Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
ஒர் இடத்தில் நில்லாமல் நான் மிதக்க வானகத்தில் எங்கேயோ நான் பறக்க படம்: நீயா இசை: சங்கர் கணேஸ் பாடியவர்கள்: எஸ்.பி.பி
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
Movie Name: Kalvannin Kaadhali (2005) Singer: Madhumitha, Vijay Yesudas Music Director: Yuvan Shankar Raja Year: 2005 Producer: Lakshman Director: Tamil Vannan Actors: Nayanthara, Surya (Music) Male: Tajmahal oviya kadhal! Devadas kaviya kadhal! Thani ragam entha kadhalthan! Desam Than Pesum Ethiyae! Entha urav...u eruthi varikum! Irivan pol enga vazhum erunthidum jenmam eza...,ezalum....! Perivu Ellayae! Uthadu ellam unathu peyare! (Music) ohhhh.........Unai vida oru mugam, enakilai arimugam! Female: ohhhhhhh...........eval undhan thirumadhi, iravanin vidhi padi! Male: Nee matum illai enral nirka tthen then muchu! Female: Nanum than unai pola! enum enna pechu? Male: Kalyan thethi! Karkandu seithi! Kathoram nee sol Thoz.......hi......! Female: Ohhhhhhhh..............neram Malai........ Podum........ Velai.........kanna un kayil than Male: Tajmahal oviya kadhal! Devadas kaviya kadhal!Than........... (Music) Male: Ohhhhhhhh...............Thalai mudhal,kal varai thzuvava oru murai? Female: Parakumo thee pori! Pariyumo naga kuri! Male: Kel malai anganga nan konjam,konjam killa! Female: Kuchangal thalamal nan thondil menai thula! Male: Van mazahi nerum, Vadi dum verum, Onraga koodum neram........... Female: ohhhhhhhh............oho...oho... Male: Tajmahal oviya kadhal! Devadas kaviya kadhal! Female: Thani ragam indha kadhal than! Male&Female: Desam Than....... pesum idayae! Intha uravu....... iruthi varaikum ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: உன்னை தான் உன்னை தான் இசை: பரத்வாஜ் படம்:வல்லமை தாராயோ ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
லா லா என்று முடியும் இந்தப் பாட்டை ஒரு சவாலுக்காகக் கண்ணதாசன் எழுதினார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். லாவ வேண்டுமென்பதற்காக வெறுமனே வார்த்தைகளை இட்டு நிரப்பாமல் அழகான வரிகளுடன் எழுதியிருக்கிறார் கவியரசர். மெல்லிசை மன்னரின் இசையில் பாலுவின் குரல் பாடலுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது. நடுநடுவே இழுத்துக்கொண்டு போகும் ஒற்றை வயலினின் இசை.. கேட்டுப் பாருங்களேன். வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா பொன்னிலா பட்டிலா புன்னகை மொட்டிலா அவள் காட்டும் அன்பிலா இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா தீதிலா காதலா ஊடலா கூடலா அவள் மீட்டும் பண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன் அதைச் சொல்வாய் வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா..
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: தென்றலுக்கு நீ படம்: அறை எண் 305ல் கடவுள்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: முத்து பாடல்: ஒருவன் ஒருவன் இசை: இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே விடியும் பூமி அமைதிக்காக விடிகவே மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே மலர்கள் சோம்பல் முறித்து எழுகவே குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில் உலகம் விடியட்டுமே! பிள்ளையின் சிறுமுக சிரிப்பில் (வெள்ளைப் பூக்கள்) காற்றின் பேரிசையும் மழை பாடும் பாடல்களும் ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ! கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும் துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ! (வெள்ளைப் பூக்கள்) எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே! எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே! (வெள்ளைப் பூக்கள்) படம்: கன்னத்தில் முத்தமிட்டால் பாடல்: வைரமுத்து இசையமைத்து பாடியவர்: ஏ.ஆர்.ரஹ்மான்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
ஒற்றைக்கண்ணால உன்னைப் பார்த்தேனடி ஒறங்கவில்ல என் மனசு ஓரக்கண்ணால என்னைப் பார்த்தாயடி ஒறங்கவில்ல என் மனசு புரியலையே புரியலையே நீ யாருன்னு புரியலயே தெரியலையே தெரியலையே இது காதல் தான்னு தெரியலயே புரியாத பொண்ணப் பாத்தா புதுசாத் தான் காதல் பூக்குதே காதல் பூக்குதே ஹே ஹே ஹே (ஒற்றைக் கண்ணாலே) சாலையோரப் பூக்கள் எல்லாம் உன்னைப் பார்த்து விழுகிறதே மாலை நேரப் பட்டாம்பூச்சி உன்னைப் பார்க்கத் துடிக்கிறதே நித்தம் நித்தம் உன்னை நினைத்து ரத்தம் எல்லாம் கொதிக்கிறதே உன்னை உன்னை நெருங்கும் போது அத்தனை நரம்பும் வெடிக்கிறதே பெண்ணே உன் கால்தடங்கள் மண்மீது ஓவியமாய் கண்ணே உன் கைநகங்கள் விண்மீது வெண்பிறையாய் தெரியாத பெண்ணைப் பாத்தால் தெரியாமல் காதல் பூக்குதே காதல் பூக்குதே (ஒற்றைக் கண்ணாலே) கோடைக்காலச் சாரல் ஒன்று என்னை விரட்டி நனைக்கிறதே காலை நேரம் காலைத் தொட்ட பனித்துளி கூட சுடுகிறதே மலரே மலரே உந்தன் வாசம் எந்தன் நெஞ்சை உடைக்கிறதே அழகே அழகே உந்தன் பார்வை என்னைக் கட்டி இழுக்கிறதே பெண்ணே உன் வாய்மொழிகள் நான் கண்ட வேதங்களா கண்ணே உன் ஞாபகங்கள் நான் கொண்ட சாபங்களா அறியாத பெண்ணைப் பார்த்தால் அறியாமல் காதல் பூக்குதே காதல் பூக்குதே (ஒற்றைக் கண்ணாலே)
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கற்றாளை கண்ணாலே படம்:அஞ்சாதே இசை: சுந்தர் சி.பாபு பாடியவர்: நவீன் மாதவ்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: இது என்ன மாயம் படம்: ஓரம் போ பாடியவர்கள்: சங்கர் மஹாதேவன், அல்கா யக்னிக் இசை: ஜி.வி.பிரகாஷ் ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு ஓர் பாடல் என அவ்வப்போது திரும்ப வைப்பவர். அதிலும் அந்த ஒரு பாடலை மிக அற்புதமாக இயற்றி அனைவரது புருவத்தையும் உயர்த்த வைப்பவர். உதாரணமாக 'வெயில்' படத்தில் இடம் பெற்ற 'உருகுதே' பாடலையும், 'பொல்லாதவன்' படத்தில் இடம்பெற்ற 'மின்னல்கள்' பாடலையும், 'கிரீடம்' படத்தில் இடம்பெற்ற சில பாடல்களையும் குறிப்பிடலாம். அவ்வகையில் இப்பாடலையும் சேர்க்கலாம். ஆனால் அவர் இயற்றிய பாடல்களில் 'உருகுதே' பாடலுக்கு நிகரான, ஏன், அதனை விட ஒரு படி சிறந்த பாடல் என இப்பாடலினைக் குறிப்பிடலாம். 'ஓரம்போ' பாடலை முன்பு பலமுறை கேட்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அதில் விஜய. டி. ராஜேந்தர் பாடிய 'கண் கணபதி' பாடலைத் தான் விரும்பி கேட்டிருக்கிறேன். ஆனால் இப்பாடலினை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இப்பாடலினை மிக தாமதமாக தான் தெரிந்து கொண்டேன். சமீபத்தில் இப்படத்தினை பார்க்கும் போது, இப்பாடல் மீண்டும் ஞாபகத்திற்கு வந்தது. என்ன ஒரு அற்புதமான பாடல்! படம் முடிந்ததும் இப்பாடலைத் தேடிப் பிடித்து கேட்டேன். என்ன ஒரு அற்புதமான பாடல்! ஆரம்பத்தில் வரும் அற்புதமான பியானோ இசையை தாண்டி, சங்கர் தனது அற்புதமான குரலினால் 'இது என்ன மாயம் இது எது வரை போகும்' என்று பாடி கட்டிப் போடுகிறார். பாடலுக்கு அழகே பல்லவி தான். ஓவ்வொரு வரியும் ஒரு விதமான சிறப்பினைக் கொண்டிருக்கிறது. அவ்விரண்டு வரியினைத் தாண்டி வரும் வரிகளும் அவற்றில் ஒலிக்கும் ராகமும் அற்புதமாக இருக்கிறது. கனவுகள் வருவதால் கலவரம் விழியிலே தினசரி புதுப்புது அனுபவம் எதிரிலே உலகமே........... என்று சங்கர் மகாதேவன் அவ்வரியை முடிக்கும் போது, அல்கா யக்னிக் 'உன்னால் இன்று புதியதாய்' அவருடன் சேரும் போது, கேட்கும் நமக்கு ஓர் ஆனந்த மயக்கமே ஏற்படுகிறது. 'உணர்கிறேன்' என்று சங்கர் மீண்டும் பாட உற்சாகத்தை முழுவதாய் என்று அல்கா யக்னிக் மீண்டும் சேர, அற்புதம் தான்... என் வானத்தில் சில மாற்றங்கள் வெண்மேகத்தில் உன் உருவங்கள் என் காற்றிலே உன் சுவாசங்கள் நான் பறந்து போகிறேனே நான் கேட்கும் போது பறந்து தான் போனேன். நாட்கள் பலவாகி விட்டன. இது போன்ற உற்சாகமான, காதல் பாடலைக் கேட்டு. ஜி.வி.பிரகாஷிற்கு மிக்க நன்றி. சங்கருக்கு அவ்வப்போது இது போன்ற நல்ல பாடல்கள் கிடைப்பதில் எனக்கு மகிழ்ச்சி
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: சொல்லதான் நினைக்கிறேன் படம்: காதல் சுகமானது ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடலைப் பாடியவர்: சங்கீதா ராஜேஸ்வரன் தொடர்: காதலிக்க நேரமில்லை. பாடல்: என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு காதலனை எண்ணி, எண்ணி காதலி பாடும் படியாக இப்பாடல் அமைந்துள்ளது. இத்தனைக்கும் ஒரு சரணம் மட்டும் தான் இப்பாடலில். ஆனாலும் அட்டகாசம்! அற்புதம். என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன் செல்லரிக்கும் தனிமையில் செத்து விடுமுன் செய்தி அனுப்பு என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும் உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு என்ற எட்டுவரிகளை அட்டகாசமான ராகத்தில் பாடி விட்டு அனுப்புபுபு ஹோ ஓஓஓஒ என்று தொடர்ந்து பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன் மரங்கள் கூட நடப்பது போலே நினைத்துக் கொல்கிறேன் கடிதம் ஒன்றில் கப்பல் செயுது மழையில் விடுகிறேன் கனவில் மட்டும் காதல் செய்து இரவில் கொல்கிறேன் மேற்கண்ட வரிகளை பாடும்போது, நம்மையே மறக்க செய்கிறார் பாடகர். அற்புதம்! சரணத்திற்கு முன்பாக வரும் அந்த ஆலாபனையும் நன்றாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, சரணம் மிக இனிமையாக இருந்தாலும், பல்லவி அளவிற்கு இனிமை அல்ல. ஆனாலும் பாடகி, தனது வித்தியாசமான குரலினால் அங்கேயும் கவர்கிறார். உதாரணத்திற்கு 1:40-ல் யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ உன் கனவினில் நிறைவது யாரோ என் சலனங்கள் தீர்த்திட வாராயோ ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ ஒரு பகல் எனை சுடுவது ஏனோ அதிலும் அந்த ஏனோ (1:53) என்ற வார்த்தைக்கு ஓர் நீட்டத்தைக் கொடுத்து அதனை இனிமையாக்கிய விதமே தனி தான். விஜய் ஆண்டனிக்கும் நன்றி.
-
அதிசயக்குதிரை
நூறு தேங்காய் உடைக்கிறேன் 2008 ஜூலை ------------ இது வரை காவல் நிலையத்தின் வாசலையே மிதித்திராத பழனி, இன்று முதன் முறையாக அதை செய்ய வேண்டியதாகி விட்டது. தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்து, முதன் வரிசையில் அமர்ந்திருந்தவரின் அருகில் நடுக்கத்துடன் சென்று, தனக்குக் கூட கேட்காத வகையில் "சார்", என்று அழைத்தான். "இம்..." "" "என்ன விசயம்?" "சார்... கிட்னி ஆப்பரேஷன் பண்ணனும்...." "கிட்னி ஆபரேஷனா? அந்த செக்ஷன் போ...." பத்தடி நடந்து, பக்கத்தில் காவலர் காட்டிய பகுதிக்கு சென்றான் பழனி.. "சார்..." "என்ன விசயம்?" "சார், கிட்னி ஆப்பரேஷன் பண்ணனும்...." "கிட்னி ஆப்பரேஷனா? யாருக்கு?" "எங்க அப்பாவுக்கு..." "எந்த ஆஸ்பிட்டல்?" "கிட்னி கேர் ஆஸ்பிட்டல் சார்..." "கிட்னி கேர் ஆஸ்பிட்டல். இம். என்னைக்கு ஆப்பரேஷன்?" "அடுத்த வாரம் சார்..." "அடுத்த வாரமா? அடுத்த வாரம் ஆப்பரேஷனை வச்சுக்கிட்டு சாவகாசமா வர்ற?" "சார் போன வாரம் தான் ஆப்பரேஷன் பண்ணுறதா முடிவெடுத்தோம்.... இப்ப தான் டோனர் கிடைச்சாங்க...." "யாரு டோனர்?" "என்னோட பிரண்டுக்கு தெரிஞ்சவங்க..." "தெரிஞ்சவங்கன்னா? யாரு.. அவர் பொண்டாட்டியா?" "இல்ல சார்... அவனோட சொந்தக்காரங்க..." "என்ன சொந்தம்? அவர் ஏன் உங்களுக்கு டொனேட் பண்ணனும்..." "அவர் எங்களுக்கு ரொம்ப நாள் பழக்கம்.. எங்கப்பாவுக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். அதனால அவரே கொடுக்குறதா சொல்லியிருக்கார்." "சரி சரி... இந்த பார்மை பில்லஃப் பண்ணிக் கொடுத்துட்டு அடுத்த வாரம் வா." "சார் அடுத்த வாரமா? புதன்கிழமை ஆப்பரேஷன் சார்..." "அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? பார்மாலிட்டிஸ் எல்லாம் முடிக்க ஒரு வாரம் ஆகுமே..." "சார் நீங்க கொஞ்சம் மனசு வச்சா?" "உங்கப்பா ஒருத்தர் தான் பேசண்டா? ஊர்ல எத்தனை பேசண்ட் இருக்காங்க.. அவங்க எல்லாரையும் பார்க்க வேண்டாமா? " "சார் வேணும்னா, டோனரை இங்கேயே கூட்டிட்டு வர்றேன் சார்..." "இது என்ன ஸ்கூல் பசங்ககிட்ட, யார் மிட்டாயை தின்னான்னு கேட்குற சமாச்சாரமா? உயிர் சமாச்சாரம்... அதுவும் இல்லாம, நீ கூட்டிட்டு வர்றவர் தான் அந்த ஆளுன்னு எப்படி எனக்கு தெரியும்? நாங்க என்கொயரி எல்லாம் பண்ணி முடிக்க ஒரு வாரம் என்ன ரெண்டு வாரமே ஆகும்... அதனால நீ போய்ட்டு அடுத்த வாரம் வா..." "சார்..." "சுந்தரம்...", என்று அந்த அதிகாரி அருகில் இருந்த நபரை அழைத்தார். "சார்", என்று வந்து நின்றார் ஓர் கான்ஸ்டபிள்... "இந்த ஆளை கூட்டிட்டு போங்க..." சுந்தரத்துடன் சென்ற பழனி மீண்டும் திரும்ப அதே அதிகாரியிடம் வந்தான்.. "என்ன பேசுனீங்களா" "பேசுனேன் சார். சார்... பத்தாயிரம் கொஞ்சம் ஜாஸ்தி தான் சார்" "பத்தாயிரம் ஜாஸ்தியா? கிட்னி ஆப்பரேஷன் என்ன கவர்ண்ட்மெண்ட் ஆஸ்பிட்டல்லயா பண்ணுறீங்க? 'கிட்னி கேர்' ஆஸ்பிட்டல்ல தானே? அங்க என்ன ஓசிக்கா பண்ணுறாங்க?". யோசித்தபடியே நின்றான், பழனி. "அதுவுமில்லாம இதுல எவ்வளவு சட்ட சிக்கல்கள் இருக்கு. ஒழுங்கா என்கொயரி முடியனும்னா ஒரு மாசம் கூட ஆகலாம். அது வேற என்கொயரி ரிசல்ட் பாசிட்டிவா வரும்னு கூட சொல்ல முடியாது" "சார்" "கிட்னி கொடுக்குறதுக்கு பெரிய மனசு வேணும். சும்மா, வேண்டப்பட்டவங்க, பிரண்டோட பிரண்டு எல்லாம் யாருங்க இங்க கிட்னி கொடுக்குறாங்க? சொந்த புள்ளை கூட கொடுக்க மாட்டான். அதனால சும்மா கதையடிக்கிறத விட்டுட்டு காசை கொடுத்திட்டு போங்க" "சரி சார்", என்று மண்டையை ஆட்டி, காசை கட்டி விட்டு வந்தான், பழனி. 2008 டிசம்பர்: ----------- 'இம் என்ன கேசு?' 'ஆப்பரேஷன்' 'இம்.. என்ன கிட்னியா, ஹார்டா, லிவரா?' 'கிட்னி சார்...' 'வாங்குறீயா, கொடுக்குறீயா?' 'வாங்குறேன் சார்...' 'இம்.. கிட்னின்னா 20000 ரூபாய் ஆகும்..' 'சரி சார், ஏற்பாடு பண்ணிடலாம் சார்... ' 'சரி போய்ட்டு, அப்புறம் டோனரை வரச்சொல்லுங்க.. அவர்ட்ட என்கொயர் பண்ணிட்டு சைன் போட்டு அனுப்புறேன்..' 'ரொம்ப நன்றி சார்...' மாலை ------ "நீங்க தான் பழனி அப்பாவுக்கு கிட்னி கொடுக்குறீங்களா?" "ஆமா சார்..." "பத்து ரூபா கொடுத்துடுங்க" "சார்." "என்ன யோசிக்குறீங்க?" "பத்தாயிரத்து நான் எங்க சார் போவேன்" "சும்மாவா கிட்னிய நீ கொடுக்க?. காசு வாங்குறேல?" "சார்.. என் கடனை அடைக்கிறேன்னு சொல்லியிருக்காங்க" "அது மட்டுமா? கைல 50000 ரூபாய் தர்றேன்னு சொல்லியிருக்கார்ல" "சார்.." "ரொம்ப யோசிக்காத... நான் என்ன எல்லா பணத்தையுமா கேட்டேன். 10 ரூபாயை கொடுத்திடு.. மிச்சத்தை நீயே வச்சுக்க... எல்லாரும் நல்லா இருக்கலாம்.. " "" 2009 டிசம்பர் ------------- காவல் நிலைய வளாகத்தின் இடது புறத்தில் தனது ஸ்விஃப்ட் காரை நிறுத்தி விட்டு, காரில் இருந்து இறங்கினான், மாதவன். அப்போது, இருவர் அவன் அருகில் வந்து. "சார் எதுவும் ஆப்பரேஷன்?" "ஆமா, என் அண்ணனுக்கு. கிட்னி ஆப்பரேஷன்", என்றான் மாதவன். "ஒண்ணும் கவலைப்படாதீங்க சார். மொத்தமா 30000 ரூபாய் கொடுத்திடுங்க.. சாயங்காலமே எல்லாத்தையும் முடிச்சிடுலாம். நீங்க யார்கிட்டேயேயும் போய் அலைய வேண்டாம். நாங்களே எல்லாம் பார்த்துக்குறோம்" 2010 ஜூலை ----------- ஒரு போலீஸ்காரர், வீட்டிற்கு அருகில் உள்ள பிள்ளையார் கோயிலில்... 'கணேஷா. உன்னை தான் மலை போல் நம்பியிருக்கேன். இந்த வருஷமாவது என் வாழ்க்கையில கண்ணை துறப்பா... இந்த குற்றப்பிரிவில இருந்து எப்படியாவது உடல் உறுப்பு தானம் பிரிவுக்கு எப்படியாது Transfer வாங்கி கொடுத்துடுப்பா. உனக்கு 100 தேங்காய் உடைக்கிறேன்' ==================================================== செய்தி: கிட்னி தானம் போலீஸ் அனுமதி கட்டாயமாகிறது. குறிப்பு: போலீஸ் துறையினரில் பலர் கடமை தவறாமல் பணி புரிகிறார்கள் என்பதனை அறிவேன். இது நகைச்சுவைக்காக(?) மட்டும் எழுதப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இது போன்ற ஓர் நிலைமை வந்து விடக்கூடாது என்பதே எனது ஆவல்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:நறும் பூக்கள் தேடும் திருத்தும்பியே படம்: உற்சாகம் பாடியவர்: ஹரிஹரண் இசை: ரஞ்சித் பரோர் ரகுமான் தரத்திற்கு இணையாக, ரஞ்சித் பரோர் இசையமைத்திருக்கிறார். ரஞ்சித் பரோர், ஏற்கனவே 'வி.ஐ.பி'-யில் நல்ல பாடல்களைக் கொடுத்திருந்தாலும் அதன் பிறகு தமிழில் இசையமைக்கவில்லை. ஏனோ தெரியவில்லை. ஆனால், உற்சாகத்தில், விஐபி-யை விட அற்புதமான பாடல்கள். . இப்பாடலில் அனைத்துமே சிறப்பாக வந்துள்ளது. இசை, ஹரிஹரன் மற்றும் நந்தினியின் மயக்கும் குரல், வைரமுத்து அவர்களின் வரிகள். எத்தனை அற்புதமான வரிகள்! 'ஒரு பூவினோடு ஒரு வாசம் தானே கொடியோடு யாம் கண்டனம் வெவ்வேறு பாகம் வெவ்வேறு வாசம் நின்னோடு யாம் கண்டனம்' அற்புதமான வரிகள், ராகம்! மிகச் சிறப்பு. பல்லவியில் முதல் சில வரிகள் முடிந்ததும், 'கொதித்தாடுதே குழைந்தாடுதே' (1:08) என்று நந்தினி மயக்கும் குரலால் பாடுவதும், அதன் பின்னணியில் அற்புதமான வயலினும் அற்புதம். அதே போல் 'உள்ளாவியை நீ தீண்டாவே காற்றாக வா தலைவா'(4:20) வரியில் வரும் ராகமும், வயலின் இசையும் தேன். நந்தினி இவர் குரலில் பாம்பே ஜெயஸ்ரீயின் தாக்கம் தெரிகிறது. மொத்தத்தில் சிறந்த பாடல்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: யாரடி நீ மோகினி பாடல்: ஓ பேபி ஓ பேபி தெலுங்கு மொழியில்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: யாரடி நீ மோகினி இசை: யுவன் சங்கர் ராஜா பாடல்:எங்கேயோ பார்த்த மயக்கம்
-
அதிசயக்குதிரை
இந்த உலகத்துலேயே பாவப் பட்ட ஜீவன்கள் யாருன்னா அது இந்திய பஸ் பயணிகள்தான்..! பாருங்களேன்.. நாம பஸ் ஏற நின்னா, ஒன்னும் வராது..ஆனா எதிர் திசையிலே 100 பஸ் போகும். அதுவும் அரைவாசி காலியா..! இன்னொரு அநியாயமும் இருக்கு.. வீட்டிலே பழய சாதத்தை தின்னு, வெட்டியா கொட்டாவி வுட்டுட்டு உக்காந்து இருக்கறப்போ பாருங்க.. எல்லா வண்டியும் காலியா போகும்..என்னைக்காவது அவசரமா, அவசியமா நாம பிரயாணம் கெளம்புனோமுன்னா..அன்னிக்கு உலகச் சனத்தொகையே ஒன்னா கெளம்பும்..நம்மளோட..!! தொண்டு கிழம் கூட தொங்கிக்கிட்டு வரும்..பொம்பளப்புள்ளைங்க கூட புட் போர்டு அடிக்கும்..! இது இப்புடியா..? ஒரு வழியா உள்ளே சொர்க்க வாசல்லே புகுந்துட்டோம்ன்னு வைங்க.. எல்லா சீட்டும் காலியா இருக்கும்..ஆனா இட ஒதுக்கீடு நடந்து முடிஞ்சிருக்கும்..பை..குடை..கை
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: தசாவதாரம் பாடல்: முகுந்தா முகுந்தா பாடியவர்கள்: ஸெரியா கோசல், கமல்
-
நகைச்சுவைக் காட்சிகள்
அசத்தப்போவது யாரு
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: அடடா அடடா அடடா படம்:சந்தோஸ் சுப்பிரமணியம் பாடியவர்: சித்தார்த் இசை: தேவி ஸ்ரீபிரசாத் அடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய் அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய் கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய் எதிரில் நீயும் வந்தால் என் உயிரை கேட்கிறாய் அடி உன் முகம் கண்டால் என் இமை ரெண்டும் கைகள் தட்டுதே (அடடா..) நீயும் நானும் ஒன்றாய் போகும் போது நீளும் பாதை இன்னும் வேண்டுமென்று நெஞ்சம் ஏங்குதடி வானவில்லாய் நீயும் வந்தபோது எந்த கறுப்பு வெள்ளை கண்கள் ரெண்டும் கலராய் மாறுதடி என் வீட்டு பூவெல்லாம் உன் வீட்டு திசை பார்க்கும் உன் வாசம் உன் வாசம் எங்கேன்னு கேட்குதடி (அடடா..) ஏ வானம் மீது போகும் மேகமெல்லாம் உனது உருவம் போல வடிவம் காட்ட கண்கள் ஏங்குதடி பூவில் ஆடும் பட்டாம் பூச்சி கூட நீயும் நடந்துக்கொண்டே பறந்து செல்லும் அழகை ரசிக்குதடி உன் செய்கை ஒவ்வொன்றும் என் காதல் அர்த்தங்கள் நாள்தோறும் நான் சேர்க்கும் ஞாபக அர்த்தங்கள் (அடடா..)
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: இதயம் இடம் மாறியதே படம்: Jodhaa Akbar இசை: ஏ.ஆர்.ரகுமான்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: Jodhaa Akbar பாடல்: முழுமதி அவளது இசை: ஏ.ஆர்.ரகுமான்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: சச்சின் பாடல்: கண்மூடி தூங்கும்போது ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: நிலவு பாட்டு படம்:கண்ணுக்குள் நிலவு குரல்: கரிகரன் நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு…ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்…நானும் படித்தேன் நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன் நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன் அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன் கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம் மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம் குயில்கள் மலர்கள் அதிசயம் கனவுகள் கவிதைகள் ரகசியம் நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன் நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே மழை வந்து நனைத்தது இசையன்னை செவியிலே கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை விழிகளில் விரிகிறாள் யாரந்தத் தாமரை இது ஒரு புதுவிதப் பரவசம் மயக்குது இசையென்னும் அதிசயம் நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன் அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன் நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
-
தமிழீழ பாடல்கள்
விழி ஊறி நதியாகி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">