Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. தமிழர் வரலாற்றின் சிறப்புமிக்க தரையிறக்கமும் நோர்மண்டி தரையிறக்கத்தோடு ஒப்பிடப்படுவதுமான 'குடாரப்பு தரையிறக்கத்தின்' நினைவுத்தூண் தரையிறக்கம் நடந்த குடாரப்பின் கடற்கரையில் கட்டப்பட்டிருந்தது.
  2. லெப். சீலன், வீரவேங்கை ஆனந்தன் எ ஆனந் ஆகியோருக்கான நினைவுக்கல் மீசாலை, அல்லாரை இந்நினைவுச்சின்னமானது அன்னவர்கள் வீரச்சாவடைந்த அதே வெட்டையில்தான் அமைக்கப்பட்டது. இவ்வெட்டையானது பின்னாளில் தோப்பாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
  3. 2ம் லெப். மாலதி நினைவுக்கல் கோப்பாய் 2004 அவர் வீரச்சாவடைந்த இடத்திலேயே இது கட்டப்பட்டது.
  4. மேஜர் பிறேமச்சந்திரன் மற்றும் மேஜர் திலீப் ஆகியோருக்கான வீரவணக்க நினைவாலயம் தலைநகர் "திருமலை எங்களின் தலைநகர் என்பது எழுதிய விடையமடா! - புலி பெரும்படை ஆகியே வருமொரு நாளிலே விடுதலையடையுமடா!"
  5. விசாலகன் சிறப்புப் படையணியின் சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் வினோதனின் நினைவிடம் மட்டக்களப்பு 28 மே 2003 அன்று திறந்துவைக்கப்பட்டது. இவர் நினைவாய் உருவானதே "வினோதன் படையணி" ஆகும். "மாவீரன் வினோதன் படைச்சதைக் கேளு"
  6. இது பழங்குடிகளான இருளர்கள் இனத்தால் பாவிக்கப்பட்ட கத்திவாள்(முன்) மற்றும் வாளாகும்(பின்):
  7. "தியாக தீபம்" அன்னை பூபதியின் நினைவாலயம் "வதைபட்டுக் கிடந்தவரை வாழ்விக்க வந்த படை வதைசெய்தல் கண்டு மனம் பொங்கினாள் - அவரை வழியனுப்பி வைத்திடவே முந்தினாள்" இதற்குள் அன்னாரின் பூதவுடல் உள்ளது.
  8. வேவுப்புலி லெப் கேணல் சிவகாமி மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த 5 போராளிகளுக்குமான நினைவுக்கல் மட்டு தென் தமிழீழத்தில் வீரச்சாவடைந்த வேவுப்புலி லெப் கேணல் சிவகாமி மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஐந்து போராளிகளுக்குமாக அமைக்கப்பட்டிருந்த வீரவணக்க நினைவாலயம்.
  9. மேஜர் ஜோன்சன் உள்ளிட்ட 29 போராளிகளின் நினைவாலயம் மட்டு படிமக்காலம்: 25/08/2003 25/08/1995 அன்று அம்பிளாந்துறையிலிருந்த விசேட அதிரடிப்படையினரின் படைமுகாம் தகர்ப்பின் போது வீரச்சாவடைந்த மேஜர் ஜோன்சன் உள்ளிட்ட 29 போராளிகளின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னம்.
  10. லெப். கேணல் எழிலவன் எ ஜீவனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளின் போது 6/02/2002 இலுப்படிச்சேனை "உச்சிவரை முகர்ந்து உயிர் நனைய உறவாடிய உதயத்தின் காதலருக்காக" அன்னாரின் சிலையை அவரது தாயார் திறந்துவைக்கிறார்
  11. வவுணதீவு வெற்றி விழாவின் போது தரவை 06/03/2003 'லெப். கேணல் மதனாவின் திருவுருவப்படம் திரை நீக்கம் செய்யப்படுகிறது. சுற்றிவர பின்னாளில் வஞ்சகம் இழைத்தவர்கள் நிற்கின்றனர்'
  12. கரும்புலிகள் வீரவணக்க நினைவாலயம் சம்பூர், திருகோணமலை திருமலை மாவட்ட கரும்புலிகளுக்கான வீரவணக்க நினைவாலயம் தலைநகர் திருகோணமலையின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு எழிலன் அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது (5-6-2006).
  13. தலைநகரின் சம்பூர் பரப்பில் தவிபுவினரால் அமைக்கப்பட்டிருந்த ஒரு வீரவணக்க நினைவாலயம் (இதன் பெயர் அறிந்தவர்கள் ஆவணப்படுத்த தெரியப்படுத்துங்கள்)
  14. நிலாவெளி நினைவுத்தூண் கோபாலபுரம் சந்திப்பு, நிலாவெளி, கிண்ணியா, தலைநகர் ஜமாலியாவிலிருந்த தேச வஞ்சகர்களான ENDLFஇன் முகாமை அழித்துவிட்டு திரும்பிய போது திருமலைக் கடலில் ஏற்பட்ட படகு நேர்ச்சியில் 22 போராளிகள் நீரில் மூழ்கி வீரச்சாவடைந்தனர். அவர்களின் நினைவாய் எழுப்பப்பட்ட நினைவுத்தூண் இதுவாகும். 1990இல் சிறிலங்கா படையினரால் அழிக்கப்பட்ட இது 2003இல் மீளவும் திறக்கப்பட்டது. எனினும் இதன் முழுப் படம் (நினைவாலயத்துடனான) எனக்கு கிடைக்கப்பெறவில்லை. வெறும் தூணின் படமே கிடைத்துள்ளது.
  15. கரும்புலிகளின் நினைவுத்தூண் தலைநகர் 28/03/2004 தலைநகரின் தம்பலகாமத்தை பிறப்பிடமாகக் கொண்ட கரும்புலி மறவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட தூண் இதுவாகும். தலைநகரின் தம்பலகாமம் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக பேரணி செய்த போது கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவி தாக்கிய 9 கடற்கரும்புலிகளுள் ஒருவரான தம்பலகாமத்தைச் சேர்ந்த கடற்கரும்புலி கப்டன் சுபாஸ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கிறார், சம்பந்தன் அவர்கள். இஞ்சால் தெரிவது திருமலை துறைமுகத்தினுள் ஊடுருவித் தாக்கிய கடற்கரும்புலி மேஜர் மதுசாவின் திருவுருவப்படமாகும்.
  16. நினைவுத்தூண் இதுவே வரலாற்றில் மாவீரர்களுக்கென எழுப்பப்பட்ட முதலாவது பொதுவான நினைவுத்தூணாகும். இருந்தவிடம்: பத்திரகாளி கோவிலடி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் உயரம்: 28 அடி செய்தோர்: திர்சிகா கலைக்கூடம் உதவியோர்: பத்திரகாளி கோவிலடி இளைஞர்கள் எழுப்பப்பட்டது: மாவீரர் வாரம், 1990 வடிவ விரிப்பு: உச்சியில் வகை-56 துமுக்கியினையும் அடியில் நான்கு வாசல்களையும் உடைய இதன் தூணின் நான்கு பக்கங்களிலும் ஈழப்போர் தொடர்பான பல காட்சிகள் சட்டப்படங்களாக காட்சிப்பட்டிருந்தன. திராவிடக் கட்டிடக்கலையில் இத்தூண் அமைக்கப்பட்டிருந்தது. அழிக்கப்பட்டது: யாழை 'சூரியகதிர்-1' நடவடிக்கை மூலம் சிங்களவர் கைப்பற்றிய போது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.