Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,சுபேஸ்.
  2. காலத்தின் தேவை. உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்
  3. பாடல்: நாணி கோணி படம்:மாற்றான் இசை:ஹரிஸ் ஜெயராஜ் பாடியவர்:செரியா
  4. தாம் பிறந்த மண்ணிற்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
  5. பாடல்: மனசெல்லாம் மழையே படம்:சகுனி இசை:ஜி.வி.பிரகாஸ் பல்லவி ஆண் மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய் என்னாகும் உயிரே உயிரே என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய் என்னாகும் உயிரே உயிரே இரவில் வந்தது சந்திரனா என் அழகே வந்தது உன் முகம் தான் வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே உன்னழகோ தேய்ந்திடாத வெண்ணிலா பெண் பகலில் இருப்பது சூரியனா என் அழகே உன்னிரு பார்வைகள் தான் உன் இமைகள் போரிடும் ஆயுதம் தான் என் உயிரே என்னை என்ன செய்கிறாய் ஆண் மழையே மனம் உன்னாலே பூ பூக்குதே... ஓ... மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே இசை சரணம் - 1 ஆண் வானில் போகும் பறவைகளாய் நீயும் நானும் திரிந்திடலாம் உலகையே மறக்கலாம் பெண் ஹோ... வேறு வேறு விண்வெளியில் மாறி மாறி திரிந்திடலாம் பறக்கலாம் மிதக்கலாம் காற்றாகி கை கோர்த்து போவோமே ஆண் முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சலாடுவோம்... பெண் கனவில் வாழ்வது சாத்தியமா என் எதிரே நடப்பது மந்திரமா கண் பார்க்கும் காட்சிகள் தந்திரமா என் ஜீவன் இங்கு நீந்தி போகுதம்மா ஆண் கனவில் வாழ்வதும் சாத்தியமே என் கனவும் பலிப்பது நிச்சயமே உன் விரலை பிடிப்பேன் இக்கணமே உன் உருவம் என்னுள் என்றும் வாழுமே மழையே மனம் உன்னாலே பூ பூக்குதே... ஓ... மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே... ஆண் தாத்தாரத்தா தூம் த்தாரத்தா தரத்தா தரத்தா தா தா தாத்தாரத்தா தூம் த்தாரத்தா தரத்தா தரத்தா தா... இசை சரணம் - 2 ஆண் காதலாகி கரைந்து விட்டால் காலம் நேரம் மறைந்திடுமே வானிலை மாறுமே பெண் ஏழு வண்ண வான வில்லில் நூறு வண்ணம் தோன்றிடுமே யாவுமே மாயமே வெயிலோடு மழை வந்து தூறுமே ஆண் முகிலாகி அங்கும் இங்கும் ஓஞ்சலாடுவோம்... தரையில் விண்மீன் வருவதில்லை வந்தாலும் கண் அதை பார்பதில்லை பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை தொட்டாலும் என்ன ஆகும் என் மனம் பெண் தரையில் விண்மீன் வருவதுண்டு வந்தாலும் கண் அதை பார்பதுண்டு பார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு தொட்டாலும் காதலாகும் உன் மனம் ஆண் மழையே மனம் உன்னாலே பூ பூக்குதே... ஓ... பெண் மனசெல்லாம் மழையே... ( இசை )
  6. பாடல்: என்ன சொல்ல ஏது சொல்ல படம்:மனம் கொத்தி பறவை இசை: டி.இமான்
  7. தமிழ்தங்கைக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  8. கேரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று தெரியும். இன்னொரு அதிசயமும் இருக்கிறது. கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று நோக்குங்கள். கிட்டத்தட்ட அது நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும். கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது. பீட்டாகேரட்டின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கேரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை. கேரட் ஆப்கானிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்டது. பல நூற்றாண்டுகளில் பலவித மாறுதல்களுக்குள்ளான காரட் துவர்ப்பு நீக்கப்பட்டு, இனிப்புடன் கிடைக்கக்கூடிய காய் வகைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. கேரட் செடியின் வேர்ப் பகுதியில் வளரக்கூடியது. ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் கேரட் கிடைக்கின்றது. கேரட் பச்சையாகக் கூட சாப்பிடக்கூடியது. பொதுவாக அனைத்து வீடுகளில் சமைக்கக் கூடிய கேரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி விவரங்களை இப்போது பார்ப்போம். 100 கிராம் கேரட்டில் உள்ள சத்துக்கள்: சக்தி 41 கலோரிகள் கார்போ ஹைட்ரேட்ஸ் 9 கிராம் சர்க்கரை 5 கிராம் நார்சத்து 3 கிராம் கொழுப்புச் சத்து 0.2 கிராம் புரோட்டின் 1 கிராம் வைட்டமின் A - 93% (835 மைக்ரோ கிராம்) பீட்டா கரோட்டின் - 77% (8285 மைக்ரோ கிராம்) வைட்டமின் B1 - 3% (0.04 மில்லி கிராம்) வைட்டமின் B2 - 3% (0.05 மில்லி கிராம்) வைட்டமின் B3 - 8% (1.2 மில்லி கிராம்) வைட்டமின் B6 - 8% (0.1 மில்லி கிராம்) வைட்டமின் B9 - 5% (9 மைக்ரோ கிராம்) வைட்டமின் C - 12% (7 மில்லி கிராம்) கால்சியம் - 3% (33 மில்லி கிராம்) இரும்புச் சத்து - 5% (0.66 மில்லி கிராம்) மங்கனீஷ் - 5% (18 மில்லி கிராம்) பாஸ்பரஸ் - 5% (35 மில்லி கிராம்) பொட்டாசியம் - 5% (240 மில்லி கிராம்) சோடியம் 2.4 மில்லி கிராம் இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம். இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும். வைட்டமின் "ஏ" சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும். பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பக புற்று நோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் புளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் "ஏ" விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்று நோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும். கேரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது பற்றி பிலடெல்பியாவிலுள்ள பாக்ஸ் சேஸ் புற்று நோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் சாண்ட்ரா பெர்ணாண்டஸ் கூறியதாவது: இந்தக் காய்களிலுள்ள சத்துக்கள் புற்று நோயை ஆரம்ப நிலையில் மட்டுமே அழிக்குமென்றும், நோய் முற்றிய புற்றுச் செல்களை அழிக்காது என்றும் தெரிவித்தார்.
  9. பாடல்: உன்னை காதலி என்று சொல்லவா
  10. பாடல்: நான் பொம்பே பொண்ணு படம்:வெடி பாடியவர்: மம்தா சர்மா
  11. "எல்லோரும் எப்பண்ணே வந்தீங்கன்னு கேட்டாங்க.. நீங்க மட்டும் எப்டிண்ணே வந்தீங்கன்னு கேட்டீங்க பாருங்க.. பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..."
  12. உயரிய நோக்கத்துடன் தமது இன்னுயிரை ஈர்ந்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
  13. பாடல்:கன்னித்தீவு பெண்ணா படம்:யுத்தம் செய் பாடகர்கள்:எம்.எல்.ஆர்.கார்த்திகேயன் & Raqueeb Alam
  14. பாடல்:ஏஞ்சல் ஏஞ்சல் படம்:சென்னை காதல்
  15. [size=4]நந்தனுக்கும், தர்மராஜுக்கும்.[/size][size=4]கவிதைக்கும் [/size][size=4]என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். [/size]
  16. பாடல்: நீயே சொல் படம்:பொல்லாதவன் பாடகர்கள்: பென்னி தயாள் , சுனிதா சாரதி இசை: G.V. பிரகாஷ் பெண்: நீயே சொல் உன் முத்தம் விழுந்து மோகம் அடங்குமா நீயே சொல் உன் எச்சில் விழுந்து தீயும் அணையுமா நீயே சொல் உன் முத்தம் வேண்டும் மோகம் அடங்குமா நீயே சொல் உன் எச்சில் விழுந்து தீயும் அணையுமா ஆண்: விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி தொலையாது பெண்: பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது ஆண்: ஓ.... நீயே சொல் என் முத்தம் விழுந்து உன் மோகம் அடங்குமா நீயே சொல் என் எச்சில் விழுந்து உன் தீயும் அணையுமா... நீயே சொல் என் முத்தம் விழுந்து உன் மோகம் அடங்குமா நீயே சொல் என் எச்சில் விழுந்து உன் தீயும் அணையுமா... (இசை...) பெண்: போர்வைக்குள் பூப்பூக்க வைக்க வா.. வா.. வேர்வைக்குள் விவசாயம் செய்ய வா.. வா.. ஆண்: மஞ்சத்தைப் பரிமாற வேண்டும் வா.. வா.. மரியாதை தெரியாத முத்தம் தா.. தா.. பெண்: கட்டில் மேல் என்ன பண்பாடு காதலால் காதல் வேர்கள் தொடு தொடு ஆண்: நூறு முறை தொட்டு வைக்கிறேன் நுனிநாக்கில் பொட்டு வைக்கிறேன் உயிர் மட்டும் விட்டு வைக்கிறேன் கண் தூங்காமல் விடிய வைக்கிறேன் பெண்: அச்சத்தை விலக வைக்கிறாய் வெட்கத்தைக் கலைய வைக்கிறாய் ஆடைகளை நெகிழ வைக்கிறாய் இனிமேல் எனை என்ன செய்குவாய் (ஓ.. நீயே சொல்...) (இசை...) ஆண்: உடலைப் போல் அழகான பண்டம் இல்லை உதவாத பாகங்கள் இங்கு இல்லை பெண்: உன் வாயோடு வாய் வந்து கொஞ்சும் லீலை வலியாலே இன்பங்கள் செய்யும் லீலை ஆண்: மூங்கிலினில் பரவும் புயல் போலே உனதுடல் மீது உதடும் பரவுது பெண்: இப்படியே உயிரும் இனிக்குமா இவ்விதமே சொர்க்கம் கிடைக்குமா இக்கணமே செத்து விடட்டுமா நெஞ்சு இத இப்ப வலி பொறுக்குமா ஆண்: இது போலே சமையம் வாய்க்குமா என் மடியில் இமயம் சரியுமா என் உயிரில் மலைகள் உருகுமா பூமி கடந்தெங்கும் போவோமா (நீயே சொல்...)
  17. ஒரு சர்வாதிகார நாட்டில் பார்க்கில் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தனர். திடீரென்று ஒருவர் ஏதோ சிந்தனையில் இருந்தவர்,. சட்டென்று, “ குப்பை..குப்பை” என்றார்.. அவரைப் பார்த்து மற்றவர் சொன்னார்: ``இதோ பாருங்கோ, நமது ஜனாதிபதியின் உரையைப் பற்றி பொது இடத்தில் அபிப்ராயம் தெரிவிப்பது தவறு.'' * ஒரு அரசியல்வாதி பொதுக்கூட்டத்தில் முழங்கினார் பெருமையாக. ``இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் நானேதான்'' கூட்டத்திலிருந்து ஒரு குரல்: `மன்னிப்பு ஏற்கப்பட்டது.' * ஒரு சர்வாதிகாரி பெரிய துணிக் கடைக்குச் சென்றார். விலையுயர்ந்த சூட் ஒன்று அவருக்குப் பிடித்திருந்தது. ``என்ன விலை?'' என்று கேட்டார். ``விலையெல்லாம் எதுக்கு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். பரவாயில்லை'' என்று கடைக்காரர் குழைந்தார். ``சேச்சே... இலவசமாக எதையும் நான் எடுத்துக் கொள்ள மாட்டேன்'' என்றார். கடைக்காரர் உடனே, ``சரி, இதன் விலை இரண்டு ரூபாய்'' என்றார். சர்வாதிகாரி நாலு ரூபாயை அவரிடம் கொடுத்து, ``அப்படியானால் இரண்டு சூட் எடுத்துக் கொடு'' என்றார். * ஹிட்லரைப் பற்றிய சில கேலி ஜோக்குகள் அவர் காதுக்கு எட்டின. யார் இந்த ஜோக்குகளை ஆரம்பித்து வைத்தவர் என்று கண்டுபிடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர்கள் அரும்பாடு பட்டு ஒரு முதியவரைக் கண்டுபிடித்து வந்து ஹிட்லரிடம் விட்டார்கள். ``என்னய்யா, நீர்தான் என்னைப் பற்றி கேலி ஜோக்குகளைப் பரவ விடுகிறீரா? நான் இறந்தால் உலகம் முழுதும் கொண்டாடுவார்கள் என்கிற ஜோக் உங்களுடையது தானே?'' ``ஆமாம்.'' ``நான் ஆற்றில் மூழ்கிய போது ஒருவர் காப்பாற்றுகிறாராம். அவருக்கு நான் நன்றி தெரிவித்த போது, `நன்றி எதுவும் வேண்டாம். நான்தான் உங்களைக் காப்பாற்றினேன் என்று வெளியே யாருக்கும் சொல்லாமலிருந்தாலே பெரிய உதவியாயிருக்கும்' என்ற ஜோக்கும்...'' ``ஆமாம். என்னுடையதுதான்.'' ``இவ்வளவு துணிச்சலா உங்களுக்கு? நான் யார் தெரியுமா? உலகிலேயே சர்வ வல்லமை படைத்தவன்.இன்னும் ஆயிரம் ஆண்டுகள் என் வம்சம்தான் உலகை ஆளப் போகிறது என்பது தெரியாதா?'' ``அய்யய்யோ, இப்போது நீங்கள் சொல்வதுதான் முதல்தர ஜோக்! ஆனால் இந்த ஜோக்கை நான் சொல்லவில்லை. இதுக்கு முன்னே நான் இதைக் கேட்டதுகூட இல்லை'' என்றார் அந்த முதியவர். * சர்வாதிகாரிக்குப் பயங்கர கோபம் கேலி ஜோக்குகள் சொல்பவர்கள் மீது. ``இந்த மாதிரி யாராவது ஜோக் சொன்னால் அவனைப் பிடித்துக் கொண்டு வந்து என் முன் நிறுத்துங்கள்'' என்று உத்தரவிட்டார். அதிகாரிகள் ஒரு ஜோக் எழுத்தாளரைப் பிடித்துக் கொண்டு போனார்கள். சர்வாதிகாரியின் மாளிகைக்குள் நுழைந்த அவர், அதன் ஆடம்பர அலங்காரங்களைப் பார்த்து பிரமித்துப் போனார். அவரைப் பார்த்து சர்வாதிகாரி, ``என்ன, சாப்பிட்டு விடுவது போல் பார்க்கிறாய்?'' என்று கேட்டார். ``பரவாயில்லை. நீங்கள் வசதியாகத்தான் இருக்கிறீர்கள.'' ``அதற்கென்ன, பார்த்துக் கொண்டே இரு. இன்னும் இருபது வருஷங்களில் இந்த நாட்டில் உள்ள எல்லாரும் இப்படித்தான் இருக்கப் போகிறார்கள்'' என்றார். ``ஆஹா, ஒரு புது ஜோக் எனக்குக் கெடைச்சுது'' என்றார் ஜோக் எழுத்தாளர். * பயில்வான் போன்று இருந்த ஒரு ஆசாமி, தெருவில் எதிரே வந்த நோஞ்சான் ஆசாமியின் முகத்தில் ஒரு குத்து விட்டான். நோஞ்சான் திருப்பி அடிக்கத் தயங்கி, ``ஏ... என்னை நிஜமாக அடிச்சியா? இல்லை விளையாட்டா அடிச்சியா?'' என்று கேட்டான். ``நிஜம்மாத்தான் அடிச்சேன். அதுக்கு என்ன?'' என்று கர்ஜித்தான் பயில்வான். ``அதுதானே.கேட்டேன்.. ஆமா,.. எனக்கு விளையாட்டெல்லாம் பிடிக்காது. கெட்ட கோபம் வரும்...'' என்று சொல்லிக் கொண்டே நடந்தான் நோஞ்சான். * பள்ளிக்கூட ஆசிரியை மாணவர்களுக்குக் கதை சொல்லிக் கொண்டிருந்தார். ``அப்போது கடவுள் அங்கு தோன்றி எல்லாக் குழந்தைகளுக்கும் ரொட்டியும், வெண்ணெயும் கொடுத்தார்...'' என்றாள். ஒரு மாணவன், ``டீச்சர், கடவுள் என்பவர் கிடையாது என்று சர்வாதிகாரி நேற்றுகூட டி.வி.யில் சொன்னாரே'' என்றான். டீச்சருக்கு உதறலெடுத்தது. உடனே சமாளித்துக் கொண்டு, ``இது கற்பனைக் கதைதான். ரொட்டியும், வெண்ணையும் எங்கே இருக்கிறது நமது நாட்டில்? அதுபோல் கடவுளும் கற்பனைதான்'' என்றார்.
  18. பாடல்:தொட்டு தொட்டு தொட்டு செல்லும் படம்:ஏய் நீ ரொம்ப அழகா இருக்காய்
  19. நாம் நிமிடத்திற்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பிரயாணம் செய்துகொண்டே இருக்கிறோம். தெரியுமா உங்களுக்கு? [size=2] [/size][size=3] நீங்கள் இப்போது நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்களா? உங்கள் நாற்காலியை இறுகப்பிடித்துக்கொண்டு ஒரு பெருமூச்சு விடுங்கள். இந்த நேரத்தில் (4 வினாடிகள்) நீங்கள் 100 கிலோ மீட்டர் தாண்டி விட்டீர்கள். மீண்டும் ஒரு ஆழ்ந்த பெருமூச்சு விடுங்கள். இப்போது மேலும் 100 கிலோ மீட்டர் தூரம் தாண்டிவிட்டீர்கள். இது உண்மை. நாம் வசிக்கும் இப்பூமி சூரியனைச் சுற்றி வினாடிக்கு (per second) 25 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. பூமி இந்த குறிப்பிட்ட வேகத்தில் சுற்றுவதனால்தான் சூரியனின் பயங்கரமான ஈர்ப்பு சக்தியினால் இழுக்கப்பட்டுச் சூரியனுடன் மோதி அழிந்து விடாமலிருக்கிறது. இதைவிட சற்றுக் குறைந்த வேகத்தில் சுற்றினால்கூட போதும். பூமி சூரியனால் இழுக்கப்பட்டு எரிந்து விடும். இதைவிட சற்று அதிக வேகத்தில் சுற்றினால்கூட போதும். பூமி சூரியனைவிட்டு அதிக தூரம் விலகிப்போய் மிகவும் குளிர்ந்து விடும். விறைத்துச் சாகவேண்டியதுதான் (பனிக்கட்டி மூடிவிடுவதினால்). ஆகவே, பூமி சுற்றும் வேகம் சிறிது மாறினால் கூட போதும். பூமியின் மீது எந்த ஜீவராசியும் (தாவரம், மிருகம், மனிதர்) உயிர் வாழவே முடியாது. இவ்விதமாகவே இப்பூமி இவ்வித இரண்டு பயங்கர ஆபத்தான நிலைமைகளுக்கு இடையே மயிரிழையில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு வினாடிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நம்மால் பிரயாணம் பண்ணக் கூடுமானால், நாம் ஐந்தரை நிமிட வேகத்தில் பூமத்திய ரேகையிலிருந்து வட துருவத்தையோ அல்லது தென் துருவத்தையோ அடைந்துவிடலாம். ஆனாலும் அப்பிரயாணம் அலுப்பு மிக்கதாகவும், சலிப்புடையதாகவும் இருக்கும். ஏன் தெரியுமா? அவ்வளவு வேகத்தில் செல்லும்போது நம் கண்களால் எதையுமே பார்க்க முடியாது. பார்த்தாலும் எல்லாமே மிகவும் மங்கலாகவும், அதிவேகமாகவும் ஓடுபவையாகவும் காணப்படும். சாதாரணமாக இப்பூமியின் மீது நாம் எங்கேனும் பிரயாணம் செய்யும்போது, நாம் கடந்து செல்கின்ற பொருட்களைக் கொண்டுதான் நாம் பிரயாணம் செய்யும் வண்டியின் வேகத்தையும், அசைவையும் நம்மால் அறிய முடிகிறது. நாம் தொடர்ந்து செய்யும் விண்வெளிப் பிரயாணத்தைக் குறித்த உணர்வு நமக்கு ஏன் இல்லாமல் இருக்கிறது என்பது இதிலிருந்து நமக்கு புரிகிறதல்லவா? இந்த பூமி எப்போதுமே இப்படித்தான் தொடர்ந்து அண்டவெளியில் பிரயாணம் செய்துகொண்டே இருக்கிறது. நாம் யாவரும் இதன்மீது பிறந்தவர்களும், இப்பூமியின் வாழ்வாகவும் இருக்கிறோம். வேகத்தைப் பொறுத்தமட்டில் நாமும் இப்பூமியும் ஒன்றுதான். மேலும் இப்பூமியானது அருகிலுள்ள அநேகப் பொருட்களினூடே கடந்து செல்லுமானால் பூமியும் நாமும் அதிவேகமாகப் பிரயாணம் செய்வதை நம்மால் உணர முடியும். அப்படியில்லாது பூமிக்கருகில் நாம் காணக்கூடிய எப்பொருளும் இல்லாதிருப்பதினால் நாம் இப்பூமியோடு சேர்ந்து அதிவேகமாகப் பிரயாணம் செய்வதை நம்மால் சற்றேனும் உணர முடியவில்லை. எவ்வளவு வியப்பாக இருக்கிறது. இல்லையா?[/size]
  20. கு.மா அண்ணா, சுவி அண்ணா மற்றும் புத்தன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.