Everything posted by நன்னிச் சோழன்
-
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி வெளியீடு
222 பேரின் பட்டியலைப் பார்த்தேன்... தேடப்படுபவர்கள் என்றிருக்கிறது.... இதில் அரிசியல்துறை, புலவாய்வுத்துறை என்பதிலிருந்து அறிக்கை விடுபவர்களின் பெயர்கள் இருக்கின்றனவா என்று தேடிப்பார்த்தேன், தயாமோகன் என்பவரைத் தவிர ஒருவரின் பெயரையும் காணோம் (எனது கண்ணிற்கு தெரியாமல் மறைந்திருக்கிறதோ?). தணிக்கை ************************************* குறிப்பாக தாங்கள் புலிகள் தானென்றும் சிங்கள அரசிற்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறோம் என்று பொதுவாக பொதுவெளியில் சொல்லித்திரியும் புலவர் (சிங்களம் சுடுதண்ணி குடித்த நாய் போன்று திரிந்த 2010/2011 ஆம் ஆண்டளவில் துவிட்டரில் தான் நீலவரியுடன் இருக்கும் நிழற்படங்களை வெளியிட்டிருந்தவர். அங்கிருந்துதான் நானே இவரின் படங்களை எடுத்தேன்!) செழியன் (இன்றளவும் முள்ளிவாய்க்காலிலிருந்து தலைவர் தப்பி வெளிநாட்டில் இருக்கிறார் என்று அவிழ்த்துவிட்டுக்கொண்டு இருக்கிறார், இறுதியாக 2024இல் கூறியிருந்தார்), ஜெயாத்தன் போன்றோரின் பெயர்களைக் காணவில்லையே..... "துவாரகா" புகழ் அப்துல்லாவின் பெயர் முதற்கொண்டிருக்கும் போது இவர்களின் பெயர் விடுபட்டுள்ளதே? அது எப்படி திமிங்கிலம்? பிற்குறிப்பு: 2009 மே வரை இவர்கள் செய்தவற்றை மதிக்கிறேன், என்றினும் கேள்வி கேட்கமாட்டேன். ஆனால் மேயிற்குப் பின்னர் இவர்கள் புலிகளின் பெயரில் நுங்குவண்டி ஓட்டுவது நிப்பாட்டப்பட வேண்டும்.🤬
-
மன்னாரில் இரத்தம் தோய்ந்த 04.12.1984 உம் கண்டு மனம்கொதித்து விடுதலைப்புலியான சிங்களவனும்!
எழுத்தாளர்: சபா கிரிஸ் தமிழ் மக்களுக்காக உயிர்துறந்த சிங்கள இனத்தைச் சேர்ந்த "வில்லியம் ஐயே" உம், போராளியாக மாறி வீரச்சாவடைந்த அவரது மகனது கதையும் பலர் அறிந்திருக்க மாட்டீர்கள். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாளில் டிசம்பர் 04, 1984ஆம் உயிர்த்தராசன் குளத்துச் சந்திக்கு அருகில் நடைபெற்ற படுகொலையில், படையினரால் 200+ பொதுமக்கள் படுகொலைசெய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய இன்னுமோர் விடயத்தைக் கட்டாயமாக நாம் அறிந்திருக்க வேண்டும். மேற்சொன்ன சம்பவத்தில் ஒரு பேருந்தில் வந்தவர்களும் சுடப்பட்டார்கள். அப்பேருந்திலிருந்து பயணிகள் இறக்கப்பட்டு, அடையாள அட்டை பார்க்கப்போவதாக கூறி, வரிசையில் நிறுத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அப்பேருந்தில் மட்டும் ஏறக்குறைய ஐம்பது(50) பேரளவில் இருந்திருக்கின்றார்கள். பேருந்திலிருந்து பயணிகளை இறக்கி அவர்களைச் அழித்தொழிக்கப் போகின்றார்கள் என்பதைத்தன் மதுநுட்பத்தால் புரிந்துகொண்ட பேருந்து நடத்துனரான சிங்கள இனத்தைச் சேர்ந்த ‘வில்லியம் ஐயே(ஐயா)’, பயணிகளை இறக்க அனுமதிக்காது படையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வில்லியம் ஐயாவை முதலில் பலவந்தமாக இழுத்து வெளியே வைத்துக்கொண்டு, எல்லாப் பயணிகளையும் இறக்கிவரிசையில் வைத்துச் சுட்டபோது இந்த ஓட்டுனரையும் கொன்றொழித்திருக்கின்றார்கள். அப்பேருந்தில் பயணம்செய்த திருமணமாகி மூன்று நாள்களான எங்கள் கணித ஆசிரியர், அச்சூட்டுச் சம்பவத்தில் தப்பிப்பிளைத்தவர். அவரே இச்சம்பவத்தை கண்ணீரோடு எங்களுக்கு ஒருமுறை விரித்தார். அன்றைய காலத்திலேயே எம் மக்களுக்காக உயிர்கொடுத்த உறவு வில்லியம் ஐயே. சகோதர மொழிபேசும் சகோதர இனத்தவர். மறந்துபோகாது இன்றும் பலருடைய நெஞ்சங்களில் இருப்பவர். பூசையறையில் வைத்து பூசிக்கப்படவேண்டியவர். மடுறோட்டில்தான் வாழ்ந்தவர். அடிக்கடி மடுவுக்குச் செல்கின்றபோது இவரைப் பல தடவைகளில் பேருந்தில் கண்டிருக்கின்றேன். அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட உத்தமர், என் கண்களுக்குள் இன்றும் நிழலாடுகின்றார். எல்லா மக்களையும் அறிந்திருந்தார். இயல்பாகப் பழகுகின்ற பண்பான மனிதர். பெருத்த உருவம் உடையவர், சிங்கள உச்சரிப்பில் தமிழைத் தமிழர்களைவிட நன்றாகப் பேசும் திறமையானவர், வறுமைப்பட்டவர்கள் பேருந்தில் ஏறுகின்றபோது அரசினுடைய வர்த்தமானி அறிவிப்பு இல்லாமலேயே அக்காலத்திலேயே சிறப்புச் சலுகை வழங்கியவர், மாணவர்களை அன்றைய காலத்திலேயே இலவசமாக ஏற்றிப் பறித்த பாரி அவர்! தன் பொறுப்பில் உள்ள மக்களுக்காக தன்னுயிரைப் பொருட்படுத்தாத தியாகி அவர். அன்று அவர் தாராளமாகத் தப்பித்திருக்கலாம். அவரின் உயிருக்கு எந்த ஊறும் நிகழ்ந்திருக்காது! ஆனால், தன் மக்களுக்கா, நீதிக்காக நின்றதினால் அவர் தன் இன்னுயிரை எமக்காய் இழந்தார். அவ்வாறே அவருடைய மகனும் தமிழீழ விடுதலைப்போரில் புலியாகி நின்று வீரச்சாவடைந்தார். கப்டன் பிரவின்ராஜ் (கேடி ஜெயசேன ஆரியவன்ச, 24.02.1993) மடு வீதி, மன்னார். 1993 ஆம் ஆண்டு மன்னார் நானாட்டான் படை முகாமிற்கும் கட்டைக் காட்டிற்கும் இடையில் அமைந்திருந்த தொடர் காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவடைந்தார். இவரது பெயரில் ஓர் எழுச்சிக் குடியிருப்பு, "கப்டன் பிரவின்ராஜ் எழுச்சிக் குடியிருப்பு", மன்னாரில் 22/08/1993 அன்று மாவட்டக் கட்டளையாளர் திரு கதிர் மற்றும் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு கணேஸ் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஈகைச்சுடரினை மாவீரரின் தந்தையே ஏற்றிவைத்தார் (24/8/1993 ஈழநாதம், பக்-4). இப்படிக் கதைகள் கனக்கவே இருக்கின்றன. கதைக்க வெளிக்கிட்டால் இதயம் கனத்துப்போகின்றது…! இருப்பினும் அவை எழுதப்பட வேண்டும். வில்லியம் ஐயா போன்ற மனிதாபிமானிகள், தியாகிகள், உத்தமர்கள், எங்கும் இருக்கின்றார்கள். அவர்கள், இனங்களை மதங்களை நிறங்களை மொழிகளை, மனித வரையறைகளைக் கடந்து — வாழ்ந்தவர்கள் — வாழ்பவர்கள் — வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.
-
BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்!!!
ஆழ்ந்த அஞ்சலிகள்.
-
வான்புலிகளின் வரலாறும் வான்கரும்புலிகளின் நினைவுகளும்
இதில் குறிப்பிடப்பட்டுள்ளது போலல்லாது சிறிலங்கா படைத்துறையானது 1991 ஆம் ஆண்டு (ஆகக்குறைந்து) முதற்தடவையாகவும் 1995 முதற் கொண்டு பல தடவையும் புலிகளின் வான்கலங்களின் பறப்புகளை கண்டு வெளியுலகிற்கு அறிக்கையிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் இங்கு கட்டுரையாளரால் குறிப்பிடப்பட்டுள்ள உலங்குவானூர்தி என்ற சொல்லானது தற்சுழல்பறனை (Gyroplane/Autogyro/Gyrocopter) என்பதை குறிக்கிறது.
-
லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு
முதல் சீட்டு வாங்கினவன் தமிழனாத்தானிருப்பான். போறதிலையும் பாதி தமிழராய்த்தான் இருக்கும்.
-
வான்புலிகளின் வரலாறும் வான்கரும்புலிகளின் நினைவுகளும்
படைத்தவர்: அறியில்லை எழுத்தாக்கம்: ஒலிநாடாவிலிருந்து எழுத்தாக்கம் செய்தேன்(நன்னிச் சோழன்) ஆண்டு: 2012/2011 (https://eelam.tv/watch/%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%A8-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-history-of-sky-tigers-and-the-memory-of-sky_enyGD5qQmlTPtG5.html) தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் என்றும் நிகழ்ந்திராத சாதனையாக வான்புலிகளின் சாதனைகள் நடந்தேறியுள்ளன. விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் வான்பறப்பு முயற்சிகளில் கிட்டண்ணா ஈடுபட்டிருந்தார். யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் ஆரம்ப கால பறப்பு முயற்சிகள் வெற்றியளிக்காத போதிலும் விடுதலைப் போராட்டம் இன்று இலக்குத்தவறாத வான் தாக்குதலை நடத்தும் வல்லமையை கொண்ட வான்புலிகள் அணியை அன்று கொண்டதாக வளர்ச்சிபெற்று விட்டது. இந்த வெற்றியை நேரில் நின்று பார்த்து பெருமைப்படுவதற்கு அவர் இல்லாது போனாலும் வானிலிருந்து ஏனைய மாவீரர்களுடன் பார்த்து நிச்சயம் மகிழ்வார் என்றே நம்பலாம். உலக வரலாற்றில் முப்பெரும் படைகளையும் கொண்டிருக்கும் முதற் பெரும் இயக்கமாக விடுதலைப் புலிகளை அடையாளப்படுத்தியது வான்புலிகளின் வருகைதான். கடற்புலிகளைப் போன்று வான்புலிகளின் தேவையையும் நன்கு அறிந்த தலைவர் அவர்கள் அதனால் அதற்கான சிந்தனைகளில் செயற்பாடுகளில் தலைவர் ஈடுபட்டிருந்தார். இந்த முயற்சியின் வெற்றி 1998ம் ஆண்டு மக்களுக்கு தெரிய வந்தது. அதாவது முள்ளியவளையில் உள்ள மாவீரர் துயிலுமில்லம் மீதில் விடுதலைப் புலிகளின் வான்புலிகள் உலங்குவானூர்தியில் சென்று மலர்தூவி வணக்கம் செலுத்தியது அன்று மக்கள் பலரும் கண்ணூடாக பார்த்தார்கள். அதன் பின்புதான் விடுதலைப்புலிகளின் வான்படை பரிணாமம் பெறுகிறது. அன்று வான்புலிகளுக்கு கேணல் சங்கரண்ணா தான் பொறுப்புடன் நின்று செயற்பட்டார். வற்றாப்பளைப் பகுதியில் பாரிய முகாம்கள் அமைத்து மக்களுடன் நெருங்கிய உறவினை வளர்த்தார் சங்கரண்ணா அவர்கள். அன்றைய காலகட்டப் பகுதியில் வான்புலிகளின் வான்கலங்கள் வற்றாப்பளை, நந்திக்கடல் வெளியில் தான் பறப்பில் ஈடுபடும். அவ்வாறு சிறிய வெளிகளிலெல்லாம் பயிற்சித் தளங்களை அமைத்து விடுதலைப் புலிகளின் வான்புலிகள் பயிற்களில் ஈடுபட்டார்கள், தொடக்க காலத்தில். இதில் உலங்குவானூர்தி மற்றும் கிளைடர் வகை வானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டன. விடுதலைப் புலிகளின் இந்த வான்கலங்களை அன்று அப்பகுதியில் வாழ்ந்த மக்களும் அறிந்திருந்தார்கள். ஆனால் வெளியுலகிற்கு வான்புலிகளின் செய்திகள் தெரிந்திருக்கவில்லை. இவ்வாறான நிலையில் வான்புலிகள் வெளியுலகிற்கு அறிமுகமாகாத காலத்தில் சிறிலங்கா வான்படையிடம் வான்கலமொன்று அகப்பட்டுக்கொள்ளும் நிலையும் ஏற்பட்டது. அது வான்புலிகளின் உலங்குவானூர்தி ஒன்று முல்லைத்தீவு நந்திக்கடல் வெளியில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை முள்ளியவளை, கேப்பாப்பிலவு, முல்லைத்தீவு பகுதிகளில் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்தது. அந்த வேளையில் தான் சிறிலங்கா வான்படையினரின் தாக்குதல் திறம்மிக்க வானூர்தியான புக்காரா, மிகையொலி வேக வானூர்திகள் முல்லைத்தீவை நோக்கி திடீரென வந்துவிட்டன. வான்புலிகளின் உலங்குவானூர்தி இன்னமும் பறப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. முள்ளியவளை பகுதிக்கு போர் வானூர்திகள் வந்துவிட்டன. வானூர்திகள் திடீரென வந்துவிட்டதால் வான்புலிகள் உலங்குவானூர்தியை உடனடியாக தரையிறக்க வேண்டிய நிலை எழுந்துவிட்டது. தங்களது வான்தளத்தில் தரையிறக்கினால் எதிரி அந்த இடத்தினையும் வான்கலங்களையும் அடையாளம் கண்டுவிடக்கூடும் என்பதால் அவசர அவசரமாக வற்றாப்பளைக்கும் கேப்பாபிலவிற்கும் இடைப்பட்ட வயல்வெளிப்பகுதியில் தரையிறக்கினார்கள். இவ்வாறுதான் அன்று வான்கலங்களை பாதுகாத்து விடுதலைப் புலிகளின் வான்படையினர் அடுத்தகட்ட பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். இரணைமடு பகுதியில் பாரிய வான்படைத் தளத்தினை நிறுவினார்கள். விமான ஓடுதளம் அமைக்கப்பட்டது. இது சிறிலங்கா அரசின் கண்களுக்கு குத்துகின்றது. பன்னாடுகளில் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது, தவிபு இடம் வான்கலங்கள் உள்ளனவென்று. அருகிலுள்ள இந்தியாவிற்கு அச்சுறுத்தலென்று சிறிலங்கா அரசே தனது வாயால் பரப்புரை சொல்கிறது. இவ்வாறுதான் தவிபு இன் வான்புலி அணியினர் சற்றுச் சற்றாக வளர்ந்துகொண்டிருந்த காலகட்டப்பகுதியில் முதற் தாக்குதலை கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது மேற்கொண்டார்கள். அதன் பின்னரான காலத்தில் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். ஆனால் சிறிலங்கா அரசோ தவிபு இன் வான்படையினரை அழித்துவிடவேண்டுமென்று கங்கணத்தில் இரணைமடுவிலுள்ள வான்தளம் மீதில் இரவு-பகல் பாராது பல தடவைகள் வான்குண்டுகளை வீசி வான்தளத்தை அழித்தார்கள். எல்லாவற்றிற்கும் நடுவணில் தான் கோழி தன் இறக்கைக்குள் குஞ்சுகளை காப்பது போல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வான்புலிகள் அணியினை பக்குவமாக பாதுகாத்தார். கட்டுநாயக்கா வான்படைத்தளம், அதன் பின்னரான முத்துராஜவெல - கொலன்னாவை எண்ணைக் களஞ்சியங்கள் மீதான தாக்குதல்கள், வவுனியா ஜோசப் படைத்தளம் மீதான தாக்குதல், மணலாறில் ஆற்றடிப் படைத்தளம் மீதான தாக்குதல் என்று வான்புலிகளின் தாக்குதல் தொடர்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் வான்புலிகளை அழிப்பதற்கு சிறிலங்கா அரசு கங்கணம் கட்டியது. இந்த வேளையில் தரையில் போர் உக்கிரமடைந்தது. அதாவது மன்னாரிலிருந்து நகர்ந்த சிறிலங்காப் படையினர் கிளிநொச்சியை அண்மித்துவிட்டார்கள். அதன் பின்னர் இரணைமடுப் பகுதியை அண்மித்துவிட்டார்கள். இரணைமடுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் வான்படைத்தளத்தை கைப்பற்றிவிட்டதாகவும் அறிவித்திட்டார்கள். இந்த நிலையிலும் தமிழீழத் தேசியத் தலைவரவர்களால் வான்புலிகள் காப்பாற்றப்பட்டு பௌத்திரமான இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறார்கள். இறுதியாக சிறிலங்காப் படையினரின் நகர்வு விசுவமடு - புதுக்குடியிருப்பை அண்மித்த காலகட்டப் பகுதியில் சுற்றுமுழுதான பல்குழல் எறிகணைக்கு தமிழ் மக்கள் இலக்காகிக்கொண்டிருந்த காலகட்டமாக அன்றைய காலகட்டம் காணப்படுகின்றது. அதாவது 20/02/2009 அன்று சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலுக்கு நடுவணில் வான்கரும்புலிகள் பறந்து சென்று கொழும்பின் தலைநகர் பகுதியில் தாக்குதல் நடத்தி வீரவரலாறானார்கள். அந்த வீரவரலாறானவர்கள் தான் கேணல் ரூபன் மற்றும் லெப். கேணல் சிரித்திரன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் வான்புலிகளின் சாதனை என்றும் மறந்திட முடியாது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பதியப்பட்ட நாளாக இன்றைய நாள் அன்று காணப்படுகின்றது. அதாவது வான்கரும்புலிகளின் நினைவுநாள் இன்றாகும். அந்த வான்கரும்புலிகளின் நினைவுகளை இன்று நாம் மீட்டுகிறோம்.
-
SLNS Ranajaya being repaired after the Rocket Attack by Tiger commandos - oct 23, 2000.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
mi 24 shot down by cadet Ilampuli - Oct 23, 2000.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
Lanka Rani Sunk - Oct 23, 2000.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
bombed by Sea Tigers' Under Water Swimming Unit - Newco Endurance at Town Pier.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
'தமிழன் கனவு' என்ற ஈழத் தமிழரின் எதிர்காலத்தை அன்றே எதிர்வுகூறிய புத்தகம்
//தேனைமறந்து கள்ளுண்டு கிடந்தவர் திருந்தி எழுந்தாரங்கே பூனை நாயெனத்தமிழன் இழிவுற்ற புன்மையினி இல்லையென்று வானை இடித்ததோர் சங்கம் ஒருவன் வல்லவனங்கே உரைசெய்வான்.// பாருங்கோ, நாம் குடி போதைக்கு அடிமையாவோம் என்றும் அதிலிருந்து மீளுவோம் என்று எதிர்வுகூறப்பட்டிருக்கிறது. மட்டுமின்றி, ஒரு சங்கம் தோன்றி அதன் (தலைவனாக்கும்) எமக்கு வழிசொல்வானென்றும் இருக்கிறது. மேற்கண்ட கட்டுரையினை எழுதியதே புலிகள் தான்!!!!!!!
-
'தமிழன் கனவு' என்ற ஈழத் தமிழரின் எதிர்காலத்தை அன்றே எதிர்வுகூறிய புத்தகம்
ஒரு கவிஞனின் தீர்க்கதரிசனம் - கவிதை இலக்கியத்தின் இனியதோர் ஊடகம். கவிஞன் - காலத்தின் குரலாய் நின்று பேசுபவன். கடந்த காலத்தைப்பற்றிய தேடலும், நிகழ்காலத்தின் மீதான தெளிவுப்பார்வையும், எதிர்காலத்தைக்குறித்த தீர்க்கதரிசனமும் ஒரு சுவிஞனுக்கு இருக்கவேண்டியது அவசியமாகிறது. இம்மூன்றும் இணைந்திருந்தமையால்தான் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சுவிஞனாக பாரதி போற் றப் படுகிறான். இனிவரும் நூற்றாண்டுகளிலும் சுளி தைகளுடாக பாரதி வாழ்ந்து கொண்டுதானிருப்பான் தமிழர்களாகிய எமது போராட்ட வரலாற்றின் இலக் கியப்பதிவுகளில் கவிஞர் காசிஆனந்தன் அவர்களுடைய கவிதைகள் முக்கியமானதோர் இடத்தினைப் பெற் றுள்ளது எனலாம். அறுபதுகளில் தமிழர் போராட்ட எழுச்சியைத் தூண் டும் விதமாக இவர் எழுதிய கவிதைகளில் எதிர்காலத் தைப் பற்றிய நோக்கு காணப்படுவதை எவரும் மறுக்க முடியாது. அந்தக்காலந்தொட்டே தமிழ்மக்கள் மீதான சிங்கள அர சின் ஒடுக்குமுறைகள் பல்வேறு வடிவங்களில் முடுக்கி விடப்பட்டு வந்தபோதிலும், அந்தக்காலத்திலிருந் தமிழ் அரசியல் அமைப்புக்களோ சாதாரண பொது மக்களோ ஆயுதப் போராட்டம்தான் இதற்கொரு வழியென்று சிந்தித்துப் பார்க்கவில்லை. தமிழன் சுயகெளரவத்துடன் வாழ்வதற்கு தனிநாடு ஒன்றுதான் முடிவு என்பதனையும் அதனை அடைவ தற்கு ஆயுதப்போராட்டமே வழி என்பதனையும், அறுபதுகளில் எழுதப்பட்ட காசியின் கவிதைகள் கூர் மையுடன் கூறுகின்றன. தமிழருக்கென்று தனிப்படை யொன்று உருவாக வேண்டுமென்ற கவிஞரின் கனவுகள் அப்போதே கவிதைகளாகி விட்டன. அத்துடன்- அந்தப்படை எவ்வாறான வீரத்தையும், உறுதியினையும் கொண்டதாகவிருக்கும் என்ற அந்தக்கனவுகள் இன்று சுண்முன்னே நிதர்சனமாகி வருகின்றன. 1968 ம் ஆண்டு நூலுருவான 'தமிழன்கனவு' கவிதை களை இன்று படித்துப்பார்க்கும்போது வியப்பாக இருக் கின்றது. அந்தக்கவிதைகள் சிலவற்றினை இன்று மீட்டுப் பார்ப்பது சுகமான சுவையானதோர் அனுபவமாகவிருக்கும். தமிழனின் அவல நிலைகண்டு அவருக்குள் எழுந்த போர்க்குணத்தினை இவ்வரிகள் தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றன. காலமுனிவனின் கூற்றாக சுவிஞர் சொல்லும் இன் னொரு பாடலில் திடமானதொரு நம்பிக்கை இதழ் விரிக்கிறது. போராட்டப்பாதையில் தமிழ்ப்படை இடையிடையே எதிர்கொள்ளும் இடையூறுகளையும் கற்பனை செய்து அப்போதே கவிஞர் வேதனைப்பட்டிருக்கிறார். பிரிவினைவாதங்களால் ஏற்படும் குழப்பங்களை எண்ணி கவிஞர் ஆதங்கப்படுகிறார். முரண்பாடுகள் தீர்கிறது. படைமீண்டும் ஒன்றுசேர் கிறது. கவிஞர் மகிழ்ச்சிக்கடலில் குளிக்கிறார். சொந்த இனத்தவனாலேயே காட்டிக் கொடுக்கப்படும் சம்பவங்களையும், எதிரியின் தாள்பிடித்து அடிமைச் சுகங்களில் மூழ்கிக்கிடக்கும் தன்மைகளையும் கவிஞர் சாடுகிறார். . காட்டிக்கொடுக்கும் கயவர்கள் மீது கடுமையான கோபக்கனலை எறிகிறார் கவிஞர். தமிழருக்கென தனியானதோர் படை உருவாகி அது எதிரிகளுக்கெதிராக உக்கிரமான போரை நடாத்தும் என சராசரி மனிதர்கள் எவரும் அறுபதுகளில் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். வானிலிருந்து மேற்கொள்ளப்படும் விமானத்தாக்குதல்களை தமிழ் மக்கள் சந்திக்க வேண்டிவருமென்பதை அப்போது எவரும் எண்ணிப் பார்த்திருக்க முடியுமா? ஆயுதப் போராட்டம் தோன்றி எண்பத்து நான்காம் ஆண்டின் இறுதிப் பகுதியிலேயே விமானத் தாக்குதல் ஒன்றைக் கண்டோம். இப்போது விமானத் தாக்குதலே எதிரியின் பிரதானத் தாக்குதலாக அமைந்துவிட்டது. அட! கவிஞர் அதனை அறுபதுகளிலேயே கற்பனை செய்து விட்டார் தெரியுமா! அது மட்டுமல்ல, தாக்கும் விமானத்தைத் திருப்பித் தாக்கும் வலிமையினை தமிழ்படைபெறும் என்பதனையும் அவர் அப்போதே பாடிவைத்துவிட்டார். எவ்வளவு நிதர்சனமாகிவிட்ட கற்பனை...! காசி அவர்கள் வித்தியாசமானதோர் சுவிஞன். தமிழைப்பற்றியும், தமிழரின் தன்மானப் போராட்டம் பற்றியுமே அவர் பாடியிருக்கிறார். கனவு விமானம் செய்து, காதற்பெண்களுடன் காற்றிலே பவனிவரும் கவிதை வரிகளை மட்டும் அதிகமாக வரையும் கவிஞர்களிடமிருந்து இவர் வேறு படுகிறார். இவரின்காதல் தமிழ்க்கன்னியைச் சுற்றியே படர்ந்து வந்துள்ளது. தமிழ்ப்படையின் அமைப்பையும் அழகையும் ஆனந்தமாக கற்பனை செய்து கவிஞர் மகிழ்ந்திருக்கிறார். தமிழ்மறப்படையின் மூலமாக இறுதியில் தனிநாடு உருவாகும். அந்நாடு எல்லா விதங்களிலும் சுதந்திரம் பெற்றதாகவே அமையும் என்பதையும் கவிஞர் சொல்ல மறக்கவில்லை. அறுபதுகளில் கவிஞர் கண்ட கனவுகளின் பல கட்டங்கள் இன்று நிதர்சனமாகி வருகின்றன. அவரின் கனவின் இறுதிக் கட்டமும் நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதனையும் அவர் கண்கூடாக கண்டு மகிழ வேண்டுமென. மாமனிதர் விருது பெற் றிருக்கும் அவரை வாழ்த்துவோம். இன்னொரு நிலவில் சந்திப்போம். சாளரம் | ஆகஸ்ட் 1991 | பக்கம் 14- 16
-
வேவுப்புலிகள் இன் படிமங்கள் | Recon Tigers' Images
- Tamil Eelam Police Stations- Jaffna - before 1996 - தமிழீழ காவல் பணிமனை(5).png
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Tamil Eelam Police Stations- Jaffna - before 1996 - தமிழீழ காவல் பணிமனை(4).png
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Tamil Eelam Police Stations- Jaffna - before 1996 - தமிழீழ காவல் பணிமனை(3).png
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Tamil Eelam Police Stations- Jaffna - before 1996 - தமிழீழ காவல் பணிமனை(2).png
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Tamil Eelam Police Stations- Jaffna - before 1996 - தமிழீழ காவல் பணிமனை(1).png
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் ஐயனே, களத்தை நவீனமாக்கிய போது, முகப்பிலும் ஏதேனும் தகுந்த மாற்றம் செய்வீர்கள் என்றெண்ணினேன், வேறொன்றுமில்லை! Views... தெரியப்படுத்தியமைக்கு நன்றி.- cwrdhokili.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Mercs Uhana.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் நிர்வாகத்தினரே முகப்பு இன்னும் மாறவில்லை, அப்படியே உள்ளது. Mobile Version இல் "views" தெரியவில்லை.- குடாரப்பு தரையிறக்கம் | ஆவணக்கட்டு
சமர்க்கள விரிப்புகள் 4 நாட்கள் குடாரப்புத் தரையிறக்கம்: மூன்றாம் நாள் எழுதியது கிடைக்கப்பெறவில்லை!- 34 replies
-
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
-
Tagged with:
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
- elephantpass battle
- elephantpass battle 2000
- elephantpass landing
- kudaarappu landing
- kudaarapu landing
- kudarappu landing
- kudarapu landing
- ltte landing
- ooyaatha alaikal - 3
- tamil tigers landing
- unceasing waves - 3 landing
- unceasing waves three
- அலைகள்
- ஆனையிறவு
- இலங்கை
- இலங்கை உள்நாட்டுப் போர்
- ஈழத் தரையிறக்கம்
- ஈழப்போர்
- ஓயாத அலைகள்
- ஓயாத அலைகள் - 3
- குடாரப்பு
- குடாரப்பு தரையிறக்கம்
- குடாரப்புத் தரையிறக்கம்
- சமர்
- தமிழர் தரையிறக்கம்
- தமிழீழம்
- தரையிறக்கம்
- புலிகளின் தரையிறக்கம்
- புலிகள்
- புலிகள் தரையிறக்கம்
- போர்
- மோதல்
- விடுதலைப்புலிகள்
- வித்துடல்
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கங்கள்- 22 களமுனைகளிலும் அரசியலை விதைத்த மேயர் மிகுதன் ! உத்தம குறிக்கோளாம் தமிழீழ விடிவுக்காக சொல்ல முடியாத துயரங்களை தம் தோழ்களில் சுமந்து நெருப்பாற்றை நீந்திக் கடந்தவர்கள் எங்கள் மாவீரர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் சிந்திய குருதி இன்றும் பல ஆயிரம் நினைவுகளை எமக்குள்ளே விதைத்துச் சென்றதை மறுக்க முடியாது. அவ்வாறுதான் மாறன்-8 அடிப்படைப் பயிற்சி முகாமில் ஒரு புலி தயாராகிக் கொண்டிருந்தான். தேசக் கனவை தன் உள்ளத்தில் சுமந்தவனாக, நேரிய சிந்தனைகளும், தேசியத் தலைமை மீதான அடங்காத நேசமும், விடுதலைப் போராட்டத்தின் மீதான அடங்காத பற்றும் கொண்ட வேங்கையாக உருவெடுத்தான் மிகுதன். எதையும் செய்து முடிக்கு அசாத்திய துணிச்சல் கொண்டவன், எந்த விடயத்துக்காகவும் யாரிடமும் கறைபடியாத அளவுக்கு தன் சிந்தனைகளில் மட்டுமல்லாது செயற்பாடுகளிலும் நேரிய போக்குக் கொண்டவன். அச்சம் என்பதன் அர்த்தம் தெரியாதவன். களமுனைகளை மட்டுமல்ல மக்கள் பணிகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த பெரும் வேங்கை. அடிப்படைப் பயிற்சி முடிவடைந்த பின் அரசியல்துறை கல்விப்பிரிவுக்குள் உள்வாங்கப்பட்டு பணியாற்றத் தொடங்கினான். மிகுதன் கல்விப்பிரிவுப் போராளியாக இருந்த போது முதல் சண்டைக் களமுனை நோக்கி நகர்த்தப்படுகிறான். பூநகரி நோக்கிய சிங்களத்தின் படையெடுப்பான “சுழல்காற்று “ நடவடிக்கைக்கு எதிராக தடுப்புக் காவல் வேலியாக சண்டைக் களம் புகுந்தான். அன்றில் இருந்து இறுதி வரை அவன் சண்டைக் களங்களை பிரிந்திருந்தது குறைவு. அரசியல் பணிகளில் இருந்தாலும் சண்டைக் களங்களை நோக்கிய வீரானாகவே வாழ்ந்தான். பள்ளிக்கல்வியை க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவான நிலையிலும் அதைத் துறந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்த மிகுதன் எதையும் இலகுவில் கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவன். அடிப்படையிலே ஆங்கில மொழியறிவைக் கொண்டிருந்தாலும் சிறப்பு ஆங்கிலப் பயிற்சிகள் மூலமாக இயக்கத்துக்குள்ளே தன்னை வளர்த்துக்கொண்டான். அதனாலோ என்னவோ சர்வதேச அரசியலையும், அரசியல் பொருளாதாரத்தையும் அல்லது உலக நாடுகளின் ஒழுங்குகளையும் அவர்கள் எதிர்காலத்தில் எம்மீது எவ்வாறான நிகழ்ச்சி நிரல்களில் நகர்வுகளை மேற்கொள்வார்கள் என்ற பலமுனை எதிர்வுகூறல்களைக் கூறக்கூடியவனாக நன்கு கற்றுத் தேர்ந்தான். அரசியல்துறையின் பரப்புரை நடவடிக்கைகள் தீவிரம் அடையும் போது சிறப்பு நடவடிக்கைகளுக்காக கல்விப்பிரிவுப் போராளிகளும் விசேடமாக களமிறக்கப்படுவர். அப்போது அக் காலத்தில் பாடசாலைகளில் அல்லது கல்வியாளர்களின் சந்திப்புகள் நடந்த போதெல்லாம், எதிர்வரும் கேள்விகளுக்கு சரியான பதில்களைக் கூறுவதனூடாக அல்லது தெளிவான விளங்கங்களை வழங்குவதனூடாக இயக்கத்தின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு பெரிதும் வழி வகுத்தவன். சில போராளிகளுக்கு பேச்சாற்றல் இருப்பதில்லை. ஆனால் அறிவுசார்ந்த கருத்துக்களால் சபையினை தம் கட்டுக்குள் கொண்டு வரும் அதி திறன் அவர்களிடம் இருக்கும். அவ்வாறான ஒரு திறனுடன் தான் விசேட பரப்புரைகள் நடக்கும் போதெல்லாம் ஒரு தூணாக மிகுதன் பயணித்தான். போராளிகளுக்கான அரசியல் தெளிவூட்டல்கள், வகுப்புக்கள் என பெரும் பணியை தனதாக்கிக் கொண்டான். ஒவ்வொரு களமுனையாக செல்வதும் அங்கே காவல் வேலிகளாக இருக்கும் போராளிகளுடன் தனித்தனியாகவும், இருவர் அல்லது மூவர் கொண்ட அணிகளாகவும், அல்லது 30 பேர்கொண்ட ஒரு அணியாகவும் தேசியத்தலைவரின் சிந்தனைகள், எதிர்பார்ப்புக்கள், உலக நிகழ்ச்சி நிரல்கள் , சமகால அரசியல் நகர்வுகள் , மக்களின் எதிர்பார்ப்புக்கள் என அறிவார்ந்த தெளிவூட்டல்களைச் செய்வான். அதற்காக அவன் நடக்காத காடுகள் இல்லை. அவனின் பாதம் பதியாத காவலரண்கள் இல்லை. சுற்றிச் சுற்றி தமிழீழ எல்லைக் காவலரண் போராளிகள் அனைவருடனும் நெருங்கி இருந்தான். அவர்களின் தேவைகளை, பிரச்சனைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை உரியவர்களூடாக பெற்றுக் கொடுத்தான் பள்ளிக்கல்விக் காலம் தொட்டு கலை இலக்கியப் பணிகளில் முன்நிற்கும் மிகுதன் மற்றவர்களைக் கவரும் கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் வலம் வந்ததும் அவனின் பலங்களில் ஒன்று. அடிப்படைப் பயிற்சி முகாமில் நடக்கும் வாராந்த கலைநிகழ்வுகளை எடுத்துப் பார்த்தால் கலை இலக்கியப் பணியில் முதன்நிலையாக இருப்பது மிகுதன் என்றால் அது மிகையாகாது. தனது எண்ணங்களை கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் பட்டிமன்றங்கள் மற்றும் நாடகங்களாகவும் வெளிக்கொண்டு வந்து தமிழீழ இலக்கியப் பரப்புக்குள் அவனும் நிமிர்ந்து நின்றான். இவ்வாறான காலத்தில் தமிழீழ அரசின் உத்தியோகபூர்வ நாளிதழான ஈழநாதம் நாளிதழின் பணிக்காக பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களால் அனுப்பப்பட்ட போது எவ் விதமான அடிப்படைக் கணினி அறிவும் அற்ற நிலையில் உள்ளே செல்கிறான். அங்கே பக்கவடிவமைப்புப் பிரிவுக்குள் தன்னை ஈடுபடுத்துகிறான். எதையும் ஆய்ந்து அறியும் ஆற்றல் கொண்ட மிகுந்தனால் அங்கே இருந்த கணனிகளை கையாள்வது என்பது குறுகிய காலத்தில் இலகுவான காரியமாகியது. நெஞ்சிலே விடுதலை வேட்கையும் எதையும் உடனடியாக கற்றுக்கொள்ளும் திறனும் ஒருங்கே கொண்ட மிகுதன் தன் விடா முயற்சியினால் அங்கிருந்த வடிவமைப்பாளர்கள் மற்றும் கணினித் தொழில்நுட்பவியலாளர்களின் உதவி கொண்டு சிறுக சிறுக கணினியில் தன் கரங்களைப் பதித்தான். வடிவமைப்பின் (Graphics Design) பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு மத்தியில் ஈழநாதம் நாளிதழ் பணியகத்தையும் தாண்டி அவனது வடிவமைப்பு பேசப்படுமளவுக்கு தன்னை மேம்படுத்திக் கொண்டான் மிகுதன். ஒரு கட்டத்தில் இங்கிருந்தவர்களுக்கு புது ஆலோசனைகளை வழங்குவது தொடக்கம் கற்றுத் தந்தவர்களைக்கே புதியவற்றைக் கற்றுக் கொடுக்கும் அளவுக்கு தன்னைப் புடம் போட்டான். “ ஈழநாதம் “ நாளிதழ், “வெள்ளிநாதம்” வார சிறப்பிதழ் மட்டுமல்லாது, விடுதலைப்புலிகள் மாதவிதழ், நாவல்கள் என மிகுந்தனின் வடிவமைப்புப் பணி அனைவரையும் வியக்கும் வண்ணம் மேம்பட்டிருந்தது. இவ்வாறான பணிகளினூடாக தன் அரசியல் பயணத்தை தொடர்ந்த மிகுதனை கல்விப்பிரிவால் வெளியிடப்பட்ட மாதவிதழின் வடிவமைப்புத் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கத் தவறவில்லை. இதன் அடுத்த நிலையில் அவனை சமாதானச் செயலகம் உள்வாங்கிக் கொள்கிறது. சர்வதேச நாடுகளின் திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலில் உருவான ரணில் அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த சமாதான உடன்படிக்கைக் காலத்தில் விடுதலைப்புலிகளின் சமாதான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவிருந்த பிரிவான சமாதானச் செயலகத்தில் தன் பணியை விரிவுபடுத்தி புலம்பெயர் நாடுகளுக்கும் அரசியல் பணிகளுக்காக சென்று வந்தான். இந்த நிலையில் எம் தாயகத்தை இயற்கையின் சீற்றமான சுனாமி பேரலை தாக்கி பெரும் இன்னல்களைத் தந்து சென்ற போது அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் கட்டமைப்புப் பணிகளுக்கான வடமராட்சிக்கிழக்குப் பகுதியில் பணியாற்ற அனுப்பப்பட்ட போது அவர்களுக்கான மீள் வாழ்வாதார கட்டுமானங்களை மட்டுமல்லாது அவர்களின் உளவியல் சார்ந்த தேவைகளையும் நிறைவேற்றுவதில் வெற்றி கண்டு பாராட்டுதல்களைப் பெற்றிருந்தான். இது நடந்து கொண்டிருந்த நேரம் திட்டமிட்டு எம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட சமாதான உடன்படிக்கை முறிந்து சண்டை தொடங்கிய காலத்தில் சமாதானச் செயலகத்தில் இருந்து பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களால் அவரது பிரத்தியேகப் பணிகளுக்காக அழைக்கப்படுகிறான். அவரது பிரத்தியேக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அதே வேளையிலும் சண்டைக் களங்களுக்குச் சென்று வந்தான் மிகுதன். போராளிகளோடு அரசியல் விழிப்பு செயற்பாடுகளை கதைத்தான். அவ்வாறு பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு நாளில் தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனை இலக்கு வைத்து இலங்கை வான்படையின் வான்கலங்கள் கிளிநொச்சி நகரில் இருந்த அவரது முகாமைத் தாக்குகின்றன. தமிழீழ விடியலை தன் நெஞ்சிலே சுமந்து தமிழீழக் களங்கள் எல்லாம் அரசியல்பணிக்காக நடந்து திரிந்த பெரு வேங்கையான மிகுதன் தான் நேசித்த மக்களுக்காக தான் நேசித்த தன் பொறுப்பாளரை காத்துவிடும் துடிப்போடு முயன்றாலும் அவருடனும் தன் தோழர்களுடனும் வான்படையின் தாக்குதலில் விழி மூடி விதையாகிப் போனான். இ.இ.கவிமகன் 02.11.2018 - Tamil Eelam Police Stations- Jaffna - before 1996 - தமிழீழ காவல் பணிமனை(5).png
Important Information
By using this site, you agree to our Terms of Use.