Everything posted by nunavilan
-
இனிமேல் உங்களுக்கு பாடம் எடுக்க மாட்டன்.
சோகமான முடிவு.இன்றைய விவாதத்தில் நாங்கள் தலையில் வைத்து கொண்டாடிய பார்த்தசாரதி இலங்கைக்கு அமைதி காக்கப்போன இந்திய இராணுவத்தை புலிகள் தான் கொன்றார்கள் என வாய் கூசாமல் கூறுகிறார். http://www.ndtv.com/...-a-stand/267693
-
உங்களுக்கு தெரியுமா?
3. Muscle movement Although the brain may die, other areas of the nervous system may still be active. Nurses report seeing reflex action, which involves nerves sending signals to the spinal cord and not the brain, leading to muscle twitches and spasms after death. Some even say they've seen shallow chest movements after death. (Although maybe the doctor fell down on the job for that one.) மூளை இறந்து இருக்கலாம் என்றாலும், நரம்பு மண்டலத்தின் மற்ற பகுதிகளில் இன்னும் செயலில் இருக்கலாம். செவிலியர் மரணத்திற்கு பின்னர் தசை twitches மற்றும் பிடிப்பு வழிவகுத்தது, மூளை முதுகு மற்றும் சிக்னல்களை அனுப்பும் நரம்புகள் உள்ளடக்கிய அனிச்சை செயல், பார்த்து அறிக்கை. சில கூட அவர்கள் மரணத்திற்கு பின்னர் ஆழமற்ற மார்பு இயக்கங்கள் பார்த்தேன் என்று. http://io9.com/5862418/10-bodily-functions-that-continue-after-death
-
உங்களுக்கு தெரியுமா?
நன்றிகள் புங்கையூரான்.பிழை திருத்தப்பட்டுள்ளது. புளூடூத் பெயர் வரக் காரணம் 900 ஆண்டுகளில் ஹெரால்ட் புளுடூத் என்ற மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். பின் 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். இந்த புளுடூத் தொழில் நுட்பத்தினை நார்டிக் நாடுகளின் (டென் மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து) விஞ்ஞானிகள் தான் உருவாக்கினர். இவர்களுக்கு அந்த சரித்திர காலத்து அரசன் மீது இருந்த பிரியத்தில், தாங்கள் உருவாக்கிய தொழில் நுட்பத்திற்கு புளுடூத் என்று பெயரிட்டனர். மற்றபடி இத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும் பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. http://www.grindstedtamil.com/2013/02/blog-post_18.html
-
உங்களுக்கு தெரியுமா?
நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள் குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும். நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது. நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது. நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன. நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 60,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம். நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம். நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு. நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு. முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது. மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது. ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது. இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது. மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன. ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன. நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது. நமது மூளை 80% நீரால் ஆனது. நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும். நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான். மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும். பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது. மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது. மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம் கண்கள் 31 நிமிடங்கள் மூளை 10 நிமிடங்கள் கால்கள் 4 மணி நேரம் தசைகள் 5 நாட்கள் இதயம் சில நிமிடங்கள் http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=18722:2012-02-27-05-09-28&catid=1258:2011-01-29-14-03-30&Itemid=516
-
உங்களுக்கு தெரியுமா?
ஆறு கால் ஆச்சரியம் நாம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போதோ அல்லது நாம் கவனிக்காமலோ ஒரு சில உணவுத் துகள்கள் கீழே சிந்திவிட்டால், கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு எறும்புக் கூட்டமே வந்து சேர்ந்து விடுவதைப் பார்த்திருக்கலாம். இது எப்படி நடக்கிறது? இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? எறும்புகளுக்குக் கண்கள் கூட ரொம்பத் தெளிவாகத் தெரியாது. ஆனால் மோப்ப உணர்வு அதிகம். இது மட்டுமில்லாமல் ஓரிடத்தில் உணவு இருப்பதைப் பார்க்கும் முதல் எறும்பு, அத்துகளின் அருகே சென்று தன் தலையில் உள்ள ஆண்டெனா போன்ற உறுப்பால் அதைத் தொட்டுப் பார்க்கிறது. அதன் பிறகு அங்கிருந்து திரும்பிச்செல்லும்போது உடலின் பின்பகுதியிலிருந்து ஃபெரமோன் என்ற வேதிப்பொருளைத் தரையில் கோடுபோல இட்டுக்கொண்டே செல்கிறது. இந்தக்கோடு அதன் கூடு வரை நீளும். இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகளும் அந்தத் தடத்தை பின்பற்றிச் சென்று, உணவு இருக்கும் இடத்தை விரைவாகச் சென்றடைந்து விடுகின்றன. எறும்புகள் ராணுவ வீரர்களைப் போல எப்போதும் சாரிசாரியாக ஊர்ந்து செல்வதன் மூல ரகசியம் ஃபெரமோன் என்ற வேதிப்பொருள்தான். அந்தக் கோட்டை தவறவிட்டால், வழி தெரியாமல் போய்விடும்.எறும்புகள் போடும் இந்த ஃபெரமோன் பாதை எப்போதும் வளைந்து வளைந்துதான் இருக்கும். இடையே சில இடங்களில் நீர் சொட்டிக்கொண்டிருப்பது போன்ற சிறுசிறு ஆபத்துகள் இருந்தாலும் கூட, உணவு கிடைத்துவிட்டால் எறும்புக் கூட்டம் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாது.இதை நீங்கள் நேரில் பார்க்கும்போது கவனித்திருக்கலாம். உணவைச் சேகரித்து வைப்பது எறும்பின் வேலைகளில் மிக முக்கியமானது. ஆனால் இப்படி சேகரித்துவைக்கும் உணவு, மழைக்காலத்தில் பூசனம் பூத்து கெட்டுப்போய் விடாமல் இருக்க அவை ஒரு வேதிப்பொருளை பயன்படுத்துகின்றன. அந்த வேதிப்பொருளும், அதன் இயல்பும் தற்போது கண்டறியப்பட்டு மருந்து தயாரிப்பில், அது பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு எறும்பின் காலனியில் முகப்பில் இருக்கும் காவலாளி எறும்பு, அங்கே வரும் ஒவ்வொரு எறும்பையும் முகர்ந்து பார்த்துவிட்டு, அது தனது குழுவைச் சார்ந்ததா என்று உறுதி செய்த பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கும். எறும்புகள் நகர்ந்து செல்லும்போது சில நேரம் ஆண்டெனாவை, மற்றொரு எறும்பின் தலையில் வைத்து, தங்கள் கூட்டத்தைச் சேர்ந்தது தானா என்று பரிசோதிப்பதையும் நீங்கள் பார்த்திருக்கலாம். உணவுப் பாதை போடுவது போலவே, ஆபத்து ஏற்படுவதையும் வேறொரு வேதிப்பொருளை வெளியிட்டு சிப்பாய் எறும்புகள் எறும்புக் காலனிக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுகின்றன. இதை அறிந்து மற்ற எறும்புகள் தப்பிச் செல்லும். அதேபோல ஆண் எறும்பை இனப்பெருக்கம் செய்ய ஈர்க்கவும் ராணி எறும்புகள் ஒரு வகை ஃபெரமோனை வெளியிடுகின்றன. இப்படியாக வழிகாட்ட, ஆண் எறும்பை ஈர்க்க, எச்சரிக்கை செய்ய என பல்வேறு செயல்பாடுகளுக்காக எறும்பு வெளியிடும் எல்லா வேதிப்பொருளும் ஃபெரமோன்தான். ஆனால், ஒவ்வொரு செயல்பாட்டுக்கான ஃபெரமோனின் வகையும் வேறுபட்டிருக்கும். இந்த வேறுபாட்டை வைத்தே, மற்ற எறும்புகள் விஷயத்தை புரிந்துகொள்கின்றன. இப்படியாக எறும்புகளின் வாழ்க்கையில் வேதியியல் மிகப்பெரிய பங்காற்றுகின்றது. இந்தியாவில் 1903இல் பணிபுரிந்த ராணுவ அதிகாரியான கர்னல் பிங்காம் எழுதிய புத்தகம்தான் இந்தியாவில் எறும்புகளைப் பற்றிப் பேசிய முதல் புத்தகம். அதற்குப் பிறகு ஏறக்குறைய நூறாண்டுகள் ஆகியும்கூட, எறும்புகள் பற்றிய விரிவான நூல்கள் அதிகமாக வரவில்லை. சமீபத்தில் ஆன் அ டிரையல் வித் ஆண்ட்ஸ் என்ற குறிப்பிடத்தக்க புத்தகத்தை பெங்களூரைச் சேர்ந்த அஜய் நரேந்திராவும் சுனில் குமாரும் எழுதியுள்ளனர். தமிழகத்தில் நமக்குத் தெரிந்தவை சிவப்பு நிற சிறிய நெருப்பெறும்பு, உருவத்தில் சற்றுப் பெரியதாக இருக்கும். கருப்பு நிற கட்டெறும்பு, மரத்தில் இருக்கும் கருப்பு நிற கட்டெறும்பு, மரத்தில் இருக்கும் வெளிர் சிவப்பு நிற சூவை எறும்பு, சிறிய பிள்ளையார் எறும்பு ஆகிய நான்கு வகைகள்தான். கட்டெறும்பு பெரும்பாலும் மாமரங்களில் அதிகம் இருக்கும். சுள்ளெறும்பு என்று அழைக்கப்படும் சிவப்பு எறும்புகளும், கட்டெறும்புகளும் எதிரி என்று கருதுபவர்களைக் கடிக்கும்.அப்போது உடலில் படும் வேதிப்பொருளால் நமக்கு சிறிது நேரம் வலிக்கிறது. அந்த வேதிப்பொருளின் வீரியம் குறையும் வரை வலிக்கும். சாமி எறும்புகள் எனப்படும் கறுப்பு எறும்பு பெரும்பாலும் கடிப்பதில்லை. கூசுவது போல ஓடிச் சென்று விடும். சில நேரம் பளிச்சென்ற நிறம் ஏதுமில்லாமல் சிறியதாக, வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் எறும்புகளைப் பார்த்திருக்கலாம். அவை முழு வளர்ச்சி அடையாத குட்டி எறும்புகள். எறும்புப்புற்றில் சேர்த்து வைத்திருந்த தானியங்களை வறுமையால் வாடிய மனிதர்கள் சிலர் எடுத்து, சமைத்து உண்டதாக அகநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகிறது. அதே போல மழைக்காலங்களில் ஈசலைப் பிடித்து பொரித்துச் சாப்பிடும் பழக்கம் தமிழகத்தில் உண்டு. பழைய சங்கப் பாடல் ஒன்று “புற்றீசல் பிடித்துப் பொரியாக்கி” என்ற வரியுடன் வருகிறது. எனவே, அந்தக் காலத்தில் இருந்தே ஈசல்களைப் பிடித்து உண்ணும் பழக்கம் இருப்பது தெரிய வருகிறது. சமீபகாலத் திரைப்பட பாடல்களிலும் கூட இது தொடர்பாக குறிப்பு இருக்கிறது. இப்போதும் கிராமங்களில் ஈசலைப் பிடித்துச் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. (“துளிர்” பிப்ரவரி மாத இதழில் வெளிவந்த கட்டுரை).
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அலைமகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:அழகோ அழகு படம்:சமர் http://youtu.be/6nLQ46L0Cw0 அழகோ அழகு அவள் கண்ணழகு அவள் போல் இல்லை ஒரு பேரழகு அழகோ அழகு அவள் பேச்சழகு அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு அழகோ அழகு அவள் கண்ணழகு அவள் போல் இல்லை ஒரு பேரழகு அழகோ அழகு அவள் பேச்சழகு அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு தத்தி நடக்கும் அவள் நடையழகு பத்தி எரியும் அவள் உடையழகு அய்யய்யோ ’சிக்’கென நடக்கும் அய்யய்யோ ஓவியம் அவளோ அய்யய்யோ சக்கரை தடவி அய்யய்யோ செஞ்சது உடலோ அழகோ அழகு அழகோ அழகு எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ என்று எண்ணி வியக்கும் இதழ் அழகு அந்தியிலே வானம் சிவந்ததை போலே கன்னம் எங்கும் தோன்றும் வெட்கம் அழகு மெல்லிடையை பற்றி சொல்லா இல்லாத அழகு கீழே கொஞ்சம் பார்க்க சொல்லா பொல்லாத அழகு கடவுள் கவிதை ஒன்றை படைத்தது என்ன சொல்லவோ… காட்டருவி போலே அலை அலையாக கண்டபடி ஓடும் குழல் அழகு கண்ணிரண்டில் வலையை பிண்ணி பிண்ணி வீசி நெஞ்சம் அதை பறிக்கும் செயல் அழகு தெற்றுப் பல்லில் சிரிக்கையில் தீராத அழகு கண்ணிரண்டு யோசிக்கையில் வேரேதோ அழகு கடவுள் கவிதை ஒன்றை படைத்தது என்ன சொல்லவோ… அழகோ அழகு அவள் கண்ணழகு அவள் போல் இல்லை ஒரு பேரழகு அழகோ அழகு அவள் பேச்சழகு அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு தத்தி நடக்கும் அவள் நடையழகு பத்தி எரியும் அவள் உடையழகு அய்யய்யோ ’சிக்’கென நடக்கும் அய்யய்யோ ஓவியம் அவளோ அய்யய்யோ சக்கரை தடவி அய்யய்யோ செஞ்சது உடலோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ
-
நகைச்சுவைக் காட்சிகள்
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: அடியேய் படம்:கடல் இசை:ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்: சிட் சிறிராம் மனச தொறந்தாயே... நீஎங்கிருந்து வந்தாயோ நீ? அடியே... அடியே என்ன எங்க நீ கூட்டிப் போற? பல்லாங்குழி பாத புரியல உன்ன நம்பி வாரேனே - இந்த காட்டுப் பய ஒரு ஆட்டுக்குட்டிப் போல உன் பின்ன சுத்துறனே அடியே... அடியே என்ன எங்க நீ கூட்டிப் போற? மீனத் தூக்கி ரெக்க வரஞ்ச வானம் மேல நீ வீசி எறிஞ்ச பறக்கப் பழக்குறியே எங்கிருந்து வந்தாயோ நீ? அடியே... அடியே என்ன எங்க நீ கூட்டிப் போற? உன் கண்ணால கண்ணாடி செஞ்சு என் அச்சத்தக் காட்டுறியே என் தூசுத் துரும்பெல்லாம் தட்டி உள்ளம் வெள்ளையடிக்குறியே அடியே... அடியே என்ன எங்க நீ கூட்டிப் போற? பூமி விட்டு சொர்க்கத்துக்கு - நீ வானவில்லில் பாத விரிச்ச மனச கயிறாக்கி இழுத்துப் போறாயே நீ சொர்க்கம் விட்டு பூமி வந்தா மீண்டும் கிழக்கில் சூரியன் வந்தா நான் விழிச்சுப் பாக்கையில கலஞ்சு போவாயோ நீ? அடியே... அடியே என்ன எங்க நீ கூட்டிப் போற?- கார் வாங்கப் போறம் - நாடகம்
நாடகத்துக்கு நன்றி சுமோ.கார் வாங்குவது தான் கருப்பொருள்.மற்ற ஆட்கள் வாங்கி விட்டார்கள் என்ற படியால் தனக்கும் வேண்டும் என்பது தமிழரின் தனித்துவமான குணம் அல்லவா.5000 பவுணுக்கு bmw வாங்கலாமோ தெரியாது.சில வேளை பழைய bmw காராக இருக்கலாம்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளம்கவிக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்ஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- கருத்து படங்கள்
- உங்களுக்கு தெரியுமா?
ஜப்பானைப் பற்றிய அரிய அற்புதத் தகவல்கள் vidhai2virutcham.com 1.ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொருநாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பாடசாலை மற்றும்கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள். 2.ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும் போது விசேட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர். 3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் “சுகாதார பொறியியலாளர்” என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டொலரில் 5000/- இலிருந்து 8000/-வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய்மொழி மூல பரீட்சையின் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார். 4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை.அத்துடன் வருடத்தி ற்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன.ஆனால் ஜப்பா ன்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும். 5. ஜப்பானில் முதலாம் ஆண்டு தொடக்கம் ஆறாம் ஆண்டு வரையான மானவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என சொல்லிக் கொடுக்கப்படுகிறது. 6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர். 7.ஜப்பான் பாடசாலைகளில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு வரைபரீட்சைகளே இல்லை.கல்வியின் நோக் கம் விடயங்களை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும் தானே தவிர பரீட்சை மூலம் அவர்களை தரப்படுத்த வல்ல என்கிறார்கள். 8. ஜப்பானில் மக்கள் உணவுக் கடைகளில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத்தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை. 9.ஜப்பானில் சராசரியாக ஒரு வருடத்தில் புகையிரதங்கள் தாமதமாக வந்த நேரம் ஆகக் கூடியது சுமார் 7 வினாடிகள் மாத்திரமே. 10. ஜப்பானில் மாணவர்கள் பாடசாலையில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக் குகிறார்கள்.அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக சமிபாடு அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணித்தியாலம் ஒதுக்கப்படுகிறது. - Harish Mani on facebook- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:அன்டாட்டிக்கா படம்:துப்பாக்கி https://www.youtube.com/watch?v=MyE6QYyT41k- அதிசயக்குதிரை
''உண்மை பேசுவதற்கு முன் இனிப்பு சாப்பிட வேண்டும் என்று சொல்கிறீர்களே, அது ஏன்?'' 'உண்மை கசக்குமே!' ******** ''தினசரி காலண்டர் தயாரிப்பவரின் மகளைக் கல்யாணம் செய்தது தப்பாப் போச்சு.'' ''ஏன்,என்ன பிரச்சினை?' ''தினசரிஎன்னை கிழிகிழி என்று கிழிக்கிறாள்.'' ******** கணவன்:நம்மவீட்டை விக்கிற வரைக்கும் உங்கம்மாவ உங்க அண்ணன் வீட்டில் இருந்து கொள்ளச் சொல்கிறாயா? மனைவி:வீட்டை விக்கிறதுக்கும் அம்மாவிற்கும் என்ன சம்பந்தம்? கணவன்:வில்லங்கம் இருக்கிற வீட்டை யாரும் வாங்கிக்க மாட்டாங்களாமே! ******** டாக்டர்:தைரியமாய் இருங்க!நீங்க பூரண குணம் அடைய வேண்டி வெளியே பல பேர் கூட்டுப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். நோயாளி:நீங்க வேற விபரம் தெரியாம பேசாதீங்க,டாக்டர்.அவர்களெல்லாம் எனக்குக் கடன் கொடுத்தவர்கள்.'' ******** ''மாப்பிள்ளை இருபது பவுன் நகையும் ஒரு லட்சம் ரொக்கமும் கேட்கிறாராமே!'' ''இந்தக் காலத்தில இதெல்லாம் சகஜமாயிடுத்தே!' ''அதற்காக அறுபதாம் கல்யாணத்துக்கெல்லாமா கேட்பார்கள்?'' ******** ''ஆபிசுக்கு தாமதமா வர்ற கேசியர் மாலா ஏன் தலைவிரி கோலமா வர்றாங்க?'' 'ஆபீசுக்கு தாமதமா வந்தா இப்ப வந்திருக்கிற மேனேஜர் பின்னிடுவாராம்,பின்னி!' ******** தொலைபேசியில் ஒருவர்:ஹலோ,அறுவைக்கு எதிர்ப்பதம் என்ன? மற்றவர்:அறுக்காதே,வை. ******** ''வாம்மா,மாப்பிள்ள எப்படி இருக்கிறார்?என்னை ரொம்பக் கேட்டதாகச் சொல்லியிருப்பாரே?'' 'ரொம்ப இல்லப்பா,கொஞ்சம்தான்.பத்தாயிரம் ரூபாய்தான் கேட்டதா சொல்லச்சொன்னார்.' ******** நண்பன்:உன் மனைவிக்கு பெரிய அட்டிகை செய்து போட்டதற்குப் பதிலாக ஒரு கார் வாங்கிக் கொடுத்திருக்கலாம். மற்றவர்:அவளும் அதைத்தான் விரும்பினாள்.ஆனாலும் கார் கவரிங்கில் கிடைக்காதே! ******** பெண்ணின் தாயார்:நாங்க நாற்பது பவுன் போடுவோம்.நீங்க என்ன போடுவீங்க? பையனின் தாயார்:அதில் அரைப் பவுன் குறைந்தாலும் சண்டை போடுவோம். ********- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஐயையோ ஐயையோ பிடிச்சிருக்கு படம்:சாமி இசை:ஹரிஸ் ஜெயராஜ்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. தனிமடலில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.- லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு நாள்
வீர மறவர்களுக்கு வீரவணக்கங்கள்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:உன்மேல ஆசை தான் படம்:ஆயிரத்தில் ஒருவன் http://youtu.be/ocHMPPOC5Zo என் எதிர ரெண்டு பாப்பா...தினுசான கேள்வி தான்பா கடலேறும் கப்பலப்பா கரை தட்டி நிக்குதப்பா- மனதைக் கவர்ந்த கவிதைகள்
http://youtu.be/YWeByufure0- உங்களுக்கு தெரியுமா?
குழந்தை அழுகையை நிறுத்த சிலசமயம் உங்கள் குழந்தை ஏன் அழுகிறது என்று தெரியவே தெரியாது. நீங்களும் பால்புட்டியை கொடுத்து பார்பீர்கள், பாட்டு பாடி பார்பீர்கள், ஏன் பல்ட்டி கூட அடித்து காண்பிப்பீர்கள், ஆனால் அழுகை நின்ற பாடு இருக்காது. அந்த மாதிரி சமயத்தில், குழந்தையின் அழுகையை அழகாக உங்கள் செல்போன்-ல் பதிவு செய்து குழந்தைக்கு போட்டு காட்டவும். இப்போது குழந்தை கப்சிப் என்று இருக்கும். குழந்தை கட்டுப்படுத்துவது என்பது என்றுமே மலை போன்ற காரியமாகும், அப்படி இருக்கையில், நீங்கள் வாங்கி வைத்திருக்கும் மருந்துக்கள் நிறைந்த டப்பா அல்லது டானிக் ஆகிவற்றை என்னதான் குழந்தைக்கு எட்டாமல் வைத்தாலும், அதில் ஒரு அழு மூஞ்சி பாப்பா போட்டோ-வை ஒட்டி வைத்தால், அந்த டப்பா தவறி கீழே விழுந்திருந்தாலும் குழந்தை அதை எடுக்காது. http://tamilkizham.blogspot.ca/2011/10/blog-post_8062.html - மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
Important Information
By using this site, you agree to our Terms of Use.