Everything posted by மோகன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இம்முறை இணைய வழங்குநர் பக்கமே பிரச்சனை இருந்ததால் எனக்கான வேலை என்று எதுவும் இருக்கவில்லை
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கடந்த 18 மணித்தியலாங்களாக யாழ் இணையத்தின் இணைய வழங்குநர்களின் datacenterல் ஏற்பட்ட தவறினால் யாழ் இணையம் முற்றாக இயங்கவில்லை. ஏற்பட்ட தவறு இன்னமும் முழுமையாகச் சரி செய்யப்படவில்லை என்பதல் அடுத்து வரும் சில மணிநேரங்களுக்கு சிறு சிறு தடங்கல்கள் வரச் சந்தர்ப்பம் உள்ளது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அந்தப் பகுதியில் எதுவித மாற்றங்களும் செய்திருக்கவில்லை. ஏன் புள்ளிகள் வழங்க முடியவில்லை என்று காரணம் தெரியவில்லை. தற்போது சில திருத்தங்களைச் செய்துள்ளேன். அது ஏதாவது உதவுகின்றதா எனப்பார்க்கலாம். ஆம் அப்படி ஒரு பிரச்சனை உள்ளது தான். இலகுவான தீர்வு என்றால் அப்படி இலக்கங்கள் பாவிக்க வேண்டிய தேவையெனில் இங்கு கருத்து எழுதும் பகுதியில் உள்ள toolbar ல் உள்ள number list என்பதைப் பாவிக்கலாம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்போது சரி என நம்புகின்றேன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கருத்து பதிந்ததில் இருந்து 720 நிமிடத்திற்குள் மாற்றங்கள் செய்ய முடியும். அதன் பின்னர் மாற்றங்கள் செய்ய முடியாது. கடந்த காலங்களில் ஏற்பட்ட சில அனுபங்களின் அடிப்படையில் இந்த நடைமுறை நீண்டகாலத்திற்கு முன்னரே அமுலுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆம் அப்படி சின்ன மாற்றம் செய்யப்பட்டதுதான் 😃
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்ன மாதிரி உங்களுக்கு காண்பிக்கின்றது?
-
அனைவருக்கும் வணக்கம்
வாலி உங்கள் மூலப்பதிவு யாழ்களத்தில் இப்போதும் உள்ளது. இணைப்பு .யாழ் களத்தின் பதிவுகள் அனைத்தும் 2 வருடத்திற்கு மேல் பதில்கள் எதுவும் வைக்கப்படாது விட்டால் archive செய்யப்பட்டுவிடும். களத்தின் வேகத்தினை அதிகப்படுத்தவே இச்செயற்பாடு இங்கு உள்ளது. அவ்வாறான பதிவுகளுக்கு பதில்கள் வைக்கமுடியாதே தவிர அவை எப்போதும் பார்வைக்கு இருக்கும். அவ்வாறான பதிவுகளில் பதிவுகள் வைக்க விரும்பினால் அதனை மட்டுறுத்துனர் archive பகுதியில் இருந்து மீள பதிலளிக்கும் நிலைக்கு கொண்டுவரவும் முடியும். இதை நீங்கள் எழுதியபின் உங்களிடம் நான் தொடர்பு கொண்டு சில மாற்றங்களுடன் பாவிக்க அனுமதி கேட்டு உங்கள் அனுமதியுடன் தான் 2010 ம் ஆண்டில் இருந்து இந்த வரிகள் இங்கு பாவிக்கப்படுகின்றது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பலவேளைகளில் இணைகக்கும் அசையும்படங்கள் தளத்தின் வேகத்தினைக் குறைப்பதால் நேரடியாக படங்கள் காண்பிக்கும் முறை நீக்கப்பட்டுள்ளது. எனினும் அது நிரந்தரமாக இருக்காது என நம்புகின்றேன். 😁
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நேரடியாக ஆங்கில உச்சரிப்பினை எழுதுவதை விட ஆங்கிலத்தில் இருப்பதே மேலானது என்று நினைக்கின்றேன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆங்கில மாதங்களையே அப்படியே தமிழுக்கு மாற்றியிருந்தேன். இது தவறாக அமையும் எனில் மீண்டும் ஆங்கிலத்திற்கே செல்ல வேண்டும். தமிழ் வல்லுனர்கள் தான் ஆலோசனை தர வேண்டும்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சுவைப்பிரியன் யாழ் இணையம் இடையிடையே வேகமிழந்து போகின்றது. அந்தச் சந்தர்ப்பத்தில் தான் நீங்கள் வருகை தந்து உங்களுக்கு அவ்வாறாறு பிரச்சனை ஏற்பட்டதோ என்று தெரியவில்லை. இன்று காலையும் இப்போதும் நான் முயற்சித்துப்பார்க்கும் போது முகக்குறிகள் வேகமாகவே காண்பிக்கின்றது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பார்வையாளர் எண்ணிக்கை மற்றும் திண்ணையின் பழு காரணமாக இடையிடையே வேகம் குறைவாகத் தான் உள்ளது. பார்ப்போம் திண்ணையை நீக்கினால் சற்று வேகமெடுக்கும் 😄
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நீங்கள் கையொப்பத்தினைக் காண்பிக்காது விடவும் என்பதைத் தெரிவு செய்துள்ளீர்கள். அதனாலேயே காண்பிக்கவில்லை. https://yarl.com/forum3/settings/signature/ பகுதிக்குச் சென்று மீளவும் காண்பிக்கச் செய்ய முடியும்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
திருத்தி உள்ளேன்
- ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் நினைவு நாள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்போது சரியாக இருக்கும் என நம்புகின்றேன்
-
பெயர் மாற்றங்கள்.
Jude கேட்டுக் கொண்டபடி கற்பகதரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இன்றும் ஒரு புதுப்பித்தல் செய்ய வேண்டியிருந்தது. கடந்த முறை அறிவித்தலையே மீளவும் active செய்திருந்த போது திகதியினை கவனிக்கத் தவறிவிட்டேன். பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தலுக்காக தளம் காலத்திற்குக் காலம் புதுப்பிக்கபடுவது வழமை. இன்றும் புதிய பதிப்பிற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
- ஈழநாதன் நினைவு தினம்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஈழப்பிரியன் தவறு சரி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்தும் பிரச்சனையாக இருப்பின் அறியத் தாருங்கள் ஏராளன் திரையின் அளவினைக் கொண்டே என்ன என்ன காட்டப்பட வேண்டும் என தீர்மானிக்கப்படுகின்றது. இங்கு உங்கள் கணினி திரையானது சிறியது என நினைக்கின்றேன். பின்னுட்டத்திற்கு அழுத்தும் போது அதில் தோன்றும் பின்னூட்டத்திற்கான பெட்டி இன்னமும் சிறிதாக இருக்கும். அதனாலேயே உங்களுக்குக் காண்பிக்கவில்லை
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏராளன் கணினி பாவிப்பவர்களுக்கு மட்டுமே இந்தத் தெரிவு காண்பிக்கும்.
-
பெயர் மாற்றங்கள்.
எவ்வாறு மாற்றிக் கொள்ள விரும்புகின்றீர்கள் என அறித் தந்தால் மாற்றிவிடுகின்றோம்:
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கள உறுப்பினர்கள் சில காலத்திற்கு களத்தில் உள்நுழையாவிடில் அவர்களின் நிலை தானியங்கியால் மாற்றப்படும். மீண்டும் உள்நுழைந்து கருத்துக்கள் வைக்கும் போது அவர்களின் நிலை பழைய நிலைக்கு மாறும்.