-
Posts
32973 -
Joined
-
Days Won
268
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nedukkalapoovan
-
நாளை வாஷிங்டனில் லிங்கனின் உரை.. தலைப்பு: றோனாயகம்..!
nedukkalapoovan replied to nedukkalapoovan's topic in கவிதைக் களம்
எங்களுக்கு அண்ணன்.. தலைவர். பொதுவாக உலகிற்கு தம்பி என்றே ஆரம்பத்தில் அறியப்பட்டிருந்தார். அதனால்.. தம்பியானார். யாழின் அகவை ஆக்கத்தில் அடைக்க முடியாது. ஏனெனில் இது ஏலவே பிரசுரிக்கப்பட்ட ஆக்கம். கருத்துப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி. -
நாளை வாஷிங்டனில் லிங்கனின் உரை.. தலைப்பு: றோனாயகம்..!
nedukkalapoovan posted a topic in கவிதைக் களம்
பிரிட்டன் தெருவில் ஒற்றை மரணம்..! ஊடகங்கள் விம்புகின்றன ஊர்கள் அழுகின்றன..!! கொன்றவன் சரணடைய தயாராய் நின்ற போதும்.. சுட்டு வீழ்த்தி வீரம் காட்டி பிடித்து நீதி கேட்கிறது… ஊரையே கொல்ல கொள்கை வகுக்கும் உலகம்..! அடுத்தவன் நிலத்தில் குண்டுகள் கொட்டி பிடித்து அடித்து அழித்து… வளர்த்த பகை தேடி வந்து உயிர் எடுத்தால் அது… பயங்கரவாதம்..! இருந்தும்… மானுட உலகில் கேள்விகள் ஆராய்ச்சிகள் முளைக்கும்..! அதுவே…. மனிதனை இயந்திரம் கொன்றால் “Just war”..! நோபலின் நாயகன் சமாதானப் புறா ஒபாமாவின் தாரக மந்திரம் இது..! ஏவி விட்டு தூர இருந்து கொன்று விட்டால் இல்லை இல்லை.. ஊரையே அழித்திட்டால் சாட்சியும் இல்லை குற்றவாளியும் இல்லை அழுவதற்கும் ஆளில்லை ஒப்பாரி வைக்க… ஊடகங்களும் தயார் இல்லை..! அதுமட்டுமா றோனுக்கு என்ன சனநாயகம்..?! மனித உரிமைகள்..??! இயந்திரத்திற்கு என்ன சிறைச்சாலை..???! நீதி கேள்வி கேட்கும்..! ஒப்பற்ற கண்டுபிடிப்பு அணு குண்டால் மனிதனை அழித்த பரம்பரை… இன்று றோன்களால் மிச்சம் மீதி தொடர்கிறது..! இதுவரை… அழித்த உயிர்களின் கணக்கு மட்டும் பல ஆயிரங்கள்..! “குற்றவாளி” அமெரிக்காவின் சந்தேகம் ஒன்றே போதும் ஓர் உயிர் எடுக்க.. இத்தனை ஆயிரம் சாவுகளும் அவ்வழி வந்தவையே.! பச்சிளம் குழந்தை முதல் பள்ளிப் பாலகர் வரை அதில் அடங்கும்..! இவை கண்டு… ஐநாவும் மூச்சின்றி கிடக்கும் யுனிசெப்பும் வாய்மூடிக் கிடக்கும்..! நீதிக்கும் அங்கு வேலை.. பூச்சியம்..! நாளை வாசிங்கடனில் லிங்கனின் உரையாம்… றேகனின் பரம்பரை றோனால் உலகை ஆள்வதே றோனாயகம்..! அதுவே அமெரிக்காவின் 21ம் நூற்றாண்டின் சனநாயகம்..! இதுதான் தலைப்பாம்..! வாக்குச் சீட்டும் போறடிச்சுப் போச்சு றோனால் அடிச்சு சாவுகளை எண்ணுவதே மேற்குலகின் தர்மமாய் ஆச்சு..! நாளை இது பஞ்சசீலம் வரை படர்ந்து விடும்..! தம்பி பிரபாவும் தமிழர் உயிர் எடுக்க வந்த இஸ்ரேலின் றோன்களுக்கு அடிக்கடி வன்னியில் ஆப்படிச்சதுண்டு..! அதனாலும்.. அவனைக் காலி செய்யும் திட்டம் றோனாயகத்திற்கு வந்திருக்கும்..! (2013 இல் எழுதியது.. மீள்பிரசுரம்.. ஆண்டுகள் ஓடினாலும்.. வல்.. ஆதிக்க சக்திகளின் எண்ணங்கள் மாறுவதில்லை.) https://kuruvikal.wordpress.com/2013/05/24/நாளை-வாஷிங்டனில்-லிங்கனி/ -
காபனீரொக்சைட்டை அளவுக்கு அதிகம் குறைத்தாலும் தீமை.. பூமி குளிரில் உறைய ஆரம்பித்துவிடும். எல்லாம் ஒரு சமநிலைக்குள் இருக்கனும். மனிதர்களின் பயன்பாட்டால்.. வெளியேறும்.. நிகர வெப்பமாதல் வாயுக்கள் எல்லாமே கட்டுப்படுத்தப்பட வேண்டும். காபனீரொக்சைட் மட்டுமல்ல.. மீதேன்.. உட்பட. குறிப்பாக மாட்டுப்பண்ணைகளில் இருந்து அதிக மீதேன் வெளியேறுகிறது. ஏன் நீராவி கூட.. வெப்பமாதல் வாயு தான். ஆனால் அது இலகுவாக இயற்கைச் சுழற்றிச்சிக்குள் சிக்கி விடுகிறது.
-
உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தொடர்ந்து முதலிடம்
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
யாரிடைய தரத்தையும் நாம் தீர்மானிக்க முடியாது. ஏனெனில் நாம் நாடற்றவர்கள். நாடுள்ளவன் தயவு காட்டி அனுமதிக்கும் இடத்தில்.. அவனுக்கு இடைஞ்சல் இல்லாமல் எவன் ஒருவனால்.. அந்த நாட்டின் வளர்ச்சிக்காகப் பங்களிக்க முடியுதோ அவன் சிறந்த குடிமகன்/ள்.. அல்லது குடிவரவாளன்/ள். ஆனால்.. நோர்வே உள்ளிட்ட நாடுகளில்.. சொந்த நாட்டு மக்களிடம் வெறுப்பைச் சம்பாதிக்கக் கூடிய அளவில் நடந்து கொள்பவர்களில்.. இந்த கூட்டத்தினர் அதிகம். குறிப்பாக.. ஒரு காலத்தில் நோர்வேயில் போட்ட பொருள் போட்ட இடத்தில் கிடக்கும். இப்ப போடப்படும் பொருள் தங்களுக்கே சொந்தமென்று திருடிச் செல்ல ஆட்கள் இருக்கினம். இது நிச்சமாக எமக்குப் புதிதல்ல. ஆனால்.. நோர்வே வாழ் அதிக மக்களுக்கு புதிது.. மனக்கிலேசமானது. இப்படி இன்னோரென்ன நிகழ்வுகள்.. அவர்களின் மகிழ்ச்சியைக் குறைத்திருக்கலாம். எப்பவுமே.. எமது பழக்கம் வழக்கத்திற்கு ஒவ்வாது இருக்க விரும்பும் இன்னொரு வீட்டாரின் வருகையையே அதிகம் சமாளிக்க முடியாத எம் நிலையில் இருந்து.. இந்த குடியேற்றக்காரர்களை அனுமதிக்கும் நாடுகளைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நாம் ஆற்றும் கைங்கரியம் விளங்கும். இது தமிழர்கள்.. கறுப்பர்கள்.. அல்பேனியர்கள்.. லுதுவேனியர்கள்.. போலந்துக்காரர்கள்.. ஹிந்தியர்கள்.. பாகிஸ்தானியர்கள்.. சோமாலியர்கள்.. உட்பட எல்லோருக்கும் பொருந்தும். -
உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தொடர்ந்து முதலிடம்
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
பின்லாந்து தொடர்ந்து நோவேயை விட குறைந்த அளவு குடிவரவாளர்களையே கொண்டிருந்திருக்கிறது. அதனால்.. சொந்தச் சனத்தொகையிடையே வளப் பரம்பலை மகிழ்ச்சிக்குரிய மட்டத்தில் வைக்க முடிந்துள்ளது. குறிப்பாக சமூகத் தேவைகளாக வீடு மற்றும் அடிப்படைவசதிகள். டென்மார்க்.. சுவீடன்.. பின்லாந்து ஈயுவிலும் அங்கத்துவம் வகிப்பதால்.. ஈயு நிதிப் பங்கீடு அவர்களுக்கும் அமையும். நோர்வே அப்படியன்று. இதுவும் ஒரு காரணியாக இருக்கும். https://www.statista.com/statistics/1296469/immigration-nordic-countries/ -
இலங்கை முஸ்லீம் பெண்களின் காலாசாரத் தோற்றம் இதுவே. புர்க்கா.. நிகாப் எல்லாம் வலிந்து திணிக்கப்பட்டவை ஆகும்.
-
இலங்கைக்கு IMF விதித்துள்ள கடுமையான நிபந்தனைகள்
nedukkalapoovan replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
தமிழர்களின் எதிர்காலமே கேள்விக்குறியில் தான் நிற்கிறது. இது தெரியவில்லையா..??! 😅 -
உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தொடர்ந்து முதலிடம்
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
முன்னர் நோர்வே இந்த இடத்தில் இருந்தது. நோர்வே கிழக்கு ஐரோப்பாவுக்கும் ஆபிரிக்க அகதிகளுக்கும் உக்ரைனுக்கும் வாயிலைத் திறந்துவிட்டு.. தரந்தாழ்ந்துவிட்டது. இப்போ.. ஸ்கான்டிநேவியாவில் நோர்வே கடைநிலைக்குப் போய்விட்டது. சுவீடன் கூட ஓரம்கட்டிவிட்டது. -
இலங்கைக்கு IMF விதித்துள்ள கடுமையான நிபந்தனைகள்
nedukkalapoovan replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
ஐ எம் எவ்.. அமெரிக்க சார்பு ஏஜென்ட். அது தமிழர்களுக்கு நன்மை தரக்கூடிய எந்த நிபந்தனைகளையும் விதிக்காது. அதுதான் அமெரிக்காவினதும் நிலைப்பாடு. ஆனால் போர் நடக்கும் உக்ரைனுக்கு ஐ எம் எவ் 12 பில்லியன் டாலர்களை சொறீலங்காவுக்கு ஒதுக்கிய காலத்தில் ஒதுக்கி இருக்குது. இவை எல்லாம் அமெரிக்காவின் தேவைகளுக்காக வழங்கப்படுகின்றனவே தவிர.. தமிழர்களுக்கு எந்த நன்மையும் விளையாது. தமிழர்கள் மேற்குலகை நம்பி தொடர்ந்து ஏமாறத்தான் முடியுமே தவிர.. மேற்குலகின் கொள்கைகளில் செல்வாக்குச் செலுத்தும் அளவுக்கு தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழினும்.. அவர்களின் ஒற்றுமை இன்மை.. பொருளாதார.. மற்றும் வாக்கு பலத்தை ஒருங்கிணைக்காமை என்று பல காரணிகள்.. மேற்குலக கொள்கை வகுப்பில்.. தமிழர்களைப் பொருட்டாகக் கூட கருத இடமளிக்கச் செய்யாமல் இருக்கச் செய்கிறது. -
எமது அண்ணா கனகசபை சிறிகாந்தன் அவர்கள் இறையடி எய்திவிட்டார்
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in துயர் பகிர்வோம்
இது ஒரு பரம்பரை அலகுகள் சார் நிலைமை. நிரந்தர குணப்படுத்தலுக்கான சிகிச்சை இல்லை என்றாலும் தொடர் சிகிச்சை மற்றும் ஆதாரங்கள் மூலம்.. வாழ்க்கைக் காலத்தை நீட்டிக்கலாம். https://www.nhs.uk/conditions/muscular-dystrophy/ -
எமது அண்ணா கனகசபை சிறிகாந்தன் அவர்கள் இறையடி எய்திவிட்டார்
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in துயர் பகிர்வோம்
உறவுகளின் இழப்பு மிகவும் கொடுமையானது. இருந்தாலும் இதை எல்லாம் கடந்து தான் வாழும் வரை வாழ்ந்தாகனும் என்பது இயற்கையின் நிலை... ஆழ்ந்த இரங்கலும் கண்ணீரஞ்சலியும். ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். -
ஆனையிறவில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயர நடராஜர் சிலை பிரதிஷ்டை
nedukkalapoovan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
Shiva's 'Nataraj' statue infront of the world's largest particle physics lab CERN (The European Organization for Nuclear Research) in Switzerland. https://cds.cern.ch/record/745737?ln=en -
சர்வதேச அழகிப் போட்டி - முதல் தடவையாக யாழ் மண்ணில்!
nedukkalapoovan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அழகிப் போட்டி.. அழகன் போட்டி.. இனவிடை போட்டிகள் காலம் காலமாக நடக்குது தானே. இதில் என்ன புதுமையோ..?! என்ன யாழ்ப்பாணத்தில் நடப்பதை புதுமையாகச் சித்தரிக்க முனைகிறார்கள் அவ்வளவே. ஏலவே சூரியக் கதிர் நடவடிக்கையின் பின் யாழ்ப்பாணத்தில் இன்னோரென்ன அழகிப் போட்டிகள் நடந்தேறிவிட்டனவே. சில போர்க்கால புலம்பெயரிகள்.. இப்பவும் போர்க்கால வரிப்புலி மகளிரை நினைச்சுக் கொண்டு.. இதை நவீனமாகக் கருதினமோ என்னமோ..?! -
ரஸ்யாவின் கோர தாக்குதல் – உக்ரைனின் முக்கிய தளபதி மரணம்
nedukkalapoovan replied to கிருபன்'s topic in உலக நடப்பு
உந்த உக்ரைன் புலிக்கேசியிட மொத்தக் கணக்குப் படி பார்த்தால்.. இப்ப ரஷ்சியாவிடம் இராணுவமுமில்லை. ஆயுதமும் இல்லை.. விமானமும் இல்லை. டாங்கியும் இல்லை. ஆனால்.. புலிக்கேசி இன்னும் அமெரிக்கனிடமும் அமெரிக்க அடிவருடிகளிடமுன் ஆயுதம் கேட்டு கெஞ்சுவது ஏனோ..??! உக்ரைன் புலிக்கேசிட கணக்கை.. ஏவிவிட்ட எஜமானர்களே நம்புவதில்லை. நீங்க என்னடான்னா..?! -
ஆனையிறவில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயர நடராஜர் சிலை பிரதிஷ்டை
nedukkalapoovan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
வடக்குக் கிழக்கில் சைவ அடையாளங்கள் பெருகுவதில் எந்த தவறும் இல்லை. சைவர்கள் பெரும்பான்மையாக வாழும் தேசம் அது. புத்தர் பெருகுவதுதான் ஆபத்து. -
இதெல்லாம் தெரியாமலா இந்திரா காந்தி அம்மையார் ஈழ விடுதலைக்கு உதவ முன்வந்தார். பிரச்சனை விளக்கமல்ல.. வில்லங்கமான ஆக்கள் ஹிந்திய மத்தியையும் நீதிமன்றங்களையும் தவறாக வழிநடத்துவதுதான். விளைவு.. ஹிந்தியா சீன ரகனின் முழுச் சுற்றி வளைப்பில். தனித் தமிழ்நாடு கேட்ட போது தமிழீழம் கேட்கவில்லை. எப்போ தமிழர்கள் ஈழத்தில் எனியும் சிங்களவனிடம் அடிவாங்க முடியாது என்று நினைத்தார்களோ அப்போதுதான் தமது பிராந்தியத்தை தாமே ஆள வேண்டிய நிலைக்கு தளப்பட்டார்கள். இதனை 1983 கலவரத்தின் பின் இந்திராகாந்தி அம்மையாரே உறுதிபட ஹிந்திய தேசத்துக்குச் சொல்லி உள்ளாரே.
-
இனிங்ஸ் வெற்றி இல்லை என்றான நிலையில் தான் கப்டன் இறங்கி இருக்கிறார். அவர் வழமை போல் மிடில் ஓடரில் வந்திருந்தாலும்.. சென்றல் 10 விக்கெட்டுக்களால் வென்றதாகுமே தவிர.. இனிங்ஸ் வெற்றி ஆகி இருக்காது. எனினும்.. சென்றலின் இனிங்ஸ் வெற்றியை அவர்களே தான் பரியோவான் வழங்கிய பல வாய்ப்புக்களை தவறவிட்டு சரியான பாடசாலைப் பையன்களின் கிரிக்கெட் போல் ஆடி முடித்திருக்கிறார்கள். மத்தியிடம்.. எதிர்பார்ப்பது இதைவிட தரமான கிரிக்கெட்.