இப்படியும் மனிதர்களை ஏக்கங்களோடு வாழ வைத்துக் கொண்டு.. நாம் திறமாய்.. வசதியாய் வாழ்கிறோம் என்று மார்தட்டிக் கொள்கிற இழி புத்தி.. சுயநலம் மனிதனுக்கு மட்டுமே இருக்க முடியும்.
இது ஒன்றும் தமிழர் தேசத்தின் கனிய வள இருப்பை காட்டும் படம் அல்ல. இது சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளின் பிரதான பரம்பல் நிலைகளைக் காட்டும் படம். சுமார் 70,000 - 150,000 வரையான சிங்களப் படைகள் தமிழர் நிலத்தில் உள்ளன.
விடியங்காத்தால எழும்பி.. முழுகி.. தலையில துவாயைக் கட்டிக்கிட்டு.. அலங்காரிச்சு.. துளசி செடிக்கு தண்ணிவிட்டு.. புருசனைக் குளிப்பாட்டி.. தேத்தா கொடுத்து.. இட்லி தீத்தி விட்டு... அப்புறம் வேலைக்குப் போறாரோ இல்லையோ.. கோட் மாட்டிவிட்டு.. சூ தொடைச்சு விட்டு.. ஸ்கூட்டர் கீயை எடுத்து கையில கொடுத்து.. ரா ரா காட்டிட்டு திரும்ப.. பிள்ளை அழும்.. அப்புறம் அதைத் தூக்கிக் கொண்டு போய்.. துப்பரவு செய்து.. குளிப்பாட்டி.. சப்பா... எழுதவே நமக்கு களைக்குது.. இத்தனையும் செய்தால் தான் அவள் இந்தக் காலத்திலும்.. குடும்பப் பெண்ணாமில்ல. இதுக்குப் பெயர் குடும்பப் பெண் அல்ல.. அடிமாடு.
பூஜைக்கும் போகும் பலியாடு. *** இதனைப் பாவம் என்பதா.. பரிதாபம் என்பதா.. விதி என்பதா..??! இன்னொரு பக்கம்.. பங்கிறச்சி வாங்கிறவன் வெட்டு வெட்டு என்றான்.. கசாப்புக்கடை வைச்சிருக்கிறவன்.. முழுசு முழுசா தா என்கிறான்.. கொத்துரொட்டி போடுறவன்.. வெட்டண்ணை வெட்டு எண்ணொய் கொதிக்குது என்றான்.. இறுதியில் ஒருவன் மட்டும்.. இந்தக் கோமாளித் தனங்களை எல்லாம் தகர்த்து எறிந்து.. இந்த உயிரைக் காப்பதா.. விடுவதா என்று யோசிக்கிறான்.. ஓரமிருந்து. எது தேவை..??! அதை தீர்மானிப்பதாக காலம் மட்டுமே உள்ளது. !!!
ஏன்னா மலலாவை வைச்சு.. ஆப்கானிஸ்தானில் இதே உலகம் செய்த கொடுமைகளை மறைக்க.. உலக முஸ்லீம்கள் மத்தியில்.. தாங்கள் முஸ்லீம்களுக்கு எதிரியில்லை என்று காட்ட ஒரு வாய்ப்பிருக்குது. ஆனால்.. விபூசிகா.. வெறும் வடலி பெத்த தமிழ் பிள்ளையாச்சே. அங்க என்ன ஒயிலா இருக்குது.. இல்ல ஏவுகணை வைக்க வசதியா இருக்கு தமிழனிடம். தமிழனே அங்க அடிமை.. இதில.. இவை வந்து எங்க தலைப்போட.???! !!!!
என்ன தனிய இருந்து யோசிக்கிறேள். நாங்க இருக்கமில்ல... உங்க கூட பிரண்ட்சிப்பா இருந்துக்குவம். அதுக்கு மேல ஒரு இஞ்சும் தாண்ட மாட்டம். ஆல் ரைட். டீல்..! அப்ப நாங்க எனி பிரண்ட்சு. நீங்க.. ஜாலியா இருக்கலாமே..! வெளியைப் பார்த்து வாழ்க்கை வெறுமைன்னு வெறிக்காம.
இன்று மனித உரிமைகளில் அக்கறை உள்ளவர்களாகக் காட்டிக் கொள்பவர்கள் அன்று.. எங்கள் மண்ணில் எங்கள் அரசுகளை மக்களை கொன்றொழித்த கயவர்கள் என்பதை நாம் இன்று அவர்கள் மண்ணில் அகதி அந்தஸ்துக்காக மறந்துவிட்டுள்ளோம். இதே நாளை சிங்களவனையும் அவனது கொடுமைகளை மறந்து நாம்....???! ஏன்னா நாம் இப்போது அடிமைகளாக வாழ்வதில் திருப்தி கொள்ளப் பழகிவிட்டோம். !!!!