Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. உங்களின் புளட் சகா கவிஞர் பற்றி தேனி ஒரு கட்டுரை போட்டிருக்கிறார்கள். வாசியுங்கள்.களவிதிகளின் படி அதனை இங்கு இணைக்க முடியாது.
  2. அத்தோடு சின்ன சின்ன பொய்களையும் சேர்க்க அனுமதிக்க வேண்டும்.
  3. மாவீரர் வாரத்தில் இவற்றை தொகுத்து தந்த சாந்தி அக்காவுக்கு நன்றி.
  4. மாற்றுக்கருத்து கொண்டவராக இருந்தாலும் அவரின் கைதை இட்டு சிலர் சந்தோசப்படுவது ஏனோ தெரியவில்லை. அவரும் ஒரு தமிழர் என்பதை மறந்து விடுகிறார்கள். எம்மவரில் ஒருவர் கைதானால் அவர் நிச்சயமாக சந்தோசப்பட மாட்டார்.
  5. காவிரி வாயக்கட்டி வயித்த கட்டி விதை நெல்லுக்கு வட்டிக்கட்டி சோறு தந்தவனுக்கு இன்று கஞ்சித்தொட்டி. ஆளும் கட்சி போராட்டம் எதிர்க்கட்சி போராட்டம் அனைத்துக்கட்சி போராட்டம் எதுவும் கொண்டுவருவதில்லை காவிரியில் நீரோட்டம். வாங்கிவைத்த பூச்சி மருந்து வீணாகுதாம் வரப்பில் நின்று வயிறு நிறைய குடித்துவிட்டான் உழவன். கையும் காலுமாவது மிச்சமாச்சு அந்த காலம் கடன் தொல்லைதான் கூடிபோச்சு இந்த காலம். நமக்கென்று ஆறுகள் உண்டு நாலா பக்கமும் தண்ணீர்தான் வருவதில்லை தாகம் தீர்க்க. தடையில்லா மின்சாரம்தான் தருகிறோமே எடியூரப்பா காவிரியில் தண்ணீருக்கு இன்னும் ஏன் நீ... இடையூரப்பா. ஏற்கனவே தண்ணீர் இல்லை மணலையும் எடுத்தப்பிறகு என்ன பெயர் வைப்பது ஆற்றுக்கு?. கங்கையில் வேண்டுமானால் பிணங்கள் விழுவது புனிதமாக இருக்கலாம் காவிரிக்காக பிணங்கள் விழுவது மனிதமா? http://kavimathy.blogspot.in/
  6. பாலுறுப்புகள் மறைக்கப்பட்டு முகம் மட்டுமே தெரியும் புகைப்படமே ஒட்டப்பட்டிருக்கிறது - எதற்காக எனது அடையாள அட்டையினை கேட்கிறாய். எனது அப்போதய தோற்றத்திற்கும் - இப்போதய மாற்றத்திற்கும் பெரிதாக வேறுபாடுகள் இல்லை...எதற்காக எனது அடையாள அட்டையினை கேட்கிறாய். கடவு சீட்டையோ - வங்கி கடனையோ எனது அடையாள அட்டையினை வைத்துக் கொண்டு உன்னால் எனக்கு பெற்றுத்தரவாவது முடியுமா...எதற்காக எனது அடையாள அட்டையினை கேட்கிறாய். தற்காலிக கொட்டகையின் தாள்வாரத்தில் படுத்திருக்கும் எனது வழர்ப்பு நாய் - உன்னை பார்த்து குரைக்காமல் வாலாட்டுகிறது - நீயோ எதற்காக எனது அடையாள அட்டையினை கேட்கிறாய். எனது பிறந்த ஆண்டு மாதம் திகதியில் பொருத்தம் ஏதாவது பார்த்து - உன் கொடூர சகோதரன் யாரையாவது என்னோடு கோத்து விட போகிறாயா... எதற்காக எனது அடையாள அட்டையினை கேட்கிறாய். எங்கள் அடையாளங்கள் எல்லாமுமே தொலைந்ததென்றான பிறகும் - எதற்காகவோ எனது அடையாள அட்டையினை கேட்கிறாய். உன்னை தூரத்தில் பார்த்ததும் நீயாக கேட்கும் முன்னரே பழக்கதோசத்தில் - அடையாள அட்டையினை நானகவே எடுத்து நீட்டுகிறேன். நெடுந்தீவு முகிலன் http://mukil-clouds.blogspot.in/2013/06/blog-post_7855.html
  7. இன்று இந்த படுத்திருக்கும் "------" பிறந்த நாளாம்.
  8. கவிதைச்சரம் எருமை மாடு எவ்வளவு அப்பிராணி ! அதன் மீதமர்ந்துதான் எமதர்மன் வருவானென்று படித்ததில்லை நீங்கள்? எனவே தீர்மானியுங்கள் மரணம் அச்சமூட்டக்கூடியதா என்று! சடலங்களைக் கிடத்திவிட்டு உயிரைமட்டும் கவர்ந்து செல்கின்றன மரணங்கள். சடலங்கள் ஒருவேளை அச்சமூட்டக்கூடும். அதற்கு மரணம் பொறுப்பாளியல்ல. மரணம் ஒரு நல்ல காதலியை அல்லது நல்லதொரு காதலனைப் போல நமக்காக நெடுங்காலம் காத்திருக்கிறது அரவணைக்க. நீங்கள் என்னதான் சொல்லுங்கள் கடைசியில் அதன் விருப்பம்தான் நிறைவேற போகிறது. விலகி ஓடாமல் சிநேகிதமாகிக் கொள்வது புத்திசாலித்தனமென்று சொல்லுகிறேன். எனவே தீர்மானியுங்கள். ரதன் சந்திரசேகர் http://ularuvaayan.blogspot.in/
  9. ஈழத்தில் இறந்தவர்களுக்கு இங்கு ஏன் நினைவிடம் அமைக்கவேண்டும் என நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள். இரண்டாம் உலகப்போரில் இந்திய வீரர்களை ஈடுபடுத்த இங்கிலாந்து முயற்சித்தபோது "உங்களுடைய நாடு பிடிக்கும் சண்டையில் இந்தியாவை ஈடுபடுத்தாதீர்கள்" என இங்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. நமக்கு உடன்பாடே இல்லாத அந்த இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்ட "வெள்ளைக்கார வீரர்களுக்கு (உடல்கள் கிடைக்கவில்லை)" சென்னையில் இரண்டு இடங்களில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கல்லறை மேம்பாடு வாரியம் அமைக்கப்பட்டு அந்த நினைவிடங்கள் இன்றைக்கும் இந்திய அரசால் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது - ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழாவில் பேசியது... Nandambakkam is located on Mount Ponamallee Road in the City of Chennai in Tamilnadu. It is a memorial built for housing the graves of India. It helped in the maintenance of the graves. Madras War Cemetery was founded by the Imperial War Graves Commission in the year 1952. It is presently known as Commonwealth War Graves Commission (CWGC). it has almost 856 Commonwealth burials of the Second World War. Madras War Cemetery was established as a tribute to the people who laid down their lives during the World War II. Now the cemetery is under maintenance by the government of India that works jointly with the CWGC. Madras war cemetery has been designed according to a "Lawn Cemetery". No dead bodies can be found here but contains plates with the names of the Several British soldiers inscribed on it. These soldiers had laid down their lives in both World War I and II. The inscription "Their name liveth for evermore" can also be seen on the plates. More than 1000 names of servicemen who died in the war have been mentioned here. The madras 1914-1918 war memorial is located behind the madras war cemetery. the cemetery also has remains of foreign national. These include 5 New Zealanders and 14 Australians. http://www.cwgc.org/find-a-cemetery/cemetery/2015100/MADRAS%20WAR%20CEMETERY,%20CHENNAI
  10. தஞ்சையில் பழ. நெடுமாறன் கைது:முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச் சுவர் இடித்தழிப்பு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் – பூங்கா இடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் தடியடி நடத்தினர். இதில் 2 பேர் காயம் அடைந்தனர். பழ. நெடுமாறன் கைது செய்யப்பட்டார். தஞ்சை விளார் பைபாஸ் சாலை அருகில் ஈழத் தமிழர் படுகொலையை சித்தரிக்கும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் முற்றத்தின் சுற்றுச் சுவர் மற்றும் பூங்காவின் ஒரு பகுதியை இடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர், தோழமைக் கட்சியினர் விரைந்து வந்தனர். அப்போது அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், தோழமைக் கட்சியினர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கரிகாலன், செந்தில்நாதன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து தோழமைக் கட்சியினர்கள் திரண்டு சாலையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஏ.ஐ.டி.யூ.சியை சேர்ந்த மதிவாணன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பாலு, செந்தில்நாதன், தனபாலன் உள்ளிட்ட 14 பேர்களை போலீசார் கைது செய்தனர். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் இடிப்பு சம்பவம் பக்கத்து கிராமத்தில் உள்ள பொது மக்களுக்கு காட்டுத் தீ போல் பரவியது. இதனால் தோழமைக் கட்சியினர்களும், பொது மக்களும் ஆயிரக்கணக்கில் அங்கு திரண்டு உள்ளனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் பழ. நெடுமாறன் மற்றும் தோழமை கட்சியினரும் மறியல் செய்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் டி.ஐ.ஜி. அமல்ராஜ், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் ஆகியோர் அதி விரைவுப்படை போலீசாருடன் அங்கு வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட தோழமை கட்சியினரை போலீசார் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் உள்ள அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு பேச்சு வார்த்தை நடத்தினார்கள். பின்னர் பழ. நெடுமாறனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் வேனில் அழைத்து சென்றனர். அப்போது பழ. நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:– எனக்கு சிறைவாசம் என்பது புதிதல்ல. இன்று மாலை தோழமை கட்சியினர் ஒன்று கூடி பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்வார்கள். முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்திற்காக லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரை கொடுக்க தயாராக உள்ளனர். தொண்டர்கள் கோபப்பட்டு எந்தவித அசம்பாவிதத்திலும் ஈடுபட கூடாது. நீங்கள் அமைதி காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பழ. நெடுமாறனுடன் ம.தி.மு.க.வை சேர்ந்த விடுதலை வேந்தன், தமிழ் தேச பொதுவுடமை கட்சி குழ. பால்ராஜ், மள்ளர் மீட்பு கழக நிறுவன தலைவர் செந்தில் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தஞ்சை மேலவீதியில் உள்ள உதயா திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த நிலையில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் காம்பவுண்டு சுவர் இடிக்கப்பட்ட இடத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் இரும்பு கம்பி வேலி அமைத்து இருந்தனர். அதனை பொதுமக்கள் பிரித்து எறிந்தனர். பதட்டம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். http://www.canadamirror.com/canada/18003.html
  11. மாவீரர்களுக்கு வீரவணக்கம்.அவர்களின் இலட்சிய பாதையை முன்னெடுப்போம்.
  12. வாத்தியார், பெருமாள் ஆகியோருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  13. பாடல்: நெஞ்சை நிமிர்த்தி
  14. பாடல்: Teaddy beaR படம்: நையாண்டி பாடியவர் :தனுஸ் http://youtu.be/wAcPcjbHRK0
  15. கேஸ் (கச்) திறந்து பற்ற வைத்த உடனே அடுப்பு நமது உபயோகத்துக்கு தயாராகிவிடுகிறது. வெளியே வரும் கேஸ் மட்டும் ஏன் எரிகிறது?சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றிக் கொள்வதில்லை? நாம் சமையலுக்கு உபயோகிக்கும் கேஸ் என்-பியூட்டேன் (ண்-BஊTஆணே) என்ற எரிபொருள். எந்த ஒரு எரிபொருளாக இருந்தாலும், அது எரிய வேண்டுமானால் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று அந்த எரிபொருள் தான் பற்றிக்கொள்ளும் வெப்பநிலையை (ஈக்னிடிஒன் பொஇன்ட்) அடைய வேண்டும்.இரண்டு எரிவதற்குத் தேவையான பிராண வாயு, ஆக்சிஜன் போதுமான அளவில் கிடைக்க வேண்டும். நமது கேஸ் அடுப்பில் என்ன நிகழ்கிறது? சமையல் வாயு பற்றிக்கொள்ளும் வெப்பநிலை 360 ஒC ஆகும்.சிலிண்டர் வால்வைத் திறந்ததும் கேஸ் வெளியேறி அடுப்பின் பர்னர் பகுதியை வந்தடைகிறது. அப்போது ஒரு தீக்குச்சியால் அல்லது லைட்டரால் பற்ற வைக்கும்போது சமையல் வாயு 360 ஒC வெப்பத்தை அடைந்து பற்றிக் கொள்கிறது அடுப்பைச் சுற்றிலும் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பதால் தொடர்ந்து எரிகிறது. சிலிண்டரின் உள்ளே உள்ள கேஸ் பற்றிக் கொள்ள வெப்பமும் , ஆக்சிஜனும் சிலிண்டரின் உள்ளே செல்ல வேண்டும். பர்னர் பகுதியிலிருந்து வெப்பம் ரப்பர் டியூப்களைத் தாண்டி சிலிண்டரின் வாய் பகுதியை அடைந்து உள்ளே பரவ வேண்டும். இது முற்றிலும் சாத்தியமில்லை.சிலிண்டரின் உள்ளே உள்ள கேஸ் மிக மிக உயர்ந்த அழுத்தத்துடன் உள்ளே அடைக்கப்பட்டுள்ளது. எனவே சிலிண்டரின் உள்ளே இருக்கும் அழுத்தம் வெளியிலுள்ள சுற்றுப்புற அழுத்தத்தை (ஆத்மொச்ப்ஹெரிc Pரெச்சுரெ) பல மடங்கு அதிகம். எனவே வெளியிலிருந்து அழுத்தம் குறைந்த ஆக்சிஜன் அழுத்தம் அதிகம் உள்ள சிலிண்டரின் உள்ளே நுழைவது சாத்தியமில்லை. இந்த இரு காரணங்களால் சிலிண்டரின் உள்ளே இருக்கும் எரிபொருள் பற்றிக்கொள்ளும் வாய்ப்பே இல்லை. பாலைக் காய்ச்சும்போது அது ஏன் பொங்கி வருகிறது? பால் என்பது தண்ணீர், புரதம் , மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் பல தாதுப் பொருட்கள் அடங்கிய கலவை. பாலில் உள்ள கொழுப்பின் அடர்த்தி (Dஏண்ஸீTY) தண்ணீரின் அடர்த்தியைவிட குறைவாக இருப்பதால் பாலின் மேற்ப்பரப்பில் அவை மிதக்கின்றன. தண்ணீரின் கொதிநிலை வெப்பம் 100 ஒC. ஆனால், பாலில் உள்ள கொழுப்பு 50 ஒcல் உருக ஆரம்பித்துவிடும். பாலை காய்ச்சும்போது 50 ஒC நிலை வரும்போதே பாலில் உள்ள கொழுப்பு உருகி, மேற்ப்பரப்பில் வந்து ஒரு மெல்லிய படலமாகப் படர்ந்து நிற்கிறது. எந்த ஒரு திரவத்தைக் கொதிக்க வைத்தாலும் அந்தத் திரவத்திலிருந்து காற்றுக் குமிழ்கள் தோன்றி மேலே கிளம்பி வரும். பால் சூடாகும் போதும் காற்றுக் குமிழ்கள் உருவாகி மேலே வரும். மேற்ப்பரப்பில் கொழுப்புப் படலம் ஏடாகப் படிந்து இந்தக் குமிழ்கள் வெளியேறுவதை தடை செய்வதால், சிறு சிறு குமிழ்கள் ஒன்றாக இணைந்து பெரிய காற்றுக் குமிழ்களாக மாறி அந்த ஏட்டுப் படலத்தோடு மேலெழும்பி பொங்கி வழிகிறது. தொடர்ந்து துலாவிக்கொண்டே இருந்தால் பால் பொங்கி வழிவதில்லை ஏன்? பாலை ஒரு கரண்டியால் தொடர்ந்து துலாவிக் கொண்டேயிருந்தால் மேற்ப்பரப்பில் ஏடு படிவது தடுக்கப் படுகிறது. தோன்றும் காற்றுக் குமிழ்கள் வெளியேறிவிடும் எனவே பால் பொங்கி வழிவது தடுக்கப்படுகிறது. தண்ணீரைக் காய்ச்சினால் ஏன் பொங்குவதில்லை? தண்ணீரில் கொழுப்போ, மாவுச்சத்தோ, புரதங்களோ இல்லை. எனவே மேற்ப்பரப்பில் ஏடு எதுவும் படிவதில்லை. காற்றுக் குமிழ்கள் தடையின்றி வெளியேறலாம். எனவே நீரை கொதிக்க வைக்கும்போது அது பொங்குவதில்லை. பீங்கான் அல்லது கண்ணாடி கப்பில் சூடான பானங்களை விடும்போது சூட்டினால் கப் உடைந்துபோவதுண்டு ஏன்? வெப்பத்தால் பொருட்கள் விரிவடையும். கன்ணாடி கப்பில் சூடான பானங்களை ஊற்றும்போது , கப்பின் உட்பகுதி முதலில் வெப்பத்தால் விரிவடைகிறது. வெப்பம் சிறிது சிறிதாகப் பரவி சற்று தாமதமாகவே வெளிப்பகுதி விரிவடையும். சூடு அதிகம் இருந்தால் உட்பரப்பு முதலில் விரிவடைந்து , வெளிப்பரப்பு விரிவடைய தாமதமாகும்போது கப் உடைந்து விடுகிறது. ஒரு எவர்சில்வர் கரண்டியை கப்பில் வைத்துவிட்டு, பின்னர் சூடான பானத்தை ஊற்றினால் கப் உடையும் வாய்ப்பு குறையும். ஏன்? பெரும்பான்மையான உலோகங்களும் கண்ணாடி அல்லது பீங்கானைவிட வெப்பத்தை அதிகமாகக் கடத்தும் தன்மையுள்ளவை. ஒரு எவர்சில்வர் அல்லது வெள்ளிக் கரண்டியை கப்பினுள் வைத்துவிட்டு பின்னர் சூடான பானத்தை ஊற்றும்போது அந்தக் கரண்டி பெருமளவில் வெப்பத்தை கிரகித்துக் கொள்வதால் கப் சூடாவதும் விரிவடைவதும் குறைகிறது. எனவே கப் உடையும் வாய்ப்பும் கணிசமாக குறைந்து போகிறது. ஒரு பெரிய ஐஸ் கட்டியைக் காற்றில் திறந்து வைத்தால் அதிலிருந்து வெண்ணிறமான புகை (FஊMஏஸ்) கிளம்புகிறது அல்லவா? ஏன்? இது ஏதேனும் வாயுவா? ஐஸ் கட்டியிலிருந்து எந்த வாயுவும் வெளியேறுவதில்லை. ஐஸ் கட்டியை திறந்து வைக்கும்போது ஐஸ்ஸைச் சுற்றியுள்ள காற்று குளிர்வடைகிறது. ஒரு அளவிற்கு மேல் குளிர்வடையும்போது அந்தக் காற்றிலுள்ள ஈரப்பதம் (Mஓஈஸ்Tஊறே) மிக நுண்ணிய நீர்த்திவலைகளாக மாறுகிறது. அறையிலுள்ள காற்று மேலும் கீழுமாக நகரும்போது (Cஓண்VஏCTஈஓண் Cஊற்றேண்Tஸ்), இந்த நீர்த்திவலைகளும் நகருவதால் புகை போன்ற தோற்றம் ஏற்படுகிறது. வெளவால் தலைக் கீழாகத் தொங்குவது ஏன்? வெளவால்களின் இறக்கைகள் 6 அங்குலம் முதல் 6 அடி வரை நீண்டிருக்கும். அவற்றின் கால்களுக்கு போதிய வலிமைக் கிடையாது. அதனால், வெளவால்களால் நீண்ட நேரம் நிற்கவோ நடக்கவோ முடியாது. மற்ற பறவைகளைப் போல் இவற்றால் பூமியில் இருந்து மேலெழும்பி பறக்க முடியாது. அதற்க்கு அவற்றின் போதிய வளர்ச்சியற்ற கால்களும், அதிக கனமான இறக்கைகளும்தான் காரணம். தலைக் கீழாகத் தொங்குவது வெளவால்களுக்கு செளகரியமாக இருக்கிறது. ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது. இவ்வாறு தொங்கும் போது வெளவால்களுக்கு அதிக அளவு சக்தி தேவைப்படுவதில்லை. உடனடியாகப் பறப்பதும் எளிதான விஷயமாக உள்ளது. http://vickypowerguy.blogspot.ca/2012/05/blog-post.html
  16. பாடல்: எங்கே போகுதோ வானம் படம்: கோச்சடையான் பாடியவ: எஸ்.பி.பி இசை: இசைபுயல் http://youtu.be/8YWirNqtxwA

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.