Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. கந்தப்புவும் - சோமண்ணையும் கந்தப்பு: ஐரோப்பாவில் அகதி வாழ்கையில் பிடிப்பில்லாமல் வாழ்ந்த கன ஆட்களுக்கு பிடிப்பு வந்துட்டுதாம் ! சோமண்ணை: ஐரோப்பிய வாழ்க்கையில் அப்பிடி என்ன பிடிப்பு வந்ததாம் ? கந்தப்பு: நாரிப்பிடிப்பு, முழங்கால்பிடிப்பு, கழுத்துப்பிடிப்பு எண்டு கன பிடிப்புக்கள் வந்திட்டுதாம். சோமண்ணை:- !!!???... -------------------------------------------------------------------------------------------------------------------------------- கந்தப்பு: கோயில் பக்கமே போகாத சுந்தரத்தான் இப்ப அடிக்கடி கோயிலுக்கு போய் பஐனை எல்லாம் பாடுறான். பக்திமானாகிட்டானோ ! சோமண்ணை: பக்தியுமில்லை, கித்தியுமில்லை இப்ப கோயில்வழிய பூசைமுடிய அன்னதானம் குடுக்கினமாம் அதுதான் அடிக்கடி கோயிலுக்கு போறான். கந்தப்பு: !!!???... ------------------------------------------------------------------------------------------------------------------------------- கந்தப்பு: நம்ம தலைவர் பெரிசா ஒரு வீடு கட்டுறாரே... யாருக்கு அந்த பெரிய வீடு? சோமண்ணை: அது அவரோட சின்ன வீட்டுக்குத்தான்! கந்தப்பு: ???!!!... ----------------------------------------------------------------------------------------------------------------------------- கந்தப்பு: எங்கட கோவில் ஐயர் ஏன் அடிக்கடி வேதக் கோவிலுக்குப் போகிறார்? சோமண்ணை: பாவ மன்னிப்பு கேட்கத்தான். கந்தப்பு: !!!???... -------------------------------------------------------------------------------------------------------------------------------- கந்தப்பு: ஆமா, உன் பொண்ணு அந்த நல்ல குணமான உத்தியோகஸ்தனைக் கல்யாணம் செய்ய மறுத்திட்டாளாமே...ஏனாம்..? சோமண்ணை: தன்ர கூந்தலைவிட அவரின் கூந்தல் மிகவும் நீளமாம் அதுதான்! கந்தப்பு: ???!!!...
  2. பே‌ங்‌க் லோ‌ன் சார் நாங்க பேங்க்லேர்ந்து பேசறோம்... எங்க கிட்ட புது லோன் ஸ்கீம் வந்திருக்கு சார்... அதுல கேட்டிங்கன்னா... காலைலேர்ந்து சாப்படல... 10 ரூபா லோன் குடுத்தீங்கன்னா... போய் சாப்டுட்டு வந்துருவேன். ------------------------------------------------------------------------------------------------------------------------------------ திரு‌ட்டு‌க் கா‌ய்‌ச்ச‌ல் உங்களுக்கு வந்திருக்கறது திருட்டுக் காய்ச்சல் எத வச்சு டாக்டர் இதை திருட்டுக் காய்ச்சல்னு சொல்றீங்க? நீங்கதான சொன்னீங்க, வீட்டுல யாருமே இல்லாதபோது நடு ராத்திரி வந்துச்சுன்னு... ---------------------------------------------------------------------------------------------------------------------------------- கா‌பி பொடி "சார் அந்த ப்ளேயர நீங்க ஏகப்ப‌ட்ட பணம் கொடுத்து ஏலம் எடுத்துருக்கீங்கங்கறது உண்மைதான்... அதுக்காக அவரை காப்பி பொடி வாங்க கடைக்கு அனுப்பறது கொஞ்சம் கூட நல்லாயில்ல." -------------------------------------------------------------------------------------------------------------------------- ரிவர்ஸ் அவர் ஏன் கார ரிவர்ஸ்லயே ஓட்டிட்டு போறார். வி‌‌ற்கும் போது கி.மீ. குறைவா காண்பிக்கணுமாம். ---------------------------------------------------------------------------------------------------------------------- டெஸ்ட் மேட்‌‌ச் என்ன எல்லா ப்ளேயர்சும் பேப்பரும், பேனாவுமா வந்துருக்காங்களா? இன்னிக்கு டெஸ்ட் மேட்சுங்கறத தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க
  3. அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உரிமையடா
  4. மாறாது, மாறாது ஒரு போதும் மாறாது குயில் எங்கை இருந்தாலும் கூ கூ என்று கூவும் காகம் எங்கை இருந்தாலும் கா கா என்று கரையும் தமிழன் எங்கை இருந்தாலும் ஏன் ??? வணக்கம் பிள்ளையள் எப்படி சுகம்? வெயில் தொடங்கிட்டுது. இனி வீட்டுக்குள்ள இருக்க முடியாது. காலம் மாறி மாறித்தான் வரும் ஆனால் நாங்கள் தான் ஓரே அடியாய் மாறிப்போனம், எங்கட குணம் மாறாது பாருங்கோ. அதுக்கு நல்ல உதாரணம் எங்கட கனடா கைலாஸ், அவன்ற கதையை சொல்லுறன் கேளுங்கோ. அப்ப ஊரிலை கமக்கார சின்னத்துரையின்ற மகன்கைலாசநாதன் சின்னனில நல்லா கஷ்டப்பட்டவன். விடிய வெள்ளன எழும்பி தோட்டத்திற்குப்போய் தோட்ட வேலை செய்து சந்தையில் போய் மரக்கறி வித்துப்போட்டுதான் பள்ளிக்குப் போறவன். பள்ளிக்குப்போற நேரம் தவிர மற்ற நேரம் எல்லாம் ஆளை கோமணத்தோடதான் காணலாம். ஏனெண்டால் நெடுக தோட்ட வேலைதான். அதாலை அவனை கோமணக்கைலாசு எண்டும் கூப்பிடுறவை. கடைசியிலை அவன் நல்லா படிச்சு டாக்குத்தராய் வந்திட்டான். வந்ததும் இல்லாமல் கனடாவுக்கும் டாக்குத்தராய் போட்டான். அவன் போய் இப்ப 20 வருஷத்திற்கு மேல் ஆகிவிட்டது. கமக்கார கைலாசு என்று கூப்பிட்டகாலம் போய் கனடா டாக்குத்தர் கைலாசு என்றால்த்தான் ஊரிலை தெரியும். கனடாவுக்கு போனவன் 2 வருஷத்தால ஊருக்கு வந்து நல்ல சீதனத்தோட நகைநட்டு, தோட்டம், துறவு, வீடு வளவுகளோட ஓரு கலியாணமும் முடிச்சுக் போனவன் போனதுதான். பிறகு ஊர் பக்கமே ஆளைக்காணோம். அப்ப இப்படி நாட்டுப்பிரச்சனை இல்லைத்தானே. வடிவாக வந்து போயிருக்கலாம் வரவே இல்லை இப்ப எண்டாலும் ஆமி பிடிச்சுப்போடும் நாட்டுப்பிரச்சனை என்று சொல்லலாம். அவன் அப்பவே வராதவன் இப்ப எங்க வரப்போறான் எண்டுட்டு கனடா போன இடத்திலை அவனை ஒருக்கா போய்ப்பார்ப்போம் எண்டுட்டு அவனைப்பார்க்கப்போனன் பாருங்கோ. அவனைக்கண்டு கைலாசு எப்படிச்சுகம் ? என்னை தெரியுதோ ? எண்டு கேட்டன் பாருங்கோ. அதுவும் தமிழிலைதான் கேட்டனான். அவன் என்னைப்பார்த்து ஹலோ கூ ஆர் யு? வட் இஸ் யுவர் நேம்? எண்டு இங்கிலிசிலை கேட்டதும் எனக்கு தூக்கிவாரிப்போட்டிட்டுது. அவனை சொல்லி என்ன குற்றம். இப்ப எங்கட தமிழ்சனத்தில சிலதுகளுக்கு தாய் தகப்பனையே மறந்து போகுது. உவன் பாவிக்கு 20 வருஷத்துக்கு முன்னம் கண்ட பக்கத்து வீட்டுக்காரன் என்னை எங்க தெரியப் போகுது. என்னை தெரியாட்டிலும் பறுவாயில்லை. நான் தமிழிலை கதைச்சதற்கு அவன் தமிழிலை எண்டாலும் பதில் சொல்லியிருக்கலாம்தானே. காகத்தின்ர கூட்டிலை குயில் முட்டை போடுது. காரணம் குயிலுக்கு அடைகாக்க தெரியாதாம். காகம் அடைகாத்து பொறிச்ச குயில் குஞ்சு கூ கூ எண்டு கூவுது. காகத்திண்ட குஞ்சு கா கா எண்டு கத்துது. அது, அது தன்ர குரலாலைதான் தங்களை யார் எண்டு இனம் காட்டுது. ஆனால், இந்த தமிழ் இனத்திலை சிலர் தங்களை வெள்ளையன் எண்டு காட்ட தங்கட தாய்பாசையை கதைக்க வெக்கப்படுகினம். உது எல்லாம் ஒருவகை வருத்தம் கண்டியலோ. உதுகளை எப்படி மாற்றுறது எண்டு உங்களிட்டத்தான் கேட்கின்றன். நீங்கள்தான் பதில் சொல்ல வேணும். உப்படியான ஆட்களைக் காணேக்க எனக்கு ஒரு சினிமாப் பாட்டுத்தான் ஞாபகம் வருது. அது என்ன பாட்டு எண்டால் "வானத்தில் மீது பறந்தாலும் காக்கை கிளியாகமாறாது. கோட்டையின் மேலே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது". எமக்கு எண்டு ஒரு நாடு வரும்வரை இந்த அகதி என்ற பெயர் மாறாது பாருங்கோ. அகதி என்ற பெயர் மாறினாலும் எங்கட சனம் மாறவே மாறாது. எனக்கும் நேரமாகுது போட்டுவாரன் எல்லா தமிழ் மக்களுக்கும் மங்களம் உண்டாகட்டும்
  5. வான வேடிக்கை கடந்த July 4 ஆம் தேதி டெம்பல்-1 என்ற வால் நட்சத்திரத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட விண்கலனை மோதி நாசா விஞ்ஞானிகள் சாதனை புரிந்தார்கள் அல்லவா? டீப் இம்பாக்ட் என்று பெயரிடப்பட்ட இந்த முயற்சிக்கு விதை 1998 ஆம் ஆண்டிலேயே விதைக்கப்பட்டது. அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட ஹhலி வால் நட்சத்திரத்திலுள்ள கருமையான மேற்பகு தியை ஆராய்வதற்காக ஒரு விண்கலனை அதில் மோதவிட முயற்சிக்கப்பட்டது. ஆனால் விண் கலனை சரியான பாதையில் செலுத்தக்கூடிய உயர் தொழில்நுட்பம் இல்லாததால் அப்போது அந்த முயற்சி கைவிடப்பட்டது. ஆனால் தற்போது விண்ணியல் தொழில் நுட்பங்கள் பெருமளவு முன்னேற்ற மடைந்துள்ளதால் நாசா விஞ்ஞானிகள் தைரியத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டனர். முயற்சியெல்லாம் சரி, ஆனால் எதற்காக இந்த மோதல்? இதனால் என்ன இலாபம்? நாம் முன்பே வால் நட்சத்திரங்களை பற்றி கூறும் போது அவை 450 கோடி ஆண்டுகளுக்கு முன் Nரியன் உருவான காலக்கட்டத்தில் வாயுக் களும், தூசு மேகங்களும் சேர்ந்து உருவானவை ஆகையால் அவற்றின் மேற்பரப்புக்கு அடியிலுள்ள பகுதிகளை ஆராய்ந்தால் Nரியன் உருவான வரலாற்றை பற்றி மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்பினர். ஆனால் பூமிக்கு கொண்டு வந்து ஆராய்வதற்கு இவை ஒன்றும் சிறு கற்களல்லவே, ஒவ்வொன்றும் பல மைல்கள் அளவுக்கு நீண்ட இராட்சத விண் பாறைகளாகையால் இங்கிருந்து ஒரு விண்கலனை ஏவி அதனை வால் நட்சத்திரத்துடன் மோதினால் அதன் மேற்புறத்துக்கு அடியிலுள்ள பகுதிகள் வெளியே தெரியும். அவற்றை ஆராய்ந்து Nரியன் மற்றும் பூமி உருவான வரலாற்றை பற்றி புதிய தகவல்களை அறிய முடியும். பூமியிலிருந்து ஒரே பகுதியாக ராக்கெட் மூலம் அனுப்பப் பட்ட டீப் இம்பாக்ட் விண்கலம் டெம்பல்-1 வால் நட்சத் திரத்தை நெருங்குகையில் இரண்டாக பிரிந்து அதில் ஒரு பகுதி டெம்பல்-1 நோக்கி மோதுவதற்கு புறப்பட்டது. மற்றெhரு பகுதி இந்த மோதலை படமெடுத்து பூமிக்கு அனுப்பி வைக்கிறது. தாய்க் கலத்திலிருந்து பிரிந்த 24 மணி நேரத்தில் 371 கிலோ எடையுள்ள மோதும் கலன் மணிக்கு 70,000 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று டெம்பல்-1 வால் நட்சத்திரத்தை தாக்கி பெரும் தீப்பிழம்பு களுடன் வெடித்து சிதறியது. இது பார்ப்பதற்கு வாண வேடிக்கையை போல தோற்றமளித்தது. இந்த மோதலின் மூலம் 5 டன் எடை வெடிப் பொருட்களுக்கு இணையான சக்தி டெம்பல்-1 வால் நட்சத்திரத்தில் உண்டாகியது. இதனால் 325 அடி அகலமும், 80 அடி ஆழம் கொண்ட பள்ளம் இந்த வால் நட்சத்திரத்தில் உருவாகி யுள்ளது. இந்த மோதல் முயற்சிக்கான மொத்த செலவு எவ்வளவு தெரியுமா 1500 கோடி ரூபாய்கள். டீப் இம்பாக்ட் விண்கலன் பூமியிலிருந்து 13 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால் இங்கிருந்து நாம் அதனை கட்டுப்படுத்த நாம் இடும் கட்டளைகள் 7-1 2 நிமிடங்களுக்கு பிறகு தான் விண்கலனுக்கு போய் சேரும். இதனால் விண்கலனை நகர்த்துவதற்கு முன்கூட்டியே அதன் பாதையை தெரிந்து வைத்து அதற்கேற்ப கட்டளை களை இங்கிருந்து செயல்படுத்த வேண்டும். இந்த டீப் இம்பாக்ட் மோதலினால் டெம்பல்-1 வால் நட்சத்திரத்தின் பாதையில் பெருமளவு மாற்றங்கள் நிகழப் போவதில்லை. அதன் வேகம் மட்டும் மணிக்கு 0.014 அங்குலம் என்ற ரீதியில் குறைகிறது. இதனால் பூமிக்கோ, டெம்பல்-1 வால் நட்சத்திரத்துக்கோ எந்த ஆபத்துமில்லை. தினகரன்-
  6. நெடுக்ஸ், பிறந்த தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
  7. கந்தப்புவும் - சோமண்ணையும் கந்தப்பு: திருவள்ளுவர் ஐரோப்பாவிற்கு வந்திருந்தால், எப்படி குறள் எழுதியிருப்பார்? சோமண்ணை: "வட்டிக்கு விட்டவன் வயிறு எரிய வாழ்வான். சீட்டுப்பிடித்தவன் சீரழிஞ்சு போவான்" என்று எழுதியிருப்பார். கந்தப்பு: ???!!!... ----------------------------------------------------------------------------------------------------------------------------------- கந்தப்பு: உங்கட மகன்ரை பண்பாட்டைப் பார்த்துத்தான் என் மகள் விரும்பினாள். சோமண்ணை: என்ன பண்பாடு? கந்தப்பு: "ரீ" "யூஸ்" குடிக்கும் போதும் "சியேஸ்" சொல்லுறாரே... -------------------------------------------------------------------------------------------------- கந்தப்பு: என்ன சோமண்ணை தாயின்ர செத்த வீட்டில மூத்தமகன் சுந்தரத்தைக் காணக்கிடைக்கல... சோமண்ணை: வட்டிக்காசு வாங்கப் போனவர் வர சுணங்கிட்டுதாம்! கந்தப்பு: ???!!!... ------------------------------------------------------------------------------------------------------ சோமண்ணை: ஐரோப்பாவில வெள்ளையன் 800 பேர் இருக்கக்கூடிய பிளேனை செய்துமுடிச்சு வெள்ளோட்டம் விட்டவங்களாம். கந்தப்பு: ஏன்! எங்கட ஆட்களும் வருசா வருசம் ஐரோப்பாவில வெள்ளோட்டம் விடுகினம் தானே! சோமண்ணை: என்னத்தை விடுகினம்? கந்தப்பு: 800 பேர் இழுக்கக்கூடிய தேரை செய்து முடிச்சு வெள்ளோட்டம் விடுகினம்தானே. சோமண்ணை: ????!!!... - ----------------------------------------------------------------------------------------------------------------- கந்தப்பு: லண்டன் மாப்பிள்ளை ஏன் எரிஞ்சு எரிஞ்சு விழுகிறார்? சோமண்ணை: அவர் எரிபொருள் விற்பனை நிலையத்தில் வேலை செய்கிறார். அதுதான் எரிஞ்சு, எரிஞ்சு விழுகிறார்.
  8. கேளாமல் படம்: அழகிய தமிழ்மகன் இசை: ஏ.ஆர்.ரகுமான் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> பெண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே கேட்டு ரசித்த பாடல் ஒன்றை மீண்டும் இந்த ஞாபகம் தூண்ட கேட்டு ரசித்த பாடல் ஒன்றை மீண்டும் இந்த ஞாபகம் தூண்ட என்னை உன்னை எண்ணி யாரோ எழுதியது போலவே தோன்ற.... என்னை உன்னை எண்ணி யாரோ எழுதியது போலவே தோன்ற.... ஆண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே என் பேரை கூறிடும் உன்பேரும் கோகிலம் பெண் : கோகிலம்.. கோகிலம் ... கோகிலம்.. நெஞ்சிலே காதலின் கால்தடம்.. கேளாமல் கையிலே வந்தாயே.. காதலே என் ராமன் நீயெனில் உன்கையில் நான் அணில் ஆண் : இனிமேல் இனிமேல் இந்த நானும் நானில்லை போய்வா போய்வா என்றே எனக்கே விடைகள் தந்தேன் பெண் : மெலிதாய் மெலிதாய் நானிருந்தேன் மிக எளிதாய் எங்கும் நடந்தேன் இன்று உனை நெஞ்சில் சுமந்தேன் நான் நடந்தேன்.. நடந்தும் விழுந்தேன் ஆண் : கூந்தலென்னும் ஏணி ஏறி முத்தமிட ஆசைகள் உண்டு பெண் : நெற்றி மூக்கு உதடு என்றே இறங்கி வர படிகளும் உண்டு ஆண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே என் பேரை கூறிடும் உன்பேரும் கோகிலம் பெண் : பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே ஏதோ நடக்கின்றதே ...?... பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே கண்ணை கண்ணை சிமிட்டும் நொடியில் உன் உருவம் மறையும் மறையும் அதனால் இமைகள் வேண்டாம் என்பேன் ஆண் : பார்வை ஒன்றால் உனை அள்ளி என் கண்ணின் சிறையில் அடைப்பேன் அதில் நிரந்தரமாய் நீ இருக்க இமைகள் வேண்டும் என்பேன் பெண் : மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா ஆண் : தூங்கும் தேவை ஏதுமின்றி கனவுகளும் கைகளில் விழுமா பெண் : கேளாமல் கையிலே வந்தாயே.. காதலே என் ராமன் நீயெனில் உன்கையில் நான் அணில் ஆண் : கோகிலம்.. கோகிலம் ... கோகிலம் நெஞ்சிலே காதலின் கால்தடம் பெண் : கோகிலம்.. கோகிலம் ... கோகிலம் நெஞ்சிலே காதலின் கால்தடம்
  9. வசீகரா உன் நெஞ்சினிக்க படம்: மின்னலே இசை: கரிஸ் ஜெயராஜ்
  10. படம்: மொழி இசை: வித்யாசாகர் பாடியவர்: பல்ராம் & சுஜாதா பாடல்: வைரமுத்து ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா கடலின் மொழி அலையா நுரையா காதல் மொழி விழியா இதழா இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை (காற்றின் மொழி) காற்று வீசும் போது திசைகள் கிடையாது காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது உலவித் திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது (இயற்கையின் மொழிகள்) வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும் வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும் உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும் பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும் ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும் ஆசை தூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும் (இயற்கையின் மொழிகள்)
  11. "தமிழரைக்கண்டால் பிடிக்காது" இப்பிடி சொல்லுறவை யார்? காலம் போற கெதியைப்பாத்தியலே, காலம் கெதியாய்ப்போனால் பறுவாய்யில்லை வயசுமல்லே கெதியாய் ஏறுது. இந்த முறை ஐரோப்பாவில வலுகெதியா வெய்யிலும் வந்திட்டுது. காலம் மாறிப்போச்சு போல கிடக்கு. காலம் மாறிப்போனாலும் பறுவாய்யில்லை ஐரோப்பாவுக்கு வந்த எங்கட சனமும் அல்லே மாறிப்போச்சுதுகள். அதை நினைக்கத்தான் பெரிய வயித்தெரிச்சலாய் கிடக்குது பாருங்கோ. அப்ப இங்கவந்த புதுசில "பாசைப்பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினை." அப்பவும் என்ன இப்பவும் தான்!. அப்ப எல்லாரையும் வந்தவுடன காம்பில தானே விடுவாங்கள். விடைக்கே பாக்கிஸ்தான், துருக்கி, குருதீஸ், கறுப்பர் எண்டு பல நாட்டுக்காரரும் இருப்பாங்கள். எங்களை ஸ்ரீலங்கன் எண்டு செல்லி ஒண்டாகத்தான் விடுவினம் நாங்களும் ஒண்டாகத்தான் இருக்கப்போறம் எண்டு ஒஷ்டாய் இருந்தனாங்கள் அதோட ஒண்டாய் சமைச்சு சாப்பிட்டு அவங்கள் குடுக்கிற சோசல் காசில் மிச்சமும் பிடித்து ஊருக்கும் காசு அனுப்பினனாங்கள் பாருக்கோ. அது அப்ப பாருங்கோ இப்ப இதைக்கேட்டுப்பாருங்கோ - அப்ப வந்த சனத்திட்ட... காம்போ? சோசலோ? ரெட்குறஸோ? எண்டு இங்கேயே பிறந்து வளந்தவங்கள் மாதிரி கேப்பினம். அப்பவெல்லாம் ஒண்டாய் இருந்த சனம் காலப்போக்கிலே வதிவிட வசதி, நெஷனாலிட்டி கிடைச்சவுடன இப்ப என்ன சொல்லுகினம் தெரியுமே நாங்கள் எனி தனிய எங்கையும் எங்கட சனம் இல்லாத இடமாய் இருக்கப்போறம் என்னுகினம். எங்கட தமிழ்சனத்தோட இருந்தால் பிரச்சினையாம். இதை வெள்ளையன் சொன்னாலும் பறுவாயில்லை. தமிழனே இப்பிடி சொன்னால் எப்பிடி இருக்கும் பாருங்கோ. தமிழரைக்கண்டால் பிடிக்காது. தமிழ் படிக்கப் பிடிக்காது. தமிழ் புத்தகங்கள், பேப்பர் பிடிக்காது எண்னுவினம் அப்படி எண்டால் வெள்ளையனோட எண்டாலும் சேர்ந்து வாழுகினமோ அதுவும்மில்லை கேட்டால் அவங்களின்ட கலாச்சாரம் சரியில்லை என்னுகினம். வெள்ளையனின்ட புத்தகம், பேப்பர் வாசித்தாலும் விளங்காது அவையளுக்கு. இப்பிடி இருக்கேக்க இப்பிடிப்பட்ட தமிழரிண்ட நிலமை எங்கபோய் முடியுமோ தெரியாது. "அகதி" எண்ட சொல்லுக்கு ஏற்றமாதிரி வாழ்ப்போகினமோ? அதைவிட பெரிய பகிடி என்ன வெண்டால் தமிழராலேயே உழைக்கிற தமிழர் சிலரும் தமிழரை கண்டால் பிடிக்காது எண்டு சொல்லுகினம். தமிழரை பிடிக்காத தமிழருக்கு தமிழ்சாப்பாடுமல்லே பிடிக்கக்கூடாது. ஆனால் அதுபிடிச்சிருக்கு பாருங்கோ. பங்கு இறைச்சி, யாழ்ப்பாண முருங்கைகாய், மரவள்ளக்கிழங்கு கறுத்தக்கொழும்பான்மாம்பழம் எண்டு வடிவாய் வெட்டுவினம் கண்டியலே. இதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு "தமிழரிண்ட சாப்பாடு நல்ல மலிவுச்சாப்பாடு" பாருங்கோ. இப்பிடி எங்கட சனம் போற போக்கை பார்த்தால் எங்க போய் முடியுமோ தெரியாது. தமிழரைக்கண்டால் தெரிந்தும் தெரியாதவர் போல், தமிழரைக்கண்டால் புரிந்தும் புரியாதவர்போல், எங்கட சனம் வாழவேண்டியதாய் போட்டுது. நாட்டுப்பிரச்சனை தீர்ந்தாலும் இப்பிடியான புதுப்புது பிரைச்சினைகள் துவங்கீட்டிது பாருங்கோ. இப்பிடி இருக்கிற ஆட்க்களை எப்பிடி திருத்தமுடியும். "கெடுகிறன் பந்தயம் பிடி" என்னுறவையோட எப்பிடிப்பாருக்கோ கதைக்கமுடியும். உப்பிடியான ஆட்க்கள் தானாத்திருந்தவேனும் இல்லாட்டி திருத்தப்படவேனும் என்னுறதுதான் ஐடியா ஐயாசாமின்ட ஐடியா. எதுக்கும் இப்பபோட்டு பிறகு வாறன்... எல்லாருக்கும் மங்களம்முண்டாகட்டும்.
  12. பழைய நாடுகளும் அவறின் புதிய பெயர்களும் 1.டச்சு கயானா --- சுரினாம். 2.அப்பர் வோல்டா --- புர்க்கினா பாஸோ 3.அபிசீனியா --- எத்தியோப்பியா 4.கோல்டு கோஸ்ட் --- கானா 5.பசுட்டோலாந்து --- லெசதொ 6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா 7.வட ரொடீஷியா --- ஜாம்பியா 8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே 9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா 10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட் 11.சாயிர் --- காங்கோ 13.சோவியத்யூனியன் --- ரஷ்யா 14.பர்மா --- மியான்மர் 15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ் 16.சிலோன் --- ஸ்ரீலங்கா 17.கம்பூச்சியா --- கம்போடியா 18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான் 19.மெஸமடோமியா --- ஈராக் 20.சயாம் --- தாய்லாந்து 21.பார்மோஸ --- தைவான் 22.ஹாலந்து --- நெதர்லாந்து 23.மலாவாய் --- நியூசிலாந்து 24.மலகாஸி --- மடகாஸ்கர் 25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல் 26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா 27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய் 28.அப்பர் பெரு --- பொலிவியா 29.பெக்குவானாலாந்து --- போட்ஸ்வானா
  13. ஐடியா ஐயாசாமி நான் சீட்டு பிடித்தால் சேருறாங்களும் இல்லை! என்னை சீட்டில சேக்கிறாங்களும் இல்லை!! பிள்ளையள் நீங்கள் என்னை மறந்தாலும் நான் உங்களை மறக்க மாட்டன். ஏன் தெரியுமே? என்ர இனத்தை என்னால் மறக்க முடியுமே! தான் ஆடாவிட்டாலும் தன்ர சதை ஆடும் எண்டகனக்கா எங்கட இனம் என்ர இனம்தானே. ஆனால் சிலசனம் இங்க ஐரோப்பாவில தன்ர இனத்தை கண்டால் நாயை கண்ட நாய் உறுமின கணக்கா உறுமுதுகள். இதைத்தான் நாய்க்குணம் எணடு சொல்லுறதோ தெரியவில்லை. அது கிடக்கட்டும். இப்ப நான்சொல்லவந்த விசயத்தை விட்டுட்டு எதேதோ அலட்டுறன். இதைத்தான் எங்கடசனம் அலட்டல் குணம் எண்டு சொல்லுறவையோ தெரியாது. நேற்று எங்கட சுந்தரத்தான் கவலையாய் வந்தான் கவலை என்டாலும் கவலை பேய்க்கவலை கண்டியலே. என்னடாப்பா சுந்தரம் கவலையாய் வாறாய் ஏதும் காசுப்பிரச்சனையோ எண்டு கேட்டன். இல்லை அண்ண என்னை ஒருத்தரும் சீட்டுக்கு சேர்க்கினமில்லை எண்டான். உன்னை யாரடாப்பா சீட்டுக்கு சேர்க்கமாட்டன் எண்டது நீயும் வேலை உன்ர மனுசியும் வேலை அதால நீ ஒழுங்காய் சீட்டுக்காசை கட்டுவாய்தானே எங்கட ஊரிலை எண்டால் இரண்டுபேரும் வேலைசெய்தால் கட்டாயம் அவர்களுக்குத்தானே முதலிடம் எண்டு சொல்லுவினம். அது எல்லாம் ஊரிலை தான் அண்ண இங்கசீட்டுப்பிடிக்கிற ஆட்கள் சீட்டுப்பிடிக்க வாற ஆட்களிண்ட நிலமையை அவையலுக்கு தற்சமையம் உள்ள கஷ்டங்கள் இதுகளை பார்த்துத்தான் சேர்ப்பினம் எண்டான். நல்ல கொள்கையாய் இருக்கு கஷ்டப்படுபவர்களுக்கு முதலிடம் கொடுக்கிறவன்களுக்கு கோவில் கட்டியல்லே கொண்டாட வேண்டும் எண்டன். தாச்சியார் எண்டால் சீட்டுக்கு பொறுப்பா ஒருத்தர் இருப்பார். அவறைத்தான் உந்தப்பேர் சொல்லிக் கூப்பிடுறது. உந்தப்பதவி கிடைச்சவையில எழும்பின் ஆட்களும் உண்டு தலைகுப்பிற விழுந்த ஆட்களும் உண்டு பாருங்கோ. நான் அவனிட்ட கேட்டன் கஷ்டப்பட்ட ஆட்களைத்தானே சீட்டுக்கு சேற்ப்பம் எண்ட கொள்கை உள்ள ஆட்களுக்கு சப்போட்டா கதைச்சால் அதுக்கு நீ ஏன் கோவப்படுகிறாய் எண்டு கேட்டன். அப்பதான் அவன் விஷயத்தை வடிவாய் விபரமாய் சொன்னான். அண்ணை ஊரிலைதான் இரண்டுபேரும் வேலை செய்தால் சீட்டுக்கு சேர்ப்பினம். இங்க அப்படியில்லை. இங்க சீட்டுக்குசேருபவர் குடும்பத்திலை ஒரு ஆள்தான் வேலை செய்ய வேணும். அதோட சீட்டுக்கு சேருறவற்றை குடும்பத்திலையாறாவது வந்து கொழும்பிலை லொட்ஐpலையோ இல்லாட்டில் ரஷ்சியாவிலையோ தாய்லாந்திலையோ நீண்டு இங்கவர அவதிப்பட்டுக் கொண்டிருக்கவேணும். அடிக்கடி ரெலிபோன் அடித்து காசு அனுப்பச்சொல்லி கேட்டபடி அறுக்கவேணுமாம் இப்படியான பிரச்சனை உள்ள ஆட்களைத்தான் சேர்ப்பினமாம் எண்டு சொன்னான் பாருங்கோ. நீ சொல்லுறது என்க்குப்புரியுதில்லை சுந்தரம் இதுக்கும் சீட்டுக்கும் என்ன தொடர்பு எண்டு கொஞ்சம் விளக்கி சொல்லடாப்பா? எண்டு கேட்டன். இப்படியான கஷ்டத்திலை இருக்கிறவன்கள் நல்லாக் கழிச்சு கேட்டு சீட்டை எடுத்து அனுப்புவான்கள். அப்பத்தானே தாச்சியாருக்கும் மற்ற சீட்டுக்காறறுக்கும் நல்ல லாபம். அதைவிட்டுட்டு எங்களைப்போல் இரண்டு பேரும் வேலை செய்தால் கடைசியாய்தான் சீட்டை எடுப்பம் எண்டிட்டு என்னை சேர்க்க மாட்டன் என்கிறான்கள் எண்டான். இப்பத்தான் அவன்றை உண்மையானகவலை என்னவெண்டு எனக்க விளங்கிச்சிது. என்க்கு விளங்கியதை உங்களுக்கு விளக்கி சொல்லிப்போட்டன். கஷ்ரப்பட்டவன் சீட்டுப்போட்டு சீட்டால் உயர்ந்தது அங்கே கஷ்ரப்பட்டவனை சீட்டில் சேர்த்து சேர்த்தவன் உயர்ந்தது இங்கே. திருக்குறளை எழுதின வள்ளுவர் இப்ப இங்க வந்தால் இப்பிடித்தான்குறள் எழுதியிருப்பார் பாருங்கோ. ஐரேப்பாவிலே சீட்டு பிடிக்கிறதுக்கு எங்கட ஆட்கள் புதுப்புது சட்டதிட்டம் கொண்டுவந்திட்டினம். சீட்டு பிடிக்காதவனுக்கும் வட்டிக்கு விடாதவனுக்கும் மதிப்பில்லை. அந்த காலத்திலை படிச்சவனுக்குத்தான் மதிப்பு. இந்தகாலத்திலை ஐரேப்பாவிலே பிடிச்சவனுக்கும் விட்டவனுக்கும் தான் மதிப்பு. பிடிச்சவன் என்டால் சீட்டு விட்டவன் எண்டால் வட்டி. இப்ப உங்களுக்கு எல்லாம் வடிவாய் விழங்கியிருக்கும் எண்டு நம்பிறன்... எல்லாருக்கும் மங்களம் உண்டாகட்டும் மீண்டும் அடுத்தமுறை சந்திக்கிறன்.
  14. உலகின் பெரிய பாலைவனங்கள், அமைந்துள்ள நாடு, பரப்பளவு. (சதுரமைல்) 1.சகாரா வடஆப்பிரிக்கா 35,00,000 2.கோபி மங்கோலிய-சீனா 5,00,000 3.படகோனியா தெற்கு அர்ஜெண்டீனா 3,00,000 4.லெஹாரி தென் ஆப்பிரிக்கா 2,25,000 5.கிரேட்சாண்டி மேற்கு அவுஸ்ரேலியா 1,50,000 6.சிஹுவாஹுவான் மெக்சிகோ 1,40,000 7.தக்லிமாகன் சீனா 1,40,000 8.கராகும் துருக்மேனிஸ்தான் 1,20,000 9.தார் இந்தியா 1,00,000 10.கிஸில்கும் கஜகஸ்தான்-உஸ்பெக்கிஸ்தான் 1,00,000
  15. கந்தப்புவும் - சோமண்ணையும் கந்தப்பு: சுந்தரத்தானின் மனுசிக்கு கழுத்து வலியென்று டாக்குத்தரிட்டபோனால். அவர் "வெயிற்றை" குறைக்கச்சொல்லி சொல்லுகிறாராம் சோமண்ணை: சுந்தரத்தானின் மனுசி ஓல்லித்தடி மாதிரி. அதிலையும் இன்னம் வெயிற்றை குறைச்சால் எப்பிடியிருக்கும்? கந்தப்பு: டொக்டர் சொன்னது மனுசியின்ற வெயிற்றை இல்லையாம் சோமண்ணை: அப்ப எதையாம் ? கந்தப்பு: சுந்தரத்தானின் மனுசியின் கழுத்தில இருக்கிற 70 பவுண் தாலிக்கொடி 25 பவுண் தங்கச் சங்கிலியின்ர வெயிற்றாம். சோமண்ணை: ???!!!... ----------------------------------------------------------------------------------------------------------------------------------- கந்தப்பு: ஐரோப்பிய நாட்டில் வாழும் எங்கட பெண்டுகள் இப்ப தங்கட இனத்தவரை கண்டால் கை எடுத்து கும்பிட்டு அதோட கை குலுக்கிதான் வரவேற்கினமாம். சோமண்ணை: தமிழ்கலாச்சாரமும் ஐரோப்பிய கலாச்சாரத்தையும் கடைப்பிடிக்கினம் எண்டு சொல்லுங்கோ ! கந்தப்பு: கலாச்சாரம் கிலாச்சாரம் கலக்கவில்லை. கையெடுத்து கும்பிட்டால் இரண்டு கையிலும் எத்தினை தங்க காப்பு இருக்கு எண்டு தெரியும் கைகுலுக்கினால் எவ்வளவு வெயிற் எண்டு கைகுடுக்கிறவருக்கு புரியும். இது தான் கும்பிட்டு குலுக்கிற சமாச்சாரம். ----------------------------------------------------------------------------------------------------------------------------------- கந்தப்பு: நான் குடிச்சா, எனக்கு என் மனைவி யாருன்னு கூடத் தெரியாது! சோமண்ணை: ஏன்? கந்தப்பு: நான் கவலையை மறக்கத்தானே குடிக்கிறேன்... ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- கந்தப்பு: எங்கட சனத்தின்ர செய்கையால ஐரோப்பா நாறுதாம்! சோமண்ணை: ஓம் ஓம் எங்கட சனத்தின்ர செய்கையால ஐரோப்பா நாறும். எங்கட சனம் ஐரோப்பாவைவிட்டு போனால்.. இங்க கிலீனிங் வேலைக்கு ஆள் இல்லாமலும் ஐரோப்பா நாறும். கந்தப்பு: ???!!!... -------------------------------------------------------------------------------------------------------------------------------------- கந்தப்பு: எங்கட சுந்தரம் சீட்டுப்பிடித்தான் நட்டப்பட்டான். உண்டியல் நடத்தினான் நட்டப்பட்டான். கடைபோட்டான் நட்டப்பட்டான். சோமண்ணை: இப்ப நல்ல பிஸ்னஸ் நடக்குதாம் அப்படியெண்டால் என்ன பிஸ்னஸ் செய்கிறான்? கந்தப்பு: கடைக்குள்ள உண்டியலை வைச்சு கடையை கோயிலாக்கிப் போட்டானாம்.
  16. கடல்களும். அவற்றின் பரப்பளவும் உலகில் உள்ள கடல்களும். அவற்றின் பரப்பளவும் (சதுரக்கிலோமீட்டர்) 1.தென் சீனக் கடல் --- 29,64,615. 2.கரீபியன் கடல --- 25,15,926. 3.மத்திய தரைக் கடல --- 25,09,969. 4.பேரிங் கடல் --- 22,61,070. 5.மெக்சிகோ வளைகுடா --- 15,07,639. 6.ஜப்பான் வளைகுடா --- 10,12,949. 7.ஒக்கோட்ஸ்க் கடல் --- 13,92,125. 8.ஹட்சன் வளைகுடா --- 7,30,121. 9.அந்தமான் கடல் --- 5,64,879. 10.கருங்கடல் --- 5,07,899. 11.செங்கடல் --- 4,52,991. 12.வடகடல் --- 4,27,091. 13.பால்டிக் கடல் --- 3,82,025. 14.கிழக்கு சீனக்கடல் --- 12,52,180. 15.கலிஃபோர்னியா வளைகுடா --- 1,61,897. 16.அரபிக் கடல் --- 2,25,480. 17.ஐரிஸ் கடல் --- 8,650. 18.செயிண்ட் லாரன்ஸ் வளைகுடா --- 2,28,475
  17. படம்: மின்னலே அழகிய தீயே
  18. நன்றி சுவி அண்ணா. தாய் மண்ணே வணக்கம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  19. உலகப் போர் ஆசிரியர்: 2ம் உலகப் போர் தோன்றக் காரணம் என்ன? மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம் திருத்தி 2ம் தடவை நல்ல போரா நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்! --------------------------------------------------------------------------------------------------------------------------------- ஈ மொ‌ய்‌க்கறது டாக்டர் என் நெத்தியில ஈ ஒண்ணு வந்து உக்காந்துட்டு போக மாட்டேங்குது! அது செத்த ஈ. ஒண்ணும் தொந்தரவு பண்ணாதே? அது தொந்தரவு பண்ணல்ல டாக்டர், அத மொய்க்கறதுக்கு ஒரு 200 ஈ வருது பாருங்க அதுதான் பிரச்சனையா இருக்கு! டாக்டர்:?1?1 ---------------------------------------------------------------------------------------------------------------------------- செட் பல் உங்க பல் சுத்தமா டேமேஜ் ஆகியிருக்கு. செட் பல்தான் வைக்கணும், அதுக்கு 10000 ரூபா ஆகும். 10000 ரூபா ஆகும்னா அதுக்கு நான் ஒரு நல்ல நெக்லஸ் எடுத்துடுவேனே டாக்டர். ஆனா உங்க சிரிப்பே போயிடுமே. நெக்லஸ் போட்டுகிட்ட அப்புறம் யார் என்னோட பல்ல பாக்கப்போறாங்க டாக்டர். ------------------------------------------------------------------------------------------------------------------------------------ மும்தாஜ் ஷாஜகான் மும்தாஜ் நினைவாக தாஜ்மகால் கட்டினான்.... மடப்பய... நானா இருந்தா மும்தாஜ் நினைவாக அவ தங்கச்சிய கட்டியிருப்பேன்.
  20. உன் சமையலறையில் நான் உப்பா சக்கரையா படம்: தில் இசை: வித்யாசாகர் பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சுஜாதா வரிகள்: கபிலன் உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா? நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா? (உன் சமையல்..) நீ விரல்கள் என்றால் நான் நகமா மோதிரமா? நீ இதழ்கள் என்றால் நான் முத்தமா புன்னகையா? நீ அழகு என்றால் நான் கவியா ஓவியனா? (உன் சமையல்..) நான் வெட்கம் என்றால் நீ சிவப்பா கன்னங்களா? நான் தீண்டல் என்றால் நீ விரலா ஸ்பரிசங்களா? நீ குழந்தை என்றால் நான் தொட்டிலா தாலாட்டா? நீ தூக்கம் என்றால் நான் மடியா தலையணையா? நான் இதயம் என்றால் நீ உயிரா துடித்துடிப்பா? (உன் சமையல்..) நீ விதைகள் என்றால் நான் வேரா விலைநிலமா? நீ விருந்து என்றால் நான் பசியா ருசியா? நீ கைதி என்றால் நான் சிறையா தண்டனையா? நீ மொழிகள் என்றால் நான் தமிழா ஓசைகளா? நீ புதுமை என்றால் நான் பாரதியா பாரதிதாசனா? நீ... நீ தனிமை என்றால் நான் துணையா தூரத்திலா? நீ துணைதான் என்றால் நான் பேசவா யோசிக்கவா? நீ திரும்பி நின்றால் நான் நிக்கவா போய்விடவா? நீ போகிறாய் என்றால் நான் அழைக்கவா அழுதிடவா? நீ காதல் என்றால் நான் சரியா தவறா? உன் வலது கையில் பத்து விரல்... பத்து விரல் என் இடது கையில் பத்து விரல்.... பத்து விரல் தூரத்து மேகம் தூறல்கள் சிந்த தீர்த்த மழையில் தீ குளிப்போம்..
  21. வன்னி காட்டு வரிசை புலி
  22. படம் : நெஞ்சில் ஓர் ஆலயம் - 1962 குரல் : பி.சுசீலா முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ (முத்தான) சின்னஞ்சிறு சிறகுகொண்ட சிங்காரச் சிட்டல்லவோ செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ மாவடுக் கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ பூவின் மனமல்லவோ பொன் போன்ற குணமல்லவோ (முத்தான) வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ தாழம் குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ மாலைப் பொழுதல்லவோ வந்தாடும் செண்டல்லவோ (முத்தான)
  23. நள தமயந்தி பாடல்: என்ன இது என்ன இது இசை அமைத்து பாடியவர்: ரமேஸ் விநாயகம்
  24. புலி புலி தமிழ் புலி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.