Everything posted by கிருபன்
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
சாத்தானின் தாசியன் - பொன்.வாசுதேவன் ஆம் இன்றைக்கு எப்படியாவது கடவுளைக் கொன்றுவிட திட்டமிட்டிருக்கிறேன் இனியும் பொறுமையில்லை முழுமையாக உதிர்ந்து விட்டன சகிப்புத்தன்மையின் செதில்கள் வந்துவிட்டார் கடவுள் எதிர்பார்த்த தருணம் நெருங்கிவிட்டது பின்புறமிருந்து முகத்தில் துணியைப் போர்த்தி வசமான பிடியுடன் இறுக்குகிறேன் திமிறிக் களைத்து தோற்று உடல் தளர்ந்து பிரிகிறது கடவுளின் உயிர் குரூரத் திருப்தியோடு கோரப்பற்களில் வழியும் இரத்தத்தை சுவைத்தபடி தொலைவில் வந்து பார்க்கிறேன் தகன மேடையில் யாரோ கிடத்திக் கொண்டிருக்கிறார்கள் எனது உடலை. http://www.aganazhigai.com/2010/04/blog-post_20.html
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
http://www.raaga.com/player4/?id=201515&mode=100&rand=0.691742492443679
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
அறிவிலி பற்றி எரிகையிலும் பூ பூக்க உன்னால் மட்டுமே முடியும்! 'மத்தாப்பூ'! சுற்றி எரிகையிலும் உள்ளே, பூகம்பம் வெடிக்கையிலும் சொர்க்கத்தில் இருப்பதாய் பாசாங்கு பண்ண என்னால் மட்டுமே முடிகிறது! எள்ளி நகையாடும் எல்லோரையும் ஏதேதோ கதைக்கிறாரென செவிடு பாய்ச்சுவது எப்படி அகந்தையாகும்? புறம் பேசுதல் தவறெனப்படாத உலகத்தில்.... பாசமுடன் விரல் பிடித்து நடக்க குழந்தைகளே பிடிக்கிறது எனக்கு! கோரிக்கையோ கட்டளையோ இல்லாத செல்லச் சிணுங்களில் சிக்குண்டு சிரிப்பதை மன முதிர்ச்சி இல்லையென்பதா? செயற்கையாய் சிரித்து சிரித்து கண்ணில் நீர்வர மெய்யாய் சிரித்தது எப்போது? நினைவேயில்லை!! வலி நிரப்பி வடித்த வார்த்தைச் சித்திரமெல்லாம் அரிதாய் வாசிக்கக் கிடைக்கையில் அதே காயாத குருதி வாசனை! கிழிக்கப்பட்ட இதயம் இன்னும் தைக்கப்படவேயில்லை! சுயமெனும் இருள்வெளி தாண்டி புறவெளி உலவக் கிடைத்த வாய்ப்புகளெல்லாம் வாகாய் வரிசையில் நிற்கின்றன! விரும்பிய திசை எதுவென தேர்ந்து செல்லும் மனதிடமின்றி.... கிழிக்கப்பட்ட நாட்குறிப்புகளை கணக்கெடுக்கும் மனசாட்சி ஏனோ, வாழப்படாத எஞ்சிய காலத்தை வசப்படுத்த முயல்வதேயில்லை! கூர்மங்கிய நாக்குகளினால் குத்தப்பட்ட சொற் காயங்கள்! உயிர் நீங்கலாக மற்றதை மாய்த்தும் அவர் மனம் நோகுமென பதிலடி தராத பரிதாப தருணங்கள் இந்த அறிவிலி வாழ்க்கையில் அனேகம் நிகழ்வதால் இப்பெயர் பெற்றேன் காரணம் அறிக! http://kayalsm.blogspot.com/2010/01/blog-post_19.html
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
நானும் காற்றில் கத்தி வீசுகிறேன் நானும் காற்றில் கத்தி வீசுகிறேன் யாரின் முகமூடி கிழிக்கவோ திறந்த முகத்தில் குத்தி கூர்பார்கவோ அல்ல எமக்கான விளையாட்டு காற்றில் கத்தி வீசுவது என் தூரம் அறிந்தே வீசுகிறேன் எல்லைக்கு உட்பட்டு மழுங்கிய கத்தி கொண்டே வீசுகிறேன் காற்றை கிழிக்கும் ஓசை எனக்கானது காற்றின் அறைகூவல் வீசட்டும் மணலில் கத்தி சொருகி நிலை கொண்டிருப்பேன் அது ஓயும்வரை ஒளி, ஒலி பிழை இருக்கலாம் காற்றை கிழிப்பதில் இருக்கிறது விளையாட்டின் வெற்றி எனக்கும் பிரிகையில் காற்றுக்கும் இதுவரை தோற்றாலும் இது ஒரு விளையாட்டு அவ்வளவே! http://pakkam5.blogspot.com/2006/05/blog-post_30.html
-
பெயர் மாற்றங்கள்.
காவாலியின் கருத்தை வழிமொழிகின்றேன்..
-
பெயர் மாற்றங்கள்.
இல்லை. நயன்தாராவுக்கு கோயில் கட்டும் தலைப்பில் உள்ளதை வாசித்து இங்கு வந்து பார்த்தபோது "கிளிக்" பண்ணிவிட்டது. எழுதாமல் இருக்கமுடியவில்ல!
-
பெயர் மாற்றங்கள்.
ஐயா. உங்களைத் தாக்கி எனக்கு ஒன்றும் நன்மை விளையப்போவதில்லை. கருத்துக்கு பதில் கருத்து வைத்தாலே தாக்குகிறார்கள் என்று நினைக்கக்கூடாது..
-
பெயர் மாற்றங்கள்.
கவனம். பின்வளத்தால கூப்பிட்டால் நல்லா இருக்காது!
-
பெயர் மாற்றங்கள்.
எனது பெயரையும் தமிழில் "கிருபன்" என்று மாற்றிவிட முடியுமா?
-
பெயர் மாற்றங்கள்.
பழசான பின்னரும் மாப்பிளையாக இருக்கமுடியாது! கலைஞன் கொலைஞனாக மாறாவிட்டால் சரி!