Jump to content

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    14881
  • Joined

  • Days Won

    166

Everything posted by நிழலி

  1. 2019 இல் கர் நாடகாவில் ஆட்சியைப் பிடித்த பிஜேபி, 2023 இல் அங்கு காங்கிரஸிடம் படுதோல்வி அடைந்தது. அதாவது பிஜேபி ஆட்சியில் இருக்கும் போது இடம்பெற்ற தேர்தலில் கூட, பிஜேபி தோற்றது என் ஞாபகம்.
  2. இதே போல், இந்தி எதிர்ப்பு என்று முழங்கி விட்டு, கருணா நிதி குடும்பம்/ உறவுகள் நடாத்தும் கல்லூரிகளில் இந்தி ஒரு கட்டாய பாடமாக வைத்துள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகி இருந்தன.
  3. என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், இவ்வாறு தமிழில் பாடசாலையில் படித்து பெற்ற தகுதிகளைக் கொண்டு இரசாயனவியலில் இந்த வருடம் தான் MSc முடிக்கின்றார்.
  4. வைகோ வின் கேடுகெட்ட அரசியலால் உயிரிழந்த இன்னுமொரு உயிர். அஞ்சலிகள்!
  5. ஆனால் தாம் பெரியாரின் வழிவந்த பகுத்தறிவு கொள்கையை கைக்கொள்கின்றவர்கள் என்பர்!
  6. நல்ல நேர்மறையான, காய்தல் உவத்தல் இன்றிய ஒரு பயணக் கட்டுரை. உள்ளதை உள்ளபடி சொல்லுகின்றீர்கள். இலங்கை இப்போதைக்கு நல்லா உள்ளது என்பதுவும், யாழ்ப்பாணம் பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறுகின்றது என்பதுவும் சிலருக்கு எரிச்சல் ஊட்டக்கூடிய தகவல்களாக இங்கு இருக்கும் என நினைக்கின்றேன். மிகவும் சரியான கூற்று(கள்)! சிங்கள பெளத்தம் ஒரு போதும் தன் இனவாதத்தை கைவிடப் போவதில்லை. ஆனால், இன்றைய உலக போக்கினாலும், பொருளாதார நிலையாலும் அதனால் முன்னரைப் போல தீவிர நிலையை அடைய முடியாமல் தேங்கி நிற்கின்றது.
  7. வணக்கம், தாரளமாக தமிழக அரசியல் , தேர்தல் செய்திகளை பகிருங்கள். ஆனால், அரசியல் கட்சி ஒன்றின், அது எந்தக் கட்சியாயினும், அதன் பிரச்சார காணொளிகள், படங்கள், பிரச்சார மீம்ஸ்கள் போன்றனவற்றை இணைக்காதீர்கள். யாழின் விதிகளில் இவை தொடர்பாக தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. நன்றி
  8. மிக மகிழ்ச்சியான செய்தி. இனியாவது அவர்கள் உண்மையான சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வாய்ப்பை பெற வேண்டும். முருகனுக்கு லண்டன் வீசா கிடைக்குமா என்பது சந்தேகமே. பொதுவாக பிரித்தானியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள், கொலைக் குற்றம் ஒன்றில் குற்றவாளியா நீதிமன்றத்தால் தீர்க்கப்பளிக்கப்பட்டவர்களுக்கு வீசா வழங்குவது கிடையாது. அவர் ஒரு அரசின் ராஜதந்திரியாக / அமைச்சராக இருப்பினும் கூட, வீசா வழங்க தயக்கம் காட்டுவன.
  9. ஓம். சின்ன வயதில் இதனை புனில் / புணில் என்றே அழைத்த ஞாபகம். இவை நடக்கும் போது, தத்தித் தத்தித் தான் நடக்கும். சிறு வயதில் இருக்கும் போது அம்மா இதற்கு ஒரு கதை சொல்லுவா. இராமர் பாலம் கட்டும் போது, இந்தக் குருவி தான் அதிகம் வேலை செய்ததாம். , அணில் ஒரு வேலையையும் செய்யாமல் சும்மா இருந்ததாம். இராமர் எப்படி வேலை நடக்குது என்று பார்க்க வரும் போது, அணில் தானே தான் எல்லா வேலையும் செய்தது என்றும், இந்தக் குருவி வேலை ஒன்றும் செய்யாமல் மண்ணுக்குள் புரண்டு விளையாடினது என்றும் பொய் சொல்லிச்சாம். எனவே, இராமர் அணிலின் முதுகில் "நீ நல்ல பிள்ளை" என்று சொல்லி, தன் மூன்று விரல்களால் தடவிக் கொடுத்தாராம். அதனால் தான் அணிலின் முதுகில் மூன்று கோடுகளாம். இந்தக் குருவியைப் பார்த்து, "நீ வேலை ஒன்றும் செய்யாததால் ஒழுங்காக நடக்க முடியாமல் தத்தித் தத்தி தான் நடப்பாய்" என்று சாபம் கொடுத்தாராம். அதனால் தான் தத்தி தத்தி நடக்குதாம். 😀
  10. தமிழ அரசியலில் இருக்கும் மோசமான பிறவிகளுக்குள் வைகோ வும் ஒருவர். திமுக வில் இருந்து வைகோ பிரிந்த தருணம் பல தொண்டர்கள் தீக்குளித்தனர். அவர்களின் அந்த தியாகத்தில் மலர்ந்தது மதிமுக. பின், அத்தனை தியாகங்களையும் குழி தோண்டிப் புதைத்து விட்டே மீண்டும் திமுக வுடன் கூட்டணி வைத்தார். எந்த வாரிசு அரசியலை வெறுத்து வெளியேறினாரா, அதே அரசியலை தன் மகனை முன் நிறுத்தியதன் மூலம் அவரே செய்தார். இன்று இன்னொருவரை தற்கொலை முயற்சிக்கு தூண்டும் விதமாக நடந்து கொண்டு இருக்கின்றார். இறுதி யுத்த காலத்தில், போராளிகளுக்கு மருத்துவ வசதி தொடர்பாக தொடர்பு கொள்ளும் போது, நாட் கணக்கில் வழக்கத்தில் இருந்த தன் தொலைபேசியை அணைத்து வைத்து இருந்தவர் இந்த போலி ஈழ ஆதரவாளர். தற்கொலைகளின் மூலம் அரசியல் நடாத்தும் ஒரு மோசமான அரசியல்வாதி வைகோ.
  11. புணில் என்ற குருவியையா பிலினி என்று அழைக்கின்றீர்கள்? புணில் தத்தித் தத்தி நடக்கும் குருவி...
  12. சுண்டிக்குளி மகளிர் பாடசாலையும், வேம்படி மகளீர் பாடசாலையும் இருக்கும் வரைக்கும் வடக்கில் சிட்டுக் குருவிகள் அழியாது என்று சுவாமி நிழலியானந்தா அவர்கள் அருளியுள்ளார்.
  13. பின்வரும்பின்னூட்டம் ஒன்றை சமூக வலைத்தளம் ஒன்றில் கண்டேன். "திருகோணமலை மக்கள் எங்க போனாலும் கோணேசரைத் தூக்கிக் கொண்டு போவது போல், யாழ்ப்பாணத்தார் முருகனை தூக்கித் திரிவினமாம். " வீடியோ முழுதும், முருகனின் கோயில்கள்! இதை உருவாக்கிய அருளானந்தம் ஜீவதர்சன், என் அப்பாவின் தங்கை மகன்.
  14. இவருக்கு இன்னும் காலம் இருக்கின்றது. தந்தையைப் போல், ஏழைகளின் மனதில் நிலைக்க கூடிய வழிகளில் வாழ்ந்தாராயின் சாதிப்பார்.
  15. இதில் கனிமொழி, ஆ.ராசா, செல்வ கணபதி ஆகியோருக்கு தான் வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மிகுதி பேரில் யார் டெபாசிட் வாங்குவது என்பதில் கடும் போட்டி நிலவலாம். ... விஜயகாந்தின் மகனைப் பார்க்கத்தான் பாவமாக இருக்கு.
  16. படு முட்டாள்தனமான தட்டத் திருத்தம் இது. 14 வயது கொண்ட ஒரு சிறுமி என்னதான் ஒத்துக் கொண்டாலும் அவர் மீது இடம்பெறும் பாலியல் உறவு என்பது பாலியல் வல்லுறவே. ஏனெனில் அந்த சிறுமியால் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. உடல் அளவிலும் பாலியல் உறவுக்கு தயாராக இருப்பாரோ என்பதும் சந்தேகத்துக்குரியவை. இலங்கை அரசு இனி பாலியல் வல்லுறவையும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் போல் உள்ளது.
  17. படுதோல்வி அடைந்தாலும், பா.ஜ.க. அவரை மீண்டும் இன்னொரு மாநிலத்துக்கு ஆளுநராக நியமிக்கும் என்ற நம்பிக்கையில் தான் இவர் போட்டியிடுகின்றார். தமிழச்சி தங்கபாண்டியன் பிரச்சாரத்துக்கு கூட அதிகம் போக வேண்டிய தேவை இருக்காது. அண்ணாமலையாரின் நிலை தான் பரிதாபம். தோற்றுப் போன பின் மாநில தலைவராக நீடிக்கும் வாய்ப்பும் அருகிவிடும் சந்தர்ப்பம் உண்டு.
  18. வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு அமெரிக்க, கனடிய பல்கலைக்கழக அனுமதி தொடர்பான நிகழ்வு - உடனடி அனுமதி கொடுக்கப்படும். வழக்கமாக கொழும்பில் நடாத்தப்படும் இவ்வாறான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான கருத்தரங்கு / நிகழ்வுக்கு வடக்கு கிழக்கை சார்ந்த மாணவர்கள் சமூகமளிப்பது குறைவு என்பதால், இம்முறை நேரடியாக யாழ்ப்பாணத்தில் இவ்வாறான ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளனர். சரியான தகமைகள் உள்ளவர்களுக்கு உடனடியாகவே அனுதிக்குரிய உறுதிப்பத்திரம் கொடுப்பார்களாம். ஆங்கிலத்தில் இருக்கும் இச் செய்தியை அப்படியே இங்கு போடுவதன் காரணம் ஊரில் உள்ள தகமைகள் கொண்ட உங்களுக்கு தெரிந்த மாணவர்கள் இருப்பின், அவர்களுக்கு தெரியப்படுத்த வசதியாக இருக்கும் என்பதால். முடிந்தால், அப்படியானவர்களுக்கு அறியத் தாருங்கள். ---------------------- Students in North, East to get Spot Admissions to study in UK, Canada & Germany Colombo, March 21 (Daily Mirror) - The International Centre for Foreign Studies (ICFS) is set to host a special spot admissions program for students, especially in the North and East provinces, who aspire to pursue higher education opportunities in countries such as Canada, the United Kingdom and Germany for the upcoming September 2024 intake. Chathurika Dissanayake, the CEO of ICFS Education Center said they plan to host a special two-day program called 'Project Education Yalpanan' on March 30 and 31 at the Jetwing Hotel in Jaffna, free of charge. "There have been many overseas university representatives coming to Colombo, and there are numerous education events and exhibitions happening in and around Colombo. However, these types of events often do not reach Jaffna. We understand that there are many talented, qualified students in Jaffna who are capable of seeking these overseas opportunities," she said. The Spot Admissions program allows students to participate in a specialized event where they can secure their offer letters within 30 to 40 minutes. "We have joined hands with York St John University in the UK, and we will be accompanied by the country manager, Mrs. Bhagya Perera on both days. Students seeking study opportunities in the UK can visit us on March 30 and 31 in Jaffna and leave with an offer letter in hand," Dissanayake said. "Getting an offer letter from a university is usually a lengthy process, taking weeks or even months. However, during the program, we have arranged for students to receive an offer letter from York St. John University within a few minutes. All students need to do is bring their documents, including passport, academic records and service letters, to ensure they leave with an offer letter for the upcoming intake," she explained. She said Canada is also a preferred destination for many students in the North and East due to family ties. "ICFS is delighted to introduce a loan opportunity for postgraduate students in Jaffna for the first time," she said. "We are introducing a loan facility that covers the full cost of studies in Canada. This makes studying in Canada achievable without making it just a dream. The assessment for the loan will be based purely on academic criteria and employability after graduation. No guarantors or properties are required for security; it is purely based on academic achievements," the CEO said. ICFS has also identified Germany as a preferred destination for students. "Germany offers scholarships for students with higher academic achievements. Even for university courses in Germany, students can make a minimum payment of 3000 euros and pay the balance in installments. We will have an information session dedicated to Germany as well," added Dissanayake. "All students interested in studying in Germany, whether undergraduate or postgraduate, can meet us at Jetwing Jaffna on March 30 and 31 from 9 a.m. onwards," she said. She said that ICFS is committed to bringing more opportunities to the North and East under the education initiative 'Yalpanam.' https://www.dailymirror.lk/breaking-news/Students-in-North-East-to-get-Spot-Admissions-to-study-in-UK-Canada-Germany/108-279327
  19. சாம் சூசைட் பண்ணப் போறான் எனும் நகைச்சுவை குறும்படத்தை எடுத்தவர்களின் அடுத்த படைப்பு. பார்த்து விட்டு பகிருங்கள்.
  20. இங்கு மனிதர்களை நாய் காவல் காப்பது இல்லை. நாய்களைத் தான் மனிதர்கள் காவல் காக்கின்றனர். உயர் ரக நாயினம் என்றால், அதைக் களவெடுப்பதற்கு என்றே திருட்டுக் கும்பல்கள் உண்டு இங்கு. பாதுகாப்புக்கு ஆயுதம் வைத்து இருந்து, அவர் திருடர் ஒருவரை சுட்டுவிட்டால், கொலை வழக்கு பதிந்து சுட்டவரை உள்ளே தூக்கி வைத்து விடுவார்கள்.
  21. சீமான் மட்டுமல்ல, ஈழத்தமிழர்களின் விடயங்களில் அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ளும், வைகோ, திருமாளவன், திருமுருகன் காந்தி, களஞ்சியம், ராமதாஸ் ஆகியோர் கூட, இதற்கு நேரிடையாக பதில் சொல்ல மாட்டினம். அவ்வளவு ஏன், போலிகாவின் அண்ணண் காசியானந்தன் எனும் இளைஞன் கூட இதற்கு நேரிடையாக பதில் சொல்ல மாட்டார்.
  22. ஓம் இங்கு கார் களவு மிகவும் அதிகமாக நடக்கின்றது . கடந்த சனவரி (2024) இல் மட்டும் 963 கார்கள் திருடப்பட்டன. Wheel Lock போட்டாலும், இலகுவாக அதனை வெட்டி அகற்றி விட்டு, களவு எடுக்கின்றனர். வீட்டினுள் faraday box போன்ற, திறப்புகளில் இருந்து மின் சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதை தடுக்கும் பைகளுக்குள் கார் திறப்பை போட்டு வைத்தால், காரைத் திறக்க / இயக்க முடியாவிடின் வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து, வீட்டுக்காரர்களை துப்பாக்கி முனையில் வைத்து கொண்டு, மிரட்டி கார் திறப்புகளை வாங்கி செல்கின்றனர். ஒன்ராரியோவில், வேறு நாடுகளில் இருந்து 10 நாள் விசிட்டர் வீசாவில் வந்தெல்லாம் காரைக் களவு எடுக்கின்றனர். அந்தளவுக்கு காரைத் திருடுவதற்கான ஒரு சொர்க்கபுரியாக கனடா, முக்கியமாக ஒன்ராரியோ உள்ளது. இங்கு இருக்கும் சட்டங்கள் மிக மென்மையாக (Lenient )இருப்பது இதற்கு முக்கிய காரணம். கார் திருட்டில் கைதாகின்றவர்கள் அடுத்த நாளே Bail லில் வந்து, மேலும் திருடுகின்றனர். அதிலும் அனேகமானோர் 18 வயதுக்கும் குறைந்தவர்கள். எனவே, சட்டப்படி அவர்களை உள்ளே வைத்து இருக்க முடியாது. கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், அவர்கள் 18 வயதை அடைந்தவுடன், அந்த குற்றம் அவர்களின் records இல் இருந்து நீக்கப்பட்டு விடும். அதன் பின் இன்னொரு குற்றம் செய்யும் வரைக்கும், அவர்கள் குற்றமே செய்யாதவர்களாக கணிக்கப்படுவர். எனவே தான் குழுக்கள் வன்முறைக் குழுக்கள் 18 வயதுக்கும் குறைந்தவர்களைக் திரட்டி இவ்வாறு திருட்டில் ஈடுபட வைக்கின்றனர். லிபரல் ஆட்சியில் இல்லாத மாகாணங்களின் முதல்வர்கள், மத்திய அரசிடம் கிரிமினல் கோட் (Criminal code) இனை மாற்றி Bail லில் வராத மாதிரி செய்யச் சொல்லி பல தடவைகள் கேட்டுவிட்டனர். ருடோ போன்ற குற்றவாளிகளுக்கு இடம் கொடுக்கும் ஒருவர் மத்தியில் ஆட்சியிலிருக்கும் வரைக்கும் இது மாறாது. ஒன்ராரியோவில் திருடப்படும் கார்கள், மொன்றியலுக்கு கொண்டு செல்லப்பட்டு, துறைமுகமூடாக மத்திய கிழக்கு நாடுகளுக்கே அதிகம் அனுப்பப்படுகின்றது. அதிலும் முக்கியமாக UAE இற்கு. இவ்வாறு வருவது அந்த நாட்டு அரசுக்கு நன்கு தெரிந்தாலும், அதை அவர்களின் பக்கம் தடுக்க எந்த முயற்சிகளையும் செய்வது இல்லை.
  23. காதல் கடை மண்ணெண்ணை, பெற்றோல் வித்தவனும் , சைக்கிள் வித்தவனும் முதலாளியா மாறின காலம் அது, அதே பவுசு மோட்டச் சைக்கிள் சைக்கிள் திருத்திற ஆக்களுக்கும் வந்திச்சுது. பவுண் வித்து பாண் வாங்கின நிலமை அப்ப . ஆசுபத்திரிக்கு போறதை கூட அடுத்த மாசம் தள்ளிப்போட்டிட்டு ஓடிறதுக்கு ரெடியா உடுப்பெல்லாம் கட்டி வைச்சிருந்த காலம். எல்லாருக்கும் அடிக்கடி அவசரத்துக்கு இடம்பெயர்ந்து ஓடிப்போக ஒரே போக்குவரத்து சைக்கிள் எண்ட படியால் மருந்துக்கடையிலும் பாக்க இருக்கிற ஒரே வாகனமான சைக்கிள் கடைக்கு உடன ஓடிப் போய் காட்டின நிலமை இருந்த நாட்கள் அவை. மோட்டச் சைக்கிள் பேருக்கு ஏத்த மாதிரி மோட்டுச் சைக்கிளாத்தான் இருக்கும்; ஒரு நாள் ஓடினா ஒரு கிழமை கராஜ்ஜில இருக்கும். ஆட்டிறைச்சிக்கடையில ஒண்டும் மிச்சம் இல்லாமல் காலில இருந்து தொங்கிற வால் வரை வித்து முடிக்கிற மாதிரி, சைக்கிள் கடையிலேம் கிழிஞ்ச ரயர் , நசிஞ்ச rim, அறுந்த chain எண்டு எல்லாம் சொல்லிற விலைக்கு “ விருப்பம் எண்டால் வாங்கு“ எண்டு வித்த நிலமை இருந்திச்சுது. திடீர் திடீரெண்டு இந்தா வெளிக்கிடிறன் எண்டு கோட்டையில இருந்து அடிக்கிற செல்லுக்கு ஆக்கள் கொஞ்சம் முதல் ஓட , பிறகு ஆசுபத்திரியும் இடம் பெயர , இனி இருக்ககேலாது எண்டு அதுக்குப் பின்னால நாங்களும் ஓடிப் போக வேண்டி இருந்தது. இதால சைக்கிள் கட்டாயம் தேவை எண்டதால ஆக்களிலும் பாக்க அதைக் கழுவித் துடைச்சு கவனமாப் பாக்க வேண்டி இருந்திச்சுது. அடிக்கடி அடிக்கிற செல்லுக்கு இப்பிடியே போக்கும் வரவுமாய் இருந்த படியா எப்பவும் ஓட ரெடியா சைக்கிளை வைச்சிருக்கிறனாங்கள். ஒயில் ஓடிக்காஞ்சு போன கறுத்த மண், எண்ணையில வழுக்கிற உடைஞ்சும் உடையாத சீமெந்து தரை, ஆண்டாண்டு காலமா தடீல தொங்கிற பழயை ரயர்கள், குமிச்சு அடுக்கின கறள் கட்டின rims, ஆணிகள் அடிச்ச பக்கீஸ்பெட்டீல தொங்கிற ஆறாம், எட்டாம் , பத்தாம் , பன்ரெண்டாம் சாவி , பழைய மரப் பெட்டீக்க குறடு ,சுத்தியல் ,ஸ்பனர் எண்டு கையால தொட்டாலே ஏற்பூசி போட வேண்டிய நிலைமையில கறள் கட்டின சாமாங்கள் , குறுக்கால வெட்டின பழைய பரல் ஒரு மாதமா மாத்தாத தண்ணியோட , ஓட்டு தீராந்தீல இருந்து தொங்கிற ரெட்டைப்பட்டுச் சைக்கிள் செயின் நுனியில வளைஞ்ச ரெண்டு கம்பி அதில முன்காலைத் தூக்கின குதிரை மாதிரி ஏத்தி விட்ட சைக்கிள், நிலத்தில விரிச்ச சாக்கில ; வால் பிளேட், கத்திரிக்கோல் , பாதி தேஞ்ச அரம், வடிவா வெட்டின வெவ்வேறு சைஸ் சதுர ரியூப் துண்டு , பினாட்டு மாதிரி கறுப்பா உருட்டின கொம்பவுண்ட் , பிங் கலர் சொலூசன் , ஒட்டுப் போட்டாப் பிறகு வல்கனைஸ் பண்ண (அவிக்கிறதுக்கு ) ஒரு செட்டப் இவ்வளவும் இருந்தால் இது சைக்கிள் கடை. கடையில ஒரு பெரிய bossம் மற்றது வேலை பழகிற சின்ன boss எண்டு ரெண்டு பேர் தான் இருப்பினம். கடை இப்பிடி இருக்கிறதால கடைக்காரரை சில்லறை ஆள் எண்டு நெக்கக்கூடாது. சில Senior citizens ன்டை கடைகள் இருக்கும் அவைகளுக்காக, என்ன அவை திறந்திருக்கிறதிலும் பாக்க பூட்டி இருக்கிறது தான் கூட. எங்களுக்க ஏத்த மாதிரி கடையைத் தான் தேடிப் போறது. எங்கடை வயதுக்காரர் ஆனால் அவை boss. நாங்கள்சைக்கிளை உருட்டிக் கொண்டு போய் கடையில விட எங்களைக் கண்டாலும் busy மாதிரி கவிட்டு வைச்ச பழைய wheel spoke க்குள்ள சில்லை வைச்சு பக்கிள் எடுக்கிறவங்கள் , காத்தடிக்கப் பொம்பிளைப் பிள்ளைகள் வந்தால் எழும்பி ஓடிப்போய் உடனயே கவனிப்பாங்கள் . கவனிப்பு சைக்கிளுக்கும் ஆளுக்கும் பலமாய் இருக்கும் . அடிக்கடி இந்த கதை நடக்கும்; “ என்ன கனநாளா காணேல்லை “ “ ஏன் சும்மா சும்மா வாறதே “ “அண்டைக்கு ஆரோ பெடியன் பின்னால வந்தான்” “ எனக்கு அப்பிடி ஒருத்தரும் இல்லை“ ( confirmation) காத்தடிச்சிட்டு ,பக்கத்தில நிண்ட சைக்கிளில இருந்து வால்கட்டையின்டை capபைக் கழற்றி பூட்டீட்டு “ இது இல்லாட்டி மண் போய் அடைச்சிடும் “ எண்டு சொல்லி, அதோட பிறேக்கையும் சரிபாத்திட்டு விட; “ எவ்வளவு” “சீ காசு வேணாம் , அடுத்த முறை பாப்பம் “ சொல்லாத thank you சிரிப்பை வாங்கிக் கொண்டு வந்து எங்களைக் கவனிக்காமல் திருப்பியும் buckle எடுக்கத் தொடங்குவாங்கள். இதை கவனிச்சும் இல்லாத மாதிரி, “ கழுவிப் பூட்டேக்க எதையும் மாத்திப் போடுவான்“ எண்டு அம்மா சொன்னதால, நாள் முழுக்க கடையிலயே இருந்து; லாபம் பாத்து சாமாங்களை வேண்டித் தாறம் எண்டு சொல்லி , ஒரு போத்தில் மண்ணெண்ணை , இருவது ரூவாக்கு கிறீஸ், ரெண்டு சைசில ஐம்பது சைக்கிள் போள்ஸ் எல்லாம் வாங்கிக் குடுத்து , கழட்டி வைக்கிறதை கவனமாப் பாத்துக் கொண்டிருந்து, கழுவிப்பூட்டிறவருக்கு கேக்காமலே ஒத்தாசையும் செய்தாத் தான் சைக்கிள் கெதியாக் கிடைக்கும். புதுசா வாங்கின சைக்கிள் ஆருக்கு நேந்ததோ தெரியேல்லை வாங்கி ஒரு வருசத்திலயே காணாமல் போக , ரெண்டு வருசமா பஸ்ஸில அலையவிட்டு வாங்கித்தந்தது தான் கழுவிப் பூட்டக் கொண்டந்த இந்தப் பழசு. இதாலயே பட்டப்பேரும் பழசு எண்டு வந்திச்சுது. நிண்டு கால் நோக இருக்க இடமில்லாமல் பெரிய கரியர் ஓட நிண்ட சைக்கிளை central ஸ்டாண்டில விட்டிட்டு அதில இருந்தபடி சாடயா கண்ணயர்ந்து விழப்பாக்க , “ தம்பி போய்ச்சாப்பிட்டிட்டு வாரும்” எண்டு சைக்கிள் கடைக்காரர் சொன்னார். ,“ இல்லை பரவாயில்லை இருந்து எடுத்துக்கொண்டே போறன்” எண்டு நம்பிக்கையில்லாமல் சொல்ல , அப்ப கொஞ்ச நேரம் இரும் நான் சாப்பிட்டிட்டு வாறன் எண்டு ஒரு மணிக்குப் போனவர் திருப்பி வர மூண்டு மணி ஆச்சிது. என்னை வைச்சு அடிக்கடி சின்னச்சின்ன வேலையும் வாங்கீட்டு பின்னேரம் வரை விடாக்கண்டனா என்னை சைக்கிள்கடைக் கொடாக்கண்டன் “ஆறு மணியாயீட்டுது இருட்டீட்டுது நாளைக்குப் பாப்பம் “ எண்டு சொல்லீட்டு சாமாங்களை உள்ள எடுத்து அடுக்க வேற வழியில்லாமல் வீட்டை போனன். ஒருமாதிரி அடுத்த நாள் சைக்கிளை எடுத்து உழக்கிக் கொண்டு போக செயின் கவரோட முட்டிற சத்தம் கேக்க ஒரு தட்டுத் தட்ட நிண்டிட்டுது சத்தம். எத்தினை சைக்கிள் ரோட்டில போனாலும் எங்கடை வேண்டிய ஆரும் சைக்கிளி்ல வாறதை தூரத்தில வரேக்கையே கண்டு பிடிக்கலாம். ஒவ்வொருத்தன்டை சைக்கிளுக்கும் ஒரு சத்தம் இருக்கும் வாறதை கண்டு பிடிக்க , மணி அடிக்கிற சத்தம் , பிரேக் பிடிக்கேக்க வாற சத்தம் , செயின் உரஞ்சிற சத்தம் எண்டு எல்லாச் சத்தங்களும் உதவி செய்யும் அதோட அவன் அரைக்குண்டீல ஓடிறானா, சீட் நுனீல இருந்து ஓடிறானா, காலை அகட்டி ஓடிறானா எண்டு ஓடிற ஸ்டைலிலேம் கண்டு பிடிக்கலாம். ரியூசன் வகுப்புகள் முடிஞ்சு பின்னேரம் எண்டால் பிரவுண் ரோட்டில குமரன் வீட்டு ஒழுங்கை முடக்கில சாத்தீட்டு நிக்க ஒவ்வொருத்தரா வருவாங்கள். வந்து வழமை போல அரட்டை தொடங்கும் . கடைசீல் நேற்றைக்க அடிச்ச செல் விண் கூவினதையும், யாரை யார் பாக்கிறாங்கள் எண்ட update ஓட கூட்டம் கலையும். ஒருநாள் இப்பிடித்தான் தேடிப்போனா குமரனைக் காணேல்லை. அவன் உங்களோட தானே வந்தவன் எண்டு அம்மா சொல்ல, “டேய் அவன் நேற்றைக்கு சேகரோட ஒளிஞ்சு ஒளிஞ்சு கதைச்சவன் ஒரு வேளை இயக்கத்துக்குப் போட்டானோ” எண்டு பிரகாஸ் கேக்க “விசரே உனக்கு இவனாவது போறதாவது , வா கபிலன் வீட்டை போய்ப் பாப்பம்” எண்டு நவாஸ் சொல்ல போய்ப்பாத்தால் அங்கையும் இல்லை. காணேல்லை எண்டு ரோடு ரோடாத் தேட, கலட்டீக்க புதுசாத் திறந்த சைக்கிள் கடையில காத்துப் போகாத tyreக்கு காத்து அடிச்சும் வந்தவனுக்கெல்லாம் அடிச்சு விட்டு சமூக சேவை செய்து கொண்டு நிண்டான். ஏனெண்டு கேக்க அண்டைக்கு ரோட்டால போகேக்க பாத்துச் சிரிச்ச பிள்ளை இந்த இடத்தில தான் எங்கேயோ இருக்குதாம் எண்டான். கடைசீல இண்டைக்கு காணேல்லை நாளைக்கு ஒருக்கா வந்து பாப்பம் எண்டு எங்களோட வந்தான். இவனுக்கு அவனுக்கு மட்டும் இல்லை எங்கள் எல்லாருக்கும் சுழற்றித் திரிஞ்ச காலத்தில ஒண்டிறதுக்கு எண்டு ஒரு சைக்கிள் கடை இருந்தது. முதலில அந்தப் பிள்ளை இருக்கிற ஏரியாவில ஒருத்தனை friend பிடிச்சு , அவனோட போய் அவளின்டை வீட்டிக்கு கிட்ட இருக்கிற சைக்கிள் கடைக்காரனை friend பிடிச்சு , பிறகு ரியூசன் கொப்பியோட வெளிக்கிட்டு நேராச் சைக்கிள் கடையில போய் இறங்கினதும் உண்டு. தப்பித்தவறி தெரிஞ்ச ஆக்கள் வந்து கேட்டால், சைக்கிள் காத்துப் போட்டுது எண்ட பொய்யோட சமாளிக்கலாம். கடைக்காரனிற்கும் காத்தடிச்சு விட , சாவியை எடுத்துத் தர எண்டு காசில்லாமல் உதவி செய்ய ஒருத்தன் கிடைக்கிறதால பேசாம இருந்திடுவான். அப்ப சைக்கிள் கடை தான் கன பேரின்டை காதலை develop பண்ண உதவி செய்யிற கடையா இருந்திச்சுது. இப்ப சைக்கிளும் குறைஞ்சு , சைக்கிள் கடையும் குறைஞ்ச படியால் இப்பத்தைப் பெடியள் என்ன செய்யிறாங்களோ தெரியேல்லை. Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்.
  24. கடற்படையினருக்கு நாலு போத்தல் சாராயம் வாங்கிக் கொடுத்து இருப்பினம் அந்தக் கும்பல். இலங்கை இராணுவத்தினர் / கடற்படையினர் லீவு காலத்தில் தங்கள் சொந்த கிராமங்களுக்கு சென்று செய்யும் வக்கிரமான செயல்கள் பற்றி சிங்கள ஊடகங்களும், சில தமிழ் சமூகவலைத்தளத்தில் இயங்குகின்றவர்களும் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் பல, யாழில் பகிரக் கூசும் அளவுக்கான விடயங்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.