Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32973
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. ஆக மொத்தத்தில் நித்தி ஹிந்திய ஊடகங்கள் பிரச்சாரம் செய்தது போல்.. யாரையும் கட்டாயப்படுத்தி வைச்சிருக்கேல்ல. எதுஎப்படியோ கைலாசா உலக அளவில் போயிட்டு. வத்திக்கான் போல்.. கைலாசாவும்.. ஐநா வில் உறுப்புரிமை பெற்றால் மகிழ்ச்சியே.
  2. இங்க யுகேயில்.. தக்காளிப்பழத்துக்கும் வழியில்லாத நிலை. ரஷ்சிய உற்பத்திகளை நிறுத்தப் போய்.. உக்ரனைனாலும் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. மற்றவைக்கு காலநிலை வேறு கழுத்தறுத்திட்டுதாம்.
  3. அண்மையில் ஊருக்கு வந்திருந்த போது சிவன் கோவிலடி (திருநெல்வேலி) உங்கள் உணவகத்தை தேடிக் களைத்தது தான் மிச்சம். தயவுசெய்து உங்கள் உணவகத்தின் பெயர் மற்றும் அடைவதற்கான வழி காட்டலை வீதியோரமாக வையுங்கள். அப்போது தான் புதிய வாடிக்கையாளர்களுக்கும் வசதியாக இருக்கும். யாழ் நகரில் உள்ள பிரியாணிக்கு ஸ்பெசல் என்று ஒரு உணவகத்தில் பிரியாணி வாங்கினால்.. அவங்க ஆக்களைப் பார்த்து விலை போடுறாங்க. கிட்டத்தட்ட ஒரு பிரியாணிக்கு 3500.00 ரூபா எடுத்துவிட்டார்கள்.
  4. யுத்த ஆரம்பத்திலேயே துருக்கியின் மத்தியஸ்தத்தை அடுத்து புட்டின் தனது படைகளை நல்லெண்ண அடிப்படையில்.. கிவ் மற்றும் நாட்டின் பிறபகுதிகளில் இருந்து பின்வாங்கிக் கொண்டார். ஆனால்.. மேற்கு நாடுகள்.. அதனை தவறான முறையில்.. உக்ரைன் படைகளின் வெற்றியாக்கி போலிப் பிரச்சாரம் செய்தார்கள். விளைவு அநாவசிய உயிரிழப்புகளும்... சொத்திழப்புகளும். உக்ரைன் கிழக்கு வாழ் ரஷ்சிய மொழி பேசும்.. டான்பாஸ் பிராந்தியத்திற்கு சுதந்திரம் வழங்குவதோடு.. கிரிமியாவை மீண்டும் ரஷ்சியாவிடம் கையளித்துவிட்டு.. ரஷ்சியாவுடன் சமாதானமாகச் செல்வதே நீடித்த நிலையான சமாதானத்துக்கு வழியாகும். மாறாக அமெரிக்காவினதும்.. மேற்கினதும் தேவைகளுக்கு ஆடினால்.. நிலைமை மோசமாகும். அப்பாவி உக்ரைன் மக்களை மேற்கு நாடுகள் தங்கள் சுயநலனுக்காக பலியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
  5. கனவில் புத்தர் வந்து வழிபடச் சொன்னால்.. தனது விடுதி அறையில் வைச்சு வழிபட வேண்டியது தானே. அதேன் புத்தர் வெளில வந்தார்.. அரச மரத்தடி தேடி.
  6. யுத்தமற்ற அமைதிச் சூழலில்... பெரும் இராணுவச் செலவீனத்தை கொண்டிருக்கும் சிங்கள அரசுகளால்.. அந்த நாட்டில் இருந்து மூளைசாலிகள் வெளியேறுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை. மாறாக ஊக்குவிப்பே தொடர்கிறது. சொறீலங்காவின் இராணுவம்.. யுத்த முன் நிலைக்கு கொண்டு வரப்பட்டு.. செலவுகள் குறைக்கப்படால் அன்றி.. சிங்கள பெளத்த பேரினவாத இராணுவ ஆக்கிரமிப்புச் சித்தாந்ததுக்குள் சிங்கள அரசுகள் இருக்கும் வரை சொறீலங்காவுக்கு இதில் இருந்து மீட்சி இல்லை.
  7. ரயில்வேயை கண்டுபிடித்த பிரிட்டனே.. இப்ப ஜேர்மனியில் இருந்து தான் ரயில்களை கொள்வனவு செய்யுது. இது அப்ப பிரிட்டனால் கட்டப்பட்டது. அப்ப பிரிட்டனிடம் இருந்த தொழில்நுட்பம் பல ஆண்டுகள் நின்று நிலைக்கக் கூடியதாக இருந்தது. அதில் இதுவும் அடங்குகிறது. சொறீலங்கா ரயில்வேயும் பிரிட்டன் விட்டுச் சென்றதன் தொடர்ச்சியாகத்தான் இருக்கே தவிர.. புதிசா வந்தது குறைவு. இப்ப பிரிட்டனும்.. இடைநிலை வர்த்தக மையமாக மாறி உற்பத்தியில் பிந்தங்கியதால்.. மேட் இன் பிரிட்டன் அல்லது இங்கிலன்ட் அருகி விட்டது. பிரக்சிட் டுக்கு பிறகாவது வருமோ என்று பார்த்தால்.. இப்ப மேட் இன் சைனா தான் அதிகம் வருகுது.
  8. ஆக்கிரமிப்பு தேசத்தில் தான் இந்த எடுப்பு. தென்பகுதி அரச மரங்களின் கீழ் சொறி நாய்கள் தான் படுத்துறங்குது.
  9. சொறீலங்கா பணக்கார தேசமாகிவிட்டது. முட்டையைக் கூட இறக்குமதி செய்யும் நிலைக்கு மக்களை சோம்பேறி ஆக்கிவிட்டார்கள்.. ஆட்சியாளர்களும் அவர்தம் காப்பிரட் ஏஜென்டுகளும்.
  10. மக்கள் அற்ற தொலைதூரத் தீவொன்றில் வைத்து பாதுகாப்பான முறையில் நச்சு வாயுக்களை வடிகட்டி எரிக்கலாம் தானே. எதற்கு மக்கள் நிறைந்த இடங்களில் இதை செய்யனும்..??!
  11. சொறீலங்கா சிங்கள இராணுவ மயமாக்கத்துக்குள் இருக்கும் வரை.. அது பிச்சை எடுப்பது தவிர்க்க முடியாதது. ரணில்.. கோத்தாவின் இன்னொரு வடிவம். சிங்கள பெளத்த இராணுவ மயமாக்கலை ரணில் வரவேற்கும் ஒரு நபர். ஐ எம் எவ் போன்ற நிறுவனங்கள் மனித உரிமைகள் குறித்து பீற்றியடிக்கும்..மேற்கு நாடுகள்.. இப்படியான இராணுவ மயமாக்கல்களை கட்டுகொள்ளாமை தான்.. இந்த நிலை தொடரக் காரணமாகும். இந்த நிலையில்.. சொறீலங்காவில்.. கொட்டப்பட்டும் பணம்.. மீளாது.
  12. சொந்தமாக் காணிகளை பராமரிக்கவோ.. பயன்படுத்தவோ முடியாதவர்கள்.. அந்நியர்களுக்கு அறா விலைக்கு விற்பதிலும்.. இப்படி சொந்த மக்களுக்கு பகிர்ந்து கொடுப்பது நல்லதே.
  13. தலைவர் காட்டிய சின்னம் இருக்கட்டும். தலைவர் கட்டியமைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எங்கே. தலைவர் தமிழரசுக் கட்சியை மட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று சொல்லவில்லையே..! தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருந்த எல்லோரும் ஒருங்கிணைவதே இன்றைய தேவை.
  14. மயில்களையோ எந்த உயிரினங்களையோ கொல்ல வேண்டாம். மயில்களின் பரம்பல் குறைந்த இடங்கள்.. மற்றும் வனப்பகுதிகளுக்கு அவற்றை கொண்டு போய் விடுங்கள். தயவு செய்து உயிரினப் பன்மையை அழிக்கும் அநாகரிகத்தில் ஈடுபட வேண்டாம். மேலும் அருகி வரும் இனங்களின் பாதுகாப்பை முன்னிறுத்திய பயிர்செய்கைகளை ஊக்குவிப்பதன் மூலம்.. உணவு வலை மூலம்.. பிற உயிரினங்களை கட்டுக்குள் வைக்கலாம்.
  15. ரணிலுக்கும் சரி.. ராஜபக்ச குடும்பங்களுக்கும் சரி.. தேர்தல் அரசியலில் நம்பிக்கை போயிட்டுது. ஏன்னா எவ்வளவு தான் அள்ளி வீசினாலும்.. வாக்குப் போட்டாலும்.. கடைசியில.. கதிரையில் இருந்து தூக்கி வீசுறாங்களே. ஆக தேர்தலே நடக்காமல்.. குந்தின கதிரையில் நிரந்தரமா இருப்பம் என்று முடிவெடுத்திருப்பார்கள்.
  16. இவர் இப்படின்னா.. அமெரிக்க பணக்காரர்களில் ஒருவரான.. ரெஸ்லா சொந்தக்காரரின் (எலன் மாஸ்க்) மகனின் பெயர் இப்படி.. X Æ A-12. ஆக கிறுக்குகள் எல்லாம் இடமும் இருக்குது.
  17. இதே வெள்ளையள் என்றால் கோட் கேசென்று போய் மில்லியன் கணக்கில் வாங்கிக் கொண்டு செற்றில் ஆகிடுவாங்கள். நாம தமிழராச்சே.. விசுவாச மடையர்கள். அடுத்தவனுக்கு உழைத்தே தேய்வது நம்ம ஜீன். வாழ்த்துக்கள் சிறியர். உடம்பு ஒத்துழைத்தால் மட்டும் கூடிய நேரம் வேலை செய்ய ஒத்துக்கொள்ளுங்கள். உடம்பை வருத்தி ஒத்துழைக்கச் செய்ய வேண்டாம்.
  18. பாடம் அல்ல. வரலாறு. நாம் எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய வரலாறு. சேகுவராவின்.. காஸ்ரோவின் வரலாறு தெரிஞ்ச எமக்கு சொந்த தலைவனின் வரலாறு அறிய இஸ்மில்லை. பாடம் எடுப்பதாகி விடுவது அபந்தம். நிச்சயம்.. நெடுமாறன் ஐயாவின் நம்பிக்கை அவரின் உரிமை. அதில் அவரை திட்டவோ.. நச்சரிக்கவோ நமக்கு உரிமையில்லை. நன்றி. உணர்ச்சி பூர்வத்திற்கு உணர்தலுக்கும்... வேறுபாடுண்டு.
  19. ஆனால் தலைவரை எப்படியாவது காக்கனுன்னு உயிர் விட்ட போராளிகள் அதிகம். அந்த மோதல்களில் உயிர்விட்ட மக்களும் உள்ளனர். ஆனந்தபுரம் கூட தலைவரைக் காக்கனுன்னு தான் போராடிக் கருகியது. இது வரலாறு.
  20. ஹிந்தியப் படைகளுடான மோதலின் போது 1987 இல் தலைவர் சவப்பெட்டியில் வைச்சு தப்பிக்க வைக்கப்பாட்டார். கோழை என்பதாலா..??! விட்டால்.. தலைவர் ஏன் சண்டை பிடிச்சுக் கொண்டு வெளியேறவில்லை. போராளிகள் போரிட்டு சாக.. தலைவர் ஏன் சவப்பெட்டிக்குள் பதுங்கினார் என்று கேள்வி கேட்பீர்களா..?! ஒரு இலட்சியப் பயணத்தின் பிரதான குறியீடு பாதுகாக்கப்பட்டால் அன்றி அந்தப் பயணம் நிறைவடையாது. உதாரணம்.. நெல்சன் மண்டேலா. இதற்கு மேல்... இதில் விவாதிக்க எதுவுமில்லை. நெடுமாறன் ஐயாவுக்குள்ள நம்பிக்கையை நாம் ஏற்கிறோமோ இல்லையோ.. அவரின் நம்பிக்கைகாக.. அவரை துரோகி.. கூலி என்ற மேற்கு நாடுகளின் அனைத்து உரிமைகளையும் அறிந்து அனுபவித்துக் கொண்டிருக்கும் நாம்.. எந்தத் தகுதியையும் பெறவில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு. அவரவர் நம்பிக்கை.. அவரவர் உரிமை.
  21. மில்லியனில் கடனை வாங்கி அதை அங்கேயே கொலிடேக்கு செலவு செய்துவிட்டு பொண்டாட்டியோடு உல்லாசமாக மீண்டும் வரவும். இப்ப எல்லாம் கோத்தா எங்கும் தனியப் போவதில்லை. பொண்டாட்டி கூட போறா..?!
  22. தேசிய தலைவர் வருவார் என்றோரில் சீமானும் அடக்கம். இப்பவும் அண்ணன் நேரில் வரட்டும் அப்புறம் மிகுதி பேசலாம் என்று தான் சீமான் சொல்லி இருக்காரே தவிர... நெடுமாறன் ஐயாவை துரோகி என்றாதக் தெரியவில்லை. நெடுமாறன் ஐயாவை துரோகி என்று சொல்ல எங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஏனெனில்.. 1989 இல் அந்தளவு நெருக்கடி காலத்திலும்.. தேசிய தலைவர் உயிரோடு இருக்கிறார்.. என்ற செய்தியை சொன்னதற்காக.. தேசிய தலைவரோ புலிகளோ நெடுமாறன் ஐயாவை துரோகி.. கூலி என்றவில்லை. அவரின் தீவிர தமிழீழ ஆதரவைப் பற்றியே நின்றார்கள் புலிகள். உண்மையான புலிகளும்... தமிழீழ ஆதரவாளர்களும் இன்றும் அதையே செய்வார்கள்.
  23. நெடுமாறன் ஐயா தீவிர தேசிய தலைவர் ஆதரவாளர். அவர் அவர் நிலைப்பாட்டில் தொடர்ந்து இருப்பது அவரின் விருப்பம் உரிமை. அதனை கேள்விக்குட்படுத்த யாருக்கும் உரிமை இருப்பதாகத் தெரியவில்லை. 1989 இல் தேசிய தலைவர் ஹிந்தியப் படைகளால் கொல்லப்பட்டுவிட்டார் என்று பலமாக மக்கள் நம்பிய காலத்தில்... நெடுமாறன் ஐயா தான் தேசிய தலைவரை வன்னிக்காட்டில் சந்தித்துவிட்டு வெளி உலகிற்கு அவர் இருக்கும் செய்தியை சொன்னார். அப்போது தேசிய தலைவர் கூட ஐயாவை திட்டித் தீர்க்கவில்லை. ஏனெனில்.. அன்று புலிகள் ஹிந்திய இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த காலம். அப்படி ஒரு அறிவிப்பை செய்வது ஹிந்தியப் படைகளின் விமான மற்றும் ஊடறுப்புத் தாக்குதலை கூட்டும்.. என்று தெரிந்திருந்தும்.. தேசிய தலைவரோ.. புலிகளோ நெடுமாறன் ஐயாவை திட்டவோ.. துரோகி என்றவோ.. ஹிந்தியக் கூலி.. றோ கூலி.. சி ஐ ஏ கூலி என்றோ ஏசியதில்லை. அந்தளவுக்கு இதய சுத்தியான.. தமது நேச சக்திகளை எந்த நெருக்கடியிலும் புலிகள் குறிப்பாக தேசிய தலைவர் சந்தேகித்ததில்லை. அதன் பின்னர் தான்.. வை கோவை அனுப்பி நெடுமாறன் ஐயாவின் செய்தியை உறுபடுத்திக் கொண்டார்.. தி மு க தலைவர் கருணாநிதி. இன்று புலிகள் திட்டினமோ இல்லையோ.. முன்னாள் புலிகள் என்போரும்.. புலி ஆதரவு... தமிழீழ ஆதரவு.. தமிழ் தேசிய ஆதரவு என்போரும்.. நெடுமாறன் ஐயாவை திட்டி தீர்த்துக் கொள்கிறார்கள். நாம் திட்டாமல்... கடந்து வந்தவர்கள் யார் என்று பார்த்தால்.. எவன் எவன் நம்மைக் கொலை செய்தானோ.. அவனை எல்லாம் வாக்குப் போட்டு மந்திரி எம் பி ஆக்கி வைச்சு.. அவங்களை எல்லாம் இப்போ மக்களுக்கு ஏதோ செய்யினம்... என்ற பேர்வழிக்குள் அடக்கி.. நடுநிலையில் வைச்சுப் பூசிப்பது தான். ஆனால்.. பிரபாகரன்.. புலிகளை பற்றி மட்டும்.. எந்த நேரிசையியக்க.. செய்தி யார் காதையும் எட்டக் கூடாது. எட்டினால்.. இப்போ அவன் துரோகி. ஆனால் டக்கிளஸ் அமைச்சர்.. பிள்ளையான்.. ஏதோ செய்கிறான்.. கருணா.. அவனும் அவன் பாடும்... இப்படிச் சொல்லி சமாளிச்சே கடந்து போய்விடுவோம். அவங்கள் தங்களை பிழைப்பை தொடர்வாங்கள். அங்கு மட்டும் எப்படி.. எல்லாத்தையும் எம்மவர்கள் மறந்து விடுகிறார்களோ தெரியவில்லை.
  24. ஹிந்தியப் படைகள் காலத்தில்.. ஹிந்திய சார்பு ஒட்டுக்குழுக்கள் இரண்டு வேலை செய்வார்கள். ஒன்று புலிகள் போல அடிச்சு துண்டுப்பிரசுரம் கொடுப்பார்கள். இன்னொன்று அதனை தேடிப் பிடிச்சு வாசிப்பவர்களை தூக்கிக் கொண்டு போவார்கள். அதுக்கு மேல.. புலிகளே.. புலிகளை திட்டுவது போலவும் நிகழ்வுகளை நடத்துவார்கள். சொறீலங்கா படைகளின் காலத்திலுமே. இன்றைய சூழலில்.. தேசிய தலைவர் வெளி உலகின் முன் முகம் காட்டினாலும்.. கூட அவர் முன்னர்.. போல் ஒரு போரையோ.. போராட்டத்தையோ முன்னெடுத்துச் செல்லக் கூடிய கள நிலையில்லை. அதவாது ஆயுதப் போராட்ட ரீதில்.. அவர் பல தசாப்தங்களுக்கு பிந்தங்கி விட்டார். பிரபாகரனின் மீள் வருகை என்பது வாதப் பிரதிவாதங்களுக்கு வசதியாக அமையுமே தவிர.. தமிழ் மக்களின் விடிவுக்கு நேரடியான தாக்கம் செய்யக் கூடிய சூழல் இல்லை இன்று. ஆனால்.. பிரபாகரன் இருக்கிறார் என்றால்.. பயப்படக் கூடிய சக்திகள்.. தமது பொய்களை இட்டு மக்கள் தம்மை இனங்கண்டு விடுவார்களோ என்று அஞ்சுபவர்கள் தான் அதிகமாக இருக்க முடியும். அவர்களுக்கு தான்.. பிரபாகரன் இறந்த ஆளாகவே இருக்கனும். இன்னொரு தரப்பிருக்குது.. பிரபாகரனை கொன்று விட்டோம் அல்லது அவர் இல்லை என்று சொல்லி பிழைப்பு நடத்தும் கூட்டம்.. தம் இஸ்டத்துக்கு அரசியல் நடத்தும் கூட்டம்... இந்தத் தரப்புகளுக்கு தான் இப்ப பிரச்சனையே தவிர.. தமிழ் மக்களுக்கு பெரிய மாற்றங்களை இது உருவாக்காது.
  25. இப்ப மட்டும் என்ன கெடுபிடி இல்லாமலா இருக்குது. சந்திக்கு சந்தி இராணுவம் நிற்குது. இராணுவ முகாம்கள் இருக்குது. யாழ் நகர் பூரா இராணுவம் சிவிலும்.. சீருடையிலும் திரியுது. கடைக்காரர் ஆமிக்காரனை கண்ட உடன.. சிங்களத்தில் மிகச் சிறப்பான கவனிப்பு. ஏலவே நிற்கிற வாடிக்கையாளர்களையும் இடிச்சத் தள்ளி முந்திக் கொண்டு இராணுவம்.. திமிரில் கடைகளில் பொருள் வாங்குது. கடைக்காரரும் விழுந்து விழுந்து கவனிக்கினம். இராணுவ வாகனங்கள் வரிசை கட்டி நிற்கு. கடற்படை வேறு. போர் முடிந்து 13 ஆண்டுகளில்... இராணுவப் பிரசன்னம் இல்லாத இடம் வடக்குக் கிழக்கில் இருக்குதா..?! இருந்தா சொல்லிட்டு இந்த வெருட்டை விட்டால்... சனம் நம்பலாம். தலைவர் இருப்பதும் இல்லாததும் எதையும் இப்போது தீர்மானிக்காது இலங்கைத் தீவில். ஏனெனில் அது சிங்கள பெளத்த பேரினவாத இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்குது. சீன ரகனின் காலடியில் கிடக்குது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.