Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. Mullivaikkaal Memorial Beau Bassin Rose Hill, Mauritius This was the third memorial built in remembrance of the Tamil Genocide. Its uniqueness lies in the fact that it honours both Tamil civilians and LTTE fighters together. In response to requests from the Mauritius Tamil Temple Federation (MTTF), the mayor of Beau Bassin-Rose Hill, Louis André Toussaint, commissioned the construction of a memorial pillar. The epitaph on the memorial reads as follows: This memorial is situated within the Beau Bassin Rose Hill Municipal Council's grounds, a short distance from the mayor's office. This was opened on 18 May 2012. Image Credits: This image was generated by Nane Chozhan in the year 2024 from a video found on Facebook and later uploaded to Wikipedia
  2. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' 'We ourselves will write our history' Purpose: This thread is dedicated to documenting images of Tamil Genocide monuments and memorials located around the world. Disclaimer and Credits: All images shared in this thread are the property of their respective owners. I do not hold any rights to them. What's the Tamil Genocide? Tamil_genocide An image documentary by Nane Chozhan
  3. மே 15, 1985 அன்று குமுதினிப் படகில் படுகொலையானோரின் நினைவுத்தூண் நெடுந்தீவு இறங்குதுறை
  4. இனிமேல் வருபவை யாவும் காலவொழுங்கில் வராது. முன்னர் போன்று பெரும் தகவல்களும் இராது. வெறுமனே படிமங்களும் திகதிகளுமே இடம்பெறும்.
  5. தமிழீழ விடுதலைக்காக தன்னுயிர் நீத்த தியாகி பொன் சிவகுமாரனிற்கான உருவச்சிலை தமிழீழ மண்ணில் அமைக்கப்பட்ட இரண்டாவது நினைவுச்சின்னம் இதுவாகும். இது இனத்தின் விடுதலைக்காக முதன் முதலில் சயனைட் அருந்திய "தனிக்குழு மாவீரர்" பொன் சிவகுமாரனின் நினைவாக அமைக்கப்பட்ட உருவச்சிலையாகும். இது ஆகக்குறைந்தது மொத்தம் 3 தடவைகளானும் சிங்கள இனவெறியர்களாலும் அவர்தம் ஏவலாளித் தமிழர்களாலும் உடைத்தெறியப்பட்டுள்ளது. இவ்வுருவச்சிலையின் முதல் விருத்தானது சூன் 5, 1975 அன்று "மாமனிதர்" காசி ஆனந்தன் தலைமையில் "சிறை மீண்ட இளைஞன்" தம்பித்துரை முத்துக்குமாரசாமி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. உது தொடர்பில் ஒரு நடுகல்லும் அங்கு நாட்டப்பட்டது. பின்னர் அது உடைத்தெறியப்பட்டது சிங்களவரால். இவ்வாறு பல தடவைகள் செய்யப்பட்டது. பேந்து 1990ம் ஆண்டு சூன் மாதம் ஐந்தாம் திகதி புலிகளால் இவரிற்கு ஒரு சிலை திறந்துவைக்கப்பட்டது. இவ்வுருவச்சிலையும் புலிகள் யாழை விட்டு பின்வாங்க உடைத்தெறியப்பட்டது. பேந்து யாழ் பல்கலைக்கழகத்தினுள் இவருக்காக உருவச்சிலையொன்று அமைக்கப்பட்டது, ஜெனீவா உடன்படிக்கை காலத்தில். 'சிலையிற்கான திறப்பு விழாவில் அன்னாரின் தாயார் குத்துவிளக்கேற்றுகிறார்.' (இனந்தெரியாக காரணங்களால்) மேம்படுத்தப்பட்ட பின்னர்: போருக்குப் பின்னரும் இவ்வுருவச்சிலை சிங்களவரால் உடைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  6. 4வது உலகத் தமிழாராச்சி மாநாட்டு உயிர்க்கொடை உத்தமர் நினைவாலயம் முற்றவெளி, யாழ்ப்பாணம் தமிழீழத்தில் ஒரு படுகொலைக்கென்று நாட்டப்பட்ட முதலாவது நினைவுச்சின்னம் இந்த நினைவுத்தூணின் முதல் விருத்தேயாகும் (version). இந்நினைவுத்தூணானது 1974இல் நடந்த 4ஆவது உலகத்தமிழாராச்சி மாநாட்டின் பத்தாவது நாளில் (சனவரி 10) சிங்களவரால் கொல்லப்பட்ட தமிழர் பதினொருவருக்கு கட்டப்பட்டது. இது மொத்தம் நான்கு தடவைகள் சிங்கள இனவெறியர்களாலும் அவர்தம் ஏவலாளித் தமிழர்களாலும் உடைத்தெறியப்பட்டுள்ளது. கீழ்வரும் தகவல்கள் யாவும் என். செல்வராஜா அவர்களால் எழுதப்பட்ட "நினைவுகளே எங்கள் கேடயம்" என்ற நூலின் 138,139வது பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். படிமங்கள் இந்நூலிருந்தும் வேறிடங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்டவையாகும். விருத்து 1 இதன் முதல் விருத்தினை 10.1.1975 அன்று மக்களும் அரசியல்கட்சி தொண்டர்களும் கட்டுவித்தனர். இது பதினொரு சிறு தூண்கள் கொண்ட நினைவுத்தூணாகும். செதுக்கிய மரக் கட்டைகளை மன்னாரிலிருந்தும் "தமிழர் நினைவு நடுகல்" என எழுதிய நடுகல்லை கொழும்பிலிருந்தும் பைஞ்சுதை, கல், மண் மற்றும் தொண்டர்களை யாழ்ப்பாணத்திலிருந்தும் தருவித்து கட்டினர். 10.1.1975 அதிகாலை நான்கு மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. பற்சமய வழிபாடும் நடந்தது. அது சில கிழமைகளின் பின்னர் சிங்கள ஆதரவாளர்களால் உடைத்தெறியப்பட்டுவிட்டது. விருத்து 2 பின்னர் மீண்டும் 10.1.1976 காலையில் 11 அடி உயரத்தில் நினைவுத்தூணொன்று எழுப்பப்பட்டது. அதுவும் சிங்கள ஆதரவாளர்களால் உடைத்தெறியப்பட்டுவிட்டது. கட்டும் போதே இதை மேலும் பல அடிக்கு உயர்த்தக்கூடிய வகையிலேயே கட்டியிருந்தனர். "தந்தை" செல்வா மலர்வணக்கம் செய்கிறார் விருத்து 3 பேந்து மூன்றாவது தடவையாக 10.1.1977இல் ஒன்பது நடுத்தர தூண்களும் ஒரு பெரிய தூணும் கொண்ட நினைவுத்தூணொன்று எழுப்பப்பட்டது. இதன் சிறிய தூண்களின் அடிப்பகுதியில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. இதற்கு புதிய நினைவு நடுகல்லும் பதிக்கப்பட்டது. விருத்து 3இன் தொடக்க வடிவம்: இதன் பெரிய தூணும் பின்னர் இடிக்கப்பட்டது: விருத்து 3.1 பின்னாளில் இடிக்கப்பட்ட நினைவுத்தூண் மீளவும் கட்டப்பட்டது, முன்னரிருந்தது போன்றே. விருத்து 3.2 பல ஆண்டுகளின் பின்னர் அந்நினைவுத்தூணானது நினைவாலயமாக மாற்றம் பெற்றது; சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு பெயர்ப்பலகையும் நாட்டப்பட்டது. இதுவே இன்று நீங்கள் காணும் விருத்தாகும். '2003'
  7. இனப்படுகொலை தொடர்பான நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவகங்கள் இதற்குள் தமிழீழத்திற்குள்ளும் உலகின் பல்வேறு நாடுகளிலும் 2009இற்குப் பின்னர் நிறுவப்பட்டுள்ள இனப்படுகொலை தொடர்பான சிலைகளின் படிமங்கள் உள்ளன. இந்தத் தகவல் இத்திரியோடு தொடர்பில்லையாதலால் வேறொரு திரியில் பதிந்து, அத்திரியின் கொழுவி (link) கீழே தரப்பட்டுள்ளது.
  8. மாவீரர் துயிலுமில்லம் முதல் பெட்டியினை மாவீரர்களுக்கு ஒதுக்கியுள்ளேன். இதற்குள் மாவீரர் துயிலுமில்லங்களின் படிமங்கள் உள்ளன. மட்டுமின்றி இந்தியாவில் கட்டப்பட்ட மாவீரர் கல்லறைகளும் இதற்குள் உள்ளன.
  9. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை (warning): ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தரைப்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். "பதிவிடப்பட்டிருக்கும் நினைவுச்சின்னங்களின் விடுபட்டுள்ள பெயர்களை தெரிவித்துதவுமாறு வாசகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்" 'ஆனையிறவில் இடிவாருவக காப்பூர்தி மேல் ஒட்டப்பட்டிருந்த அறிவித்தல் பதாகை' இதற்குள் தமிழர்களுக்கு சிங்கள மற்றும் முஸ்லிம் இனவெறியர்களால் செய்யப்பட்ட இனப்படுகொலை தொடர்பாகவும் அதற்கு எதிராகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்தும் 1948 முதல் 2009 மே மாதம் வரை நிறுவப்பட்ட/கட்டப்பட்ட பல்வகையான நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் தொடர்பான படிமங்கள் பதிவிடப்படும். கீழ்க்கண்ட யாவையும் இதற்குள் அடங்கும்: உருவச்சிலை நினைவுத்தூண் நினைவுக்கல் வெற்றித்தூண் நினைவாலயம் வீரவணக்க நினைவாலயம் மாவீரர் நினைவாலயம் மாவீரர் நிழலுருப்படம் மாவீரர் நினைவு மண்டம் மாவீரர் பொது நினைவாலயம் மாவீரர் துயிலுமில்லம் இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்: https://yarl.com/forum3/clubs/10-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.