மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
மாவீரர் பற்றிய நினைவுக் குறிப்புகளை, மகத்தான தியாகங்களை எம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்போம். முக்கியமாக புலம்பெயர் நாடுகளில் இருக்கும் எம் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு புரிகின்றமாதிரி, ஏன் இவர்கள் போராட போனார்கள், எவ்வாறான சூழ்நிலையில் எம் ஊரும் அங்குள்ளவர்களும் இன்றும் அன்றும் இருந்தனர்/இருக்கின்றனர், எவ்வாறான தியாகங்களை இவர்கள் புரிந்தார்கள் போன்றனவற்றை அறியக் கொடுக்க வேண்டும். மாவீரர் தினத்துக்கு அஞ்சலி செலுத்தும் போது கண்டிப்பாக பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு போகுதல் வேண்டும். மாவீரர் பாடல்களை அவர்களுக்கும் கேட்கும் விதமாக போடவேண்டும்