Everything posted by nunavilan
-
நகைச்சுவைக் காட்சிகள்
கவுண்டமனி -- செந்திலின் நகைசுவை
-
நகைச்சுவைக் காட்சிகள்
வடிவேலுவின் நகைசுவை காட்சி
-
நகைச்சுவைக் காட்சிகள்
"கலக்கப்போவது யாரு" நிகழ்ச்சியில் வடிவேலாக நடிக்கும் வடிவேலு கணேசன்.
-
நகைச்சுவைக் காட்சிகள்
அமெரிக்கா பற்றி ஒரு நகைசுவை பாடல் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
அதிசயக்குதிரை
நையாண்டி : பாட்டுக்கு பாட்டு (பின் பாட்டு) - கோவி.கண்ணன் [geekay@singnet.com.sg] தேர்தல், தேர்தல் ! சோர்ந்து போய், நம் அரசியல்வாதிகள் எல்லாம் ஒரே இடத்தில் தற்செயலாக சந்தித்துக் கொள்கிறார்கள். ஆவலுடன் பார்த்த திருவாளர் பொதுஜெனங்கள் எல்லோரும், கூட்டாக சேர்ந்து, அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார்கள். அதாவது, திருவாளர் பொதுஜெனம்: அன்பார்ந்த அரசியல்வியாதி, மண்ணிக்கவும் அரசியல்வாதி தலைவர்களே, உங்களையும் உங்கள் கூத்தணியையும், மறுபடியும் மண்ணிக்கவும் கூட்டணியையும் நாங்கள் பார்த்து கொண்டிருக்கிறேம், வரும் தேர்தலுக்கும் பின் உங்களில் யார் சிரிப்பீர்கள், யார் அழுவீர்கள் என்பது உங்களுக்கு தெரியாது, அதனால் இன்று நீங்களும் மகிழ்ந்து, எங்களையும் மகிழ்விக்க வேண்டுமென்பது எங்களின் விருப்பம். அதற்கு ஒரு யேசனையை முன்வைக்கிறோம் என்று நிறுத்துகிறார்கள். தமிழக முதல்வர் ஜெ: என் ரத்திதின் ரத்தமான, என் அன்பு செல்வங்களே, உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மாவிடம் உங்களுக்கு தயக்கம் வேண்டாம், அதைப்பார்த்து தாங்காது இந்த தாய் மனசு, உடனடியாக சொல்லுங்கள். கலைஞர்: கடந்த ஆட்சியின் வேதனையை மறந்து சிரிப்பதற்கு ஒரு வாய்பு கேட்கிறீர்கள். எங்களுக்கு புரிகிறது, சொல்லுங்கள் தமிழ்தாயின் செல்வங்களே, நானும், கழகத்தாரும் காத்திருகிறோம். புரட்சிகலைஞர்: காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ஒவ்வொரு இந்தியனும் தலை நிமிரனும், அதற்கு இந்த கேப்டனின் தலை குனிந்தாலும் அது தாழ்வில்லை, உங்கள் யோசனையை சொல்லுங்கள் எதுவானாலும் தயங்காமல் சொல்லுங்கள் திருவாளர் பொதுஜெனம்: நன்றி அன்புத்தலைவர்களே, இங்கு இப்பொழுது அனைத்துக்கட்சி பாட்டுக்கு பாட்டு போட்டி நடைபெறும், உங்களில் ஒவ்வொருவராக பாட்டை தொடங்கவேண்டும், முதல்வர் என்ற முறையில், முதலில் முதல்வர் ஜெ. அவர்கள் தொடங்கட்டம். எல்லோரும் கைதட்டுகிறார்கள் உடனே முதல்வர் ஜெ, வைகோவை பார்த்தபடி, பாட ஆரம்பிக்கிறார். ஜெ: அடிக்கிற கைதான் அணைக்கும் ... கசக்குற வாழ்வே இனிக்கும், அடிக்கிற கைதான் அ... 'அ' என நிறுத்த, வைகோ தொடர்கிறார் வைகோ: அண்ணன் காட்டிய வழியம்மா, இது அன்பால் விளைந்த பழியம்மா ... இது அன்பால் விளைந்த ப.... கலைஞர்: பாலுட்டி வளர்த்த கிளி பழங்கொடுத்து பார்த்த கிளி, நான் வளர்த்த பச்சை கிளி நாளை வரும் கச்சேரிக்.. என நிறுத்த விஜயகாந்தை பார்த்தபடி, மருத்துவர் ராமதாஸ்: கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும், உன்னை ஏமாற்றும் நீ கானும் தோற்றம் ... க...பதிலுக்கு, புரட்சிகலைஞர்: கலக்க போவது யாரு .. நான் தான்... ஜெயிக்க போவது யாரு நான் தான் ... டாக்டர் ஒழிக ... ராஜா வசூல் ராஜா.. திருமாவளவன்: ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை, நான் தாண்ட என் மனசுக்கு ராஜா வாங்குகடா வெள்ளியில் கூஜா, ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எ.. இல.கனேசன்: எங்கே செல்லும் எங்கள் பாதை யாரோ யார் அறிவார்கள்... காலம் காலம் செல்ல வேண்டும் யாரோ யார் அறிவார்கள், எங்கே செல்லும் எங்கள் பாதை யாரோ யார் அ.. வாசன்: அன்னையை போல் ஒரு தெய்வமில்லை அவர் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை, மன்னில் மனிதரில்லை, அன்னையை போல் ஒரு தெய்வமில்லை. அவர் அடி தொழ மறுப்ப.. தன்னையே நினைத்தபடி, கார்த்திக்: பாடி திறிந்த கிளி பாதை மறந்ததடி பூமானே, ஆத்தாடி உன்னால கூத்தடி நின்னே, கேட்காத மெட்டெடுத்து பாடு பாடு, பஞ்சு வெடிச்சா அது காயம் காயம், நெஞ்சு வெடிச்சா அது தா... திண்டிவனம் ராமமூர்த்தி : தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா, இன்று நீ தந்த பிச்சையிலே வளர்வேனம்மா, தாய் த... இல.கனேசனைப் பார்த்து.. தமிழக முதல்வர் ஜெ : தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே தனிமையிலே... இல.கனேசன் : லேசா லேசா நீ இல்லாமல வாழ்வது லேசா, நீண்ட கால உறவிது லேசா, லேசா லேசா நீ இல்லாமல வா.. வைகோ : வானத்தை பார்தேன் பூமியை பார்தேன் மனுசன இன்னும் பார்க்கலெயே, நான் 'பல நாள் இருந்தேன் உள்ளே', அந்த நிம்மதி இங்கில்ல, உள்ள போன அனைவருமே குற்றவாளி இல்லேங்க, வெளிய உள்ள அ... வைகோவை பார்த்து நொந்து போய், கலைஞர் : அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே, ஆசைகொள்வதில் அர்த்தமென்னடா காசில்லாதவன் கட்சியிலே.. அண்ணன் என்னடா, தம்பி என்னடா ... திருவாளர் பொதுஜெனம் : போதும் போதும் நிறுத்துங்க, ஏதோ சந்தோசமா பாடுவிங்கன்னு பார்த்தால், லாவனி பாடிடிங்களே. நொந்து கொண்டு கலைந்து செல்கிறார்கள்
-
நகைச்சுவைக் காட்சிகள்
வடிவேலுவின் நகைச்சுவை காட்சி
-
நகைச்சுவைக் காட்சிகள்
விவேக்கின் நகைச்சுவைகள் சில................ ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
அதிசயக்குதிரை
ஒருவர் :பஸ்லே பெரியவங்க நிக்கிறதைப் பார்த்தா என்னாலே தாங்க முடியாது. மற்றவர்:உடனே எழுந்து இடம் கொடுத்துடுவியா ? ஒருவர் :கண்ண இறுக மூடிக்கிட்டு தூங்குற மாதிரி பாவனை பண்ணிடுவேன். ---------------------------------------------------------------------------------------------------------------------------- டாக்டர்:தூக்கத்துல நடக்கிற வியாதிக்கு மருந்து, கொடுத்தேன். இப்ப தேவலையா...? நோயாளி:தேவலை டாக்டர் முன்பெல்லாம் வேகவேகமா நடந்து கிட்டிருந்த நான் இப்ப மெள்ளமா நடக்கிறேன்.. ----------------------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :ஏம்ப்பா இப்படி பிக்பாக்கெட் தொழில் பண்ணறே ? ஏதாவது ஒரு லட்சியத்தை வெச்சுக்கிட்டு உழைக்க வேண்டியதுதானே ? மற்றவர்:என்னங்கையா இப்படிக் கேட்கறீங்க ? ஒரு நாளைக்குக் குறைஞ்சது அஞ்சு பர்சையாவது அடிக்கணும்ங்கறதுதானே என்னோட லட்சியமே -------------------------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :அந்த பஸ் ஓனர் மறைவுக்குப் பின்னால் அவரது சொத்திலே என்ன தகராறு ? மற்றவர்:மினி பஸ்ஸெல்லாம் அவரது சின்ன வீட்டுக்கு எழுதி வைச்சுட்டாராம். ----------------------------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :உங்க அப்பா ரொம்பவும் பணக்காரராக இருக்கலாம்... அதுக்காக கடிதம் கூட இப்படியா எழுதறது ? மற்றவர்:அப்படி என்ன எழுதியிருக்கிறார் ? ஒருவர் :பணம்... பணமறிய ஆவல்-னு எழுதியிருக்கிறார்
-
நகைச்சுவைக் காட்சிகள்
கவுண்டமணி -- செந்தில் நகைச்சுவை காட்சி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
அதிசயக்குதிரை
ஒருவர் :பெண் பார்க்க வாசல் வரை வந்துட்டு திடீர்னு திரும்பிப் போறீங்களே... ஏன் ? மற்றவர்:உள்ளே டிபன் வாசமே வரலியே -------------------------------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :கதாசிரியரை உயில் எழுதச் சொன்னது தப்பாயிடுச்சா ? மற்றவர்:மேற்கண்ட பெயர்கள் யாவும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல-னு கடைசியிலே எழுதி முடிச்சிட்டாரு --------------------------------------------------------------------------------------------------------------------------------- மனைவி:என்னங்க.. . ஆபீஸ் லேர்ந்து தினமும் கலகலப்பா வர்ற நீங்க இன்னைக்கு ரொம்ப வாட்டமா வர்றீங்களே, சம்திங் நிறைய வரலையா...? கணவன்:சம்திங் வாங்கி மாட்டிக்கிட்டேன் சரசு.. . --------------------------------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :உங்க அப்பாவோட நிதி வர்ற அன்னைக்கெல்லாம் உங்க அம்மா ஏன் கேவிக்கேவி அழறாங்க ? மற்றவர்:அவுங்களுக்கு பயந்து நடந்து, மரியாதை கொடுத்திட்டிருந்த ஒரே ஆசாமி போயிட்டாரேங்கிற வருத்தம்தான் ---------------------------------------------------------------------------------------------------------------------- தயாரிப்பாளர்:உங்களை வச்சு படம் எடுத்ததுலே என்னோட சொத்துல பாதி அழிஞ்சு போச்சு சார்... நடிகர்:கவலைப் படாதீங்க. உங்களுக்கு இன்னொரு படத்தக்கு நான் கால்ஷீட் தர்றேன்
-
அதிசயக்குதிரை
சாவி அவர்: உங்க வீட்டுக் குழந்தை, வாசற் கதவு சாவியை முழுங்கிடுச்சா? அப்புறம் என்ன செஞ்சீங்க? இவர்: (வருத்தத்துடன்) ஜன்னல் வழியா ஏறிக் குதிச்சுத்தான் உள்ளே போனேன் ------------------------------------------------------------------------- புகையிலை போடுற பழக்கம் உண்டா ? சில நோயாளிங்க டாக்டர் என்ன சொல்றக்ருங்கிறதை சரியாப் புரிஞ்சிக்கிறது இல்லை. ஒரு நோயாளியைப் பரிசோதனை செய்துக்கிட்டிருந்த டாக்டர், உங்களுக்கு புகையிலை போடுற பழக்கம் உண்டா ?ன்னு கேட்டார். உண்டுங்க என்னோட நாலு ஏக்கர் நிலத்துலேயும் புகையிலைதான் போட்டிருக்கேன்-னாரு நோயாளி. இப்போ டாக்டருக்குத் தலை சுத்திருச்சி ------------------------------------------------------------------------------- எடை மிஷின் ரொம்பக் குண்டா இருக்கிற ஒரு அம்மா எடை மிஷின்லே ஏறி நின்னுது. அட்டை வந்தது. தயவு செய்து கூட்டம், கூட்டமாக ஏறி நிற்காதீர்கள். சே இந்த மிஷின் ரொம்ப மோசம்னு அந்தம்மா சலிச்சிக் கிட்டாங்க.
-
அதிசயக்குதிரை
ஒருவர் :இப்பவெல்லாம் ஆபீசுல தூங்கமாட்டேங்கறீங்களே... ஏன் ? மற்றவர்:நீங்க தூங்கறதாலதான் ஆபீசுல உங்களுக்கு லஞ்சம் கிடைக்க மாட்டேங்குதுன்னு பொண்டாட்டி சரமாரியா திட்டுறா -------------------------------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :திருடன், நேத்து ராத்திரி உங்க வீட்ல திருடும்போது நீங்க முழிச்சிக்கிட்டு இருந்ததா சொல்றீங்க... அப்படின்னா ஏன் சத்தம் போடல ? மற்றவர்:சத்தம் போட்டா நாம மாட்டிக்குவோம்னு வேலைக்காரி என் வாயப் பொத்திட்டாய்யா --------------------------------------------------------------------------------------------------------------------------- திருடன் 1: நீ ஏன் பட்டப்பகல்ல திருடினே ? திருடன் 2: எனக்கு மாலைக்கண் வியாதி, நைட்டுல வெளியில போகக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு.. ----------------------------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :வீட்டுல உள் வேலையெல்லாம் என் மனைவி பார்த்துப்பா... வெளி வேலையெல்லாம் நான் பார்த்துப்பேன்.. . மற்றவர்:அதுக்குன்னு தினமும் நீங்க வீட்டு வாசல்ல கோலம் போடறது நல்லாயில்லை ------------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :மாப்பிள்ளை அரசியல்ல இருக்கலாம் அதுக்காக இப்படியா ? மற்றவர்:என்னவாம் ? ஒருவர் :பெண் பார்க்க வந்த இடத்துல பெண் வாயால வாழ்க கோஷம் போடச் சொல்றார்
-
அதிசயக்குதிரை
தொண்டர் 1:எலெக்ஷன்ல ஜெயிக்கலைன்னா ஒரு பக்க மீசையை எடுத்துக்கறேன்னு தலைவர் சொல்றாரே.. ஜெயிச்சுட்டார்னா ? தொண்டர் 2:ஜனங்களை மொட்டை அடிச்சுடுவார் --------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :மழைக்கு போடற ஷு இருக்கா... மற்றவர்:இல்லைங்க... மனுஷங்களுக்குப் போடற ஷுதான் இருக்கு ------------------------------------------------------------------------------------------------------------ ஒருவர் :அவர் ரொம்ப சிக்கன பேர்வழினு எப்படிச் சொல்ற ? மற்றவர்:உட்காரக்கூட நாற்காலிக்குப் பதில் முக்காலிதான் யூஸ் பண்ணுவார் ? -------------------------------------------------------------------------------------------------- தொண்டர் 1:தலைவர் கோபமா இருக்காரே, என்னாச்சு ? தொண்டர் 2:தன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு தலைவர் சொன்னதை, சன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு பிரசுரம் செய்துட்டாங்களாம் ------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :என்ன இப்பெல்லாம் மானேஜர் உன்னைப் பார்த்து இளிக்கறதில்லை...? மற்றவர்:நீங்க சிரிக்கும்போது எங்க தாத்தா மாதிரி இருக்கீங்கன்னு சொன்னேன் --------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன் மற்றவர்:அப்புறம் ? ஒருவர் :களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது. சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்
-
அதிசயக்குதிரை
முட்டாள்கள் எல்லாம் எந்திரிச்சி நில்லுங ஆசிரியர் : முட்டாள்கள் எல்லாம் எந்திரிச்சி நில்லுங்க. (ஒரு மாணவன் மட்டும் எழுந்து நிற்கிறான்) ஆசிரியர் : என்ன நீ மட்டும் நிற்கிறாய்? மாணவன் : உங்களுக்குத் துணையாகத்தான், சார் -------------------------------------------------------------------------------- ஆசிரியர் ஆசிரியர் : எந்த ஒருவனுக்கு ஒரு விஷயத்தை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லையோ, அவன் ஒரு முட்டாள். புரிகிறதா? மாணவர்கள் (கோரஸாக) : புரியவில்லை சார்... ------------------------------------------------------------------------------------------------------ பணக்கார மாமியார் என்னோட மாமியார் அவங்க பணக்காரப் புத்தியைக் காட்டிட்டாங்க. அப்படியா... என்ன பண்ணினாங்க? எனக்கும் அவங்களுக்கும் நடந்த சண்டையை உள்ளூர் கேபிள்ல ஒளிபரப்ப ஏற்பாடு பண்ணிட்டாங்களாம் ------------------------------------------------------------------------------------------------------ டார்ச்லைட் வச்சுக்குங்க... நோயாளி : டாக்டர்..அடிக்கடி ஒரு இருட்டான காட்டுக்குள்ளே போகிறமாதிரி கனவு வருது. என்ன செய்யலாம்? டாக்டர் : படுக்கும்போது பக்கத்துல டார்ச்லைட் வச்சுக்குங்க...
-
அதிசயக்குதிரை
அப்பா: (அந்தப் பெண்ணிடம்) உனக்கு ரோஜாப்பூ வாசனை பிடிக்குமா? அல்லது மல்லிகைப்பூ வாசனை பிடிக்குமா? அந்தப் பெண்: எனக்கு பக்கத்து வீட்டு சீனிவாசனைப் பிடிக்கும். *** டாக்டர்: இந்தாங்க, டானிக், தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க. அவன்: ஸ்பூன் ரொம்ப நீளமா இருக்குமே டாக்டர், எப்படி முழுங்கறது? *** எனக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்திருக்கு, ஸார்! எங்கேயிருந்து? பழனிலேர்ந்து! *** இனிமே கட்சிக்கு நாய்போல உழைப்பவன் நான் தான் என்று அடிக்கடி சொல்லாதீங்க ஏன்? தலைவர் 'வாள்'க 'வாள்'க என்று தொண்டர்கள் கத்தறாங்க! *** ஏன் கால்குலேட்டருடன் அந்தப் பெண் பின்னாலே சுத்தறே? கணக்கு பண்ணிக்கிட்டு இருக்கேன் *** எனக்கு பொழுதே போகமாட்டேங்குது ஸார் ஏன், ஏதாவது சினிமாவுக்குப் போகிறதுதானே? எங்க ஆபீஸ்லே அதுக்கெல்லாம் பெர்மிஷன் கொடுக்க மாட்டாங்களே! *** என் அப்பா ஒரு சங்கீத வித்வான்,அம்மாவும் பாடுவாள், அண்ணனுக்கு மிருதங்கம் வாசிக்கத்தெரியும், அண்ணி வீணை வாசிப்பா--- சரி, நீ என்ன பண்றே வேறென்ன பண்றது, தனிக்குடித்தனம் பண்றேன்!
-
அதிசயக்குதிரை
ஒரு அமெரிக்க கணவன் மனைவி ஒரு ஞாயிற்று கிழமை வீட்டில் குளிப்பதற்கு தயாராகின்றார்கள். மனைவி முதலில் குளித்து முடியவும் கணவன் குளிக்க தயாராகும் போது வீட்டு மணியடிக்கவும் சரியாக இருந்தது.கணவன் மனைவியிடம் யார் என்று பார்க்க சொல்லி விட்டு குளிக்க தயாராகின்றார்.மனைவி அவசர அவசரமாக துவாயை சுற்றி கட்டியபடி மேல் வீட்டிலிருந்து படி வழியாக கீழிறங்கி வாசல் கதவை திறந்த போது பக்கத்து வீட்டு பொப் நின்று கொண்டிருந்தார்.மனைவி வாய் திறக்க முதல் பொப் சொல்கிறார் "உந்த துவாயை ஒரு கணம் களற்றி விடுங்கள் $800 தருகின்றேன் என்று".மனைவியும் ஒரு கணம் யோசித்து விட்டு துவாயை களற்றி பிறந்த மேனியாக நிற்க ,பொப் $800 கொடுத்து விட்டு நன்றி கூறிவிட்டு சென்று விடுகிறார்.மனைவியும் மனதுக்குள் ஒரு வித சந்தோசத்துடன் மேலெ கணவர் குளிக்கும் அறைக்கு செல்ல கணவர் வந்தது யாரென வினவ மனைவி அது பக்கத்து வீட்டு பொப் என கூறினார். உடனே கணவர் "பொப் என்னிடம் வாங்கிய $800 பற்றி ஏதாவது கூறினாரா " என்று கேட்டார்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இலக்கியனுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
-
அதிசயக்குதிரை
ஸ்ரோபரி அல்லது வனிலா ஐஸ்கிறீம் கூலாக்குமென நினக்கிறேன்.so strawberry or vanala ice cream for Nila please.
-
அதிசயக்குதிரை
தத்துவம் இவ்வளவுதாங்க 1. நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது. 2. ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது. 3. என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது 4. ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு 5. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும். 6. நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிர் அடிச்சா திரும்ப அடிக்க முடியாது. 7. காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!! 8. பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா? 9. இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது. 10. பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?
-
அதிசயக்குதிரை
கௌண்டமணி செந்தில் ஒரு கலந்துரையாடல் டேய் பச்சை மிளகாய் தலையா எங்கடா போயிட்டு வர்றே. ஓட்டு போட்டுட்டு வந்தண்ணே. ஏன்டா அந்த கருமத்தை போட்டே. ஒரு சந்தேகம் அண்ணே. எதை வேண்ணாலும் கேளு ஆனா கொழந்த எங்கேர்ந்து வந்துதன்னு மட்டும் கேக்காதே. இல்லை அண்ணே எலெக்ஷன்னா என்ன அண்ணே. அப்படி வாடி. இந்த ஆல்-இன்-ஆல் அழகுராஜாவோட அறிவைப்பத்தி தெரிஞ்ச ஒரே ஆள் நீதான்டா. சொல்லுங்கண்ணே. அது எலெக்ஷன் இல்லை கலெக்ஷன். காசு பண்ற வேலைடா லக்ஷ்மி வெடி வாயா. அப்ப ஏன்ணே கையில கறுப்பு புள்ளி வெக்கறாங்க. அப்படி கேளுடா. டேய் எத்தனை பேரை முட்டாள் பண்ணோம்னு ஒரு கணக்கு வேண்டாமா அதுக்கு தான். அப்ப 5 வருஷதுக்கு ஒரு தடவை ஆட்சி ஏன்ணே மாறுது. டேய் நம்ம தமிழ் மக்களுக்கு அறிவே இல்லைடா. ஒரு கட்சியையே 20 வருஷம் ஆட்சி செய்யவுட்டா அவன் சொத்தை சுருட்டி சோர்ந்து போய் ஒரு வேளை நாட்டுக்கு நல்லது பண்ணுவான்டா. ஆனா நம்ம தமிழ் மக்கள் என்ன பண்றாங்க – 5 வருஷதுக்கு ஆட்சி மாத்தி விடறாங்க. அவன் 5 வருஷம் சம்பாதிச்ச காசை 5 வருஷம் செலவு பண்ணிட்டு மறுபடியும் வந்துடறான் கொள்ளை அடிக்க. அதுக்கு என்ன பண்றது அண்ணே. அதுக்கு நான் மதுரை வீரனுக்கு கெடா வெட்டி கூழு ஊத்தப் போறேன். கெடா வாங்கிட்டீங்களா. டேய் நாட்டுக்காக சொந்த காசு போட்டு கெடா வாங்கறதுக்கு நான் என்ன உன்னை மாதிரி பேறிக்கா மண்டையனா. அப்புறம். நான் கெடான்னு சொன்னது உன்னைத் தான்டா ஜார்ஜ் புஷ் வாயா. --------------------
-
அதிசயக்குதிரை
சரியா வாசியுங்கோ நிலா.12 பில்லியன் செல்வளித்தது அமெரிக்கன்.பென்சில் பாவித்தது ரஸ்யன்.தத்துவம் 1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது4. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.5. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.6. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.7. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.8. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?9. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.10. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.11. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.12. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.13. என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகணும்.
-
அதிசயக்குதிரை
நாசா முதலாவதாக விண்வெளிக்கு முதன்முதலாக விண்வெளி வீரர்களை அனுப்பும் போது ஒரு பிரச்சனையை எதிர்நோக்கினார்கள்.அதாவது சைபர் புவியீர்ப்பில் போல் பொயின்ட் பேனாவால் எழுத முடியாதென்று.ஆகவே நாசா விஞ்ஞானிகள் மிக நீண்ட காலத்தை செலவு செய்து,12 பில்லியனை செலவு செய்து ஒர் பேனாவினை கண்டு பிடித்தார்கள்.அதனால் 0 புவியீர்ப்பில் எழுதலாம்,தலைகீழாக எழுதலாம்,தண்ணீருக்குள் எழுதலாம், கண்ணாடி உட்பட எந்த மேற்பரப்பிலும் எழுதலாம்.அத்தோடு 0க்கும் 300 பாகை செல்சியசிலும் எழுதக்கூடியதாக இருந்தது. ஆனால் ரஸ்யர்கள் விண்வெளிக்கு செல்லும் போது பென்சிலை பாவித்தார்கள்.
-
அதிசயக்குதிரை
கிடைத்ததில் சம பங்கு ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர். இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள் சென்று விடுவது என தீர்மானித்துக் கொண்டான். நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான். வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன் மசியவில்லை. இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். "ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்" என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான். அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற் காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனை உள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம் சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான். ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான். அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணை திருடி கோபிதைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேட்ம் போட்டு நடித்தவனை கழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலி பொறுக்கமாட்டாமல் அலறினான். இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார் பின் "ஏன் இவ்வாறு செய்தாய்" என வினவினார். அதற்குத் தெனாலிராமன் "கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான்" இதைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதைக் கேட்ட தெனாலிராமன் "அரசே இப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு பாயிற்காப்போன்களிடம் உறுதியளித்து விட்டேன். ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டான். உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்து வரச்செய்து இது குறித்து விசாரித்தார். அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள். அவ்விருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டி அவனுக்குப் பரிசு வழங்கனார். தென்னாலிராமன் கதைகள்
-
அதிசயக்குதிரை
அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான். மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர். தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர் பேச்சின் இறுதியில் மாய தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னர். இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை. ராஜகுரு மௌனமாகி விட்டார். சுற்றும் முற்றும் பார்த்த தென்னாலிராமன் எழுந்து நின்றான். தத்துவஞானியைப் பார்த்து, "ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா?" எனக் கேட்டான். அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான். அதை சோரிக்க தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று. அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக்கூடாது எனக் கட்டடை இட்டுவிட்டனர். அதனால் தத்துவஞானி தன் தவறை உணர்ந்தான். இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி பொன் பரிசளித்தது மட்டுமில்லாமல் அன்று முதல் அவரது அரசவை விகடகவியாக்கினார்.
-
அதிசயக்குதிரை
காளி மகாதேவியின் அருள் கிடைத்தல் அந்த ஆண்டு ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. அதனால் ஏரி, குளம், குட்டை அனைத்தும் வறண்டு கிடந்தன. அதனால் விவசாயம் நடைபெறவில்லை. அதனால் தண்ணீர்ப் பஞ்சமும் உணவுப் பஞ்சமும் தலை விரித்தாடியது. அப்போது அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த அன்றே பலமான மழை பெய்ய தொடங்கியது. ஆறு, ஏரி, குளம், குட்டை எல்லாம் நிரம்பிவிட்டன. சாமியார் வந்ததன் காரணமாகத்தான் நல்ல மழை பெய்துள்ளது என்று எண்ணிய அவ்வூர் மக்கள் சாமியாரை வாயாரப் புகழ்ந்து அவரை வணங்கி ஆசி பெற்றனர். இதை பார்த்துக் கொண்டிருந்த தெனாலி ராமன் கலகலவென நகைத்துக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த சாமியார், தெனாலிராமனை அருகில் அழைத்து தம்பி நீ ஏன் சிரிக்கிறாய்? என வினவினார். அதற்கு தெனாலிராமன் "மழை பெய்வதும் பெய்யாமல் போவதும் இறைவன் செயலே. அப்படியிருக்க தாங்கள் வந்தவுடன் தங்கள் மகிமையால்தான் மழை பெய்துள்ளது என்று மக்கள் எண்ணுவது ஒரு பனை மரத்தில் நன்கு பழுத்துள்ள பனம் பழம் கீழே விழும் நேரத்தில் காக்கை உட்கார்ந்ததாம். காக்கை உட்கார்ந்ததும் பனம் பழம் கீழே விழுந்ததாம். அப்போது அதை பார்த்தவர்கள் காக்கை உட்கார்ந்ததனால் தான் பனம் பழம் விழுந்தது என்று சொன்னார்களாம். அது போலவே இவ்வூர் மக்கள் செயலும் இருந்ததால் தான் சிரித்தேன்" என்றான் தெனாலிராமன். இதைக் கேட்ட சாமியார் உண்மையை உணர்ந்து அவன் மேல் கோபப்படவில்லை. தம்பி உன்னிடம் திறமை இருக்கிறது. நீ காளி மகாதேவியின் அருளைப் பெற்றால் பிற்காலத்தில் புகழ் பெற்று விளங்குவாய் என்று நல்லாசி கூறினார். இதைக்கேட்ட தெனாலிராமன் காளிமகாதேவியின் சந்நிதியை அடைந்தான். அவளின் திருஉருவத்தைக் காண பலவாறு வேண்டி தவம் இருந்தான். கடைசியில் தெனாலிராமன் முன் தோன்றினாள் காளிதேவி. அவளது உருவத்தைப் பார்த்துப் பயப்படுவதற்குப் பதிலாக பலமாக சிரித்தான். அவன் சிரிப்பதைப் பார்த்த காளிதேவி, என் கோர உருவத்தைப் பார்த்து எல்லோரும் அஞ்சுவார்கள். நீயோ பலமாகச் சிரிக்கிறாய்? ஏன் என்று வினவினாள். அதற்கு தெனாலிராமன் எனக்கு சளிபிடித்தால் என்னுடைய ஒரு மூக்கை சிந்துவதற்கு என்னுடைய இரண்டு கைகளே போதவில்லை. அப்படியிருக்க உனக்கு ஆயிரம் தலை உள்ளது. ஆனால் கைகள் இரண்டே பெற்றுள்ளாய். உனக்கு சளிபிடித்தால் ஆயிரம் மூக்கையும் எப்படி இரண்டு கைகளால் சிந்துவாய் என்று எண்ணினேன். அதனால் எனக்கு சிரிப்பு வந்தது என்றான். இதைக் கேட்டதும் காளிமகாதேவியே சிரித்து விட்டாள். பின் மகனே உன்னை ஆசீர்வதிக்கிறேன். பெரும் பேரும் புகழும் பெற்றுத்திகழ்வாய். உனக்கு கஷ்டம் நேரும் போதெல்லாம் என்னை நினை. உனக்கு உதவி செய்கிறேன் எனக்கூறி மறைந்தாள் காளிதேவி. தென்னாலிராமன் கதைகள்