Everything posted by ரஞ்சித்
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
பிரபாகரன் தற்போது கால்முறிந்த வாத்தாக மாறிவிட்டார், அவரால் ஒரு போதுமே இன்னுமொரு போரினை ஆரம்பிக்க முடியாது - கருணா ஆங்கிலமூலம் : வோல்ட்டர் ஜயவர்டின இணையம் : லங்கா வெப் காலம் : கருணா ராணுவத்திற்காக இயங்கத் தொடஙியிருந்த காலம். பிரபல சிங்கள நாளிதழான திவயினவுக்கு, வன்னிப் புலிகளுக்கு சிம சொப்பனமாகத் திகழும் கருணா அம்மான் அண்மையில் வழங்கிய செவ்வியில் , கிழக்கு மாகாணத்தின் பெருமளவான புலிகள் இயக்கப் போராளிகள் தனது கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளதனால் வன்னிப் புலிகளின் தலைவரான பிரபாகரன் தற்போது எழுந்து நடக்கமுடியாத நொண்டி வாத்தாக மாறிவிட்டார் என்று கூறினார். "அவரால் இனிமேல் ஒருபோரை ஆரம்பிப்பது குறித்து நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. கிழக்கில் அவரது கட்டளைகளும் விருப்பங்களும் இனிமேல் எக்கட்டத்திலும் நிறைவேறப்போவதில்லை" என்று அவர் கூறினார். "பிரபாகரனுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கிழக்கில் செல்லுபடியாகாது. ஆகவே கிழக்கிற்கென்று தனியான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை நாம் தயாரிக்க வேண்டும்" என்றும் அவர் மேலும் கூறினார். உலகின் அதிக அளவிலான தற்கொலைத் தாக்குதலாளிகளைக் கொண்டிருக்கும் புலிகள் இயக்கத்தின் பெரும்பாலான தற்கொலைக்குண்டுதாரிகள் இன்னமும் பிரபாகரனின் அணியில் இருப்பதாகவும், புலநாய்வுத்துறையின் பெருமளவு போராளிகள் இன்னமும் பொட்டு அம்மானின் கட்டளையின் கீழ் செயற்பட்டு வருவதாகவும் கூறிய கருணா, கிழக்கின் புலிகளின் ராணுவப் பிரிவு தனது கட்டுப்பாடின்கீழேயே இருப்பதாகக் கூறினார். ஆகவே, தனது ராணுவக் கட்டமைப்பு புலிகளைக் காட்டிலும் பலம் வாய்ந்தது என்று புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற "ஜெனரல்" கருணா கூறினார். "பொட்டு அம்மானின் கீழ்த்தரமான செயற்பாடுகளினால்த்தான் நாம் பிரிந்துசெல்ல நேரிட்டது. கிழக்கு மாகாணப் போராளிகளின் பலம்பற்றி பிரபாகரனும் பொட்டு அம்மானும் நன்கு தெரிந்தே வைத்திருக்கிறார்கள், அதனாலேயே எம்மீது தாக்குதல்களை நடத்த அவர்கள் அஞ்சுகிறார்கள். எங்கள் மீது தாக்குதல் நடத்துவதென்பது அவர்களால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு விடயம். பல்லாயிரக்கணக்கான கிழக்குத் தமிழர்கள் புலிகள் இயக்கத்துக்காக தமது உயிரை அர்ப்பணித்திருக்கிறார்கள். ஆனால், புலிகளின் தலைமை அவர்களுக்கான நீதியினை ஒருபோதும் வழங்கியதேயில்லை. இன்றுமட்டும் கிழக்கு மாகாணத் தமிழர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கப்போவதாக புலிகளின் தலைமை பசப்புவது கேலிக்கூத்தான ஒரு விடயமாகும்" என்றும் கருணா அம்மான் கூறினார். "நான் இனிமேல் மொத்த இலங்கைத் திருநாட்டின் அமைதிக்காக எனது வாழ்க்கையினை அர்ப்பணிக்கப்போகிறேன். இதுவரை காலமும் வன்னிப் புலிகளுக்காக தமது வார்க்கையினை அர்ப்பணித்த கிழக்கு மக்களுக்காகவும், கிழக்கின் அபிவிருத்திக்காகவும் எனது வாழ்க்கையினை அர்ப்பணிக்கப்போகிறேன்" என்றும் அவர் கூறினார். "கிழக்கு மாகாணத் தமிழர்கள் புலிகளின் தலைமையினால் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் பெரும் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதன் பின்னணியிலேயே வடபகுதித் தமிழருக்கெதிரான கிழக்குத் தமிழரின் வீரியமான எழுச்சி பார்க்கப்படுதல் அவசியமாகிறது" என்றும் அவர் கூறினார். "நான் அரசாங்கத்திடம் பாதுகாப்புக் கோரியதாக வந்த வதந்திகள் உண்மைக்குப் புறம்பானவை, நான் அவற்றை முற்றாக மறுதலிக்கிறேன். இந்த அரசாங்கம் எம்முடன் தனியான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை கட்டாயம் செய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்யத் தவறும் பட்சத்தில் எமது பலத்தினை அவர்கள் மிக விரைவில் புரிந்துகொள்வார்கள். இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தைகளை நாம் கிழக்கின் தலைவர்களிடம் ஆரம்பித்திருக்கிறோம். கிழக்கிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு நோர்வே மத்தியஸ்த்தம் செய்ய விரும்பினால், நான் மறுக்கப்போவதில்லை. எனது அனைத்து நடவடிக்கைகளுக்கும் மொத்த கிழக்கு மாகாண மக்களின் ஒருமித்த ஆதரவு கிடைத்துவருகிறது" என்றும் அவர் மேலும் தெரித்தார். "கிழக்கு மாகாண முஸ்லீம் மக்களின் கவலைகள் தொடர்பாக நான் நடவடிக்கை எடுக்கவிருக்கிறேன். அவர்களிடமிருந்து புலிகளால் பறிக்கப்பட்ட காணிகளை நான் மீளவும் அவர்களுக்கு வழங்குவேன். கிழக்கில் அனைவரும் சுதந்திரமாகவும் சமாதானத்துடனும் வாழ நான் நடவடிக்கை எடுப்பேன்" என்று அவர் கூறினார். "இறுதியாக, நான் இருக்கும் இடம்பற்றி நீங்கள் உங்கள் பத்திரிக்கையில் எத்தகவலையும் வெளியிட வேண்டாம், அது எமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்" என்று தனது செவ்வியினை முடித்துக் கொண்டார் கருணா அம்மான். http://www.lankaweb.com/news/items04/090304-1.html
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
குணப்படுத்த முடியாத, சீழ்பிடித்த, சிறுகச் சிறுக இறந்துவருகின்ற புலிகள் எனும் பயங்கரவாத அபுற்றுநோய்க்குத் தலைவலியாகவிருக்கும் கருணாவின் அமைப்பினரை இலங்கையரசு கட்டுப்படுத்தவேண்டும் என்று நோர்வேஜியர்களும், யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவும் தொடர்ச்சியாக கேட்டுவருவது இயற்கையானது. வன்னிப் புலிகளுக்கெதிரான கருணாவின் நடவடிக்கைகள் தொடருமிடத்து புலிகள் மிக விரைவில் அழிக்கப்பட்டுவிடுவார்கள் என்பதும், இலங்கை ராணுவத்தை தமது தாயகத்திலிருந்து துரத்திவிடுவோம் என்று புலிகள் கட்டிவந்த கற்பனைக் கோட்டைகள தகர்க்கப்படும்போது சாதாரண தமிழ்மக்களும் சிங்களவர்களை அனுசரித்து, அவர்கள் தரும் தீர்வினை ஏற்றுக்கொள்ள முன்வருவார்கள் என்பது நோர்வேஜியர்களுக்கும் கண்காணிப்புக் குழுவினருக்கும் நன்கு தெரிந்தே இருக்கிறது. ஆகவேதான், அப்படியானதொரு நிலைமை ஏற்படுமுன்னர் கருணாவை நாம் கட்டுப்படுத்தவேண்டும் என்று கோரிக்கைவிடுத்து வருகிறார்கள். புலிகளின் வெற்று எச்சரிக்கைகளை உதாசீனம் செய்து, "கருணாவைக் கட்டுப்படுத்தாவிட்டால் முழு அளவிலான போரைத் தொடங்குவோம்" என்ற புலிகளின் புஸ்வானங்களை நிராகரித்து, கருணாவுக்குத் தேவையான ஆயுதங்கள், பயிற்சிகள், வளங்கல்கள் மற்றும் தார்மீக ஆதரவினை இலங்கையரசு வழங்கி, தமக்காக பயங்கரவாதி பிரபாகரனை அழிக்க மகிழ்வுடன் முன்னிற்கும் அவரை முழு மனதோடு ஆதரிக்கவேண்டிய காலம் கனிந்திருக்கிறது. கருணா அமைப்பென்பது இலங்கையில் சட்டரீதியாக பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியென்பதும், இலங்கை நாட்டின் நலனில் அக்கறை கொண்ட ஒரு அமைப்பென்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாம் காலம் தாழ்த்தாது உடனடியாக கருணாவைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிடவேண்டும். இன்று இலங்கையரசு கருணாவுக்கு ஆதரவு வழங்குவதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தாலும்கூட, கருணாவின் வீரர்கள், புலிப்பயங்கரவாதிகளின் போர் இயந்திரத்தில் தொடர்ச்சியாக ஏற்படுத்திவரும் சேதங்களால், அப்பயங்கரவாத இயக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு அதன் இயங்கு சக்தியும் வெகுவாகச் சேதமடைந்திருக்கிறது. ஆகவே, சிங்களவர்களுக்கான யுத்தத்தைத் தன்னந்தனியனாக நின்று இன்று செய்துவரும் கருணாவையும் அவரது வீரர்கலையும் கொலைகார மூர்க்கனான பிரபாகரனின் கொலைப்படைகளிடமிருந்து பாதுகாத்து, அவர்களைப் பலப்படுத்த வேண்டியது எமது தலையாய கடமையாகும். கருணாவும் அவரது தோழர்களும் நிலையான சமாதானத்தை வேண்டி நிற்கும் அதேவேளை கொலைகார வன்னிப் புலிகள் தொடர்ச்சியான யுத்தத்தையும், அழிவினையும், கோரங்களையுமே தமிழ் மக்களுக்குத் தீர்வாக முன்வைத்துவருகிறார்கள். பிரபாகரனின் வெறித்தனத்தால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுவதோடு, ஏனைய இனத்தவர்களும் பாதிக்கப்படப்போகிறார்கள். இறுதியாக கெளரவ கருணா அம்மானின் மூலம் இந்தப் பயங்கரவாதப் பிரச்சினையினை கெளரவமான முறையில் தீர்க்கக் கூடிய சந்தர்ப்பம் ஒன்று சிங்களவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த இக்கட்டான, ஆனால் மிகத் தீர்க்கமான தருணத்தில் கருணா அம்மான் எமது உதவியினை வேண்டி நிற்கின்றார், அவரைப் பலப்படுத்தி அவரின் பின்னால் அணிதிரள்வது ஒவ்வொரு சிங்களவரினதும் கடமையாகும். முற்றும் ! http://www.lankaweb.com/news/items06/020506-1.html
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
கருணாவின் அமைப்பிற்கும் கொலைகாரப் புலிகளுக்குமிடையே யாரை தெரிவுசெய்யவேண்டுமென்பதில் இலங்கையரசு நிதானமாகச் செயற்பட வேண்டும் லங்கா வெப் இணையத்துக்காக நிசங்க காலம் : கருணா இலங்கை ராணுவத்துடன் செயற்பட ஆரம்பித்த காலப்பகுதி கருணா தன் ஆயுதங்களைக் களைந்து, இலங்கையின் ஜனநாயக அரசியலினூடாக இயங்குவதற்கு தனது விருப்பத்தினைத் தெரிவித்திருப்பதுடன், தமிழர்களின் பிரச்சினைகள் என்று அவர் கருதுபவை ஜனநாயக ரீதியில் தீர்த்துவைக்கப்படலாம் என்றும் நம்புகிறார்.அது மடும்மல்லாமல், தான் பயங்கரவாதப் புலிகளிடமிருந்து விலகியபின்னர் தனது அமைப்பினர் இலங்கை ராணுவத்தின்மீது எதுவிதமான ராணுவத் தாக்குதல்களையோ, குறைந்தபட்சம் கல்லைக் கவனில் வைத்து எறிவதையோ நடத்தவில்லையென்றும் கூறியிருக்கிறார். அத்துடன், இலங்கைத் தமிழர்களுக்கு இன்றிருக்கும் ஆபத்து இலங்கை ராணுவத்தால் அன்றி, இவ்வுலகில் பேயின் மறுபிறப்பாகப் பிறந்துள்ள பிரபாகரன் எனும் படு பாதகப் பயங்கரவாதியிடமிருந்தே வருகிறது என்றும் அவர் வெளிப்படையாக கூறிவருகிறார். கருணாவின் இந்த கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக கொலைவெறிபிடித்த பிரபாகரனின் கொலைப்படையான "வன்னிப் புலிகள்" இதுவரை கட்டவிழ்த்துள்ள படுகொலை வெறியாட்டத்தில் குறைந்தது 250 எமது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் இன்னும் 150 பேர்வரையில் காயப்பட்டிருக்கிறார்கள். ஆகவே இந்த பயங்கரமான சூழ்நிலையில் யாரை ஆதரிப்பது என்பதில் இலங்கையரசு மிகவும் நிதானமாகச் சிந்தித்து செயற்படவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இலங்கையரசு இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் உண்மையான தீர்வொன்றைக் காண விரும்பினால், அது கருணாவின் அமைப்பையே ஆதரிக்கவேண்டும் என்பது அவசியமானது. நான் இங்கே "பிரச்சினைகளுக்கான தீர்வு" என்பது வன்னிப் புலிப்பயங்கரவாதிகள் கோரும் "தீர்வு" என்பது நிச்சயமாகக் கிடையாது. கொலைகாரப் புலிகள் கேட்பது எமது நாட்டைக் கூறுபோட்டு, பாஸிச கொடுங்கோலாட்சி நடத்தும் ஒரு தனிநாட்டையே. சாதாரணத் தமிழ் ஆணோ அல்லது பெண்ணோ தமக்கான தீர்வாக இதனை ஒருபோதும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கம்போடியாவின் முன்னாள் சர்வாதிகாரியான பொல்பொட்டின் கொடுங்கோலாட்சிக்கு நிகரான ஒரு ஆட்சியையே பிரபாகரன் தனது தனிநாடான ஈழத்தில் நிறுவுவதற்குப் பாடுபடுகிறான். ஆனாலும், இன்றுவரை வன்னிப் புலிகள் சமஷ்ட்டி முறையிலான தீர்வென்று பேசிவருவது வெலியுலகினை ஏமாற்றவேயன்றி, உண்மையாகவே அவர்களுக்கு சமஷ்ட்டித் தீர்வில் நம்பிக்கை கிடையாது என்பது கருணா மூலம் எமக்குத் தெரியவருகிறது. ஆனால், இதற்கு மாறாக கருணா பேசும் அரசியல் நியாயமானது. கடந்த 25 வருடங்களாக வெல்லமுடியாத ஒரு யுத்தத்தில் தமிழ் இளைஞர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டு வருவது நிறுத்தப்படவேண்டும் என்று அவர் விரும்புகிறார். பலவீனமான இலங்கையரசுகள் ஒரு கட்டத்தில் பிரபாகரனின் அழுத்தத்திற்குப் பயந்து அவர் கேட்கும் ஈழத்தைக் கொடுக்க முன்வந்தாலும்கூட, இந்தியா அதனை ஒருபோதும் அனுமதிக்காது என்பதைக் கருணா மிகத் தெளிவாகவே அறிந்துவைத்திருக்கிறார். அத்துடன் 1970 களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த மாயையான தமிழ் ஈழக் கனவு இன்று மாறிவரும் புதிய உலக ஒழுங்கில் நிச்சயமாக சாத்தியமற்றது என்பதை சிங்களவர்கள் நம்புவதுபோலவே கருணாவும் நம்புகிறார். கருணாவின் இந்தப் புதிய உலக ஒழுங்கு பற்றிய அரசியல் தெளிவினை நாம் நிச்சயம் போற்றவேண்டும் என்பதோடு கிணற்றுத் தவளையாக தனது குறுகிய வட்டத்தினுள் உழன்றுகொண்டிருக்கும் கொலைகாரப் பிரபாகரனின் மடைமையினை கருணாவின் விவேகத்துடன் இலங்கையரசு ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும். கருணாவின் ஜனநாயக ரீதியான, சமூக நலன் சார்ந்த சிந்தனைகளே அரசு அவரைத்தான் ஆதரிக்க வேண்டும் என்கிற அவசியத்தைத் தோற்றுவித்துத் தந்திருக்கிறது.
-
களைத்த மனசு களிப்புற ......!
உங்களுக்கும் கூடைப்பந்தில் ஆர்வம் இருக்கிறதோ??? உங்களை இயற்கை அழகைத் தரிசுக்கும் ஒரு ரசிகை என்றல்லவா மனதில் வரைந்து வைத்திருக்கிறேன். பல்கலை வித்தகரோ??? அசத்துகிறீர்கள்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
ராஜீவ் காந்தியைக் கொன்றதிலிருந்தே பிரபாகரனின் அழிவுகாலம் தொடங்கியது. அவர் ஒரு சுயநலம் மிக்க கோழை - பி பி ஸி 4 சேவையில் பேட்டியளித்த கருணா காலம் : வைகாசி 18, 2009 மூலம் : வோல்ட்டர் ஜெயவர்டென பயங்கரவாத புலிகள் இயக்கித்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராக ஒருகாலத்தில் இருந்தவரும், தற்போது அரசின் பிரதியமைச்சராக இருப்பவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் பி பி ஸி யின் 4 ஆம் சேவைக்கு வழங்கிய செவ்வியில் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தலைவரான பிரபாகரனின் அழிவுகாலம் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை தற்கொலைக் குண்டுதாரியொருவரின் மூலம் கொன்றதையடுத்தே ஆரம்பமானது என்று கூறினார். காந்தியின் கொலைபற்றிக் கூறும்போது, "அது ஒரு மிகப்பெரிய தவறு. இதன்பின்னர் குறைந்தது 20 நாடுகள் புலிகள் இயக்கத்தைத் தடை செய்தன. அதற்கு முன்னர் இந்த நாடுகள் எல்லாம் திரைமறைவில் புலிகளுக்கு ஆதரவளித்து வந்தன". என்று கூறினார். ஆனால், எந்தெந்த நாடுகள் புலிகள் இயக்கத்திற்குத் திரைமறைவில் உதவின என்பதை கருணா குறிப்பிடவில்லை. தமிழ்நாட்டின் சிறிபெரும்புதூரில் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியின் கொலைக்குக் காரணமானவர்கள் என்று கருதப்படும் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், அவ்வியக்கத்தின் புலநாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மானும் சில தினங்களுக்கு முன்னர் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். புலிகளின் முன்னாள் தத்துவ ஆசிரியர் அன்டன் பாலசிங்கம் கூட ராஜீவின் மரணத்தை பாரிய தவறு என்று ஒப்புக்கொண்டிருந்தபோதும் பின்னர் புலிகள் அந்தக் கூற்றிலிருந்து விலகிவிட்டனர். இன்றைய நிகழ்ச்சியில் பி பி ஸியின் தொகுப்பாளர் அன்ட்ரே ஹொக்ஸன் பின்வருமாறு கூறினார், " கருணாவைப் பொறுத்தவரை பிரபாகரனின் மிகப்பெரிய தவறு மே மாதம் 1991 ஆம் ஆண்டு ராஜீவின் கொலையுடன் ஏற்படுத்தப்பட்டது. அன்று கிழக்கு மாகாணத்திற்கான புலிகளின் தளபதியாகவிருந்த கருணா இந்த கொலைமுயற்சி தொடர்பாக தான் எதனையும் அறிந்திருக்கவில்லையென்றும், ஆனால் ராஜீவ் கொல்லப்பட்டவுடனேயே அக்கொலை பிரபாகரனினாலும், பொட்டம்மானினாலும் தான் நடத்தப்பட்டிருக்கவேண்டும் என்பதை அறிந்துகொண்டதாகவும் கூறினார். புலிகள் வழமையாகப் பாவிக்கும் தாக்குதல் உத்தியான தற்கொலைத் தாக்குதல் மூலமே ராஜீவ் கொல்லப்பட்டதனால், இதனை அவர்கள் இருவருமே செய்திருக்கவேண்டும் என்று தான் சந்தேகித்ததாகக் கூறினார்". "நான் பிரபாகரனிடம் நீங்கள் மிகப்பெரிய தவறொன்றைச் செய்துவிட்டீர்கள் என்று கூறினேன். அவரோ அதனை மறுத்தார், ஆனால் அதனைச் செய்தது அவர்தான் என்பது எனக்குத் தெரியும்". "அது ஒரு மிகப்பெரிய தவறு. அக்கொலையின் பின்னர் 20 நாடுகள் எம்மை பயங்கரவாத அமைப்பென்று தடை செய்தன. இதற்கு முன்னர் பல அரசாங்கங்கள் எமக்கு ஆதரவாகத் திரைமறைவில் செயற்பட்டன". இலங்கையின் தமிழர் பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்காகப் பழிவாங்கவே ராஜீவைப் பிரபாகரன் கொன்றார் என்று நம்பப்படுகிறது. ஆனால் நீண்டகால நோக்கில் இந்தப்படுகொலை புலிகளின் இலட்சியத்தை மிகக் கடுமையாகப் பாதித்திருந்தது. கருணா தொடர்ந்தும் பேசுகையில் "பிரபாகரன் ஒருபோதுமே எதிரியுடன் நேருக்கு நேர் நின்று போர் செய்யவில்லை. அதே போன்றதொரு நிகழ்வே பிரபாகரனின் இறுதிக் கணத்திலும் நடந்ததது. எதிரியுடன் இறுதிவரை சண்டை பிடிக்கவோ அல்லது தனது சகாக்களுக்குக் கூறுவதுபோல சயனைட் உட்கொண்டு மரணிக்கவோ எத்தனிக்காது குண்டுதுளைக்கமுடியாத வாகனமொன்றில் ஏறித் தன்னைக் காப்பற்றிக்கொள்ளவே அவர் இறுதிவரை முயன்றார். ஆனால் அவர் தப்பிச் சென்ற வாகனம் ராணுவத்தின் ரொக்கெட் தாக்குதலில் சிதைந்துவிட்டது" என்று அவர் கூறினார். அன்ட்ரே ஹொக்ஸனிடம் பேசிய கருணா தொடர்ந்தும் கூறும்போது, "பிரபாகரனுடனான எனது 22 வருட அனுபவத்தில் அவர் தொடர்பாக ஆரம்பத்தில் நான் வைத்திருந்த மரியாதையினை இழந்துவிட்டிருந்தேன். என்னைப்பொறுத்தவரை அவர் அவமதிப்பிற்குரியவராகவே தெரிந்தார். அவர் ஒருபோதுமே போர்க்களத்திற்கு வந்ததில்லை. எமது அணிகளுக்குப் பின்னல் மிகப் பாதுகாப்பான இடம் ஒன்றில் அவர் நின்றுவிடுவார். எல்லோரும் பிரபாகரனை இரும்பு மனிதர் என்றும் பிறப்பால் வந்த தலைவன் என்றும், பெரிய மனிதன் என்றும் கூறுகிறார்கள். ஆனால் என்னைப்பொறுத்தவரை அவர் ஒரு கோழை" என்று அவர் மேலும் கூறினார். கருணா இப்பேட்டியில் இன்னொரு விடயத்தையும் கூறினார், " தனது குற்றங்களை பிரபாகரன் நன்கு தெரிந்தே வைத்திருந்ததனால், ராணுவத்திடம் பிடிபட்டால் தனக்கு என்ன நிகழும் என்பதை நன்கு உணர்ந்தேயிருந்தார். ஆனால், அவர் தன்னைத்தானே கொன்றாலோ அல்லது ராணுவத்தினரால் கொல்லப்பட்டாலோ, அவை இரண்டுமே இலங்கை மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விடயங்களே " என்றும் அவர் கூறினார். http://www.lankaweb.com/news/items/2009/05/18/in-a-bbc-radio-4-programme-karuna-amman-says-prabhakaran’s-downfall-started-after-he-got-rajiv-gandhi-assassinated/
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
பிரபாகரன் உயிருடன் பிடிபட்டதாக நான் கூறவில்லை - தனது முன்னைய கூற்றினை மறுதலிக்கும் கருணா காலம் : ஆடி 24, 2015 மூலம் : அத தெரன முன்னாள் பிரதியமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் பிடிபட்டார் என்றும், அவரை ராணுவத்தினர் கடுமையான சித்திரவதைகளின்பின்னர் படுகொலை செய்ததாகவும் தான் ஒருபோதும் கூறவில்லை என்று மறுத்திருக்கிறார். சில இணையத்தளங்களும், முகப்புத்தகத்தில் சிலரும் கருணா அம்மானை மேற்கோள் காட்டி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டார் என்றும் பின்னர் அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டு கடுமையான சித்திரவதைகளின் பின்னர் கொல்லப்பட்டதாகவும் செய்திவெளியிட்டிருந்தன. ஆனால், தற்போது இதனை மறுத்திருக்கும் கருணா தனது நற்பெயரைக் களங்கப்படுத்தவும், அரசியல் ஆதாயத்திற்குமாகவே சிலர் இதனைச் செய்வதாகக் கூறியிருக்கிறார். "இன்றைய நாட்களில் என்னைப்பற்றி பல வதந்திகள் முகப்புத்தகத்திலும், இனம் தெரியாத இணையத்தளங்களிலும் மிகவும் தவறான செய்திகள் வெளிவருகின்றன. பிரபாகரனை ராணுவத்தினர் உயிருடன் பிடித்ததாகவும், பின்னர் கெளரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் அவர் கையளிக்கப்பட்டதாகவும், அவரின்மேல் கடுமையான சித்திரவதைகள் புரியப்பட்டு இறுதியில் கொல்லப்பட்டதாகவும் நான் கூறியதாக இச்செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், இவை எல்லாவற்றையும் நான் அடியோடு மறுக்கிறேன்" என்று அவர் கூறினார். "நான் எந்தவொரு இணையத் தளத்திற்கோ, ஊடகத்திற்கோ இவ்வாறு கூறவில்லை. எனது நற்பெயரைக் களங்கப்படுத்தி தமது அரசியல் லாபத்திற்காகச் சிலர் இதனைச் செய்கிறார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
யுத்தத்தில் கொல்லப்பட்ட பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டிய கருணாவும், தயா மாஸ்ட்டரும் காலம் : 19, வைகாசி 2009 மூலம் : வோல்ட்டர் ஜயவர்டென இங்கிலாந்தில் புலி ஆதராவாளர்கள் பலர் தமது தலைவன் பிரபாகரன் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ள மறுத்துவரும் நிலையில், பிரபாகரனுடன் பல்லாண்டுகள் நெருங்கிப் பழகி, அவரை அறிந்திருந்த இருவர்களான கருணா அம்மானும், தயா மாஸ்ட்டரும் கொல்லப்பட்டது பிரபாகரன் தான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றனர். கருணா அம்மான் புலிகள் எனும் பயங்கரவாத இயக்கத்தின் உதவித் தலைவராக இருந்ததுடன், தயா மாஸ்ட்டர் அப்பயங்கரவாத அமைப்பின் ஊடகப் பேச்சாளராக பணியாற்றி வந்தவர். தமக்கு மிகவும் பரீச்சயமான பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்கு இவர்கள் இருவரும் போர்க்களத்திற்குச் சென்றிருந்தனர். கடந்த 19 ஆம் திகதி செவ்வாயன்று பிரபாகரனின் உடல் 53 ஆம் பிரிவின் தளபதி கமால் குணரட்ணவின் வீரர்களால் கண்டெடுக்கப்பட்டதாக இலங்கையின் ராணுவத்தளபதி சரத் பொன்சேக்கா தனது அறிக்கையில் கூறியிருந்தார். அரச தொலைக்காட்சிச் சேவையான ஐ டி என் இல் பேட்டியளித்த கருணா அம்மான் கொல்லப்பட்டது பிரபாகரன் தான் என்பதை மீளவும் உறுதிப்படுத்தினார். அவர் மேலும் கூறுகையில், "பிரபாகரனின் பயங்கரவாதத்தினால் கடந்த 30 வருடங்களாக அவலப்பட்ட தமிழர்களின் வாழ்வினை மீட்டுக் கொடுப்பதற்காக இலங்கை ராணுவத்திஒனர் தமது உயிரையும், உடல் அவயங்களையும் தியாகம் செய்திருக்கின்றனர்" என்று அவர் கூறினார். பல சர்வதேச நிறுவனங்கள் மக்கள் ராணுவத்தால் கொல்லப்படுவதாக விமர்சித்த போதிலும்கூட, தற்போது கருணா அம்மான் கூறுவதில் உள்ள நியாயத்தன்மையினை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர். "ஒன்றுபட்ட புதிய இலங்கைத் திருநாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முழு இலங்கையர்களும் கெளரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பின்னால் அணிதிரளவேண்டும்" என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முல்லைத்தீவு மாவட்டத்தின், நந்திக்கடல் ஏரியின் சதுப்புநிலப் பகுதியில் இருந்து பல குண்டுதுளைத்த காயங்களுடன் பிரபாகரனது உடல் கண்டெடுக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. அதேவேளை கடற்புலிகளின் தளபதி சூசையின் உடல் கரயமுள்ளிவாய்க்கால் பகுதியில் குண்டு துளைத்த காயங்களுடன் ராணுவக் கொமாண்டோ அணியொன்றினால் அதேநாள் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
எனது அன்பிற்குரிய ராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா அவர்களே ! இலங்கை சுதந்திரம் அடைந்த 1948 ஆம் ஆண்டிலிருந்து பல ராணுவத் தளபதிகளைக் கண்டிருக்கிறது. பிரிகேடியர் ஜேம்ஸ் சின்கிளெயர், அன்டன் முத்துகுமாரு, மேஜர் ஜெனரல் உடுகம, மேஜர் அன்டனி ஜஸ்டின் குணசேகர, ஜெனரல் ஆட்டிகல என்று பலரை நாம் பார்த்திருக்கிறோம், இவர்கள் எல்லாரையும் நாம் நேசிக்கிறோம். ஜெனரல் உடுகமவின் காலத்தில் இருந்தே யாழ்ப்பாண தமிழர்களை அடக்கி அவர்களின் பயங்கரவாதத்தை நாம் அழித்து வந்திருக்கிறோம். அவருக்கு காலஞ்சென்ற மேஜர் ஏ ஜே குணசேக்கர யாழ்ப்பாண மக்களை அடக்குவதற்கான ஒத்தாசைகளை வழங்கி வந்திருக்கிறார். ஆகவே, இன்றைய எமது வெற்றியில் எமது அன்பிற்குரிய கருணா அம்மான் செய்த பங்களிப்பினை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் எனது அன்பிற்குரிய தளபதியே. நீங்கள் சந்திரிக்காவுடனும், ரணிலுடனும், மங்களவுடனும், சோமவன்ச அமரசிங்கவுடனும் கூட்டுச் சேர்ந்தால் ஒரு ஒப்பற்ற ராணுவத் தளபதி என்கிற ஸ்த்தானத்திலிருந்து வரலாற்றின் துரோகியாக மாறிவிடுவீர்கள். இறுதியும், முடிவுமாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்த ஒப்பற்ற , மகத்தான வெற்றியின் உண்மையான காரணகர்த்தாக்கள் கருணா முரளீதரனும், மகிந்த ராஜபக்ஷவும், கோட்டாபய ராஜபக்ஷவும், சரத் பொன்சேக்காவும், ஹரி குணத்திலக்கவும், வசந்த கரன்னகொடவும் ஆகிய அனைவரும் தான். மாறாக நீங்கள் இன்று கூட்டுச் சேர்ந்திருக்கும் சந்திரிக்காவோ, ரணிலோ, மங்கள சமரவீரவோ, சோமவன்ச அமரசிங்கவோ அல்ல. எது எப்படியாயினும் நான் உங்களை நேசிக்கிறேன் எனது அன்பிற்குரிய ராணுவத் தளபதியே. புத்தரின் ஆசீர் உங்களுடன் இருப்பதாக !!! இப்படிக்கு பேராசிரியர் எம் டி பி திஸாநாயக்க முற்றும் http://www.lankaweb.com/news/items/2009/10/30/karuna-mahinda-gotabhaya-army-commander-sarath-fonseka-air-chief-marshall-karuna-muralitharan-admiral-wasantha-karrannagoda-vs-chandrika-ranil-avamangala-somawansa/
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
முன்னாள் ராணுவத் தளபதி சிறில் ரணதுங்கவில் காலத்தில் சரத் பொன்சேக்கா ஒழுக்கயீனமாக நடந்துகொண்டதற்காகத் தண்டிக்கப்பட்டார் என்றும், முடிந்தால் இதனை அவரால் மறுக்கமுடியுமா என்றும் மங்கள சமரவீர சரத் பொன்சேக்காவிடம் சவால் விட்டிருந்தார். ராணுவத்தின் ஒழுக்கத்தினை நிலைநாட்டும்படி சரத்திடம் அறிவுரை கூறிய மங்கள, ராணுவ வீரர்களின் சார்பாக மட்டுமே பேசும்படியும் கூறியிருந்தார். ராணுவ வீரர்களுக்கான அத்தியாவசிய சேவைகளுக்குச் செலவழிக்கும் பணத்தில் 45 மில்லியன் பெறுமதியான பென்ஸ் காரினை சரத் பொன்சேக்கா வாங்கவேண்டிய தேவையென்ன என்றும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார். ஒரு நாணயத்தின் இரு பாக்கங்கள் பற்றியும் நாம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். ஏனென்றால், எனது ஜனாதிபதி மகிந்தவை நேசிப்பதைப் போலவே எனது ராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவையும் நான் நேசிக்கிறேன். நான் இந்தக் கட்டுரையினை எழுதுவதன் நோக்கம் எனது அன்பிற்குரிய ராணுவத் தளபதியை அரசியலிலிருந்து ஒதுங்கும்படி கேட்பதற்காக அல்ல. மாறாக இலங்கையினை உண்மையாக நேசிக்கும் மனிதர்களை ஆதரிக்கும்படி கேட்டு மட்டுமே. எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இல்லையென்றால், சரத் பொன்சேக்கா என்பவர் யாரென்றே எமக்குத் தெரியாமலிருந்திருக்கும். எமது ஜனாதிபதி உங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார், உங்களை மற்றைய எல்லா ராணுவ தளபதிகளிடமிருந்து மேல்நோக்கி உயர்த்தினார், கோட்டாபயவுடன் சேர்ந்து உங்களுக்கான அனைத்து அதிகாரங்களையும் தந்தார், ஹரி குணத்திலக்கவுடனும், வசந்த கரன்னகொடவுடனும் சேர்ந்து நீங்கள் உங்கள் மதிநுட்பத்தாலும், திறமையினாலும் போரில் வெற்றியீட்டினீர்கள். இவை எதுவுமேயில்லாமல், ஒற்றை மனிதனாக உங்களால் இந்தப் போரினை வென்றிருக்க முடியும் என்று நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா?
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
நாம் இதுவரையில் பல ஜனாதிபதிகளைக் கண்டிருக்கிறோம், அவர்கள் எல்லாருமே எமது பணத்தினை விரயமாக்கியது மட்டுமல்லாமல் போரிலும் வெற்றிகொள்ளமுடியாமல்ப் போய்விட்டார்கள். ஆனால் எமது விருப்பத்திற்குரிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவோ மிகக் குறுகிய காலத்திலேயே பயங்கரவாதிகளை முற்றாக அழித்து போரில் ஒப்பற்ற , மகத்தான வெற்றியினை ஈட்டினார். ஆயுத மற்றும் போருக்கான வளங்கள் தொடர்பாக எமது முப்படைகளும் மிகச் சிறப்பாகச் செயலாற்றியிருந்தன. பயங்கரவாதிகளின் தலைவனான பிரபாவின் மறைவிடங்கள், ரகசிய ஒன்றுகூடல் தளங்கள் தொடர்பாக கருணாவினால் எமக்கு வழங்கப்பட்ட துல்லியமான தகவல்களையடுத்து துரித கதியில் களத்தில் இறங்கிய எமது பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவும் ஜனாதிபதி மகிந்தவும் எமது தளபதிகளான சரத் பொன்சேக்கா, ஹரி குணதிலக்க, வசந்த கரண்ண்கொடவிற்கு முற்றான அதிகாரத்தினையும், ஆசீரையும் வழங்கியதன் மூலம் அவர்கள் மூவரும் எமது படைவீரர்களைச் சிறப்பாக வழிநடத்தி இந்த மகத்தான வெற்றியை எமதாக்கினர். எதிரணி அரசியல்வாதியான மங்கள சமரவீர எமது தளபதியைப் பார்த்து, "இவர் சல்வேஷன் ஆமிக்குக் கூட லாயக்கற்றவர்" என்று ஒருமுறை இகழ்ந்திருந்தார். எமது தளபதிக்கு போர் பற்றிய நுணுக்கங்களை ஆராயவோ, அறிந்துகொள்ளவோ தகுதியில்லையென்றும் அவரின் இயலாமைக்காக அவரை தண்டிக்கவேண்டும் என்றுக் கூறியிருந்தார். "உலகில் எந்த ராணுவத் தளபதியுமே அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதில்லை. மற்றைய அரசியல்வாதிகள் மேல் சேறள்ளிப் பூசுவதில்லை. எதிரணித் தலைவரை வெளிப்படையாக பத்திரிக்கையில் விமர்சிப்பதில்லை. ராணுவத்தின் ஒழுக்கமே அரசியலில் ஈடுபடுவதில்லையென்பதும், அரசியல் ரீதியாக நடுநிலைமை வகிப்பதும் தான். ஆனால் சரத் ட்பொன்சேக்காவோ இவை எல்லாவற்றையும் உதாசீனம் செய்து அரசியல் பேசுகிறார்" என்று மங்கள சமரவீர கூறியிருந்தார். சமரவீரவின் கூற்றுப்படி 2004 இல் இருந்து 2005 வரை தன்னை ராணுவத் தளபதியாக்கும்படி சரத் பொன்சேக்கா தன்னிடம் இறைஞ்சி வந்ததாகவும் , அவருக்கு அந்தத் தகுதியில்லை என்பதை அறிந்தபின்னர் தான் அவரின் வேண்டுகோளினை நிராகரித்து விட்டதாகவும் கூறுகிறார். 1970 இல் ராணுவத்தில் இணைந்துகொண்ட சரத் பொன்சேக்கா பல தளபதிகளின் கீழ் சேவையாற்றியதாகவும், ஆனால் ஒரு தடவையேனும் ராணுவத்தின் வீர தீரச் செயல்களுக்கான "விஷிஷ்ட்ட சேவா விபூஷண" எனும் பட்டத்தை அவரால் பெற்றுக்கொள்ள முடியவில்லையென்றும் மங்கள சமரவீர சரத் பொன்சேக்காவை ஏளனம் செய்திருந்தார். ராஜபக்ஷேக்களின் ஆட்சியில் ராணுவத்தளபதியாக பதவியில் அமர்த்தப்பட்டு, விஷிஷ்ட்ட சேவா விபூஷண எனும் பட்டத்திற்கு சரத் பொன்சேக்கா பரிந்துரைக்கப்பட்டபோது கருத்துத் தெரிவித்த மங்கள சமரவீர, "ராஜபக்ஷேக்களுக்காக சட்டவிரோதக் கொலைக் குழுக்களை இயக்கிவரும் ஒரு நபரே சரத் பொன்சேக்கா" என்று வெளிப்படையாகக் கூறியிருந்தார்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
தமது அரசியல் ராணுவத் தலைமைப் பீடத்திற்கு நிகராக கருணாவை அலங்கரித்து அழகுபார்க்கும் சிங்களப் பேரினவாதம். தி ஐலண்ட் பத்திரிக்கையில் சிங்கள பெளத்த கலாநிதி எம் டி பி திஸாநாயக்கவினால் எழுதப்பட்ட கட்டுரை காலம் : புரட்டாதி 30, 2009 கருணா, மகிந்த, கோட்டாபய, ராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா, விமானப்படைத் தளபதி ஹரி குணதிலக்க, கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட் எதிர் சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர, சோமவன்ச பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்து 6 மாதங்களே ஆகின்றது. எமது ஜனநாயகத்தை அழித்துவிடப் பயங்கரவாதிகள் திடசங்கற்பம் பூண்டிருந்தனர். ஆனால், அவர்களை அழித்து வெற்றிகொண்டபின்னர் எமக்குள் சிறு பூசல்கள் உருவாகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. எமது ராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவின் அமெரிக்க பேச்சினை நான் செவிமடுத்தேன். ஆனால், இவ்வாறான பேச்சுக்கள் எமது விமானப்படைத் தளபதி ஹரி குணத்திலக்கவிடமிருந்தோ அல்லது கடற்படைத் தளபதி வசந்த கரன்னஙொடவிடமிருந்தோ இதுவரை வரவில்லை. "எமது ஜனாதிபதிக்கு மிக முக்கியமான புலநாய்வுத் தகவல்களை வழங்கிய மனிதரை நாம் மறக்கக் கூடாது. பிரபாகரன் எங்கே வாழ்ந்தார் என்பதை நோர்வே துல்லியமாக அறிந்தே வைத்திருந்தது. ஆனால், அவர்கள் இதனை எமது ஜனாதிபதியிடம் கூறியிருப்பார்களா? அப்படியானால் பிரபாவின் மறைவிடம்பற்றிய தகவல்களை எமது ஜனாதிபதியிடம் கூறியது யார்? அது வேறு யாருமல்ல, அவர் எமது விருப்பத்திற்குரிய கருணா முரளீதரன் தான்". பிரபாகரனுக்கு மிகவும் நெருங்கிய தளபதியாகவிருந்து, பிரபா செல்லும் இடங்கள், பதுங்கிக்கொள்ளும் இடங்கள் என்று அனைத்தையுமே அறிந்துவைத்து எமது ஜனாதிபதியிடன் அவற்றைக் கூறியது எமது கருணாதான். நோர்வேயின் அமைச்சர்கள் பிரபாகரனைப் பலமுறை சந்தித்து அவரின் பல்வேறு ரகசிய இடங்கள் பற்றிய வரைபடங்கள், ரகசிய இடங்கள் பற்றிய புலநாய்வுத் தகவல்கள் என்று அனைத்தையுமே அறிந்து வைத்திருந்தனர். ஆனால், அவர்கள் அந்தத் தகவல்களை எமக்குத் தரவில்லை. கருணா அம்மானினால் எமக்கு வழங்கப்பட்ட இந்த விலைமதிக்கமுடியாத தகவல்களைக் கொண்டே நாம் போரினை வென்றோம். கருணா இல்லாமல் எம்மால் இந்தப் போரினை நிச்சயமாக வென்றிருக்கவே முடியாது. இதற்காக எமது முழுச் சிங்கள தேசமுமே கருணாவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. அவருக்கான தகுந்த சன்மானத்தை நாம் வழங்க வேண்டும், அவருக்கு உரிய மரியாதையினை நாம் வழங்க வேண்டும், அவரை எம் உயிருனும் மேலாகப் பாதுகாக்க வேண்டும்".
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
இலங்கை ராணுவத்தினரிடமிருந்து வரும் தகவல்களின்படி, பேச்சுவார்த்தைக் காலத்தில் ராணுவப் புலநாய்வுத்துறை இயக்குனருக்கும் கருணாவுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வினையடுத்து புலிகளிடமிருந்து 2004 பங்குனியில் வெளியேறிய கருணா கிழக்கின் சில பகுதிகளில் ராணுவத்தின் புலநாய்வுத்துறையினருடன் சேர்ந்து இயங்கத் தொடங்கினார் என்று தெரியவருகிறது. ஆனால், பிளேக்கினால் கூறப்படுவதுபோல கருணாவும் டக்கிளஸும் கிழக்கில் இணைந்து செயற்படுவதென்பது சாத்தியத்திற்கு அப்பாற்பட்டதென்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, கருணாவின் அன்றைய நடவடிக்கைகள் தொடர்பாக ராணுவத்தின் பிரதான தளபதிகளில் சிலரிடமிருந்தே தமக்கு நம்பந்த்தகுந்த ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றதாக பிளேக்கின் அறிக்கை கூறியிருந்தது. ஆனால், இதே தளபதிகள் பிளேக் உட்பட இன்னும் கொழும்பில் இயங்கிவந்த ஏனைய சர்வதேச நாடுகளின் தூதர்களுக்கும் தவறான தகவல்களைக் கொடுத்திருக்கவும் வாய்ப்பிருப்பதாக கருணா கூறுகிறார். அதேபோல, தானோ அல்லது டக்கிளஸின் துணைராணுவக் குழுவோ விபச்சார விடுதிகளை நடத்துவதாகவும், தமிழ்ச் சிறுமிகளைக் கடத்திவந்து இலங்கை ராணுவத்தினருக்காக விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாகவும் ரொபேட் பிளேக் கூறுவதுகூட இவ்வாறான தகவல்களின் அடிப்படையில்த்தான் என்று கருணா கூறுகிறார். இலங்கையின் பாதுகாப்பிற்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கக் கூடிய வகையில் தூதுவர் ரொபேட் ஓ பிளேக் அமெரிக்காவுக்கு தான் பற்றியும், ராணுவத்தின் தந்திரோபாய நடவடிக்கைகள் பற்றியும் தவறான தகவல்களை அனுப்பிவருவது கவலையளிக்கிறது என்று கருணா அம்மான் கூறுகிறார். ஆனால், ராணுவ உயர்பீடத்தின் தகவல்களின் படி கருணா அம்மான் உட்பட அரசின் முக்கிய தலைவர்கள் பற்றியும், ராணுவத்தினரின் நடவடிக்கைகள் பற்றியும் அமெரிக்கா வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைத்து வந்தாலும்கூட, புலிகளை அழிக்கும் இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்குத் தொடர்ச்சியான ஆதரவினை அமெரிக்கா வழங்கிவருவதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதன் ஒரு படியாகத்தான் சர்வதேசக் கடற்பரப்பில் பயணிக்கும் புலிகளின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்கள் பற்றிய தகவல்களை இலங்கை இந்திய அரசுகளுக்குத் தொடர்ச்சியாக வழங்கிவந்ததன்மூலம், அவற்றினை அழித்து புலிகளை பலவீனப்படுத்த அமெரிக்கா உதவியதற்காக ஜனாதிபதி மகிந்த ராகபக்ஷ வெளிப்படையாகவே அமெரிக்காவுக்கு நன்றிகூறியதும் நடந்தது. அரசின் உயர் மட்டத்திலுள்ளவர்களின் கருத்துப்படி கொழும்பில் இருக்கும் சர்வதேச தூதரகங்கள் தமது நாடுகளுக்கு அனுப்பிவைத்த போர் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் பற்றிய அறிக்கைகளின் அடிப்படையிலேயே இலங்கைக்கெதிரான சர்வதேச பொறுப்புக் கூறல் நிர்ப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டதாகத் தெரியவருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையிலேயே இலங்கைக்கான ஜி எஸ் பி வரிச்சலுகைகளை ரத்துச் செய்ய அவ்வொன்றியம் முடிவெடுத்திருக்கிறது. மேலும் கருணா உட்பட்ட அரச உயர்மட்டத்திலிருப்பவர்களின் கருத்துப்படி புலிகளுக்குச் சார்பாக இயங்கும் பல சர்வதேச நாடுகளின் ராஜதந்திரிகள் தமது நாடுகளுக்கு அனுப்பிவரும் தவறான தகவல்கள் புலிகளுக்கெதிரான யுத்தத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்றும் கூறியிருக்கின்றனர். முற்றும்
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
நான் இந்தியாவுக்குத் தப்பியோடியதாக அமெரிக்கத் தூதுவர் பிளேக் பொய் கூறுகிறார் - கருணா சினம் காலம் : மார்கழி 31, 2010 மூலம் : ஷாமின்ட்ர பேர்டிணான்டோ, ஐலண்ட் பத்திரிக்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் உதவியோடு, 2004 இல் கருணா தமிழகத்திற்குத் தப்பியோடி ஒளிந்துகொண்டதாக அன்றைய அமெரிக்க தூதுவர் ரொபேட் பிளேக் கூறியிருப்பதை பிரதியமைச்சரான கருணா பொய்யென்று மறுத்துரைத்திருக்கிறார். "தூதுவர் பிளேக்கின் குற்றச்சாட்டு அபத்தமானது" என்று ஐலண்ட் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான கருணா சினத்துடன் கூறினார். பிளேக்கினால் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையொன்றில் நம்பத் தகுந்த வட்டாரங்களின் செய்திகளின்படி கருணாவால் வழிநடத்தப்பட்ட துணைராணுவக் குழுவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் குழு புலிகளுக்கெதிரான நாசகார நடவடிக்கைகளின் அரச ராணுவத்துடன் சேர்ந்து இயங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார். 2007 மே மாதம் பிளேக்கின் கேபிள் அறிக்கையின்படி தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தனது துணைராணுவக் குழுவை கருணா இயக்கிவந்ததை நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தியதாகக் கூறியிருந்தார். மேலும் 2004 இல் தமிழ்நாட்டிற்குத் தப்பியோடி மறைந்துவாழ்ந்த கருணா 2006 ஆடி வரைக்கும் அங்கேயே இருந்து துணைராணுவக் குழுவினரின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், இன்னொரு துணைராணுவக் கொலைக்குழுவான டக்கிளஸ் தேவானந்தாவின் உதவியோடு கருணாவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கத்தை 2005 மார்கழி 25 நத்தார் ஆராதனையின்போது ஆலயத்தில் வைத்து தனது கொலைக்குழு ஆயுததாரிகள் மூலம் சுட்டுக் கொன்றார் என்றும் தனது அறிக்கையில் ரொபேட் பிளேக் குறிப்பிட்டிருந்தார். கருணாவின் படுகொலைகள் பற்றி மேலும் விவரித்திருந்த ரொபேட் பிளேக்கின் அறிக்கை, கருணாவின் கட்டளையின்பேரிலேயே அவரது ஆயுதக் குழுவினர் இன்னொரு தமிழ் கூட்டமைப்பு உறுப்பினரும், சட்டத்தரணியுமான நடராஜா ரவிராஜை 2006 கார்த்த்க்கை 10 ஆம் திகதி கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொன்றனர் என்றும் கூறியிருக்கிறார்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
அமெரிக்காவின் தூதுவரான ரொபேட் பிளேக் வோஷிங்டனுக்கு அனுப்பிய செய்திக்குறிப்பொன்றில் புலிகள் வெளிநாட்டு உதவிகளை தமது போர் நடவடிக்கைகளுக்குப் பாவித்திருக்கலாம் என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது. ஐ நா அமைப்பின் கிளை நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட புலிகளின் சமாதானச் செயலகம் அவற்றின் உதவியோடு தமது பலத்தைப் பெருக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. ஆனால், இந்த உதவிகள் பற்றி ஐலண்ட் பத்திரிக்கை இந்த ஐ நா அமைப்புக்களின் கிளை நிறுவனங்களை விசாரித்தபோது, புலிகளின் நடவடிக்கைகள் பற்றி பேச மறுத்துவிட்டன. மேலும், பிளேக்கின் செய்திக்குறிப்பின்படி புலிகளால் உள்நாட்டில் சேகரிக்கப்பட்ட பணம் புலம்பெயர் தமிழரால் வழங்கப்பட்ட பணத்தில் சிறு துளி மட்டுமே என்று கூறப்பட்டிருக்கிறது. பிளேக்கின் கருத்துப்படி புலிகளுக்காக இயங்கும் புலம்பெயர் அமைக்களின் மூலமே வெளிநாடுகளிலிருந்து புதிய ஆயுதங்களை புலிகள் கொள்வனவு செய்து வன்னிக்கு அனுப்பி வந்தனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை புலநாய்வுச் சேவைகளின் கருத்துப்படி புலிகளின் வெளிநாட்டு நிதிவளங்கள் சில இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதாகவே தெரிகிறது. கடந்த மே மாதம் தமது மரபுவழி போரிடும் சக்தியை புலிகள் இழந்துவிட்டிருந்தாலும்கூட, அவர்களின் சர்வதேச நிதி வலையமைப்பு இன்னமும் இயங்குவதாகவே தெரிகிறது. புலிகளின் சார்பு புலம்பெயர் அமைப்பான உலகத் தமிழர் பேரவை மகிந்த ராஜபக்ஷவின் லண்டன் விஜயத்தையொட்டி அவரைக் கைதுசெய்து போர்க்குற்றங்களுக்காகவும், மனித நேயத்திற்கெதிரான குற்றங்களுக்காகவும் விசாரிக்க முயன்றிருந்ததும் குறிப்பிடத் தக்கது. முற்றும்
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
நோர்வே அரசாங்கத்தின் சார்பில் எரிக் சொல்கெயிம் புலிகளுக்குக் கொடுத்த பெருமளவு பணம்பற்றி சுதந்திரமான விசாரணைகள் வேண்டும் - மீண்டும் வலியுறுத்தும் கருணா காலம் : 30 மார்கழி 2010 மூலம் : தி ஐலண்ட் நேற்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழு அமர்வில் கலந்துகொண்ட கருணா சமாதானக் காலத்தில் நோர்வே அரசாங்கத்தின் பெருமளவு பணத்தினை எரிக் சொல்கெயிம் புலிகளுக்கு வழங்கினார் என்றும், அதுதொடர்பான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் என்றும் கேட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் முகமாக கருத்துத் தெரிவித்திருக்கும் எரிக், இலங்கையில் அரசியல் ஆதாயத்திற்காக பொய் கூறுவதும், ஒரு நாட்டையோ அல்லது ஒருவரையோ அவமானப்படுத்துவதும் பொதுவாகப் பலராலும் முன்னெடுக்கப்படும் அரசியல் தந்திரங்கள் என்று கூறியிருக்கிறார். கருணாவின் குற்றச்சாட்டுப்பற்றி மேலும் தெரியவருவதாவது. "நோர்வேயின் அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சரிக் எரிக் சொல்கெயிம் சமாதான காலத்தில் நடந்துகொண்ட விதம் பற்றி இலங்கை தீவிர விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நோர்வே அரசாங்கத்தின் சார்பாக புலிகளுக்கு அவரால் வழங்கபட்ட பெருமளவு பணம் பற்றி கட்டாயம் அவர் விசாரிக்கப்படவேண்டும்" என்று அவர் கேட்டிருந்தார். கருணா நோர்வேயின் சமாதான முயற்சிகள் தொடர்பாக விமர்சித்து வருவதற்குப் பதிலளிக்கும் வகையில் நோர்வே செய்தித்தாள் ஒன்றில் எரிக் இலங்கை அரசியல்வாதிகளின் தந்திரம்பற்றிப் பேசியிருந்தார். இதனையடுத்தே கருணா இலங்கை அரசு சார்பாக நோர்வே மற்றும் எரிக்கிற்கு எதிரான விமர்சனங்களை வைத்து வருகிரார். அதில் குறிப்பாக நோர்வேயினால் வழங்கப்பட்ட பணம் புலிகளால் யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூரியிருந்தார். நோர்வே செய்திச் சேவைக்கு பேட்டியளித்த எரிக், கருணாவின் குற்றச்சாட்டுக்கள் பைத்தியக்காரத் தனமானவை. பொதுவாகவே இலங்கை அரசியல்வாதிகளும் அவர்களது ஆதரவாளர்களும் பொய்களை தமது அரசியல் ஆதாயத்திற்காகப் பாவிப்பார்கள், இதுவும் அப்படியானதொரு குற்றச்சாட்டுத்தான்" என்று கருணாவின் விமர்சனத்தை நிராகரித்திருந்தார். இதனால் கொதிப்படைந்த கருணா புலிகளுக்கு நோர்வியினால் வழங்கப்பட்ட பணம் பற்றிய முழுவிபரங்களும் வெளிவரும்வரை நோர்வே மீதும் ஏனைய உதவிவழங்கும் நாடுகள் மீதும் இலங்கையரசு விசாரணை நடத்தவேன்டும் என்று மீண்டும் கோரியிருந்தார். நோர்வேயின் அபிவிருத்திக்கான நிறுவனமான நோராட்டின் தகவல்களின் படி இலங்கையின் தனது சமாதான முயற்சிகளுக்கென்று 1997 இல் இருந்து 2009 வரையான காலப்பகுதியில் சுமார் 100 மில்லியன் கொரோணர்களை அது ஒதுக்கியிருந்தது. ஸ்கன்டிநேவிய யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் மற்றும் சமாதான செயலகத்திற்கான செலவுகள் என்று நோர்வே திட்டமிட்ட இந்த 100 மில்லியன் தொகை, நோர்வே அரசினால் இலங்கையின் சமாதானத்திற்காககவும் அபிவிருத்திக்கென்றும் 1997 முதல் 2009 வரையான காலப்பகுதியில் ஒதுக்கப்பட்ட 2.5 பில்லியன் உதவித்தொகையினுள் அடங்கும் என்றும் நோர்வே அரசு வெளிப்படுத்தியிருந்தது. இதனையடுத்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் பிரதியமைச்சர் கருணா, தற்போது தாம் புலிகளுக்குப் பணம் கொடுத்ததுபற்றி நோர்வே ஒத்துக்கொண்டுவிட்டதாகவும், ஆகவே புலிகளின் சமாதானச் செயலகத்திற்கென்று வழங்கப்பட்ட 100 மில்லியனில் புலிகளின் ராணுவப் பிரிவிற்குக் கொடுக்கப்பட தொகைபற்றிய விபரங்களை நோர்வே முன்வைக்கவேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். இலங்கை அரசு சார்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட சிலரின் கருத்துப்படி, போர் முடிந்த கடந்த ஒன்றரை ஆண்டுகளிலிலங்கை அரசு இந்த நிதிக் கொடுப்பனவு பற்றி விசாரணைகளை ஆரம்பிக்கவில்லையென்றும், இந்த நிதிக் கொடுப்பனவுகள் புலிகளால் யுத்தத்திற்கென்று ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் ஏனைய யுத்த உபகரணங்கள் வாங்க பயன்படுத்தப்பட்டதாகவும், ரணிலின் அரசு இதனைக் கண்டும் காணாததுபோல இருந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
பயங்கரவாதத்தின் மூலம் சிங்களவர்களின் தேசத்தைக் கூறுபோட்டு தமக்கான தனிநாடொன்றினை ஏற்படுத்தமுடியாது என்பதை உணர்ந்துகொண்ட கருணா அம்மான் தனது சக தமிழ் பிரிவினைவாதிகளை உதறிவிட்டு, பிரிவினைவாதத்தினைத் தோற்கடிக்க, தனது உயிரைக் கூடப் பணயம் வைத்து சிங்களவருடன் கைகோர்த்துக்கொண்டார். முழுச் சிங்கள தேசமே அவரை தம்மில் ஒருவராக (அவரது கடந்தகாலம் எப்படியிருந்தாலும்கூட) இருகரம் நீட்டி அரவணைத்துக்கொண்டது. அப்படியானால், சிங்களவர்களால் தமக்கு ஏற்பட்டதாகக் கூறும் பிரச்சினைகளை மறந்து தமிழர்கள் ஏன் சிங்களவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது? இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாம் இன்று அடைக்கலம் தேடிக்கொண்டிருக்கும் நாடுகளை தமது தற்போதைய வாழிடங்களாகக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையினைத் துண்டாடி, தனிநாடு அமைக்கப் போராடும் பயங்கரவாதிகளுக்கு உதவுவதன் மூலம் தமது தாய்நாட்டின்மீது தமக்கு பற்று அறவே இல்லையென்பதை அவர்கள் வெளிக்காட்டியிருக்கிறார்கள். பயங்கரவாதிகளை ஆதரிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒருபோதுமே இலங்கைநாட்டின்மீது தேசப்பற்றுக்கொண்டவர்களாக இருக்கமுடியாது. ஆனால், சிங்களவர்களிடமிருந்து அநீதியாகப் பிரித்தெடுக்கப்படும் நாட்டில் வாழும் ஆசைமட்டும் அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் தமது ஈழக்கனவைக் கைவிடும்வரைக்கும் அவர்கள் இலங்கையின் குடிமக்களாக ஒருபோதுமே இருக்கமுடியாது. தமிழ் இனவாத அரசியலைக் கைவிட்டு, பிரிவினைவாதத்தைத் தூக்கியெறிந்து, தேசிய அரசியலில் தன்னையும் ஒரு அங்கமாக்கி இலங்கைத் திருநாட்டின் இறையாண்மையையும், பிரதேச ஒருமைப்பாட்டையும் கட்டிக்காத்திட கருணா அம்மான் எடுத்திருக்கும் இந்த துணிச்சலான முடிவினை மேற்குலக ராஜதந்திரிகளான ரொபேட் ஓ பிளேக், டேவிட் மில்லிபாண்ட், பேர்னாட் குச்னர் போன்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொண்டு, இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று இருப்பதாக சர்வதேசத்தில் பறையறைவதை நிறுத்திட வேண்டும். இலங்கை எனும் இறையாண்மை உடைய நாட்டினுள் இவர்கள் செய்யும் தலையீடுகள் ஏற்றுக்கொள்ளமுடியாதவை. இலங்கையில் இருப்பதாக இவர்கள் கூறிவரும் இனரீதியிலான, அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் கூட உள்நாட்டில், சம்பந்தப்பட்டவர்களிடையேயான சுமூகமான பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்த்துக்கொள்ள்ப்படவேண்டும். சிங்களவர்களுக்கு எதிராகச் செயற்படுவதன் மூலம் இனப்பிரச்சினியினை தீர்க்க முடியாது. மாறாக, அவர்களுடன் சேர்ந்து இயங்கி, அவர்களையும் தீர்வின் பங்காளர்களாக ஏற்றுக்கொண்டு, அவர்களின் அபிலாஷைகளையும் பூர்த்திசெய்து, பொதுவான இலக்கினை நோக்கி முன்னேறுவதன் மூலமே எமது தாய்நாட்டினை அபிவிருத்தி செய்ய முடியும். சிங்களவர்களை அனுசரித்து, விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டு சமாதான சூழ்நிலையினை உருவாக்கி நாமும், எமது வருங்கால சந்ததிகளும் சந்தோசமாகவும், அமைதியாகவும் வாழும் நிலையினை இதன்மூலமே எம்மால் ஏற்படுத்த முடியும். பெரும்பான்மை, சிறுபான்மை எனும் வேறுபாடுகள் களையப்பட வேண்டும், எல்லோரும் இலங்கையர் எனும் நாட்டுப்பற்றும், உணர்வும் ஏற்படுத்தப்படுதல் வேண்டும். கருணா அம்மான் எனும் ஒப்பற்ற மனிதன் எமக்கு தரும் செய்தி அதுதான் ! http://www.lankaweb.com/news/items/2010/01/18/karuna-amman-stands-above-all-tamil-politicians-tamil-writers-and-intellectuals-as-a-patriotic-sri-lankan-a-catalyst-of-unity/
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
இலங்கை எனும் நாடு முற்றான அபிவிருத்தியை நோக்கிச் செல்வதற்கு, அங்கு வாழும் சமூகங்கள் இல்லாத இனப்பிரச்சினைபற்றித் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருக்கமுடியாது. தமது சமூகங்களுக்கிடையே இருக்கும் பிணக்குகளை சமாதானமுறையில் பேசித் தீர்த்துக்கொண்டே முன்னேறிச் செல்லவேண்டும். ஏனைய சமூகங்கள் மீது தேவையற்ற வெறுப்பினையும், காழ்ப்புணர்வினையும் உமிழ்வதைத் தவிர்த்து அச்சமூகங்களை அனுசரித்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும். தனது இன அடையாளத்தினைத் தூக்கியெறிந்து, இன அடிப்படையிலான அரசியலை உதறித்தள்ளிவிட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்ததன் மூலம் தமிழர்கள் சிங்கள அரசியல்வாதிகளுடன் ஒற்றுமையாகச் சேர்ந்து செயற்பட்டு இந்த நாட்டினைக் கட்டியெழுப்பமுடியும் என்பதை மற்றைய தமிழர்களுக்கு கருணா அம்மான் காட்டியிருக்கிறார். ஒரு நாட்டினுள் இருக்கும் சமூகங்களிடையே ஒரு பிணக்கு ஏற்படுத்துமிடத்து, அப்பிணக்கு அந்த சமூகங்களுக்குள், வெளியார் தலையீடின்றி, உள்நாட்டிலேயே பேசித் தீர்க்கப்படவேண்டும். இச்சமூகங்களில் ஒன்று, அயல்நாட்டில் உள்ள சமூகம் ஒன்றுடன் கலாசார , மொழி ரீதியிலான தொடர்புகளைக் கொண்டிருந்தாலும்கூட அந்நியத் தலையீடுகள் கட்டாயம் தவிர்க்கப்படவேண்டியதொன்று என்பதை அச்சமூகம் நினைவில் வைத்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு இலங்கையில் வாழும் தமிழர் தொடர்பாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தலையீடு செய்வதை நாம் குறிப்பிடமுடியும். தமிழினத்தின் இனவாத அரசியல்வாதிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனையவர்களான மனோ கணேசன், சம்பந்தன், குமார் டேவிட், ராஜன் பிலிப், லின் ஓர்க்கேர்ஸ், பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் லீலா ஐசக் போன்றவர்கள் கருணா அம்மானிடமிருந்து ஏராளமான விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டு, பெரும்பான்மைச் சிங்கள பெளத்தர்கள் மேல் இனவெறுப்பைக் காறி உமிழ்வதனை விட்டு விட்டு அவர்கள் சிங்களப் பெரும்பான்மையினத்தை அனுசரித்து, சகிப்புத்தன்மையுடனும், சகோதர உணர்வோடும் நெருங்கிப் பழகி இறையாண்மையுள்ள இலங்கைத் திருநாட்டைக் கட்டிக்காக உழைக்கவேண்டும். தமிழ் இனவாத அரசியல்வாதிகளும், கல்விமான்களும், ஊடகவியலாளர்களும், எழுத்தாளர்களும் சிங்கள இனத்தின்மீது இனவெறுப்பைக் கக்கி வரும் நிலையில் சிங்கள் பெளத்த அரசியல்வாதிகளும், கல்விமான்களும் பத்திரிக்கையாளர்களும் மட்டுமே இன்றுவரை இன ஐக்கியத்தையும், இனங்களுக்கிடையேயான ஒற்றுமையினையும் நிஒலைநாட்டவேண்டும் என்று தொடர்ச்சியாக கேட்டுவருகிறார்கள். எல்லா நாடுகளிலும் இனப்பிரச்சினைகள் இருக்கின்றன. அவை எல்லாமே பெரும்பான்மையினத்துடன் சமரசமாகி, அவ்வினத்தை அனுசரித்துப்போய், தமக்கான சலுகைகளைப் பெற்றே தீர்க்கப்பட்டிருக்கின்றன. மாறாக அப்பெரும்பான்மையினத்தை சண்டைக்கிழுத்து, மிரட்டி அல்லவென்பதை மற்றைய இனங்கள் உணர்ந்துகொண்டிருக்கின்றன. கருணா அம்மான் இந்த நாட்டில் வாழும் அனைத்துத் தமிழருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார். அவரின் பாதச் சுவடுகளைப் பின்பற்றி ஏனைய தமிழர்களும் தமது பிரிவினைவாதச் செயற்பாடுகளைக் கைவிட்டு, சிங்களப் பெரும்பான்மையினத்தோடு சேர்ந்து, தமக்கு இருப்பதாக அவர்கள் நினைக்கும் பிரச்சினைகளை சுமூகமாக சிங்களவருடன் பேசித் தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும். விட்டுக்கொடுப்பும், புரிந்துணர்வும், அமைதியும் நிரம்பிய சூழலினை உருவாக்குவதன்மூலம் நாம் இதனைச் சாத்தியமாக்கிட முடியும்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
தாய்நாட்டிற்கு பாரிய ஆபத்துக்கள் வந்தபோதும், பிளவுபடுத்தப்பட்டு அழிக்கப்படும் சூழ்நிலை உருவானபோதும் ஒற்றைத் தமிழன் தன்னும் சிங்களவருடன் சேர்ந்து ஒற்றுமையாக ஒருநாட்டில் வாழவேண்டும் என்று குரல் கொடுக்கவில்லை. ஒரு தமிழர்தன்னும் சிங்கள பெளத்தர்களின் அரசியலினை அனுசரித்து வாழலாம் என்று கூறவில்லை. சிங்கள பெளத்தர்கள் மீதான தமிழர்களின் வெறுப்புணர்வின் உச்சத்தில்தான் இனவெறுப்பின் நெருப்பிலிருந்து, சிங்கள பெளத்தர்களுடன் தோள் தோள் கொடுத்து, இந்த நாட்டினை கொடூரமான பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டு, ஒருமைப்பாட்டினை மீள நிறுவிட உண்மையான நோக்கத்தோடு ஒரு தமிழன் எழுந்து வந்தான். இந்த ஒற்றைத் தமிழன் கூட அதே இரத்தவெறிபிடித்த பயங்கரவாதிகளின் இனத்திலிருந்து, இந்த நாட்டைத் துண்டுபோட முன்னின்று உழைக்கும் தமிழினத்திலிருந்து வந்தாலும்கூட, இந்த நாட்டின்மேல் அவன் வைத்த அசைக்கமுடியாத பற்றும், இல்லாத இனப்பிரச்சினைக்காக சிங்களவர்களுடம் மோதி ஒருபோதுமே தன்னால் வெற்றிபெறமுடியாது எனும் தெளிவும், சிங்களவருடன் பேசியே தமிழருக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனும் அசைக்கமுடியாத நம்பிக்கையும் கொண்டு அவன் வந்தான். இலங்கை எனும் தனது தாய்நாட்டின்மேல் அவன் வைத்திருக்கும் பாசம் சாதாரண தமிழர்களை விடவும், புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தாய்நாட்டைப் பிரிக்கக் கோரும் தமிழர்களைவிடவும் பன்மடங்கு உயர்ந்தது. இதனாலேயே அவன் தனது தோற்றத்திற்கும் மீறிய அதியுயர் மனிதனாகத் திகழ்கிறான். சட்டங்கள் மூலமோ, நீதித்துறையின் தலையீடுகள் மூலமோ அல்லது அரசியல் ரீதியான அதிகாரப் பரவலாக்கம் மூலமோ பல்லினங்களுக்கிடையே ஒற்றுமையினை நிலைநிறுத்த முடியாது. அது சமாதானத்தை வேண்டும் ஒவ்வொருவரிடமிருந்து மனதளவில் ஆரம்பிக்கவேண்டும். கருணா அம்மான் தெரிந்தோ தெரியாமலோ தனது இன அடையாளத்திலிருந்து தன்னை விலத்தி , வெளியே வந்து, சிங்களவர்களைப் பகைக்காது, அவர்களை ஆத்திரமூட்டாது சலுகைகளைப் பெற முடியும் என்று தனது சக தமிழர்களுக்குக் காட்டியிருக்கிறார். தனது முன்னுதாரணத்தின்மூலம் சிங்கள பெளத்த பெரும்பானமையினரோடு சேர்ந்து ஒற்றுமையாக இந்நாட்டில் தமிழர்கள் வாழமுடியும் என்பதைக் காட்டியிருக்கிறார். ஒரு தேசத்தின் அடையாளமே அத்தேசத்தில் வாழும் பல்லினங்களின் ஒற்றுமையிலேயே தங்கியிருக்கிறது. ஒற்றுமையில்லாத சமூகங்களைக் கொண்டு ஒரு தேசத்தினை உருவாக்குவது சாத்தியமில்லை.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் புத்திஜீவிகள் என்று அனைவரைக் காட்டிலும் ஒற்றை மனிதனாகப் பிரகாசித்து இலங்கையின் ஒருமைப்பாட்டினை நேசிக்கும் கருணா அம்மான் காலம் : தை, 18, 2010 இணையம் : லங்கா வெப் மூல ஆக்கம் : சார்ள்ஸ் பெரேரா இலங்கையில் தமிழர்கள் இலங்கையர் எனும் அடையாளத்தைத் துறந்து தங்களுக்கென்று தமிழர்கள் எனும் அடையாளத்தைத் தேட முனைகிறார்கள். சிங்களவர்களை பெரும்பான்மையினமாக ஏற்றுக்கொள்ள இன்றுவரை மறுத்தே வருகிறார்கள். இல்லாத இனப்பிரச்சினையொன்று இருப்பதாக காட்டிக்கொண்டு சிங்களவர்களுக்குச் சமனான உரிமைகளைக் கேட்கிறார்கள். உதாரணத்திற்கு சம்பந்தனையும் அவரது கூட்டாளிகளையும் எடுத்துக்கொண்டால் அவர்கள் ஒருபோதுமே ஒருமித்த இலங்கையினை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களைப்பொறுத்தவரை இலங்கை எனும் நாடு சிங்களவருக்கும் தமிழர்களுக்கிடையேயும் பிரிக்கப்படவேண்டும் என்கிற நோக்கம் இருந்துவருகிறது. இவர்களைத்தவிர ஆனந்தசங்கரியாகவிருக்கட்டும் அல்லது டக்கிளஸ் தேவானந்தாவாக இருக்கட்டும், தமது கடிசிகளின் பெயரில்த் தன்னும் இந்த தனித்தமிழ் அடையாளத்தைப் பேணவே விரும்புகிறார்கள். இவர்களுக்கும் அப்பால் தம்மை நடுநிலையான, வெளிப்படையான எழுத்தாளர்கள் என்று காட்டிக்கொள்ளும் படித்த தமிழர்களான குமார் டேவிட், பாக்கியசோதி சரவணமுத்து, ராஜன் பிலிப் மற்றும் லின் ஓர்கேர்ஸ் போன்றவர்கள் கூட தமது தமிழ் எனும் அடையாளத்தைக் காவிக்கொண்டு இல்லாத ஒரு இனப்பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்று கேட்கிறார்கள். கடந்த முப்பது வருடங்களாக பயங்கரவாதம் எனூம் புற்றுநோயுடன் சேர்ந்தே வாழ்ந்தபோதிலும்கூட, தமிழர்கள் ஒருபோதுமே அந்தப் பயங்கரவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. அவர்களின் மெளனம் பயங்கரவாதத்திற்கான அவர்களது சம்மதமாகவே தெரிந்தது. அதுமட்டும் அல்லாமல் பயங்கரவாதிகளுக்கு தார்மீக ஆதரவும் வழங்கி இலங்கையிலிருந்து தமிழர்களுக்கென்று ஈழம் எனும் தனிநாட்டினை பிரித்து எடுக்கவே அவர்கள் செயற்பட்டார்கள். ஆகவே, பயங்கரவாதத்திற்கெதிரான போரினை முன்னெடுக்கும் முழுப் பொறுப்புமே சிங்கள பெளத்தர்களிடம் திணிக்கப்பட்டது. ஏனென்றால், தமிழர்களுக்கு இந்த நாட்டின்மீது பற்று இருக்கவில்லை, அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பயங்கரவாதிகளுடன் இணைந்து தமக்கான நாடொன்றினை இலங்கையில் ஏற்படுத்துவதுதான். பயங்கரவாதத்தினை உதறியெறிந்து, சிங்களவருடன் தோளுக்கு தோள் நின்று பயங்கரவாதத்தினை முறியடித்து நாடு பிளவுபடாமல் காக்குக் போருக்கு தமிழர்கள் உதவவில்லை. சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வதை மறுக்கும் அதேவேளை, சிங்களவரது நாட்டில் தமக்கென்று ஒரு பகுதியினை பிரித்தெடுக்க அவர்கள் பின்னிற்கவில்லை. நாடு பயங்கரவாதிகளால் பிளவுபடுவதைத் தடுக்கும் போரில் ஒரு தமிழராவது இதுவரை தமது உயிரைத் தியாகம் செய்யவில்லை. ஆனால், பயங்கரவாதிகளோடு தம்மையும் இணைத்து, தார்மீக ஆதரவு வழங்கி, பணத்தினை வாரியிறைத்து தாம் பிறந்த நாட்டையே துண்டாடி தமக்கென்று ஒரு தனிநாட்டினை உருவாக்கவே முனைந்தார்கள்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் புத்திஜீவிகள் என்று அனைவரைக் காட்டிலும் ஒற்றை மனிதனாகப் பிரகாசித்து இலங்கையின் ஒருமைப்பாட்டினை நேசிக்கும் கருணா அம்மான் கொஅல : தை, 18, 2010 இனையம் : லங்கா வெர் மூலம் : சார்ள்ஸ் பெரேரா
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
போரினை நிறுத்தவும், எமது படைவீரர்களைக் குற்றஞ்சாட்டவும் சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து பெருமளவு நாட்டு மக்கள் பணத்தினையும், தனது கட்சியின் பணத்தினையும் ரணில் செலவுசெய்துவருகிறார். இலங்கைக்கு உதவுவதை நிறுத்துமாறு உலக நாடுகளைக் கேட்டுவருகிறார். அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளவர்கள் முள்ளந்தண்டற்ற கோழைகள். சர்வதேச மனிதவுரிமைவாதிகள் வன்னிப் பயங்கரவாதியின் குற்றங்களையும், அவனுக்கு ஆதரவாக ஒத்தூதும் ரணில் போன்றவர்களின் குற்றங்களையும் முதலில் விசாரிக்கட்டும். வன்னிப்பயங்கரவாதி பிரபாவினதும் அவனது சகாக்களினதும் போர்க்குற்றங்களுடன் ஒப்பிடும்பொழுது கருணா அம்மான் செய்தவை பெரிய போர்க்குற்றங்கள் இல்லை. பாரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வரும் இரத்த வெறி பிடித்த பிரபா எனும் காட்டேறியினை அழிப்பதற்குத் தடையாக இருப்பதும் ஒரு போர்க்குற்றம்தான் என்று ஐ நா சாசனம் சொல்கிரது. ஆகவே கருணாவை விசாரிக்குமுன் வன்னிப் பயங்கரவாதியையும் அவனுக்கு ஆதரவாக போரினை நிறுத்தக் கோரும் ரணிலும் போர்குற்றங்களுக்காக விசாரிக்கப்படவேண்டும். கருணா அம்மானையோ அல்லது இலங்கையின் எந்தத் தலைவரையோ போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கக்கோரும் இங்கிலாந்து, இலங்கையினை ஆக்கிரமித்து, அந்த நாட்டு மக்களை அடிமைப்படுத்தி, இனங்களிடையே பபகைமையினை வளர்த்து, எமது இனம் மீது இனக்கொலையினை நிகழ்த்தியதற்காக எம்மாலும் அந்த நாட்டின்மேல் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தக்கல் செய்யமுடியும் என்பதையும் நினைவில் வைத்திருப்பது நல்லது. அடுத்ததாக ளுயிஸ் ஆர்பர் எனும் ஐ நா அதிகாரி ஓமந்தையில் தனது அலுவலக ஒன்றினை திறக்க விரும்புவது வன்னிப்பயங்கரவாதி பிரபாகரனைப் பாதுகாக்கவே என்பது தெளிவாவதால், உலகப் பயங்கரவாதிகளைப் பாதுகாக்க பணிபுரியும் இந்ட்த கிரிமனலை உலக அமைப்புக்களிடமிருந்து துரத்தும் நேரம் வந்துவிட்டது. அவ்வாறே ஐ நா வின் செயலாளர் நாயகம் பா கீ மூனுக்கு ஒரு பயங்கரவாதியை பயங்கரவாதியாக அடையாளம் காண்பதில் இன்னமும் பிரச்சினையிருக்கிறது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? இறுதியாக, இன்றிருக்கும் இங்கிலாந்து, நோர்வே மற்றும் ஐ நா தலைவர்கள் எல்லோருமே சுத்த முட்டாள்கள் என்பது எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. http://www.lankaweb.com/news/items08/270108-7.html
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
கருணா லண்டன் நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலம் தவறானதாக இருக்கலாம். அது உண்மையாக இருந்தால்க் கூட சமாதானத்தை விரும்பும் இலங்கை மக்களைப்பொறுத்தவரை கருணா ஒரு உண்மையான நாட்டுப்பற்றாளர் ஆகும். வன்னியின் பயங்கரவாதக் காட்டேறியினை எதிர்த்து, துணிச்சலாக அவனை எதிர்கொண்டவர் எங்கள் கருணா அம்மான். இரத்தப் பசிகொண்ட வன்னிப் பயங்கரவாதிக்கும், அவனது சக்காக்களுக்கும் சிம்ம சொப்பணமாகத் திகழ்ந்து, இறுதியில் எமது ஜனாதிபதியின் முற்றான சம்மதத்துடனும், ஆசீருடனும் எமது ராணுவத்தினர் வன்னிக் காட்டேறிகளை அழித்து முடிக்கும்வரை எமக்குத் துணையாக வந்தவர் எங்கள் கருணா அம்மான். எமது பாதுகாப்புச் செயலாளர் உண்மையிலேயே கருணாவுக்கு போலியான கடவுச் சீட்டினை வழங்கி அவரை லண்டன் அனுப்பிவைத்திருந்தார் என்றால், ஒரு உயிரைக் காக்க அவர் எடுத்த நற்செயலாகவே இதனை நாம் பார்த்தல் அவசியம். இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தினை அழிப்பதில் கருணா ஆற்றிய பங்கு மதிப்பிட முடியாதது. ஆகவே, அவர்மீது பொய்யான வழக்குகளைப் பதிவுசெய்து அவரைக் கைதுசெய்ய பல சர்வதேச அமைப்புக்களும் உள்நாட்டு மனிதவுரிமை அமைப்புக்களும் கடுமையாக முயற்சி செய்யும் என்பது மறுக்கமுடியாதது. சிங்களத்தின் இக்காலத் துரோகிகளான ரணிலும் அவரது கூட்டமும் கருணாவுக்கு எப்போதுமே தொல்லைகளைக் கொடுத்துக்கொண்டேதான் இருக்கப் போகிறார்கள். இன்று கருணா அரசியலில் இறங்கியிருப்பதை விமர்சிக்கும் ரணில், தனது இரட்டைச் சகோதரனான வன்னிப் பயங்கரவாதி பிரபாவின் அட்டூழியங்கள் தொடர்பாக வாயே திறப்பதில்லை.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
கருணா அம்மானுக்கு உதவுவது தேசியப் பாதுகாப்பிற்கு அவசியமானது இணையத்தளம் : லங்கா வெப் ஆங்கிலத்தில் சிரீபால் நிஷன்க காலம் :கருணா லண்டனில் போலி கடவுச் சீட்டுடன் பயணித்தார் என்பதற்காக பிடிபட்டுச் சிறையில் அடைபட்டிருந்தபொழுது "உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாதியினை எதிர்த்து மிகத் துணிச்சலாக போரிட்ட உண்மையான வீரன் கருணா தற்போது லண்டன் சிறையில் ஆள் மாறாட்டம் செய்தமைக்காக அடைக்கப்பட்டிருக்கிறார். வன்னியின் பயங்கரவாதத் தலைவனான பிரபாகரனின் கட்டளைக்குப்பணிந்து கருணா அம்மான் முன்னர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் வன்னிப் பயங்கரவாதியின் உண்மையான முகம் தெரிந்தவுடன், அவனை விட்டு விலகி சாதாரண மனிதர்களுடன் சேர்ந்து தந்து உச்ச பட்ச திறமையினைப் பாவித்து அந்தப் பயங்கரவாதியை அழிக்கும் நற்காரியத்தில் ஈடுபட்டார்".
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
கருணா தொடர்பாக இருவேறுவகையான புரிதல்களைத் தமிழ்ச் சமூகம் கொண்டிருக்கிரது. பெரும்பாலானவர்களின் கருத்துப்படி அவர் தமிழினத்திற்குச் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் . அதேவேளை, இன்னும் ஒரு பகுதியினரைப் பொருத்தவரை அவர் செய்தது தவறில்லை. இதுதொடர்பாகப் பேசிக்கொன்டே போகலாம்.ஆனால், கருணா தமிழினத்திற்குச் செய்தது துரோகமா அல்லது நண்மையா என்று தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு அவர் எவருக்காக தமிழினத்தை உதறிவிட்டுச் சென்றாரோ, அவர்கள் பார்வையில் கருணா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதைப் பொறுத்து கருணா தமிழினத்திற்குச் செய்தது துரோகமா இல்லையா என்பது புலப்படும். கருணா பற்றிய தேடல்களின்பொழுது லங்கா வெப் எனும் ஆங்கில இணையத்தளம் ஒன்று கண்ணில் பட்டது. போர்க்காலத்தில் ராணுவத்தினரின் சாகசங்களையும், புலிகளின் தோல்விகளையும் காவிவந்த ஒரு சிங்கள இனவாத இனையத்தளம். இத்தளத்தில் கருணாவுக்கென்று சிறப்பான அந்தஸ்த்து கொடுக்கப்பட்டிருக்கிறது. பல சிங்கள புத்திஜீவிகளின் பார்வையில் கருணா சிங்கள தேசத்திற்கு எந்தளவு தூரத்திற்கு அவசியமானவர் என்பது ஆய்ந்தறிந்து எழுதப்பட்டிருக்கிறது. இத்தளத்திலிருந்து இத்தொடருடன் சம்பந்தப்பட்ட சில கட்டுரைகளை மொழிபெயர்த்து இங்கு இனிமேல் இணைக்கவிருக்கிறேன். எனது புனைவுகளை எழுதுகிறேன் என்று கூறும் சிலருக்காக தவறாமல் நான் எடுக்கும் ஆக்கத்தின் மூலத்தையும் இணைத்துவிடுகிறேன்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
7. கருணா குழு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொண்டுள்ளதையடுத்து அக்கட்சிக்கு மக்களிடையே பாரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்துள்ளதாகப் பத்மினி கூறுகிறார். "நாம் ஒரு மக்கள் ஜனநாயக அமைப்பாக இயங்குவதால் எம்மைக் கருணா குழுவென்றோ அல்லது கிழக்குப் புலிகள் என்றோ அழைப்பதை எதிர்க்கிறோம்" என்று அவர் கூறினார். "தமிழ்மக்களை ஈழம் எனும் சாத்தியமற்ற கனவைக் கொண்டு புலிகள் எமாற்றி வருகிறார்கள். பிரபாகரனோ அல்லது அவரது ஆதரவாளர்களோ உண்மையாகவே சமாதானத்தில் நாட்டம் கொண்டவர்கள் கிடையாது. 2002 சமாதானப் பேச்சுவார்த்தைகளை தம்மைப் பலப்படுத்தவே பாவிப்பதாக புலிகளின் தலைமை போராளிகளுக்குக் கூறியிருந்தது. அவர்கள் ஒருபோதும் தமிழர்களின் பிரச்சினையினைத் தீர்க்கப்போவதில்லை என்பதை அறிந்துகொண்டபின்னர் அவர்களை விட்டு விலகி வருவதைத்தவிர வேறு வழிகள் எமக்கு இருக்கவில்லை" என்றும் அவர் கூறினார். 8. மேலும் அந்த அதிகாரி இலங்கை அரசின் உத்தியோகபூர்வ நாளிதழான டெயிலி நியூஸின் ஆசிரியர் பந்துல ஜயசேகரவுடன் பேசியபொழுது பத்மினி கூறிய அதே விடயங்களை அவரும் கூறினார். புரட்டாதி 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் ஜெனீவாப் பேச்சுக்களில் இருந்து நாடு திரும்பும்போது கருணா குழுவின் தலைமை உறுப்பினர்கள் சிலரை தான் லண்டனில் சந்தித்ததாகக் கூறிய அவர் "ஜனநாயக நீரோட்டத்திலிணைந்து கனவான்களின் உடைகளை அணிந்தபின்னர் ஆயுதப் போராட்டம் தோல்விகரமானது என்பதை அவர்கள் உணர்கிறார்கள். அவர்களுக்குப் போராட்டத்தில் பற்று இல்லாமற்போய்விட்டது. அவர்கள் தம்மைக் கிழக்குப் புலிகள் என்று அழைப்பதை வெறுக்கிறார்கள். அவர்கள் தம்மை தமது கட்சிப் பெயரான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்று அழைப்பதையே விரும்புகிறார்கள்" என்றும் கருணாவின் கட்சியின் அறிக்கைகளுக்காக தனது நாளிதழில் தொடர்ச்சியாக ஒரு பகுதியினை தாம் ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். 9. தனது 10 நாள் தகவல் அறியும் பயணத்தினை இலங்கையில் முடித்துக்கொண்டு வெளியேறும் தறுவாயில் ஐ நா வின் யுத்தத்தில் பாதிக்கப்படும் சிறுவர் நலன் தொடர்பில் செயற்படும் அலன் ரொக் பின்வருமாறு கூறுகிறார், " கருணா துணைராணுவக் குழுவினரால் சிறுவர்கள் நாளாந்தம் கடத்தப்பட்டு வருகிறார்கள். இலங்கை அரச ராணுவம் கருணா குழுவிற்கு உதவிவருவதுடன், சிறுவர்களைக் கடத்துவதிலும் பங்களிப்புச் செய்துவருகிறது என்பதற்கான பலமான ஆதாரங்களை நான் சேகரித்திருக்கிறேன். சோதனைச் சாவடிகளில் ராணுவத்தால் தடுத்துவைக்கப்படும் தமிழ் இளைஞர்களும் சிறுவர்களும் கருணா குழுவினருக்குக் கையளிக்கப்பட்டு கட்டாய ராணுவப் பயிற்சிக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள்" . தமது பிள்ளைகளை கருணா குழு கடத்திச் செல்வது தொடர்பான முறைப்படுகளை பெற்றோரிடமிருந்து பெற்றுக்கொள்ள மறுக்கும் பொலிஸார், "கருணாவினாலேயே நாம் இங்கு பாதுகாப்பாக இருக்கிறோம், அவருக்கெதிராக எம்மால் நடவடிக்கை எடுக்கமுடியாது. புலிகள் உங்கள் பிள்ளைகளைக் கொண்டு சென்றபோது நீங்கள் முறையீடு செய்யாததுபோல் இப்போதும் இருங்கள். உங்கள் பிள்ளைகளை இப்போது கடத்தியவர்களும் தமிழர்களே" என்று பெற்றோரிடம் கூறியதாக அலன் ரொக் மேலும் தெரிவித்தார். 10. புலிகளிடமிருந்து கருணா விலகிச் சென்றதும், அவர் இன்று பூண்டிருக்கும் "மதிப்பிற்குரிய" எனும் நாமமும் அவரது பயங்கரவாதத்தினை மறைக்கப் போதுமானவை அல்ல. அவர் புலிகள் இயக்கத்திலிருந்தபோது கையாண்ட அதே தீவிரவாதச் செயற்பாடுகளையும் உத்திகளையும் இப்போதும் அவரது குழு கையாண்டு வருகிறது. சிறுவர்களை ஆயுதப் பயிற்சிக்காகக் கடத்துவது, கப்பத்திற்காகக் கடத்துவது போன்றவை அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவைதான். அரசியல்வாதிகளின் படுகொலைகள் என்பது கருணாவுக்குப் பரீச்சயமானதுதான். ரவிராஜின் படுகொலைமூலம் தான் தற்போதும் அதே தீவிரவாதத்தினைப் பின்பற்றும் ஆயுததாரிதான் என்பதை கருணா நிரூபித்திருக்கிறார். புலிகள் கருணா பிளவு இலங்கை ராணுவத்திற்குச் சாதகாமான போர்க்களம் ஒன்றை உருவாக்கியிருப்பதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளும் கொழும்பு அரசியல்த் தலைமைப்பீடம், தமக்கும் கருணாவுக்கும் இடையில் இருக்கும் தொடர்பினை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள இன்றுவரை மறுத்தே வருகின்றனர். ஆனாலும், கருணாவுக்கும் அரச ராணுவத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு இலங்கை மக்கள் அனைவராலும் பரவலாக அறியப்பட்ட ஒரு விடயம் என்றால் அது மிகையில்லை. இது சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு மிகவும் பாதகமானது. அலன் ரொக் போன்ற சர்வதேச அதிகாரியின் அறிக்கை மூலம் கருணா குழுவுக்கும் அரசுக்கும் இடையிலான தொடர்பு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடிப்படையாக வைத்து அமெரிக்கா உட்பட, உதவி வழங்கும் நாடுகள், இணைத்தலைமை நாடுகள் என்பன இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து கருணா குழுவுக்கும் இலங்கை அரச ராணுவத்திற்கும் இடையிலான தொடர்பினை முற்றாகக் கைவிடுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். போரில்லாத அரசியல் பொறிமுறை ஒன்றின் மூலமே இப்பிரச்சினைக்கான தீர்வும் எட்டப்படுதல் வேண்டும் என்று பிளேக்கின் செய்திக் குறிப்புக் கோருகிறது.