Everything posted by மோகன்
- வட்டக்கண்டல் படுகொலையின் நினைவுநாள்
- கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு தினம்
-
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் வீரவணக்க நாள் இன்று.
until
-
புரட்சித் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின்நி னைவு நாள் இன்று
until
-
ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நாள்
http://old.yarl.com/forum/index.php?showtopic=813&pid=147434&mode=threaded&show=&st=& https://www.google.no/webhp?sourceid=chrome-instant&ion=1&espv=2&ie=UTF-8#q=site%3Ayarl.com அப்துல் ரவூப்
-
பெயர் மாற்றங்கள்.
எப்படியோ விடுபட்டுப் போய் விட்டது. தற்போது கேட்டுக் கொண்டபடி மாற்றம் செய்துள்ளேன். தொடர்ந்து இணைந்திருந்தால் மாற்விடுகின்றேன்.
- முல்லைத்தீவு ஒதியமலை படுகொலை நினைவுதினம்
- மாவீரர் நாள்
-
பண்டார வன்னியன் நினைவு தினம்
முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர்.யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில் வன்னி வணங்கா மண்தான், வன்னியர்கள் வீர மறவர்கள்தான்.வன்னிக்குள் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள் என நாம் குறிப்பிடும் ஒல்லாந்தர்கள். 1782-ல் வன்னியை கைப்பற்ற அவர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “ஒல்லாந்தர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும் அவர்கள் காணவில்லை” என்று. ஒல்லாந்தர் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திரிகோணமலை வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடா கொரில்லா போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன்தான் பண்டார வன்னியன்.முல்லைத்தீவில் நின்று பண்டார வன்னியனின் வரலாற்றுத் தோளுரசியதில் மேலும் ஓர் முக்கிய செய்தியுண்டு. ஆங்கிலேய மேலாதிக்கத்திற்கெதிராய் பண்டார வன்னியன் நடத்திய கலகத்தின் உச்சம் எதுவென்றால் ஆங்கில வெள்ளையர்களின் முல்லைத்தீவு கோட்டையை அவன் முற்றாகத் தாக்கியழித்து நிர்மூலம் செய்ததுதான் அது. அதே முல்லைத்தீவில் முப்பதாண்டு கால போராட்டம் சாதித்த தமிழருக்கான ராணுவ வளங்கள் யாவும் தகர்ந்துபோய்க் கிடந்த ஓர் தருணத்தில் பண்டார வன்னியனின் வீரத்தை சமகாலத் தோழமைக்கு குறியீடாய் நிறுத்த நிச்சயம் காரணம் இல்லாமல் இருந்திருக்காது.பண்டாரவன்னியன் முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில் வரையிலுள்ள 2000 சதுரமைல் நிலபரப்பை ஆட்சி செய்து வந்தான். அமைச்சராக தனது தம்பி கயிலாய வன்னியனையும், தளபதியாக கடைசி சகோதரன் பெரிய மைனரையும் கொண்ட குழுவையும் அமைத்து அரசமைப்பை பேணி வந்தான்.அவனது ஒரே சகோதரி பெயர் நல்ல நாச்சாள். அவளுக்கு கலைகள் கற்பிக்கும் அவை புலவன் மீது காதல் கொண்டான். அதே நேரத்தில் வன்னிநிலத்தில் ஆண்டு வந்த இன்னொரு குறுநில மன்னாக காக்கை வன்னியன் அவளை மணம் புரிய ஆசைப்பட்டான். அதற்காக பலமுறை பண்டார வன்னியனிடம் ஓலை அனுப்பிய போதும் அவன் அதற்கு சம்மதிக்கவில்லை.ஒரு முறை நந்தவனத்ததில் நாச்சியாள் புலவரிடம் காதல் கொண்டிருக்க கண்ட காக்கை வன்னியன் புலவரிடம் சண்டைக்கு போக புலவர் வாள் சண்டையிட்டு நையப்புடைத்து அனூப்புகிறான். இந்த சம்பவத்தால் புலவன் அரச பரம்பரையில் வந்தவனென்பதை அறிந்து கொள்கிறான். இதனால் அவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறான்.இது ஒரு புறமிருக்க.. வன்னிநிலப்பரப்பில் பண்டாரவன்னியன் திறை செலுத்தமறுத்த காரணத்தினால் படையெடுத்து வந்து வெற்றி காண முடியாமால் வெள்ளையர்கள் புறமுதுகாட்டி பின் வாங்கினர். தனிப்பட்ட காரணத்தினால் பண்டரவன்னியன் மேல் ஆத்திரம் கொண்ட காக்கைவன்னியன் வெள்ளை தேசாதிபதியுடன் கூட்டு சேர்கிறான். பல முறை படையெடுத்து வெள்ளையர் தோல்வி அடைகின்றனர். அத்தருணத்தில் காக்கை வன்னியன் பண்டரா வன்னியனை தந்திரமாகத்தான் வெல்லலாமென்று ஆலோசனை கூறுகிறான். அந்த திட்டத்தின் ஒரு அங்கமாக தான் தவறை திருந்தி விட்டதாக நாடகமாடி பண்டராவன்னியனிடம் வருகிறான். தம்பிமார்களான மந்திரியும் தளபதியும் காக்கைவன்னியனை சேர்க்கவேண்டாமென்ற ஆலோசனையையும்மீறி மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில் அவனை சேர்த்துக்கொள்கிறான். ஆனால் தருணங்களை காத்திருந்து தருணங்கள் வர நம்பவைத்து தனிய கூட்டிவந்து ஒட்டு சுட்டான் என்னுமிடத்தில் வைத்து வெள்ளையரின் படைகளிடம் தந்திரமாக அகப்படவைக்கிறான் இந்த காக்கை வனனியன்.இன்றும் நம்பி ஏமாற்றுவர்களை நீ காக்கை வன்னியன் பரம்பரையோ என்று ஈழத்தில் கேட்கும் வழக்கு உள்ளது..இந்த கூத்தில் ஓரிரு சம்பவங்களை பார்க்கலாம்…தம்பி பெரியமைனர் – “அண்ணா நமது வன்னி நாட்டைக்கைப்பற்று நோக்கம் அந்த வெள்ளைக்கார கும்பலுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் நமது சகோதரர்களாகிய சிங்களவர் வாழும் கண்டிப் பிரதேசத்தை கைப்பற்ற பெரும்படைகளை அநுப்பியிருக்கிறார்கள். இந்தச்சந்தர்ப்பத்தில் சிங்களமக்களுக்கு துணையாகவும் ஆங்கிலேயருக்கு எதிராகவும் வீறு கொண்டு சீறியெழும் எங்கள் படைகளை அனுப்பிவைத்தால் நன்மையாக இருக்கும்.”பண்டரா வன்னியன்: “ஆகா நல்லது தம்பி கைலாயா உமது யோசனை என் தம்பி கைலாய வன்னியன்.”“அண்ணா கண்டிக்கு நமது படைகளை அநுப்புவதால் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று சிங்களமக்களை காப்பற்ற உதவி புரிந்ததாக இருக்கும். அடுத்தது இந்த சந்தர்பத்தில் நமது படை பலத்தை வெள்ளையருக்கு காட்டகூடியதாயிருக்கும். சுணங்கமால் நமது படைகளை கண்டிக்கு அனுப்புதல் நலம்.”பண்டாரவன்னியன்: “தம்பி பெரியமைனர் நமது நாட்டில் விளைகின்ற ஏலம் கறுவா கராம்பு முதலிய திரவியங்களை கொள்ளையடித்து வயிறு வளர்க்கும் வெள்ளைக்கார கும்பலுக்கு இடம்கொடுக்கலாகாது. எமது உடன் பிறப்பாகிய சிங்களமக்களையும் கண்டி நாட்டையும் காப்பற்றியாக வேண்டும். எனவே தயங்காது நமது படைகளைக் கண்டிக்கு ஆயுத்தம் செய்வாயாக…”கட்டப்பொம்மன் பாணியில் தேசாதிபதியுடனானn சந்திப்பிலிருந்து ஒரு பகுதிதேசாதிபதி: வன்னியர் வேந்தே நாங்கள் பரஸ்பர அன்பு கொண்டாடி தங்களுடன் சிநேகதர்களாக நடக்க ஆசைப்படுகிறோம்.பண்டாரவன்னியன்: அதற்க்கு எந்தவித தடையுமில்லைதேசாதிபதி: நாங்கள் காக்கை வன்னியனிடமிருந்து கரிகட்டுமூலையையும் முல்லைத்தீவையும் பெற்றுக்கொண்டோம். பண்டராவன்னியன்:அதனால் என்ன காக்கைவன்னியன் கொடை வள்ளல். தருமபூபதி பாரிக்கும் அடுத்தவன், இல்லாதருக்கு உள்ளதை கொடுத்தான். இதில் என்ன அதிசயம்தேசாதிபதி:அதிசியம் இல்லாமலில்லை யாழ்ப்பாண நாடும் வன்னிபிரதேசத்தில் ஒருபகுதியும் எமது ஆங்கில ஆட்சிக்குட்பட்டது என்பது கருத்து. நீங்கள் மாத்திரம் தனித்து வாழ்வதில் அர்த்தமில்லை.பண்டராவன்னியன்:அப்படியானால் அந்த அர்த்தத்துக்கு பயன் சொல்லிகொடுக்கவா அழைத்தீர்கள். தேசாதிபதி:அப்பிடியில்லை பணிந்து வாழ்ந்தால் பலனுண்டு பண்டராவன்னியன்:பணிந்து வாழ்தல் எங்கள் பரம்பரையிலையே கிடையாது..தோசாதிபதி:ஆணவமாக பேசினால் ஆபத்து நேரிடும். பண்டரா வன்னியன்: ஆபத்து உங்களைத்தான் நாடி வருகின்றது என்னையில்லைதேசாதிபதி:வாயை அடக்கி பேசு பண்..வன்னியன்:ஆண்டவனுக்கு அஞ்சாத பண்டரானா ஆங்கிலனுக்கு அடங்க போகிறான் தே–பதி:வாயை பெரும் அழிவை தேடப் போகிறீர் பண்-வன்னி: அதற்க்காக நீங்கள் ஏன் முதலை கண்ணீர் வடிக்கிறீர் தேசாதிபதி:ஆங்கிலையரை பகைத்தால் பண்டரா:அழிவென்று சொல்லுகிறீர்கள் அதற்க்கு அஞ்சுபவனல்ல நான் தேசா:பாம்புடன் விளையாடுகிறீர் பண்டரா பாம்புக்கும் பருந்தாயிருப்பேனன்றி விருந்தாயிருக்கமாட்டன்.மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவு நாள் இன்றாகும். ஒல்லாந்தா் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும். வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்.வெள்ளையரிற்கு அடிபயணியாது வன்னிராச்சியத்தை ஆண்டு வந்ததான்.முல்லைத்தீவு கோட்டையில் வெள்ளையா்களிடம் இருந்து மீட்டு பிரங்கிகளை கைப்பற்றிய முதல் மன்னன் கற்பூரபுல் வெளியில் ஒரே வாழ்வீச்சில் 60 பேரை கொன்ற வரலாற்று நாயகன்தான் பண்டாரவன்னியன்.
-
லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் வீரவணக்க நாள்
தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் வீரவணக்க நாள்
-
எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் வீரவணக்க நாள்
until
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்தி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டிய நாள்.தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலகட்டத்தில் 2007 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 22 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படிக்கல்லான தாக்குதலாக சிங்களபடையின் குகை என்றும் வான்படை தரைப்படையினை கொண்ட அனுராதபுரம் வான்படைத்தளத்தில் தரைவழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்து ஸ்ரீலங்கா வன்படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரியசேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்தி வீரவரலாறான 21 சிறப்பு கரும்புலி மறவர்களின் நினைவு நாளும் ஆகும். தமிழீழ தேசியத்தலைவர் நேரடி வழிகாட்டலில் உருவான கரும்புலிகள் அணி இறுதியாக தலைவர் அவர்களுடன் உணவருந்தி புகைப்படம் எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப்பகுதிகள் ஊடாக கரடு முரடான பதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்துசென்று அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு தரித்து நின்ற வான்கலங்கள் அனைத்திற்கும் தீ முட்டிய அந்த தீராத வீரர்களை நினைவிற் கொள்கின்றோம். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த எல்லாளன் நடவடிக்கை. அனுராதபுர வான்படைத்தளத்தில் 21 சிறப்பு கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீ அன்று அந்த விமானநிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது சிங்களப் படையின் உதவிக்கு வந்த உலங்கு வானூர்தியும் விடுதலைப்புலிகளால் சூட்டுவிழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.தமிழர் தேசம் தலைநிமிரச்செய்த இந்த காவிய நாயகர்களை என்றும் நெஞ்சில் சுடரேற்றி வணங்குவோம். -
சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன்
யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ளது.2000 ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு 10 மணியளவில் ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி சூடு நடத்தி, கைக்குண்டு வீசி நிமலராஜனை அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்தனர். அப்போது நிமலராஜன் வீரசேகரி பத்திரிகைக்கு செய்தியொன்றை எழுதிக் கொண்டிருந்தார். 1983ம் ஆண்டு இனக்கலவரத்தில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் மக்களில் நிமலராஜனும் அவரது குடும்பத்தினரும் அடங்குகின்றனர். அரசாங்க அச்சகத்தில் பணியாற்றி, அவரது தந்தை இடதுசாரி கொள்கைளைக் கொண்ட தொழிற்சங்கவாதியாவார். கொழும்பில் குடியிருந்த நிமலராஜன் குடும்பத்தினர் வீட்டைவிட்டு இரண்டு வாரங்கள் அகதி முகாம்களில் இருந்த பின்னரே யாழ்ப்பாணத்திற்குச் சென்றனர். 1983ம் ஆண்டு ஜூலை இனவாதத் தாக்குதலில் உயிர் தப்பிய தமிழர்கள் பலர் வடக்கு கிழக்கிற்கு அனுப்பப்பட்டனர். சில வருடங்கள் சென்ற பின்னர் நிமலராஜன் வடபகுதி தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்களை ஊடகவியலாளர் என்ற வகையில் எடுத்துரைத்தார். குறைந்த வசதிகளுடன் கடினமான சூழலில் அவர் இந்தப் பணியை மேற்கொண்டார். பி.பி.சி தமிழோசை, வீரகேசரி ஆகிய தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழியிலும் பி.பி.சி சந்தேஷய, ஹிரு எவ்.எம் மற்றும் ராவய ஊடகங்களில் சிங்கள மொழியிலும் உயிரிழக்கும் வரை தொடர்ந்தும் தகவல்களை மிகவும் அக்கறையோடு வெளியிட்டு வந்தார். இதுதொடர்பாக ஊடக நிறுவனங்களில் அப்போது பணியாற்றிய ஊடகவியலாளர்கள் சாட்சி கூறுவார்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் சரியான தகவல்களை வழங்கும் ஊடகவியலாளராக பல கஸ்டங்களுக்கு மத்தியில் பணியாற்றியக் கூடிய இயலுமையின் காரணமாக நிமலராஜன் தென்பகுதி ஊடகவியலாளர் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஊடகவியலாளராக இருந்தார். தலைநகரில் இருந்ததால் சிங்கள மொழியின் பரீச்சயமும் தனது தந்தையிடமிருந்து கிடைத்த இடதுசாரி கொள்கைகளும், அவருக்கு உதவியாக அமைந்தன. ஒருமுறை நிமலராஜன் ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக பாரதூரமான நெருக்கடியை எதிர்நோக்கினார். அப்போது யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வன்முறை மற்றும் அடக்குமுறைச் சூழல் காரணமாக ஊடக அடையாள அட்டையை வைத்திருப்பது மிக முக்கியமாக இருந்தது. இதன்மூலம் ஓரளவு தடையின்றி தகவல்களைத் தேடிக்கொள்ள முடியுமென்ற நிலைப்பாட்டில் நிமலராஜன் இருந்தார். அவருக்குப் பல சிங்கள நண்பர்கள் இருந்தனர். ராவய பத்திரிகை நிறுவனத்தின் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக மிகவும் எதிர்பார்ப்புடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார். எனினும் அது கிடைக்கவில்லை. ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன், நிமலராஜன் புலிகள் அமைப்புடன் சம்பந்தப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படுவதால் ராவய பத்திரிகையின் மூலம் அவருக்கு ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுக்க முடியாது எனக் கூறியிருந்தார். ஏ.பி.சி நிறுவனத்தின் தலைவர்களும் அவருக்கு ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கவில்லை. அப்போது பிரதேச ரீதியாக செயல்படும் ஊடகவியலாளர்களுக்கு ஊடக அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுக்க ஊடக நிறுவனங்கள் போதிய அக்கறைக் காட்டவில்லை. இறுதியில் நிமலராஜன் அரைய பத்திரிகையின் ஊடாக ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டார். எனினும் அவரது செய்தியின் தேவை ஊடகங்களுக்கு இருந்தது. அதற்காக நிமலராஜனை அனைத்து ஊடகங்களும் பயன்படுத்திக் கொண்டன. வடபகுதி மக்கள் தொடர்பாகவும் அங்கு இடம்பெற்ற, இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பான விடயங்களில் நிமலராஜன் முக்கிய இடத்தை வகித்தார். தனக்குத் தெரிந்த சகல தகவல்களையும் மறைக்காது வெளியிடுவது அவரது இயல்பாக இருந்தது. இதற்காக பணம் கிடைத்ததா கிடைக்கவில்லை என அவர் கருத்திற்கொள்ளவில்லை. அவர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயல்பட்டார். அதை அவர் தனது கடமையாக ஏற்றுக்கொண்டிருந்தார். எப்படியான சிரமங்களுக்கு மத்தியிலும் செய்தி அளிக்கையில் ஈடுபட்டிருந்தாலும் பல உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள் அவருக்கு குறைந்தபட்ச கொடுப்பனவுகளையே வழங்கியது. ஒரு செய்திக்காக 50 ரூபா மாத்திரமே வழங்கப்பட்டது. 24 மணி நேரம் செயல்படும் அந்த நிறுவனத்தின் ஐந்து வானொலிகள் மணிக்கொரு தடவை செய்திச் சுருக்கங்களை ஒலிபரப்பி வருகிறது. பிரதான செய்திகளுக்கு புறம்பாக இந்தச் செய்திகள் ஒலிபரப்பப்படுகின்றன. அனைத்து செய்தி அறிக்கைகளிலும் நிமலராஜனின் செய்திகள் பயன்படுத்தப்பட்டன. தொலைநகல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தனது குரல் ரீதியாகவும் வழங்கிய அனைத்துச் செய்திகளும் ஒரே அளவிலான ஊதியமே வழங்கப்பட்டது. இதுசம்பந்தமாக ஊடக நிறுவனங்களின் அதிகாரிகளிடம் சில கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், நிமலராஜன் கொலை செய்யப்பட்ட பின்னர் அவர் தமது நிறுவனங்களின் ஊடகவியலாளர் எனக் கூறி புகழைத்தேடும் தேவை அவர்களுக்கு இருந்தது. நிமலராஜனின் இறுதிக் கிரியைகளுக்காக ஏ.பீ.சி நிறுவன அதிகாரிகள் நிதியுதவிகளை வழங்க முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்தது. இதன்மூலம் அவர்கள் தமது ஊடக நிறுவனத்திற்குப் புகழை ஈட்டிக்கொள்ள முயற்சித்தனர். நிமலராஜன் ஊடகவியலாளர் என்ற வகையில் பி.பி.சி சந்தேஸய மூலமே சிங்கள மக்கள் மத்தியில் பரீட்சையமானார். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் காணாமல் போதல், கொலைகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட துன்ப துயரங்கள், அனைத்தையுமே அவரது குரலில் சிங்கள மக்கள் கேட்டனர். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் துயரங்களை சிங்களத்திற்கு கொண்டுசென்றவர் நிமலராஜன்தான். அதில் முக்கியமான நபரும் அவர் தான். செம்மணி படுகொலை தொடர்பான முழுமையான அறிக்கையை நிமலராஜன் ஊடகங்களில் வெளியிட்டார். 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஊர்காவல்துறை தீவகப் பகுதிகளில் இடம்பெற்ற வாக்கு மோசடிகள் தொடர்பாக அவர் முழுமையான செய்தியை வழங்கியிருந்தார். இந்தச் செய்தி வெளியிடப்பட்டு சில தினங்களுக்குப் பின்னர் அவருக்கு அடிக்கடி மர்ம அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. அதிலொரு அழைப்பிற்கு நிமலராஜனின் மனைவி பதிலளித்திருந்தார். நீங்கள் வெள்ளை ஆடை உடுத்த தயாராக இருங்கள் என அந்தத் தொலைபேசி அழைப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த அச்சுறுத்தல்கள் ஈ.பி.டி.பியினரால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. நான் அஞ்சப் போவதில்லை. செய்திகளை நான் தொடர்ந்தும் வழங்குவேன் என நிமராஜன் கூறியிருந்தார். தனக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருப்பதாக நிமராஜன் தனது ஊடக நண்பர்களிடம் கூறியிருந்தார். சில தினங்கள் கடந்தன. நிமலராஜன் அவரது வீட்டுக்குள் வைத்தே கொலை செய்யப்பட்டார். அவரது வீடு யாழ்ப்பாணத்தின் அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைந்திருந்தது. நிமலராஜனின் கொலையானது தேசிய ரீதியில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் பாரிய அதிருப்திக்கு காரணமாக அமைந்தது. இந்தக் கொலை தொடர்பாக நேரடியாக அரசாங்கம் மீதே குற்றஞ்சாட்டப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தின் பிரதான கூட்டணிக் கட்சியாக டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி செயல்பட்டது. டக்ளஸ் தேவானந்தா அந்த அரசாங்கத்தின் புனர்வாழ்வு தொடர்பான அமைச்சரவை அந்தந்துள்ள அமைச்சராகப் பணியாற்றினார். இந்தக் கொலையுடன் ஈ.பி.டி.பி சம்பந்தப்பட்டுள்ளதாக முதலாவது ஊடக அறிக்கையைத் தமிழர் விடுதலைக் கூட்டணியே வெளியிட்டது. அப்போது அந்தக் கூட்டணியின் தலைவராக ஆனந்தசங்கரி செயல்பட்டுவந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த ஈ.பி.டி.பியினர் நிமலராஜனை விடுதலைப் புலி உறுப்பினர் எனக் குறிப்பிட்டனர். விடுதலைப் புலிகள் அவரைக் கொன்றிருக்கலாம் என ஈ.பி.டி.பி.யினர் குற்றஞ்சுமத்தினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சங்கமும் நிமலராஜன் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது. மக்களைப் புனர்வாழ்வளிக்க முயற்சிக்கின்றவர்கள் மக்களைக் கொலை செய்துவருவதாகக் கூறி அவர்களும் கொலைக் குற்றத்தை ஈ.பி.டி.பி யினர் மீது சுமத்தினர். சுதந்திர ஊடக அமைப்பும் நிமலராஜனின் கொலைக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது. கொலை இடம்பெற்று சில வாரங்களுக்குப் பின்னர் கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிமலராஜனின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நிமலராஜனின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டன. எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்கான குழு போன்ற பல சர்வதேச அமைப்புகள் இந்தக் கொலை குறித்து கவனம் செலுத்தின. 2000ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் மோசடிகள் இந்தக் கொலைக்கு காரணமாக இருப்பதாக இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன. தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்ட எதிர்ப்பு காரணமாக பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம், நிமலராஜன் கொலை சந்தேக நபர்களைத் தேட ஆரம்பித்தது. இந்த விசாரணைகள் யாழ்ப்பாணக் காவல்துறை நிலையத்தின் குற்றப் புலனாய்வுத் துறையின் பொறுப்பதிகாரி ரஞ்சித் டி சில்வாவின் தலைமையில் நடைபெற்றன. கொலையுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஈ.பி.டி.பியின் உறுப்பினர்கள் அல்லது அந்த அமைப்பில் முன்னர் செயல்பட்டவர்களாக இருந்தனர். இதுகுறித்து ஊடகங்கள் வழியாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், கொலைக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஆயுதங்களையும் பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். எனினும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பிரதான சந்தேக நபரை காவல்துறையினர் கைதுசெய்யத் தவறினர். புலனாய்வுப் பிரிவனரால் அந்த பிரதான சந்தேக நபரின் சாட்சியங்களைப் பதிவு செய்து கொள்ள முடியாது போனது. ஈ.பி.டி.பியின் முக்கிய நபரான நெப்போலியன் என்ற செபஸ்டியன் பிள்ளை ரமேஸ் என்பவர் அரசாங்க அரசியல்வாதிகளின் பாதுகாப்பின் கீழ் நாட்டிலிருந்து இந்தச் சந்தர்ப்பத்தில் தப்பிச் சென்றார். ஏனைய சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதன்பின்னர், ஊடகத்துடன் தொடர்புடைய சில ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகையின் அலுவலகம் பல சந்தர்ப்பங்களில் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தப் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் கானமயில்நாதனை பல தடவைகள் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வலம்புரி பத்திரிகையின் பிரதேச ஊடகவியலாளரான ராமச்சந்திரன் காணாமல் போனதுடன் இதுவரை அவர் தொடர்பான எந்தத் தகவல்களும் இல்லை. ராமச்சந்திரன் வலம்புரி பத்திரிகையின் சாவகச்சேரி செய்தியாளராக பணியாற்றினர்.யாழ்ப்பாண ஊடங்களுக்கு பல தடைகள் விதிக்கப்பட்டதுடன், அச்சு காதிதங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறான பல சிரமங்களுக்கு மத்தியிலும் தமது உயிரரை துச்சமென மதித்து, யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை செய்தனர். பல ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த போது, பலர் தமது ஊடக நடவடிக்கைகளில் அமைதியான போதிலும், உதயன் பத்திரிகையின் ஆசிரியர் உள்ளிட்ட சிலர் தமது கடமைகளை தொடர்ந்தும் முன்னெடுத்தனர். இந்த நிலைமையில் நிமலராஜனின் பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் உயிர் பாதுகாப்பு கருதி வெளிநாடு சென்றனர். நிமலராஜன் உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பில் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திடம் நியாயமான விசாரணைகளை எதிர்பார்க்க முடியாது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தொடர்பில் ராஜபக்ஸ அரசாங்கத்தின் முரண்பாடு காணப்பட்டாலும் அவர்கள் சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றவைகள் தொடர்பில் மௌனம் சாதித்து வருகின்றனர். நிமலராஜன் உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் தற்போதை மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினதும் முக்கிய கூட்டணியாளர்களாக உள்ளனர் என்பதே இதற்கான காரணமாகும். நிமலராஜனின் கொலை தாம் செய்யவில்லை என ஈ.பி.டி.பியினர் நிராகரித்த போதிலும், உரிய விசாரணைகளை நடத்த இதுவரை அவர்கள் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. அந்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்பதை எதிர்பார்க்க முடியாது. காரணம் யாழ்ப்பாணத்தில் ஏனைய விடயங்கள் மாத்திரமல்ல ஊடகங்களும் அரசாங்கத்தின் கட்டளையின் கீழேயே செயற்படுகின்றன.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நாட்காட்டி பகுதியில் முக்கியமான தினங்கள் மாவீரர் நினைவு நாட்களை உறுப்பினர்களும் இணைத்துக் கொள்ளலாம். http://www.yarl.com/forum3/calendar/
- விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி நினைவு தினம்
-
தாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை அன்ரன் உட்பட்ட ஆறு மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.
1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது ஆ16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார். வானம் கரிய இருளைச் சொரிந்து கொண்டிருக்க, குவியல் குவியலாகச் சிந்திக்கிடந்தன நடசத்திரப் பூக்கள். இடையிடையே வீதியால் போய்வரும் ஊர்திகளின் ஒளிகள் வானத்தை நோக்கி நீண்ட ஒளிக் கோடுகளை வரைய, ஒவ்வொன்றையும் அவதானித்தபடி நிற்கிறார் மாலதி.அப்பால் கைதடி நோக்கி விரிந்திருந்த வெளிகளினூடாக ஊடுருவிய கண்கள், இப்பால் கோப்பாய்ச் சந்தி கடந்து மிக வேகமாக வந்து கொண்டிருந்த ஊர்தியை நோக்கித் திரும்பின. மிக அண்மையில் வந்து விட்ட ஊர்தியிலிருந்து குதித்த இராணுவம் இவர்களிருந்த பகுதி நோக்கிச் சுடத்தொடங்கியது. அந்த இடத்தில் இந்திய இராணுவத்தை நோக்கிச் சுழன்ற முதலாவது சுடகலனும் மாலதியினுடையதுதான். கோப்பாய்- கைதடி வெளியில் எழுந்த சூட்டுச் சத்தங்கள் எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கின. சண்டை கடுமையாகத்தான் நடந்தது. சீறும் ரவைகளின் ஒலியும், அவற்றின் ஒளிர்வும் தாக்குதலின் கடுமையைப் பறைசாற்றின. மாலதி இராணுவத்தினருக்கு மிக அண்மையில் நின்று தாக்குதலைச் செய்து கொண்டிருந்தார். திடீரெனக் காலில் காயமுற்ற மாலதியின் குரல் வேட்டொலிகளையும் மீறி ஒலித்தது. “நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ” காயமுற்ற பின்னும் சுட்டுக் கொண்டிருந்தவர் இராணுவம் அதிகமாக நிற்பதைப் புரிந்து கொண்டார். தான் வீரச் சாவடைந்தாலுங்கூட, தான் நேசித்த ஆயுதம் எதிரியிடம் விடுபட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தன்னைப் பார்க்காமல் ஆயுதத்தைக் கொண்டு போகும் படி கூஈpக் கொண்டிருந்தார். அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்துடன் ஊர்ந்து சென்ற விஜியிடம், “என்ர ஆயுதம் பத்திரம். என்னை விட்டிட்டு ஆயதத்தைக் கொண்டுபோ” எனச் சொல்லி ஆயதத்தைக் கொடுத்தவர், கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டார்.
-
குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின்வீரவணக்க நாள் இன்று
until
சிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களிற்கு நன்மைகள் கிட்டும், இந்தியா எமக்கு ஒரு வழியைக்காட்டும் என நம்பியிருந்த மக்களிற்கு மாறாக துன்பங்களையும் துயரங்களையுமே சிறீலங்கா அரசும், இந்திய அரசபடைகளும் சுமத்தின. 1987ம் ஆண்டு ஒக்டோபர் 3ம் நாள் தமிழீழக் கடற்பரப்பிலே நிராயுத பாணிகளாக எதிர்கால எண்ணக் கனவுகளுடன் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் படகில் பயணித்தனர். அன்று விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலத்தில் மிகத்திறமையான படகோட்டிகள், ஆழ்கடலோடிகளாகச் செயற்பட்டவர்கள் இவர்கள்.சிறீலங்கா இராணுவத்தின் ஆதரவோடு தமிழீழக் கடற்பரப்பில் வைத்து இந்தியப் படைகளால் கைதுசெய்யப்பட்டனர். 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 3ம் நாள் இவர்களைக் கைதுசெய்து பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டுசென்று விசாரணகள் நடாத்திவிட்டு, பின் கொழும்பு கொண்டுசென்று அதன் மூலம் ஒரு சதி நாடகத்தை அரங்கேற்றலாம் என எண்ணி சிறீலங்கா பேரினவாத அரசு திட்டம் தீட்டியது. பலாலி இராணுவ முகாமில் பன்னிருவேங்கைகளும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா அரசபடைகள் எதுவித பலனையும் அடையவில்லை.தமிழர்களின் காவலர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உயிர் நாடியாகவும் இருந்த இவர்களைக் கைதுசெய்வதன் மூலம் தமிழ் மக்களையும் விடுதலைப் போராட்டத்தையும் அழித்துவிட எண்ணி பல சதிகளைச் செய்தனர். சிறையிலும் எதுவித தளர்வுகளும் இன்றி தமிழர்களின் உரிமைக்காகவே வாதாடினார்கள். இரண்டு நாட்கள் பலாலி இராணுவ முகாமில் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு அது நடைபெறும் சமநேரத்தில் விடுதலைப் புலிகள் அவர்களை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியப் படைகளுடன் பேச்சுவார்த்தையும் நடாத்திப் பார்த்தனர்.அதுவும் பயனற்றுப் போய்விட்டது. குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளையும் கொழும்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டிருந்தது. 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 5ம் நாள், தமிழ் மக்கள் மீதும் தாயக மண்மீதும், தலைவர் மீதும் கொண்ட பற்றினால் அங்கு நின்ற இராணுவத்துடன் தங்களால் இயன்றவரை அவர்களுடன் மோதி இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீர மரபினைக்காக்க சயனைட் அருந்தி பன்னிரு வேங்கைகளும் அந்த மண்ணில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தனர்.அன்றைய நாட்களில் அச்சம்பவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், விடுதலைப் போராட்டம் இன்னும் வீச்சுடன் முன்னகர்ந்தது. தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் போரிடும் வல்லமையை தூண்டியது. பலாலி இராணுவ முகாமில் வைத்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் ரகு, நளன், ஆனந்தக்குமார், மிரேஸ், அன்பழகன், றெஜினோல்ட், தவக்குமார், கரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும் யாழ்ப்பாணம் வடமராட்சி தீருவிலிற்கு எடுத்துவரப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் போராளிகள் முன்னிலையில் தீயில் சங்கமமாகின.இன்று அங்கு அந்தப் பன்னிருவேங்கைகள் நினைவான நினைவுச் சதுக்கம் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களப் படைகளால் சிதைக்கப்பட்டாலும், அவர்களின் நினைவுகள் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டே உள்ளன. இந்த திட்டமிட்ட சிறிலங்கா அரசின் சதி நடந்தேறி 29 ஆண்டுகள் நிறைவடைகின்றன.ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் ஆறாத வடுவாகவே அந்தச் சம்பவம் உள்ளது. -
விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கரின் வீரவணக்க நாள் இன்றாகும்.
until
விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கரின் வீரவணக்க நாள் இன்றாகும். -
நாகர்கோவில் பள்ளிச்சிறார்கள்மீது குண்டுவீசி படுகொலை - நினைவுநாள் இன்றாகும்!
until
- தியாகி லெப்.கேணல் திலீபன்
-
வவுனியா வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் காவியமான 10 கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
until
வவுனியா வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் காவியமான 10 கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கருவி (விமான ராடர்) மீதும் 09.09.2008 அன்று மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் மும்முனை அதிரடித் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கரும்புலி லெப்.கேணல் வினோதன், கரும்புலி லெப்.கேணல் மதியழகி, கரும்புலி மேஜர் நிலாகரன், கரும்புலி மேஜர் ஆனந்தி, கரும்புலி கப்டன் எழிலகன், கரும்புலி கப்டன் கனிமதி, கரும்புலி கப்டன் நிமலன், கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ், கரும்புலி கப்டன் அகிலன், கரும்புலி கப்டன் முத்துநகை ஆகிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். - 184பேர் பலியெடுக்கப்பட்ட சந்துருக்கொண்டான் படுகொலை
-
வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்!
கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பு, கிழக்கு ஈழ மக்களிள் நெஞ்சில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக படிந்துள்ளது. செப்டம்பர் 5, 1990 ஆம் ஆண்டு, அன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வே கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என இனப்படுகொலை வரலாற்றில் நினைவுகூறப்படுகிறது. என்ன நடந்தது?1990 ஆம் ஆண்டில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்ததை அடுத்து, கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இராணுவ நடவடிக்கைகளை இலங்கை அரசுப் படைகள் மேற்கொண்டிருந்தன.வாழைச்சேனையில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் வந்தாறுமூலை, சுங்கன்கேணி, கறுவாக்கேணி போன்ற கிராமங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது இப்பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்புக் கருதி இடம்பெயர்ந்து வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்தனர். வளாகத்தில் கடமையில் இருந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்கள் இவர்களைப் பராமரித்து வந்தனர். பல்கலைக்கழக முன்றலில் வெள்ளைக் கொடியும் கட்டப்பட்டிருந்தது. பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு (UTHR) நேரில் கண்ட சாட்சியத்தைப் பதிவு செய்திருந்தது."ஏழு நாட்களில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 55,000 அகதிகள் நிறைந்திருந்தனர். எட்டாம் நாள் வெள்ளைக் கொடியையும் பொருட்படுத்தாது இராணுவத்தினர் வளாகத்தினுள் நுழைந்தனர். அவர்களுள் தமிழ் துணை இராணுவக் குழுவினரும், முஸ்லிம் ஊர்காவல்படையினரும் வந்திருந்தனர். யார் யார் இங்கு இருப்பதாக எம்மிடம் அவர்கள் கேட்டனர். வாழைச்சேனை ஆறுமுகத்தான் குடியிருப்பு ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் நாம் எனப் பதிலளித்தோம். நாங்கள் உரையாடிக் கொண்டிருந்த போது இரண்டு பேருந்துகள் வளாகத்துக்குள் வந்தன. எம்மை அவர்கள் வரிசையில் நிற்க வைத்து எம்மில் 138 இளைஞரை (இவ்வெண்ணிக்கை 158 ஆகப் பின்னர் திருத்தப்பட்டது[3]) தேர்ந்தெடுத்து பேருந்துகளினுள் ஏறச் சொன்னார்கள். உறவினர்களும் பெற்றோர்களும் அவர்களைக் கொண்டு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கதறினர். ஆனாலும் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். கொண்டு செல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களை நாம் சேகரித்துள்ளோம். பின்னர் அனைத்து இராணுவ முகாம்களுக்கும் சென்று அவர்களைப் பற்றி விசாரித்தோம். ஆனாலும் அவர்கள் எவரையும் தாம் கைது செய்யவில்லை என இராணுவத்தினர் கூறினர்.”மூடப்பட்ட அகதிமுகாம் முதல் நாள் கைதின் பின்னர் மீண்டும் அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து இந்த அகதிகள் முகாமை மூடி விடுமாறும் எஞ்சியுள்ளோரைக் காட்டுப் பகுதிக்குள் செல்லுமாறும் விடுதலைப் புலிகள் கூறியதை அடுத்து முகாம் மூடப்பட்டது. பெரும்பாலான அகதிகள் காட்டுப் பகுதிகளுக்குள் தஞ்சமடைந்தனர். இவர்களில் பலர் இலங்கை இராணுவத்தினரின் வான் தாக்குதல்களுக்கு இலக்காயினர். ஏனையோர் பின்னர் தமது இருப்பிடம் திரும்பினர்.நீதி தராத அரச விசாரணை!வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமற்போனோர் குறித்து விசாரணை மேற்கொள்ளுவதற்காக நீதிபதி கி. பாலகிட்ணர் தலைமையில் மூன்று பேரடங்கிய சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க 1994, நவம்பர் 30 ஆம் நாள் அமைத்திருந்தார். எல்.டபிள்யூ.ஆர்.ஆர்.வித்தியாரத்தின, கலாநிதி டபிள்யூ.என்.வில்சன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் ஆவர். இக்குழுவின் இறுதி அறிக்கை 1997 செப்டம்பரில் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின் படி, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகக் கைதுகள் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற மிகப் பெரும் குழு முறையிலான கைதுகள் எனத் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் 158 பேரின் பெயர் விபரங்களும் ஆணைக்குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 83 பேர் சாட்சியமளித்தனர். இவர்கள் 92 பேரின் கைதுகள் குறித்துச் சாட்சியமளித்திருந்தனர். இரண்டாவது தடவை கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் குறித்தும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கை இராணுவத்தினரே இவர்களைக் கைது செய்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இப்படுகொலைகள் குறித்து விசாரணை செய்ய இலங்கை அரசு சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைத்தது. குறித்த ஆணைக்குழு சட்டவிரோதக் கைது மற்றும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதை விசாரணை முடிவுகளில் உறுதிப்படுத்தியது. அத்துடன் இதில் சம்பந்தப்பட்டோரையும் அது இனக்கண்டிருந்தது. ஆனாலும் இது குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.ஆண்டுதோறும் நினைவு நாள்158 பேரும் கைது செய்யப்பட்ட நாள் ஆண்டு தோறும் மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ் இன அழிப்பு வரலாற்றில் ஆறாத ரணமாக நிலைத்துவிட்ட கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் நடைபெற்று 26 வருடங்கள் கடந்துள்ளபோதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே கசப்பும் கவலையும் பாடம் கற்க மறுக்கும் துன்பியலுமாகும். குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
-
வல்வை படுகொலையின் நினைவு
வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் புரிந்த அட்டுழியங்கள்!!! 1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழமை போல தொடங்கியது. ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச் சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே, அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை. வெறியாட்டம் முடிந்து இந்திய இராணுவம் முகாம்களுக்கு திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்கு சென்று பார்த்தவர்களால் நடைபெற்ற கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை. 63 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர். ஆண், பெண், முதியோர் வேறுபாடு இன்றி. 100 பேர் அளவில் காயமடைந்திருந்தனர். 123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன. 45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன. வல்வை சனசமூக நிலையம் (நூலகம்) தீயிடப்பட்டிருந்தது, பல ஆயிரக்கணக்கான நூல்கள். தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி, நேரு, நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப்பட்டு தீயிடப்ப்ட்டு இருந்தன. 176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன. எங்கும் சடலங்கள், அவல ஓலங்கள், தீக்கொழுந்துகள், காயமடைந்த, கொல்லப்பட்ட உறவினர்களின் அவலக்குரல்கள். காலங்கள் பல சென்றாலும் இன்றும் வல்வெட்டிதுறை மக்களின் மனங்களில் ரண வடுவாக அச்சம்பவம் இருந்து வருகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேர் கூட கொல்லப்பட்டிருந்தனர். வல்வெட்டிதுறையில் நடைபெற்ற இக்கோர தாண்டவம் பற்றி எந்த ஒரு இந்திய ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. இன்று கூட எத்தனை இந்தியருக்கு இது பற்றி தெரியும் என்பது கேள்விக் குறியே? முதன் முதலாக லண்டனில் இருந்து வெளிவரும் FINANCIAL TIMES இன் டெல்லி நிருபர் DAVID HOUSEGO நேரில் சென்று பார்த்த பின்பே FINANCIAL TIMES இன் 17.08.89 இதழில் இச்செய்தி வந்தது. அதன் பின்னரே லண்டனில் இருந்து வெளிவரும் TELEGRAPH பத்திரிகையும் 13.08.89 இல் இச் செய்தியைப் பிரசுரித்திருந்தது. 24.08.89 லேயே இந்தியாவில் இருந்து வெளிவரும் INDIAN EXPRESS பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்திய அரசானது திட்டமிட்டே இச் செய்திகளை இந்தியாவில் இருட்டடிப்பு செய்தது இதற்கு இந்திய பத்திரிகைகள், பிற ஊடகங்கள் யாவும் துணை போயிருந்தன. தமிழர் எனும் காரணத்தினால் இந்திய அரசோ, இலங்கை அரசோ இவர்களுக்கு நீதி வழங்க முன்வரவில்லை. வல்வெட்டித்துறை மட்டுமல்ல ஈழத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குடிமகனும் இந்திய இராணுவம் புரிந்த கொலைகள், கொள்ளைகள், பாலியல் கொடுமைகள், சித்திரவதைகள், வீடழிப்பு, சொத்தழிப்பு போன்றவற்றை சந்தித்தே இருக்கின்றனர். உண்மை சிலருக்கு சுடலாம் ஆனால் இவை என்றும் மறைந்துவிடாது மக்களின் மனங்களில் இருந்தும், வரலாற்றின் பக்கங்களில் இருந்தும்.! இது பற்றி வல்வை படுகொலை எனும் நூல் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்து அவனபடுத்தப்பட்டது குறிபிடக்தக்கது. இது பற்றி இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கனடாவிலிருந்து சேது மாதவன் அவர்கள் தனது சமுக வலைத்தளத்தில் 26 வருடங்களின் பின் இன்று இவ்வாறு எழுதியுள்ளார். வல்வை படுகொலைகள் நடந்து வருடங்கள் 26 ஓடிவிட்டன. அந்த பயங்கர நாட்களின் பல நிகழ்வுகள் இப்பொழுதும் என்நெஞ்சில் நிற்கின்றன. கலாதேவன், பாபு ஆட்கள் வீட்டில் நின்றபோது தாக்குதல் நடக்கப் போவதாகவும் உடனே வீட்டை விட்டு ஒடுமாறும் கூறிய அவர்கள் எதிர்வீட்டுத் தம்பி தரா ( இப்பொழுது மருத்துவர் சிவபாலன் ) . அந்த அவசர கணத்தில் கலாதேவன் அண்ணா வீட்டார் வீட்டை விட்டு வெளிக்கிடும் முன்னே ஆரம்பித்த யுத்தம். பயத்தில் அவர்களுக்கு உதவாது விட்டுவிட்டு ஓடிய என் கோழைத்தனம். அன்று மினி சினிமா செல்லவிருந்து கடைசி நேரத்தில் மனதை மாத்தி அதற்குப் போகாத நானும் கித்துளும். ஓடு ஓடு என்று ஓடி இன்பருட்டி கிராமத்தில் ஓடும் வழியில் சந்தித்த நண்பர்களுடன் தங்கியது. வழியில் திக்கத்தில் கண்ட புலிகளின் தாக்குதல் அணியினர். கூட ஓடிவந்த நண்பனை துப்பாக்கிக் காயத்துடன் வைத்திய சாலையில் விட்டுவிட்டு ஓடிவந்து வழியில் எங்களுடன் இணைந்த நவநீதன். வேறு வழியில் ஓடி வல்வெட்டியில் புகலிடம் அடைந்திருந்த வேளையில் மட்டுமட்டாக உயிர் தப்பிய என் குடும்பத்தினர்.சந்தியில் இந்தியன் Army விட்டுவிட்டுப்போன உடல்களில் தனது கணவனினது உடலும் இருக்குமோ எனத் தேடிய சிதம்பரநாதன் teacher. அவருடன் சேர்ந்து ஒவ்வொரு உடலாக செக் பண்ணிய என் அம்மா. இவ்வாறு பல சம்பவங்கள் மனதில் நிற்கின்றன. எல்லாம் முடிந்த பின்னால் பார்த்த பொழுது எம் நண்பர்கள் உறவினர்கள் பலர் எம்மை விட்டுப் போய்விட்டதை அறிந்து கொண்டோம். மதி, செல்வானந்த வேல், ரவி அண்ணா, சங்கர் அண்ணா, புஸ்பா அண்ணாவின் அம்மா, அவரது சகோதரன், ராதன் அண்ணாவின் அப்பா அவரது அண்ணா என பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. மயிரிழையில் உயிர் தப்பிய பலரது கதைகளும் ஒவ்வொன்றாக எம்மை வந்தடைந்தன. அதை நினைக்கும் பொழுது 26 வருடங்களின் பின்பும் என் உடல் மெல்ல நடுங்குகிறது. இதன் மூலம் அந்த ஆபத்தான தருணங்களில் எமக்கு அதரவு அளித்து எம்மைப் பாது காத்த வல்வெட்டி, கம்பர்மலை, இமையாணன், திக்கம், பொலிகண்டி, இன்பருட்டி, தொண்டைமானாறு , உடுப்பிட்டி, மயிலியதனை, காட்டுப்புலம், நெல்லியடி, கரணவாய், வதிரி, மந்திகை, பருத்தித்துறை, சக்கோட்டை ஆகிய ஊர்களைச் சேர்ந்த அன்புள்ளம் மிக்க மக்களுக்கு வல்வெட்டித்துறை மக்கள் சார்பாக நன்றி கூறுகிறேன். அன்று உயிர் நீத்த எம்மக்கள் அனைவருக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள். அன்றைய தினத்தில் உயிர் நீத்த இந்திய இராணுவ வீரர்களுக்காக அவர்களது உறவுகளும் இன்றும் அழுது கொண்டிருப்பார்கள் எனும் யதார்த்தம் நெஞ்சை நெருடுகிறது. யுத்தம் ஏற்படுத்தும் வடுக்கள் எப்பொழுதும் ஆழமானவை.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
https://soundcloud.com/ போன்று ஏதாவது ஒரு தளத்தில் தரவேற்றம் செய்து இணைத்துக் கொள்ளலாம்.
-
"வீரமங்கை" செங்கொடியின் வீரவணக்க நாள்
until
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன்,முருகன் மற்றும் வேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த "வீரமங்கை" செங்கொடியின் வீரவணக்க நாள் இன்றாகும். சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரமங்கை செங்கொடி ஈகைச்சாவடைந்தார்.தன் இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரமங்கைக்கு சீரம் தாழ்ந்த இதய அஞ்சலிகள்.