Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • Posts

  6,186
 • Joined

 • Days Won

  15

Everything posted by இணையவன்

 1. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்கள் (புரிந்துகொண்ட அளவில்) சில பிடிக்கும். செக்ஸ் சாமியார் என அழைக்கப்பட்ட ஓஷோ கோடிக்கணக்கான பணத்தில் ஆடம்பரக் கார்கள் பெண்கள் என அனைத்தையும் அனுபவித்து வாழ்ந்தவர்.
 2. செய்யலாம். ஆனாலும் உள்ளூர் சந்தையைப் பாதிக்கக் கூடாது.
 3. புண்ணாக்கை யாரும் இழிவுபடுத்த வேண்டாம். மாட்டுக்காக வாங்கி வைத்திருந்த எள்ளுப் புண்ணாக்கை அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் ஒரு பிடி எடுத்துத் தின்று வளர்ந்த நாங்கள்.
 4. இதன் உள் நோக்கங்கள் புரியாவிட்டாலும் இது ஒரு ஆரோக்கியமான அறிக்கை. - இந்த அறிக்கைக் குழுவை 3 மில்லியன் ஈரோ செலவில் சுயாதீனமாக இயங்க வைத்தது கத்தோலிக்க திருச்சபை - பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு தருவதாகக் கூறியுள்ளனர் - பாப்பரசர் வருத்தம் தெரிவித்தது மட்டுமில்லாமல் பிரான்ஸ் திருச்சபை மன்னிப்புக் கேட்டுள்ளது - மூடி மறைக்காமல் உண்மைகளை வெளிக்கொணர்ந்ததால் எல்லோரும் கவனமாக இருப்பார்கள். குற்றவாளிகளை இனம்கண்டு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறிவியல் விஞ்னானத்துக்கு எதிராகச் செயற்பட்டது, பின்னர் அதை ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கேட்டது உட்பட கிறிஸ்தவ மதம் சரியான பாதையில் பயணிக்கிறது என்பது எனது கருத்து. மூடி மறைப்புகளும் பழமைவாதமும் மாற்றங்களும் இல்லாத எதுவும் எதிர்கால இருப்பிற்குப் பாதகமாகவே அமையும்.
 5. 3 - 4 வருடங்களுக்கு முன் இதே போன்றதொரு குற்றச்சாட்டு எழுந்தது. ஒதுக்கப்பட்ட நிதியைத் தமிழர் தரப்பினர் பவிக்கத் திட்டமிடாமையால் அந்த நிதி வேறு பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டதாக வாசித்த ஞாபகம்.
 6. ஆக, 1. இங்கிலாந்து ஒரு கைப்புள்ளையாக இருந்திருக்கு ! 2. எரிபொருள் உட்பட பல பிரச்சனைகளுக்கு பிரெக்ஸிட் முக்கிய காரணம் (தமிழர்களால் இதை நேரடியாக ஒத்துக்கொள்ள முடியாது) ! இந்த சின்னப் பிரச்சனைக்காக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு என்ற திரியில் தொடர்பில்லாமல் பிரெக்ஸிட் பற்றி உரையாட வேண்டுமா ?
 7. நாற்சந்தியில் திறக்கப்பட்ட 'திரி ஒன்றினை மூடுதல்' என்ற திரி மூடப்படுகிறது. இது தொடர்பான விளக்கம் இதில் குறிப்பிட்ட திரியில் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலதிக விபரம் தேவையானால் நிர்வாகத்திடம் தனிமடலில் கேட்டிருக்க வேண்டும்.
 8. அமைச்சர் ஒருவர் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை உதவி செய்யுமாறு கேட்டிருந்தார். அதை முயன்று பார்க்கலாம் என்று எழுதியிருந்தேன். இங்கே அந்த முயற்சி எடுக்கப்படுகிறது. சுரேன் என்பவர் எப்படி என்று தெரியாது. இதிலும் துரோகி முத்திரை குத்த முயல்பவர்கள் அதற்கு ஈடாக வேறென்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும்.
 9. விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்து 11 வருடங்களைக் கடந்தும் புலம்பெயர்ந்த தமிழர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த அறிவிப்பு நல்லதொரு முயற்சி அல்லவா ? நா.க.அரசாங்கத்தை விட வெளிநாடுகளில் முகவரி அற்ற அறிவிப்புகள் விடாத வேறெந்த அமைப்புகள் உள்ளன ?
 10. இதுவே வேறு நாடாக இருந்திருந்தால் தோல்வியடைந்த குடும்ப அரசியலுக்கு எதிராகப் புரட்சி வெடித்திருக்கும். மக்கள் எதையும் பொறுப்பார்கள் ஆனால் உணவுப் பஞ்சம் வரும்போது பொறுமை காக்க முடியாது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலேயொழிய பொருளாதார மாற்றம் வரப்போவதில்லை.
 11. உணவுப் பற்றாக்குறை காரணமாக அவசரகால நிலை என்று பிரெஞ்சுச் செய்தி ஒன்று சொல்கிறது. https://www.lemonde.fr/international/article/2021/08/31/le-sri-lanka-qui-traverse-une-grave-crise-economique-declare-l-etat-d-urgence-alimentaire_6092852_3210.html வங்கிகள் உணவு இறக்குமதிக்குப் பணம் கொடுக்க முடியாத நிலையில் உணவுப் பதுக்கல் விலையேற்றம் ஆகியவற்றிற்கெதிராக இருக்கும் உணவினைப் பகிர்ந்தளிக்கலாம். நான் நினைக்கிறேன், பெற்றோல் கொள்வனவுக்காக நடந்த பேச்சுவார்த்தையும் சரிவரவில்லை என்று. பெற்றோலியத் தட்டுப்பாடு நுகர்வுப் பொருட்கள் அத்தனையிலும் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
 12. போரில் ஆயுதங்களைக் கைவிடவேண்டி வந்தால் அவற்றை எதிரிக்குப் பயன்படாதவாறு எப்படி இலகுவாகவும் விரைவாகவும் செய்லிழக்க வேண்டும் என்பது கைத்துப்பாக்கியிலிருந்து பீரங்கி வரை செயல்முறைகள் உண்டு. இது இராணுவப் பயிற்ச்சி எடுக்கும் எல்லோருக்கும் கட்டாயமாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவத்தினர் இவ்வளவு தொகையான ஆயுதங்களைப் பத்திரமாக வைத்துவிட்டு வந்திருப்பதை எப்படி எடுத்துக் கொள்ளலாம் ?
 13. 'பாலியல் காணொளி சர்ச்சை; கே.டி. ராகவன் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகல்.' என்ற திரி பூட்டப்படுகிறது.
 14. நந்தன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
 15. 2018 இல் 2.3 மில்லியன் உல்லாசப்பயணிகள் இலங்கைக்குள் நுளைந்தார்கள். இதில் தமிழர்களே கணிசமானவர்கள். வெள்ளைக்காரர் விமானம் விடுதி என்று ஆகக் குறைந்து 1700 $ அளவில் ஒருவருக்குச் செலவளிக்கிறார். விமானம் தவிர்த்துப் பார்த்தால் குறைந்தது உள்நாட்டுக்கு இலவசமாகக் கொண்டு செல்லும் அந்நியச் செலாவணி குறைந்தது 1000 $. ஒரு வருட வருமானம் 2.3 பில்லியன் $. உண்மையில் இத் தொகை இதைவிட அதிகமாக இருக்க வேண்டும். இன்னும் 6 மாதம் பொறுங்கோ, இலங்கையின் வருட வட்டியை நாங்கள் கட்டி முடிக்கிறோம்.
 16. கடுகு சிறிதெனும் கரம் பெரிது. உறைப்பு ஒரு சுவை இல்லை என்று நினைக்கிறேன். அது நாவில் ஏற்படுத்தும் எரிவு.
 17. 16 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு வெள்ளைக்காறன்தான் எங்களுக்கு மிளைகாயை அறிமுகப்படுத்தியதாக ஏற்கனவே சொல்லியிருக்கிறம் . வரலாற்றையும் புள்ளி விபரத்தையும் நம்புவது நம்பாதது உங்கள் விருப்பம். முன்னோர்கள் ஒருவேளை கடுகினை உறைப்புக்கு (காரம் ?) பாவித்திருக்கலாம்.
 18. இது கீழடி காலப்பகுதியில் இருந்திருக்க வாய்ப்பில்லை. இதில் இருப்பவை தமிழ் எழுத்துக்கள்.
 19. 3 - 4 வருடங்களுக்கு முன் இலங்கைக்குச் சுற்றுலா சென்ற பிரெஞ்சுக் குடும்பம் ஒன்றின் சிறுவன் கடற்கரையில் ஒரு நாய் கடித்தபின் பிரான்ஸுக்கு வந்து நோய்த் தொற்றுக்கு உள்ளாகி மைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நாய்போல் குரைத்து இறந்ததாக செய்தி ஒன்றில் படித்திருந்தேன்.
 20. சரியான தருணத்தில் சரியான முடிவெடுக்கும் கடமை தமிழர் தலமைக்கு உண்டு. இல்லையேல் இதுவும் கடந்து போகும் என்று எமது இயலாமையை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.
 21. பாண்டிச்சேரியில் எங்கள் ஊர் குழம்பை ஆணம் என்று சொல்வார்கள். ஒரு தடவை அவர்கள் விருந்திற்குப் போயிருந்தேன். பிரியாணிச் சோறு பரிமாறப்பட்டது. குழம்பு ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டது. நான் பிரியாணியுடன் குழமபி ஊற்றி ஒரு வெட்டு வெட்டிக் களைத்துப் போனேன். அருகில் இருந்தவர்கள் 'ஆணம்' எடுக்காமல் அமைதியாக பிரியாணி சாப்பிட்டார்கள். பின்னர் வெள்ளைச் சோறு கொண்டு வந்தார்கள். ஏனையவர்கள் வெள்ளைச் சோறுடன் தனியே ஆணம் விட்டுத் தாராளமாகச் சாப்பிடத் தொடங்கினார்கள். அப்போதுதான் புரிந்தது பிரியாணி முதல் ஆட்டம் என்பது.
 22. ரதி, எதையுமே நீங்களாகவே ஆராய்ந்து தெளிவதுதான் நல்லது. உங்களிடம் இந்த எண்ணைதான் நல்லது என்ற கருத்தை நான் திணிக்கவில்லை. linolenic acid, stearic acid, oleic acid (சுருக்கமாகச் சொன்னால் கூடாத, நல்ல கொழுப்பு - omega 3, 6, 9) ஆகியவை எந்த எண்னையில் எந்த அளவு உள்ளது என்ன பயன் உள்ளது என்று கூகிளில் நீங்களே தேடி அறிந்து கொள்ளுங்கள். இது பற்றி நான் எழுதினால் உங்கள் அண்ணர் எனக்கெதிராகக் காவடி எடுக்கிறார்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.