  5. ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன் - திருமலை) விடுதலைப் புலிகளால் 1987 இல் இடைக்கால நிர்வாக சபைக்குப் பெயரிடப்பட்டிருந்தோரில் இவரும் ஒருவர். பிரேமதாஸ அரசுடனான சமாதானப் பேச்சு வார்த்தைகளிலும் பங்குகொண்டவர்.இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கும் சமயத்தில் திருமலை மாவட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி மற்றும் அரசியற்றுறைப் பொறுப்பாளராக இருந்த இவர் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மோசமாகக் காயமடைந்தார். 13.06.1990 அன்று தம்பலகாமத்துக்கும் பாலம் போட்டாறுக்கும் இடையிலுள்ள ஜெயபுரம் என்னுமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. சந்திரிகா அரசுடனான பேச்சுவார்த்தைக் காலத்தில் மாவட்ட மட்டத்தில் திருமலையில் நிகழ்ந்த படையினருடனான சந்திப்பில் கலந்துகொண்டார். குச்சவெளிப் பகுதியில் 1995 ஜனவரியில் நிகழ்ந்த இச்சந்திப்பில் படையினர் தரப்பில் பின்னாளில் வட மாகாண ஆளுநராக இருந்த அப்போதைய பிரிகேடியர் சந்திரசிறி மற்றும் பிரிகேடியர் ஓம்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளராகவும் விளங்கியவர். 2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் திருமலையில் இழக்கப்பட்டதைத் தொடர்ந்து இவரை மீண்டும் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமித்தார் தலைவர். இழக்கப்பட்ட தமிழரின் பிரதிநிதித்துவத்தை மீளப்பெறும் வகையில் வாக்களிப்பின் அவசியத்தை திருமலை மக்களுக்கு உணர்த்துவதே இவருக்கிடப்பட்ட முக்கிய பணி. இதனால் 2001 இல் இரா.சம்பந்தனை வரவழைத்து கட்டைபறிச்சானில் சந்தித்தார் இவர். அரசியல் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. 2000 ஆம் ஆண்டு தேர்தலில் 14,000 வாக்குகள் பெற்ற தமிழரின் கட்சி 2001 இல் 59,000 வாக்குகள் பெற்று மீண்டும் பிரதிநிதித்துவம் பெற்றது. 35,000 வாக்குகளைப் பெற்ற சம்பந்தன் ஐயா மீண்டும் பாராளுமன்றம் சென்றார். தேசியப் பட்டியல் உறுப்பினரான மு.சிவசிதம்பரத்தின் மறைவைத் தொடர்ந்து 2001 தேர்தலில் 28,000 வாக்குகள் பெற்றிருந்த துரைரெட்ணசிங்கம் மாஸ்டருக்கு இப்பதவியை வழங்குமாறு இவர் விடுத்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இறுதியாகத் தலைமைச் செயலகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார். இறம்பைக்குளம், பூசா, கொழும்பு 2 ஆம் மாடி என சிறிதுகால தடுப்பின் பின் விடுதலையானார். முத்துக்குமார் மனோகர் (பசீர்காக்கா - யாழ்ப்பாணம்) இறுதிப் போரில் இவரது மகள் சங்கீதா (அறிவிழி) 26.04.2009 அன்று வீரச்சாவெய்தியிருந்தார். முன்னதாக இவரது மகன் சங்கர் எறிகணைத் தாக்குதலில் பலியாகியிருந்தார். (07.04.2009) இவரது சிற்றன்னை திருமதி மோட்சானந்தம் முத்துக்குமார் 10.02.2009 அன்று எறிகணைத் தாக்குதலில் பலியாகியிருந்தார். சகோதரி முறையான கோமளா, அவரது கணவர் இராசையா தனபாலசிங்கம், மகன் பாஸ்கர் (இரு பிள்ளைகளின் தந்தை) ஆகியோர் 31.03.2009 அன்று எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். விடுதலை புலிகள் அமைப்பில் பொட்டுஅம்மானை இணைத்தவர்.1986 முதல் ஊடகவியலாளராகவும் இனங்காணப்பட்டிருந்தார். ஈழமுரசில் அரசியற் தொடரான 'குத்துக்கரணங்கள்' மாவீரரின் புகழை போராளிகளின் எண்ணத்தில் எடுத்தியம்பிய 'ஒரு போராளியின் நாட் குறிப்பிலிருந்து' என்ற தலைப்புகளில் எழுதியவர். 1990 இல் மட்டக்களப்புக்கு நடந்துபோனபோது அவதானித்து, உணர்ந்த விடயங்களை 'உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்' மற்றும் 'சிறைப்படாத சிந்தனைகள்' தொடர், மாவீரர் புகழை எடுத்தியம்பும் 'விழுதுகள்' ஆனையிறவு மீட்பு உட்பட ஓயாத அலைகள் - 3 சமர்க்களம் தொடர்பான விடயங்களை நேரில் கண்டு விபரிக்கும் தொடர் 'மீண்டும் யாழ். மண்ணில் கால் பதித்த எம் தடங்கள்' என்பனவற்றை ஈழநாதத்தில் எழுதியவர். இறுதிப் போரின் பின்னர் பூசா முதல் யாழ்ப்பாணம் வரை சுமார் 10 இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு மேல் நீதிமன்றங்களில் மொத்தம் நான்கு வழக்குகள் இவருக்கெதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சுமார் ஐந்து ஆண்டுகள் தடுப்பின் பின் விடுதலையானவர். https://www.pathivu.com/2018/05/blog-post_288.html ----------------------------------------------------------------------------------------------------------- யோகன் எ பாதர் (பாலிப்போடி சின்னத்துரை) தந்தை செல்வா முதற்கொண்டு முள்ளிவாய்க்கால் வரை பயணித்த வரலாறு பாசி என்று தமிழ் இளைஞர் பேரவை காலத்திலும் பின்னர் யோகன் பாதர் என ஆயுதப்போராட்டத்திலும் அழைக்கப்பட்ட பாலிப்போடி சின்னத்துரைக்கு உண்டு. தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த காலத்தில் காசி ஆனந்தன் அண்ணாவின் சகோதரன் சிவஜெயம் (பின்னாளில் மேஜர் சந்திரன்) கிராமம் கிராமமாக துவிச்சக்கர வண்டிகளில் சென்று தமிழ்த் தேசியத்துக்காக கடுமையாக உழைத்தவர். இவர் வடக்கிலும் சகல மாவட்டங்களுக்கும் காசி ஆனந்தன் அண்ணாவுடன் சேர்ந்து விடுதலைப் பணியாற்றியவர். தந்தை செல்வா மட்டுமல்லாது அவருக்கும் அடுத்த நிலையிலிருந்த அமிர்தலிங்கம் போன்றோருடனும் பழகியவர். மாவையும் இவருடைய பங்கை நிராகரிக்க மாட்டார். மட்டக்களப்பிலிருந்து (ஏன் கிழக்கு மாகாணத்தில் என்று கூடச் சொல்லலாம்) புலிகளில் இணைந்து கொண்ட முதற் போராளி இவர்தான். கருணா உட்பட அன்றைய போராளிகளை இயக்கத்துக்குள் உள்வாங்கியவர். இவர் போட்ட அடித்தளத்திலேயே வடக்கிலிருந்து சென்ற போராளிகளும் இணைந்து போராட்டத்தை வளர்க்க முடிந்தது. https://thamilkural.net/thesathinkural/views/71024/
  6. ஆங்கிலத்தில் சிங்களவர் கதைத்தது பயனுள்ளதாக உள்ளது... கொடூர மனங்களில் (பெரும்பாலான சிங்களவர் தமிழருக்கு உரிமையே கொடுக்கக் கூடாது என்றும் தமிழர் கொல்லப்படவில்லை என்று கூறியே கேட்டுள்ளேன்/ பார்த்துள்ளேன்) இவ்வாறான கசியும் இதயங்களும் (தமிழருக்கு உரிமை கொடுக்க வேண்டும் என்று வாயால் கூறும் சிங்களவர்) வாழ்வது வியப்பாக உள்ளது.
  7. ''இடது முதலாவது மூத்த போராளி திருமதி சுகி அவர்கள்."
  8. பரிந்துரைக்கு நன்றி. அப்படியே செய்கிறேன்.
  9. ஏது விமர்சனமா, தலைவரையே இனவெறியாளன் என்று முத்திரை குத்தி இயக்கத்தின் முடிவுகள் எல்லாம் பிழையானவை என்று தூற்றிக் கொண்டிருப்பவர். கிட்டடியில் கூட இதைக் கூறியிருந்தார்.
  10. கைப்பற்றிய படைக்கலன்களுடன் வீதி உலா வரும் புலிவீரர்கள் 1989/1990
  11. தமிழ்நாட்டில் இருந்த ஓர் பயிற்சிமுகாமில் இடமிருந்து வலமாக பன்னிரு வேங்கைகளில் ஒருவரான மேஜர் அப்துல்லா, தலைவர் மாமா, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளான திரு. அழகர்சாமி மற்றும் திரு. பழ. நெடுமாறன், சிறி. நாடாளுமன்ற உறுப்பினர் அமரர். துரைரத்தினத்தின் மகன் மேஜர் கமல், மற்றும் (தரநிலை தெரியவவில்லை) செழியன்
  12. பேச்சுவார்த்தையின் போது இடமிருந்து வலமாக: தினேஸ் மாஸ்டர் (மாவீரர்), கேணல் கிட்டு, திரு அன்ரன் மாஸ்டர், திரு. ரகீம் ??? இந்த அன்ரன் மாஸ்டர் பின்னாளில் புலிகளில் இருந்து விலத்தி புலிகளுக்கு எதிராக "வாழைப்பழத்தில் ஊசி ஏற்றல்" போன்று விசக் கருத்துக்களை விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகப் பரப்பி வருகிறார்.
  13. நிற்பவர்களில் இடமிருந்து நான்காவது லெப். கேணல் பொன்னம்மான். இருப்பவர்களில் இடமிருந்து நான்காவது தொடக்கக் கால உறுப்பினர் திரு. அன்ரன் மாஸ்டர்
  14. தீச்சுவாலை நடவடிக்கை முறியடிப்புச் சமரின் போது தமிழீழ வீரர்கள் பகையுடன் தீரத்தோடு மிண்டுகின்றனர் வடபோர்முனை 2001/04/25

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.