கொவிட்-19 தடுப்புமருந்து சோதனையில் நம்பிக்கையளிக்கும் ஆரம்ப முடிவுகள்
சிறிய எண்ணிக்கையிலான தன்னார்வலர்களில் கொவிட்-19-க்கு எதிரான சோதனை தடுப்பு மருந்து முதலாவது சிகிச்சை சோதனைகளில் இருந்து நம்பிக்கை அளிக்கும் ஆரம்ப முடிவுகளை ஐக்கிய அமெரிக்க உயிரியல் நிறுவனமாக மொடெர்னா நேற்று பதிவுசெய்துள்ளது.
கொவிட்-19-இலிருந்து குணமடைந்தோரிலிருந்து அவதானிக்கப்பட்ட நோயெதிர்ப்பு பதிலளிப்பொன்றை தடுப்பு மருந்து mRNA-1273 பெற்ற எண்மரிடம் இத்தடுப்புமருந்து வெளிப்படுத்தியதாக மொடெர்னா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த செய்தியை வரவேற்றுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவர்கள் என்ன முடியுமென்பது நம்பமுடியாதெனவும், தான் முடிவுகளைப் பார்வையிட்டதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை எலியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தடுப்புமருந்தானது அதன் நுரையீரல்களில் கொவிட்-19 பிரதியிடுவதை தடுத்ததாக மொடெர்னா தெரிவித்துள்ளது.
குறித்த தடுப்பு மருந்து தயாரிப்பில் ஏறத்தாழ அரை பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் முதலிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடுத்தாண்டு ஜனவரி மாதத்ததுக்குள் 300 மில்லியன் தடுப்புமருந்துகளை ஐக்கிய அமெரிக்க சனத்தொகையைப் பாதுகாப்பதற்காக வேண்டுகின்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது நிர்வாகத்தின் மூலமாக ஜோன்சன் அன்ட் ஜோன்சன், பிரான்ஸின் சனோஃபிக்கு நிதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வழமையாக தடுப்புமருந்தொன்று கண்டுபிடிக்க ஆண்டுக்கணக்காகும் என்ற நிலையில், கொவிட்19-ஆலான அதிக உயிரிழப்புகள் இதை விரைவாக்கியுள்ளது.
http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/கவட-19-தடபபமரநத-சதனயல-நமபககயளககம-ஆரமப-மடவகள/50-250503