Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. காலையிலிருந்து விம்பகத்திற்கு படிமங்களை ஏற்றமுடியவில்லை. உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
  2. சோதியா படையணியின் துணைக் கட்டளையாளர் லெப். கேணல் செல்வியின் வித்துடலிற்கு மதி மாமி பூமாலை அணிவிக்கிறார். 2008/05
  3. பி.ம. பாலச்சந்திரன் 2005-2008 ஒரு தமிழீழ விடுதலைப் போராட்ட போராளியின் வாக்குமூலம்: "இவனுக்கு "பாலாயிரம்" என்றும் ஒரு பட்டப்பெயர் உண்டு. அது எப்படிவந்ததென்றால், இவன் சிறுவன் என்பதாலும் தேசியத் தலைவரின் மகன் (ஒரு நாட்டின் தலைவரின் மகன்) என்பதாலும் பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளதால் தனியாக வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அழைத்துச் சென்றாலும் பஜரோக்குள்ளேயேதான் அமர்ந்திருக்க வைக்கப்படுவார். அதனால் ஒரு நாள் பால் வாங்கி வருவதற்காக இவனை மெய்க்காவலர்கள் பஜரோவில் வெளியில் அழைத்து சென்ற போது இவனது மெய்க்காவலர்களில் ஒருவர், "தம்பி, பாலின்ர விலை எவ்வளவு இருக்கும் எண்டு நினைக்கிறீர்?" என்று வினா எழுப்ப அதற்கு இவன் அப்பாவித்தனமாக "ஆயிரம் ரூபாய்" என்று மறுமொழி கொடுக்க மெய்க்காவலர்கள் சிரித்துவிட்டனர். அன்றிலிருந்து இவனுக்கு பாலின் விலையை ஆயிரம் என்றவன் என்றும் பொருள்படும்படியாக 'பாலாயிரம்' என்று பட்டப்பெயர் வைத்தனர், மெய்க்காவலர்கள்."
  4. சமாதான காலத்தில் அன்புச்சோலை மூதாளர் பேணலகம் திறப்பின் போது தலைவர் மாமாவும் மதி மாமியும். பொன் தியாகம் அப்பா குத்துவிளக்கை ஏற்றிவைக்கிறார். அவரின் பின்னால் இருந்து ஜவான் மாமா எட்டிப்பார்கிறார்.
  5. சமாதான காலத்தில் எங்கையோ ஒரு கட்டடத்தை திறந்து வைக்கிறார், மதி மாமி இடது முதலாவது: மாவீரர் பணிமனை பணிமுதல்வர் திரு. பொன். தியாகம்
  6. சமாதான காலத்தில் ஆனையிறவில் இருந்த இடிவாருவக காப்பூர்தி (Bulldozer Protective Vehicle) நினைவுச்சின்னத்தின் அடியில் மதி மாமியோடு உறவினர்கள் அமர்ந்திருக்கின்றனர் இ-வ: மதி மாமி, குகா மாமி(மதி மாமியின் உற்ற தோழி. இறுதிப்போரில் உயிரிழந்துவிட்டார்), திரு சிறிதரன், திருமதி சாந்தினி சிறிதரன் மற்றும் இவ் இணையரின் பிள்ளைகள்
  7. சமாதான காலத்தில் தலைவர் மாமா - மதி மாமியின் உறவினர்கள் இக்காலப் பகுதியில் மட்டும் தான் இவர்கள் முதன் முறையாக தலைவர் மாமாவின் பிள்ளைகளை நேரில் கண்டிருந்தனர். இளஞ்சிவப்புச் சேலை: திருமதி குமாரதாஸ் அருணாதேவி, கடுஞ்சிவப்பு பஞ்சாபி: திருமதி ????? பி.ம. சாள்ஸ் அன்ரனியோடு பி.ம. துவாரகா
  8. புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த போது 2006/2007 'கிளி/கிளிநொச்சி மகா வித்தியாலயம் ~ 2008 | தகவல் & கீறியவர்: நன்னிச்சோழன்' (இவன் ஐந்தாம் ஆண்டு படிக்கும் போது ஒரு வயது ஏதோ கூட என்றுதான் நான் கேள்வி. சரியாகத் தெரியவில்லை) பாலச்சந்திரன் ஐந்தாம் ஆண்டு கிளி/கிளிநொச்சி மகாவித்தியாலத்தில்தான் (கனிஸ்ரா) படிச்சவர். இவர் அங்கு படிக்கும் போது ஆள் கொஞ்சம் உடல் பருமான இருந்தமையால் இவனுக்கு 'குண்டன்' என்று பட்டப்பெயர் வைத்தனர், சக மாணவர்கள். அண்ணா எப்பவுமே பாடசலைக்கு கொஞ்சம் பிந்தித்தான் வருவார். அதாவது அந்த பிந்தி வருபவர்களுக்கான தண்டனைக்காலம் முடிந்த பின்னர். இது ஏனென்று சொன்னால், அவர் ஒரு நாட்டின் தேசியத் தலைவரின் மகன் என்றபடியால் அவருடைய பாதுகாப்புக் கருதி அவர் பிற மாணவர்கள் வரும் நேரத்தில் பாடசாலை வருவதில்லை. ஏன் இப்படியென்றால், அவர் எப்பொழுதும் பொதுவெளியில் அறியப்படாமல் இருப்பதற்காக கறுப்பு கண்ணாடி பூட்டின பஜரோ அல்லது பிக்கப்பில தான் வருவார். அப்படி வரும்போது இவர்தான் தலைவர் மாமாவின் மகன் என பிறர் அறியாமல் இருப்பதற்காத்தான் இந்த ஏற்பாடு. கூடுதலாக பின்வாசலால் (அந்த குச்சொழுங்கை) தான் வருவார். இவர் சில நேரங்களில் காலையில் பாடசாலைக்கு வரும்போது கையில் பூதியோடு (Baloon) வருவார். இவர் இவ்வாறு கையில் பூதியோடு வருவது சிங்களப் புலனாய்வுத்துறைக்குத் தெரியும். இந்த விடையம் எனக்கு எப்படி தெரியுமென்றால், கடைசி நேரத்தில் முள்ளிவாய்க்காலில் இருந்து சில 'ஆட்களின்' குடும்பங்கள் தப்பி இந்தியாவிற்குப் போவதற்காக கடலால் போய்கொண்டு இருக்கும்பொழுது, பருத்தித்துறைக்கு உயர ஆமி கடலில் வைத்து சுற்றிவளைத்துப் பிடித்துவிட்டான். அவ்வாறு பிடிக்கப்பட்டவர்கள் திருகோணமலை கடற்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து உருட்டி உருட்டி உசாவலுக்கு உட்படுத்தப்பட்ட போது அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று, "பிரபாகரனின் கடைசி மகன் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவனா?" என்பது. அதற்கு அந்த கடற்படை புலாய்வாளன் கொடுத்த விளக்கம், இவன் பாடசாலைக்கு வரும் போது கையில் பூதியோடு வருவதே. இந்தக் கேள்வியை அவர்களிடம் கேட்டது சிங்கள கடற்படை அதிகாரி "வெலகெதர" ஆவார். மேற்கண்டவர்கள் அவனால் தப்பவைக்கப்பட்டாலும், சிங்களவனுக்கு இந்த விடையம் வரை தெரிந்தது பிடிபட்ட ஆட்களுக்கு மிகவும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்ததுவாகும். மேற்கண்ட வரைபடத்தில் நான் அந்த சிவப்பு நிற வைரம் வைத்துள்ள வகுப்பறையே அண்ணா 2008ம் ஆண்டு படித்த வகுப்பறையாகும். இந்த சிறுவர் கட்டடத்தின் முற்றத்தில்தான் அவர் பிற மாணாக்கரோடு துடுப்பாட்டம் விளையாடுகிறவன். 2008 இல்தான் அவர் அங்கு படிப்பது எங்களுக்குத் தெரியும். அதுவும் கடைசிக் காலத்தில்தான் கண்டனான். ஒருதடவை அவர் மைதானத்தில் நின்று துடுப்பாட்டாம் ஆடும் போது தொலைவில் நின்று கண்டிருக்கிறேன். ஆனால் அவரை அருகில் சென்று நான் கண்டதில்லை. இவர் பாடசாலை வந்துவிட்டால் இவருடைய பாதுகாப்பிற்காக மூன்று மெய்க்காவலர்கள் பாடசாலையைச் சுற்றி நிற்பர் (அந்த நீல நிற எண்ணிடப்பட்ட வட்டங்கள்). மூவருமே குடிமை உடையில்தான் வருவார்கள், ஆனால் சட்டைக்குள்ளே இடுப்பில் கைச்சுடுகலன் கட்டியிருப்பார். முதன்மை நுழைவுவாயிலில் (அதில் அந்தக்காலத்தில் பெரிய மரங்கள் எல்லாம் நின்றது... சரியான சோலை அவடம், அப்ப) ஒருவர், சிறுவர் நுழைவுவாசலில் ஒருவர் (இவர் தான் சிறுவர்களின் நண்பர்) மற்றும் மூன்றாமவர் இஞ்சால் அந்தக் காட்டிற்குள் கதிரை போட்டு அமர்ந்திருப்பார் (எண் 3). அதைவிட பின்னால் அந்த ஆற்றிற்கு அந்தப்பக்கமும் இன்னொரு அண்ணா நிக்கிறவர் என்று பெடியள் சொல்கிறவங்கள், ஆனால் நான் கண்டதில்லை. அதனால் நான் குறிப்பிடவில்லை. இதில் மெய்க்காவலர்கள் எண் 1, எண் 3 ஆகியோரோடு நான்/நாங்கள் கதைத்தது குறைவு. அதிலும் அந்த முதன்மை வாசலில் நிற்பவரோடு அறவே இல்லை. இங்கால் பற்றைக்குள் (எண் 3) நின்றவரோடு ஓரிரு தடவை கதைத்திருக்கிறோம். அங்கிருந்த ஒரு பலா மரத்தில் ஒரு தேன்கூடு இருந்தது. அதற்கு கல்லடிக்கப் போகும் போதுதான் அவரோடு கதைவளிப்பட்டுள்ளோம் (அவர் எம்மை அடிக்க விட்டதில்லை, ஏனென்றால், நாங்கள் அடிச்சால் பேந்து ஆளாலை அங்க இருக்கேலாது.) எங்கள் நண்பர், இந்த சிறுவர் நுழைவுவாசலில் முதலில் இருந்த அண்ணாதான். முதலில் கொஞ்சநாள் ஒரு அண்ணா இருந்தவர்; அவர் நல்ல சிவலை, கொஞ்சம் கட்டை. அவருக்குப்பிறகு இன்னொரு அண்ணா மற்றலானார்; அவர் முதலில் இருந்த அண்ணா மாதிரி எங்களோடு பழகியதில்லை. முன்னையவர் ஏன் மாற்றலானார் என்பதற்காகன சரியான காரணம் தெரியவில்லை, ஆனால் எங்களுக்கு இந்த இரண்டாவது அண்ணாவால் சொல்லப்பட்ட காரணத்தை கீழே சொல்கிறேன். இந்த முதலில் இருந்த அண்ணா எப்படிப்பட்டவர் என்றால், இவர் எங்களோடு நன்றாக விளையாடுவார், கதைவளிப்படுவார். ஆள் அந்தமாதிரி மணியான ஆள். அந்த சிறுவர் நுழைவுவாயிலில் உள்ள அந்த ஆலமரத்தைச் சுற்றீலும் ஒரு கட்டு இருந்தது. அதில்தான் இவர் அமர்ந்திருப்பார். இவர் படவம் (camera) எல்லாம் கொண்டுவருகிறவர். இந்த அண்ணா எங்களுக்கு கைச்சுடுகலன், படவம் எல்லாம் காட்டினவர். இவர் படவத்தால் தன்னோடு கதைக்கும் மாணவர்களை எல்லாம் படம் எடுத்துக் காட்டுவார். பெரிய வகுப்பு மாணவர்கள் என்றால் படவத்தை வாங்கி அவங்கள் எடுப்பாங்கள்... எனை மாதிரி குஞ்சுகுருமான்கள் ஆவென்று பார்க்க மட்டும்தான் முடியும். படவத்தை கையிலை கூட தரமாட்டார். தொட்டுப்பார்க்கவேலும் அவ்வளவுதான். எனது வீட்டில் படவம் இருந்ததுதான், ஆனால் பொதுவெளியில் எல்லோரும் ஒன்றை எடுத்துப்பார்க்கும் போது அதை பெறுவதற்கு சிறுவர்களுக்கும் ஆசை இருக்குமல்லாவா? இருக்காதா பின்ன? ஆ... நாங்கள் மதிய உணவு இடைவேளைகளில் இவரோடுதான் சென்று நின்று கதைப்பம். ஆனால் அவர் கூடுதலாக ஐந்தாம் ஆறாம் வகுப்பு மாணவர்களோடுதான் கதைப்பவர். அதற்கு கீழே இருக்கிற வண்டுகளோடு எல்லாம் ஒட்டமாட்டார். இவர் ஏன் இப்படி செய்பவர் என்றால் அவங்களோடு நல்லமாதிரி என்றால்தான் அண்ணாக்கு பாதுகாப்பு என்பதால்தான் இந்த ஒட்டுறவு. அவர் எங்களோடு அவங்களை மாதிரி ஒட்டாதது எங்களுக்குக் கொஞ்சம் கடுப்பு. நாங்கள் சிடுசிடுத்துகொள்ளுவம். அவரின் முழங்கால் அளவுதான் நாங்கள், அப்ப அதைத்தவிர எங்களால் வேறு என்ன செய்ய இயலும்? அதன் பிறகு கொன்ச நாள் கழித்து இந்த அண்ணா திடீரென்று மாற்றலாகி விட்டார். வேறொருவர் வந்தார். பின்னையவரிடம் முன்னையவர் எங்கென விசாரித்த போது, முன்னையவர் படவங்களை பெடியளிடம் கொடுத்ததால் முறைப்பாடு போனதாகவும் அதனால்தான் மாற்றப்பட்டுவிட்டார் என்றும் எஙக்ளிடம் கூறினார். ஆனால் உண்மைக்காரணம் தெரியவில்லை. படவம் கொடுத்ததற்காக மாற்றப்பட்டது என்ற காரணம் ஏற்கமுடியவில்லை. நாங்களும் ஆராயவில்லை. இந்த பின்னைய அண்ணா ஆரிடமும் ஒட்டுவதில்லை, முன்னையவர் போன்று. படவமும் கொண்டுவருவதில்லை, முன்னையவரைச் சாட்டி. ஆனால் போய்க் கதைத்தால் நல்லாக் கதைப்பர், அவரைப்போன்றே! இரண்டு பேருமே நல்லா அண்ணாக்கள்தான். இன்னுமொன்று சொல்ல வேண்டும், கனிஸ்ராவிலை ஒரு முசிலீம் மாணவனும் படித்தவன். அவன் எந்த வகுப்பு என்று தெரியவில்லை. அவனை 2006ஆம் ஆண்டில் கண்டிருக்கிறேன். அவனது தந்தைதான் வந்து அவனை ஏற்றிச்செல்வார். அவர் தாடி வைத்திருந்தவர். நான் எனது வாழ்நாளில் ஒரு முசிலீம் மதத்தவரைக் கண்டது 2006இல் தான்; முதற்தடவை பார்த்தபோது அச்சமடைந்தேன். அவர் சரியான உய்ரமான ஆள்;தாடி எல்லாம் வைத்திருந்தவர். ஆனால் அதன்பின் அவரின் சிலமன் அங்கில்லை.
  9. சமாதான காலத்தின் போது கையில் நாய் /பொம்மையை ஏந்தியபடி நிற்கும் பி.ம. பாலச்சந்திரன் பின்னாலை தலைவர் மாமா வரிப்புலியில் நிற்கின்றார்.
  10. சமாதான காலத்தின் போது ஆரோ ஒருவரின் குழந்தையை மதி மாமி தூக்கி வைத்திருக்கிறார்
  11. சமாதான காலத்தின் போது "கலையரசன் நீரடிநீச்சல் பயிற்சித்தடாகத்தில்" குளிக்கும் பி.ம. பாலச்சந்திரனும் தலைவர் மாமாவும் இது கடற்புலி போராளிகளின் நீரடி நீச்சல் பயிற்சிக்காக கட்டப்பட்டதாகும். அதில் அன்னவர்கள் ஒருநாள் ஓய்வெடுக்கின்றனர். 'காற்றுமிதவை ஒன்றின் உதவியோடு பி.ம. பாலச்சந்திரன் நீரில் மிதக்கின்றார்' 'காற்றுமிதவை ஒன்றின் உதவியோடு பி.ம. பாலச்சந்திரன் நீரில் மிதக்கின்றார்' 'குளித்து முடிந்து திரும்பும் பாலா. பின்னால் கறுப்புக் காற்சட்டையோடு நிற்பவர் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் கேணல் சூசை ஆவார்' 'காற்றுமிதவை ஒன்றின் உதவியோடு தலைவர் மாமா நீரில் மிதக்கின்றார்' 'காற்றுமிதவை ஒன்றின் உதவியோடு தலைவர் மாமா நீரில் மிதக்கின்றார்' 'தலைவர் மாமா நீச்சல் குளத்தை விட்டு வெளியில் வருகிறார்'
  12. சமாதான காலத்தில் பாலா அங்கிள் & வெள்ளை அன்ரியோடு தலைவர் மாமாவும் மதி மாமியும் கலந்துரையாடுகின்றனர். இவர்களோடு கட்டளையாளர்களும் அமர்ந்துள்ளனர்.
  13. சமாதான காலத்தில் உவர்க்கம்(beach) ஒன்றில் இருந்த கல்லில் அமர்ந்திருக்கினம் இருவரும் பிரபாகரன் சாள்ஸ் அன்ரனி அவர்கள் பொதுவாக பகல் நேரத்தில் வெளியில் வருவதில்லை, பாதுகாப்புச் சிக்கலால். எனவே அவர் இரவில்தான் உலாவுவதுண்டு. அதனால் சூரிய ஒளிக்கு முகம்கொடுப்பது அவருக்கு சிக்கலானதாம். ஆகையால் பகலில் வெளியில் வரும் வேளைகளில் சூரிய கண்ணாடி அணிந்தேதான் உலாவுவாராம். இது நான் கேள்விப்பட்ட பற்றியம். உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
  14. சமாதான காலத்தில் தலைவர் மாமாவும் மதி மாமியும் குரோட்டன்களுக்கு முன்னாலை நின்று நிழற்படம் எடுத்துள்ளார்கள்
  15. சமாதான காலத்தில் சாள்ஸ் அண்ணாவை தவர்த்திவிட்டு ஏனையோர் எடுத்துக்கொண்ட குடும்ப நிழற்படம்
  16. சமாதான காலத்தில் முல்லைத்தீவு உவர்க்கம்(Beach) ஒன்றில் பி.ம. பாலச்சந்திரன் & மெய்க்காவலர்களோடு தலைவர் மாமா இ.வ. : லெப்.கேணல் தேவன், ராதா வான்காப்புப் படையணி முன்னாள் சிறப்புக் கட்டளையாளர் சிலம்பரசன் (மாவீரர்), மற்றும் திரு வீரமணி
  17. சமாதான காலத்தில் காந்தரூபன் அறிவுச்சோலையில் இருந்த இன்னுமொரு சிறுவர் விளையாட்டுச் சகடம் ஒன்றில் ஏறி அமர்ந்துள்ளார் பாலச்சந்திரன் இதில் பகிடி என்னவென்றால் சிங்களவன் இந்தச் சகடம் ஏதோ சொகுசான பொருள் என்றும் அது தலைவரின் வீட்டில் இருந்தது என்றும் பரப்புரை செய்தமையே. இது உண்மையில் காந்தரூபன் அறிவுச்சோலையினுடையது. அங்கு பி.ம. பாலச்சந்திரன் சென்றிருந்தபோது அதன் மேல் ஏறி அமந்து நிழற்படம் எடுத்தார். அவ்வளவே... காந்தரூபன் அறிவுச்சோலையில் இந்த விளையாட்டுச் சகடம் இருப்பதை அடுத்தடுத்த படிமங்களில் காணவும்.
  18. சமாதான காலத்தில் சிறுவர் விளையாட்டு ஊர்தியோடு பி.ம. பாலச்சந்திரன் இதை ஒரு சொகுசுப் பொருளாக சிங்களவன் சித்தரிக்கிறான். இது போன்ற பல விளையாட்டுச் சாமான்கள் வன்னியின் கடைகளில் இருந்தது. காசிருக்கிறவன் வாங்குவான், அந்தக் காலத்தில். ஆனால் இறுதிப் போருக்குப் பிறகு எமது மக்கள் எல்லாம் பிச்சைக்காரர்களாகிவிட்டனர். எல்லாம் இந்த இழவெடுத்த சிங்களவனாலை வந்தது. படிமத் திருத்தம்: நன்னிச்சோழன் | மூன்று படிமங்களை ஒன்றாக்கினேன்
  19. சமாதான காலத்தில் பி.ம. பாலச்சந்திரனை தலைவர் மாமா தூக்கி வைத்திருக்கிறார் பின்னால் வரியில் அமர்ந்திருப்பவர் திரு. வீரமணி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.