Everything posted by கிருபன்
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
முகமூடிகள் ராமலக்ஷ்மி ஒன்றல்ல இரண்டல்ல ஒருநூறு முகமூடிகள் அணிந்தது அறியாதபடி தோலோடு சங்கமமாகி சதையோடும் எலும்போடும் ஊடுருவி பளபளத்த முகமூடிகளுக்கே எத்தனைப் பாராட்டுக்கள் புகழாரங்கள் அத்தனையும் ரசித்தபடி இரவிலும் களைந்திட மனம்வராத நேசமாகி உயிரோடு ஒன்றிப்போய் உலகுக்கான அடையாளமாகி ஏதோ ஒருநாளில் ஏதோ ஒருசம்பவத்தில் விழித்துக் கொள்கிற ஆழ்மன விகாரம் கிழிக்கத் தொடங்குகிறது முகமூடிகளைத் தன்னிச்சையாக ஒவ்வொன்றாக அன்றி ஒட்டு மொத்தமாக சுற்றம் மறந்து நிதானம் இழந்து மதி மழுங்கி மற்றவர் வருத்தி மனவெறி அடங்கிய வெற்றிக் களிப்பில் எதிரே இருந்த கண்ணாடியை எதேச்சையாய் ஏறிட பேதலித்து அலறுகிறது சுயமுகம் தன்கோரம் தானே காணச் சகியாமல். *** உடைந்து போன பொம்மையைக் கையில் வைத்தபடி விசும்பிக் கொண்டிருந்த குழந்தையைச் சுற்றி இறைந்து கிடக்கும் விளையாட்டுச் சாமான்களைப் போலக் கலைந்து கிடந்தது வீடு கழற்றி எறியப்பட்ட முகமூடிகளால் கலங்கி நின்ற மனதை ஆற்றுப்படுத்த வந்த ஆத்ம பந்தங்கள் தேற்ற மறந்து கழற்றத் தொடங்கின ஆத்திரத்துடன் தத்தமது முகமூடிகளை குவிந்த முகமூடிகளுக்குள் அமுங்கி மூச்சுத் திணறி மீட்கக் கோரி வெளி நீண்ட கையை ஆதுரமாய் பற்றித் தூக்கிவிட்ட மகானுபாவர், ”வருத்தம் விடு! மனிதருக்காகவே படைக்கப்பட்டவைதாம் இவை. சேர்ந்து கிடப்பதில் இன்னும் சிறப்பானதாய்த் தேர்ந்தெடுத்து அணிந்துகொள்ள கிடைத்த வாய்ப்பாகப் பார்” உபதேசித்தார் நழுவத் தொடங்கிய தன் முகமூடியை கெட்டியாகப் பிடித்தபடி. http://www.uyirmmai....s.aspx?cid=3097
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
ஞாபங்கள் முடிவில் ராசை நேத்திரன் சம்பளத்தை நோக்கிய மாத மாத வாழ்க்கை பயணம் எளிதாய் மனித வாழக்கையின் நாட்களை நொடிப்பொழுதில் தின்று விடுகிறது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே வாழ்க்கை பயணம் என்று மாறிவிடுவதில் சாதிக்க பிறந்த மனிதன் எங்கே யோசிக்க சாதனையின் படிக்கட்டுக்களை திடும் என திரும்பி பார்க்கிறேன் பள்ளிப்பருவம் மறக்க தொடங்கி அனிச்சையாய் ஓடிக்கொண்டு இருக்கிறேன் ..... இது போலவே இன்னும் சிறிது நாட்களில் கல்லூரி காலம், உயிர் நண்பனின் நட்பு, உறவின் பாலம் கொஞ்சம் கொஞ்சமாய் தேயத்தொடங்கிவிடுகிறது நாட்காட்டியை போலவே ஞாபங்களும்....... http://www.vaarppu.com/view/2571/
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாத்ஸ்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜவன்னியனுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பெயர் மாற்றங்கள்.
சகாறா அக்கா மேக்கப் போடாமல் எழுதினால் "தம்பி".. மேக்கப் போட்டுக்கொண்டு எழுதினால் "அண்ணா".
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
தனிமை என்னும் மதுபானம்… கவிதா நான் அவளது இறுதி வேர். என்னிடம் இருக்கிறது, அவள் விட்டுச் சென்ற தனிமையின் எச்சங்கள். அவளை புசித்து பெருகிய அவளது தனிமைகள் என்னிடம் தமது ரகசியங்களை வெளியிட்டுக் கொண்டன. புராதான சுவை கொண்ட அந்த தனிமைகளை சிறு மதுக் குவளைகளில் ஊற்றி உங்களுக்கு பருகத் தருகிறேன். உங்கள் போதையின் பிறழ்வுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள் தனிமை தின்ற மீதமாய் அலைந்து கொண்டிருக்கும் அவள். http://neerottam.wor...ae%ae%e0%af%8d/
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நிழலிக்கும் அபிஷேகாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
நகரங்கள் தேவ அபிரா இலையுதிர்காலத்தின் எதிர்பாராத வெப்பம் தவழ்கையில் இந்த நகரத்தை வந்தடைந்தேன். நகரத்தின் காலடியில் நகர்கிறது நதி. கரையோர உணவகங்களில் நடுகுடைகள் விரிந்துள்ளன. முறுகச்சுட்ட பாணில் உருகி வழியும் பாலாடைக் கட்டிகளுக்கருகில் மென் பொன் மதுக்குவளையை இருத்தி நங்கைகள் விரைந்து பரிமாறுகிறார்கள். பங்குச்சந்தை காய்கிறது. வங்கிகள் சரிகின்றன. ஆயினும் கொழுத்த முகங்களின் எண்ணைப்படிவுகளில் இலையுதிகாலச்சூரியன் பளபளக்கிறது. மிதவைப்படகின் தோசைக்கடைகளில் சிறுவர்கள் காத்திருக்கிறார்கள். நூற்றாண்டுகளாக நகரும் ஆற்றின் ஈரத்தைத் தன்காதலியின் உதடுகளுக்குள் விட்டுக்கொண்டிருந்தான் ஒருவன். இலையுதிர்காலத்தின் வெப்பம் தவற விடக்கூடியதா என்ன? நான்கு தசாப்தங்களின் முன்பு இந்த நதிக்கரையில் எதிரி காத்திருந்தான். விமானங்கள் குண்டுகளைப் பொழிந்தன. நினைவுச்சின்னங்களாக நசுங்கிப்போன அந்தக்காலத்தின் கல்லறையில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது "இது எமது நகரம்" என் வாழ்வின் நினைவுத் தடத்தில் உறங்கிக்கிடந்தவென் நகரங்கள் விழித்தன... உறையாதே நடந்து போவென்றன.. காலத்தினூடே பயணம் செய்யும் * நியூற்றினோக்களைத் தேடி குறுகலான சந்துகளினூடே நடந்தேன். நூற்றாண்டுகள் கடந்தும் கடல் கடந்து அள்ளிவந்த செல்வங்கள் இன்னும் சிதறிக்கிடந்தன. தொன்மையை இழந்து நகரத்துள் நசுங்கிக் கிடந்த பூங்காவெளியில் கண்கள் படாமலும் காமம் சுடாமலும் பெண்ணுடல் கிடத்தி வெய்யில் சுகிக்கிறது. என் நகரத்திலோ பூதங்களுக்கஞ்சி ஒடுங்கிய பெண்களின் சாபத்தில் இன்னுமெரிகிறது எரிக்கிறது சூரியன். நினைவுகளின் தகிப்புத்தாளாது நிமிர்ந்து நின்ற நினைவுசின்னத்தின் அடியில் அமர்ந்தேன். அதன் வேர்கள் எத்தனை ஆண்டுகள் நீண்டிருந்தவென்றறியேன். ஆனாலும் அதன் மடியில் இருந்தது ஒரு கவிதை: "இந்த நகரத்தில் அதிக நாள் நான் வாழவில்லை ஆயினும் எனது இளமைக்காலம் இங்கேயிருந்தது நான் எங்கு சென்றபோதும் என்னருகில் இருப்பதும் இந்த நகரமே".* ஓலங்கள் மட்டும் மௌனமாக அலையும் எனது நகரங்களில் என்றாவது ஓர் நாள் நானும் நினவுச்சின்னமொன்றை எழுப்புவேன். ஏனேனில் யுகங்களைக்கடந்து செல்ல விரும்பும் அற்ப மனிதன் நான். மனிதர்களற்ற வெளியில் நுழையும்; சூரியன் விழுந்து சிவப்பாகும் இரவு நதிப்படுக்கையில் நான் சரிந்தபோது, என் காதருகில் கேட்கிறது என் நகரத்தின் ஆழியின் ஓங்காரம். http://thevaabira.blogspot.com/2011/10/blog-post_03.html
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
ஈசலோடாயினும்... 1.ஒரு மழைநாளிரவில் பிறந்த ஈசல் ஒன்று சற்றே எம்பிப் பறந்தது வானில் .. பக்கத்தில் பறந்துகொண்டிருந்த பறவையைப் பார்த்து நானும் ஒரு பறவையென்று பெருமிதம் கொண்டது கொண்ட வினாடியே ஆயுள் தீர்ந்து விழுந்திறந்தது 2.விழுந்த ஈசல் இறக்கும் முன்பு நினைத்தது ஒரு நாள் வாழ்க்கைக்கு எதற்கிந்த சிறகு? http://ezhuththuppiz...og-post_30.html
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
எனது மனங்கொத்திப் பறவை ரவி (சுவிஸ்) ---------------------------------------- இன்று நான் சந்தோசமாயிருக்கிறேன் எனது பிரிய மனங்கொத்திப் பறவையின் மீள்வரவில் நான் இலேசாகிப்போயிருக்கிறேன். நான் எதையும் விசாரணை செய்வதாயில்லை. ஏன் பறந்தாய் ஏன் எனைவிட்டு தொலைதூரம் பயணித்தாய் என்பதெல்லாம் எனக்கு பொருட்டல்ல இப்போ. என் பிரிய மனங்கொத்தியே நீ சொல்லாமலே பறந்து சென்ற காலங்கள் நீண்டபோது என் மனதில் உன் இருப்பிடம் பொந்துகளாய் காயங்களாய் வலிக்கத் தொடங்கியதை அறிவாயா நீ. நீ அறிந்திருப்பாய் நீ இரக்கமுற்றும் இருப்பாய். மீண்டும் உன் கொத்தலில் இதமுற்றிருக்கிறேன் நான் கொத்து கோதிவிடு என் மனதை இதுவரையான உன் பிரிவின் காலங்களில் என் மனம் கொத்திச் சென்ற பறவைகளில் பலவும் என் நம்பிக்கைகளின் மீது தம் கூரலகால் குருதிவடிய எழுதிச்சென்ற வரிகளெல்லாம் வலிகள் ஊர்கின்றன. மறக்க முனைந்து மறக்க முனைந்து தோற்றுப்போகிறேன் நான். நான் நானாகவே இருப்பதற்காய் காலமெலாம் வலிகளினூடு பயணிக்கிறேன். சொல்வதற்காய் எனை மன்னித்துவிடு உன் மீள்வரவும் மீள்பறப்பாய் போய்விடும்தான். என்றபோதும் இன்று நான் இதமுற்றிருக்கிறேன் - நீ கோதிய பொந்துள் சிறகை அகல விரித்ததனால்! http://www.vaarppu.com/view/2533/
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
முத்தக் கவிதைகள்: முத்தம்... ஒரு பெண் தன் பெண்மையை உணர்ந்து மெய் சிலீர்த்திடும் சுதந்திரத்தருணம்! ~*~* ~*~ முத்தம்! அன்பின் வெளிப்பாடு காதலின் கடைக்குட்டி நினைவுக்கோர்வையின் அகவரிசை ஆணாதிக்கத்தின் முற்றுப்புள்ளி யதார்த்தத்தை மீறிய கற்பனை. ~*~* ~*~ முத்தம் ! ஒரு நொடிக்கொண்டாட்டம் காமத்தின் கதவுத்தாழ்பாள் ஏவாளின் ஆப்பிள் பெண் உணர்தலின் முதற்புள்ளி கற்பனையை மீறிய யதார்த்தம். ~*~* ~*~ சவ வீட்டிலும் சத்தமில்லா தெருக்களிலும் பகிரப்படும் முத்தங்கள் வெவ்வேறானவை.. ~*~* ~*~ ஏங்கி நிற்கும் இதய வெற்றிடத்தை எதிர்பாரா ஒற்றை முடிவில் முத்தம் மலர்களால் நிரப்பும். ~*~* ~*~ தடுத்து பழகாதீர்கள் கொடுத்து பழகுங்கள் முத்தங்களை! - அருண்.இரா http://kaattchi.blog...-post_9276.html
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
பருவமெய்திய பின் மன்னார் அமுதன் -------------------------- பருவமெய்திய பின்தான் மாறிப் போயிருந்தது அப்பாவிற்கும் எனக்குமான பிடித்தல்கள் வாசலில் வரும் போதே வீணாவா! வா வாவெனும் அடுத்த வீட்டு மாமாவும் அகிலாவின் அண்ணாவும் போலிருக்கவில்லை அப்பா மழை வரமுன் குடையுடனும்.. தாமதித்தால் பேருந்து நிலையத்திலும்.. முன்னும் பின்னுமாய் திரிய காரணம் தேவைப்படுகிறது அப்பாவுக்கு துக்கம் தாழாமல் அழுத ஒருபொழுதில் ஆறுதல் கூறுவதாய் அங்கம் தடவுகிறான் அகிலாவின் அண்ணா யாருக்கும் தெரியாமல் மொட்டைமாடிக்கு வா நிலா பார்க்கலாமென மாமா இப்போதெல்லாம் பிடிக்கிறது அப்பாவை http://www.vaarppu.com/view/2496/
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
wellai -> நெல்லை
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இ-கலப்பையைத் (http://thamizha.com/project/ekalappai) தரவிறக்கம் செய்திருந்தால் மிகவும் இலகு (Windows XP மற்றும் Windows 7 இல் எனக்கு வேலை செய்கின்றது). Launch EKalappai 3.0 Select Keyboard - Phonetic (English2Unicode) or Bamini (Bamini2Unicode) Windows Tray இல் இ-கலப்பை நிற்கும். அதனை ஒற்றைச் சொடுக்கு மூலம் ஆங்கிலத்திற்கும் தமிழிற்கும் மாற்றலாம். இப்பதிவை அவ்வாறுதான் பதிந்தேன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அதானே. போட்டுடைத்த ரதிக்கு நல்ல வேப்பந்தடியால விளாசவேணும். கு.சா. நிதானமாக எழுதிய கருத்துக்கு ஒரு பச்சை!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
:icon_mrgreen: திருவாளர் பச்சை உயிர்த்து வந்தீட்டார்! :icon_mrgreen:
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
வெளியே மழை பெய்கிறது ரெஜோ இந்த நகரத்தின் தெரு முனைகள் எங்கும் சூன்யத்தின் வாசல் வாய் விரித்திருக்கிறது … வாய் புகுந்து மீண்டால் இன்னொரு தெரு இன்னொரு வாசல் தப்ப முடியாதென்றே தெரிகிறது … உடலெங்கும் தீ, பற்றி எரிகிறது மனதெங்கும் வன்மம் சுற்றிப் படர்கிறது இருந்த அடையாளங்கள் எதுவுமின்றி தொலைந்து போகத் தோன்றுகிறது பித்த நிலைக்கும் முக்தி நிலைக்கும் மத்தியில் மதிலொன்று சிரிக்கின்றது மதில் மேல் பூனையாய் என் நிழல் எந்தப் பக்கம் விழும் … நிழலைத் துரத்திக் கொண்டு நானும் என்னைத் தொலைக்க நினைக்கும் நிழலும் ஓடிக் கொண்டேயிருக்கிறோம் மதிலைச் சிதைத்த படி … சில ரகசியங்கள் புரிகின்றன சில புதிர் முடிச்சுகள் அவிழ்கின்றன அகோரங்கள் அழகாகின்றன அழகிற்கான வாய்ப்பாடுகள் அழிகின்றன … எந்தப் பாதையும் இங்கே எனக்கில்லை எந்த கதவுகளுக்கும் என்னிடம் திறப்பில்லை வாசல் தேடி வர யாருமில்லை கதவின் பின்னே காத்திருப்பதில் நியாயமில்லை … கதைகள் அழிக்கப்பட்ட காகிதத்தில் புதிய கதைகளுக்கு இடங்களிருந்தாலும் கசங்கிய ரேகைகள் கவனமாய் இருக்கச் சொல்லுகின்றன … மீண்டும் ஒரு முறை, முதலில் இருந்து … எழுத அமர்கிறேன் வார்த்தைகள் தடித்து வர மறுக்கின்றன நடுங்கும் கைகளை நகங்கள் கிழிக்கின்றன .. தற்செயலாய் காயம் கண்டு கசிகின்ற ரத்தம் கிளர்ச்சியளிக்கிறது .. இன்னும் சில காயங்கள் வலிகளே வரங்களென்கின்றன … பகலில் தூக்கம் பிடித்திருக்கிறது கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருண்டுதான் போகிறது … நள்ளிரவில் ஓலமிடுகிறேன் நாய்களில் சில ஒத்திசைக்கின்றன … சீக்கிரம் இறந்து போகப் போவதாய் கற்பனை செய்து கொள்கிறேன் … கனவில் எல்லாம் குறுவாள் எடுத்துக் கொலைகள் செய்கிறேன் … பைகளில் சில்லறை கனக்கிறது பசிக்கிறது நினைவில் வருகிறது அம்மாவின் முகம் பசித்திருப்பதின் நியாயம் பிடித்திருக்கிறது … வெளியே மழை பெய்கிறது அழத் தோன்றுகிறது . http://www.rejovasan...aining-outside/
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கு திருவாளர். பச்சை அவர்களின் முகக்குறி வேண்டும்!
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
போதிமரம் தமிழ்நதி என்னை விறுக்கென்று கடந்த உன் விழிகளில் முன்னரிலும் முள்ளடர்ந்திருந்தது உன் உதட்டினுள் துருதுருக்கும் கத்திமுனை என் தொண்டைக்குழியை வேட்கிறது. மாறிவிட்டன நமதிடங்கள் துடிப்படங்கும் மீனாக நான் தரையில் துள்ளி நீர் கிழித்தபடி நீ கடலில். துரோகி-தியாகிச் சட்டைகள் அவிழ்ந்துவிழ சற்றுமுன்பேஅம்மணமானோம். இடுகாட்டில் குளிர்காயும் குற்றவுணர்வில் எரிகிறது எரிகிறது தேகம் நம் அட்டைக்கத்திகளில் எவரெவரின் குருதியோ வழிகிறது நாம் இசைத்த பாடல்களைப் பிரித்துப் பார்த்தேன் ஒழுகிற்று ஊரும் உயிரும் இழந்த பல்லாயிரவரின் ஒப்பாரிகள் வன்மம் உதிர்த்து வந்தொருக்கால் அணைத்துவிட்டுப் போய்த்தொலையேன் மரணம் என்ற போதிமரத்தின் கீழ் நிழலில்லை நீயுமில்லை நானுமில்லை வதைமுகாம் மனிதர்களின் கண்ணீர் இலையுதிர்ந்து கிடக்கிறது தோற்றவரின் வேதம் என்பாய் சரணாகதி என்பாய் போடீ போ! இனி இழக்க எவரிடமும் எந்த மயிருமில்லை! http://tamilnathy.blogspot.com/2009/12/blog-post_20.html
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துமழைகளுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலியின் மகனுக்கு "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்".
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
என் பாதையும் என் பயணமும் கவிஞர்.பாரதிமோகன் இலக்கு நோக்கிய என் பயணத்தில் பாதை தெரியாமல்.. பலநாட்கள்.. இடறி விழுந்து தடம் மாறி சில நாட்கள்.. முட்டி முளைக்கின்ற போதெல்லாம் கிள்ளி எரிகின்ற விரல்கள்.. எங்கே தொலைந்து போவேனோ என்ற அச்சத்திலேயே.. போராடி போராடி புதிய பாதை தேடி-மீண்டும் இலக்கு நோக்கிய பயணம்.. பாதையும் முடியவில்லை பயணமும் முடியவில்லை களைப்பினூடே திரும்பிபார்கிறபோதுதான் உணர்கிறேன்.. வாழ்வில் பாதி முடிந்திருப்பதை மீதி வாழ்க்கையை எப்படி வாழ்வது... மீண்டும் தொடர்கிறது என் பயணம்.. அதற்கான இலக்கோடு! http://bhaarathimohan.blogspot.com/2011/03/blog-post.html
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
நாங்கள்தான். மனதைத் தொடுகின்ற கவிதை.