Jump to content

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    7248
  • Joined

  • Days Won

    24

Posts posted by இணையவன்

  1. 17 hours ago, nunavilan said:

    அமெரிக்காவால் ஒதுக்கப்பட்ட 95 பில்லியன் டொலரில் ஆக 6 பில்லியனா யூக்ரேனுக்கு?

    சண்டைகள் தொடர வேண்டும். ஆயுதங்கள் விற்பனையாக வேண்டும். அதற்கான முதலீடாக கொள்ளலாம்.

    6 அல்ல 61 பில்லியன் என்றுதான் செய்தியில் உள்ளது. 🙂

    19 hours ago, குமாரசாமி said:

    அது சரி அமெரிக்கா உக்ரேனுக்காக தன்ரை கஷ்ர நஷ்டங்களை மனதுக்குள் அடக்கி வைத்து கோடிகளை செய்ததற்கான காரணம் ஏன்? 🤣

    மனதுக்குள் அடக்கி வைத்திருந்ததை வெளியே கொண்டுவந்துவிட்டார்கள். இந்த உதவிக்கான வாக்கெடுப்பில் பைடன் கட்சியினர் பெரும்பான்மையாக இல்லாதிருந்தும் ட்றம்ப் தரப்பிலிருந்த 101 பேர் உக்ரெய்னுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

    இவர்களுக்கு ஏதோ புரிந்ததால்தானே எதிர்த்தரப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 😂

  2. இந்த ஈரானிய விஜயத்தில் ஈரானிய உள்துறை அமைச்சர் Ahmad Vahidi கூட வந்திருப்பதாகத் தெரிகிறது.

    ஆர்ஜெடீனா இவரைக் கைது செய்யுமாறு இலங்கையைக் கேட்டுள்ளது. இவர் 1994 ஆம் ஆண்டு ஒரு குண்டுத்  தாக்குதலில் தேடப்பட்டு வருபவர் என்று கூறப்படுகிறது.

    https://www.rfi.fr/fr/amériques/20240424-argentine-pakistan-sri-lanka-demande-arrêter-ahmad-vahini-ministre-interieur

  3. முன்பு ஒரு திரியில் எழுதியது, யாழில் சில தமிழ் அரசியல்வதிகள், வாள் வெட்டுக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் ஆகிய மூன்றும் ஒரு முக்கோணத் தொடர்புடையவை. 

    போதைப்பொருள் பாவனையின் மூல சக்தி பற்றிப் பத்திரிகையில் நேரடியாக எழுத முடியது.

    • Like 3
  4. 6 hours ago, பெருமாள் said:

    ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இது கடந்த ஒரு வார எண்ணை விலை விபரம்.
    oil-price.png

    இது தங்கம்
    gold-price.png

    😂

  5. 52 minutes ago, goshan_che said:மீள நேற்று நான் எழுதியபோது சரிய தொடங்கிய எண்ணை 82 இல் தரித்து நிற்கிறது.

    திங்கள் முதல் நானும் கவனித்தேன். எண்ணை விலை வீழ்ந்துகொண்டே போகிறது. பிட்காயின்ஸ் விலை வீழ்ச்சியோடு தொடர்பிருக்குமோ தெரியவில்லை.

  6. 10 minutes ago, Eppothum Thamizhan said:

    முழுவதுமாக இணைப்பை வாசித்து விட்டு பதில் எழுத பழகவும்.

    74 வீதமான மக்கள் இணை நாடுகளை எதிர்த்து போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது!!

     

    3 hours ago, இணையவன் said:

    செய்தியில் இஸ்ரெயில் தனது கூட்டு நாடுகளை மீறி ஈரான் மீது தாக்குவதை 74 வீதமானோர் விரும்பவில்லை என்று உள்ளது. 

     

    அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான். 
    🙂 

  7. 7 minutes ago, Eppothum Thamizhan said:

    Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict. 

     இதில் யாருக்கு விளக்கமில்லை??

    இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!

    52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது.

    74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது. 

    🙂

  8. 1 hour ago, Eppothum Thamizhan said:

    அமெரிக்கா உடனடி பதில் தாக்குதலை தான் ஆதரிக்கவில்லை என்று கூறிவிட்டது. அப்படியென்றால் முதல் பத்தியில் இருக்கும் 74% உம் பொருந்தும்தானே!!

    தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டாலும் இதனை எவ்வறு விளங்கிக் கொள்கிறீர்கள் ?

    Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict

    செய்தியில் இஸ்ரெயில் தனது கூட்டு நாடுகளை மீறி ஈரான் மீது தாக்குவதை 74 வீதமானோர் விரும்பவில்லை என்று உள்ளது. இதற்கு கபிதான் பொதுமக்கள் போரை விரும்பவில்லை என்று கொள்கை விளக்கம் தந்துள்ளார். இஸ்ரெய்லிய மக்களில் அரைவாசிப் பேர் கூட்டு நாடுகள் தடுக்காவிட்டால் போரையே விரும்புகிறார்கள் என்பதுதான் சாரம்.

    • Thanks 1
  9. 41 minutes ago, Kapithan said:

    முட்டையில் மயிர் பிடுங்குகிறீர்கள் 

    மறுபடியுமா? 

    ஈரான் மீதான பதில் தாக்குதலை விரும்பாதவர்கள் 52 வீதமானோர். செய்தியில் தெளிவாகக் குறிப்புடப்பட்டுள்ளது.

  10. 24 minutes ago, Kapithan said:

    University of Hebrew ஆல் நடாத்தப்பட்ட ஆய்வில் 74% மான இஸ்ரேலியர்கள் ஈரான் மீதான பதில் தாக்குதலை விரும்பவில்லை. மாறாக இஸ்ரேலின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும்  என விரும்புவதாகத்  கூறியுள்ளது. 

    ஆக, 

    பொதுமக்கள் எப்போதும் போர்களை வெறுத்தே வந்துள்ளனர் என்பது மேலும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 

    அரைகுறையாகச் செய்தியை விளங்கிக் கொண்டு வந்து எழுதுகிறீர்கள்.

    https://www.jpost.com/middle-east/iran-news/three-quarters-of-israeli-public-opposes-an-iran-attack-if-it-undermines-security-alliance-survey-797523 

    • Haha 1
  11. 32 minutes ago, விசுகு said:

    இந்த கருத்து கணிப்பில் இருந்தே நாம் தமிழர் கட்சிக்கு 4 இலிருந்து 12 வரை என்று இருக்கிறது. அப்படியானால் சராசரியாக  7 இலிருந்து 9 வரை வர வாய்ப்புள்ளதே. 

    இதுவரை வந்தவற்றில் பெரும்பாலும் 3 முதல் 7 ற்குள் உள்ளது. 

  12. 12 minutes ago, பையன்26 said:

    தேர்த‌ல் ஆணைய‌மே வீஜேப்பியின் கைபொம்மை

    தேர்த‌ல் முடிவை மாற்றி சொன்னாலும் ஆச்சரிய‌ப‌ட‌ ஒன்றும் இல்லை....................................

    ஏவிம் மிசினில் ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள் செய்ய‌லாம் என்று ப‌ல‌ர் வெளிப்ப‌டையாய் சொல்லுகின‌ம்
    ஆனால் பொய் என்றால் ஏன் தேர்த‌ல் ஆணைய‌ம் அவ‌ர்க‌ள் மீது வ‌ழ‌க்கு தொடுக்க‌ வில்லை அண்ணா............................

    தமிழ்நாடு பற்றி இவ்வளவு தெரிந்துவைத்திருக்கும் நீங்கள், தேர்தல் ஆணைய குளறுபடி, வாக்கு இயந்திர மோசடி, கைப்பொம்மைகள், கையூட்டுகள் எல்லாற்றையும் கணக்கில் எடுத்து நாத கட்சி எத்தனை வீதம் வாக்குகள் பெறும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

  13. 10 minutes ago, பையன்26 said:

    உந்த‌ ம‌த‌ வெறி பிடிச்ச‌ வீஜேப்பி ஒட்டு மொத்த‌ த‌மிழ‌க‌த்துக்குமே ஆவ‌த்து......................ஆதிமுக்கா இர‌ண்டாவ‌து இட‌ம் வ‌ந்தால் ம‌கிழ்ச்சி

    தேர்த‌ல் விம‌ர்ச‌க‌ர் சொல்லுகிறார் ஆதிமுக்காவின் ஓட்டுக‌ள் ம‌ற்ற‌ க‌ட்சிக்கு போகும் என்று..................

    ஏவிம் மிசில் குள‌று ப‌டிக‌ள் செய்து அண்ணாம‌லைய‌ வெல்ல‌ வைப்பின‌மோ தெரியாது........................

    கருத்துக் கணிப்பின்படி ஒருசில இடங்களைத் தவிர அதிமுக பிஜேபி யைவிட  முன்னணியில் உள்ளது. நாம் தமிழர் கட்சியால் பிஜேபி யின் வாக்குகளைக் கூடக் கவர முடியவில்லை. மொத்தமாக நாதக 4 முதல் 5 வீதமான வாக்குகளையே பெறும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் வாக்கு இயந்திரத்தைக் குறை கூறுவதிலேயே நிற்கிறீர்கள். 

    • Like 1
  14. 48 minutes ago, Kadancha said:
    1. இது பிபிசி சொல்லுவததற்கு முதல், வேறு எங்கோ, உக்கிரனுக்கு eu என்ன செயலாம் என்பதில் 2-3 கிழமைக்கு முதல் ஒரு சிறிய விடயமாக வந்தது. 

    ஆம். உக்ரெய்னில் இதனைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக வழங்கப்படும் என இரண்டு வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

  15. 3 minutes ago, Kapithan said:

    (பிறறின் மரணத்தில். துன்பத்தில். வன்முறையில் மகிழ்ச்சி அடையும் தாங்கள் இஸ்ரேலின் இந்தத் தாக்குதலின் மூலம் எதிர்காலத்தில்  எழக்கூடிய பாரிய அழிவுகளையிட்டு/அனர்த்தங்களையிட்டு  கிஞ்சித்தேனும் சிந்தித்ததுண்டா? 😏)

    உக்ரெயின் அழிவுகளை ஆதரித்தது போலவா ? 
    பலஸ்தீன் அழிவுகளை எங்காவது ஆதரித்து எழுதியுள்ளேனா ? மேலுள்ள செய்தியில் இறந்தவர்கள் அனைவரும் இராணுவத்தினரும் போராளிகளும் மட்டுமே.

  16. On 2/4/2024 at 17:45, Kapithan said:

    சும்மா ஒரு புரிந்துணர்வுக்காகத்தான் கேட்கிறேன்,..😁

    நீளமான ஆங்கிலச் செய்திகளை வாசிக்காமலே திரிகளில் கொண்டு வந்து ஒட்டிவிட்டுப் போவதைவிட ரஞ்சித் செய்திக் குறிப்பைத் தமிழில் எழுதி அதனுடன் தொடர்புடைய ஆங்கிலச் செய்தியின் இணைப்பையும் கொடுத்துள்ளார். இதனை ஊக்குவிப்பதற்கான விருப்புப் புள்ளி முக்கிமான காரணம்.

    திரிகளில் கேள்விகளை மட்டுமே கேட்டுவிட்டு விவாதத்துக்கு மத்தியில் இரண்டு வரியில் நக்கலாக எழுதும் கருத்துகளுக்கு விருப்புப் புள்ளி போடுவதை விட ஊக்குவிப்பும் பாராட்டும் சிறந்தது. புரிகிறதா ?

    • Like 1
  17. 33 minutes ago, ஈழப்பிரியன் said:

     

    விளையாட்டுப் போட்டி சம்பந்தமாக எல்லோருக்கும் தனிமடல் அனுப்ப @குமாரசாமி க்கு தனிமடல் அனுப்ப முடியாது என்று வருகிறது.

    இப்படி ஒரு தடையை வைத்திருப்பதால் நிர்வாகம் என்ன நன்மை அடைகிறது?

     

     

    குமாரசாமி cannot receive messages.

    குமாரசாமியின் தனிமடல் பெட்டி நிறைந்துவிட்டது. அவர் தேவையற்ற தனிமடல்களை அழித்தால் மறுபடி இயங்கும்.

    • Thanks 1
    • Haha 1
  18. 1 hour ago, putthan said:

    குடியுரிமை கிடைக்குமாம் ஒருவருடம் பணிபுரிந்தால் ....ஒரு சில சிறிலங்கா இராணுவத்தினர் ரஸ்யாவுக்கும்,இன்னுமொரு பகுதியினர் யுக்கிரைனுக்கும் போராடுகிறார்கள் ...அதாவது பணத்திற்காக ,குடியுரிமைக்காக...

    பணத்துக்காக இருக்கலாம். 

    கறுப்புத் தோலுடன் குடியுரிமை எடுத்துத் துன்பப்படுவதை விட இலங்கையில் இருந்து பிச்சையெடுக்கலாம்.

    • Thanks 1
  19. 19 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

    தவறுகளை திருத்த அவற்றை சுட்டிக்காட்டி வைப்பது விமர்சனம்.. மற்றைய நக்கல் நையாண்டி எல்லாம் காழ்ப்புணர்ச்சி.. இங்கு பலரின் கருத்துக்களை மேலோட்டமாக வாசிக்கும்போதே புரிந்துவிடுகிறது காழ்ப்புணர்ச்சி என்று.

    இந்தத் திரியில் இருதரப்பும் நக்கல் நையாண்டியில் ஈடுபட்டாலும் 8 வீதமான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் எந்த ஒரு பதவியையுமே வகிக்க முடியாத கட்சிக்காகத் திராவிடக் கொள்கையை மதிப்பவர்களையும் ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளையும் கருணாநிதி மோடி போன்றவர்களை மோசமாகத் திட்டியும் உச்சக் கட்டமாகப் பொதுமக்களைக் கொத்தடிமைகள் என்று பல இடங்களில் தூற்றியும் எழுதியது பாரதூரமாகத் தெரிகிறது. இந்திய அரசியலுக்குள் மூக்கை நுளைத்து 92 வீதமான தமிழக மக்களது உணர்ச்சிகளைக் கேவலப்படுத்துவது எமக்குத் தேவையானதா ? அல்லது அதற்கு நாம் தகுதியானவர்களா ?

    • Like 5
    • Thanks 3
  20. சமீபத்தில் ஐரோப்பாவில் உடல் எடை குறைவாக உள்ளவர்களைப் பட்டியலிட்டபோது பிரான்ஸ் இரண்டாம் இடத்தில் இருந்தது. உணவில் உப்புக் குறைப்பும் இதற்கான காரணங்களில் ஒன்றாக முன்வைக்கப்பட்டது. சில வருடங்களுக்கு முன் பிரெஞ்சு அரசாங்கம் உணவுகளில் குறிப்பாகப் பாண் வகைகளில் உப்பைக் குறைக்குமாறு வலியுறுத்தியது. சுவையில் பெரிய மாற்றம் இல்லாமல் உப்புக் குறைக்கப்பட்டது.

    நாம் சமைக்கும் கறிவகைகளில் உப்புப் போட்டு அவிய விடுவதால் உணவுகள் அதிக உப்பை உறிஞ்சிக் கொள்கிறது. சிலர் சோறு அவிக்கும்போதும் அதிகளவு உப்புச் சேர்க்கின்றனர். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவுகளை உப்புடன் சேர்த்து அவிக்காமல் தூவிச் சாப்பிட்டால் குறைந்த அளவான உப்பில் அதிக சுவை இருக்கும்.

  21. On 30/3/2024 at 23:59, குமாரசாமி said:

    81d045b2529eaac25dae5fa9b1ca3d42.gif

    இனி சொந்த அனுபவங்களையும் எழுதேலாது போல கிடக்கு.....😂
    ஒன்லி பிபிசி, சிஎன்என், கேம்பிறிச், ஒக்ஸ்வோர்ட் தரவுகள் தான் செல்லுபடியாகும் 😎

    உங்கள் சொந்த அனுபவத்தை வைத்து மருத்துவத்தில் சரி பிழையைத் தீர்மானிக்க முடியாது. அது தரவாகவும் கணிக்கப்பட மாட்டாது. 

    ஆக்கபூர்வமான திரிகளில் ஏனையவர்களால் பகிரப்படும் ஆதாரபூர்வமான பலருக்கும் பயன்படும் தகவல்களில் நீங்கள் தலையிடாமல் இருப்பதே யாழுக்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.

    நன்றி.

    • Haha 1
  22. 2 minutes ago, nedukkalapoovan said:

    என் தாயக பூமியில் ...

    போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.