Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நிழலி

  1. புரட்சிகர தழிழ்தேசியனுக்கு என் அன்பான பிறந்த தின வாழ்த்துகள் !!
  2. நிலாமதி அக்காக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துகள்
  3. வாதவூரானுக்கு பிறந் தின வாழ்த்துகள்
  4. ஒரு சின்ன டவுட்டோட...பிறந்தநாள் வாழ்த்துகள் சுஜிக்கு
  5. சென்னை, ஏப்.8,2011 இலங்கை தமிழர்களுக்காக என்றைக்கும் போராட கூடியவர்கள் தி.மு.க.வினர் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். மேலும், "உண்மையான தமிழன், தமிழன் அழிகிறானே என்று கவலைப்பட்ட தமிழன் கருணாநிதி," என்றார் அவர். தென்சென்னை மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சிந்தாதிரிப்பேட்டையில் நேற்றிரவு நடந்தது. இந்தக் கூட்டத்தில் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி கலந்துகொண்டு பேசுகையில், "இது வெறும் பிரசார பொதுக்கூட்டம் அல்ல. இன எழுச்சிக்கான போர் முரசு கொட்டுகின்ற கூட்டம். இனம் என்று சொன்னால் ஏழை எளியவர்களின் இனம். தமிழகத்திலே தி.மு.கழகம் சார்பில் எல்லா இடங்களிலும் நம்முடைய கூட்டணியினுடைய குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இரண்டு நாளைக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்னை தீவுத்திடலிலே வந்து உரையாற்றினார். அவரிடம் சட்டமன்ற தேர்தலை பற்றி பேசவில்லை - சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அமையவிருக்கின்ற அரசு, அது தி.மு.கழக அரசாக இருந்தால் என்னென்ன கோரிக்கைகளை அம்மையாரே உங்களிடத்தில் வைக்கும் அந்த கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி தரவேண்டும் என்ற என் நலனுக்காக அல்ல - யாருடைய நலனுக்காகவும் அல்ல - இந்த மாநிலத்தினுடைய நலனுக்காக தமிழனுடைய நலனுக்காக - தமிழ்நாட்டு மக்களின் நன்மைக்கான தேவைகளை எல்லாம் எடுத்து வைத்தேன். அப்பொழுது அங்கு நான் சொன்னேன், இலங்கையிலே வாழ்கின்ற எங்கள் தமிழர்கள் குடியமர்த்தப்படுவதிலே, பராமரிக்கப்படுவதிலே கால தாமதம் ஏற்படுகிறது. இலங்கை அரசு அவர்களுடைய தேவைகளை இன்னமும் முழுமையாக நிறைவு செய்யவில்லை. அங்கே சிங்களவர்களும், தமிழர்களும் சம நிலையிலே வாழ்வதற்கு சட்ட திருத்தத்தை கொண்டு வருவதாக இலங்கை அதிபர் சொல்லிய அந்த திருத்தத்தை கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். நான் என்னமோ இப்பொழுதுதான் இலங்கைத் தமிழர்களுக்காக கவலைப்படுவதைப் போல சில பத்திரிகைகளில் எழுதியிருக்கின்றார்கள். கேலி செய்திருக்கின்றார்கள், யார் யார் இலங்கை தமிழர்களுக்காக பாடுபடுகிறார்கள், இலங்கையிலே தமிழர்கள் கொல்லப்பட்ட போது ஒதுங்கி இருந்தவர்கள் யார்? தமிழர்கள் கொல்லப்பட்ட போது அது சரி, சரி என்று சொன்னவர்கள் யார்? இலங்கை தமிழர்கள் அங்கு வேதனைப்பட்டபோது "ஸ்கேல்'' வைத்து அளந்து பார்த்து இந்த பிரச்சினையை அணுகிய கம்யூனிஸ்ட் நண்பர்களானாலும் அதைப்பற்றி நான் கவலைப்படவே மாட்டேன் என்று சொன்ன அ.தி.மு.க. நண்பர்களானாலும் யோசித்து பார்க்க வேண்டும். தி.மு.கழகம் இலங்கை பிரச்னையில் எடுத்த நிலை என்ன? தமிழன் அங்கே வாழ வைக்கப்பட வேண்டும். தமிழன் அவர்களுடைய ஊர்களிலேயிருந்து விரட்டப்பட்ட தமிழன், அங்கே நடைபெற்ற போராட்டத்தினால் ஊரை விட்டு ஓடிய தமிழன் மீண்டும் அந்த ஊருக்கு வரவேண்டும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்ற பொறுப்பை இலங்கையிலே இன்றைக்கு இருக்கின்ற அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம் என்றால் கடந்த காலத்திலே, இன்றைக்கு எங்களை கேலி செய்கிறவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள். உங்களுக்கு நினைவிருக்கிறதா? சென்னை சட்டசபையில் ஒரு தீர்மானமே வந்தது, ஜெயலலிதா ஆட்சியில். ஆனால் நான் சொல்ல விரும்புகிறேன், அன்றைக்கு சென்னை சட்டமன்றத்தில், தமிழக சட்ட மன்றத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் என்ன? அந்த தீர்மானத்தை தி.மு.கழகம் ஆதரிக்கவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை, அதை ஆதரித்து பேசவும் இல்லை. நடுநிலை வகித்தோம். அந்தத் தீர்மானம் இலங்கையிலே இருக்கின்ற பிரபாகரனை கைது செய்து கொண்டு வந்து, சென்னையிலே விசாரணை நடத்த வேண்டும்-தீர்மானம் போட்டது யார்? தி.மு.கழக அரசா? நெஞ்சிலே கை வைத்து சொல்லுங்கள், நெஞ்சு இருந்தால் கை வைத்து சொல்லுங்கள். நாங்களா அந்த தீர்மானம் போட்டோம், இல்லையே. இலங்கையிலே ராஜபக்சேயினுடைய ராணுவத்தால் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, நான் கண்ணீர் விட்டு கவிதை எழுதினேன், கட்டுரை தீட்டியிருக்கிறேன், மேடையிலே தீர்மானம் போட்டோம். அப்போது அம்மையார் ஜெயலலிதா என்ன சொன்னார்? இந்த போராட்டத்திலே சாகிறவர்கள் எல்லாம் விடுதலை வீரர்கள் அல்ல, விடுதலைப்புலிகள் அல்ல என்று சொன்னார். சொல்லிவிட்டு அப்படியே புலிகளாக இருந்தாலும் இலங்கையிலே இருக்கிற தமிழர்களாக இருந்தாலும் இதற்காக நாம் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் போர் என்றால் ஜனங்கள் செத்து மடிவது சகஜம்- யார் சொன்னது, இலங்கை தமிழர்களை பார்த்து. ஜனங்கள் என்று சொல்லி , அவர்கள் செத்து மடிவது சகஜம் என்று சொன்ன ஜெயலலிதா, இன்றைக்கு இலங்கை தமிழர்களுக்கு நெருக்கமான உறவாக இருந்தால் அதைவிட அதிகமாக இலங்கை தமிழர்களுக்காக இங்கே பேசிய இன்னமும் பேசிக்கொண்டிருக்கிற சில நெடுமரங்களுக்கு அவர் வழிகாட்டியாக ஆகிவிட்டார். தி.மு.கழகத்தை பொறுத்தவரையில் அதுவும் அந்த கட்சியினுடைய தலைவராக இருக்கிற என்னை பொறுத்தவரையில் இன்று நேற்றல்ல-அறிஞர் அண்ணாவுடன் இணைந்து 1956 ஆம் ஆண்டு இலங்கையிலே ஈழத்தமிழர்களுக்காக போர்க்கொடி ஏந்திய தந்தை செல்வா அவர்களை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியவர்கள் நாங்கள். அதைப்போலவே விடுதலைப்புலிகள் ஜெகன், குட்டிமணி, தங்கதுரை இவர்களெல்லாம் என்னோடு நெருக்கமாக இருந்து அங்கே நடைபெறுகின்ற, அந்த விடுதலைப்போராட்டத்திற்கான ஆதரவை தமிழக மக்கள் மூலமாக கோரி பெற்றார்கள். சகோதர யுத்தத்தால் அந்த போராட்டம் தோல்வியிலே முடிந்தது. இப்படி முடிந்துவிட்டதே என்ற ஏக்கம் எனக்கு இன்றைக்கும் உண்டு. அதனால்தான், அந்த ஏக்கத்தைப் போக்கிக்கொள்ள - இங்கே பிரதமர் வரும் போதெல்லாம், பிரதமரை காணும் போதெல்லாம் நம்முடைய அன்புக்குரிய சோனியா காந்தி அம்மையார் இங்கு வரும் போதெல்லாம் அவரிடத்திலே நான் பகிரங்கமாகவும், தனியாகவும் எடுத்துச் சொல்வது - இலங்கையிலே இருக்கின்ற தமிழர்களை காப்பாற்றுங்கள். அவர்கள் ஏதோ சில கலவரங்களால், பாதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணாமல், சுதந்திரப் போராட்டத்தில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் - அவர்களுக்கு நல்வாழ்வு அளிக்க முன்வாருங்கள் என்று கேட்கிற அந்த விளக்கம்தான் இந்த கருணாநிதிக்கு இன்றைக்கும் உண்டு. இதைச்சொல்வதற்கு காரணம், திராவிட முன்னேற்ற கழகம் இன்று நேற்றல்ல - உலகத்திலே எந்த ஒரு மாநிலத்திலும், எந்த ஒரு நாட்டிலும் அன்னியப்பட்டு கிடக்கிற அடித்தளத்து மக்களை சாதாரண - சாமான்ய மக்களை, விடுதலை முழக்கமிடுகின்ற மக்களை ஆதரிக்கின்ற இயல்பு கொண்டது என்பதும், வரலாறு கொண்டது என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்று. அப்படிப்பட்ட வரலாற்றுக்குரிய தி.மு.க. அதன் தலைவர் என்ற முறையில், நான் இந்த போராட்டத்திலே எத்தகைய முடிவு எடுக்க வேண்டியிருந்தது என்பதையும், எத்தகைய குழப்பங்களையெல்லாம் அப்போதிருந்த அ.தி.மு.க. ஆட்சி விளைவித்தது என்பதையும், தயவு செய்து எண்ணிப்பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். உண்மையான தமிழன், தமிழன் அழிகிறானே என்று கவலைப்பட்ட தமிழன் கருணாநிதி. தி.மு.க.வில் உள்ள தமிழர்கள் - இலங்கையிலே இருக்கின்ற தமிழர்களுக்காக என்றைக்கும் கண்ணீர் விடுபவர்கள் - என்றைக்கும் பரிந்து பேசக்கூடியவர்கள் - என்றைக்கும் போராடக் கூடியவர்கள் என்பதை உணர்ந்து அப்படிப்பட்ட தமிழர்களால் நடத்தப்படுகின்ற இந்தப் பேரியக்கத்தின் பிள்ளைகளாக உள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணியினுடைய வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்தால் நான் சொன்ன இந்த வார்த்தைகளுக்கு மதிப்பு," என்றார் முதல்வர் கருணாநிதி. vikatan.com
  6. அதிமுக கூட்டணிக்கு வெற்றி: லயோலா கருத்துக் கணிப்பு எதிர்வரும் 2011 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வரும் என்று 51.1 சதவீத வாக்காளர்களும், திமுக வுக்கு அந்த வாய்ப்பு இருப்பதாக 36.7 சதவீத வாக்காளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு தேர்தலின் போதும் லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகம் மாநில அளவில் பொது மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடுவது வழக்கம். அதன்படி, மார்ச் மாதம் 21ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரையிலும் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் தமிழகத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளில் கள ஆய்வு நடத்தி இன்று அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு முடிவுகளின் முக்கிய அம்சங்கள்: * தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பொது மக்கள் இன்று வாக்கு அளிப்பதாக இருந்தால் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த வாக்காளர்கள் அதிமுக அணிக்கு 48.6 சதவீதம் பேரும், திமுக அணிக்கு 41.7 சதவீதம் பேரும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். முடிவு செய்யவில்லை என்று 8.2 சதவீதமும் பிறருக்கு வாக்களிப்பதாக 1.5 சதவீத பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். * சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் அதிமுக அணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்று 51.1 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இதில், அதிமுக தனித்து வெற்றி பெறும் என்று 25.9 சதவீதம் பேரும், அணியுடன் இணைந்து பெரும்பான்மை பெறும் என்று 25.2 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். * திமுக அதிக பெரும்பான்மை இடங்களை பெறும் என்று கருத்து தெரிவித்துள்ள 36.7 சதவீதம் மக்களில் திமுக தனித்து வெற்றி பெறும் என்று 16.2 சதவீதம் பேரும், அந்த அணியினரோடு இணைந்து தான் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற முடியும் என 20.5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். * தொகுதி அளவிலான விவரங்களை நுணுகி ஆராய்ந்து கருத்துக் கணிப்பு நடத்தியதில் 5 சதவீதத்துக்கும் அதிக மான வாக்குகளுடன் அதிமுக அணிக்கு 105 தொகுதிகள் வரை சாதகமாக இருப்பதாகவும், திமுக அணிக்கு சாத கமாக 70 தொகுதிகள் இருப்பதாகவும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மீதமுள்ள 59 தொகுதிகளில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். * தேர்தல் ஆணையம் பொறுப்புடனும் பாரபட்சமற்ற வகையிலும் செயல்படுவதாக 60.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 24.7 சதவீதம் பேர் அந்த ஆணையம் அதிகார வரம்பை மீறி கண்டிப்புடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். * திமுக மற்றும் அதிமுக அணிகளை ஒப்பிடும்போது தொகுதி பிரச்னைகளை தீர்ப்பதில் அதிமுக அணி கவனம் செலுத்தும் என்று 33.7 சதவீதம் பேரும், திமுக அணிக்கு சாதகமாக 21.9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். * மதிமுக தேர்தலை புறக்கணித்திருப்பதாக அறிவித்திருப்பதால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று 53.6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுக அணிக்கு பாதிப்பு ஏற்படும் என்று 25.4 சதவீதம்பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். * அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகத்தில் எந்த அணி சிறப்பாக செயல்பட்டது என்பது குறித்த கருத்துக் கணிப்பில் தேர்தல் அறிக்கையில் திமுக அணிக்கு 49.4 சதவீத ஆதரவும், அதிமுக அணிக்கு 43.5 சதவீத ஆதரவும் இருப்பதாக அந்த கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. * சுமூகமான தொகுதி பங்கீடு, சரியான வேட்பாளர்கள் தேர்வு, உட்கட்சி பூசல்கள் இல்லாதது, சிறுபான்மையினர் ஆதரவு, டிவி பத்திரிகை விளம்பரங்கள், சுவர், சுவரொட்டி பேனர்கள், தெருமுனை கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள், வாக்காளர்களுடன் நேரிடை சந்திப்பு, தலைவர்களின் பிரச்சாரம் ஆகிய தேர்தல் வியூகங்களில் பெரும்பாலானவற்றில் திமுகவே முன்னிலை பெற்றிருப்பதாகவும், ஒரு சில அம்சங்களில் மட்டுமே அதிமுக அணி முன்னிலை பெற்றிருப்பதாகவும் இந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. vikatan.com
  7. இன்று தன் பிறந்த தினத்தை கொண்டாடும் தோழி யாயினிக்கு என் இனிய அன்பான பிறந்த தின வாழ்த்துகள்...
  8. இன்று (19 /03 ) பிறந்த நாளை கொண்டாடும் இணையவணுக்கு பிறந்த தின வாழ்த்துகள் !!
  9. நெடுக்ஸ் இற்கும் குட்டி புலவர்ஸ் இற்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்
  10. உறவுகள் அனைவரையும் தன் நகைச்சுவையால் மகிழ்விக்கும் 'தமிழ் சிறி' க்கும், சிறந்த ஆக்கங்களை இணைக்கும் வீணாவுக்கும் என் இனிய பிறந்த தின வாழ்த்துகள்
  11. சிறந்த நண்பன் நுணாவுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துகள்
  12. நன்றி சுஜிமா.... நன்றி அபிராம் ...இதுவரைக்கும் வாழ்கை என் விருப்பின் படிதான் போய்க்கொண்டு இருக்கு..இப்படியே வாழ்வு முழுதும் நீங்கள் வாழ்த்தியது போல் இருந்தாலே போதும் நன்றி நுணா... கனடா வந்தபின் Chivas Regal உடம்புக்கு சரியாக ஒத்து வருகின்றது இல்லை...இப்பவெல்லாம் Brandy மட்டும் தான் நன்றி முரளி நன்றி புரட்சி ஆஹா..கள்ளும் இறாலும் அருமையான combination ... நாக்கின் நுனியில் இருந்து அடி வரை முறுக்கேறும் நன்றி குட்டி நன்றி அர்ஜுன் நான் வெள்ளி, சனி மற்றும் விடுமுறை நாட்களில் மட்டும் குடிப்பதால் நேற்று குடிக்க முடியவில்லை..எல்லாவற்றையும் சேர்த்து இந்த வெள்ளி இருக்கு நன்றி பொறுக்கியின் தோழியே.... பொதுவாக என்னை மாதிரி நல்ல மனசு ஆட்கள் தான் 'மார்'கழியில் பிறப்பார்கள்...எப்படி நீங்களும் இதே மாதத்தில் பிறந்தீர்கள்?
  13. நன்றி கு.சா அண்ணா... குசும்பு..!! ஆஹா..அற்புதம்...அப்படியே வைத்திருந்து வெள்ளி இரவுதான் குடிப்பேன்...நன்றி தமிழ் சிறி சைட் டிஷ் ஒன்றும் இல்லையா? நன்றி வீணா நன்றி கறுப்ஸ் நன்றி அண்ணா நன்றி ரதி முதல் மூன்று வரிகளும் ஒகே ...ஆனால் கடைசி வரி "தெளிந்த நல் அறிவு" வருவதுதான் மிகக் கஷ்டம் வாழ்த்துக்கு நன்றி சுவி நன்றி அக்கா நன்றி தப்பிலி நன்றி Boss நன்றி இசை..
  14. என் மகளுக்கு வாழ்த்துச் சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும் அன்பான நன்றிகள்
  15. அப்படி இல்லாததாலதானே யாழில் நிற்கிறம்
  16. ஓம் சிவாய நமஹா ஓம் சிவாய நமஹா சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த ப்ரபவிதும் நசே தேவம் தேவோ ந கலு குசல ஸ்பந்தி துமபி அதஸ் த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதி பிர் அபி பிரணந்தும் ஸ்தோதும் வா கதாம் அக்ருத புண்யப் ப்ரபவதீ சபேசனுக்கு இந்த விக்ருதி வருடத்தில் வந்திருக்கும் இந்தப் பிறந்த தினத்தினால் கர்ம வினைகள் எல்லாம் தீர்ந்து வியாழ, வெள்ளி, சனி மற்றும் ஜூப்பிடர் தோஷங்கள் எல்லாம் நீங்கி சர்வ வல்லமையும், சாஸ்திரங்கள் தோறும் சொல்லப்படுகின்ற யோகங்களும் கூடி, ஆறுமுக நாவலர் போன்று பேரும் புகழும் பெற என் வாழ்த்துகள்
  17. வாத்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  18. இன்று பிறந்த தினத்தை கொண்டாடும் இளைஞனுக்கும், தீபச் செல்வனுக்கும் என் இனிய பிறந்த தின வாழ்துகள்
  19. பிறந்த நாள் வாழ்த்துகள் விசுகு... என்றென்றும் 16 வயது போல் இளமை துள்ளிக் குதித்து விளையாடட்டும்
  20. ஜீவாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தன் ப்ரியமான ஜீவனுடன் இவ்வருடத்தில் மேலும் அன்புற என் வாழ்த்துகள்
  21. மனதில் கனமான உணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டவாறு கதை அமைகின்றது...தொடருங்கள் அபிராம்.. எழுத்து நடையும் நன்றாக இருக்கின்றது
  22. ரதி என்பது நீங்கள் எழுதும் பல கருத்துகளுடன் ஒத்துப் போவது மட்டுமன்றி.. "நான் ஒரு பெண்' என்று துணிந்து சொல்கின்றது...பெயர் மாற்றம் அவசியம் என்றால் மட்டும் மாற்றுங்கள்... இல்லையெனில் 'ரதி' என்பதே 100% பொருந்துகின்றது
  23. இனிய தோழி ஈழமகளுக்கு என் அன்பான பிறந்த தின வாழ்த்துகள்
  24. நண்பன் தூயவனுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள்
  25. யாழ்ப்பாண கூழ் என்பது என் உணர்வுகளுடன் இணைந்த ஒன்று அப்பா புற்றுநோயில் சாக 6 நாட்களின் முன்பும் குடித்த ஒரு உணவு (அதுதான் இறுதியாக வாய்மூலம் உட்கொண்ட உணவாகவும் இருந்தது) யாழில் சுற்றம் சூழ காச்சி உண்டதும், நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து டுபாயில் கூழ் காச்சியதும் பலருடன் சேர்ந்து அருந்தியதும், கனடா வந்த பின் காச்சி சுற்றம் சூழ குடிக்க ஆளின்றி அலைந்ததும்.......... நன்றி தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.