Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. உங்கள் தரவுகள் எல்லாம் server இல்தான் பதியப்படும் என்று நினைக்கின்றேன். எதற்கும் ஒபரா மினியை தரவிறக்கம் செய்து சரிபார்த்துக்கொள்ளுங்கள்! opera mini இல் தமிழ் எழுத்துரு தெரியாவிட்டால்: enable the bitmap font settings procedure for enable the bitmap font setting. 1. Open the address about:config in your opera mini browser (in mobile). This will open the browser’s power setting option page. 2. Scroll down until you see something like this: Use bitmap fonts for complex scripts. 3. Set the above option value to yes and then click on Save button. restart the browser. you will see the Tamil webpages .
  2. நான் பாவிக்கும் opera mini இல் திரியிலுள்ள புதிய கருத்தைத்தான் காட்டுகின்றது! கடவுச் சொல்லைப் பாவித்து நுழைந்துதானே பார்க்கின்றீர்கள்!
  3. முடியுமே! எந்தத் தொலைபேசியை என்பதைப் பொறுத்தது!! நான் பாவிக்கும் நொக்கியா (லூமியா அல்ல!) இல் கூட பார்க்கமுடிகின்றது (ஒபராவில்). "கருத்துக்களம்" என்று நடுவில் தலைப்பு காட்டுகின்றது. அதற்கு வலதுபுறமாக சிறிய சதுர வடிவில் உள்ள பட்டனை (விண்டோஸ் பட்டன் போன்றது) அழுத்தினால் பல உப பிரிவுகளைக் காட்டுகின்றது, New Content ஐ அழுத்தினால் இறுதியாகக் கருத்துக்கள் பதிந்த திரிகளைக் காட்டும்!
  4. [size=6] முடிவுறாத இருவருக்குமான முரண் [/size] ஜே.டேனியல் [size=4]ஒரே[/size] [size=4]ஒரு முறை[/size] [size=4]வருகிற நாள்[/size] [size=4]எனக்கும்[/size] [size=4]உனக்குமான[/size] [size=4]நாளாக இருக்கும்.[/size] [size=4]முரண்பாடுகள் முற்றி[/size] [size=4]தலை வீங்கி[/size] [size=4]வார்த்தைகள் வழிந்து[/size] [size=4]இதயத்தை நிரப்புகிறபொழுது[/size] [size=4]நம்[/size] [size=4]இருவருக்குமான[/size] [size=4]பாதை[/size] [size=4]இரு வேறு[/size] [size=4]திசைகளைக் காட்டி[/size] [size=4]கொக்கரிக்கும்,[/size] [size=4]கடந்த காலம் முழுக்க[/size] [size=4]நடந்துகொண்டதை[/size] [size=4]நினைத்துக்கொண்டிருக்கும்பொழுதே[/size] [size=4]ஒரு[/size] [size=4]மழைத் துளியின் வேகமாக[/size] [size=4]எதிர்காலம்[/size] [size=4]முடிந்திருக்கும்.[/size] [size=4]நானோ[/size] [size=4]நீயோ[/size] [size=4]எங்கு இருந்தோம் என்பது[/size] [size=4]நம் இருவருக்குமேத் தெரியப்போவதில்லை.[/size] http://nampuzhuthi.b...og-post_28.html
  5. [size=6]பழுதான பாலம்[/size] [size=4]ராகவன்[/size] [size=4]பழுதான பாலம் என்று தான் தோன்றுகிறது அப்புறத்திற்கு கொண்டு சேர்க்குமா என்று தெரியவில்லை கடக்காமலே பார்த்துக் கொண்டிருந்ததில் எதிரில் ஒருவர் கடந்து கொண்டிருந்தார் விரைந்து கடந்தால் இருவரை தாங்குமா என்று சந்தேகம் வந்த்து கொஞ்சம் காத்திருந்தேன் ஏதோ பேசிக் கொண்டே வந்த இரண்டு பேர்கள் கடக்க ஆரம்பித்தார்கள் நானும் சேர்ந்து கொண்டால் பிடித்திருக்கும் கயிறுகள் அறுபடலாம் அல்லது பாலத்தின் பலகைகள் முறியலாம் மறுபடி காத்திருந்தேன் அவர்கள் என்னை வேடிக்கையாய் பார்த்து கடந்து சென்றார்கள் இப்போது பாலத்தில் யாருமில்லை தனியாய் கடக்க தயக்கமாய் இருந்தது திரும்பவும் ஊருக்குள் நகர்ந்து வேற்று வழி இருக்கா என்று விசாரிக்க ஆரம்பித்தேன்.[/size] http://koodalkkootha...01_archive.html
  6. [size=6]Untitled[/size] டிசே தமிழன் ஒவ்வொருவரின் வருகைகளும் கண்காணிக்கப்பட்டு அவர்களின் முன்/பின் கதைகள் மூச்சுக்கூட விடமுடியா பெரும்புகையாய் கிளம்பும் விழாக்கள் மனதிற்கு உவப்பில்லாதவை பிரியமானவர்களின் விருந்துகள் புறக்கணிக்கமுடியாதன. பிறரைக் காயப்படுத்தித்தான் நம்பிக்கைகள் வாழவேண்டுமென்பதில்லை மனிதர்கள் முக்கியம் எனக்கு. நெளிநெளியான வர்ணம்பூசிய கூந்தற்கற்றைகளை அலட்சியமாய் ஒதுக்கிவிடும் பெண்களை இன்னொருமுறை திரும்பிப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை சூழலின் இறுக்கந்தளர்த்தி சிறுபுன்னகையுடன் இவர்களை இரசிக்கத்தொடங்கினால் விழாக்களின் உயிர்ப்பை அறிந்துகொள்ளலாம் சிலவேளைகளில் இன்றைய விருந்தில் தேனீக்களாய் பறந்துதிரிந்து அறுசுவையுணவு பரிமாறிய வளரிளம்பெண்கள் சிலிர்ப்பூட்டினர் கோடைகாலத்து சிறுமழைபோல அவர்களுடன் உரையாடுவதற்கான காலமும் தனிமையும் கனிந்தபோதும் இப்படி இயல்பாய் சிரித்துப்பழகுபவர்களை 'வேசிகள்' என விளித்து நக்கலும் (பாலியல்) சேட்டைகளும் செய்யும் என்னைப்போன்றவர்களின் நினைவுவர விலகிப்போகின்றேன் புன்னகைகளுடன் முகஞ்சுழிக்காது அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றும் அவர்களை ஒரு மேசையில் அமர்த்தி சில மெழுகுதிரிகளை ஒளிரவிட்டு ஆறுதலாய் உணவு பரிமாறும் ஆசை எழுகிறது எனக்குள் விழாவின் முடிவில் எஞ்சியிருந்த அலங்கரிக்கப்பட்டிருந்த பலூன்களை ஒன்றாய் இணைத்து நிலவினொளியில் பறக்கவிடுகையில் குதூகலத்துடன் ஆடத்தொடங்குகின்றான் அண்ணாவின் மகன் அவன் நடனம் கண்டு கலகலவெனச் சிரிக்கும் அந்தப்பெண்களை அவதானிக்கையில் என் ஆயுட்காலத்தின் எந்தக்கணத்திலும் பெண்களை வெறுக்கமுடியாது போலத்தான் தோன்றுகின்றது http://djthamilan.bl...5/untitled.html
  7. அடடா.. புத்தகம் வாங்கிப் படிக்கிற பழக்கம் உங்களுக்கும் வந்துவிட்டதா? சொல்லவே இல்லை. நான் 50 Shades triology படித்து முடித்துவிட்டேன் (ASDA இல் பத்து பவுண்ட்ஸ்களுக்குக் விற்கின்றார்கள்)!!
  8. நான் இணைத்த கவிதைக்குப் பின்னர் வந்த ஒரு கருத்துக்குப் பின்னூட்டம் இட்டீர்களே. அதுதான் உண்மையில் வக்கிரம்!
  9. மனதைக் கவர்ந்த ஒரு நவீனத்துவக் கவிதையை இணைத்தேன். சிலர் பழமைவாதக் கருத்துக்களைப் பதிந்தனர். சிலர் யதார்த்தவாதக் கருத்துக்களைப் பதிந்தனர். இன்னும் சிலர் பின்நவீனத்துவக் கருத்துக்களைப் பதிந்து பின்னர் குத்துக்கரணம் அடித்து பழமைவாதத்திற்குப் போயுள்ளனர்.. தமிழர்கள் அடிப்படையில் பழமைவாதிகள் என்பது உண்மைதான்!!!
  10. [size=6]சித்திரவதைக் கூடத்திலிருந்து [/size] - அஜித் சி. ஹேரத், தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் [size=5]சித்திரவதைக் கூடத்திலிருந்து[/size] [size=5]அடுத்த கணம் நோக்கி எதிர்பார்ப்புக்களேதுமற்று பார்த்திருப்பதைத் தவிர முதலாமவனாகவோ இறுதியானவனாகவோ ஆவதற்கு நான் பிரார்த்தித்திருக்கவில்லை[/size] [size=5]எவ்வளவுதான் சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்தபோதிலும் அவர்களது அன்பற்ற குட்டுக்களிலிருந்து தப்பிக்கொள்ள முடியவில்லை சித்திரவதைக் கூடத்தில் கழித்த முதல் மணித்தியாலத்திலேயே எண்ணங்கள் காணாமல் போயின[/size] [size=5]துயர்தோய்ந்த இறந்த கால நினைவுகள் உடல்சதையைச் சுழற்றும் மோசமான வேதனைகள் மரண ஓலங்கள் அசாதாரண உருவங்களோடு மனங்கவர் வர்ணங்கள் பயங்கரக் கனவுகளிடையே உணர்வுகளைத் தூண்டுகின்றன[/size] [size=5]பயங்கரத்தைத் தவிர இங்கிருப்பது மனிதத்தன்மையில் கையேதுமற்ற நிலை சித்திரவதைக் கூடத்தில் சந்திக்கக் கிடைக்கும் ஒரே அன்பான தோழன் மரணமே அவனும் எங்களது வேண்டுகோளை உதாசீனப்படுத்துகிறான்[/size] [size=5]நேற்றிரவு கொண்டு வரப்பட்ட யுவதியின் குரல் படிப்படியாகத் தேய்ந்தழிகிறது சேவல் கூவ முன்பு மூன்றாவது முறையாகவும் எவரையும் தெரியாதெனச் சொன்ன சகோதரி காட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக அச்சம் தரும் மரணத்தையும் கெஞ்சுதலுக்குப் பதிலாக சாபமிடுவதையும் தேர்ந்தெடுத்த சகோதரி எனதிரு கண்களையும் கட்டியிருக்கும் துணித் துண்டு ஈர்த்தெடுத்த இறுதிக் கண்ணீர்த் துளிகளை சமர்ப்பித்தது உன்னிடமே[/size] [size=5]உற்சாகமூட்டும் மேலதிகக் கொடுப்பனவு பகலுணவிற்காகக் கிடைத்த யோகட் கோப்பையின் அடிவரையில் நக்கிச் சுவைத்த படைவீரன் அதை எறிந்து மிதிக்கிறான் அடுத்தது யார்[/size] [size=5]இங்கு வாழ்க்கை இதுதான் இங்கு மரணம் எது? முகமொன்றற்ற பிணமொன்று மற்றும் தலைப்பென்ற செய்தியொன்று மட்டும்[/size] [size=5]பட்டியலிடப்படாத வாழ்க்கை பட்டியலிடப்படாத மரணத்தோடு வந்து சேர்கிறதுபைத்தியக் கனவுகளோடு[/size] [size=5]நான் எத்தனை தடவை இங்கிருந்து தப்பித்துப் போயிருக்கிறேன் எனினும் நான் இங்கேயேதான் இந்தத் தெளிவு கூட கண்டிப்பாகப் பயங்கரமானது[/size] [size=5]இங்கு படுகொலை செய்யப்பட்ட அனேகருக்கு மனித முகமொன்று இருந்தது எனது இறுதிச் சாட்சியாக எனக்குச் சொல்ல இருப்பது அது மட்டுமே[/size] http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5724
  11. ஒருவருக்கு பார்வைக் கோளாறு.. மற்றொருவருக்கு வயசுக் கோளாறு.. எல்லாக் கோளாறுகளையும் அறுக்க கோளறு பதிகத்தில் இருந்து ஒன்று! செப்பிள முலைநன் மங்கை ஒருபாகமாக விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
  12. ஏன் கனவில் கவிதை எழுதியிருக்கலாம் என்று நினைத்தீர்களா?
  13. ஒருவருக்கு ஆபாசமாகத் தெரிவது இன்னொருவருக்குக் கலை அம்சமாகத் தெரியலாம். எல்லாம் பார்வையைப் பொறுத்தது. வெளிவேஷதாரிகளைவிட வெளிப்படையானவர்கள் பரவாயில்லை! மேலும் யாழ் களத்தின் விதியை மீறி இருந்தால் தாராளமாக Report பட்டனை அழுத்தி உங்கள் உள்ளக்குமைச்சலைக் குறைத்துக்கொள்ளலாம்! நான் இங்கு எதையும் திணிக்கவில்லை. தலைப்பில் உள்ளதுபோன்று மனதைக் கவர்ந்து இருந்ததால் இணைத்தேன். உங்களுக்குக் குப்பையாகத் தெரிவதில் ஒரு பிழையும் இல்லை. ஆனால் எல்லோருக்கும் குப்பையாகத் தெரியும் என்று எதிர்பார்க்கக்கூடாது!
  14. [size=6]முலைகளின் ஆல்பம்[/size] [size=4] சுகுணா திவாகர் [/size] [size=5]பேருந்து படிக்கட்டு விளிம்பில் நின்றுகொண்டிருந்த நான் சடாரென்று கோணம் மாற்றினேன் எனக்கும் மேலே கைதூக்கி நின்ற பெண்களின் மார்புகளை ரசிப்பதற்காய். சற்றுநாள் முன்னரே மணமாகித் தாய்வீடு வந்திருந்த எதிர்வீட்டுப்பெண்ணின் மார்பு ரசித்தேன் மாசமாயிருப்பாளோ என்னும் உறுத்தலோடேயே. கல்லூரியில் கண்ட கழுத்துமேல் துப்பட்டா போர்த்திய கொழுத்த முலைகள் இன்றைய இரவை ஈரப்படுத்தக்கூடும். திரைகளெங்கும் நாயகிகள் முலைகளாய் உணரப்படுகிறார்கள். அடிக்கடி ஆடைகளைச் சரிசெய்துகொள்வது வேறு நம் கனவுகளின் பரப்பை அகலப்படுத்துகின்றன. மார்புகள் இல்லாது போனால் எல்லாப் பெண்களோடும் உறுத்தலின்றிப் பழகலாம் போலும். எப்போதேனும் தட்டுப்படும் மார்புகளின் ஸ்பரிசம் கிளர்ச்சியூட்டும் வேளையில். இப்படி எண்ணத்தோன்றும் வெறித்து நோக்கும் ஆண்களின் கண்களே முலைக்காம்புகள் ஆயினவோ.[/size] (நன்றி : கருப்பு 2002) http://midakkumveli..../blog-post.html
  15. பலர் வாங்கத் தயாராக இருப்பதால், பெயருக்கு முன்னுக்கோ, பின்னுக்கோ இடலாம்!
  16. [size=6]யாதுமாகி …[/size] [size=4]ஷம்மி முத்துவேல்[/size] [size=5] நாற்புறச்சட்டகத்தின் பின் இருப்பது தெரியாமல் பேசிக்கொள்கிறார்கள் .. நிறமிகளின் பின்னே நரை மறைத்து நிரந்தரமாகவே அவை சென்று விட்டதாகவே நினைத்து கொள்கிறார்கள் … கண்ணோரச் சுருக்கங்களையும் மோவாயின் தளர்ந்த தசைகளையும் நீவி இழந்தவைகளை கண நொடிகளில் பிடித்து விட்டதாக கற்பனை நிஜங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள் குழந்தையிடமும் சிறியவர்களிடமும் மட்டுமே தம் கோபங்கள் மற்றும் மூர்க்கங்கள் விதைத்து இயலாமையை கோபச்ச்சுமைதாங்கியில் சமைத்து பரிமாறுகிறார்கள் .. தோல்விகளை திரையிட்டு மறைத்து வெற்றிவேஷங்களை மட்டுமே வெளியிடுவர் .. புழக்கடை தனதாயின் அதிலும் சுகந்தமே வீசுவதாக பறைசாட்டுவர் … சமயத்தில் ஆன்மீகமும் …சமயத்தில் நாத்திகமும் இவர்கள் இருபோர்வை அணிந்து கொள்வர் … “தன்னை ” சுற்றியே உலகு அமைத்து சூரியனை சுழலவிடுவர் … சற்றே அயரும் நேரத்தில் நீயே நான் எனவும் மாற்றிக்கொள்வர் சிலவரிகளில் நீங்கள் வாசிக்கும் பொருட்டு அவர்கள் உங்கள் அருகிலோ, அல்லது நீங்களாகவோ அல்லது நானாகவோ இருக்கக்கூடும் .. [/size] http://puthu.thinnai.com/?p=11669
  17. [size=5]துரோகம்[/size] சுழியன் இந்த கூர்வாள் நண்பர்களுக்கானது. துரோகத்தால் முதுகில் கிழிக்க பிரத்யேகமாய் வடிவமைத்தோம் நாங்கள் சேர்ந்து, சேர்ந்து விளையாடினோம் துரோகத்தின் ஒவ்வொரு பாடத்தையும் செயல்முறை விளக்கமாய் செய்து, செய்து பார்த்தோம் ஒவ்வொரு முதுகாய் தேடித் தேடி குத்தினோம் உதிரம் தெறிக்க கொலையாகுபவர்கள் பதறிச் சரிவதை நிதானமாய் ரசித்தோம் "ஒருநாள் எங்களுக்குள்ளான பரஸ்பர நம்பிக்கை பொய்க்கும் போது எங்களை நாங்களே குத்திக் கொல்வோம்" .... ... ... ... என ஆவலாய் காத்திருக்கும் உங்கள் முதுகு தான் எங்களின் அடுத்த இலக்கு ! http://suzhiyam.blog.../blog-post.html
  18. திருமணநாள் பரிசுகள் ஆர்.அபிலாஷ் திருமணநாள் பரிசுகள் குழந்தைத்தனத்தால் புத்தொளிர்கின்றன. வருடங்கள் முன் பின் சென்று தூசு படிந்து நிறம் மங்கி வரும் ஒரு குழந்தையின் பாதுகாக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்களைப் போல் இன்று மாலை பழைய பரிசுகளுடன் அமர்ந்திருக்கிறேன். மஞ்சளான மாலை அழுகும் இலைகளின் சலசலப்புடன் இரவில் வெடிக்கும் பூக்களின் வாசனையையும் கொண்டு வருகிறது. மாடி ஜன்னலுக்கு வெளியே நூறு நூறு கட்டிடங்களுக்கு அப்பால் ஒரு சோர்வுற்ற சூரியன் இறுதியாய் ஆஸ்பத்திரிக்கு திரும்பும் தளர்ந்து வீழ்ந்த உடலைப் போல் எதையாவது பற்றிக் கொள்ள விழைகிறான். எதிர்பாராது மழை பெய்யத் துவங்குகிறது தயாரற்ற மனிதர்கள் கூரைகள் தேடி சிதறுகிறார்கள். கால் இடறி தடுமாறுகிறேன் உனது பரிசுப் பொருட்கள் கலந்து விடுகின்றன எனதுடன். மீண்டும் மீண்டும் அவற்றை இரு பகுதியாய் பிரிக்க முயன்று தோல்வியடைகிறேன் பின் காலவரிசைப்படி கலைத்துக் கலைத்து அடுக்குகிறேன். மழை நிற்க வெகுநேரமாகிறது வெப்பம் கிளம்பி பின் பனி பொழியும் போது திகைத்துப் போய் பரிசுப் பொருட்கள் மத்தியில் தற்காலிகமாய் எல்லாரும் மறந்து போன ஒரு குழந்தையைப் போல அமர்ந்திருக்கிறேன். வாசலில் மெல்ல தும்மியபடி நுழைகிறாய். உன்னிடமிருந்து பரிசுப் பொருளை வாங்கி அருகில் வைத்து உனக்கான புதுப் பரிசைக் குவியலில் தேடி தோற்று வேறுவழியின்றி கண்களில் மன்னிப்பை வைத்தபடி அங்கு ஆகப் பழசான பரிசு ஒன்றைப் பொறுக்கி நீட்டுகிறேன் அதில் மிகச்சரியாய் குறிக்கப்பட்டுள்ளது இன்றைய தேதி... http://www.uyirmmai....s.aspx?cid=5483
  19. அழுமூஞ்சியாக இல்லாவிட்டால் முடியும்! More Reply Options ஐ அழுத்திப் பின்னர் அழுத்தினால் முகக்குறிகள் வரும்!
  20. நாம் நல்ல பிள்ளைகள்.. பூச்சி புழுக்களைக் கிண்ட அண்டுவதில்லை! அத்தோடு விசயம் தெரிந்தவர்கள் பொறுப்பாளர்களாக இருப்பதால் பூச்சிகள் பொசுங்கிவிடும்!
  21. விசுகு ஐயா.. எனது கிரகிக்கும் ஆற்றலை நீங்கள் எத்தனை வீதம் கிரகிப்பீர்கள் என்றெல்லாம் நான் கணக்கில் எடுப்பதில்லை! வாசிக்கும் கருத்துக்களில் ஒவ்வொரு வசனத்திற்கும் கருத்துக்கள் எழுதுவதை விட சில முக்கிய வசனங்களிற்கு மாத்திரமே சிலவேளை பதில் எழுதத்தோன்றும்.. என்றாலும் எனக்கும் பன்னாடைக் குணம் தமிழன் என்றபடியால் இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை!
  22. திகில் படங்களை அடிக்கடி பார்த்தால் திடுக்கிட மாட்டீர்கள்! விசுவாசத்திற்காக தூரநோக்குள்ள மாற்றங்களை உள்வாங்காது இருந்தால் யாழும் காணாமல்போகும். யாழைக் காணாமல் போகச் செய்ய யாழுக்கு வெளியிலிருந்து எவரும் வரத்தேவையில்லை. உள்ளே இருப்பவர்களே போதும்!
  23. முகங்கள் ப.பார்த்தசாரதி ஒவ்வொருநாளும் பல முகங்களைக் கையிலேந்தி அலைகிறேன் யாருக்கும் தெரியாமல் அவற்றை மறைத்து வைத்து மீண்டும் அணிந்துகொள்கிறேன். ஒவ்வொருவருக்காய் ஒவ்வொரு முகம் மாட்டி அலைகிறேன். எந்த முகம் என்முகம் என்பது யாருக்கும் தெரியாமல் சமமாக பாவித்து வருகிறேன் ஒருவருக்குத் தெரிந்த முகம் மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பு கொடுக்காமல் கையிலிருந்து மாட்டிக் கொள்கிறேன் சில துளி வினாடிகளில் நல்லவன் கெட்டவன் வஞ்சகன் சாது அப்பாவி வெகுளி என ஒவ்வொருமுகங்களுக்கும் பெயர் வைத்து தினமும் அதற்கு உணவூட்டி வளர்த்து வருகிறேன் ஒரு நாள் அகக்கண்ணாடியில் என் சொந்த முகம் பார்க்கையில் அது வெளிறிப் பழுதடைந்து அழுகி அகோரமாய் என்னைப் பார்த்து சப்தமாய் சிரித்தபடியே இறந்துகொண்டிருந்தது ஒவ்வொருநாளும் பல முகங்களைக் கையிலேந்தி அலைகிறேன் யாருக்கும் தெரியாமல் அவற்றை மறைத்து வைத்து மீண்டும் அணிந்துகொள்கிறேன். http://www.uyirmmai....s.aspx?cid=5448
  24. எனக்குப் பல பச்சைகளை குத்தும் இரகசியம் தெரியும் (ஒரே பெயரில்), ஆனால் சொல்ல்லமாட்டேன்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.