Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: உயிரோடு உயிராக இசை: வித்யாசாகர் பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், கேகே, ஹரிணி வரிகள்: வைரமுத்து பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் 30 நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில் முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில் இது எப்படி எப்படி நியாயம் எல்லாம் காதல் செய்த மாயம் (இது எப்படி..) (பூவுக்கெல்லாம்..) நிலவை பிடித்து எறியவும் முடியும் நீல கடலை குடிக்கவும் முடியும் காற்றின் திசையை மாற்றவும் முடியும் கம்பனை முழுக்க சொல்லவும் முடியும் ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே ஐயோ என்னால் முடியவில்லை சுற்றும் உலகின் விட்டம் தெரியும் சூரியன் பூமி தூரமும் தெரியும் கங்கை நதியின் நீளமும் தெரியும் வங்க கடலின் ஆழமும் தெரியும் காதல் என்பது சரியா தவறா இதுதான் எனக்கு தெரியவில்லை ஒற்றை பார்வை உயிரை குடித்தது கற்றை குழல் கையீடு செய்தது மூடும் ஆடை முத்தமிட்டது ரத்தமெல்லாம் சுண்டிவிட்டது ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே ஐயோ என்னால் முடியவில்லை மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது மீண்டும் சோலை கொழுந்துவிட்டது இதயம் இதயம் மலந்ர்துவிட்டது இசை என் கதவு திறந்துவிட்டது காதல் என்பது சரியா தவறா இதுதான் எனக்கு தெரியவில்லை (பூவுக்கெல்லாம்..)
-
அதிசயக்குதிரை
இந்த நூற்றாண்டில் எப்படிப் பேச வேண்டும்? நான் வழி தெரியாமல் வாத்தியார் வேலைக்கு வந்து விட்டவன். வந்த பிறகு வழி தெரிந்தாலும், மாணவக் கண்மணிகளின் அன்பு வெள்ளத்தினால் திக்கு முக்காடி போக மனமில்லாமல் இந்த வேலையிலேயே தங்கி விட்டவன்! என் மூத்த சகோதரரும் ஒரு வாத்தியார்தான். ஆனால் அவர் ஒரு கல்லூரியில் வேலை பார்க்கின்றார். அதிலும் அவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர் என்பதோடு, சிறந்த மேடைப்பேச்சாளர் என்பதால் அவருக்கு ஒட்டு மொத்தக் கல்லூரி வட்டாரங்களில் முழு மரியாதை உண்டு. கலகலப்பாகப் பேசுவதில் மட்டுமல்ல, அன்பாகவும், இடமறிந்தும் பேசுவதிலும் அவர் வல்லவர் ஒரு முறை அவரைக் கோவில்பட்டி அருகில் உள்ள சிற்றூர்க் கல்லூரி ஒன்றில் இருந்து மாணவர் மன்ற நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றுவதற்காக அழைத்திருந்தார்கள். அவரும் புறப்பட்டுச் சென்றார். மாலை 6 மணிக்குத்தான் நிகழ்ச்சி. ஆனால் அவர் முன்னதாக மதியம் 3 மணிக்கே அங்கே சென்று விட்டார். அவரை வரவேற்ற மாணவக் கண்மணிகள், மாலைச் சிற்றுண்டிக்காக ஒரு சிறிய விடுதிக்குக் கூட்டிசென்றார்கள் அவர் வேண்டாம், போதும் போதும் என்று மறுக்க, விடாது நிறைய அயிட்டங்களுக்கு ஆர்டர் கொடுத்து விட்டார்கள் முதலில் மைசூர்பாகு வந்தது. செங்கல்லைவிடக் கடினமாக இருந்தது. இருந்தாலும் தன் பற்கள் உறுதியாக இருந்ததாலும், மாணவக் கண்மணிகள் மனது நோகக் கூடாது என்பதற்காகவும் மிகுந்த சிரமப்பட்டுக் கடித்துத் தின்று விட்டார். அதோடு விட்டிருக்கக்கூடாது. அங்கிருந்த மாணவ மணிகளில் ஒருவன் கேட்டான். "அய்யா, எங்களூர் மைசூர்பாகு எப்படியிருக்கிறது?" உடனே, என் மூத்த சகோதரர் சொன்னாராம்,"தம்பி மைசூர்பாகு நன்றாக இருக்கிறது. நான்தான் பத்து நாள் தாமதமாக வந்து விட்டேன்!" மைசூர்பாகு 10 நாள் அறுதப் பழசு என்பதை எப்படிப் போட்டார் பார்த்தீர்களா? விஷயம் அதோடு முடிந்து விடவில்லை! அதற்குப்பிறகு விடுதியைவிட்டு வெளியே வந்தவுடன், மாணவர்களில் ஒருவன் பக்கத்திலிருந்த பெட்டிக்கடை யொன்றிலிருந்து ஒரு சீப்பு வாழைப்பழத்தை வாங்கிக் கொண்டு வந்து, இரண்டு பழங்களை அதிலிருந்து பிய்த்துக் கொடுத்து அய்யா சாப்பிடுங்கள் என்றான். தோல் மட்டும்தான் மஞ்சள் நிறமாக இருந்த்தே தவிர, அவை சுத்தமான காய்கள். துவர்ப்பு வேறு. இவரும் சிரமப்பட்டு கொடுத்த இரண்டையும் சாப்பிட்டு முடித்தார். மைசூர்பாகிற்கு மறுமொழி கேட்டவனே மீண்டும் கேட்டான். "அய்யா எங்களூர் பழம் எப்படி இருந்தது? இவர் உடனே சொன்னார், "பழம் நன்றாக இருந்தது. ஆனால் நான்தான் நான்கு நாட்கள் முன்னாடியே வந்து விட்டேன்!" எப்படிச் சொன்னார் பார்த்தீர்களா? இப்படிப் பேசினால், பேசப் பழகிகொண்டால் இந்த நூற்றாண்டில் நமக்கு எந்தப் பிரச்சினையும் வராது! என்ன சொல்கிறீர்கள்?
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
கரி ரிசாசசா கரி ரிசாசசா கரி ரிசாசசா கரி ரிசாசசா அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ உலகத்திலே மிகப்பெரும் பூவும் நீயடி நதிகளிலே சஞ்சிர நதியும் நீயடி ஸ்தம்பித்தேனசி உன் பார்வையில் அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ சிரிப்பும் அழுகையும் சேறும் புள்ளியில் என்னை தொலைத்தேன் இசையும் கவிதையும் சேறும் புள்ளியில் கண்டு பிடித்தேன் கடல் காற்று நீ நான் பாய் மரம் (அனார்கலி..) இயந்திர மனிதனை போல் உன்னையும் செவேனே இரு விழி பார்வைகளால் உன்னையும் அசைப்பேனே அழகிக்கு எல்லாம் திமிர் அதிகம் அழகியின் திமிரில் ருசி அதிகம் அதை இன்று தானே உன்னிடம் கண்டேன் கவிஞனுக்குக்கெல்லாம் குறும்பு அதிகம் கவிஞனின் குறும்பில் சுவை அதிகம் அதை இன்று நானே உன்னிடம் கண்டேன் நடை நடந்து போகையில் நீல கடல் நீ நாணம் கொண்டு பார்கையில் நீ இலக்கியமானாய் (அனார்கலி..) நறுமணம் என்பதற்கு முகவரி பூக்கள் தானே என் மனம் என்பதற்கு முகவரி நீதானே என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம் முதல் வரி தந்த முகவரி நீ இருதயம் சொல்லும் முகவரி நீதான் இரவுகள் தோன்றும் கனவுக்கெல்லாம் இருப்பிடம் தந்த முகவரி நீ என்னிடம் சேறும் முகவரி நீதான் மழை துளிக்கு மேகமே முதல் முகவரி உன் இதழில் மௌனமே உயிர் முகவரியோ (அனார்கலி..) படம்: கண்களால் கைது செய் பாடியவர்: கார்த்திக் இசை: AR ரஹ்மான் வரிகள்: வைரமுத்து
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நன்றி ஈஸ் தகவலுக்கு.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: மார்கழி பூவே படம்: மே மாதம் இசை: ஏ.ஆர். ரகுமான் பாடலாசிரியர் :வைரமுத்து பாடியவர்: ஷோபா காவேரிக் கரையில் நடந்ததுமில்லை கடற்கறை மணலில் கால் வைத்ததில்லை சுதந்திர வானில் பறந்ததுமில்லை சுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லை சாலையில் நானாகப் போனதுமில்லை சமயத்தில் நானாக ஆனதுமில்லை" .சுந்திரமில்லாத வாழ்க்கையை வாழும் ஒரு மனிதனின் உணர்வுகளை இந்த வரிகள் மிக அற்புதமாக பிரதிபலித்தது.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஊ ல லல்லா படம்: மின்சார கனவு
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம் பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம் விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம் விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம் ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம் ம்ம்ம் பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம் பயணத்தில் வருகிற சிறுதூக்கம் பருவத்தில் முளைக்கிற முதல்கூச்சம் பரீட்சைக்குப் படிக்கிற அதிகாலை கழுத்தினில் விழுந்திடும் முதல்மாலை புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை அன்பே அன்பே நீதானே அடைமழை நேரத்தில் பருகும் தேநீர் அன்பே அன்பே நீதானே ம்ம்ம் தினமும் காலையில் எனது வாசலில் கிடக்கும் நாளிதழ் நீதானே பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம் பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம் தாய்மடி தருகிற அரவணைப்பு உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு தேய்பிறை போல்படும் நகக்கணுக்கள் வகுப்பறை மேஜையில் இடும்கிறுக்கல் செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம் அன்பே அன்பே நீதானே பிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும் அன்பே அன்பே நீதானே ம்ம்ம் எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை ரசிக்கும் வாசகன் நீதானே பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம் ஆஆஆ பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம் விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம் விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம் ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே ஆஆஆ பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
-
நகைச்சுவைக் காட்சிகள்
கவுண்டமணியின் "பூ மிதித்தல்" ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
நகைச்சுவைக் காட்சிகள்
மின்னல் படத்தில் இருந்து ரஜனி -- கவுண்டமணி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
உங்களுக்கு தெரியுமா?
ஈ - மெயில் வந்த பிறகு... சாதாரண தபால்களை எல்லாம் ஸ்னெயில் மெயில் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இந்த நத்தை அத்தனை சாதாரணமானது இல்லை. படா கில்லாடி. அதற்கென பல சிறப்பு தகவமைப்புகளைக் கொண்டது.இதனை வீட்டு தோட்டங்களிலும், வயல் வெளிகளிலும் பார்த்து இருக்கலாம். மோலஸ்க் பைலம் என்ற தொகுதியில் ஒரு வகையான கேஸ்ட்ரோபோட்ஸ் (gastropods.) என்ற வகையை சார்ந்தது தான் நத்தை.இதற்கு தூரத்து சொந்தம் ஆக்டோபஸ். கிரீக்கில் காஸ்ட்ரோ என்றால் வயிறு, போடோஸ் என்றால் கால்கள் , வயிற்றில் கால்களைக்கொண்டது என பொருள். நத்தை வயிற்றின் மீது தான் ஊர்ந்து செல்கிறது, அதன் வாயும் அங்கே தான் இருக்கிறது, தட்டு , ஸ்பூன் எல்லாம் வைத்து சாப்பிடாது, அதன் சாப்பாடே தட்டு தான் , எதன் மீது ஊர்ந்து செல்கிறதோ அதனை உண்ணும். நில நத்தைகள், கடல் நத்தைகள் என்று இரண்டு வகை உண்டு , வயல்களிலும் தோட்டத்திலும் காண்பது நிலவகை. முன்னால் இரண்டு நுகர் உணர்வு கொம்புகள் உண்டு அதன் முனையில் சக்திவாய்ந்த கண்கள் உண்டு!அவை ஊர்ந்து செல்லும் போது ஒரு கோழை படிவத்தை விட்டு செல்லும் அது எளிதாக நகர உதவுகிறது.மேலும் அதன் உடல் உலராமல் இருக்கவும் பயன்படுகிறது.கோடைகாலத்தில் நீண்டகால உறக்கத்தில்(hybernation) சென்று விடும் நத்தை அப்போது இந்த கோழைபடிவத்தை வைத்து தான் உடலை போர்த்திக்கொள்ளும். மீண்டும் மழை பெய்தவுடன் வெளிவரும். * ஒரு நத்தையால் கூர்மையான பிளேடு் ஒன்றின் விளிம்பில் கூட நகர்ந்து செல்ல முடியும் அத்தனை வலிமையானது அதன் பாதங்கள் மற்றும் அடிவயிறு! *மூல வியாதிக்கு நத்தை கறி சாப்பிடுவது இன்றும் இருக்கும் நாட்டு வைத்தியம்! * சில நத்தைகள் விஷத்தன்மை கொண்டது , பெப்டைட்(peptides) வகை விஷம்.அதிலும் கடலில் வாழும் கூம்பு வடிவ நத்தையின் கூம்பு வடிவ நத்தை (Conus magus,Conus geographus) விஷம் வீரியமானது அதன் இரைகளை விஷம் கொண்ட நாக்கால் அம்புவிடுவது போன்று விட்டு தீண்டி செயலிழக்க செய்து சாப்பிடும். அதன் விஷம் ஒரு வினாடியில் 10 இல் ஒரு பகுதி நேரத்தில் தாக்கி செயலிழக்க செய்யும், இயற்கை விஷத்தில் வேகமானது இது தான். ஆனால் மனிதர்களை தாக்குவதில்லை. தெரியாதனமாக நாமே கையால் தொட்டு கொட்டு வாங்கினால் உடல் உறுப்புகள் செயல் இழக்கப்படலாம்,மரணம் வெகு அரிதே! Conus magus Conus geographus * இந்த விஷத்தையும் விஞ்ஞானிகள் சும்மா விடவில்லை ஆராய்ந்து பார்த்து உடல் வலி நீக்கும் வலி நிவாரணி மருந்து கண்டு பிடித்து விட்டார்கள்.ரியால்ட் (Prialt ) என்று பெயர்.முதுகெலும்பு வலிக்கு நல்ல மருந்தாம். *நத்தைகளில் ஆண் பெண் என்று தனியே கிடையாது , ஒரு நத்தையிடமே ஆண்,பெண் பால் உறுப்புகள் (hermaphroditic.) இருக்கும். இரண்டு நத்தைகள் சேர்ந்தும் இனப்பெருக்கம் செய்யும், ஒரே நத்தையே அதன் ஆண்,பெண் உறுப்புகளைக்கொண்டு தனக்குள்ளேயே இனப்பெருக்கம் செய்ய முடியும்!
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது தாளாத பெண்மை வாடுமே.. வாடுமே.. (யாரது..) மார்கழி பூக்கள் என்னை தீண்டும் ஆ ஆ.. மார்கழி பூக்கள் என்னை தீண்டும் நேரமே வா தேன் தரும் மேகம் வந்து போகும் சிந்து பாடும் இன்பமே ரோஜாக்கள் பூமேடை போடும் தென்றல் வரும் பார்த்தாலும் போதை தரும் (யாரது..) தாமரை ஓடை இன்ப வாடை ஆ ஆ.. தாமரை ஓடை இன்ப வாடை வீசுதே வா பொன்னிதழ் ஓரம் இந்த நேரம் இன்ப சாறும் ஊருதே ஆளானதால் வந்த தொல்லை காதல் முல்லை கண்ணோடு தூக்கம் இல்லை (யாரது..) படம்: நெஞ்சமெல்லாம் நீயே இசை: சங்கர் கணேஷ் பாடியவர்: வாணி ஜெயராம்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீர ஆசையில்லையா? கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு மூட்டவில்லையா? (அழகிய அசுரா..) வட்ட வட்டமாக வானவில்லை வெட்டி குட்டி குட்டி மாலை ஆக்குவேன் புரவி ஏறி நீயும் என்னை அள்ளி கொண்டால் மூச்சு முட்ட முட்ட சொட்டுவேன் கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்று உன்னை அடைவேன் (அழகிய அசுரா..) கடல் நீலத்தில் கண்கள் கொண்ட பெண்ணிடம் செல்வம் சேரும் கருங்கூந்தலின் பெண்கள் தொட்ட காரியம் வெற்றி ஆகும் உச்சந்தலையில் உள்ள என் அர்ஜுனா மச்சம் சொல்லும் என்னை சேர்பவன் யாரும் அவன் சகலமும் பெற்று வாழ்வான் என்று (அழகிய அசுரா..) கனாவொன்றிலே நேற்று ரெண்டு பாம்புகள் பின்னே கண்டேன் நகம் பத்திலும் பூக்கள் மாறி மாறியே பூக்க கண்டேன் விழுகும் போதே வானில் ஏறி நட்சத்திரத்தை கண்டேன் நிகழும் யாது நன்றாய் தினம் நிகழ்ந்திட தானே நானும் கண்டேன் (அழகிய அசுரா..) படம்: விசில் இசை: D இமான் பாடியவர்: அனிதா சந்திரசேகர்
-
அதிசயக்குதிரை
உலகத்திலேயே மிகப்பெரிய ஆங்கில வார்த்தை எது தெரியுமா? தெரியாது SmileS எப்படி? முதல் எஸ்-சுக்கும் கடைசி எஸ்-சுக்கும் ஒரு மைல் தூரம் இருக்கு. அதான். ------------------------------------------------------------------------------------------------------------------------------------ டீச்சர் : நேற்று நான் சொன்னேன்ல. இன்றைக்கு உங்ககிட்ட ஜென்ரல் நாலேட்ஜ் பத்தி கேள்வி கேட்பேன் என்று. பப்பூ நீ சொல்லு, உன்னுடைய தலையில் எத்தனை தலை முடி இருக்கு? பப்பூ : 1,08,05,900 டீச்சர். டீச்சர் : பப்பூ நீ எப்படி எண்ணினாய்? பப்பூ : ஸாரி டீச்சர். இது அடுத்த கேள்விக்கான பதில். இந்த கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது டீச்சர். ------------------------------------------------------------------------------------------------------------------------------- பையன் : அப்பா உங்களால் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட முடியுமா? அப்பா : முடியுமே. ஈஸியா கையெழுத்துப் போடுவேன். பையன் : அப்போ என் ரிப்போர் கார்டில் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துக் போடுங்க. ------------------------------------------------------------------------------------------------------------------------------- . கடைக்காரர் : ஒரு ரூபாய்க்கு பத்து வாழைப்பழம். வாங்குபவர் : கொஞ்சம் குறைக்கக் கூடாதா? கடைக்காரர் : சரி ஐந்து வாழைப்பழம் எடுத்துக்குங்க.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: காதல் கொண்டேன் படம்: மனசு இரண்டும் பாடியவர்: சங்கர் மகாதேவன்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: அறித்தும் அறியாமலும் பாடல்: தீப்பிடிக்க
-
உங்களுக்கு தெரியுமா?
நாய்தான் நமக்கு சீனியர். நாய்தான் அழகுப் போட்டியில் நமக்கு சீனியர். முதல் முதல் அழகுப் போட்டி நாய்களுக்கிடையில் 1859 ம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்றது. அதற்குப் பிறகு 29 ஆண்டுகள் கழித்துத்தான் மனிதர்களுக்கிடையிலான அழகுப் போட்டி பற்றிய எண்ணம் யாருக்கோ வந்தது. முதல் முதலாக மனிதர்களுக்கிடையிலான அழகுப் போட்டி 1888 இல் பெல்ஜியத்தில் நடைபெற்றது
-
உங்களுக்கு தெரியுமா?
Cartoon எப்படி வந்தது..? இன்று பத்திரிகைகளில் வரும் Cartoon (கேலிச்சித்திரம்) எப்படி வந்தது என்று தெரியுமா? இத்தாலி மொழியில் Cartoon என்பது கெட்டியான காகிதத்தைக் குறிக்கும். கெட்டியான காகிதங்களில் தான் அப்போது அங்கே ஓவியங்கள் வரைவார்கள். 1921 ம் ஆண்டில் பிரிட்டனின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தை அலங்கரிக்க ஓவியர்களிடையே போட்டி ஒன்று நடாத்தப் பட்டது. அந்தப் போட்டிக்காக (கெட்டியான காகிதங்களில்) வரையப் பட்ட பல ஓவியங்கள் நிராகரிக்கப் பட்டன. கேலிச் சித்திரங்கள் போன்று இருந்த - நிராகரிக்கப் பட்ட சில ஓவியங்களை பஞ்ச் என்ற பத்திரிகை ஒன்று பஞ்ச் Cartoon என்ற தலைப்பில் ஒவ்வொன்றாகப் பிரசுரித்தது. காலப் போக்கில் இவ்வித கேலிச்சித்திரங்களுக்கு Cartoon என்ற பெயர் நிலைத்து விட்டது.
-
அதிசயக்குதிரை
குழாய் ரிப்பேர் . டாக்டர் ஒருவர் வீட்டில் குழாய் ரிப்பேர் ஆகி தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. இதனையடுத்து அவர் குழாய் ரிப்பேர் செய்பவரை வீட்டிற்கு வரவழைத்தார். குழாய் ரிப்பேர் செய்ய வந்த வாலிபர், ஐந்தே நிமிடத்தில் பழுதான குழாயை சரி செய்து விட்டார். டாக்டர் அவரிடம் எவ்வளவு ரூபாய் தரவேண்டும் என்றுகேட்டதற்கு வாலிபர் 500 ரூபாய் வேண்டும் என்றார். . இதைக்கேட்டு திகைத்துப் போன டாக்டர் 5 நிமிடத்துக்கு 500 ரூபாயா? டாக்டரான நானே இவ்வளவு பீஸ் கேட்பதில்லை என்றார். உடனே வாலிபர், அதற்கென்ன செய்வது? உங்களைப் போல நான் நோயாளியை மீண்டும் வரச்சொல்லி பீஸ் வாங்க முடியாதல்லவா? என்றார். --------------------------------------------------------------------------------------------------------------------------------------- மிஸ்டர் எக்ஸ் . மிஸ்டர் எக்ஸ் ஒருநாள் மருத்துவமனைக்கு சென்றார். அங்கிருந்த வரவேற் பாளினியிடம் மருத்துவர் இருக்கிறாரா? அவரை பார்க்க முடியுமா என்றார். கண்கள் உள்ள எல்லோருமே அவரை பார்க்க முடியும் என அந்த பெண் பதில் அளித்தார். கண் எனக்கு இருக்கிறதா என்பதில்தான் குழப்பம். அதனால்தான் மருத்துவரை பார்க்க வந்துள்ளேன் என்றார் மிஸ்டர் எக்ஸ். ஏன் இந்த குழப்பம் வந்தது என அந்தப் பெண் கேட்டார். எல்லா பொருளையும் என்னால் பார்க்க முடிகிறது. ஆனால் என் கண்ணை என்னால் பார்க்க முடியவில்லை என்றார். அதற்கு அந்த பெண் டாக்டரின் பீஸ் போர்டு தெரிகிறதா என்று கேட்டார். அதற்கு மிஸ்டர் எக்ஸ், இப்போது எனக்கு கண் தெரிகிறது என்பது தெரிகிறது என்றார். . ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------- மனநல மருத்துவர் . . மனநல மருத்துவர் ஒருவர் பொது நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்திருந்தவர்கள் மனநலம் தொடர்பாக அவரிடம் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்று கொண்டிருந்தனர். . அப்போது ஒரு பெண்மணி, ஒரு நபர் மனநலம் பாதிக்கப்பட்டிருக் கிறார் என்பதை எப்படி கண்டு பிடிப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த மருத்துவர் அனை வரும் எளிதாக பதிலளிக்கக் கூடிய கேள்விகளுக்கு கூட பதில் தெரியாதவர்கள் மனவளர்ச்சி குன்றியவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம் என்றார். இதற்கு அந்த பெண்மணி உதாரணம் கேட்க, மூன்று முறை உலகை வலம் வந்த கேப்டன் குக் எத்தனையாவது முறை உலகை வலம் வரும்போது இறந்து போனார் என்ற கேட்டார். அதற்கு அந்த பெண்மணி வேறு ஏதாவது கேள்வி கேளுங்கள். எனக்கு வரலாறு தெரியாது என்றார். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- கலப்படம் . ஓட்டல் ஒன்றில் முயல் கறியைக் கொண்டு விதவித மான உணவு வகைகள் தயாரித்து விற்கப்பட்டது. ருசியான அந்த உணவை சாப்பிடுவதற்காக பலரும் அந்த ஓட்டலுக்கு வரத் தொடங்கினார்கள். . வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதால், தேவையான அளவு முயல் கறி கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் ஓட்டல் முதலாளி, முயல் கறியில் கலப்படம் செய்து விற்பனை செய்து வந்தார். கலப்படம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டதால் அதிகாரிகள் அவரை கைது செய்தனர். முயல் கறியுடன் என்ன கலந்தீர்கள்? என்று அவரிடம் கேட்டனர். ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் குதிரைக்கறி சேர்த்தேன் என்றார் அவர்.
-
நகைச்சுவைக் காட்சிகள்
கொடிபறக்குது படத்தில் இருந்து காட்சி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்னிசைக்கும்(100!!) கிசானுக்கும் பிறந்ததின வாழ்த்துக்கள்.
-
அதிசயக்குதிரை
ஒரு நக்கல் பேர்வழி பற்றி? ஜார்ஜ் பெர்னாட்ஷா, மாமிசம் சாப்பிட மாட்டார்.மதுவும் அருந்த மாட்டார். இதைப் பத்தி கேட்டவர்கிட்ட பெர்னாட்ஷா சொன்ன பதில், நான் செத்த பிராணிகளை உண்பது இல்லை. என் முன்னோர்கள் என்னைப் போல பலருடைய பங்குகளைச் சேர்த்துக் குடித்து விட்டார்கள். அதனால் எனக்கு பங்கு இல்லாமல் போய் விட்டது. தாடி வைத்துக் கொண்ட இவர்கிட்ட நீங்கள் தாடி வளர்ப்பது லாபமான்னு ஒருத்தர் கேட்டாரு. நான் முகச்சவரம் செய்வதற்காக ஆகும் நேரத்தில் நிச்சயம் ஒரு நாடகமாவது எழுதிடுவேன்னாராம். ஆஸ்பத்திரிநர்ஸிங் ஹோம் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?ன்னு கேட்டவருக்கு பெர்னார்ட்ஷா சொன்ன பதில்... நோய் பாதி தீருவதற்கு முன்பே நடுத் தெருவுக்கு துரத்தி விட்டால் அது ஆஸ்பத்திரி. சாகும் வரை வெளியே அனுப்பாமல் இருந்தால் அது நர்ஸிங் ஹோம். ---------------------------------------------------------------------------------------------------- இரத்தத்துலயே ஊற வைக்க வேண்டிய விஷயம் எது? ஒருத்தர் தன்னோட ரெண்டு குழந்தைகளையும் கூட்டிக்கிட்டு விளையாட்டு அரங்கத்துக்கு போனாரு. டிக்கெட் கவுன்டருல போய் டிக்கெட் விலை என்ன?ன்னு கேட்டாரு. பெரியவர்களுக்கு ஐந்து ரூபாய். குழந்தைகளுக்கு ஆறு வயதுக்கு கீழ் டிக்கெட் இலவசம்ன்னு கவுண்டரில் இருக்கிறவரு சொன்னாரு. உடனே இவர் பெரிய பையனுக்கு ஏழு வயது ஆகிறது. எனக்கும் அவனுக்கும் மட்டும் இரண்டு டிக்கெட் குடுங்கன்னு சொன்னாரு. டிக்கெட் குடுக்கிறவரு. ஏற இறங்க பார்த்துட்டு. பையன பார்த்தா ஏழு வயசு மாதிரி தெரியலை. அவனுக்கு ஆறு வயசு தான் ஆகு துன்னு சொல்லியிருந்தால் நானும் விட்டிருப்பேன். உங்களுக்கு ஐந்து ரூபாய் மிச்சமாயிருக்குமேன்னு சொல்ல. அதுக்கு அப்பாக்காரர், நீங்க சொல்ற மாதிரி அவனுக்கு ஆறு வயசுன்னு சொல்லியிருந்தா, எனக்கு அஞ்சு ரூபாய் தான் மிச்சமாகியிருக்கும்... ஆனா அதோட அஞ்சு ரூபாய்க்காக நம்ம அப்பா பொய் சொல்றாரேன்னு என் மகன் என்னை அற்பத்தனமா நினைப்பான். இந்த அஞ்சு ரூபாயை மறுபடியும் சம்பாதிக்கலாம். ஆனா என் மகன் மனசுல இந்தக் கனவு வந்துட்டா, அதை கடைசி வரை எடுக்க முடியாதுன்னு நேர்மையா சொல்லிட்டுப் போனாரு.
-
அதிசயக்குதிரை
கலெக்டர் ஆகனும்னா ஐஏஎஸ் படி போலீஸ் ஆகனும்னா ஐபிஎஸ் படி ஆடிட்டர் ஆகனும்னா சிஏ படி எடிட்டர் ஆகனும்னா மாஸ் கம்யூனிகேசன் படி வீனாப் போகனும்னா என் எஸ்எம்எஸ் படி ஹா..ஹா..ஹா போய் வேலையப் பாருடா டுபுக்கு! =================== இந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பன்னு உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா? என்னது இல்லையா? அதுசரி, சும்மாவா சொன்னாங்க "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!!!" =================== உலகத்தில் பெரிய கேட் என்ன கேட்? உங்க கிட்னிய பயன்படுத்தி யோசிங்க இன்னுமா யோசிக்கிறீங்க சுத்த வேஸ்ட்டு நீங்க காலையில் தினமும் கண்விழித்தால் நான் கை தொடும் தேவதை எது? கோல்கேட்தான் வேறென்ன..! =================== வீர்சிங் விடியற்காலையில் எழுந்து மனைவியை சூரியன் தெரிகிறதா என்று பார்க்கச் சொன்னான். அவன் மனைவி பார்த்துவிட்டு பார்க்க முடியவில்லை ஒரே இருட்டாக இருக்கிறது என்றாள். உடனே வீரு முட்டாள் டார்ச் அடித்து நல்லா பாரு.....
-
உங்களுக்கு தெரியுமா?
பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள் உலக அளவில் புகழ்பெற்று அவர்கள் இறந்தும், இறவாப் புகழுடன் வரலாற்றில் இடம்பிடித்துள்ள எத்தனையோ பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள் சாதாரண மனிதர்களாகத்தான் இருந்துள்ளனர். இதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன. அதில்...வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார். தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார். பெஞ்சமின் பிராங்ளின் தந்தை மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்துள்ளார். பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டிட கூலித் தொழிலாளி. ஆபிரகாம் லிங்கத்தின் அப்பாவோ சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் அப்பா சாதாரண வியாபாரிதான். ஆங்கில அகராசியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சனின் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த புத்தக வியாபாரியாவார். மொழிகளைத் தாண்டி உலக மக்களையே சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் தந்தை வீட்டு வேலைக்காரராக இருந்துள்ளார். எனவே நாம் இருக்கும் இடம் வேண்டுமானால் கீழே இருக்கலாம். ஆனால் இருக்கப் போகும் இடம் மிக உயர்ந்ததாக இருக்க நாம் தான் முயல வேண்டும். பெற்றவர்களின் வழிகாட்டுதல் எத்தனை பேருக்குக் கிடைக்கும். மேற்கண்டவர்களுக்கெல்லாம் அவர்களது அப்பாக்களின் வழிகாட்டுதல் இருந்திருக்குமா என்ன? அவர்களாகவே அவர்களுக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளனர். எனவே நாமும் நமது முன்னேற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வைப்போம். webdunia
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா? பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா அன்பே உந்தன் பேரைத்தானே விரும்பிக் கேட்கிறேன்..! போகும் பாதை எங்கும் உன்னைத் திரும்பிப் பார்க்கிறேன்..! (வீசும் காற்றுக்கு...) என்னையே திறந்தவள் யாரவளோ? உயிரிலே நுழைந்தவள் யாரவளோ? வழியை மறித்தாள்.. மலரைக் கொடுத்தாள்.. மொழியைப் பறித்தாள்.. மௌனம் கொடுத்தாள்.. மேகமே மேகமே அருகினில் வா.. தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா.. (வீசும் காற்றுக்கு...) சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்.. அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்... விழிகள் முழுதும்.. நிழலா இருளா.. வாழ்க்கைப் பயணம் முதலா முடிவா.. சருகென உதிர்கிறேன் தனிமையிலே.. மௌனமாய் எரிகிறேன் காதலிலே.. (வீசும் காற்றுக்கு...) மேகம் போலே என் வானில் வந்தவளே.. யாரோ அவள்.. நீதான் என்னவளே.. மேகமேக மேகக்கூட்டம் நெஞ்சில் கூடுதே.. உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி மின்னல் ஓடுதே.. (வீசும் காற்றுக்கு...) படம்: உல்லாசம் இசை: கார்த்திக் ராஜா பாடியவர்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
டிங் டொங் கோவில் மணி