Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nedukkalapoovan

  1. நம்ம பிரண்டு கூட கொஞ்ச நேரமும் விளையாட விடுறாங்கல்ல. எப்ப பார் படி படின்னுகிட்டு. வாடா நாங்க படிப்பம்.
  2. என்ன இது கடலில நிற்க வேண்டியதுங்க எல்லம் சாப்பாட்டு மேசையில பிணமாக் கிடக்குதுங்க.
  3. உடலில் உள்ள ஒரு கலம் எப்படிப் பிரிஞ்சு இரண்டாகிறது. விளக்கப்படம்.
  4. பட்ட மரமோ.. பச்சை மரமோ வெட்டித் தறிக்காதீங்க. இவங்களும் பூமியும் நீங்களும் அனாதையாவிடுவீங்க.
  5. எங்களைச் சுத்தி ஆபத்து வீட்டில..வீதில மட்டுமல்ல.. விண்வெளியிலும் இப்படியாக்கா இருக்குது. தெரிஞ்சுக்கோங்கோ. அதற்காக யாரும் தற்கொலை பண்ணிக்கிறதில்லை. இதை எல்லாம் தாண்டித்தான் ஒவ்வொரு வினாடியும் வாழ்நாளில் கழிந்து கொண்டிருக்கிறது. அது எவ்வளவு பெறுமதியானது என்பதைப் புரிஞ்சு கொண்டால் போதும். !! [if you've seen films like "Armageddon," you know the potential threat asteroids can be for Earth. To meet that threat, NASA has built a map like no other: a plot of every dangerous asteroid that could potentially endanger our planet … at least the ones we know about.] படம் நன்றி முகநூல்.
  6. ஒரு துண்டு பீசாவை சாப்பிட்டிட்டு மிச்சத்தை குப்பைல போடுற குழந்தைகள் மேற்கு நாடுகளில். கீழை நாடுகளில் ஒருவேளை சாப்பாட்டிற்கு அல்லாடும் நிலையில் குழந்தைகள். யாரால் மனிதரிடத்தில்..இந்தச் சமத்துவமற்ற வளப்பரம்பல் நிலை உருவானது...??! அதனை சரிசெய்ய உண்ணாததை பகிர முன்கூட்டியே சித்தம் கொள்வோம். அநாவசிய.. நுகர்வைக் குறைத்து பகிர்வை ஊக்குவிப்போம்.
  7. சமகால யதார்த்தச் சூழலை வைச்சுக் கொண்டு பார்க்கையில் சொல்லப்பட்ட விடயங்கள் சில நல்ல..நியாயமான நோக்கங்களை வெளிக்காட்டி இருந்தாலும்.... எதிர்காலம் பற்றிய இனங்காட்டல்கள் தெளிவாக இல்லை. மீண்டும் மீண்டும்.. இந்தியா என்ற எதிர்கால உலகிற்கு ஒவ்வாத ஒரு கூட்டமைப்பை (இந்தியாவுக்குள்ளேயே இன்று.. பல புடுங்குப்பாடுகள் உள்ளன.) மையப்படுத்தி பேசிக் கொண்டிருப்பதிலும் அர்த்தமில்லை..!
  8. ஐயாவின் இந்தப் பேச்சை முழுமையாகக் கேட்டேன். பல விடயங்களை சமகால யதார்த்தங்களோடு நின்று.. நியாயமாகவே பகிர்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது..! இருந்தாலும்.. இந்தியாவை மையப்படுத்தியே அவர் தமிழர்களின் உரிமையை தக்க வைக்க நினைக்கிறார்.. அதற்கு அப்பால் செல்ல பயப்படுகிறார்..!
  9. இது தான் ஐயா யாழ்ப்பாணத்தில் சொன்ன கருத்து..
  10. எரிக்சொல்கைம் யார்..???! புலிகளுக்கு அப்பால் அவர் தமிழ் மக்களுக்கு எந்த வகையில் சொந்தம்..???! புலிகளால் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் சொல்கைம். அந்தச் சொல்கைமின் தயவில் தான்.. இன்று இணக்க அரசியல் செய்யப்புறப்பட்ட ஐயா உயிரோடு வந்திருக்கிறார். ஹக்கீம்.. சொல்லி 72 மணி நேரமாகியும்.. கோத்தா அசறவேயில்லை. ஆனால் ஹக்கீமிற்கு முதல் வாக்கு..! இப்ப கூட கோத்தாவிற்கு காயப்படாத கல்லெறிகள்.. இது தான் ஹக்கீம்.. சோவுதாவுக் சொல்லி அனுப்பினது..???! ஆனால்.. புலம்பெயர் மக்களின் முன்னெடுப்பில் சர்வதேச விசாரணை என்பது தான் ஐயாவையும் காப்பாற்றி இருக்குது. இந்திய ஊடகங்களுக்கு இந்தியாவை.. சிறீலங்காவை புகழ்ந்தளித்த.. புலிகளை விமர்சித்து அளித்த மோசமான செவ்விகள் அல்ல. மீண்டும் பொட்டம்மான்.. செஞ்சோற்றுக் கடனுக்காக. இந்தச் சம்பவத்தின் பின்னாவது ஐயாவின் மனநிலைகளில் நல்ல மாற்றம் ஏற்பட்டால் உண்டு. இன்றேல்.... நாய் வால் கதை தான். எதுஎப்படியோ சக கள உறவாக ஐயாவை.. மீண்டும் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி.
  11. பொயட்டே விரும்பவில்லை.. தன் கைதை சிறீலங்கா அரசிற்கு எதிராக பாவிக்க. அந்த வகையில் தான் அவரது செயற்பாடுகள் இருந்தன. நான்.. ஹக்கீமோடு பேசி இருக்கிறேன்.. பசில்லோடு அவர் பேசி இருக்கிறார்.. எல்லாம் நல்லா போய்க்கிட்டு இருக்குது.. நான் இன்ன உயர் அதிகாரியோடு அமைச்சரோடு தொடர்பில் இருக்கிறேன்.. கைதில் இருந்தாலும்.... ஊடக வாயிலாக..வெளி உலகத்தோடு தொடர்பில் இருக்கிறேன்.. எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை.. எவரும்..எந்த அசெளகரியமும் தரவில்லை... இப்படியான வாக்குமூலகங்களை அளித்துக் கொண்டிருக்கும்.. ஒரு கைதின் அடிப்படையில் சிறீலங்கா அரசிற்கு.. எதிராக என்ன பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியும் என்பது.. சின்னவருக்கே வெளிச்சம்..! இதனை உதாரணமாகக் காட்டினால்.. சிறீலங்காவில் கைதிகள் மேற்குலக தரத்திற்கும் மிக மேலாக சகல உரிமைகளோடு கையாளப்படுப்பவதாக எல்லோ உலகம் கருதும். மேலும்... விசா விதிகளை மீறிய தமிழர் ஒருவர் மீது கூட.. இவ்வளவு இலகு வழியில் நெகிழ்வோடு.. கண்ணியத்தோடு..சிறிலங்கா அரசு நடந்து கொள்கிறது.. அங்கு என்ன இனத்துவேசம் இருக்கு என்று தான் உலகம் நினைக்குமே தவிர.. இதனை எப்படி சிறீலங்காவிற்கு எதிராக பிரச்சாரப்படுத்த முடியும்..???! இவை உள்ளதைக் கெடுக்கும் நடவடிக்கையாக அமைவதோடு உண்மையான உயிர் அச்சுறுத்தலுக்குள்ளான மக்களை பெரிதும்... ஆபத்தான சூழலில் தள்ளிவிடுவதையே செய்யும்..!!! இருந்தாலும்.. இத்தனைக்குள் இருந்தும்.. இந்தக் கைதை வெளியில் இருந்தவர்கள் சிறீலங்கா அரசிற்கு எதிராக பயன்படுத்தத் தவறவில்லை. ஆனால் சின்னவர் அவர்களையும் விடுவதாக இல்லை. ஒரே படத்தில் நடித்து விருது தட்டிச் சென்றது போல.. ஒரே கைதில்.. சிறீலங்காவிற்கு நல்ல விருதை வாங்கியும் கொடுத்திருக்கிறார் பொயட். எல்லாம் நன்மைக்கே..! எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த உலகினை..???!
  12. பெரியவர் நாடு திரும்பி விளக்கம் கொடுக்க முதலே சின்னவர் விளக்கம் கொடுக்க ஆரம்பிச்சிட்டார். உண்மையில்.. இவர்கள்.. தமிழ் - முஸ்லீம் மக்களிடையே சிங்களம் தூண்டிவிட்ட.. முரண்பாடுகளில் குளிர்காய்ந்து அரசியல் செய்ய முனைகிறார்கள் போலவே தெரிகிறது. முஸ்லீம் காங்கிரஸின் தோற்றம் வளர்ச்சி கூட இந்த முரண்பாட்டுத் தளத்தை வலுப்படுத்தி உருவான ஒன்று. அதனால் தமிழ் - முஸ்லீம் நெருக்கடியை சிக்கலாக்கி அதில் ஆதாயம் தேடியவர்களில் அஷ்ரப்.. ஹிஸ்புல்லா.. ஹக்கீம் போன்றவர்கள் முதன்மையானவர்கள். தமிழ் முஸ்லீம் சமூகங்களிடையே இருக்கும் பிரச்சனையை ஓரிரு வால்பிடிகள் தீர்க்க முடியுமுன்னா அதனை எப்பவோ தீர்த்திருக்கலாம். அதன் கருவூலம்.. ஆதி மூலம் தெரியாமல்.. இவ்வளவு காலம் இருந்த.. சின்னவர் இப்ப... அளிக்கும் விளக்கமோ செமக் காமடி.! இவர் இப்ப கண்டுபிடிக்கும் காரணத்தை தான் புலிகள் அன்று சொன்னார்கள். தமிழ் - முஸ்லீம் மக்களிடையே பிரேமதாச அரசு சீண்டு முடிகிறது. கிழக்கில் இரு இனங்களிடையேயும்..இன விரோதத்தை வளர்க்கிறது. அதனை வடக்கிலும் பரவ அனுமதிக்க முடியாது. வடக்கிலும் கிழக்குப் போல சில கைக்கூலிகளை வைச்சு அரசு தமிழ் முஸ்லீம் விரோதத்தை வளர்க்க முனைகிறது. இந்தப் பிரச்சனைக்கு ஒரு தற்காலிக தீர்வாக முஸ்லீம் மக்கள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு நகர்வதன் மூலம் சிங்கள அரசின் திட்டத்தை முறியடிப்பதோடு சரியான காலம் கனியும் போது மீண்டும் அவர்களின் வாழ்விடம் நோக்கித் திரும்பலாம். அவர்களின் அசையும் அசையாத சொத்துக்களுக்கு புலிகள் பொறுப்பு என்று தான் அன்று அறிவிப்புத் தரப்பட்டது. அதை பெரியவர் இவ்வளவு காலமும் தனக்கு வசதியா மாற்றி உருமாற்றி சோடிச்சு பேசி.. தன்னை.. இரண்டு இனங்களிடையேயும் இயற்கையாக உருவான பகையை போக்கும் இரட்சகர் போல.. காட்டி வந்தார். பிரச்சனைக்குரிய காரணிகளை இனங்காணவோ.. சுட்டிக்காட்டவோ.. நீக்கவோ முற்படல்ல. இப்ப கூட அதை அவர் செய்யல்ல. இப்ப புதிசா கோத்தா தான் இப்படிச் செய்வது போல.. சின்னவர் செம விளக்கம் அளிக்கிறார். கோத்தா.. செய்வது பிரேமதாச அரசின் கொள்கைத் தொடர்ச்சியையே. அதனை புலிகள் கையாண்ட போது விளங்கி அதற்கு ஒத்துழைத்து இரு இனங்களும் நடந்திருந்தால்.. உவர் பெரியவர் போன்ற இரட்சகர்கள்.. என்று.. தம்மை காட்டிக் கொள்வோர் மக்கள் முன் உருவாகி இருக்க முடியாது. ஆனால் அன்று புலிகள் நல்லெண்ண அடிப்படையில் எடுத்த ஓர் நகர்வை மோசமாக விபரிச்சு.. அதில் ஆதாயம் தேடிக் கொண்ட நபர்களில் பொயட்டும் ஒருவர். அதனை எந்தச் சின்னவர் பெரியவர் வந்தாலும் மறுக்க முடியாது. பொயட் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியாக இது விடயத்தில் நடந்து கொண்டதுமல்ல.. அதனைக் காட்டியே புலிகளை எதிர்மறையாக.. விமர்ச்சித்து இந்தியா மற்றும் பிற தமிழ் தேசிய எதிர்ப்புக் கூடாரத்தில் தனக்கென்று ஒரு அணிசேரா.. முகமூடியை உருவாக்கி அணிந்து கொண்டு.. அதில் பிழைத்துக் கொண்டு வருகிறார். அதனையே தொடர்ந்து கொண்டும் இருக்கிறார். அதுதான் அவர் மீதான மக்களின் வெறுப்புக்குக் காரணம். ஒரு கலைஞன் என்பதற்கு அப்பால் அவர் மக்களால் வெறுக்கப்பட இது தான் முக்கிய காரணம்.
  13. தமிழகம் புதுவையில் மாவீரர் நாள் வளைவு. (2013) நன்றி முகநூல்.
  14. மாற்றினத்தார் ஆகினும் மனிதர்கள் என்று மதிக்கும் மாண்பை வளர்த்தவன் எங்கள் தலைவன் பிரபாகரன்.
  15. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் தினம் ( படங்கள் ) நவம்பர் 27 மாவீரர் தினம். இந்த நாளை உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் தமிழின உணர்வாளர்கள் அனுசரித்து வருவது வழக்கம். ஈழத்தில் மாவீரர்கள் துயிலகங்களில் அனுசரிக்கப்பட்டு மாவீரர் உரை நிகழ்த்துவார் பிரபாகரன். 2009 முள்ளிவாய்க்கால் கொடூர சம்பவத்திற்கு பிறகு துயிலகங்கள் தகர்க்கப்பட்டது. அதன் பிறகு ஏதாவது ஒரு இடத்தில் மாவீரர் தின வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பொது இடங்களில் இந்த நிகழ்ச்சிக்கு தடைகள் இருந்த போதிலும் கடந்த ஆண்டில் சென்னை கடற்கரை போன்ற இடங்களில் குழந்தைகள், மாணவர்கள் ஏராளம் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள். இந்த ஆண்டு துயிலகம் போல தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் தின வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து உணர்வாளர்கள் கலந்த கொள்கிறார்கள். மேலும் வெளிநாடு களில் இருந்தும் உணர்வாளர்கள் வந்து கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 27 ந் தேதி புதன் கிழமை நாள் முழுவதும் மாவீரர் தின நிகழ்வுகள் நடக்கிறது. - இரா.பகத்சிங் http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=111887
  16. சிறீலங்கா அரசு நினைக்குது.. உலகம் இன்னும் தன் கைக்குள்ளைன்னு. உலகம்.. இப்ப குக்கிராமம். நாங்க சொல்ல நினைக்கிறதை சேர்க்க வேண்டிய இடத்தில சேர்க்க பல வழிமுறை வந்தாச்சு. நோட்டீஸ் ஒட்டி கூட்டம் போட்டுத்தான் அதனைச் சொல்லனும் என்ற நிலை இன்றில்லை. அந்த வகையில்... சிறீலங்கா தமிழ் மக்களை முன்னைய காலங்கள் போன்று ஏமாற்ற ஏலாது. ஏமாற்றவும் முடியாது. அந்த அரசியல் மலையேறிட்டுது. அப்படி ஒரு கணக்கை இன்னும் வைச்சிருந்தா.. அதனை முடிக்கச் சொல்லுறது தான் நல்லம். இன்றைக்குள்ள பிரச்சனை.. சிங்களத்திடம் உள்ள சீன சார்பு தான். அதற்கான பிரதிபலனை.. கமரூன்.. தமிழர்களோடு மொட்டைமாடியில் நின்று ஒரு சிம்பாளிக்கா காட்டிட்டு வந்திட்டார். அது வெறும் காட்சி அல்ல. அறிவிப்பு. ஆக.. எந்தச் சீனாவை வைச்சு இவ்வளவு காலகமும் சதுரங்கத்தை தனக்கு சாதகமா ஆக்கிச்சோ அதே சீனாவால.. வரப்போற நெருக்கடிகளுக்கும் சிறீலங்கா முகம் கொடுக்கனும். ஆனால்.. இது சதுரங்கம். தமிழர்கள் தாறுமாறா காய் நகர்த்தி.. ஆட்டத்தை மோசமா ஆடினா.. கமரூன் நாளை கொழும்பில் போய் நிற்கவும் வாய்ப்பு வரலாம். எல்லாம் எங்கள் காய் நகர்த்தலில் தான் உள்ளது.சீனாவோடும்.. இந்த வேளையில் தமிழர்கள் பேரம் பேச வேண்டும். கடந்த காலம் போல.. சீனாவை ஒதுக்கி வைக்கிறது தமிழர்களுக்கு நல்லதல்ல. இந்த சதுரங்கத்தில்.. இவர்கள் எல்லாம் சுண்டக்காய்கள்.கோத்தா எறிஞ்சு பிடிச்சு விளையாடுறார். நாங்கள் விடுப்புப் பார்க்கிறம். சுண்டக்காய் தானாப் போய் கோத்தா கையில சிக்கிட்டுது. அவ்வளவும் தான். இது தான் யதார்த்தம். இதுவரை கூட்டமைப்பு இவர் கைது.. விடுதலை பற்றி ஒன்றுமே சொல்லேல்ல. கூட்டமைப்பு மட்டுமல்ல.. தமிழ் தேசிய சக்திகள் ஒன்றுமே சொல்லேல்ல. அதில் இருந்து விளங்கிக் கொள்ளனும். இது மாற்றுக்கருத்துப் பாசறைகளின் கூடாரத்துக்கு கோத்தா அடிச்ச ஆட்லறி மட்டுமே. அடிச்ச ஆட்லறிக்கு பயந்து கோத்தா கையில உள்ள என்ன புரஜெக்டோட வெளில வருனமோ யார் அறிவார். அந்த வகையில் எனி இந்தச் சுண்டக்காய்கள் தொடர்பில் இரட்டிப்பு அவதானம் அவசியம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.