Everything posted by suvy
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் கொண்டாடும் இனிய உறவுகளுக்கு அன்பான வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!!
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
மிக நன்று. தொடருங்கள் வாழ்த்துக்கள்.
-
அதிசயக்குதிரை
மிதியடிச் சடங்கு. ஒருமுறை அரசர் கி. தே. ராயர்( கிருஷ்ணதேவராயர் என எழுத அலுப்பாக இருக்கு. அதனால் இனி கிருஷ்ணதேவராயரின் முழுப் பெயரையும் கிருஷ்ணதேவராயர் என்று எழுதாமல் கி. தே. ராயர் என்றே குறிப்பிடுகிறேன். நீங்கள் அலுப்புப் படாமல் கிருஷணதேவராயர் என்றே வாசிக்கவும்.) தெனாலிராமனை வெகு அலட்சியமாகப் பேசிவிட்டார். ராமனும் மிக மனம் வருந்தினான். அரசர்: என்ன நீ பெரிசாக உன் புத்திசாலித் தனத்தைக் காட்டுகிறாய்? என்னைச் சிரிக்க வைக்க அந்த நேரத்தில ஏதோ சேட்டைகள் செய்கிறாய். நாங்களும் சிரித்து வைக்கிறோம். தெ.ராமன்: அரசே நீங்கள் சொல்வது எனக்கு வேதனையாக இருக்கிறது. சரி! இனி நீங்களே அசந்து போகிற அளவுக்கு என்னால செய்ய முடியும்! அதற்கு தாங்கள் சம்மதித்தால் இதை ஒரு சவாலாகவே செய்கிறேன். ஆனால் இவ் விடயம் நம் இருவருக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றான். அரசர்: என்ன செய்வாய் முன்பு என்னையும் ராஜகுருவையும் ஒன்றாக அடைத்து வைக்க ஏதோ செய்தாயே அப்படியா? தெ.ராமன்: இல்லையில்லை! நான் ஒருமுறை செய்வது போல் மறுமுறை செய்வதில்லை. அரசர்: அப்படியாயின் சரி! எங்கே உன் திறமையைக் காட்டலாம். தெ.ராமன்: சரி! வெகு சீக்கிரமே செய்து காட்டுகிறேன். அரசர்: என்ன செய்யப் போகிறாய்? நீ பெரிய யுக்திக்கரெனாச்சே! முடிந்தால் முன்கூட்டியே என்னிடம் சொல்லிவிட்டுத்தான் செய்யேன் பார்க்கலாம்? ம்...ம் அதுதான் உன்னால் முடியாதே! என நகைத்தார். தெ. ராமன்: ஏன் முடியாது. இம்முறை சொல்லிவிட்டே செய்கிறேன். என்ன செய்வது என யோசிக்கக்கூட தாங்கள் அவகாசம் தரவில்லை! இருந்தாலும் பரவாயில்லை. திடீரென ஒரு யோசனை இப்போதுதான் வந்தது. அதைச் சொல்லிவிட்டே செய்கிறேன். அரசர்: சொல்...சொல்..'ஆர்வமுடன்" தெ.ராமன்: மகாமன்னரே! தங்களது விருப்பத்துக்குரிய யாராதது ஒருவர், உங்களைத் தன் மிதியடியால்(செருப்பால். கொஞ்சம் மரியாதையாக மிதியடி) மூன்றுமுறை அடிக்கும்படி செய்கிறேன். தவறினால் எனக்குச் சரியான தன்டனை தாங்கள் தரலாம். அரசர்: என்ன! நீ சொல்வதைப் பார்த்தால் எனக்கு வேண்டியவரைக் கொன்டே என்னைச் செருப்பால் அடிப்பிக்கப் போவதாகச் சொல்கிறாய்! அப்படித்தானே? தெ. ராமன்: தாங்கள் அடியேனை மன்னிக்க வேண்டும். நான் அப்படித்தான் சொன்னேன். அது என்னால் முடியும் என்றே நினைக்கின்றேன். என்றான் பணிவாக... . அரசர்: என்னது? முடியுமா உன்னால்? முடிப்பாயா? ... எங்கே செய் பார்ப்போம். அப்படிச் செய்யாவிட்டால் உன்னைத் தொலைத்துவிடுவேன் தொலைத்து... தெ.ராமன்: அரசே! இது நமக்குள் இருக்கட்டும். ஒரு மூன்றுமாதகால அவகாசம் கொடுங்கள். சில சமயம் நான் தோற்று என்னைத் தன்டிக்கும் நிலைவந்தால்கூட இது வெளியே வர வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டான். அச் சமயத்தில் அரசருக்கும் மலைநாட்டரசன் மகளுக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. ராமன் அந்த அரசனிடம் சென்றான். தெ.ராமன்: மலைநாட்டுமன்னா! எங்கள் அரசர் கி.தே. ராயர் சாத்திர சம்பிரதாயப்படி எல்லாம் நடக்க வேண்டுமென்பதில்பெருவிருப்ப
-
அதிசயக்குதிரை
ச்சே. அமெரிக்கர்கள் அவசரப்பட்டு, வெட்கம் மானத்தை இழந்து, தன்மானத்தை விட்டு ரசியர்களிடம் கேட்டு விட்டார்கள். ரசியர்களும் இதுதான் சந்தர்பமென்று அமெரிக்கர்களைப் பழிவாங்குவதற்காக 'தயாரிப்புச் செலவு கூடிய " பென்சிலை அவர்களுக்குக் குடுத்திருக்கிறார்கள். அவர்கள் மடடும் நம்மிடம் கேட்டிருந்தால், கிணத்தடிக்குப் பக்கத்திலிருக்கிற சுடுதண்ணி அடுப்பை தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு நல்ல வீர விறகுக் கரிக்கட்டி நாலைப் பொறுக்கி அவர்களிடம் கொடுத்திருக்கலாம். 'தயாரிப்புச் செலவும் மிக மிக கம்மி". அவர்களும் வேண்டியமட்டும் ரொக்கட்டின் மேல்சுவர், பக்கச்சுவர் என்று எல்லா இடத்திலும் கிறுக்கித் தள்ளி கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம். பி.கு: நம்ம அறிவு உலகஅளவுல பிரபலமாவதற்கு ஏதோவொன்டு தடையாகக் கிடக்கு.
-
அதிசயக்குதிரை
மிக நல்ல கதைகள். வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.
- இன்று ஆடிப்பிறப்பு
- இன்று ஆடிப்பிறப்பு