Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ampanai

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    10942
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by ampanai

  1. கீழடி 6ம் கட்ட அகழாய்வு: முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு Image caption கோப்புப் படம் கீழடி பகுதியில் நடந்துவரும் ஆறாம் கட்ட அகழாய்வில் சில முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கீழடியை ஒட்டியுள்ள கொந்தகை பகுதியில் நடந்துவரும் இந்த அகழாய்வில் பல மணிகள், பானை ஒடுகளும் கிடைத்துள்ளன. மதுரைக்கு அருகில் உள்ள தொல்லியல் பகுதியான கீழடியில் ஆறாவது கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்ரவரி 19ஆம் தேதியன்று துவங்கப்பட்டன. இந்த நிலையில், கொந்தகை பகுதியில் நடந்துவரும் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், ஈமச் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் மண்ணாலான பாத்திரங்கள், மணிகள் ஆகியவையும் கிடைத்து வருகின்றன. "கீழடி தொல்லியல் தொகுதியில் இறந்தவர்களைப் புதைக்கும் இடமாக கொந்தகை இருந்திருக்கிறது. இந்தப் பகுதியில் மேல்மட்டத்தைச் சுத்தம்செய்து ஆய்வைத் துவங்கிய நிலையில் சில முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. அவை இன்னும் முழுமையாகத் தோண்டி எடுக்கப்படவில்லை" என மாநில தொல்லியல் துறையின் துணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்தார். இங்கு கிடைக்கும் முதுமக்கள் தாழிகள் இரண்டு விதங்களில் இருக்கலாம் என தொல்லியல் துறை எதிர்பார்க்கிறது. ஏற்கனவே ஓரிடத்தில் ஈமச்சடங்குகள் செய்யப்பட்ட மனிதர்களின் எச்சங்கள் சேகரிக்கப்பட்டு முதுமக்கள் தாழியில் வைத்து திரும்பவும் புதைக்கப்படுவது. இவை இரண்டாம் நிலை முதுமக்கள் தாழி புதைப்புகள் எனப்படுகின்றன. இது தவிர, ஒருவர் இறந்தவுடனே அவருடைய சடலத்துடன் அவருக்கான பொருட்களை உள்ளே வைத்து புதைக்கப்படுவதும் இப்பகுதியில் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தற்போது கிடைத்திருக்கும் முதுமக்கள் தாழியை வெளியே எடுத்துப் பார்க்கும்போதுதான், அவை எந்த வகையிலானவை என்பது தெரியவரும். தாழிகளில் உள்ள எலும்புகளின் நிலை, தாழியின் உள்ளே உள்ள பொருட்களை வைத்து இது முடிவுசெய்யப்படும். இங்கிருந்து கிடைக்கும் எலும்புகளை டிஎன்ஏ ஆய்வுக்கு அனுப்பவும் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. மதுரை நகரிலிருந்து சுமார் 13 கி.மீ. தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் ஏற்கனவே நடந்த அகழாய்வுகளில் பழங்கால கட்டடத் தொகுதிகளும் தொல்பொருட்களும் கிடைத்திருக்கும் நிலையில், ஆறாவது கட்ட அகழாய்வை மாநில தொல்லியல் துறை தற்போது நடத்திவருகிறது. இந்த நிலையில் ஆறாம் கட்ட அகழாய்வை கீழடியிலும் அதற்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் நடத்துவதற்கு மாநில தொல்லியல் துறை முடிவுசெய்தது. இந்த இடங்களில் தரையை ஊடுருவிப் பார்க்கும் ரேடார், ஆளில்லா விமானம் ஆகியவற்றைப் பயன்படுத்தி சரியான இடங்கள் அடையாளம் காணப்பட்டன. இவற்றில் கொந்தகை ஒரு புதைமேடு என கருதப்படுகிறது. கீழடி பகுதியில் வாழ்ந்தவர்கள் இங்குதான் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மணலூர், அகரம் ஆகியவை மக்கள் வாழ்ந்த இடங்களாகக் கருதப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக 120 ஏக்கர் பரப்பளவில் 50 லட்ச ரூபாய் செலவில் இந்த அகழாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2014ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டுவரை முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை மத்தியத் தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 7818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதற்குப் பிறகு இங்கு ஆய்வு நடத்த மத்திய அரசு முன்வரவில்லை. இதையடுத்து அடுத்தகட்ட அகழாய்வுகளை தமிழக அரசின் தொல்லியல் துறையே நடத்த முன்வந்தது. 2018-19ல் 55 லட்ச ரூபாய் செலவில் நான்காவது கட்ட அகழாய்வை மாநில தொல்லியல் துறை நடத்தியது. இதில் 5820 தொல்பொருட்களும் பழங்காலக் கட்டடத் தொகுதிகளும் வெளிப்பட்டன. தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய 56 பானை ஓடுகளும் குறியீடுகள் பொறிக்கப்பட்ட 1001 பானை ஓடுகளும் கிடைத்தன. அதற்குப் பிறகு 47 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஐந்தாம் கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வில் சரியான இடங்களைத் தேர்வுசெய்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதிலும் செங்கல் கட்டுமானங்கள், சுருள் வடிவிலான குழாய்கள் கண்டெடுக்கப்பட்டன. 900 தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. படத்தின் காப்புரிமை Getty Images இந்த நிலையில், நான்காம்கட்ட அகழாய்வின் முடிவுகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நான்காம் கட்ட ஆய்வில் கிடைத்த கரிமத்தை பீட்டா பகுப்பாய்வு ஆய்வகத்தில் பரிசோதித்தபோது, அது 2600 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்தது. இந்த ஆய்வின் முடிவுகள், மாநிலத்தில் தொல்லியல் ஆய்வுகள் குறித்த கவனத்தை ஏற்படுத்தியது. தற்போது நடந்துவரும் ஆறாம்கட்ட ஆய்வில், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உட்பட இந்தியாவில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களும் சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும் இந்த ஆய்வில் பங்கேற்கின்றன. இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமணல் ஆகிய இடங்களிலும் அகழாய்வுகள் நடத்தப்படவிருக்கின்றன. மேலும், புதிய கற்கால இடங்களைக் கண்டறிய வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய இடங்களில் தொல்லியல் கள ஆய்வை மாநில அரசு நடத்தவுள்ளது. https://www.bbc.com/tamil/india-51643966
  2. until

    மாமனிதருக்கு நினைவு அஞ்சலிகள். அவரின் கனவுகள் ஒருநாள் நனவாகும்.
  3. "Jude கேட்டுக் கொண்டபடி கற்பகதரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. " புதிய பெயருடன் புதிய பொலிவுடன் புதுமைகளை எதிர்பார்க்கிறேன் 🙏
  4. “என்னுடைய கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்படும் வரைக்கும் எனக்கு என்ன நடந்தாலும் பச்சை தண்ணி கூட குடிக்க சொல்லி வற்புறுத்தகூடாது” *********************************************** “அம்மா நான் வந்ததை யாரோ காட்டி குடுத்துட்டாங்க போல, ஆமி ரவுண்டப் பண்ணுது, உண்ட கையாள ஒரு வாய் சோறு சாப்புட எனக்கு குடுத்து வைக்கல அம்மா, என்னை மன்னிச்சுடு , நான் குப்பி கடிக்குரன் ” *********************************************** “இதுக்கு மேல என்னால ஓட ஏலாது , நீங்க உயிரோட இருந்தா தான் போராட்டத்தை கொண்டு செல்ல முடியும் . என்னை சுட்டு போட்டு நீங்க பத்திரமா போயிடுங்க” *********************************************** “இலக்குக்கு கிட்ட வந்துடன் , கொஞ்சத்தில கப்பல் வெடிச்சுடும், புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்” *********************************************** “எங்கட பாயின்ட் ல நான் மட்டும் தான் மிஞ்சி இருக்குறன், என்னை சுத்தி நூறுக்கு மேல ஆமி நிக்குது, கிட்டத்தட்ட 30 பேரை சுட்டுடன், ரைபிளில கடைசி ரவை இருக்குற வரைக்கும் ஒருத்தனையும் கிட்ட விடமாட்டன் , அதுக்கு பிறகு குப்பி கடிச்சுடுவன் ” *********************************************** “மச்சான் திடிரெண்டு நோக் கழண்டுட்டு, எல்லாரும் ஓடுங்கடா , சண்டைல போகாத உயிர் சோதனைல தான் போகுது எண்டுறது தான் எனக்கு ஒரே ஒரு கவலை, நான் வெடிக்க வைக்கிறன்” *********************************************** “எங்களை ஆமி சுத்தி வந்துட்டான் , என்னால அவங்கள பார்க்க முடியுது, இனி ஒண்டும் செய்ய ஏலாது , எங்களை பற்றி யோசிக்க வேண்டாம். இந்த வாசிப்புக்கு மோட்டரை போடுங்கோ ” *********************************************** இவை எல்லாம் வாழ்வின் அடுத்த நொடி மரணம் தான் என்று அறிந்த பின்பும், மாவீரர்களின் வாயால் ஒரு வார்த்தை புரளாமல் வெளி வந்து கேட்பவர் மனதை ரணமாய் சுட்ட பொழுதுகள். மாவீரர்களின் மகோன்னதமான வீரமும் அவர்களின் விலை போகாத குணமும் ஒருங்கே அமைந்த அவர்களின் மரணம் கூட புனிதமானது. அந்த புனிதத்தின் மேலான அவர்களின் இலட்சிய நெருப்பு எம் இனத்தின் என்றைக்கும் மறக்க கூடாத பொறுப்பு. சாவின் விளிம்பிலும் சத்தியம் தவறாத வீர புதல்வர்களே! விழி மூடி தூங்கும் வேங்கைகளே! உம் ஆற்றல் தாரும். வானம் வீழ்த்திய உம் வல்லமை கொடும். செங்களம் தன்னில் வெஞ்சமர் ஆடிய வீரம் கொடும். #மீள்_2018
  5. தாயக விடுதலை கனவை சுமந்து விடுதலை என்ற இலட்சியத்திற்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !
  6. ஒரு பூசணிக்காய் தோட்டம் ஆரம்பிக்கலாம் என கடுமையாக யோசிக்கின்றேன் 👹
  7. கீழடி அகழாய்வில் கிடைத்த எலும்புகள்! - ஆய்வுசெய்ய வரும் தனி அதிகாரிகள் கீழடியில் தற்போது கிடைத்த விலங்குகளின் எலும்புகளை ஆய்வு செய்ய, அதற்கெனத் தனி ஆய்வாளர்களை நியமித்து ஆய்வு செய்ய உள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கீழடியில், கடந்த 2015 -ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு, ஆய்வைத் தொடங்கியது. ஆய்வு மாதிரிகளைக் கரிமவேதியியல் சோதனைக்கு உட்படுத்தியதில், கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என உறுதிப்படுத்தப்பட்டன. அதற்குப்பின், அடுத்தடுத்த ஆய்வுப் பணிகள் முடிவடைந்து, தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இது, கடந்த ஜூன் 13 -ம் தேதி முதல் நடைபெற்றுவரும் நிலையில், கடந்த ஜூன் 25 -ம் தேதி, மனிதர்கள் வாழ்ந்த குடியிருப்புகளில் உள்ள இரட்டைச் சுவர்கள் மற்றும் நேர் சுவர் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் ஒரு சுற்றுசுவர், 5 அடி உயரம் கொண்ட உறைகிணறு மற்றும் நேர் சுவர் ஆகிய தொன்மையான சுவர்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், மிகவும் தொன்மையான சுடுமண்னாலான பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள், பானைகள், பாசிமணிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொருள்கள் கிடைத்தன. தற்போது, விலங்குகள் இருந்ததற்கான சான்றாக, சிறிய எலும்புத் துண்டுகள் கிடைத்துள்ளன. இதனைத் தனி ஆய்வாளர்கள் சேகரித்து ஆய்வு செய்ய உள்ளனர். இந்த எலும்புகள், மனிதன் வளர்த்த செல்லப் பிராணியாகவோ அல்லது மனிதன் வேட்டையாடிய விலங்குகளாகவோ இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். எனினும் முழு ஆய்வுக்குப் பிறகுதான் எதையும் உறுதியாகச் சொல்ல முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். விலங்குகளின் எலும்புகளை ஆய்வுசெய்ய, சென்னையிலிருந்து சிறப்பு ஆய்வாளர்கள் திங்கள் அன்று வர உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. https://www.vikatan.com/news/tamilnadu/in-keezhadi-bones-of-animals-found
  8. கீழடி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைச் சுவர் சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் 2018-ம் ஆண்டு வரை 4 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றது. அப்போது, சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தொன்மையான மனிதர்களின் கலாச்சாரம், பழக்க வழக்கங்களை கொண்ட அரிய வகை பொருட்களும் அவர்கள் பயன்படுத்திய தங்க ஆபரணங்கள், மண்பாண்ட பொருட்கள், மனித உடல், சுடுமண் உருவம், சுடுமண் மனித முகம், தமிழ் எழுத்து பொறித்த பானை ஓடு, சுடுமண் காதணி உள்ளிட்ட 13,638 தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை கடந்த ஜூன் 13-ம் தேதி தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. 57 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 5 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வரும் இந்த அகழ்வாராய்ச்சியின் போது தொன்மையான மனிதர்கள் வாழ்ந்த குடியிருப்புக்கான இரட்டை சுவர்களும், நெல்மணிகள் சேமித்து வைக்கும் மண் பானைகள், உணவு சமைக்க பயன்படுத்தும் மண்பாண்ட பொருட்கள், மண் ஓடுகள் உள்ளிட்ட ஏராளமான தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. கண்டறியப்பட்ட இரட்டை சுவர்களில் மூன்று அடி நீளம், ஒரு அடி அகலம் 10 செ.மீ உயரம் கொண்ட செங்கற்கள் இருந்தன. இருப்பினும் இந்த சுவர், கட்டிடத்தின் மேற்பகுதியா அல்லது என்பதை தற்போது கண்டறிய முயவில்லை என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை வெளியூர்களிலிருந்து வந்த பொதுமக்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர். http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/66205-keeladi-excavation-continue-for-the-5th-phase.html
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.