Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. கல்லொன்று பல கலைகளாய் விரிந்து மிளிர்கின்றது ........! 🙏
  2. 3 ஆமைவேகப் பந்து வீச்சாளர்களை கொண்டு முயல்களை மடக்கி விட்டார்கள் ........ இது திறமையே ......... வேகப்பந்து என்றாலோ , ஸ்பின் போல் என்றாலோ இந்தியா நல்ல ஆதி போட்டிருக்கும் .......இந்தப் பந்துகளை அடித்தால் காட்ச் விட்டால் விக்கட் .....அவ்வளவு துல்லியமான வீச்சுகள் .......! விளையாட்டு முயல் ஆமை ஓடியதுபோல் முடியும் போல .......!
  3. அமெரிக்கா 199 ------! நமீபியா 200 அடித்தால் வெற்றி .........!
  4. தில்லை அம்பல நடராஜா .........! 🙏
  5. வணக்கம் வாத்தியார் . ........! கங்கை அணிந்தவா கண்டோர் தொழும் நிலாசா சதங்கை ஆடும் பாத விநோதா லிங்கேஸ்வரா நின்தாள் துணை நீதா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா எங்கும் இன்பம் விளங்கவே எங்கும் இன்பம் விளங்கவே அருள் உமாபதி எளிமை அகல வரம் தா வா வா வளம் பொங்க வா எளிமை அகல வரம் தா வா வா வளம் பொங்க வா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா பலவித நாடும் கலையேழும் பணிவுடன் உனையே துதிபாடும் பலவித நாடும் கலையேழும் பணிவுடன் உனையே துதிபாடும் கலையலங்கார பாண்டியராணி நேசா கலையலங்கார பாண்டியராணி நேசா மலைவாசா மங்கா மதியானவா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா .........! --- தில்லை அம்பல நடராஜா ---
  6. பிரம்ம ரிஷியார் · poedonstSrgcllre8c0H:8 2t5m83ic020 1ià59c80a2,1lf561545ii210 · காதல்கள் பலவகை ஒவ்வொன்றும் ஒருவகை , அந்த உணர்வு தெய்வீகமானது அல்லது அற்பமானது என்பதெல்லாம் அவரவர் கர்மவினை பொருத்தது பாரதம் எவ்வளவோ காதல் கதைகளை கொண்டிருந்தாலும் உன்னத காதல் , உருக்கமான காதல் நேதாஜியுடையது, அவரின் காதலை கடமை வென்றது, கடமைக்காக காதலை வெல்லும் அளவு அவரின் தாய்நாட்டு பற்று இருந்தது வரலாற்றில் நெப்போலியன் போனபார்ட்டின் காதல் விஷேஷமானது ஆனால் அவளா? பிரான்ஸ் தேசமா? என முடிவு செய்யும் நேரம் வந்தபொழுது என் தாய்நாடே எனக்கு முக்கியம் என நாட்டை நேசித்து அவளை கண்ணீருரன் பிரிந்தான் அந்த மாவீரன் அவன் காதலுக்கு சற்றும் குறையாதது நேதாஜியின் காதல் நேதாஜி என்பவர் நாட்டுக்காய் வாழ்ந்து, நாட்டிற்கு போராடி, நாட்டுக்காகவே செத்தவர். அவரின் பரபரப்பான வாழ்வில் தன் சொந்த வாழ்க்கைக்காக ஏதும் செய்தாரா? அவருக்கும் தனிபட்ட விருப்பங்கள் இருந்ததா என்றால் மகா விசித்திரமான சம்பவங்கள் எல்லாம் உண்டு காந்தி வழியில் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்து சிறையில் இருந்த நேதாஜிக்கு உடல்நிலை மோசமானது, ஆங்கில அரசு உயர் சிகிச்சைக்காக ஐரோப்பா செல்ல அனுமதித்தது ஆம், காந்தியின் சீடனாய் இருக்கும் எல்லோருக்கும் அச்சலுகை உண்டு, ஏன் என்றால் அதுதான் பிரிட்டிசார் தந்திரம்,காந்தி இருக்கும்வரை யாரும் ஆயுதம் ஏந்தமாட்டார்கள் என நம்பினான் பிரிட்டிஷ்காரன் 1934 ஆம் ஆண்டின் இடைப்பகுதிலிருந்து 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வியன்னாவில் அவர் தங்கி இருந்தபொழுது "இந்திய துயரம்" எனும் புத்தகம் எழுதி ஐரோப்பாவில் இந்திய ஆதரவு திரட்ட தீர்மானித்தார், அதற்கு தட்டச்சு செய்ய ஒரு பெண் தேவைபட்டார் அந்த பணிக்கு வந்தவள்தான் எமிலி , 23 வயதுதான் ஆகியிருந்தது. மொழிவளம் அவளுக்கு அபரிமிதமாக இருந்தது நேதாஜி 38 வயதை எட்டியிருந்தார், அதுவரை அவர் தேசம் என்பதை தவிர ஒன்றையும் சிந்தித்தவர் அல்ல‌ ஆனால் பெண் எனும் சக்தி சாதாரணம் அல்ல, இந்திரனை விடுங்கள், விசுவாமித்திரர் முதல் ஏன் சிவனிடமே உடலில் பாதியினை கேட்டு அமர வைத்த பெண்ணுக்கான சக்தி நேதாஜியினை விடுமா? உலகில் ஏன் எதற்கு என தெரியாத ஒரு ஈர்ப்பே பெண் மேலான ஒருவகை ஈர்ப்பு, அதற்கு காதல், காமம், பெண் பொறுக்கிதனம் என எத்தனை பெயர்கள் வைத்தாலும் அதன் ஒரே பெயர் ஈர்ப்புதான் 38 வயதில் நேதாஜிக்கு அந்த சோதனை வந்தது, சட்டென காதலில் விழுந்தார் , அவரின் வரிகளே அந்த காதலை சொன்னது "மலை உச்சியின் பனி சூரிய வெளிச்சம் கண்டதும் உருகுவது போல, என் இரும்பு மனம் உன்னிடம் உருகிவிட்டது" எந்த பராமக்கிரசாலியும் காதலில் விழுவான், ஆனால் மறுநிமிடமே உறுதியான‌ கொள்கையாளன் அதிலிருந்து எழும்பிவிடுவான், அதிலிருந்து வெளிவரமுடியாதவனால் சாதிக்க முடியாது நேதாஜி இனி அவ்வளவுதான் என்றார்கள், நேதாஜியின் காதலால் ஒன்றே அவரின் போராட்ட வாழ்வினை முடிக்கும் சக்தி கொண்டது என்றார்கள் ஆனால் நேதாஜி நாட்டை மறக்கவில்லை எமிலி போஸை முழுக்க புரிந்திருந்தார் அதனால் முழு அரணாக இருந்தார், பலமாக இருந்தார் இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் அனிதா, இத்தாலியின் புரட்சிகர தலைவர் கேரிபால்டியின் மனைவியான பிரேசிலை பூர்விகமாக கொண்ட அனிதா கேரிபால்டி நினைவாக அந்த பெயரிடப்பட்டது. ஆம் வரலாற்றின் மிகபெரும் பெண் போராளியின் பெயரைத்தான் தன் மகளுக்கு சூட்டினார் போஸ், இந்தியாவிற்கு அவள் அப்படி போராட வெண்டும் என்ற கனவு இருந்தது திருமணம் செய்து போஸும் எமிலியும் சேர்ந்திருந்தது வெறும் 3 ஆண்டுகளே, 1942ல் கடைசியாக தன் குடும்பத்தை சந்தித்தார் நேதாஜி அதன் பின் யுத்தம் நேதாஜி மறைவு என காட்சிகள் வந்தன‌ ஆனால் எமிலி நேதாஜி நினைவோடே வாழ்ந்தாள், அவருக்காகவே வாழ்ந்தாள் அவளின் பிற்கால பல தசாப்த வாழ்வு அந்த 3 ஆண்டு நினைவுகளிலேதான் கழிந்தது நினைத்திருந்தால் இந்தியா வந்திருக்கலாம், நேதாஜிக்கு இருந்த பெரும் ஆதரவினை பெற்று பெரும் அரசியல் சக்தியாக வளர்ந்திருக்கலாம் சோனியா போன்றவர்களே அரசியல் செய்யும் இந்தியாவில் அவளுக்கு எல்லா வாய்ப்பும் இருந்தது, ஆனால் அந்த புண்ணியவதி ஒதுங்கி இருந்தாள் என் கணவனின் கனவுபடி இந்தியா சுதந்திரமடைந்துவிட்டது அது போதும் என ஐரோப்பாவிலே இருந்தாள் தன் மகளை, ஆம் நேதாஜியின் ஒரே மகளை மிக சிரமபட்டு தனியாகவே வளர்த்தாள் இந்தியாவில் இருந்தோ இல்லை போஸின் குடும்பத்திடமிருந்தோ ஒரு காசும் அவள் பெறவில்லை, இந்திய காங்கிரஸ் அரசும் அக்குடும்பத்தை ஏறேடுத்தும் பார்க்கவில்லை பலமுறை எமிலியினை ஏராளமானோர் வற்புறுத்தியும் அவள் இந்திய அரசியலுக்கு வரவில்லை, தன் மகளை இந்தியா பக்கம் விடவுமில்லை ஏன் என கேட்டால் கனத்த மவுனமே அவளிடமிருந்து வந்தது "நான் இந்திய அரசியலில் பங்குக்கு வந்தால் நான் நேதாஜியினை காதலித்தது அரசியலுக்காக என்பது போல் ஆகிவிடுமல்லவா? அது அவருக்கு களங்கம் அல்லவா" என மிக நெருக்கமானவர்களிடம் சொன்னார் எமிலி என்பார்கள் எப்படி ஒரு உயர்ந்த உள்ளம் அவருக்கு இருந்திருக்கின்றது? நேதாஜி அவளை ஊர் அறிய திருமணம் செய்யவில்லை, காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதிய கடிதங்களை கூட கிழித்து போட சொல்லியிருக்கின்றார் ஆனால் அவள் செய்யவில்லை, நேதாஜியின் கடிதங்களோடே வாழ்ந்த அவள் 1996ல் இறந்தாள் நேதாஜி எந்த அளவு எமிலியினை நேசித்தார் என்பதற்கு அந்த கடிதத்தின் வரிகளில் சில “நான் உன்னுள் இருக்கும் பெண்ணையும், ஆன்மாவையும் காதலிக்கிறேன். நான் நேசிக்கும் முதல் பெண்மணி நீதான்” “ இம்முறை எனது இதயம் உருகுவதை போன்று உணருகிறேன். நான் உன்னை எவ்வளவு விரும்புகிறேன் என்பதை உனக்கு கடிதங்கள் மூலமாக தெரிவிப்பதை நாம் நேரில் உரையாடுவதை போல என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. என் அன்பே, எனது இதயத்தின் ராணி நீதான். ஆனால், நீ என்னை விரும்புகிறாயா?.” “எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை நான் எனது மீதி வாழ்க்கையை சிறையில் செலவிட நேரிடலாம், நான் சுட்டுக் கொல்லப்படலாம் அல்லது தூக்கில் தொங்கவிடப்படலாம். அதனால், நான் உன்னை நேரில் சந்திக்க முடியாமல் போக நேரிடலாம் அல்லது மீண்டும் கடிதத்தை எழுத முடியாமலும் போகலாம். இருப்பினும், நீ எப்போதுமே எனது இதயத்திலும், எண்ணத்திலும், கனவிலும் நிறைந்திருப்பாய். இந்த ஜென்மத்தில் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழமுடியாவிட்டாலும், அடுத்த ஜென்மத்தில் உன்னுடன்தான் இருப்பேன்" மிக மிக உருக்கமான வரிகள்.. அந்த அப்பழுக்கற்ற போராளி தேச கடமைக்கும் தன் காதலுக்கும் இடையே போராடி இருக்கின்றான், பரிதாபம் எமிலி ஒரு மாவீரனால் காதலிக்கபட்டிருக்கின்றாள் அதுவும் உருகி உருகி காதலிக்கபட்டிருக்கின்றாள், அந்த பெருமையில் காலமெல்லாம் தனியாகவே வாழ்ந்திருக்கின்றாள் நேதாஜி வாழ்க்கையில் மிக குறிப்பிடவேண்டிய பெண் எமிலி, ஒருவகையில் தியாக தலைவி நேதாஜியின் மகள் இன்று ஜெர்மனில் பொருளியல் மேதை இந்நாட்டில் ராகுல் காந்தி போல, உதயநிதி போல, அகிலேஷ் யாதவ் போல இருக்க வேண்டிய அனிதா மகா அமைதியாக ஒதுங்கி வாழ்கின்றார் அட ராகுல் என்ன? சோனியாவின் இடத்தையே பிடித்திருக்கலாம். பெரும் சக்தியாய் உருவாகி இருக்கலாம் காலம் எவ்வளவு விசித்திர விளையாட்டுக்களை எல்லாம் ஆடுகின்றது. கணவனின் கட்சியினை காப்பேன் என வந்து நின்ற சோனியா ஒருவகை, என் கணவன் இல்லா இந்தியாவில் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என நின்ற எமிலி இன்னொரு வகை பெண்களில்தான் எத்தனை வகை? என் கணவன் கட்சி இது , என் மாமியார் கட்சி இது, எங்கள் குடும்ப கட்சி என கட்சியினை கட்டுபடுத்தும் பெண்களும் இந்தியாவில் இருக்கின்றார்கள் என் காதல் கணவன், என் மாமனார் என் மாமியார் வரிசையில் என் மகனும் பேரனும் இக்கட்சியில் தலைசூடி பின் நாட்டில் முடிசூட வேண்டும் என தவமிருக்கும் பெண்களும் இந்தியாவில்தான் இருக்கின்றார்கள் ஆனால் "நான் நேதாஜியினை காதலித்தேன், அந்த பரிசுத்தமான காதலை அரசியல் முதலீடாக என்னால் செய முடியாது, அவர் பெயரை கொண்டு நான் ஏதும் பெற்றால் அது என் காதலுக்கே களங்கம்" என சொன்ன எமிலியின் அருகில் கூட இந்த பெண்களெல்லாம் வரமுடியாது உலகின் அதிசுத்தமான காதல் எமிலியுடையது, எந்த காதலையும் அதற்கு ஈடாக சொல்லவே முடியாது நிபந்தனையே இல்லா அன்புதான் காதல், அதனை மிக அதிகமாக பெற்றிருக்கின்றார் நேதாஜி ஆனால் வெறும் 3 ஆண்டுகள்தான் அது நிலைத்திருக்கின்றது நேதாஜி கடிதத்தின் அந்த வரியினை பாருங்கள், எவ்வளவு அழகாக எழுதபட்ட வரி “நான் உன்னுள் இருக்கும் பெண்ணையும், ஆன்மாவையும் காதலிக்கிறேன். ஆத்மார்த்தமாக என் ஆத்மாவில் இருந்து நான் நேசிக்கும் முதல் பெண்மணி நீதான்” இந்த வரிக்காகத்தான் கடைசி வரை தனியாகவே இருந்து மகளை வளர்த்து அவருக்காகவே வாழ்ந்தாள் எமிலி இந்நாட்டிற்காக வாழ்க்கையினை தொலைத்த தம்பதிகளில் நேதாஜிக்கும் எமிலிக்கும் நிச்சயம் இடம் உண்டு நேதாஜியினை முழுக்க புரிந்த பெண் காதலியாய் மனைவியாய் அவருக்கு கிடைத்தது ஒருவரம், தன் வாழ்நாளில் அந்த மாவீரன் கண்ட நிம்மதியும் மகிழ்வும் இது ஒன்றுதான், தன் வாழ்வில் சில நிமிடங்கள் மட்டும் அவன் நிம்மதியாக இருக்கட்டும் என தெய்வம் அனுப்பிய பெண் அந்த எமிலி நேதாஜியின் நாளில் "என் காதல் புனிதமானது, அவர் பெயரை கொண்டு அரசியல் செய்து அதற்கு களங்கம் கற்பித்து, நான் அரசியல்வாதியாகவே காதலித்தேன் எனும் அவப்பெயரை என் கணவனின் வரலாற்றில் பதிவு செய்ய நான் விரும்பவில்லை ஐரோப்பிய அந்நியரை எதிர்த்து ஆயுதம் ஏந்திய அவரின் நாட்டில் ஒரு ஐரோப்பிய பெண்மணியான நான் அரசியலுக்கு வந்தால் அது சரியல்ல, நான் அவரின் மனைவி என்பதால் அவர் கனவுகளை சிதைக்கமுடியாது அது இந்திய மக்களுக்கும் அவருக்கும் செய்யும் துரோகம், என் மனசாட்சி என்னை மன்னிக்காது" என சொல்லி பெரும் அரசியல் எதிர்காலத்தை தவிர்த்த அந்த புண்ணியவதிக்கு டெல்லியில் சிலை வைக்க வேண்டும் அதை எங்கே வைக்கவேண்டும், யார் வீட்டு முன்னால் வைக்க வேண்டும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை தமிழகத்தில் எமிலிக்கு ஒரு அடையாளம் வேண்டுமென்றால் அச்சிலை எங்கே நிறுவபடவேண்டும் என்பதை நீங்களே சொல்வீர்கள் எமிலி போஸ் ஒரு தியாக தலைவி, உண்மை காதலின் சுடர், நேதாஜி உள்ளளவும் அவள் புகழும் அவள் காதலும் தியாகமும் வாழ்ந்து கொண்டே இருக்கும் அருமையான காதலி, தங்க அருமையான தேசம், சுகவாழ்வு , பெரும் எதிர்காலம் என எல்லாவற்றையும் நாட்டுக்காக துறந்து செல்ல அந்த நேதாஜிக்கு எப்படிபட்ட தேசபற்று இருந்திருக்க வேண்டும்? நினைத்தாலே நெஞ்சம் கசியும் அர்பணிப்பு அது எமிலிக்கு பின்னும் ஏராளமான பெண்களை சந்தித்தாலும் அவரின் மனம் காதலில் ஏன் விழவில்லை என் என்றால் அதுதான் அவர் சொன்னபடி "ஆன்மாவில் இருந்து உதித்த காதல்" அப்படிபட்ட காதலைத்தான் இங்கு நினைத்து பார்த்தல் அவசியம், தேசத்துக்கும் கடமைக்கும் காதல் தடையாக இருக்குமென்றால் அதை தள்ளிவைத்த நேதாஜியின் தியாகம் எவ்வளவு பெரிதாக இருந்திருக்க வேண்டும்? கடைசிவரை கஸ்தூரிபாயினை இன்னும் சிலரை தன்னோடு வைத்த காந்தி, ஐரோப்பிய ரோஜாவை சுமந்த நேருவோடு நேதாஜியினை ஒப்பிடுங்கள் அந்த மாமனிதன் நாட்டுக்காக காதலை துறந்தான் என்பதும், அந்த காதலி கடைசிவரை அவன் நினைவில் அவன் புகழை காத்து நின்றாள் என்பதும், சல்லி காசுக்கும் சிறிய புகழுக்கும் ஆசைபட்டாலும் அவன் பெயருக்கு ஆபத்து என ஒதுங்கி நின்றாள் என்பதும் நினைக்க நினைக்க கண்ணீர் விடவைக்கு நெகிழ்ச்சி பாரதம் கண்ட காதலர்களில் நாட்டுக்காய் போராடிய காதலர்களான சாஸ்திரி லலிதா காதல் உள்பட பல காதல்கள் உண்டு அதனில் முதல் இடத்தில் நிற்பவர் நேதாஜி அவரோடு சரிக்கு சமமாக நிற்பவர் அந்த எமிலி தேசிய கீதம் ஒலிக்கும் பொழுதெல்லாம் ஓரத்தில் இந்த காதலர்களின் தியாக கீதமும் ஒலிக்கத்தான் செய்யும், தேசத்துக்காய் இணைந்த காதல் அது, தேசத்துக்காய் எரிந்த காதலும் அதுவே.......!
  7. Leela Ramesh ·orneSstdpo4f0:vfguu 4t3u1é3hfaec029hrg187u63mi2ar2fi 0h1i,a8 · 🦟ஆண் கொசு : டார்லிங் உனக்காக ஒரு சிங்கத்தையே வேட்டையாடி கொண்டு வருவேன்.. #பெண் கொசு : ஓகே ஓகே போய் தூங்கு.. ஆண் கொசு : கண்ணே.. உனக்காக ஒரு யானையவே அடிச்சு கொண்டு வந்து கொடுப்பேன்.. பெண் கொசு : சரி.. சரி.. மொதல்ல தூங்கப்போ டார்லிங்... ஆண் கொசு : உன்ன நான் மெர்சிடஸ் கார்ல உட்கார வச்சு பாரீஸ் ரோட்ல சுத்தி காண்பிப்பேன்.. பெண் கொசு : என் மேல உனக்கு எவ்வளவு லவ்னு புரியுது டியர்.. காலையில பேசலாம் போய் தூங்கு.. ஆண் கொசு : நீ என்ன நம்ப மாட்டியா..? நாளைக்கு உனக்கு 100 கிராம்ல தங்க செயின் போடுவேன் பாரு.. பெண் கொசு : நான் நம்புறேன் டியர்.. நீ இப்போ தூங்கப்போ.. ஆண் கொசு : உலகமே திரும்பி பாக்கற மாதிரி உனக்கு வைரத்துல நகை போடுவேன் பாரு.. ஆண் கொசுவை ஓங்கி அறைந்தது பெண் கொசு..🙄 "குடிகாரனை கடிச்சுட்டு இங்க வந்து ஒளறாதேன்னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்".......!
  8. பொன்னெழில் பூத்தது புதுவானில் . ........! 😍
  9. அனைவருக்கும் இனிய காதலர்தின வாழ்த்துக்கள் . ........! 😍
  10. இந்த அயர்லாந்து ஓமானை கோமாவுக்கே அனுப்பி விட்டது ........! 😂
  11. pootedsrnSum5lctli873fhm1i2729aagt u7ac2i5l7g4190cci97ua02l6 · தமிழக அரசு - நடிகை வைஜெயந்தி மாலாவுக்கு ரூ.1,000-மும், மதுரை சோமுவுக்கு ரூ.1,000-மும் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, நேர்மையின் சிகரமாகவே வாழ்ந்து, வறுமையில் வாடிக்கொண்டிருந்த கக்கன் அவர்களுக்கு மாதம் ரூ.500 மட்டுமே நிதி உதவி வழங்கியது. சிவாஜி கணேசன் தன் கழுத்தில் இருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை கக்கனுக்கு அளித்ததுடன், சேலம் நேரு கலையரங்கில் ‘தங்கப்பதக்கம்’ நாடகம் நடித்து கிடைத்த தொகை முழுவதையும் கக்கனுக்கு நிதியாக வழங்கினார். அந்த அரிய புகைப்படம் இதுதான். முகநூல் பதிவு -பிரசாந்த் ......!
  12. இம்முறை பிள்ளைப்பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைத்து விட்டது ........அவை சிங்கம் , புலி , கரடி என்று ஒன்றையும் விடாமல் கடித்துக் குதறுகின்றன . ........!
  13. வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : உருகி உருகி போனதடி என் உள்ளம் யான் நீயே குறுகி குறுகி போனதடி என் எண்ணம் யான் நீயே ஆண் : நீ இன்றி மூடுமே என் வானம் நீதானே காதலே என்னாளும் ஆண் : யாழோ மூரலோ தேனோ பேசும் நேரமோ பாலோ… பாதமோ… ஆடை காலின் நிகலோ ஆண் : கரைகளில் கரையும் வெண்ணுறை கடைத்திடும் மொழிகளா விழிகளின் வளையல் வானவில் நிறங்களே காதலே ஆண் : நீ இன்றி மூடுமே என் வானம் நீதானே காதலே என்னாளும் .........! --- உருகி உருகி போனதடி ---
  14. வெற்றி பெற்ற மாமனுக்கு .......... சரோஜாதேவி & T. K ராமச்சந்திரன் .......! 😍
  15. விளையாட்டு வீராங்கனைகளுக்கும் பயிற்றுனர் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் ........! இணைப்புக்கு நன்றி கந்தப்பு ......!
  16. Jino Sivaji ·seropnodtShh16i 132mf866cf6,1mgiiuéftrr0h:e9v2ih3h1fc4 g7410 · பைசாவின் சாய்ந்த கோபுரம் ஏன் சாய்ந்துள்ளது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? கி.பி 1173 இல் 3 மீட்டர் ஆழத்திலிருந்து கட்டுமானம் தொடங்கியது, அதன் மேல், அவர்கள் சுவர்களைக் கட்டத் தொடங்கினர். கட்டிடம் மூன்றாவது தளத்தை அடைந்தபோது, அது சாய்ந்து கொண்டிருந்தது. மணல் மற்றும் வண்டல் மண்ணில் 3 மீட்டர் ஆழமான அடித்தளத்தில் கட்டப்பட்ட 14,500 டன் கோபுரத்தைப் பற்றி நாங்கள் பேசுகிறோம். அந்த நேரத்தில் கட்டுமானத்திற்கு முன் ஜியோடெக்னிக்கல் ஆய்வுகளை கற்பனை செய்து பாருங்கள் . சரிவைக் கண்டறிந்த பிறகு, அக்கால பொறியாளர்கள் மீதமுள்ள தளங்களின் சுவர்களைக் கட்டினார்கள், இதனால் மூழ்கும் பக்கத்தில் தரையின் உயரம் மறுபக்கத்தின் உயரத்தை விட அதிகமாக இருந்தது, இதனால் சாய்வின் கோணத்திற்கு ஈடுசெய்யப்பட்டது. உண்மையில் கூடுதல் எடையின் காரணமாக மற்ற பக்கத்துடன் ஒப்பிடும்போது ஏற்கனவே மூழ்கும் பக்கத்தில் உள்ள அடித்தளங்களின் அதிக வீழ்ச்சியின் காரணமாக கோபுரம் இன்னும் சாய்ந்தது. கோபுரம் இடிந்து விழாமல் இருப்பதற்கும், நான்கு முறை நிலநடுக்கங்களைத் தாங்குவதற்கும் அமுக்கப்பட்ட களிமண் மண்ணே காரணம். இருப்பினும், இந்த வகை நிலத்தில் அது அப்படியே இருந்தால், இந்த ரத்தினம் இறுதியில் சரிந்துவிடும். எனவே நவீன பொறியியலில் "விளையாட" நேரம் வந்தது. நவீன பொறியாளர்கள் கோபுரத்தின் ஈர்ப்பு மையத்தை கணக்கிட்டனர், மேலும் கோபுரம் 5.44 டிகிரிக்கு மேல் சாய்ந்தால் இடிந்து விழும் என்று கணக்கீடுகள் முடிவு செய்தன. 1990ல் பழுதுபார்ப்பதற்காக கோபுரம் மூடப்பட்டது. அவர்கள் 40 மீட்டர் ஆழத்தில் 361 குழிகளை தோண்டி, 90 டன் கான்கிரீட்டை இந்த துளைகள் மூலம் மண்ணில் செலுத்தினர். அடித்தளத்தின் அடிப்படையில், ஸ்லாப்பின் கீழ் பைலிங்ஸ் செய்யப்பட்டன. இது நிலையற்ற மண் அடுக்கு வழியாக ஊடுருவி நெடுவரிசைகளை வைப்பது போன்றது மற்றும் ஸ்லாப்பை சமமாக நிலையானதாக வைத்திருக்க மண்ணின் ஆழமான அடுக்கில் "நங்கூரம்" வைப்பது போன்றது. அடுத்து, கோபுரத்தின் குறைந்த மூழ்கிய பக்கத்திலிருந்து மண் அகற்றப்பட்டது, இதனால் அது அந்தப் பக்கத்தில் மூழ்கி அதன் சாய்வை அசல் நான்கு டிகிரிக்கு குறைக்கும். அவர்கள் கோபுரத்தை செங்குத்தாக செய்திருக்கலாம், ஆனால் அதன் சாய்வு காரணமாக அதன் புகழ் மற்றும் சுற்றுலா மதிப்பை இழக்க அவர்கள் விரும்பவில்லை. மேலும் சாய்ந்துவிடாமல் 300 ஆண்டுகள் தாங்கும் என்று உறுதி செய்த பிறகு, கோபுரம் பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டது......!
  17. RS Vijayakumar ·edrospntSorm91i9719 8370i5,0me8ulm4lr6cf11f003:h14m780v é536 · இணையத்தில் பார்த்த புகைப்படம்... இந்தப் புகைப்படத்தில் இருக்கும் குழந்தைக்கு மிகவும் உடல்நலக்குறைவாக இருந்ததால் CT ஸ்கேன் அவசியமாக இருந்தது. ஆனால் அந்தப் பெரிய இயந்திரம் இருக்கும் அறைக்குள் தனியாகச் செல்ல அவன் தயங்கியிருக்கிறான். 2–3 மணி நேரமாக பெற்றோர், மருத்துவர்கள்—எல்லோரும் முயன்றும் அவனை சமாதானப்படுத்த முடியவில்லை. அப்போது அவனுக்கு மிகவும் நெருக்கமான நண்பன் அழைக்கப்பட்டான். நண்பன் வந்தவுடனே மாயம் செய்தது போல அவனின் பயம் பாதியாக குறைந்தது. இருவரும் சேர்ந்து CT ஸ்கேன் போக வேண்டும் என்று முடிவு செய்து இருவரும் கண்களை மூடி படுத்துக்கொண்ட புகைப்படம் தான் நாம் பார்ப்பது. இருவருமே சிறுவர்கள் தான்.. இருவருக்குமே பயம் தான் ஆனாலும் அசாத்தியம் சாத்தியமானது... இயந்திரப் பயத்தை எதிர்கொள்ள ஒருவருக்கொருவர் தைரியமாக மாறியவர்கள் தான் இந்த நண்பர்கள்.. இந்தக் காட்சி நமக்கு ஒன்றை மட்டும் நினைவூட்டுகிறது — வெளிச்சத்தில் சேர்ந்து ஓடுவதற்கு மட்டுமல்ல இருளான நேரங்களில் ஒருவருக்கொருவர் விளக்காக இருப்பதே உண்மையான நட்பு. உலகில் உள்ள அனைத்து நட்புகளும் இவ்வளவு தூய்மையானதும் உடைக்க முடியாததுமானவையாக இருக்கட்டும்....!
  18. oroensptSd7170gamt7i3hi790ti1726f 3fa139lt09lg0l77h9i997uf6u · ராவணனை அழித்த பிறகு., போா்க்களத்தில் ராமபிரான் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தாா்..!! அப்போது ஒரு பெண்ணின் நிழல் தொிந்தது..!! அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண்., அவரது திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை., ராமபிரான்.... நிழலின் அசைவின் மூலம் புாிந்து கொண்டார்..!! உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்..!! “நீ யாரம்மா?” என்றாா்....!! “நான் ராவணனின் மனைவி மண்டோதாி..!! என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இருமாந்திருந்தேன்....!! ஆனால்., அவரையே ஒருவா் கொன்று விட்டார் என்றால்., அவாிடம் ஏதோ உயா்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன்..!! மேலும்.. க்ஷத்திரிய குல தா்மப்படி., கணவனை வென்ற/இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன்., என்ன வேண்டுமானாலும் செய்யலாம்..!! ஆனால் நீ என்னிடம் வரவில்லை..!! ஆச்சாியப்பட்டேன்..!! இங்கே நீ., என் நிழல் உன் மீது படுவதைக் கூட விரும்பவில்லை என்னும் போது., உன் சிறந்த குணத்தை என்னவென்பேன்..! என் கணவாிடம் கூட., “ரகு குலத்தில் உதித்த ராமன்., மனிதன் அல்ல..!! உலகைக் காக்கும் பரம்பொருள்..!! விஸ்வரூபன்..!! அவனது திருநாமம் எல்லாப் பாவங்களையும் நொடிப் பொழுதில் போக்கவல்லது..!! அவன் வேதத்தின் சாரம்..!! ராமன் சாட்சாத் தெய்வ வடிவம்..!! அவனிடம் பகையை ஒழித்து சீதையை விட்டுவிடுங்கள்’ என்று மன்றாடினேன்..!!” “அவா் கேட்கவில்லை..!!” “உன் வெற்றிக்கு காரணம்., என் கணவாிடம் இல்லாத ஒரு நற்குணம் உங்களிடத்தில் இருந்தது தான்..!!” “அதுதான் தங்களின் ஏகபத்தினி விரதத்தன்மை..!!” “அதனால் தான் நீ வென்றாய்.,” என்றாள்.....!! அனைத்தும் கேட்ட ராம பிரான் சிறு புன்னகை புாிந்தாா்.....!! தன் சுயவடிவான “நாராயணனாக” அவளுக்கு “விஸ்வரூப தாிசனம்” கொடுத்தாா்.....!! ராமாயணத்தில் பாக்கியவதியாகத் திகழ்ந்தவள் மண்டோதாி.....!! அனுமன் இலங்கை சென்று ராவணனின் அந்தப்புரம் சென்ற போது., மண்டோதாி ஒழுக்கமான உடை அலங்காரத்தை கண்டு., ‘இவள் சீதையாக இருப்பாளோ’ என்று சந்தேகம் கொண்டான் அனுமன்..!! அந்தளவுக்கு ஒழுக்கமுள்ளவளாக விளங்கியதால் தான்., கெட்டவனுக்கு வாழ்க்கைப்பட்டும் மண்டோதரிக்கு ‘நாராயணின் விஸ்வரூப தரிசனம்’ பெற்றாள்..!! உயா்ந்த ஜாதியில் பிறந்தவன்., வசதியில் உயா்ந்தவன்., அரச பதவியில் இருப்பவன்., என இறைவன் பாா்ப்பதில்லை..!! நம்முடைய பயபக்தி., அன்பு., ஒழுக்கம்., இறைச்சேவை., அப்பழுக்கற்ற தூய உள்ளம் என இவையே இறைவனின் அருள் தாிசனம் பெறும் வழிமுறையாகும்..!! ஆகவே தான் அசுரகுலத்தில் பிறந்தாலும்., தன் ஒழுக்க குணத்தால்., ‘இராவணனின் மனைவி’ மண்டோதாிக்கு ஸ்ரீராமபிரானின் விஸ்வரூபம் காணும் பாக்கியம் கிடைத்தது...!!! ஸ்ரீ ராம ஜெயம்..!! ஸ்ரீ ராம ஜெயம்..!!! ஸ்ரீ ராம ஜெயம்..!!!! ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏽"

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.