Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. கறுப்பு ஜூலை: காய்ந்து போன ரத்தம் _ ரவிக்குமார் ( 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஜூனியர் விகடனில் நான் எழுதிய கட்டுரை இது. கறுப்பு ஜூலையின் நினைவாக இங்கே வெளியிடுகிறேன். ஈழத்தில் நடந்த கொடுமைகளின் வரலாறு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அந்த மக்களின் போராட்டங்கள் சரியாக நமக்குப் புரியும் ) இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்து விட்டன. இதற்கிடையே பூமிப்பந்தில் எவ்வளவோ மாற்றங்கள். ஆட்சிகளில் மாற்றம், நாடுகளின் எல்கைளில் மாற்றம், உணவில், உடையில், பண்பாட்டில் மாற்றம்... ஆனால் மாறாமல் தொடர்கிறது அந்தக் கதறலும், கண்ணீரும். இலங்கை வீதிகளை நிரைத்த அந்த ஓலக்குரல்கள் நமது காற்றில் கலந்து பேரோசையாய்ப் பெருகுகிறது. இருபத்தைந்து ஆண்டுகள். கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படும் அந்த இனப்படுகொலை நடந்து இருபத்தைந்து ஆண்டுகள். வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள் நடந்து இருபத்தைந்து ஆண்டுகள். வாக்காளர் பட்டியலை வைத்து தமிழர்களை அடையாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்தெறிந்து வெட்டித் துண்டாடிய காட்சிகள் நிகழ்ந்து இருபத்தைந்து ஆண்டுகள். கடைகளில் தமிழனின் கறி கிடைக்கும் என பலகையில் எழுதி வைத்து எக்காளமிட்ட கோரங்கள் நிகழ்ந்து இருபத்தைந்து ஆண்டுகள். எல்லாவற்றுக்கும் விழா எடுத்துக் கொண்டாடும் தமிழர்கள் இதையும் கூட வெள்ளி விழாவாகக் கொண்டாடி மகிழலாம். உள்ளூர் களேபரத்தில் நாம் கொஞ்ச காலமாக இலங்கையை மறந்து விட்டோம். சிங்களக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர்களை எண்ணிக் கசிந்து கண்ணீர் விட்ட நேரத்திலும் கூட தமிழர்களைப் பற்றிப் பேசாமல் தவிர்த்துவிட்டோம். ‘முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்களான’ நாம் ஈழப்பிரச்சனையில் எளிதில் சிக்கிக் கொள்வோமா என்ன? ‘‘சார்க்’’ மாநாட்டுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது இலங்கை. ‘‘உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக் கொள்ளவே நாம் என்றும் விரும்புகின்றாம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி ஒரு நட்புறவுப் பாலத்தை கட்டியெழுப்புவதிலும் இதய சுத்தியோடு இருக்கின்றோம். தமிழீழ தேசத்தினதும், தமிழீழ மக்களினதும் நலலெண்ணத்தை வெளிப்படுத்தி பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புகின்றோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையாக சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு ஜூலை 26 முதல் ஆகஸ்டு 4 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தைக் கடைப்படித்து, மாநாடு வெற்றி பெற ஒத்துழைப்போம்’’ என புலிகள் இயக்கம் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்தச் சூழலில் தான் இலங்கையில் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி நடைபெற்ற இனப்படுகொலையை நாம் நினைவு கூர்கிறோம். ‘‘நெருப்பையும், குருதியையும், அவலக் குரலையும் ஒன்றாகக் கேட்கும்போது வன்முறையின் சித்திரம் அல்லது கலவரம் ஒன்றின் தோற்றம் எப்போதும் மனதில் விரிகிறது... எரிந்து கொண்டிருக்கும் இந்த நெருப்பு எப்போதுதான் அணையப்போகிறது?’’ என்ற ஈழத்து எழுத்தாளர் கருணாகரனின் கேள்வியை நாமும் பகிர்ந்து கொள்கிறோம். எப்படி நடந்தது இந்த வன்முறை? 1983 ஜூலை 23ஆம் தேதி மாலை யாழ்பாணத்துக்கு வெளியே நாணுவ ஜீப் ஒன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. அந்த ஜீப்புக்கு பின்னால் வந்த ராணுவ டிரக்கிலிருந்து வீரர்கள் இறங்கி ஓடி வருகிறார்கள். நாலாபுறமிருந்தும் அவர்கள் தாக்கப்படுகிறார்கள். எந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள். தாக்குதலின் முடிவில் பதினைந்து சிப்பாய்களின் சடலங்கள் இரைந்து கிடக்கின்றன. கொல்லப்பட்ட சிப்பாய்கள் அனைவரும் சிங்களவர்கள். அவர்களைக் கொன்றதோ தமிழர்களின் விடுதலைப்புலிகள். கொல்லப்பட்ட சிப்பாய்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பினால் கலவரம் வெடிக்கக்கூடும் என அஞ்சிய இலங்கை அரசாங்கம் அவர்கள் எல்லோரது உடல்களையும் கொழும்புவில் அடக்கம் செய்வதென்று முடிவு செய்தது. ஜூலை 24ஆம் தேதி கொழும்புவில் சிப்பாய்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படும்போது அங்கே கூடிய சிங்களவர்களின் கும்பல் கொழும்பு நகருக்குள் புகுந்து தமிழர்களின் வீடுகளைத் தேடி கண்டுபிடித்துத் தாக்கத் தொடங்கியது. தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள். வீட்டிலிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. வீடுகள் எரிக்கப்பட்டன. தமிழ் மக்களில் பலர் தப்பித்து ஓடி இரக்கமுள்ள சிங்களவர்கள் சிலரின் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்தபோதிலும் கலவரம் அடங்குவதாக இல்லை. கொழும்புவில் ஆரம்பித்த கலவரம் தமிழர்கள் வசித்த கண்டி, மாத்தளை, நாவல்பிட்டியா, பாதுல்லா, நுவாரா எலியா முதலான பகுதிகளுக்கும் பரவியது. சிங்களவர்கள் வாழ்ந்த பகுதிகளில் குடியிருந்த தமிழர்களே அதிகம் பாதிப்புக்கு ஆளானார்கள். இதுகுறித்து ஆர்.சம்பந்தன் எழுதியிருப்பது நமக்கு நல்ல விளக்கமாக இருக்கிறது. ‘‘இந்த வன்முறையின் போது குறிப்பிட்ட ஒரு தந்திரத்தை சிங்களவர்கள் கையாண்டார்கள். முதலில் இலங்கை ராணுவத்தினர் தமிழர் வாழும் பகுதிக்குள் வருவார்கள். அங்கே ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாகச் சொல்லி தேடுதல் வேட்டையில் ஈடுபடுவார்கள். தமிழர்களை ஆபாசமாகப் பேசி அச்சுறுத்தி களேபரம் செய்வார்கள். அங்கிருக்கும் இளைஞர்களை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிடித்துப் போவார்கள். அவர்கள் போன சிறிது நேரத்தில் அங்கே சிங்களவர்களின் கும்பல் நுழையும். தமிழர்களின் வீடுகளைக் கொள்ளையடிக்கும். அதன்பிறகு வீடுகளுக்கு தீ மூட்டும். ராணுவத்தினரின் தேடுதல் வேட்டையும், தமிழ் இளைஞர்களை அவர்கள் பிடித்துச் செல்வதும் அதன்பிறகு வருகின்ற சிங்களவர்களின் கும்பலுக்கு உதவத்தான்.’’ தங்களை தற்காத்துக்கொள்ள எதுவுமற்ற நிலையில் தமிழர்கள் சிங்களவர்களிடம் சிக்கிக் கொண்டு உயிரிழந்தனர் என்று அதை வர்ணிக்கிறார் சம்பந்தன். முதலில் அரசாங்க அலுவலகங்களைக் குறி வைத்துத்தான் வன்முறை ஏவப்பட்டது. அதன்பிறகு தான் அது தமிழர்களுக்கு எதிரானதாக மாறியது. தெருச்சந்திகளில் கையில் பெட்ரோல் கேன்களோடு வாகனங்களை வழி மறித்த கும்பல் டிரைவரும், வாகனத்தில் பயணம் செய்பவரும் தமிழரா என்று விசாரித்து அவர்கள் தமிழர்கள் எனத் தெரிந்தால் பெட்ரோலை ஊற்றி உயிரோடு கொளுத்தியது. அப்படியொரு சம்பவத்தை சிங்களக் கவிஞர் பாஸில் ஃபெர்னாண்டோ கவிதையொன்றில் இப்படி விவரிக்கிறார். ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம் இறந்தவர்களைப் புதைப்பது ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில் இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக் காரணம் ஏதுமில்லை சத்தியமாகச் சொல்கிறேன்: நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன் சித்தம் குழம்பியவனாகவும் ஒதுபோதும் இருந்ததில்லை உங்களைப் போலவே நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன் அன்றாட வாழ்க்கையிலும் நான் ஒரு யதார்த்தவாதி எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால் உடனடியாக மறந்து விடுகிறேன் மறப்பதில் எனக்கிருக்கும் திறமை பற்றி எவருக்குமே ஐயமிருந்ததில்லை என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது எனினும் அந்தக் கும்பல் அந்தக் காரை எப்படித் தடுத்து நிறுத்தியது என்பதை இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன் காருக்குள் நாலுபேர் பெற்றோர், நாலு அல்லது ஐந்து வயதில் ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள் ஏனைய கார்களை எப்படி தடுத்து நிறுத்தினரோ அப்படித்தான் அந்தக் காரையும் தடுத்து நிறுத்தினார்கள் எந்த வேறுபாடும் இல்லை. குதூகலம் கொப்பளிக்கின்ற மனநிலையில் ஒரு சில கேள்விகள் செய்வதைப் பிழையறச் செய்யவிரும்பும் கவனமாய் இருக்கலாம் பிறகு செயலில் இறங்கினர் வழமைபோல பெட்ரோல் ஊற்றுவது, பற்ற வைப்பது போன்ற விஷயங்கள் ஆனால், திடீரென்று யாரோ ஒருவன் கதவுகளைத் திறந்தான். அழுது அடம்பிடித்துப் பெற்றோரை விட்டு விலக மறுத்த இரண்டு குழந்தைகளையும் வெளியே இழுத்தெடுத்தான் குழந்தைகளின் உணர்வுகளைக் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது சில சமயங்களில் குழந்தைகளுக்கு நல்லது என அவன் எண்ணியிருக்கக் கூடும் துரிதமாக செயல்பட்ட இன்னொருவனோ தீக்குச்சியைக் கிழித்தான் சுற்றிலும் எரிந்து கொண்டிருந்த பலவற்றோடு இந்த நெருப்பும் சேர்ந்து கொண்டது அருகே நின்று தமது சாகசங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர் கொஞ்சம் பேர் கலைந்து போனார்கள் ஒருசிலர் காருக்குள் இருந்த இருவரும் என்ன எண்ணியிருப்பார்கள் என்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள் சமாதான விரும்பிகளாக மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர் அப்போதுதான் திடீரென உள்ளேயிருந்தவர் கார் கதவை உடைத்து வெளியே பாய்ந்தார் சட்டையிலும் தலைமயிரிலும் ஏற்கனவே தீப்பற்றி விட்டிருந்தது குனிந்தவர் தனது இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார் எங்கும் பார்க்காமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை செயல்படுத்துவது போல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார் கதவை மூடினார் தனித்துவமான அந்த சப்தத்தை நான் கேட்டேன் எரிந்தழிந்த கார் இப்போதும் தெருவோரம் கிடக்கிறது ஏனையவற்றோடு இன்னும் சில நாட்களில் மாநகராட்சி அதனை அகற்றக்கூடும் தலைநகரின் தூய்மையே ஆட்சியாளரின் தலையாய பணி’’ ஒரு சிங்களவரே அளித்த ஒப்புதல் வாக்குமூலமாக இருக்கிறது இந்தக் கவிதை. வீதிகளிலும், வீடுகளிலும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது மட்டுமின்றி சிறையில் இருந்தவர்களும் குரூரமாக கொல்லப்பட்டனர். வெலிக்கடை சிறையில் ஜூலை 25ஆம் தேதி முப்பத்தேழு தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர். மூன்று நாள் கழித்து மீண்டும் பதினைந்து பேர் படுகொலை செய்யப்பட்டனர். ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்காகப் பழிவாங்கவே இந்தக் கலவரம் நடத்தப்பட்டதென்று சிலர் கூறுகின்றனர். அது உண்மையல்ல. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமாகி விட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்தது முதலே இனவொதுக்கல் கொள்கையும் தீவிரமடைய ஆரம்பித்து விட்டது. 1983ல் ª-ஜயவர்த்தனே ஆட்சிக் காலத்தில் அது புதிய பரிமாணத்தை எட்டியது. அந்த ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி திரிக்கோணமலை காவல் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இறந்தார். எந்தவித விசாரணையுமின்றி அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அவரது உடம்பிலிருந்த காயங்கள் காட்டின. அது தமிழ் மக்களிடம் கொந்தளிப்பை கூட்டியது. 1983 ஜூன் மாதம் 3ஆம் தேதி அரசாங்கம் ஆணையொன்றைப் பிறப்பித்தது. அந்த அவசர ஆணையின்படி போலீஸார் எவ்வித விசாரணையோ, போஸ்ட்மார்ட்டமோ இன்றி எந்தவொரு சடலத்தையும் புதைக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பே தமிழர்களின் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் தொடங்கி விட்டன. இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ‘‘இனிமேல் நான் தமிழர்களின் அபிப்ராயம் பற்றி கவலைப்படப் போவதில்லை. அவர்களது உயிர்களோ, கருத்துகளோ எங்களுக்கு பொருட்டல்ல. தமிழர்களைப் பட்டினி போட்டால் சிங்களவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்’’ என லண்டனிலிருந்து வெளியான பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார். ஆக, ஜூலை கலவரத்துக்கான தயாரிப்பை நீண்ட நெடுங்காலமாகவே சிங்களவர்கள் செய்து கொண்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை. 1977ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கலவரமும், 1981ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டதும் இந்தத் தயாரிப்பில் சில மைல் கற்கள். இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டதை இனப்படுகொலை (Genocide) எனச் சொல்வது சரியா? என்று சிலர் கேட்கலாம். இனப்படுகொலை என்பதற்கான வரையறை என்ன என்பதை பவுல் ஆர்.ப்ராஸ் என்ற அமெரிக்க சிந்தனையாளர் தனது நூலொன்றில் (Forms of Collective Violence) விளக்கியிருக்கிறார். ‘‘மக்களில் ஒரு பிரிவினரை ஒரு குறிப்பிட்ட அடையாளத்துக்குள் அடக்கி அவர்களை ஆதிக்கம் செய்வது; அதற்கு வன்முறையை கருவியாகப் பயன்படுத்துவது; அரசியலை இனவாதத்தின் ªச்வாக்குக்குள் கொண்டு வருவது; சிறுபான்மை இனத்துக்கு எதிராக வன்முறையை ஏவுகிறவர் அரசியலில் தலைமை ஏற்பது; தங்களது சந்தோஷத்துக்காகவும், கேளிக்கைக்காகவும் எதிராளிகள் மீது வன்முறையை ஏவுவது; மக்கள் பெருமளவில் இடம் பெயர்ந்து செல்ல நிர்ப்பந்தப்படுத்தும் விதமாகத் தாக்குதல் தொடுப்பது; இன சுத்திகரிப்புக்கு வன்முறையை வழியாகக் கொள்வது; காவல்துறை, ராணுவம் முதலானவற்றின் ஒரு சார்பான அணுகுமுறை’’ - இப்படி இனஅழித்தொழிப்பு மனோபாவத்தின் அம்சங்களை அவர் பட்டியலிடுகிறார். இவை எல்லாமே 1983 ஜூலை கலவரத்துக்குப் பொருந்துகின்றன. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடரும் யுத்தத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் விரும்பியும், விரும்பாமலும் அங்கு பலியாகியுள்ளனர். ஈழத் தமிழர்கள் உலகமெங்கும் அகதிகளாக விரட்டப்பட்டிருக்கிறார்கள். இப்போதும் தமிழர்களின் வீடுகளின் மீது குண்டுகள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. சின்னஞ்சிறு குழந்தைகள் புன்னகை மாறாமல் புதை குழிகளுக்குள் போய்க் கொண்டிருக்கின்றனர். இதை ஐ.நா. சபை வேடிக்கை பார்க்கிறது. இதை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன. இதை இந்தியா வேடிக்கை பார்க்கிறது. இதைத் தமிழகமும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ‘மௌனம் என்பது காய்ந்து போன ரத்தம்’ என்று சொன்னான் ஒரு கவிஞன். காய்ந்து போனாலும் கவிச்சி மாறாத ரத்தம் அது. உணர்வுள்ளவர்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும் ரத்தம். கொழும்பு நகரில் சார்க் நாடுகளின் தலைவர்கள் இப்போது சந்தித்துப் பேசவுள்ளனர். நமது பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் அங்கு செல்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பில் பெற்ற வெற்றியை அங்கு வரும் தலைவர்களோடு அவர் பகிர்ந்து கொள்ளலாம். அவர்களுக்குப் பிரத்யேகமாக விருந்து கூட கொடுக்கலாம். மாநாடு நடக்கும் இடத்திலிருந்து சில மைல் தொலைவில் உயிரைக் கையில் பிடித்தபடி தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்களின் ஞாபகம் அவருக்கு வருமென்று சொல்ல முடியாது. ஏனென்றால் பாவம் அவர்கள் தமிழர்கள். 24.07.2008 ஜுனியர் விகடன்
  2. பாடல்: லவ்வுக்கு யேஸ் படம்: தீயாய் வேலை செய்யணும் குமாரு
  3. *.ஒருவர் உங்களை கல்லை கொண்டு எறிந்தால்., நீங்கள் அவர்களை பூவை கொண்டு எறியுங்கள்.! மறுபடியும் கல்லை கொண்டு எறிந்தால் ., பூ தொட்டியைக் கொண்டு எறியுங்கள் , சாவட்டும் .! *.அப்பா : அம்மா அடிச்சதுக்கு ஏன்டா அழுற ..? மகன் : சும்மா இருங்கப்பா ..! உங்கள மாதிரி எல்லாம்என்னால அடி தாங்க முடியாது...!! *.ஒரு குளத்தில் 22 எறும்புகள் குளித்துக் கொண்டிருக்கு ... அப்போ ஒரு யானை வந்து குளத்தில் ட்ய்வ் அடிக்குது ... அந்த குளத்தில் குளித்துக்கொண்டிருந்த 21 எறும்புகள் கரைல போய் விழுந்திருச்சு .. ஒரு எறும்பு மட்டும் யானைதலைல போய் விழ்ந்திருக்கு ... அத பார்த்த கரைல இருந்த ஒரு எறும்புசொல்லிச்சாம்.. "கொய்யால அவன அப்படியே தண்ணிக்குள்ள அமுக்குடாமாப்ள ..." *.மகன் : "அப்பா ஓவரா என்னை பக்கத்து வீட்டு பொண்ணோட கம்பர் பண்ணி பேசிக்கிட்டே இருப்பியே ... இப்ப பார்த்தியா அது 470, நான் 480 மார்க்! " அப்பா : அட நாயே .. அவ 10TH , நீ +2.. *.அப்பா : "அப்பா சொல்றத கேக்கணும் .. இல்லனா உருப்படமுடியாது ...!" மகன் : "அதுக்கு இப்ப பீல் பண்ணி என்ன பிரயோஜனம் ...தாத்தா சொல்லும் போதே கேட்டிருக்கணும் ...!" அப்பா : .....? *.முடி வளர்ந்தா வெட்டிக்கலாம் ..! நகம் வளர்ந்தா வெட்டிக்கலாம் ..! ஆனா அறிவு வளர்ந்தா வெட்ட முடியுமா ...? கவலை படாதிங்க உங்க நல்ல மனசுக்கு அப்படி எல்லாம்ஆகாது ...! *.ஒரு மனிதர் ரயில் இல் ஒவ்வொரு ஸ்டேஷன் ஆகஇறங்கி இறங்கி ஏறிக்கிட்டே இருந்தாரம் ... அத பார்த்த ஒருத்தர் "ஏன் ஒவ்வொரு ஸ்டேஷன் ஆகஇறங்கி ஏறுரீங்க" அப்படின்னு கேட்டராம் . அதுக்கு அந்த மனிதர் சொன்னாரம் " டாக்டர் நீண்ட தூரபயணம் போகதிங்கனு சொல்லிருக்கார் . அதான் ஒவ்வொருஸ்டேஷன் ஆக இறங்கி ஏறுறன்". *.காற்றில் அவள் துப்பட்டா என்மீது விழுந்தது... எனக்குபயங்கர சந்தோசம்.. பைக் துடைக்க துணி கிடைத்தது என்று ..! *.எப்பவெல்லாம் உங்களுக்கு படிக்கனும்னு தோணுதோஅப்ப .. ஒரு அமைதியான அறைய தேர்ந்தெடுங்க.. கொஞ்சம்ஆசுவாசப்படுத்திக்குங்க .. ஒரு முறை மூச்சை இழுத்து விட்டுக்குங்க ... அப்புறம்கன்னத்துல போட்டுக்குங்க .. " ராஸ்கல் இது என்ன புதுபழக்கம் ( படிக்கறது )..!" *.உலகின் 6 உண்மைகள் : முதல் உண்மை : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொட முடியாது ..!இரண்டாவது உண்மை : முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் ..! மூன்றாவது உண்மை : நீங்க இப்ப சிரிக்கிறீங்க .. ஏன்னா நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால ..! நான்காவது உண்மை : இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் ஆக்கனும்னு நினைக்கிறீங்க ..! ஐந்தாவது உண்மை : இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க ..! ஆறாவது உண்மை : முதல் உண்மை ஒரு பொய் ..! *.சத்தம் இல்லாமல் உன் இருப்பிடம் தேடி குட் நைட்சொல்ல வந்த என் எஸ்.எம்.எஸ் இனை சத்தம் போட்டுகாட்டிக் கொடுத்தது உன்னோட ஓட்ட மொபைல் ...! *.உயிர் இல்லாத மலரை கூட நாம் நேசிக்கிறோம் ...ஆனால் நமக்காக உயிரையும் கொடுப்பவர்களை நேசிக்கஏன் யோசிக்கிறோம் ..!? அதனால நேசிங்க ... கோழி , ஆடு ,மீன் ... *.அப்பா : என்னடா பேப்பர் ல ரிசல்ட் வந்திருக்கு ..உன்னோட நம்பர் வரல ...? மகன் : நமக்கு இந்த விளம்பரம் எல்லாம் பிடிக்காதுப்பா...! *.உங்கள தொந்தரவு பண்ணுறதுக்கு மன்னிக்கணும் .. ஆனா செய்தி முக்கியமானது .. உண்மையா சொன்னா நாங்க சீட்டு விளையாடிட்டு இருக்கோம் .. அதுல ஜோக்கேர் கார்டு காணாம போய்டுச்சு .. அதனால உன்னோட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அனுப்பேன் ப்ளீஸ் .... *.டாக்டர் : மாடில இருந்து எப்பிடி விழுந்திங்க ...? நோயாளி : ஐயோ அம்மா னு கத்திகிட்டே விழுந்தேன்டாக்டர் ..! *.உழைப்பு உயர்வு தரும் .. உயர்வு பணம் தரும் .. பணம் திமிரை தரும் .. திமிர் ஆணவம் தரும் .. ஆணவம் அழிவைத் தரும் .. அதனால நாம் நாமாக இருப்போம் .. உழைப்பை எதிர்ப்போம் .. ஓய்வு எடுப்போம் ..! *.இந்த உலகத்தில சில விசங்களை யாராலும் மாற்ற முடியாது .. காளிபிலோவேற தலை ல வைக்க முடியாது .. கோல்ட் பில்டேற அடகு வைக்க முடியாது .. கோல மாவுல தோசை சுட முடியாது .. இந்த மாதிரி வெட்டி எஸ்.எம்.எஸ் வந்தாலும் உங்களால படிக்காம இருக்க முடியாது ... *.எங்கே நேசம் இருக்கிறதோ அங்கே காதல் பிறக்கும் .. எங்கே காதல் பிறக்கிறதோ அங்கே வலி இருக்கும் .. எங்கே வலி இருக்கிறதோ அங்கே .. "IODEX" தடவுங்க ..வலி போய்டும் ..! *.முயலும் ஆமையும் நுழைவுத்தேர்வு எழுதுச்சு.. அதுல ஆமை 80% , முயல் 81% மதிப்பெண் வாங்கிச்சு .. இரண்டுமே பொறியியல் கல்லூரி அட்மிசன் இக்கு போனது .. அங்க வந்து கட் ஆப் மார்க் 85%. ஆமை அட்மிசன் ஆகிடுச்சு.. எப்படி ..? உங்களுக்கு நியாபகம் இருக்கா..? நாம ஒன்னாவது படிக்கும் போது ஒரு கதை படிசிருப்போமே .. அதுல கூட ஒரு ஆமை ஓட்டப் பந்தயத்துல வெற்றி பெற்றுடும்ல...? ஸ்போர்ட்ஸ் கோட்டா ல அதுக்கு அட்மிசன் கிடைச்சுடுட்சு ... *."கொஞ்சமா பேசு ! அதிகமா கேள் " அப்படின்னு பெரியவங்க ஏன் சொன்னாங்க தெரியுமா ...? incoming free.. outgiong kaasu.. அதனாலதான் .. *.பெண் 1 : ரேஷன் கடைல சர்க்கரை,அரிசி,பருப்பு போடுறாங்க ..!! பெண் 2 : உளுந்து போடுறாங்களா ...?? பெண் 1 : இல்ல உட்கார்ந்துதான் போடுறாங்க ..
  4. லெப்டினன்ட் கேணல் சேனாதிராஜா அவர்களுக்கு 9ம் ஆண்டு வீரவணக்கங்கள்.
  5. மர்லின் மன்றோ உலகப் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ , அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். "மர்லின் மன்றோ" உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை. ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர். மர்லின் மன்றோவின் நடை அழகு மிகவும் புகழ் பெற்றது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் "கனவுக்கன்னி"யாக விளங்கி வந்தார். ஆங்கிலப் பட உலக புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த மர்லின் மன்றோவுக்கு திடீரென்று மன நிலை பாதிக்கப்பட்டது. பேய் பிடித்தவர் போல இருந்து வந்தார். பெரிய டாக்டர்கள் சிகிச்சை அளித்து, அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தார்கள். அதன் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்தார். மர்லின் மன்றோ கடைசியாக நடித்துக்கொண்டு இருந்த படத்தின் பெயர் "நான் கொடுப்பதற்கு இன்னும் சில உண்டு" என்பதாகும். அந்த படத்தில்தான் குளிக்கும் காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்தார். ஆனால் படப்பிடிப்புக்கு மர்லின் மன்றோ ஒழுங்காக வருவது இல்லை என்று கூறி அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். சரிவர நடிக்கத் தவறியதற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என்று மர்லின் மன்றோ மீது வழக்குத் தொடரப்பட்டது. அதுமுதல் மர்லின் மன்றோ உற்சாகம் குன்றி இருந்தார். ஆனால் அதன் பிறகு அவரையே தொடர்ந்து நடிக்க வைக்க ஏற்பாடு நடந்தது. மர்லின் மன்றோவுக்கும், படத்தயாரிப்பாளருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருந்தார்கள். இந்த நிலையில் 5-8-1962-ல் மர்லின் மன்றோ தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி, உலகம் முழுவதும் இருந்த சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. மர்லின் மன்றோ திராவகம் (ஆசிட்) குடித்து தற்கொலை செய்து கொண்டதாக முதலில் செய்தி பரவியது. அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் ஏற்பட்டதாக அறிவித்தனர். அமெரிக்காவில் சினிமா நகரமான ஆலிவுட்டில் ஒரு மாளிகையில் மர்லின் மன்றோ வசித்து வந்தார். அதிகாலை 3 மணிக்கு மர்லின் மன்றோ கட்டிலில் மயங்கிக் கிடந்ததை வீட்டு வேலைக்காரர் பார்த்து விட்டு டாக்டர்களுக்கு தகவல் கொடுத்தார். டாக்டர்கள் விரைந்து சென்றார்கள். மன்றோவின் படுக்கை அறைக் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது. டாக்டர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்கள். ஒரு கையில் டெலிபோனுடன் மன்றோ படுக்கையில் கிடந்தார். உடலில் ஆடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாகக் கிடந்தார். டாக்டர்கள் சோதித்துப் பார்த்ததில் அவர் இறந்து வெகு நேரம் ஆகி இருப்பது தெரிந்தது. அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோ, கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது புரியாத புதிராக இருந்தது. இதுபற்றி விசாரணை நடத்தி மர்மத்தை கண்டுபிடிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி மர்லின் மன்றோவின் கடைசி கால வாழ்க்கை பற்றி துருவி ஆராய்ந்தது. இருப்பினும் கிணற்றில் போடப்பட்ட கல் போல அது அமிழ்ந்து போனது. தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோவுக்கு வயது 36. சினிமா உலகத்திலேயே அதிக பணம் சம்பாதித்த நடிகையாக திகழ்ந்தார். மர்லின் மன்றோவின் மறைவு ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, பிரபல நடிகைகளுக்கும் கூட பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த பிரபல ஆங்கில நடிகை சோபியா லாரன் இந்த செய்தியை கேட்டு கண்ணீர் விட்டு அழுதார். மற்றொரு ஆங்கில நடிகையான ஜீனா லோலாபிரி கிடா கூறும்போது, "இது பெரிய அதிர்ச்சியான செய்தி. நான் இதற்காக மிகவும் வருந்துகிறேன். அவர் (மர்லின் மன்றோ) மிகவும் நல்லவர்" என்று சொன்னார். அமெரிக்காவில் எங்கு திரும்பினாலும் மர்லின் மன்றோ பற்றிய பேச்சாகவே இருந்தது. மரணத்தின்போது கோடீசுவரியாக இருந்த மர்லின் மன்றோவின் இளம் பருவ வாழ்க்கை, மிகவும் வறுமையும், சோதனைகளும், துன்பங்களும் நிறைந்ததாக இருந்தது. http://tamilkangal.blogspot.in/2013/03/blog-post_4572.html
  6. பாடல்: மஞ்சள் பூசும் வானம் படம்: friends
  7. நேதாஜி ஹிட்லரை சந்தித்தார் இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். வங்காளத்தில் புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த ஜானகி நாத்போஸ் - பிரபாவதி தேவி தம்பதிகளின் 9-வது குழந்தையாக 23-1-1897-ல் பிறந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். (நேருவைவிட எட்டு வயது இளையவர்). லண்டனுக்குச் சென்று ஐ.சி.எஸ் (தற்போதைய ஐ.ஏ.எஸ்) படிப்பு படித்தார். முதல் வகுப்பில் தேறினார். ஆனால் வெள்ளையர் ஆட்சியில் கலெக்டராக வேலை பார்க்கப்பிடிக்காமல், "ஐ.சி.எஸ்" பட்டத்தை வாங்காமலேயே இந்தியா திரும்பினார். காந்தியை சந்தித்தார். காங்கிரசில் சேர்ந்தார். சுபாஷ் சந்திரபோசும், நேருவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். சுத்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நேதாஜி, பர்மாவில் மாண்டலே என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை அடைந்த பின், 1938-ம் ஆண்டு ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். "சட்டமன்றங்களைக் கைப்பற்றினால் மட்டும் போதாது. வெள்ளையர்களை வெளியேற்ற தீவிரமாகப் போராட வேண்டும்" என்று வீர உரை நிகழ்த்தினார். அவர் புகழ் நாடெங்கும் பரவியது. அவரை "நேதாஜி" (தலைவர்) என்று மக்கள் அழைத்தனர். நேதாஜியின் தீவிரவாதப்போக்கு காங்கிரஸ் தலைவர்களுக்கு -குறிப்பாக மகாத்மா காந்திக்குப் பிடிக்கவில்லை. 1939-ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக நேதாஜி அறிவித்தார். அவரை எதிர்த்து, பட்டாபி சீத்தாராமையாவை காந்தி நிறுத்தினார். கடும் போட்டியில், நேதாஜி வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, "பட்டாபியின் தோல்வி, என் தோல்வி" என்று கூறினார். இதனால் மனம் புண்பட்ட நேதாஜி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆயினும், காங்கிரசுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட "பார்வர்டு பிளாக்" என்ற அமைப்பை உருவாக்கினார். இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரிட்டிஷ் அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக 1940 ஜுலையில் நேதாஜியை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. உலகப்போரின் ஆரம்பத்தில், பிரிட்டிஷ் படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பிரிட்டனின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார். அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரிய பிரளயமே ஏற்படும் என்பதைப் பிரிட்டிஷ் அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது. ஆனால் அவர் வீட்டைச்சுற்றி ரகசிய போலீசார் சாதாரண உடையில் 24 மணி நேரமும் வட்டமிட்டபடி இருந்தனர். எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார். வெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர். 1941-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் நேதாஜி ஒரு முஸ்லிம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார். ஒரு காரில், கல்கத்தாவிலிருந்து 40 மைல் தூரத்தில் உள்ள ஒரு சிறிய ரெயில் நிலையத்துக்குச் சென்றார். "சயாதீன்" என்ற பெயரில், ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். 17-ந்தேதி பெஷாவர் நகரை (தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது) அடைந்தார். அங்கே அவருடைய நண்பர்கள் காத்திருந்தனர். அவர்கள் நேதாஜியை ஒரு காரில் அழைத்துச் சென்றார்கள். மூன்று நாள் கழித்து பட்டாணியர் போல் மாறுவேடம் அணிந்து, நேதாஜி ஒரு காரில் பயணமானார். ரகமத்கான் என்ற நண்பர் உடன் சென்றார். கார் நெடுந்தூரம் சென்றது. கார் செல்ல முடியாத பாதையில் இருவரும் நடந்து சென்றார்கள். மறுநாள் மாலை இந்தியாவின் எல்லையைக் கடந்து ஒரு கிராமத்தை அடைந்தார்கள். அன்று இரவு ஒரு மசூதியில் தங்கினார்கள். மறுநாள் காலை எழுந்ததும், மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். காட்டிலும், கரடுமுரடான மலைப்பாதைகளிலும் நடந்து, ஒரு ரோட்டை அடைந்தார்கள். அங்கு ஒரு லாரியில் ஏறி, ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் போய்ச் சேர்ந்தார்கள். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டார். தான் யார் என்பதையும், இத்தாலிக்கு செல்ல விரும்புவதையும் தெரிவித்தார். அவர்கள் இது பற்றி இத்தாலி அரசுக்கு தகவல் அனுப்பினார்கள். பதில் வர தாமதமாயிற்று. எனினும் நேதாஜி பொறுமையுடன் பல நாட்கள் காத்திருந்தார். இறுதியில் அவரை அழைத்துச்செல்ல ரோமில் இருந்து இரண்டு தூதர்களை இத்தாலி அரசு அனுப்பி வைத்தது. மார்ச் 18-ந்தேதி காலை, நேதாஜி, அந்த இருவருடன் காரில் புறப்பட்டார். காபூல் வரை துணைக்கு வந்த அவர் நண்பர் ரகமத்கான், இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றார். நேதாஜிக்கு, பிரயாண அனுமதிச்சீட்டை இத்தாலி அனுப்பியிருந்தது. அதன் உதவியால், ரஷிய எல்லைக்குள் நேதாஜியும், மற்ற இருவரும் நுழைந்தனர். ரஷியா வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெர்மனிக்கு வருமாறு ஹிட்லரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, ரெயில் மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்குப் போய்ச்சேர்ந்தார். அவர் ஜெர்மனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்டன. அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விஷயமே பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிந்தது! ஜெர்மனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வாதிகாரி ஹிட்லரை நேதாஜி சந்தித்துப்பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி அளித்தார். http://tamilkangal.blogspot.in/2013/04/blog-post_6126.html
  8. பாடல்: நெஞ்சம் எனும் ஊரினிலே படம்: ஆறு இசை: தேவி சிறி பிரசாத் பாடியவர்கள்:சிறினிவாஸ் & கல்பனா http://youtu.be/54acjyPrE3Y
  9. கரும்புலிகள் நாள் 05 -07-2013 விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் தற்கொடைப் போராளி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நாள் தான் July 05 கரும்புலிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது. அன்ட்று ஸ்ராலின் http://adangathamilan.blogspot.ca/
  10. அர்ஜுனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.(june 28)
  11. பாடல்: காற்றிலே நடந்தேனே படம்: ஆதி பகவான் பாடியவர்கள்: உதித் நாராயணன் நிச ரிக ரிக ரிக ரிக ரிச நிச சம கம மப கரி சநிநி நிச ரிக ரிக ரிக ரிக ரிகரிச நிச தச தசசநி ரிக மதமதமம... மபமபதபப... http://tamilmn.com/2012/Aadhibhagavan_2012/Kaatriley Nadanthene - Www.Tamilkey.Com.mp3 காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே நீ தோட பறந்தேனே நான் என்னை வியந்தேனே அய்யோ அய்யோ மேகம் போலே கலைந்து கலைந்து போகிறேன் மெய்யோ பொய்யோ தோனவில்லை ரசிகன் கவிஞன் ஆகினேன் விண்மீன் முதுகில் ஏறினேன் நூறு கண்டம் தாவினேன் உன்னில் உன்னில் மூழ்கினேன் காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே நீ தோட பறந்தேனே நான் என்னை வியந்தேனே உயிரே உயிரே ரெண்டானதே... ஓ... இளமை உடைந்து திண்டாடுதே... ஓ... பாறை கரைந்து பாலானதே பார்வை நான்கும் கொண்டாடுதே வானம் எந்தன் தலைதட்டுதே வார்த்தை என்னுள் கவிகட்டுதே நீயும் நானும் கேட்காமல் நாம் ஆனதேன் மூச்சு காற்றிலே நுழைந்தாயே பூச்சு போட்டுகள் திறந்தாயே நீ யாரடா தேடினேன் முகவரிதானே வாய் கூசுதே உன் பேரை தான் பேசுதே சாரலில் நான் காய்கிறேன் உன் விழி குடைதானா ஊமையாய் நான் தேய்கிறேன் உன் மொழி விடைதானா ரசித்து கவியை நாடினேன் உன்னில் உன்னில் மூழ்கினேன் மின்னல் முதுகில் ஏறியே நானும் கண்டம் தாவினேன் காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே நீ தோட பறந்தேனே நான் என்னை வியந்தேனே நிச ரிக ரிக ரிக ரிக ரிச நிச சம கம மப கரி சநிநி நிச ரிக ரிக ரிக ரிக ரிகரிச நிச தச தசசநி ரிக மதமதமம... மபமபதபப...
  12. பாடல்: நெஞ்சே நெஞ்சே படம்: எங்கேயும் காதல் இசை: ஹரிஸ் ஜெயராஜ் பாடியவர்கள்: ஹரிஸ் ராகவேந்திரா , சின்மயி வரிகள்: மதன் கார்க்கி
  13. பாடல்: இன்னும் கொஞ்ச நேரம் படம்: மரியான் இசை: ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்கள்: விஜய் பிரகாஸ், சுவேதா மேனன் http://youtu.be/3e8Q4Ql6E5U
  14. பாடல்: போ நீ போ படம்: மூன்று பாடியவர் :மோகிற் இசை: அனுருத்
  15. சாந்தி அக்கா, தமிழ் சூரியன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  16. பாடல் : சுட சுட தூறல் படம் : கேடி பில்லா கில்லாடி ரங்கா இசை : யுவன் பாடியவர் : யுவன்
  17. பாடல் : ஆனந்த யாழை படம் : தங்க மீன்கள் இசை : யுவன் பாடியவர் : சிறிராம் பார்த்தசாரதி வரிகள் : நா. முத்துக்குமார்
  18. கட்டப்பஞ்சாயத்து காலங்கள் கடந்தாலும், மாற்றங்கள் நிகழ்ந்தாலும், கிராமத்தின் பெயர்சொல்லும் இந்த, ஆலமரத்தடி பஞ்சாயத்துக்கள் ஓய்ந்தபாடில்லை. மரத்தைச் சுற்றி மாந்தர்களின் கூட்டம், ‘மா’ மரத்தின் ஒருபுறத்தில் காகங்கள் கரைய, கரை போட்ட வேட்டியுடன் நரைத்த தலைகள் அமர்ந்திருக்க, தழும்பிய நீருடன் செம்பொன்று காத்திருக்க, காவலனாய் நின்றிருக்கும் அந்தத் தலைவன் வந்தமற, அமைதி நாற்காலியிட்டு அமர்ந்திருந்தது. சாதி சண்டையிலே காலுடைந்த கருப்பசாமி கைகட்டி நின்றிருக்க, அவன் காலுடைத்ததை பெரும் சாதனையாக எண்ணி, இறுமாப்புடன் அந்த முனியாண்டி நின்றிருக்க, அமைதியின் ஆணவத்தை முறியடிக்க வந்த மாவீரன் போல், பற்களில் பலவற்றை இழந்துவிட்ட அந்த வாலிபக் கிழவர், “கருப்பசாமி உன் புகாரை சொல்லு” என்று தொடங்கினார். “சாமி, சாதிச்சண்டையில இவன் என் காலை உடைச்சிட்டாங்க” தீராத மௌனவிரதத்தை திடுக்கென உடைத்துக்கொண்ட தலைவன், அவன் புகாருக்கு உன் பதில் என்ன?” தலையில் முண்டாசு கட்டியிருந்த முனியாண்டி, முழிகளை ஆட்டியவாறே தலைவனிடம், “சாமி, இவன் என் சாதியப் பத்திக் கேவலமாப் பேசிட்டான்” “அதான் சாமி ஒரு கால வாங்கிப்புட்டேன்.” தலைவர் தீர்ப்பை சொல்ல தயாரானார், “எலே சாதி என்னலே சாதி, பூமில ரெண்டே சாதிதான் ஒண்ணு ஆண்சாதி, இன்னொன்னு பெண்சாதி, இன்னும் எத்தன காலத்துக்கு இந்த சாதி பேரச் சொல்லி அடிச்சுக்குவீங்க? போங்கடா போங்க போயி, வேலையப்பாருங்க” என்று கூறி துண்டை உதறி தோளில் போட்டு வீடு நோக்கி நடந்தார். அரண்மனை போன்ற அந்த அழகான வீட்டின்முன், வாயிலில் ஓர் தோட்டத்துப் பணியாள், பசியாற கிண்ணத்திலிருந்த பாயசத்தை குடித்துக் கொண்டிருக்க, கண்கள் சிவக்க அந்த தங்கத்தலைவன், தன் மனையாளைப் பார்த்து, “ஏண்டி உனக்கு எத்தன முறை சொல்றது கீழ்சாதிக்காரப் பயலுக்கு அலுமினியத்தட்டுல திங்கக் குடுக்காதேன்னு!” http://kovaiaavee.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.