Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32973
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. 230 மில்லியன் செலவழிச்சு.. உக்கிப் போன உக்ரைன் ஆயுதங்களுக்கு ராங்கி.. பல்குழல் பீரங்கி உட்பட்ட கனரக வாகனங்களுக்கு பெயின்ட் அடிச்சு.. சும்மா கிடக்கிற இராணுவத்துக்கு புதுச் சீருடைகளும்.. நவீன ஆயுதங்களும் வழங்கி உள்ளதை வடிவு பாக்கிறதை விட்டிட்டு.. புறக்கணிக்கிறதாமோ. ஒரு பக்கம் மின்வெட்டு. இன்னொரு பக்கம் இப்படியான நிகழ்வுகளின் சோடிப்புக்கு.. மின்சார சீரழிவு. அங்கால சிங்கள மக்கள் தெருவில சந்திக்கு சந்தி பிச்சை எடுப்பது சிங்கள இராணுவத்தின் கண்களில் கூட படவில்லை என்பது மகா கொடுமை.
  2. உலகத்தில பிரிந்து செல்ல விரும்பும் மக்களிடம் தான் கருத்துக் கேப்பாங்கள்.. பிரிந்து செல்ல விருப்பமோ இல்லையோன்னு. கிழக்கு திமோர்.. கொசாவோ.. தென் சூடான்.. ஸ்காட்லாந்து.. கியூபெக்.. என்று அண்மைய தசாப்தப் பட்டியல் நீளும். ஆனால் சொறீலங்காவில் உள்ளவை மட்டும் தான்.. பிரிந்து செல்ல வேண்டிய அவசியமற்றவையிடம்.. பிரிந்து செல்ல மற்றவர்களை அனுமதிப்பதா இல்லையான்னு வாக்குக் கேட்கிறது. அதிலும் அடக்கி ஆளும் எண்ணம் தான். இவங்கள் எல்லாம் சனநாயகம் பேசுறதும் அதை உலகம் அங்கீகரிப்பதும் தான் மகா கொடுமை.
  3. தமிழரின் தார்மீக மான தமிழீழக் கோரிக்கையை நிராகரிக்கும் இவர்கள்.. அண்மையில் சூடானில் இருந்து பிரிந்து தனிநாடான தென் சூடானுக்கு பாப்பரசர் விஜயம் செய்திருப்பதை கண்டிப்பினமாமோ... பதவி கிழிஞ்சிடும். Pope and archbishop on historic peace mission to South Sudan https://www.bbc.co.uk/news/world-africa-64500535
  4. சதி. கொழும்பில் தாங்கள் வெள்ளையும் சுள்ளையுமாக அலையனுன்னா.. சிங்களவர்களிடம் நல்ல பெயர் வாங்கனுன்னா.. தமிழர்களுக்கு எதிராகப் பேசனும்.. என்ற அடிமட்ட புத்தியோடு வாழ்பவர்கள் தான் தென்னிலங்கை வாழ் ஆயர்களும்.. போராயர்களும். இதில் முன்னாள் மட்டக்களப்பு பேராயரும் அடக்கம். ஜோசப் பரராஜசிங்கம் ஐயா அவர்கள்.. தேவாலயத்தில் வைச்சு சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனமோ.. விசாரணையோ கோராதவர்கள்.. அவர் ஒரு மக்கள் பிரதிநிதி என்ற கணிப்பைக் கூட வழங்கத் தவறியவர்கள்...இன்று சர்வதேச கவனம் பெற்றுவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக 2019 தாக்குதலுக்கு முன்னுரிமை கொடுத்து தங்களை மனிதாபிமானிகள் போலக் காட்டிக்கொள்ள போலி வேடம் போடுகின்றனர் அவ்வளவே. அல்லைப்பிட்டியில்.. ஈபிடிபி மற்றும் கடற்படையால்.. கொல்லப்பட்ட பாதிரியாருக்கு இல்லாத நீதி.. முள்ளிவாய்க்காலின் பின் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட பாதிரியாருக்கு இல்லாத நீதி.. இப்படி எத்தனையோ சம்பவங்கள். 2019 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் சார்ப்பாக இவர்கள் வடிக்கும் கண்ணீரை.. நீலிக்கண்ணீராகத்தான் காட்டுது.
  5. என்னப்பா.. ரஷ்சியாவுக்க புகுந்து கண்ணில விரலை விட்டு ஆட்டிறவைக்கு.. தங்க நாட்டுக்கு மேலால பலூன்.. பலூன்.. பலூன் பறந்தது கூடத் தெரியல்லையாம். யாரோ தெருவால போறவை சொல்லித்தான் தெரிஞ்சிருக்குது. இதில விண்வெளில பூமியை பாதுகாக்க கண்காணிச்சிட்டே இருக்கினமாம்.. நாசா பெருமிதம். கொடுமைடா சாமி. கெட்டிக்காரன் புளுகு........... இன்னுமா சுட்டு வீழ்த்தவில்லை...??! படங்கள்: https://www.bbc.co.uk/news/world-64514120
  6. குத்தியர் முந்தி சந்திக்கு சந்தி இராணுவக் காவலரை வைச்சிட்டு அதை எடுக்கிறன் என்று காட்டிக்கொடுப்பு- பின் அரசியல் செய்தார்.. பிறகு கடலுக்க நண்ட பனிக்குந்திகளை எடுக்கிறன் என்ற அரசியல் செய்தார்.. இப்ப ஆக்கிரமிப்பு இராணுவத்தின் செல்லப்பிள்ளையாக இருந்து கொண்டு.. காணி விடுவிப்பு அரசியல் செய்கிறார். இதையே புலிகள் பேச்சுக்களின் போது.. குறிப்பாக உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றலும்..மக்களின் காணிகளை விடுவிப்பதும் முதன்மை என்ற போது.. புலிகளை நையாண்டி பண்ணினவை.. இப்ப புலிகள் இல்லாத 14 வருசமா காணி விடுவிப்பு அரசியல் தான் செய்து கிட்டு இருக்கினம். ஆக இவங்களுக்கு ஆக்கிரமிப்பு இராணுவம் எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் உணர்ந்தால் சரி. என்ன உணர்ந்திட்டும்.. உந்த ஊத்தைக் கூட்டத்துக்கு வாக்குப் போடிற அடிமுட்டாள்கள் இருக்கும் வரை.. தமிழருக்கு ஒன்றுமே விமோசனமில்லை.
  7. இது தெரியாதா.. தமிழ் தேசியம் என்ற சொல்லையே இல்லாமல் உடைப்பது தான். இப்ப தமிழ் தேசிய அரசியல் போய்... ஊரில ஊடகக்காரர்கள்.. தமிழர் அரசியல் என்று தான் சொல்லினம். ஏன்னா.. தமிழருக்கு தேசியம் தேசம் இருக்கப்படாது என்பதில் சிங்களவர்களை விட.. ஹிந்திய விசுவாசி.. சிங்கள விசுவாசித் தமிழர்களும் கண்ணும் கருத்துமா இருக்கினம். அதுதான் அவையிட இலக்கு இப்ப.
  8. எப்படிச் சொன்னாலும்.. தமிழரை நாய் என்று சொல்லிடாதேங்க. நாய் ஒன்றை ஒன்று பார்த்துக் குலைச்சாலும் தெருநாய் ஆச்சென்றால்.. குட்டை விழுந்தாலும் கூடிக் கிடக்கும். ஆனால்.. தமிழனிடம் அந்த ஒற்றுமையைக் கூட காண முடியாது. அதிலும் சம் சும் மாவை கும்பல் இருக்கே அது இருக்கிறதையும் கெடுக்கிற ஒரு புதியவகை உயிரினம்.
  9. ஒன்றுமே சரிவராதென்று... தமிழீழப் பிரகடனம் செய்ததை மறந்திட்டீங்கள். உலகில் தமிழீழத்தை பிரகடனம் செய்தது வரதராஜப் பெருமாள் தலைமையிலான ஈபிஆர் எல் எவ் தான் என்றால் அது தவறில்லை. ஆனால்.. தவறான வழியில் செய்ததால்.. அது இவர்கள் அடிவருடிய.. ஹிந்தியாவால் கூட காப்பற்றப்படவில்லை. நீடிக்கவில்லை.
  10. எனி சிங்கள - தமிழ் கலவரம் ஒன்று வருமானால்... சிங்களவர்கள் பிச்சை எடுக்கும் நிலையே வரும். அதுவே அவர்கள் தாங்களாக தேடிக் கொண்ட அழிவாக அமையும். ஒருவேளை தமிழர்களின் சொத்துக்களை சூறையாடி செல்வச் செழிப்போடு வாழலாம்.. என்று கனவு காண்பார்களாக இருந்தால்.. அது சாத்தியப்படாது.
  11. நீங்களே பிளவுகளை தூண்டிவிட்டுட்டு.. பிறர் பிளவை ஏற்படுத்துவதாக பாசாங்கு செய்வது அசிங்கம். உங்களுக்குள் சொந்த இனத்திற்காக ஒற்றுமையாக இருக்க முடியவில்லை.. சுயநல அரசியல் ஆதாயம் தான் முக்கியம் என்றிருக்கும் நிலையில்... ஒருவர் மற்றவரை சாட்டுச் சொல்லி உங்களை நீங்களே காட்டிக்கொடுக்காதீர்கள். மக்கள் உங்களை எல்லாம் பார்த்துக் காறித்துப்பும் நிலையில் இருக்கிறார்கள்.
  12. இவை ஏற்கச் சொன்னாலும்.. தமிழ் மக்கள் வடக்குக் கிழக்கு இணைந்த பூர்வீக தாயகத்தில் அவர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட கூட்டாட்சிக்கு மாற்றீடாக 13 யோ.. 13 + யோ.. 13 ஏ யையோ ஏற்கத் தயாரில்லை. எனவே தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு விரோதமான வகையில் செயற்பட்டு.. சொறீலங்கா அரசுக்கு எல்லா இராணுவ வழிமுறைகளிலும் உதவி செய்து தமிழ் மக்களின் தேச அரசியல் சமூக பொருண்மிய விடுதலைக்கு முட்டுக்கட்டையிட்ட மேற்குலகும்.. ஹிந்தியாவும்.. அடங்கிய சர்வதேசம் தான்.. இப்போ தீர்வைப் பெற்றுக் கொடுத்தாகனும். அவர்களுக்குள்ள கடப்பாட்டை எனியும் சாக்குப் போக்குச் சொல்லி தட்டிக்கழிக்க முடியாது. ஏனெனில்.. விடுதலைப் புலிகளை அழிப்பதனூடாகவே தான் 13 + அமுல்படுத்த நாம் உதவுவோம் என்ற உறுதிமொழியை சிங்களத் தலைமைகள் ஹிந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் அளித்திருந்த நிலையில்.. அதையே மீறும் வகையில் அவர்கள் செயற்படும் நிலையில்.. தமிழ் மக்களின் விருப்பத் தீர்வை பெற்றுக் கொடுப்பதை தவிர சர்வதேசத்திற்கு மாற்று வழிக்கு இடமில்லை.
  13. மேகன் ஒரு கூத்தாடி. ஹரிப்பிள்ளையர் அதின்ர ஆண்டத்துக்கு ஆடுறார். அப்பர் ஹமீலான்ட ஆட்டத்துக்கு ஆடின கணக்கா. மேகனுக்கு தேவை காசு. இப்ப ஹரிட புத்தகமே மில்லியன் கணக்கு பேரத்தில வாங்கப்பட்டிருக்குது. எல்லாம் வியாபாரம். கூத்தாடிய கட்டினால்.. இதுதான் நிகழும். ஒருவேளை இதை தான் வில்லியம் சொல்லி தம்பியை தட்டி வைக்க நினைச்சிருப்பாரோ..??! ஏனெனில் ஹரி எப்பவுமே வில்லியத்துக்கு அவசியமான தம்பியாக இருக்கனுன்னே டயானா விரும்பி இருக்கிறார். முடிக்குரியவன் வில்லியம் என்ற வகையில்.
  14. கோத்தா கோட்டை அடியோட.. துண்டக்காணம் துணியக்காணம் என்று ஓடின ஜீரோ. என்ன 25 நாடுகள் சேர்ந்து அடிக்கப் போயினம் என்ற தைரியத்தில்.. இறுதி யுத்த காலத்தில்.. பாதுகாப்புச் செயலராக இருத்தி வைக்கப்பட்டு.. ஹீரோ ஆக்கப்பட்டார். இப்ப மீண்டும் ஜீரோ ஆகிட்டார். அவ்வளவும் தான்.
  15. மேகனும்.. ஹமீலாவும் அரச குடும்பத்தை பலிவாங்கனுன்னே வந்திருக்காய்ங்க. நடந்துக்கிறது எல்லாம் அப்படி. அப்பன் சார்ள்ஸும்.. மகன் ஹரியும் செய்த தவறுகளால்... அண்ணன் தம்பி சண்டை கூட.. பப்பராசிகளுக்கு தீனி போடுவதாகிவிட்டது. என்ன பொம்பிளையள் என்றால் ஒளிச்சிருந்து குளிக்கிற படம் எடுத்துப் பிழைப்பாங்கள். இது ஆம்பிளையள் ஆச்சு.. ஆளையாள் கொழுவல் போட வைச்சு பிழைக்கிறாங்கள் அவ்வளவும் தான்.
  16. கறுப்பும் பணம்.. வெள்ளைப் பணம்.. கமிசன்... தரகு.. கொலை பிறகு அதைக் கண்டுபிடிக்க பொலிஸ்.. சட்டத்தரணி.. நீதிபதி... பிறகு கஞ்சா பதுக்கலை தடுக்க இராணுவம்.. குறிப்பாக வடக்குக் கிழக்கில்... அப்புறம்.. கஞ்சா புகைப்பதால் வரும்.. வருத்தங்கள்.. அதற்கு டிஸ்பென்சரி.. வைத்தியசாலை.. தாதி.. மருந்தகம்.. மருத்துவர்.. இஸ்தியாதி இஸ்தியாதி.. தொழில்கள் வரும்.. வளரும். ஏன் ஒரு நாடே வல்லரசாகும். அது கஞ்சாவால்.. வல்லரசான சிங்கள தேசம்.. சொறீலங்காவா இருக்கும். ஆப்கானிஸ்தானும் தலிபான்களும் எங்க.. நாங்க எங்க. ஆ ஆ
  17. புலம்பெயர் தமிழனின் வெளிநாட்டு வாழ்வு எப்படி அமையுதோ இல்லையோ.. புலத்தில் (தாயகத்தில்) நிலைமை மோசமாகப் போகுது. ஏனெனில்.. பயிர் செய்கை செய்யப்படாத தரிசுக் காணிகள் எல்லாம் சிங்கள அரச மயமாகப் போகிறது. ஏலவே.. இராணுவ முகாம்கள்.. உயர் பாதுகாப்பு வலயங்கள்.. பெளத்த பாரம்பரிய நிலங்கள்.. வனத்திணைக்களக் காணி.. தொல்பொருள் திணைக்களக் காணி.. மாவீரர் துயிலும் இல்லங்கள்.. சிங்கள.. முஸ்லிம் மீள் குடியேற்ற நிலங்கள்.. திட்டமிட்ட சிங்களக் குடியேற்ற நிலங்கள்.. என்று புடிச்ச காணிகள் போக.. இப்படியும் காணி பறிபோனால்.. புலம்பெயர் தமிழர்கள் நிரந்தர ஏதிலிகளாகவே மாய வேண்டியது தான். இதில் அந்தந்த நாட்டு கடவுச் சீட்டு வைச்சிருக்கிறம் என்ற வெட்டிப் பெருமையோடு போய் சேர வேண்டியான்.
  18. அமெரிக்கன் மட்டும்.. என்னவாம். இந்தா கப்பல் கொண்டு வாறன் என்றிட்டு.. முள்ளிவாய்க்காலில் அப்படியே வைச்சு காவு கொண்டுட்டானே. ரஷ்சியா ஒரு பரந்த தேசம். அவன் தேவையில்லாமல்.. தனது இராணுவ வளங்களை.. இதர பொருண்மிய வளங்களை தேசம் செய்யமாட்டான். அமெரிக்கன் அப்படியல்ல. அவனுக்கு அடுத்தவனிடம் இருந்து சுரண்டிக்கிட்டால் தான் வாழ்வு. அதனால் அவன் எங்கும் நுழையவே முயல்வான். ரஷ்சியா கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தான் செல்வாக்குச் செய்யும். குறிப்பாக சிரியாவை உதாரணமாகக் கொள்ளலாம். இந்த நேட்டோவை சிரியாவில் முழுமையாக தோற்கடித்தது ரஷ்சியாதான். அதுவும் துருக்கியோடு சேர்த்து. காரணம்.. அங்குள்ள ஒரெயொரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ரஷ்சிய கப்பற்படைதளம் காரணமாகவும்.. சிரிய - ரஷ்சிய நட்புறவு காரணமாகவும். சதாம் குசைன் உண்மையில் ஈரான் - ஈராக் போரில் அமெரிக்காவின் பக்கம் நின்றவர். கடைசியில்.. அமெரிக்கனே அவர் கழுத்தை அறுத்திட்டான். கடாபியும் ஒரு காலத்தில் மேற்குச் சார்ந்து நின்று ஏமாந்தவர். ஆனால் சிரியா அப்படியல்ல.. அது எப்பவுமே ரஷ்சியாவை நண்பனாகப் பார்த்த நாடு. தனது மண்ணில் அதற்கு தளமமைக்கக் கொடுத்து இன்று வரை இஸ்ரேல்.. மேற்கு என்று அடிவாங்கிக் கொண்டிருக்கும் நாடு. இருந்தாலும் ரஷ்சியாவின் ஆதரவால்.. நேட்டோ.. மற்றும் இஸ்ரேலின் அனைத்து நோக்கங்களையும் சிதறடித்து நிமிர்ந்து நிற்கும் நாடு. ஈழப் போராட்டத்தின் ஆரம்பம் போன திசை சரியானது. ஆனால் பின்னர் மேற்குலகையும் அமெரிக்காவையும் மட்டும் நேச சக்தியாகக் கருத முற்பட்டதன் விளைவு.. பேரழிவு. எம்மவர்கள் செய்த தவறு.. மேற்கு மற்றும் ஹிந்தியாவை சார்ந்து மட்டும் நின்றமை அல்லது அவர்களுக்கு மட்டும் உண்மையாக இருக்க முனைந்தமை. அதனால் தான் இலகுவாக இவர்களால் கூட்டுச் சேர்ந்து அழிக்கப்பட்டார்கள். எம்மவர்கள் மேற்கை சாரக் காரணம்.. புலம்பெயர் வாழ்வும்.. பொருண்மியமும்.. அதில் போராட்டத்திற்கான பொருண்மியமும் அடங்கும். அதுவே அவர்களுக்கு அழிவாகவும் அமைந்தது.
  19. அமெரிக்க கெட்டிக்காரன் புளுகு கொரானாவோட போச்சு. அமெரிக்கன் பல மில்லியன் பேரை கொரோனாவுக்கு பலி கொடுத்ததும்.. அதனை மறைக்க முடியாமல் தவிச்சதும்.. இப்படி ஒரு முடிவுக்கு வரக்காரணமாக இருக்கலாம். அமெரிக்கன் மனிசனே இல்லை. செவ்விந்தியர்களைப் பூண்டோடு அழிச்சவங்களுக்கு.. சொந்த மக்களை உரமாக்கி அதில் வாழ ஏன் மனசு வராது. இதில மனித உரிமைகள் குறித்த பிம்பம் வேறு. மனிதன் ஒரு சிறப்பு விலங்கு என்பது போய் மனிதனும் ஒரு விலங்கு என்றாக்கிட்டான் அமெரிக்கன். எனி ஒரு தொற்று நோய் வந்தால்.. அப்படியே குப்பைக்குள் போட்டு.. நிலத்தடிக்கு கடாசிடுவாங்கள். பெட்டி.. கிடங்கு செலவு இல்லை. கள்ளமும் புடிபடாது.
  20. சொல்லிப் போட்டு தலைவரை தூக்கி உள்ள வைச்சது. உப்புச் சப்பில்லாத என்றுமே இணைக்க முடியாத வகையில்.. வடக்குக் கிழக்கு.. மாகாண சபையில் கையெழுத்துப் போட்டது. நீங்கள் இன்னும் நிறைய வாசிக்க வேண்டும்.. 1983 இல் இருந்து 90 வரை ஹிந்தியா செய்தவற்றை. அப்பதான் அவங்களும் அமெரிக்கனும் செய்த துரோகங்கள் தெரிய வரும்.
  21. ராஜீவுக்கு அமெரிக்காவுக்கும் என்ன தொடர்ப்பு..??! அப்படி என்றால்.. காந்தியை கொன்றவர்களுக்கு தடை போட்டாச்சா.. இந்திரா காந்தியை கொன்றவர்களுக்கு தடைபோட்டாச்சா.. பெனாசிர் பூட்டோவை கொன்றவர்களுக்கு தடை போட்டாச்சா.. கடாபியை.. சதாம் குசைனை கொன்றவர்களுக்கு தடை போட்டாச்சா...??! அதேன் ராஜிவ் கொலைக்கு அமெரிக்கா தடை போடனும்.. அப்ப ராஜீவ் கொலைக்கும் அமெரிக்கா உள்ளிட்டவர்களின் தடைக்கும் ஏதோ தொடர்பிருக்கு.. அப்ப ராஜீவை புலிகள் தான் கொன்றார்களா.. அல்லது ராஜீவ் கொலையை வைச்சு.. சதிகாரர்கள்.. ஆதாயம் தேடிக் கொண்டார்களா.. அதில் அமெரிக்கா முதன்மையா..?! ஏன் இவ்வாறான கேள்விகளை கேட்காமல்.. எம்மவர்கள் மீதே எமக்கு சந்தேகத்தை ஊட்டிறான் பாருங்கள்.. அங்க தான் அமெரிக்கன் வென்று கொண்டிருக்கிறான்.. அவன் ஏகாதபத்தியக் கொள்கையில்.
  22. ஆமாம் அந்தக் கணிசமானவர்கள் தான் கடைசியில் வென்றிட்டார்கள். போட்டிக்கு கருத்தெழுதாமல்.. வேறு வகைக்கு உருப்படியா கருத்து வைக்கலாமே.
  23. இது வெறும் கனவாகவே இருக்கும். அமெரிக்கா ஒருபோதும் தமிழீழம் எடுத்துத் தர உதவாது. அமெரிக்கா ரஷ்சியா போல் அல்ல. ரஷ்சியா நம்பினவனை கைவிடாது. அமெரிக்கா அப்படியல்ல.. பாவிச்சிட்டு தூக்கி கடாசிடும். இதனால் தான்.. சுனாமி அனர்த்தத்தின் போது கூட தாயக மண்ணில் அமெரிக்கனை தலைவர் கால்பதிக்க விடவில்லை. அதேபோல் எமது போராட்டம் முழுமைக்கும் பயங்கரவாதம் என்று உச்சரித்ததும் அன்றி அதனை எல்லா வகையிலும் அழிக்க உதவியதும் இதே அமெரிக்கா தான். அமெரிக்கா எப்பவுமே பலமான சக்திகளை தான் கைக்குள் வைச்சிருக்க விரும்பும். அப்ப தான் தனக்கு வேலை நடக்கும் என்று. அந்த வகையில் அது சிங்கள அரசை ஆதரித்து நிற்குமே அன்றி தமிழர்களை முழுமையாக நம்பாது ஆதரிக்காது. தனக்கு எதிரான சிந்தனையோட்டமுள்ள சிங்களத் தலைவர்களை அகற்றி தனக்கு சாதகமான ஆக்களை வைப்பது இலகு.. தமிழீழம் பெற்றுக்கொடுப்பதை விட என்று ஆதாயம் பார்க்கும் சுத்தச் சுயநல நாடு அமெரிக்கா. அதனால் தான் இணைத்தலைமை நாடுகளில் அது அங்கத்துவம் பெற்றிருந்தும்.. புலிகளை அந்த நாட்டில் பேச்சுக்கு கூட வர அனுமதிக்கவில்லை. தடைசெய்யப்பட்ட தலிபான்களோடு பேசிய அமெரிக்கா.. புலிகளோடு கடைசி வரைப் பேசவே இல்லை. இப்படிப்பட்ட அமெரிக்கா.. தமிழீழம் பெற்றுத்தரும்..???! வெறும் கனவு மட்டுமே. அமெரிக்காவுக்கு எதிராக புலிகளோ.. தமிழர்களோ என்ன செய்தார்கள்.. தடை போட.. நீடிக்க..?! இந்தக் கேள்வியை நீங்கள் எப்போதாவது உங்களிடமே கேட்டதுண்டா..??! தமிழர்களின் போராட்டம் பற்றி அமெரிக்கா ஒன்றுமே அறியாத அப்பாவியா..??! அமெரிக்கனை நம்புவது கொடிய கழுகை நம்புவதை விட மோசமானதாகவே இருக்கும்.
  24. சொந்த ஒன்றியத்துக்குள்ளேயே பிரிந்து செல்ல சுதந்திரம் அளிக்காத அமெரிக்கா.. சனநாயகம் பேசுவதும்.. அடுத்த நாடுகளை உடைப்பதும்.. ஒட்டுமொத்த ஏகாதபத்தியத்தின் வடிவமாகும்.
  25. புட்டின் சொல்லுவது சரிதான்.. சோவியத்தை உடைத்தது போல... தற்போதைய ரஷ்சியாவையும் கிரிமியா.. டான்பாஸ்.. கேர்சன் உள்ளட்ட பிராந்தியங்களையும்.. உடைக்க.. மாநிலங்களின் ஒன்றியம் அமெரிக்கா முயற்சி செய்கிறது. முதலில் தனி நாட்டுத் தாகம் கொண்ட.. கலிபோர்னியாவில் இருந்து மாநிலங்களின் ஒன்றியமான அமெரிக்காவை உடைக்க ஏன் புட்டின் முயலக் கூடாது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.