Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. நன்றி சுமோ உற்சாகமூட்டலுக்கு. ----------------------------------------------------------------------------------------------------------- மேரிக்யூரி (1867-1934) போலோனியம், ரேடியம் இரண்டையும் கண்டுபிடித்து அறிவியல் உலகில் நிகரில்லா இடத்தைப் பெற்றவர் மேரிக்யூரி. இவரது இயற்பெயர் 'மான்யா ஸ்கோலோடாவ்ஸ்கா'. போலந்து நாட்டின் 'வார்சா' நகரில் 07-11-1867 அன்று இவர் பிறந்தார். இவரின் தந்தை பெயர் 'பிளாடிஸ்லாவ் ஸ்கோலோடாவ்ஸ்கா'. உயர்நிலைப் பள்ளித் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதுடன், தங்கப் பதக்கமும் பெற்றவர் மேரிக்யூரி (1883). இயற்பியல் எம்.எஸ்.ஸி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் (1893). கணிதம், எம்.எஸ்.ஸி இரண்டாம் நிலையில் தேர்ச்சி பெற்றுப் பட்டம் பெற்றார் (1894). பின்னர் இயற்பியல் முனைவர் பட்டத்தையும் பெற்றார் (1903). இவர் பாடம் கேட்ட ஆசிரியரான 'பியூரிக்யூரி' என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் (1895). 'போலோனியம்' இவரால் கண்டுபிடிக்கப்பட்டது (1898). அதே வருடத்தில் குளோரினிலிருந்து 'ரேடியம்' கண்டுபிடித்தார். இதில் நிறைய ஆராய்ச்சிகளைச் செய்த பின் 'ரேடியம்' என்பது குளோரினிலுள்ள தனித்துவமான மூலக்கூறு என்பதை கண்டறிந்து வெற்றி பெற்றார் (1902). 'சார்போன்' என்னுமிடத்திலுள்ள இயற்பியல் ஆய்வகத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றார் (1903). இவரது கணவர் 'பியூரிக்யூரி' சாலை விபத்துல் மரணம் எய்தியதும் இப்பதவியில் 'மேரிக்யூரி' அமர்த்தப்பட்டார். பிரேஸில்,பெல்ஜியம், ஸ்பெயின், செக்கோஸ்லோவாகியா ஆகிய நாடுகளில் பயணங்கள் மேற்கொண்டு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் (1918). இவர், இவரது கணவர் 'பியூரிக்யூரி' மற்றும் 'ஹென்றி பாக்யூரல்' ஆகிய மூவருக்கும் சேர்த்து இயற்பியல் பிரிவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது (1903). லண்டனிலுள்ள 'ராயல் சொஸைட்டி' மேரிக்யூரிக்கு டேவி பதக்கம் வழங்கிச் சிறப்பித்தது. இவருக்கு வேதியியல் பிரிவு நோபல் பரிசு வழங்கப்பட்டது (1911). 1931 ஆம் வருடம் வரை இவருக்கு பல்வேறு விருதுகள், பரிசுகள் இடைவெளிவிட்டு விட்டு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. உலக அளவில் இவர் 'ரேடியம் லேடி' என்ற பெயரில் புகழ்வாய்ந்தவராக பாராட்டப்பட்டார் என்பது சிறப்புச் செய்தியாகும். இவரது மகள் 'ஐரின் ஜூலியட் க்யூரி'யும் வேதியியலுக்காக நோபல் பரிசு வாங்கியவர் (1935). உலகப் புகழ் வாய்ந்த இம்மாதரசி இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளில் சிறந்த சாதனைகளை நிகழ்த்தினார் . அறுபத்து ஏழு ஆண்டுகள் வாழ்ந்து பிரான்ஸிலுள்ள 'சான்செல்லிமாஷ்' என்னும் ஊரில் 04-07-1934 அன்று காலமானார். கல்வி பெற்று, அறிவியல் ஆராய்ச்சிகளில் இன்று ஈடுபட்டு வரும் பெண்களின் ஆதர்ஷமாக மேரிக்யூரி விளங்கி வருகிறார் என்பது சிறப்புச் செய்தியாகும். http://gururadhakrishnan.blogspot.ca/
  2. விமலா: "ஏய் கலா, நான் உன் திருமணத்திற்கு வரமுடியலடி. அந்த ஆண்கள் பக்கத்தில் உட்கர்ந்திருக்கிறாங்கள்ல அவங்கள்ல உன் கணவர் யாருன்னு காட்டேன்" கலா: "அந்த மூனாவது வரிசையில, புளு பேண்ட் போட்டு வெள்ளை சட்டையை இன் பண்ணிக்கிட்டு..." விமலா: "ஆமாம்" கலா: "கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு..." விமலா: "ஆமாம்" கலா: "நல்லா முரட்டு மீசை வெச்சிக்கிட்டு..." விமலா: "ஆமாம்" கலா: "தலையில் சுருள் முடியோட..." விமலா: "ஆமாம்" கலா: "கழுத்தில கோல்ட் செயின் போட்டுக்கிட்டு..." விமலா: "ஆமாம்" கலா: " ஷூ போட்டுக்கிட்டு, உட்கார்ந்திருக்காரே..." விமலா: "ஆமாம்" கலா: "நல்லா நடிகர் அஜீத் கலர்ல..." விமலா: "ஆமாம்" கலா: "அவருக்கு வலப்பக்கம் உட்கார்ந்திருக்கிறவருதான் என் கணவர்!!!" ********************************************************************* திருமண விருந்தில்... பந்தி பரிமறுபவர்: "ஏம்ப்பா, நீ போன பந்தியிலயும் சாப்பிட்டியே! இந்த பந்தியில் மறுபடியும் சாப்பிடறியே?" சாப்பிடுபவர்: "ஆமாங்க, உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம். எனக்கு ஜீரண சக்தி அதிகம்" ************************************************************** முதலாம் நபர்: "என்ன சார், நேற்று இரவு உங்க வீட்டிலருந்து அடிதடி சத்தமெல்லாம் கேட்டுச்சே, எதுவும் சண்டையா சார்?" இரண்டாம் நபர்: "ஆமாம் சார், எனக்கும் என் மனைவிக்கும் சண்டை. அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க, அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க, அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க...."
  3. வீரவேங்கைகளுக்கு வீரவணக்கங்கள் !!!
  4. கணவன்: "என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக் காசா கிடக்குது?" மனைவி: "நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம் சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க!" +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ திருடன் 1: "ஒரு வீட்டுல திருடும்போது தூங்கிட்டு இருந்தவர் காலை தெரியாமல் மிதிச்சிட்டேன்" திருடன் 2: ''திருடன்-னு அலறியிருப்பாரே?'' திருடன் 1: " 'கால் வலிக்கு இதமா இருக்கு; ஒரு அரை மணி நேரம் மிதிச்சிட்டு அப்புறம் திருடு'ன்னு சொல்லிட்டார்" +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஒருவர் : "உங்க மனைவி எடுத்தெறிஞ்சி பேசுவாங்கன்னு சொல்றீங்களே... அந்த சமயத்தில நீங்க என்ன பண்ணுவீங்க?" மற்றவர்: "எறிகிற பாத்திரங்களை கேட்ச பிடித்து அவளை வெறுப்பேத்துவேன்."+++++++++++++++++++++
  5. பாடல்:உனை காணாது நான் படம்:விஸ்வரூபம் பாடியவர்: சங்கர் மகாதேவன் https://www.youtube.com/watch?v=fJ0LEFx44bY
  6. 1919 ஆம் ஆண்டு ஜாலியான்வாலாபாக்கில் ஒரு மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் ,துப்பாக்கி குண்டுகள் தீரும் வரைக்கும் சுடச் சொல்லி சுட்டுக் கொல்ல ஆணையிட்டான், ஜெனரல் டயர் ஆங்கிலே பரங்கித் தலையன்.350 பேருக்கும் மேல் செத்துப் போனார்கள்..! இந்த படுகொலையை.... மனசு வெடிக்க... உதடுகள் துடிக்க துடிக்க ... தன் மகனுக்கு சொல்லிப் போனாள்,தாய்! அந்த சிறுவன் அந்த மைதானம் போய் ,அந்த ரத்தம் தோயிந்த மண்ணை தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டான் . இளைஞானாக வளர்ந்து,இங்கிலாந்துக்கு கப்பல் ஏறினான். ஜெனரல் டயர் முன்னால் தோன்றி கேட்டான். ஜாலியான்வாலாபக் நினைவிருக்கிறதா என்று "இந்தா,இந்திய பரிசு!" என்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்! இங்கிலாந்து நீதி மன்றத்து ,நீதிபதி கேட்டான். "உன் கடைசி ஆசை என்ன?" நான் இறந்த பிறகு என் உடலை இங்கிலாந்து மண்ணில் புதைக்க வேண்டும்! வியப்படைந்து காரணம் கேட்டான் ,நீதிபதி. "6 ஆயிரம் கிமீ பரவியுள்ள இந்தியாவை நீங்கள் 200 ஆண்டுகள் ஆக்கிரமித்துக் கொண்டீர்கள்! இங்கே புதைக்கப்பட்டால் ,இங்கிலாந்தின் 6 அடி மண்ணையாவது ,நான் ஆக்கிரமிப்பேன்!"என்று சொன்னான். அந்த இளைஞனின் பெயர் தான் உத்தம்சிங்!
  7. பாடல்:கனவே கனவே படம்: டேவிட்
  8. அந்த விமன்ஸ் கிரிக்கேட் டீம்ல இருக்காளே ஸ்பின் பௌலர், அவள் பேர் என்ன தெரியுமா? தெரியாதே? திருப்புற சுந்தரி. அவளைவிட பெட்டரா டாப் ஸ்பின் பௌலிங் போடறவ எதிர்த்த டீம்ல இருக்கா, அவள் பெயர் தெரியுமா உனக்கு? என்ன? பால திருப்புற சுந்தரி. -------------------------------------------------------------- அப்பா,- “ நீ வளர்ந்த பின் யாரைப் போல இருக்க விரும்புகிறாய்?” பையன் ;” காந்தியைப் போல” “ வெரி குட், காந்திட்ட உனக்கு பிடிச்ச விஷயம் என்ன? “ அதா? அவரு 13 வயசுலயே கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்””” ------------------------------------------------------------------------------------------------------------------------ பேஸ்புக் லே ஏன் எப்பவும் 'லைக்' மட்டும் போடுறீங்க. கமெண்ட்ஸ் ஏன் போடுறதில்லை? லைக் படிக்காமலே போட்டுறலாம்.கமெண்ட்ஸ் அப்படி போட முடியாதே. அதான்! ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- எதுக்கு நர்ஸ் மடியில படுத்திருக்கீங்க....?" "வசதிப்பட்ட இடத்துல படுத்துத் தூங்கச்சொல்லி நீங்கதானே டாக்டர் சொன்னீங்க...!" ------------------------------------------------------------------------------------------------------------------------- "என்னடா... போன் பேசிட்டு ஒரு மாதிரி ஆயிட்டே?'' "ஊர்ல இருந்து மச்சான் போன் பண்ணுனான். அங்க இருந்து அணுகுண்டைச் சுமந்துக்கிட்டு ஏவுகணை வருதாம்'' "புரியலை'' "என் மாமியாரைக் கூப்பிட்டுக்கிட்டு, மாமனார் இங்க வந்துக்கிட்டு இருக்காராம்''
  9. தீக்கோழி தலையை மணலுக்குள் நுழைத்துக் கொள்ளும் என்பது உண்மையா? ஆபத்து வரும் போது தீக்கோழி மண லுக்குள் தன் தலையை நுழைத்துக் கொள்ளும் என்று கூறுவது உண் மையல்ல. எந்த தீக்கோழியும் அவ்வாறு தலையை மணலுக்குள் நுழைத்துக் கொண் டதை எவரும் பார்த்த தில்லை. அவ்வாறு செய் தால் அதற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுவிடும். ஆபத்து அச்சுறுத்தும்போது மற்ற விலங்குகளைப் போல தீக்கோழியும் ஓடிச் சென்றுவிடும். அவை, தங்கள் கூடுகளில் (தரையில் உள்ள பள்ளங்கள்தான் அவற்றின் கூடுகள்) சில நேரங்களில் படுத்திருக்கும் என்பதிலிருந்து இந்த கட்டுக் கதை எழுந்திருக்கலாம். அப்படிப் படுத்திருக்கும்போது தங்கள் தலையை பள்ளத்துக்கு மேலே நீட்டிக்கொண்டு, ஏதேனும் ஆபத்து வருகிறதா என்று பார்த்துக் கொண்டே இருக்கும். அதைக் கொல்லக்கூடிய விலங்கு ஏதேனும் அருகில் வந்தால், அது எழுந்து ஓடிப்போய்விடும். மணிக்கு 65 கி.மீ. (40 மைல்) வேகத்தில் அதனால் ஓடமுடியும். உலகிலேயே மிகவும் பெரிய பறவை தீக்கோழிதான். ஒரு ஆண் பறவை 2.7 மீட்டர் (9 அடி) உயரம் வரை வளரும். ஆனால் அதன் மூளையோ ஒரு வாதுமைப் பருப்பைப் போன்ற அளவில்தான், அதன் கண்களை விடக் சிறியதாக, இருக்கும். தீக்கோழி ஒட்டகக் கோழி என்றும் அழைக்கப்படுகிறது. பாலைவனங்களில் வாழ்வதாலும், அதன் கழுத்து ஒட்டகத்தின் கழுத்து போல் நீளமாக இருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். தீக்கோழி மணலில் தலையை நுழைத்துக் கொள்ளும் கதை முதன் முதலாக ரோம் நாட்டு வரலாற்றாசிரியரான பிளினியால் தெரிவிக்கப்பட்டது. தீக்கோழி உற்றுப் பார்த்தே முட்டையைக் குஞ்சு பொறிக்க வைத்துவிடும் என்றும் அவர் நினைத்தார். கண்ட கண்ட பொருட்களையெல்லாம் விழுங்கிவிடக்கூடிய அதன் குணத்தைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை. கல், இரும்பு, செம்பு, செங்கல், கண்ணாடி என்று எதனை வேண்டுமானாலும் தீக்கோழி விழுங்கிவிடும். லண்டன் விலங்கியல் பூங்காவில் இருந்த ஒரு தீக்கோழி ஒரு மீட்டர் நீளமுள்ள கயிற்றையும், ஒரு படச்சுருளையும், ஒரு அலாரம் கடிகாரத்தையும், ஒரு பென்சிலையும், ஒரு சீப்பையும், மூன்று கையுறைகளையும், ஒரு கைக்குட்டையையும், தங்க நெக்லசின் துண்டுகளையும், ஒரு கைக்கடிகாரத்தையும், ரூபாய் நாணயங்கள் பலவற்றையும் விழுங்கியதை மக்கள் கண்டுள்ளனர். நமீபியாவில் உள்ள தீக்கோழிகள் வைரங்களைக் கூட சாப்பிடும். http://kumarinadu.net/index.php?option=com_content&view=article&id=2190:2012-02-13-06-10-07&catid=54:2009-09-24-06-55-38&Itemid=60
  10. இறந்தவனின் ஆடைகள் இறந்தவனின் ஆடைகளை எப்படிப் பராமரிப்பதென்றே தெரியவில்லை இறந்தவனின் ஆடைகளை அத்தனை சுலபமாய் அணிந்துகொண்டுவிட முடியாது அதற்காகவே காத்திருந்தது போலாகிவிடும் அவை இறந்தவனின் இடத்தில் இருந்துவிட்டுப் போகட்டும் என்றிருக்க இயலாது இறந்தவர்களோடு அவ்வளவு இயல்பாய் உறவுகள் சாத்தியமல்ல தானமெனக் கொடுக்கலாமெனில் இறந்தவனின் சாயல்கள் எதிர்பாரா இடங்களில் எதிர்பாரா உடல்களிலிருந்து நம்மை நோக்கி வரும் இறந்தவனின் ஆடைகளை அழித்துவிடலாம்தான் இறந்தவனைத் திரும்பத் திரும்ப அழிக்க கைகள் நடுங்குகின்றன இறந்தவனின் ஆடைகள் ஆடைகள் போலில்லை இறந்தவனின் தோலாக இருக்கிறது (அபு என்கிற பக்கீர் முஹம்மதிற்கு) ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு நன்றாகக் குளிக்க வேண்டும் வெந்நீராக இருந்தால் மிகவும் நல்லது இருப்பதிலேயே நல்ல அதிகம் பயன்படுத்தாத தெம்பூட்டும் ஆடையை அணியலாம் தெருவில் இறங்கி நடக்கும்போது அடிக்கடித் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை அதிக இறுக்கம் அதிக இணக்கம் இரண்டுமே நம்மைக் காட்டிக்கொடுத்துவிடும் குழந்தைகளை இயல்பாகக் கொஞ்சவேண்டும் மர்மமாகப் புன்னகைப்பவர்கள் கேட்காமலேயே நம் கனிவை வழங்குபவர்கள் செயற்கையாகப் பேச்சை மாற்றுபவர்கள் எல்லோரையும் நாகரீகமாக வணங்கலாம் சாதுரியமாச்சு விரைவாக தப்பிச் சென்றுவிட வேண்டும் நாம் மதிக்கப்படும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் தனித்த அறை ஒன்றில் மனங்கசந்து அழும்போது கதவு தட்டும் ஓசைகேட்டு கண்களைத் துடைத்துக்கொள்ள வேண்டும் எல்லையற்றது இந்த உலகின் தீமை எல்லையற்றது இந்த உலகின் கருணை http://ariyavai.blogspot.ca/2012/08/blog-post_9596.html
  11. சோபா, easyjobs இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  12. பாடல்:குதிரைக்கு தெரியும் படம்:அசல் இசை: பரத்வாஜ் பாடியவர்கள்: சூர்முகி & சிறிசரண் வரிகல்: வைரமுத்து குதிரைக்குத் தெரியும் குதிரைக்குத் தெரியும் தனக்கொரு ஜாகிங் யார் என்று குமரிக்கும் தெரியும் குமரிக்கும் தெரியும் எனக்கொரு ஜாகிங் நீ என்று குதிக்கும் குதிரையை குறிவைத்து அடக்கும் புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து கொடிவைத்த கனிகள் வழிவிட்டு கெடக்கு காணா அழகே கண்ணடிச்சு அழைக்குது தொட்டுவிடு ஒருதரம்.. தொல்லைகொடு இருதரம்.. முத்தமிடு மூணுதரம்.. முகத்தினில் நாலுதரம்.. அள்ளி அணை ஐந்துதரம்.. கொள்ளையிடு ஆறுதரம்.. இந்த துணை ஏழு தரம்.. இந்த சுகம் நிரந்தரம்.. குதிக்கும் குதிரையை குறிவைத்து அடக்கும் புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து கொடிவைத்த கனிகள் வழிவிட்டு கெடக்கு குதிரைக்குத் தெரியும்.. குதிரைக்குத் தெரியும்.. குதிரைக்குத் தெரியும்.. குதிரைக்குத் தெரியும்.. குதிரைக்குத் தெரியும்.. குதிரைக்குத் தெரியும்.. எங்கெங்கு என்னென்ன தேவை எங்கெங்கு என்னென்ன சேவை அங்கங்கு அன்போடு செய்வாய் அன்பாய் நெஞ்சோடு பாய்கின்ற வேளை நீகொஞ்சம் ஓய்கின்ற வேளை நான் கொஞ்சம் மானாக வேண்டும் நண்பா விதவிதமா புதியகலை.. விடியும்வரை சரசமழை.. ஆடைகளும் நாணங்களும் அவசரத்தில் தேவையில்லை காணா அழகே கண்ணடிச்சு அழைக்குது தொட்டுவிடு ஒருதரம்.. தொல்லைகொடு இருதரம்.. முத்தமிடு மூணுதரம்.. முகத்தினில் நாலுதரம்.. அள்ளி அணை ஐந்துதரம்.. கொள்ளையிடு ஆறுதரம்.. இந்த துணை ஏழு தரம்.. இந்த சுகம் நிரந்தரம்.. குதிக்கும் குதிரையை குறிவைத்து அடக்கும் புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து கொடிவைத்த கனிகள் வழிவிட்டு கெடக்கு அழகிய பெண்கள் எமனின் கண்கள் மூடிய விழிகள் விசங்களின் குளங்கள் மார்பின் பழங்கள் மரணப்பழங்கள் பறக்கும் கூந்தல் பாசக்கயிறு அறிவேன் பெண்ணே... அகப்பட மாட்டேன்... அகழியில் விழுந்தால்... சுகப்பட மாட்டேன்... மேல்நாடு பாராத கண்ணும் கீழ் நாடு பாராத ஆணும் வாழ்ந்தென்ன வாழ்ந்தென்ன யோகம் இல்லை ஓஹோ ஓஹோ ஓ... மோகங்கள் தீர்க்காத ஆணும் தாகங்கள் தீர்க்காத நீரும் லோகத்தில் வாழ்ந்தென்ன லாபம் இல்லை இவருக்குள்ளே இறந்துவிடு இதயத்திலே புதையல் எடு ஒவ்வொரு தினமும் குளித்துவிடு உயிருக்குள்ளே உறங்கிவிடு காணா அழகே கண்ணடிச்சு அழைக்குது தொட்டுவிடு ஒருதரம்.. தொல்லைகொடு இருதரம்.. முத்தமிடு மூணுதரம்.. முகத்தினில் நாலுதரம்.. அள்ளி அணை ஐந்துதரம்.. கொள்ளையிடு ஆறுதரம்.. இந்த துணை ஏழு தரம்.. இந்த சுகம் நிரந்தரம்.. குதிக்கும் குதிரையை... குறிவைத்து அடக்கும்... புஜவலி உனக்கு... நிஜவலி எனக்கு... அழகாய் கொழுத்து... அந்தரத்தில் பழுத்து... கொடிவைத்த கனிகள்... வழிவிட்டு கெடக்கு...
  13. பாடல்: புது காதல் காலமிது படம்:புதுக்கோட்டையில் இருந்து சரவணன் Singer: Ranjith, Chinmayi Music: Yuvan Shankar Raja புது காதல் காலமிது பெண் : குழு 1: c இருவர் வாழும் உலகமிது நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ ஆண் : குழு 2: புது தேடல் படலமிது தேகம் தேயும் தருணமிது கரைவதும் நுரைவதும் கண் முன் நிகழுது ஏனோ பெண் : கொடு உனையே நீ எடுடா எனைதானே நீ தொட்டால் பனி பாறை போலே தேகம் கரையும் மாயம் என்ன ஆண் : கொடு எனையே நான் உந்தன் துணைதானே உன் வெட்கம் எனை வேட்டையாடி வேட்டையாடி விடுகிறதே ஒ பெண் : குழு 1 புது காதல் காலமிது இருவர் வாழும் உலகமிது நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ பெண் : குழு 2 புது தேடல் படலமிது தேகம் தேயும் தருணமிது கரைவதும் நுரைவதும் கண் முன் நிகழுது ஏனோ ஆண் : பனிமலை நடுவில் விழுந்தது போலே உன் மடி இடையில் விழுந்தேன் பெண் : கிளைகளின் நுனியில் மலர்களை போலே உன் கிளை மேலே வளர்ந்தேன் ஆண் : மறைக்கின்ற பாகம் எல்லாம் விடுதலை கேட்குதே விடு விடு வேகமாகா விருப்பம் போல மலரட்டும் பெண் : தொட தொட தேகமெல்லாம் வேர்த்துளி சுரக்குதே தோடு தோடு வேகமாக சுரந்து வழிந்து ஓடட்டும் ஆண் : வா அருகே நான் வாசனை மரம் தானே என் நிழலில் நீ மயங்கி கொள்ள மருத்துவம் இருக்கு நீயறிவாய் பெண் : தேன் மழையால் நீ நனைத்தாய் எனையே அட ஏனோ நீ சொல்லு சொல்லு சொல்லு சொல்லு நானறியேன் என் காதல் நாயகனே , கலப்படம் அற்ற தூயவனே என்னை ரசித்து இமசை செய்தது ஏண்டா ஆண் : என் காதல் தாயகமே , காமன் செய்த ஆயுதமே உயிரை குடித்து தாகம் தீர்ப்பது ஏண்டி ? F: உடல் வழி ஊர்ந்து , உயிர் வழி புகுந்து ஆல்னகள் செய்ய வந்தாயோ ஆண் : என்னுடல் திறந்து நீ அதில் நிறைந்து தவம் பல செய்திட வந்தாயோ பெண் : உடல் எங்கும் ரேகை வேண்டும் உன் நகம் வரயுமோ விரல் படும் பாகம் எல்லாம் வெடிக்குதே எரிமலை ஆண் : வாலிப வாசமில்லை வாட்டிடும் பொழுதிலே வன்முறை செய்ய சொல்லி என் காதல் தேவி பெண் : ஏய் புயலே , என்னை வதைக்கும் வெயிலே இடி போலே என்னை தாக்கி முதலில் கைது செய்தாய் ஏன் சொல்வாய் ஆண் : பூ உள்ளே நான் போரை தொடங்கிடவா நீ அதனை இன்று மெல்ல மெல்ல மெல்ல மெல்ல வழி நடத்து பெண் : குழு 1 புது காதல் காலமிது இருவர் வாழும் உலகமிது நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ ஆண் : CHOURS 2 புது தேடல் படலமிது தேகம் தேயும் தருணமிது கரைவதும் நுரைவதும் கண் முன் நிகழுது ஏனோ
  14. பாடல்: காதலே காதலே சுவாசம் பாடியவர்கள் : ஹரிஹரன், சுஜாதா இசை : D. இமான் காதலே காதலே சுவாசம் என் காதிலே சம்திங் சம்திங் பேசும் காதலே காதலே சுவாசம் என் காதிலே சம்திங் சம்திங் பேசும் காதலே பரவசம் கனவுகள் இலவசம் மௌனம் கூட அழகு இருந்தும் பேச பழகு காதலே... வா (காதலே காதலே வா வா) ஜீவனை... நீ தா (ஜீவனை ஜீவனை நீ தா) ஆ... காதலே காதலே சுவாசம் என் காதிலே சம்திங் சம்திங் பேசும் தூசி ஒன்று கண்ணில் வந்து விழுந்திட வேண்டுமே ஊதி விடும் போது உந்தன் விரல்நுனி தீண்டுமே என்னை யாரும் கேட்டதில்லை கேள்வி ஓ.. காதல் என்றால் வெற்றி பெற்ற தோல்வி காதலே... வா (காதலே காதலே வா வா) ஜீவனை... நீ தா (ஜீவனை ஜீவனை நீ தா) காதலே காதலே சுவாசம் என் காதிலே சம்திங் சம்திங் பேசும் நீ கண்ணை மூடும் போதெல்லாம் என் உலகம் இருண்டுபோகிறது உன் சுவாசம் என்பது என் வாழ்வின் ஏற்ற இறக்கம் என் கனவுகளை ஒரு போதும் விறக்மாட்டேன் அவற்றின் சொந்தக்காரி நீ.. நான் தூங்கப் போகிறேன் அங்கே மீண்டும் சந்திப்போம் காலை வந்தும் போர்வை விட்டு எழுந்திட மனமில்லை உன்னையென்னி உருண்டுவிழா கனவொரு கனவில்லை தன்னைத்தானே பார்த்துக் கொண்டும் கொஞ்சும் என்னை கண்ணாடியே ஓய்வு கேட்டு கெஞ்சும் உன்னைக் கண்டேன் என்னைக் காணவில்லையே எந்தன் இதயம் என்னை வந்து சேரவில்லையே... காதலே காதலே சுவாசம் என் காதிலே சம்திங் சம்திங் பேசும் காதலே காதலே சுவாசம் என் காதிலே சம்திங் சம்திங் பேசும் காதலே (காதலே) பரவசம் (பரவசம்) கனவுகள் (கனவுகள்) இலவசம் (இலவசம்) மௌனம் கூட அழகு (அழகு) இருந்தும் பேச பழகு (பழகு) காதலே... வா (காதலே காதலே வா வா) ஜீவனை... நீ தா (ஜீவனை ஜீவனை நீ தா) காதலே... வா (காதலே காதலே வா வா) ஜீவனை... நீ தா (ஜீவனை ஜீவனை நீ தா) சுவாசம்... சம்திங் சம்திங்... https://www.youtube.com/watch?v=4jUHdhNSgNs
  15. பாடல்:சார் உடனே வருவாரா படம்: businessman இசை: தமன்
  16. இறந்த பின்னரான வாழ்க்கை - மம்மிபிகேஷன் மம்மிகள் நாம் சினிமாவில் பார்த்ததோடு சரி . அவர்களின் இறந்த பின்னரான வாழ்க்கை பற்றிய நம்பிக்கை பற்றியோ அவர்களின் ரகசியம் பற்றியோ அறிந்ததில்லை . மம்மிகள் சீனா மம்மிகள் , அரசியல் வாதி மம்மிகள் , குரு மம்மிகள், மிருக மம்மிகள் , உரிந்த மம்மிகள் , காய்ந்த மம்மிகள் என எத்தனையோ வகை . அவற்றையும் இறந்த பின் வாழ்க்கையையும் , பிரமிட்டையும் அவர்களின் முறைகளையும் பார்ப்போம் . உலகத்தில் எத்தனை கண்டுபிடிப்புகள் வந்தாலும் பெரும்பாலான விடயங்கள் எகிப்த்தியர்களின் வழிகாட்டலிலேயே தோன்றியுள்ளது . ஏன் இப்போது உலகில் உள்ள இரு பெரிய மதங்களும் அவற்றின் கதைகளும் எகிப்தியர்களிடம் இருந்து எடுக்கப்பட்டவை என்றும் கூறலாம் .அதன் காரணம் எகிப்தியர்கள் அனைத்து விடயங்களையும் தமது கல் வெட்டுகளில் பொறித்து விட்டு சென்றமை . எகிப்த்தியர்களின் (கி மு (4650 - 3050 )) கல் வெட்டுகளில் அவர்களின் பொருளாதாரம் , விஞ்ஞானம், கணிதம் , போக்குவரத்து என அனைத்தும் குறிக்கப்பட்டுள்ளது . இவை அனைத்தையும் பொறித்து விட்டுசென்றவர்கள் அவர்களின் இறந்த பின்னரான வாழ்க்கை பற்றியோ அல்லது அவர்கள் இறந்த உடல்கள் பாதுகாத்தல் தொடர்பையோ எந்த குறிப்புகளையும் எழுதி வைக்க வில்லை . எழுதி வைக்காததன் மர்மம் என்ன ? அதற்க்கான கேள்வி மனதில் நிற்கட்டும் . இவ்வாறு எழுதி வைக்காத முறைமை கிரேக்க சுற்றுலாப்பயணி(கி மு 2500 ) ஒருவரால் அடிப்படை விடயங்களை வைத்து ஊகித்து எழுதப்பட்டது தான் மம்மிபிகேஷன் . அனைத்து தொழில்நுட்பவியலாளர்களும் , தற்ப்போதைய கட்டிட நிபுணர்களும் பார்த்து வியந்த பிரமிட்டுகள் ஆயிரமாயிரம் தொழிலாளர்களை வைத்து கட்டப்பட்டது . அதற்க்கான காரணம் அவர்களது இறந்த உடல்களை பாதுகாக்கவும் இறந்த பின்னரான வாழ்க்கையை உறுதி செய்யவுமே . இறந்த உடல்களை பத்திரப்படுத்தி வைக்கும் முறையில் எகிப்தியர்களை பார்த்து வியந்து நிற்க்கிறது மருத்துவ உலகம் . மம்மிபிகஷோன் நடந்த மம்மி 18 ஆம் நூற்றாண்டுகளில் கண்டு பிடிக்கப்பட்டது . இறந்த உடல்களை பத்திரப்படுத்தி வைப்பது தான் மம்மிபிகாஷோன் . மம்மிபிகேஷன் நைல் நதியை தாண்டி கொண்டு செல்லப்படும் இறந்த உடல்களுக்கான மம்மிபிகாஷோன் உயர்ந்தமலையில் வைத்து நடத்தப்படுகிறது . மம்மிபிகேஷன் ஆரம்பமாக அவர்களுடைய குருமார்களால் பிரார்த்தனை நடத்தப்படுவதுடன் ஆரம்பிக்கிறது . பின்னர் மூக்கினூடாக ஒரு நீண்ட கம்பி போல ஒன்றை வைத்து மூளை இழுத்து எடுக்கப்படும் . வயிற்றிலிருந்து ஏனைய முக்கிய உறுப்புகளும் எடுக்கப்படும் . அவை தான் உடல் கெட்டுப்போக காரணமானவை . பின்னர் கழுவப்பட்ட உடல் நீரை உடலில் இருந்து உறிஞ்சும் உப்புக்களால் முழுமையாக மூடி நாப்பது நாட்களுக்கு விடப்படும் . நாற்ப்பது நாட்களுக்கு பின்னர் நைல் நதியில் இருந்து எடுக்கப்படும் நீரால் உடல் கழுவப்பட்டு உடலை லாஸ்டிக் போல வைத்திருக்க எண்ணெய் வகை பூசப்படுகிறது . எடுக்கப்பட்ட உள் உறுப்புகளிட்க்காக வேறு பொருட்கள் இட்டு உடல் நிரப்பப்பட்ட பின்னர் , எடுக்கப்பட்ட உறுப்புகள் சாடிகளில் இடப்படும் . அதாவது அவர்கள் வணங்கிய கடவுள் ஹோறச்சின் நான்கு மகன்கள் என அழைக்கப்படும் ஜாடிகளில் இட்டு வைக்கப்படும் . வாசமான திரவியம் உடலை சுற்றி பூசப்பட்ட பின் துணியால் சுற்றப்படும் . அவர்களின் சுற்றும் முறையே தனி . சுற்றிய பின் சடங்குகள் இடம் பெற்று அவை உறவினர்களிடம் விடப்படும் . அங்கு அவர்களுக்கு இறுதி உணவு , இறுதி சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டு அவர்களுக்காக செய்யப்பட்ட பிரமிட்டுகளில் வைக்கப்பட்டு மூடப்படும் . இதில் நெகிழ வைக்கும் விடயம் என்னவென்றால் . அரசன் மறுபடியும் வாழ்க்கை வாழ்வான் என்ற நம்பிக்கை இருந்தவர்கள் பணம், பொருள் , உணவு என அணித்தையும் இட்டு அனுப்புவர் .அதனுடன் வேலை செய்பவர்களையும் காவலாளிகளாக உயிருடன் வைத்து மூடுவதே . காரணம் இறந்த பின்னரும் அரசன் உயிரித்து எழுந்தால் காவலுக்கு காவலாளிகள் தேவை என்பதே . எகிப்தியர்கள் இறந்த உடல்களை வரிசையாக பிரமிட்டுகளுக்குள் இறக்கும் விதம் . அப்போதே இத்தகைய தொழில் நுட்பம் . ஆனால் நமக்கெல்லாம் தெரிந்தது எகிப்திய மம்மிகள் தான் . அவை தான் பிரபல்யமும் கூட . ஆனால் தேன் அமெரிக்காவில் கடற்க்கரை பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி மக்களின் மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன . இதுவரை கண்டெடுக்கப்பட்ட மம்மிகளில் 6000 ஆண்டுகள் பழமையான சின்ன குழந்தை ஒன்றின் மம்மியே மிக மிக பழமையானது . எகிப்திய ராஜாக்களால் தாம் இறக்கும் முன்னர் தாம் இறந்ததன் பின்னான வாழ்க்கைக்கு தேவையான இடத்தை அவர்களே இருந்து கட்டுகின்றனர் . மிகவும் பணம் செலவழிக்கும் விடயம் என்றால் இது தான் . நவீன மம்மி (லெனின் ) உலக புரட்ச்சியாளன் லெனின் இறந்த பின்னர் (1924 ) அவருடைய உடலை பக்குவப்படுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது . காரணம் மக்களால் அனைவராலும் அதிகமாக விரும்பப்பட்டவர் , தம்முடனேயே இருக்க வேண்டும் என முடிவு செய்தனர் . முதலில் அடியில் வைத்து -30 டிகிரியில் புதைக்கப்பட்ட அவரது உடல் மீண்டும் எடுக்கப்பட்டு மருத்துவர்களால் மேலும் நிறைய காலம் வைத்திருக்க முடிவெடுக்கப்பட்டது . ஆனால் அவரது உடலுக்கு மம்மீகளுக்கு செய்யப்பட்ட அதே வேலைகள் மாற்றமில்லாமல் இடம் பெற்றது . ஆனால் ரகசியமாக ஒரு முறை இன்று வரை பேணப்பட்டு வருகிறது ரஷ்ஷியர்களால் . இறந்த அவரது உடல் 70 வருடங்களாக அப்படியே இருக்கிறது . இப்போதும் பேணப்பட்டு வருகிறது . ஒரு வேலை லெனினின் உடலும் நிலத்துக்கடியில் செல்லலாம் . காரணம் கம்யுனிஸ்ட் ஆட்சி இல்லை . அனைத்து மம்மிகளும் , அது எகிப்திய மும்மியோ ,6000 வருடங்கள் பழமையான குழந்தை மம்மியோ!!. இவை அனைத்தும் காலத்தால் கூறும் ஒரே பதில் . எமது இறந்த காலத்துக்கான எயக்ச்டயினின் நேர பயணம் . பல விடயங்கள் மர்மமாகவே தொடர்கிறது . http://ethamil.blogspot.ca/2010/05/blog-post_20.html
  17. பாடல்:மொபைலா மொபைலா படம்:இரண்டு இசை: டி.இமான் பாடியவர்கள்:டி.இமான் & மாயா
  18. எரிமலை, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  19. http://s02.download.tamilwire.com/songs/__P_T_By_Movies/Ranga Raatinam/Mutharame - TamilWire.com.mp3 http://s02.download.tamilwire.com/songs/__P_T_By_Movies/Ranga Raatinam/Mutharame - TamilWire.com.mp3
  20. சந்தானத்தின் நகைச்சுவை கதம்பம் http://www.youtube.com/watch?v=2G1-JixVuLE
  21. பாடல் : என் ரகசிய கனவுகள் படம்; அலை இசை: வித்தியாசாகர் பாடலாசிரியர்: பா.விஜய் பாடியவர்கள் : கார்த்திக் ராஜா, ஸ்ரீவர்தினி என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா? என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவனா? மழை போலே வருவானா? மடி மேலே விழுவானா? மலர் போலே தொடுவானா? தொடுவானா? இவன் தானா? இவன் தானா? இவனோடு இணைவேனா? இவன் தானா? இவன் தானா? இவனோடு இணைவேனா? என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா? என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவனா? — ஒரு முறை பார்க்கையில் பனியென உருகினேன் மறுமுறை பார்க்கையில் தீயிலே வேகிறேன் கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய் மோகத்தின் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய் இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன் எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன் காதல் நீரிலே மூழ்கி போகிறேன் கையை நீட்ட வா கரையில் சேர்க்க வா… இவன் தானா? இவன் தானா? இவனோடு இணைவேனா?— என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவளா? என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா? செய்பவனா? செய்பவனா?— தூரத்தில் நின்றெனை ரசிப்பது போதுமா? தூரத்து வெண்ணிலா தாகங்கள் தீர்க்குமா? வெட்கத்தை வீசியே வா என சொல்கிறாய் பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய் அணைப்பாய் என நான் தவியாய் தவித்தேன் இருந்தும் வெளியே பொய்யாய் முறைதேன் கன்ன குழிகள் தான் காதல் தேசமா? ஈர முத்தம் தான் இன்ப தீர்த்தமா? இவள் தானா? இவள் தானா? இவளோடு இணைவேனா?— என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா? என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவளா? மழை போலே வருவாளா? மடி மேலே விழுவாளா? மலர் போலே தொடுவானா? தொடுவானா? இவன் தானா?இவள் தானா? இவனோடு இணைவேனா?இவன் தானா? இவள் தானா? இவனோடு இணைவேனா?
  22. பாடல்: ஒண்ணும் புரியல இசையமைத்து பாடியவர் : டி.இமான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.