Everything posted by nedukkalapoovan
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
மிக்கும் விழேல்ல கிபீரும் விழேல்ல அப்படின்னுதான் அரசு சொல்லுது. புலிகள் மட்டும் தான் ஒருதலைப்பட்சமா சொல்லி இருக்கினம்..! எதுக்கும் ஆதாரமில்ல..! புலிகள் உத்தியோகப்பூர்வமா அறிவிச்சத்தை அரசு நையாண்டி பண்ணுது..!
-
பெயர் மாற்றங்கள்.
பெயர் வைச்சது வைச்சதுதான்..! நாங்க எல்லாம் மாற்றமாட்டம்..! சோ சொறி..! அப்புறம் தமிழிற்கும் மாற்றும் எண்ணமும் கிடையாது.. சோ சொறி..! :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அப்ப இப்ப குறுக்காலவா போயிட்டு இருக்கம். ஆர்யா சாருக்கும் உங்களுக்கும் நன்றிகள். பதில் வாழ்த்துக்கள். உங்கள் பிறந்ததினம் வரேக்க கணக்கில வைச்சுக்கோங்கோ..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்ன சார் கேட்குறீங்க. எங்களுக்கு எங்கள் பிறந்த தினம் தான் சார் தெரியும். குருவி காகம் அதுகள் எப்ப பொரிச்சுதுகள் என்பது எப்படித் தெரியும் சார்..??!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்ன சார் 66 வருசத்துக்கு முன்னாடி பிறந்த நம்மளை பின்னால பிறப்பிச்சிருக்கிறீங்க. இதென்ன நம்ம மறுபிறப்பா..??! நம்புங்க சார். :P நன்றி ராசா. :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எங்களைத் தவிர மிச்ச எல்லாருமே பலே கில்லாடிகள். இங்குளூடிங் நீங்களும் உங்கள் நாய்க்குட்டியும். நமக்கு வயசு 95யே தான். உங்களுக்காக கூட்டக் குறைக்க நமக்கென்ன தேவை பாருங்கோ. எங்கையோ குப்பைத் தொட்டிக்க கிடக்கிற நாய்க்குட்டியைத் தூக்கிட்டு தெருவில போற உங்களுக்காக.. நாங்க ஏங்க கஸ்டப்படனும் தேவையில்லாதது சொல்லனு.. நாம வயசெல்லாம் சரியாத்தான் கணக்கிடுறம். விசா அசைலம் என்று கள்ள பிறப்பத்தாட்சிப் பத்திரம் பாஸ்போட் செய்யல்ல இன்னும். செய்தா குறைக்கலாம் கூட்டலாம். வாழ்த்து சொல்லத்தான் தெரியாதுண்ணா. வம்புக்கு இழுக்காமல் கூட இருக்க முடியல்லையோ. எங்களை அழிச்சு பெண்களைக் காக்க வேணும் என்ற நிலையே எங்களுக்கு வெற்றி. நன்றி நன்றி வெற்றி வாங்கித் தந்ததுக்கு. ------------------------------------------ 95 வயசு பாடையில போறது என்று நினைச்சு பாரபட்சம் காட்டாம மேலும் வாழ்த்துச் சொன்ன குமாரசாமி சார் கறுப்பி மேம் பெஸ்சி றிங்ஸ் எல்லோருக்கும் நன்றிகள். 95 வயசிலும் சாதிக்க முடியும் என்று காட்ட வேணும். காட்டுவம் குமாரசாமி சார். :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மோனை இது நெசமா வாழ்த்துத்தானோ இல்ல...வசையோ...! அப்பு ராசா எல்லாம் உங்களைப் போல இளசுகள் தாற ஊன்று கோலிலதான் நடக்கிறன் உங்கினை. மூக்கி போல பொடிச்சியள் எப்படா கால்தடம் போட்டு விழுத்துவம் என்றிருக்குதுகள். தெரிஞ்சும் தானே பொடிச்சியளின்ர குணம். அவைட குட்டுக்களை வெளிக்க வைச்சிட்டால் அவை அப்படித்தான் ஆகாசத்துக்கும் பூமிக்கும் பாய்வினம். டோன்ட் வொறி மோனை. வாழ்த்து நன்றியப்பு. நீங்களும் வாங்கோ ராசா கிரமமா.இந்தக் கிழடு இன்னும் எத்தினை நாளைக்கு அப்பு ஊசலாடுதோ..! அட கருத்தில முட்டுப்பட்டாலும் என்ர கன்றுக்குட்டிகள் சபேசனும் வர்ணனும் வாழ்த்துச் சொன்னது கன்றுக்குட்டி கத்த பால் சுரக்கிற தாய் மடி போல மனசு பாசத்தில மிதக்குது. நன்றி ராசா நன்றி. எல்லாருக்கும் நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்ன பல்லு விழுந்திட்டு என்றதால இளமை தொலைச்சிட்டம் என்று நினைக்கிறீங்களோ..?! அப்பு ராசா என்ர அண்ணன் 94 வயசில டிகிரி எடுத்தவர். தெரிஞ்சுக்கோங்க. வயசு அண்ணோன் என்று போட்டதைப் பார்த்திட்டுத்தான் இப்படியும் ஒரு விசயம் இருக்கு என்று தெரிஞ்சு வயசைப் போட்டமில்ல. அதிலும் சந்தேகமா...?! மூக்கி மேம் 95 வயசு வரைக்கும் வாழ்ந்தாப் பிறகுதான் உலகத்தில இன்னும் வாழ நிறைய இருக்கு என்ற நிலை புரிஞ்சுது. இப்பதான் வாழ்க்கையிட அர்த்தம் புரிஞ்சுது. வாழ்க்கையிட அர்த்தம் புரிஞ்சு வாழுறதுதான் வாழ்க்கை. போகப்போற இந்தக் கிழட்டை ஏன் போட்டுத்தள்ள அவதிப்படுகிறீர்கள். தொந்தரவா இருக்கோ. பஸ்ஸுக்க வந்து சில்மிசம் செய்யுமென்று கவலைப்படுறியளோ. அப்படி செய்யாது இது.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
புதிதா வந்து எழுதும் போது எப்போது எல்லா இடமும் எழுத விடுவார்கள் என்றுதான் இருக்கும். அதைப் புரிந்துகொண்டு நல்ல கருத்துக்களை எழுதலாமே. புதியவர்கள் எமக்கு உற்சாகம் தரும். அப்படிச் செய்யாமல் தமிழில் இப்படி அப்படி என்று சொல்வது பொருத்தமாகாது.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
/ஏன் சார் கால்கடுக்க நிற்கிறிங்க. கதிரை இல்லையோ/ இப்படியான கருத்துகளில் காத்திரம் என்ன? தமிழில்ல அப்படி இப்படி என்றால் கண்டபடிக்கும் எழுதனுமா?
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
- புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
நகைச்சுவையா எழுதுகின்றீங்கள். காத்திரமாவும் எழுதுங்கள். - புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.