Everything posted by nedukkalapoovan
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
சிறீலங்கா அரசு நினைக்குது.. உலகம் இன்னும் தன் கைக்குள்ளைன்னு. உலகம்.. இப்ப குக்கிராமம். நாங்க சொல்ல நினைக்கிறதை சேர்க்க வேண்டிய இடத்தில சேர்க்க பல வழிமுறை வந்தாச்சு. நோட்டீஸ் ஒட்டி கூட்டம் போட்டுத்தான் அதனைச் சொல்லனும் என்ற நிலை இன்றில்லை. அந்த வகையில்... சிறீலங்கா தமிழ் மக்களை முன்னைய காலங்கள் போன்று ஏமாற்ற ஏலாது. ஏமாற்றவும் முடியாது. அந்த அரசியல் மலையேறிட்டுது. அப்படி ஒரு கணக்கை இன்னும் வைச்சிருந்தா.. அதனை முடிக்கச் சொல்லுறது தான் நல்லம். இன்றைக்குள்ள பிரச்சனை.. சிங்களத்திடம் உள்ள சீன சார்பு தான். அதற்கான பிரதிபலனை.. கமரூன்.. தமிழர்களோடு மொட்டைமாடியில் நின்று ஒரு சிம்பாளிக்கா காட்டிட்டு வந்திட்டார். அது வெறும் காட்சி அல்ல. அறிவிப்பு. ஆக.. எந்தச் சீனாவை வைச்சு இவ்வளவு காலகமும் சதுரங்கத்தை தனக்கு சாதகமா ஆக்கிச்சோ அதே சீனாவால.. வரப்போற நெருக்கடிகளுக்கும் சிறீலங்கா முகம் கொடுக்கனும். ஆனால்.. இது சதுரங்கம். தமிழர்கள் தாறுமாறா காய் நகர்த்தி.. ஆட்டத்தை மோசமா ஆடினா.. கமரூன் நாளை கொழும்பில் போய் நிற்கவும் வாய்ப்பு வரலாம். எல்லாம் எங்கள் காய் நகர்த்தலில் தான் உள்ளது.சீனாவோடும்.. இந்த வேளையில் தமிழர்கள் பேரம் பேச வேண்டும். கடந்த காலம் போல.. சீனாவை ஒதுக்கி வைக்கிறது தமிழர்களுக்கு நல்லதல்ல. இந்த சதுரங்கத்தில்.. இவர்கள் எல்லாம் சுண்டக்காய்கள்.கோத்தா எறிஞ்சு பிடிச்சு விளையாடுறார். நாங்கள் விடுப்புப் பார்க்கிறம். சுண்டக்காய் தானாப் போய் கோத்தா கையில சிக்கிட்டுது. அவ்வளவும் தான். இது தான் யதார்த்தம். இதுவரை கூட்டமைப்பு இவர் கைது.. விடுதலை பற்றி ஒன்றுமே சொல்லேல்ல. கூட்டமைப்பு மட்டுமல்ல.. தமிழ் தேசிய சக்திகள் ஒன்றுமே சொல்லேல்ல. அதில் இருந்து விளங்கிக் கொள்ளனும். இது மாற்றுக்கருத்துப் பாசறைகளின் கூடாரத்துக்கு கோத்தா அடிச்ச ஆட்லறி மட்டுமே. அடிச்ச ஆட்லறிக்கு பயந்து கோத்தா கையில உள்ள என்ன புரஜெக்டோட வெளில வருனமோ யார் அறிவார். அந்த வகையில் எனி இந்தச் சுண்டக்காய்கள் தொடர்பில் இரட்டிப்பு அவதானம் அவசியம்.- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
இசைப்பிரியாக்குக் கூட இரக்கம் காட்டாத குத்தியர்.. இவருக்காக.. கத்திறார். உவர் பெரிய கில்லாடி போல...! கோத்தா ஒரு பலப்பரீட்சை பார்க்காமல் உவரை விடப் போறதில்லை. கோத்தா தூக்கி வீசுறதை தின்னிட்டு இருக்கிறதுகள் கூட சும்மா இருக்க முடியாம (ஓசி விளம்பரமுன்னா எவன் விட்டான்).. உசுப்பேத்தி கடைசியில நொந்து நூடில்ஸ் ஆகித்தான் வெளிவரப் போறார் போல. :rolleyes:- சிந்தனைக்கு சில படங்கள்...
எம் கல்லறைகள்.. புத்தரின் வெற்றுப் பல்லை கட்டிக்காக்கும் புத்த கோவில்களை விட.. உயிர்ப்புள்ளவை..!- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
என்ன தான் சொன்னாலும்.. சந்திரிக்காவிற்கு இப்பவும் ராஜபக்ச குடும்பம் மீது ஒரு தனி மரியாதை இருக்குது. அண்மையில்.. அவாவை ராஜபக்ச.. பொதுநலவாய நாடுகள் மாநாட்டுக்கு அழைக்க தவறாமல் போய் வந்தவர். ராஜபக்ச தான் ஜே ஆர் காலத்தில் சுதந்திரக் கட்சியை காத்தவர். ஜே ஆர்.. சிறீமாவோவின் குடியுரிமையை பறிச்சு.. அவாவை மோசமாக தண்டித்தவர். அந்தக் கட்சி எனி எழவே கூடாது என்று காய் நகர்த்தியவர். கடைசியில் அவர் வளர்த்த அவரின் மருமகனான ரணிலை வீழ்த்தி.. அக்கட்சி.. ஐ தே க கட்சிக்கு சமாதி கிண்டிவிட்டுள்ளது. தமிழர்களைப் பொறுத்த வரை ஐ தே க.. சுதந்திரக் கட்சி இரண்டும்.. ஒன்று தான். தமிழின அழிப்பில் சந்திரிக்கா ராஜபக்ச ஜே ஆர் பிரேமதாச ரணில் இவர்களுக்கிடையே வித்தியாசம் கிடையாது. ஆனால் நம்மவர்கள் சிலர் தான் சும்மா படங்காட்டிக்கிட்டு திரியுறாங்க. எஜமானர்கள் காலை நக்கிப் பிழைக்க. கடைசியில் அதே எஜமானர்களின் காலால் தான் மிதியும் படுகிறார்கள். வலியில்லாத மிதி என்று எனி கதையளப்பார்கள்.- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளார். விதி முறைகளை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்டு தற்சமயம் மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நோர்வே பிரஜையான ஈழத்து கவிஞர் வி.ஜ.எஸ்.ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளார். இத்தகவலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய திரைப்பட நடிகர் ஜெயபாலன் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா - மாங்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். தனது தாயின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற வேளை அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் இலங்கை வந்த நோர்வே பிரஜை ஜெயபாலன், விசா விதிமுறைகளை மீறி யாழ்ப்பாணத்தில் கூட்டங்களை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை வந்த ஜெயபாலன் ஊடகவியலாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பல தரப்பினரையும் சந்தித்திருந்தார். http://www.eelanatham.net/articles/2013/11/24/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
ஹக்கீம்.. பசில்.. சொல்கைம்.. கதைச்சுக் கூட கோத்தா அசரவில்லை..! சோ.. இவர்களை எல்லாம் தமிழ் மக்கள் நம்பினால்..?????!- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
தேவை இல்லாமல்.. பெரிய இடத்து பெயர்களை இழுக்கப் போய் பொயட்டை விடுவிக்கிறதை வேண்டும் என்றே.. தாமதமாக்கிறாங்கள் போல..! இது தான் சொல்லுறது சும்மா விலாசம் காட்டக் கூடாது என்று. யாழிலும் நான் முகம் காட்டி எழுதிறனான் என்று இறுமாப்பு அடையுறவர். இவ்வளவு பின்புலம் இருக்கு என்ற துணிவில் தான் அது கூட. ஆனால் அதனை மகிந்த சுக்கு நூறாக்கிட்டார். இது ஒட்டுமொத்த தமிழருக்கும்.. டக்கிளஸ் வாலுகளுக்கும் ஒரு நாள் இது நடக்கும்... ஒரு நல்ல பாடமும் கூட. துளசி சொன்னது போல இவற்றை சிறீலங்கா அரசின் ஜனநாயக விரோத அடாவடிக்குச் சான்றாக பாவித்து சர்வதேச அனுதாபத்தை தமிழர்கள் பெற்றுக் கொள்வதும் நல்லது. எதுஎப்படியோ.... சக கள உறவு என்ற வகையில் இவரின் துரித கதியிலான.. விடுதலையை வரவேற்கிறோம். நாங்க சொல்லி எல்லாம் மகிந்த மசிய மாட்டார். அவரா கெதியா விட்டால் அவருக்குத் தான் நல்லது.- சிந்தனைக்கு சில படங்கள்...
தன் பிள்ளைக்கு மட்டுமல்ல.. பிறர் பிள்ளைக்கும் அப்பா என்று வாழ்ந்த தமிழன் என்றால் அது தேசிய தலைவர் பிரபாகரன் மட்டுமே..! தோழமைக்கு மதிப்பும் உயிரும்.... துரோகத்திற்கு தண்டனையும் கொடுக்கத் துணிந்த ஒரே தலைவன்.. தேசிய தலைவர் மட்டுமே..!- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
Colombo arrests visiting Tamil poet, bans gatherings ahead of Heroes Day [TamilNet, Saturday, 23 November 2013, 13:53 GMT] The operatives of the occupying Sri Lankan military on Friday arrested VIS Jayapalan, a well-known Eezham Tamil poet and an award-winning actor in Indian Tamil cinema, while the Norwegian passport holder was visiting the island on a tourist visa. The arrest took place in abduction-style. By arresting Jayapalan, Colombo was sending a message to Eezham Tamil diaspora that Tamils visiting the island should not address any meeting or gathering. Colombo's TID operatives could claim any meeting as a ‘gathering causing communal unrest,’ academic circles in Jaffna said. In the meantime, the SL Police in Ki'linochchi, on Friday told 40 people it detained that all gatherings and meetings have been banned until further notice in the district. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36842- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
இவர்கள் யாராலும் சிறீலங்கா சிங்களப் பேரினவாத அரசுக்கு சவால்விடத்தக்க அரசியலை முன்னெடுக்க முடியாது. அதற்கான எந்த ஆயத்தங்களோ.. திட்டங்களோ.. தொலைநோக்குகளோ இவர்களிடம் இல்லை. இவர்கள் பற்றிய ஒரு கற்பிதத்தை வழங்குவதை காட்டிலும் யதார்த்தமான இவர்களை திருமுருகன் காந்தி போன்றவர்கள் இனங்காட்டுவது போல இனங்காட்டிச் செல்வதே மக்களுக்குச் சிறந்தது. எதிர்காலத்திற்குச் சிறந்தது..! அதுவே புதிய தலைமுறைக்கு புதிய வழிக்கான வழிகாட்டுதலாக அமையும்.- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
அடுத்த முறை போக முன்னமே.. போய் வாற நோக்கத்தைச் சொல்லிட்டால் மகிந்தரே ரெட் காப்பெட் போட்டு வரவேற்பார்..! ஏன் ஆமி பொலிஸ் கவலை..???! இதனை இப்போதாவது பொயட் உணர்ந்திருக்கனும்..! இல்லைன்னா..????!- சிந்தனைக்கு சில படங்கள்...
- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
சூறாவளி நீங்க கவலைப்படுற அளவுக்கு அவர் சாதாரண தமிழன் அல்ல. பின்புலங்கள் பல உள்ள ஒரு வி ஐ பி.- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
இது கைதாகத் தெரியவில்லை. அன்பான உபசரிப்புப் போலவே தெரிகிறது. அதுவும் பொயட் போன்ற பலமான இந்திய.. சிறீலங்கா அரசியல் தொடர்புகள் உள்ள ஒருவரை கைது செய்ய வேண்டிய அவசியம்..???!- சிந்தனைக்கு சில படங்கள்...
இவை கல்லறைகள் அல்ல. பெற்ற வயிறுகள் பேசிக்கொள்ளும் கருவறைகள்..!- சிந்தனைக்கு சில படங்கள்...
எங்கள் படை தான் எங்களுக்கு அரண்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏன் யாழ் இணைய முகப்பு இப்படி சீர்குலைந்து காணப்படுகிறது.நாங்க அவதானிக்க ஆரம்பித்ததில் இருந்து.. கிட்டத்தட்ட ஒரு வாரமாக இப்படி தான் தெரிகிறது.- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
எங்கள் கல்லறைகளுக்கு உயிர் இருக்கு உணர்விருக்கு.. உண்மையான மானுடன் அதனை இடிக்க மனமே கொள்ளான். !!!- சிந்தனைக்கு சில படங்கள்...
சே - உலக மக்களின் போராளி. நே - விடுதலை இந்தியாவின் மக்கள் போராளி. வே - உலகத் தமிழர்களின் போராளி.- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
பழ.நெடுமாறன் உள்ளிட்ட 82 பேருக்கும் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ஜாமீன்: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு. கடந்த 13ஆம் தேதி தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன்புறம் உள்ள பூங்கா மற்றும் மரங்கள், சுற்று சுவர் ஆகியவற்றை காலை 5 மணிக்கு மாவட்ட எஸ்.பி. தர்மராஜன் தலைமையில் வந்த நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றுகிறோம் என்ற பெயரில் உடைத்து எறிந்தனர். சில நிமிடங்களில் அனைத்தையும் உடைத்துவிட்டு, இது நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடம் என்ற பெயர் பலகையையும் வைத்தனர். காலையில் 9 மணி அளவில் தகவல் அறிந்து திரண்டு வந்த உணர்வாளர்கள், நெடுஞ்சாலைத்துறை வைத்திருந்த வேலி மற்றும் பெயர் பலகைகளை உடைத்து அகற்றினர். இதனால் போலீசாருக்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் மோதல் ஏற்பட்டது. இதில் தடியடி நடத்திய போலீசார், 80க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர். பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், ஓய்வு ஏடிஎஸ்பி பொன்நிறைவன், அயனாவரம் முருகேசன் மற்றும் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் தஞ்சாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 19ஆம் தேதி மதுரை ஐகோர்ட் கிளையில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நெடுமாறன் தரப்பிற்காக தடா சந்திரசேகரன், வடிவேல் ஆகிய வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். அரசு தரப்பிற்காக ஆஜரான அடிசனல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், இவர்களுக்கு ஜாமீன் வழங்கவே கூடாது என்று வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சி.பி.செல்வம், பழ.நெடுமாறன் உள்ளிட்ட 82 பேருக்கும் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ஜாமீன் வழங்கினார். புதன்கிழமை இந்த வழக்கு முடிந்தவுடன் அதற்கான உத்தரவை எடுத்துக்கொண்டு திருச்சி வர காலதாமதமாகும். எனவே வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். பகத்சிங் நன்றி:நக்கீரன்- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
பழ.நெடுமாறன் உள்ளிட்ட 81 பேருக்கும் ஜாமீன்: நடராஜனுக்கும் முன்ஜாமீன்: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு. தஞ்சை அருகே உள்ள விளாரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்று சுவர் இடிப்பின் போது, எதிர்த்து போராட்டம் நடத்திய பழ.நெடுமாறன் உள்ளிட்ட 81 பேர் கடந்த 13ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். ஜாமீன் கோரி கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி செல்வம், 81 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நடராஜன், செல்வராஜ் ஆகியோருக்கும் இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=111520 - கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.