Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • Posts

  13,698
 • Joined

 • Days Won

  151

Everything posted by நிழலி

 1. நாக விகாரையில் பூசை நடந்ததாம்ரூபவாகினி சொல்லிற்றுஇனி என்ன?“காமினி ரீ றூம்” கதவுகள் திறக்கும்சிற்றி பேக்கரியும்சீனிச் சம்பலும்நகரப் பகுதியில் அறிமுகமாகும்புத்தன் கோவிலுக்கு அத்திவாரம் போடரத்வத்த வரக்கூடும்சிங்கள மகாவித்தியாலயம் திரும்ப எழுமா?எழலாம்.வெசாக் கால வெளிச்சக் கூட்டைஎங்கே கட்டுவார்?ஏன் இடமாயில்லை?வீரமாகாளியின் வெள்ளரசிற் கட்டலாம்முனியப்பர் கோவில் முன்றலிலும் கட்டலாம்பெருமாள் கோவில் தேரிலும்பிள்ளையார் கோவில் மதிலிலும் கட்டலாம்எவர் போய் ஏனென்று கேட்பீர்?முற்ற வெளியில் ” தினகரன் விழாவும்”காசிப்பிள்ளை அரங்கில் களியாட்ட விழாவும் நடைபெறலாம்.நாக விகாரையிலிருந்து நயினாதீவுக்கு பாதயாத்திரை போகும்.பிரித் ஓதும் சத்தம் செம்மணி தாண்டிவந்து காதில் விழும்.ஆரியகுளத்து தாமரைப் பூவிற்கு அடித்தது யோகம்.பீக்குளத்து பூக்களும் பூசைக்கு போகும்.நல்லூர் மணி துருப்பிடித்துப்போக நாகவிகாரை மணியசையும்.ஒரு மெழுகுவர்த்திக்காக புனித யாகப்பர் காத்துக்கிடக்க, ஆரியகுளத்தில் ஆயிரம் விளக்குகள் சுடரும்.எம்மினத்தின் இளைய தலைமுறையே, கண் திறக்காது கிடக்கின்றாய்.பகைவன் உன் வேரையும் விழுதையும் வெட்டி மொட்டை மரமாக்கி விட்டான். -புதுவை இரத்தினதுரை-
 2. தமிழகத்துக்கு மனமார்ந்த பாராட்டுகள். தென் மானிலங்கள் முதல் இரண்டை பிடித்ததும் காவிக் கட்சியின் கோட்டையான குஜராத் 10 ஆம் இடத்தில் நிற்பதும் மகிழ்ச்சியான விடையங்கள்.
 3. "இஞ்ச பாரு, பிள்ளைகள் தோளுக்கு மேல் வளர்ந்த பிறகும் இதுகள் ஒன்றாக படுக்குதுகள்" என்று 40+ அல்லது 50+ ஆன தம்பதிகள் ஒன்றாக ஒரு அறைக்குள் படுப்பதை பார்த்து நக்கலடிக்கும் மனிதர்களை அடிக்கடி காண்கின்றோம். வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் வீட்டில் கணவனும் மனைவியும் ஒரே அறையில் படுப்பதை கூட தவறு என்று சொல்லுகின்றவர்களையும் கொண்ட சமூகமாக இருக்கின்றோம். 50+ ஆன தாய் தந்தையரை ஊரில் இருந்து அழைத்து வந்து விட்டு, அம்மாவை ஒரு பிள்ளையும் அப்பாவை இன்னொரு பிள்ளையும் பொறுப்பெடுத்து தத்தம் வீடுகளுக்கு கொண்டு சென்று பிரித்து வைப்பதைக் கூட எம் புலம்பெயர் நாடுகளில் கண்டிருப்போம் (இவ்வாறு பிரித்து வைத்து இருக்கும் இருவரை நட்பு வட்டாரத்தில் காண்கின்றேன்). இவ்வாறான செயல்களுக்கும் எண்ணங்களுக்கும் அடிப்படையே காமம் ஒரு குறிப்பிட்ட வயதின் பின் தவிர்க்கப்படல் வேண்டும் என்ற தவறான கற்பிதம் தான். அந்தக் கற்பிதங்களை உடைத்தெறிய இவ்வாறான கட்டுரைகளும் அவசியம். காமம் உணவு போன்றது. 40 அல்லது 50 வயது வரைக்கும் நல்லா சாப்பிட்டு விட்டோம் என்பதற்காக புதிய ருசியான உணவை நாம் தவிர்ப்பது இல்லை. எத்தனை முறை சாப்பிட்டாலும் பசி எடுக்கும் போது உணவு தேவைப்படுவது போன்றதுதானே காமமும். சாப்பிடும் அளவுகள் மாறுபடலாம், ஆனால் பசி எப்போதுமே தன்னை போக்க உணவை தேடும். என்னைப் பொறுத்தவரைக்கும் 20 வயதுகளில் தோன்றும் காமம் T20 match போன்றது. கனக்க சிக்ஸர்கள் அடிக்கலாம், ஆனால் நிதானித்து விளையாட முடியாததுடன் விரைவில் அவுட் ஆகி மைதானத்தை விட்டு வெளியேறி விடவேண்டி வந்து விடும். 30 வயதுகளின் பின் தோன்றும் காமம் One day match போன்றது. வேகமாக விளையாடிக் கொண்டு இருக்கும் போது இடைக்கிடை நிதானமாகவும் விளையாடும் match இது கெதியன அவுட்டாக சந்தர்ப்பம் இதிலும் அதிகம். ஆனால் 40+ பின் வரும் காமம் தான் Test match போன்றது. நின்று நிதானித்து ஒவ்வொரு பந்தாக அவதானித்து புரிந்து நின்று ஆடலாம். விரைவில் அவுட் ஆக சந்தர்ப்பம் குறைவு. சக batsman இன் உணர்வுகளையும் தெளிவாக புரிந்து ஆடும் அருமையான ஆட்டம் இது. இப்படிக்கு நிழழியானந்தா ஜீ
 4. 1991 ஆம் ஆண்டு இலங்கை அரசு, விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளுக்கான பொருளாதாரத் தடையை விதித்தது. அதன்படி எரிபொருள் வரத்துத் தடைப்பட்டது. எரிபொருள் தடைப்பட்டால், விவசாயம் நேரடியாகப் பாதிக்கப்படும். இதனால் பட்டினியால் வாடும் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு வழிக்கு வருவார்கள் என்பதே அரசின் திட்டம். இந்தத் திட்டத்தைப் புலிகள் எப்படி முறியடித்தனர் என்பதை அவ்வியக்கப் போராளியொருவர் 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த தினசரியொன்றில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார். “...உழவு இயந்திரத்தின் தேவையை எமது சொந்த வளத்தால் மாற்றீடு செய்ய நாம் யோசித்தோம். வன்னிப் பிராந்தியத்தின் இன்னொரு பெரும் வளமான காளை மாடுகளைப் பயன்படுத்த எண்ணினோம். இதன்படி 1991 ஆம் ஆண்டு ஆடி, ஆவணி மாதங்களில் 200 சோடி காளை மாடுகளை உழவிற்குப் பழக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நல்ல முறையில் செயற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் பயனாக, உழவு இயந்திரம் – உதிரிப்பாகங்கள், எரிபொருள் ஆகியவற்றின் கொள்வனவிற்காகச் செலவிடப்படும் பல கோடி பணம் எமது பிரதேசத்திற்கு வெளியில் செல்வது தவிர்க்கப்பட்டது. கூலி விவசாயிகள் அதிமாகத் தொழில் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இதன் மூலம் அவர்களின் குடும்ப வாழ்க்கை மேம்படுகிறது. இதுவரை காலமும் வெறும் இறைச்சிக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த காளை மாடுகளின் பெறுமானம் உயர்ந்துள்ளது. இந்த விலை அதிகரிப்பின் பயனை விவசாயிகளான கால்நடை உரிமையாளர்களே பெறுவர். உழவு மாடுகளிற்கு திடீரென ஏற்பட்ட வரவேற்பை அவதானித்த தனிப்பட்ட விவசாயிகள் நிலமையை உணர்ந்து கொண்டு தாமாகவே காளை மாடுகளை உழவிற்கு பழக்குவதற்கு தொடங்கினார்கள். இதன் மூலம் தேசத்தின் தேவையை உணர்ந்து – தன்னம்பிகையுடன் எமது விவசாயிகள் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள்....” இந்த முயற்சிதான், 2006 ஆம் ஆண்டு வரை வன்னிக்குள் அரிசியின் விலையை 16 ரூபாவுக்கு மேல் அதிகரிக்காமல் வைத்திருந்தது. உள்ளூர் வளத்தை மிகச் சரியாகக் கணிப்பிட்டு அதனைச் சரியாக – வினைத்திறனோடு பயன்படுத்தியன் விளைவினால்தான் வன்னிப் பெருநிலம் நிமிர்ந்த நின்றது. இந்த நிமிர்வுக்கு தியாக மனப்பான்மையுடன் கூடிய அர்ப்பணிப்பே முதுகெலும்பாக இருந்தமையை யாரும் மறுக்க முடியாது. எனவே சுதேசிய பொருளாதாரத்தில்தான் நிற்கப்போகிறோம் எனப் போராடும் தேசங்கள் முதலில் மக்கள் நலன்சார் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு கடுகளவிற்காவது தியாக மனப்பான்மை வேண்டும். அதற்கு அடுத்து நம்மிடம் என்ன வளமிருக்கிறதென்பதையும், அதனை எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்பதையும் அனுபவசாலிகளிடமிருந்து கற்க வேண்டும். Jera Thampi | Facebook ஊடகவியலாளர் ஜெரா தம்பியின் முகனூலில் இருந்து எடுக்கப்பட்ட பதிவு
 5. ஒரு மனநோயாளி ஆட்சியாளனானால்...!? (கொழும்பின் கதை - 5) - என்.சரவணன் இலங்கையைப் பற்றி டச்சு மொழியில் பதிவு செய்தவர்கள் சிலர் இலங்கையைப் பற்றி அவ்வளவு இழிவாக பதிவு செய்திருக்கக் கூடும். அல்லது அப்படி இழிவாக பதிவு செய்திருப்பதை மட்டும் வுயிஸ்ட் பார்த்திருக்கக் கூடும். எனவே தான் வுயிஸ்ட் இலங்கையர்கள் பற்றிய மட்டமான எண்ணங்களைக் கொண்டிருந்தார். பல நூல்களில் வுயிஸ்ட் ஒரு மனநிலை பிறழ்ந்து இருந்ததற்கான அறிகுறிகள் இருந்தன என்றே குறிப்பிடுகின்றன. பிரபல டச்சு வரலாற்றாசிரியர் குடீ மொல்ஸ்பெர்கன் (E.C.Godée Molsbergen) எழுதிய “Tijdens de O.-I. Compagnie” என்கிற டச்சு மொழி நூலில் 47 வது அத்தியாயம் வுயிஸ்டின் ஆட்சியைப் பற்றி எழுதியிருக்கிறார். அவ்வத்தியாயத்துக்கு அவர் வைத்திருந்த தலைப்பு “De krankzinnige Gouverneur” (பைத்தியைக்கார கவர்னர்) என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த நூலில் வுயிஸ்ட் மேற்கொண்ட அட்டூழியங்கள், சித்திரவதைகள் பற்றியெல்லாம் விலாவாரியாக மூன்று அத்தியாயங்களில் விளக்கப்பட்டிருக்கிறது .(1) வுயிஸ்ட் காயங்களினால் வெளியாகும் இரத்தத்தைப் பார்த்து இன்பமடைந்தார். இரவு விருந்துக்காக கொண்டுவரப்படும் விலங்குகளை இறைச்சியாக கொண்டு வராமல் உயிருடன் அவற்றைக் கொண்டு வந்து அவற்றை தீயில் இடும் போது கேட்கும் சத்தத்தில் இன்பமடைந்தார். Sadist என்கிற துன்பூட்டுவேட்கை மிகையாகவே அவரிடம் இருந்தது. அது போல பாலியல் இன்பத்தையும் அப்படித்தான் அவர் அனுபவித்தார். ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த ஏனையோரும் வுயிஸ்டின் இயல்பையும், போக்கையும் பற்றி உணர்ந்துகொண்டனர். தன்னைப் பற்றிய மிகை மதிப்பு அவரிடம் இருந்தது. அவரின் ஆட்சி காலத்தில் கடும் தண்டனைகளை நிறைவேற்றினார். நீதியற்ற முறையில் விசாரணைகளை நடத்தினார். டச்சு காலத்தில் 1658 வரை காலி தான் இலங்கையின் தலைநகராக இயங்கியது. 1658 இலிருந்து தான் கொழும்பு தலைநகராக ஆனது. ஏனென்றால் கொழும்பு 1656 இல் தான் போர்த்துகேயரிடமிருந்து ஒல்லாந்தர் கைப்பற்றினர். அப்போது டச்சு காலத்து ஆளுநர் வாசஸ்தலமாக இருந்தது இப்போது கொழும்பு கோட்டை புலனாய்வுப்பிரிவு தலைமையகத்துக்கு பின் புறமுள்ள புனித பீட்டர் தேவாலயம். போர்த்துகேயர் அதுவரை ஒரு தேவாலயமாக பயன்படுத்திவந்த அழகிய கட்டிடத்தைத் தான் தமது வாசஸ்தலமாக மாற்றிக்கொண்டார்கள். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் இன்று கொழும்பு துறைமுகத்தின் பிரதான வாயிற் பகுதிக்கு எதிரில் இருக்கும் Grand Oriental Hotelக்கு வலது புறமாக அந்த தேவாலயம் இன்றும் இருக்கிறது. ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்றிய சில ஆண்டுகளில் 1804 இல் அதனை தமது படையினர் வழிபடுவதற்காக St Peter’s Church ஆக ஆக்கினார்கள். ஆளுநர் வுயிஸ்ட்டின் வாசஸ்தலமாகவும் இது தான் இருந்தது. வாசஸ்தலத்திலிருந்து அருகாமையில் தான் காலிமுகத்திடலும் இருக்கிறது. இதுவும் படைமுகாம்கள், நிர்வாக இயந்திரம் அனைத்தும் அன்றைய கொழும்பு கோட்டைக்குள் தான் இருந்தன. தண்டனைகளை பகிரங்கமாக நிறைவேற்றும் இடமாக அன்று காலிமுகத்திடலை பயன்படுத்திக்கொண்டார் ஆளுனர். அங்கே நிரந்தமாக தூக்குமேடை இருந்தது. தூக்கிடுவதை நிறைவேற்றுகின்ற அலுகோசுமாரும் நிறைந்தமாக அங்கே பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்கள். கசையடி, சுட்டுக் கொல்வது உட்பட பல அங்கே தண்டனைகள் அங்கே நிறைவேற்றப்பட்டன. அதை வேடிக்கை பார்ப்பதற்கு பல மனிதர்கள் காலிமுகத்திடலில் கூடினார்கள். தூக்கிடப்பட்டவர்களின் பிணங்கள் நாய்கள் பிய்த்துத் திண்ணுவதும், அழுகி சிதைந்து சின்னாபின்னமாகி நாற்றமெடுக்கவும் செய்தன. அதுபோல அப்படி கொல்லப்பட்டவர்கள் அதே காலிமுகத் திடலிலேயே அடக்கமும் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுவெல்லாம் வுயிஸ்டுக்கு முன்னரே நிகழத் தொடங்கிவிட்டன. (2) வுயிஸ்ட் மிக மோசமான அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார். அவரின் ஊழலும் துஷ்பிரயோகமும் நீதித்துறையைக் கூட பாதித்தது. ஆளுநரின் பிழையான வழிகாட்டுதலின் மூலம் டச்சு சிவில் அதிகாரிகளும், படையில் அதிகார மட்டத்தில் இருந்தவர்களும் சாதாரணர்களும் கூட மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். டச்சு ஆட்சியில் கொழும்பை மையப்படுத்தி ஆட்சி செய்யத் தொடங்கியபின் குற்றவாளிகளுக்கு தண்டனையளிக்கும் களமாக காலிமுகத் திடல் இருந்தது. ஆட்சிக்கவிழ்ப்பு பீதியின் விளைவு வுயிஸ்ட் தனக்கு எதிராக ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதிமுயற்சி பற்றிய ஒரு வதந்தியை நம்பினார். அதைப் பற்றிய அதீத பீதியாலும் கற்பனைகளாலும் அவர் இந்த சதி முயற்சி குறித்து சந்தேகப்பட்டவர்களை எல்லாம் கைது செய்து அடைத்தார். காலி கோட்டையில் அன்று தளபதியாக இருந்த யொவான் பால் ஷாகென் (Joan paul schaghen) குற்றவியல் விசாரணைக்கு நடத்தப்பட்டு மோசடி குற்றமும் சுமத்தப்பட்டார். அவரை நீக்கி கொழும்பு கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். பணியில் இருந்த சில முக்கிய போதகர்களும் இன்னும் சில அதிகாரிகளும் கூட பணிநீக்கம் செய்யப்பட்டு பத்தாவியாவுக்கு அனுப்பப்பட்டனர். அதேவேளை தனது ஆக்கிரமங்களை அவர் மேலும் அதிகரித்தார். 1729 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காவலர்களை ஓய்வில்லாமல் வேலை வாங்கினார். இரவுக் காவலுக்கு திடீர் என்று எழுப்பப்பட்டு வேலைவாங்குவது வழமைக்கு கொண்டுவரப்பட்டது. அது இரவு நேரக் கொள்ளையைத் தடுப்பதற்காக என்று அவரால் அறிவிக்கப்பட்டது. தூக்கமிழந்த இராணுவத்தினர் தமது எதிர்ப்பை வெளியிடத் தொடங்கினார்கள். அப்படி எதிர்த்தவர்கள் அனைவரும் தடியால் தாக்கப்பட்டார்கள் அதன் பின்னர் கொழும்பு கரையோரத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல்களில் சிறைவைக்கப்பட்டார்கள். அவருக்கு எதிராக வளர்ந்து வந்த எதிர்ப்புகளை காலப்போக்கில் அவர் தனக்கு எதிரான அரச கவிழ்ப்பு சதியென நம்பத் தொடங்கினார். தான் நம்பிய புனைவுக்கு உருவகம் கொடுத்து காண்பவரையெல்லாம் சந்தேகம் கொள்ளும் மனநோய்க்கு ஆட்பட்டார். அவருக்கும் கிழக்கிந்திய கம்பனிக்கும் எதிராக சதி செய்வதற்காக உளவு பார்க்கும் ஒரு பரந்த வலையமைப்பு இயங்கியதாக அவர் நம்பினார். அப்படிப்பட்ட சந்தேகநபர்களை வரிசையாக தண்டித்தார். அவர்களை விசாரிப்பதற்காக ஒரு இராணுவ நீதிமன்றத்தை கொழும்பில் அமைத்தார். கிழக்கிந்திய கம்பனியின் எந்த அனுமதியுமின்றி விசேட இராணுவ நீதிமன்றத்தை (Blood council) அமைத்து அங்கே விசாரணைகளை நடத்தினார். அவரே அந்த விசேட நீதிமன்றத்தின் தலைவராகவும் தன்னை ஆக்கிக்கொண்டார். இந்த நீதிமன்றத்தின் மூலம் ஏராளமான டச்சு இராணுவத்தினரும், டச்சு பணியாளர்களும் கூட தண்டிக்கப்பட்டனர். குறுகிய காலத்தில் அவர் ஒரு மிக மோசமான சித்திரவதைகளை செய்கிற ஒரு சாடிஸ்ட் ஆட்சியாளராக ஆனார். உண்மைகளை வெளிக்கொணர்வது என்கிற பேரில் அவர் மிகவும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகளை மேற்கொண்டார். நகங்களைப் பிடுங்குதல் மற்றும் சூடான மெழுகை உடலில் ஊற்றுதல், காயச் சிதைவுகளில் அரிப்புகளைப் பயன்படுத்துதல், கால்களின் எலும்புகளையும் உடைத்தல் மட்டுமன்றி சந்தேக நபர்களின் தலைகளைத் துண்டிப்பது வரை அவர் அட்டூழியம் செய்தார். காலிமுகத்திடலை ஒரு கொலைக்களமாகவே ஆக்கினார். சில அழகிய யுவதிகள் காணாமல் போனார்கள். குற்றவாளிகள் மர்மமான முறையில் சாவடைந்தார்கள். இதை பற்றிய கதைகள் நாட்டுக்குள்ளும் அரசல்புரசலாக கதைகள் உலவின. கேள்வி கேட்ட அதிகாரிகள் பதவியுயர்களால் சலுகைகளாலும் வாயடைக்கபட்டார்கள். இந்த மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் பற்றிய விபரங்களும், அறிக்கைகளும் தொடர்ச்சியாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒல்லாந்துக்கு சென்றடைந்தன. 1727 யூன் 7 அன்று இலங்கையில் இருந்த டச்சு அரசியல் சபையால் இரகசிய முறைப்பாடு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் பத்தாவியா தலைமையகம் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதன் பின் அதே மாதம் 30 ஆம் திகதி இன்னொரு முறைப்பாடும் சென்றது. ஆனால் வுயிஸ்ட் தனது ஆட்சியில் உள்ள வளர்ச்சியை அறிக்கையாக அனுப்பினார். குறிப்பாக அவர் சென்றதன் பின்னர் மிளகு உற்பத்தி எந்தளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது என்பது பற்றியெல்லாம் அறிக்கை எழுதினார். அவரின் காலத்தில் மிளகு உற்பத்தி விவசாயிகளின் நிலங்களில் ஒரு பகுதி டச்சுக் கம்பனியிடம் ஒப்படைக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். இதன் பின்னர் ஓகஸ்ட் மாதமும் விரிவான ஒரு இரகசிய முறைப்பாடு அவருக்கு எதிராக அனுப்பப்பட்டது. அதில் வுயிஸ்ட் நடத்தும் காட்டுத் தர்பார் பற்றிய விபரங்கள் அடங்கியிருந்தன. தொடரும் உசாத்துணை E.C.Godée Molsbergen, Tijdens de O.-I. compagnie, Amsterdam, Swets, 1932. වජිර ලියනගේ - ඕලන්දයේදී එල්ලා මැරූ ලංකාවේ සිටි ඕලන්ද ආණ්ඩුකාරයා, லங்காதீப – 13.06.2018 (இக்கட்டுரையில் வுயிஸ்ட் ஒல்லாந்தில் மரணதண்டனை அளிக்கப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருகிறது. ஆனால் அவர் பத்தாவியாவில் தான் மரண தண்டனை அளிக்கப்பட்டார்) நன்றி - தினகரன் 28.11.2021 https://www.namathumalayagam.com/2021/11/ColomboDutch.html?fbclid=IwAR143w7JET4seBGxwc7D1O1vyts1xycbaXVOYUD2-xNe1bDFtaDwQrIHCuw
 6. அநாமதேய இணையத்தளத்தில் இருந்து ஊர் புதினம் பகுதியில் இணைக்கப்பட்ட செய்தி ஒன்று மட்டுறுத்துநர் பார்வைக்கு நகர்த்தப்படுகின்றது.
 7. இறந்த தம் பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்த சென்றவர்கள் மீது ஏவப்படும் அதிகாரம்!
 8. கடைசியில் அல்ல. ஆரம்பத்தில் இருந்தே இந்தியா ஒரு போதும் தமிழ் மக்களின் நலன்களுக்கு உதவியாக இருக்காது என்று எழுதி வருகின்றேன். இது யாழில் எழுதக் தொடங்கிய காலத்தில் இருந்து அல்ல, இலங்கையில் சரிநிகர் பத்திரைகையில் எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து.
 9. இந்தியாவும் தமிழர் வியத்தில் ஒரு போதும் தன் துரோக அரசியலில் இருந்து மாறப் போவதில்லை. தமிழர்கள் சீனா உட்பட பிற வல்லரசுகளுடன் தம் உறவை வளர்த்தால் மட்டுமே குறைந்த பட்ச தீர்வாவது கிடைக்கும். கஜேந்திரகுமார் இந்தியாவுக்கு வெள்ளை அடிப்பதை விட்டுவிட்டு இப்படியான விடயங்களில் இனியாவது ஈடுபட்டால் நல்லது.
 10. நன்றாக உள்ளது வளவன். என் ஒரு சின்ன அவதானிப்பு என்னவெனில், இதில் இருக்கும் உதய சூரியன் அரசியல் கட்சிகளை நினைவுபடுத்துகின்றது தமிழர் விடுதலைக் கூட்டணி சின்னமும் தமிழக கட்சி திமுகவின் சின்னமும் உதய சூரியன்.
 11. காலிமுகத்திடலை கொலைக்களமாக ஆக்கிய ஆளுநர் வுய்ஸ்ட்! (கொழும்பின் கதை - 4) - என்.சரவணன் Johannes Hertenberg இலங்கையின் 19 வது டச்சு ஆளுநர். அவர் 12.01.1725இலிருந்து 19.10.1725 வரை ஆளுநராக இருந்தார். பதவியில் இருக்கும் போதே கொழும்பில் திடீர் மரணமானார். அவரின் கல்வெட்டு இன்னமும் வுல்பெண்டால் தேவாலயத்தில் உள்ளது. அவரின் திடீர் மறைவைத் தொடர்ந்து அவசரமாக ஆளுநராக அனுப்பப்பட்டவர் தான் பேதுருஸ் வுயிஸ்ட் (Petrus Vuyst 1691 -1732).(1) தனக்கு ஒரு பெரிய நாட்டை ஆளத்தரவில்லை என்கிற ஏமாற்றத்துடனும், எரிச்சலுடனும் 1726 ஆம் ஆண்டு ஆளுநராக இலங்கை வந்து சேர்ந்தார். ஒரு கையால் தன் ஒரு கண்ணை மறைத்தபடி தான் அவர் எதிரிலுள்ளவர்களை விழிப்பார். இந்த சிறிய நாட்டு முட்டாள்களைப் பார்ப்பதற்கு ஒரு கண்ணே போதும் என்பது தான் அவரின் விளக்கம். மூன்றே மூன்று ஆண்டுகள் தான் அவர் இலங்கையை ஆட்சி செலுத்தினார்.(2) 1729 வரையான அந்த மூன்றாண்டுகளுக்குள் அவர் மேற்கொண்ட அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஒல்லாந்து ஆட்சியை டச்சு ஆட்சி என்றும் அழைப்போம். அன்றைய ஒல்லாந்து காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு அரச ஆக்கிரமிப்பாக நிகழவில்லை. வர்த்தக, வியாபார கம்பனியாகத் தான் நாடுகளைப் பிடிப்பதையும், வர்த்தகம் செய்வதையும், ஆட்சி செய்வதையும் புரிந்தனர். குடியேற்றவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக டச்சு அரசாங்கத்தால் அனுமதிபெற்ற அன்றைய பல்தேசிய நிறுவனம் என்று கூறலாம். உலகின் முதலாவதுபல்தேசிய கம்பனியும் (Multi-national company) அதுதான். அக் கம்பனியின் மீது ஒல்லாந்து அரசின் அனுசரணையும், அதிகாரமும் இருந்தது. அரசு அதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருந்தது. அவ்வரசு பெரும்பகுதி வரியைப் பெற்றுக்கொண்டது. சுமார் 450 வருடங்களாக இலங்கையை ஆக்கிரமித்து தலா சுமார் ஒன்றரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்த மூன்று நாடுகளும் கம்பனிகளின் மூலம் தான் இந்த ஆக்கிரமிப்புகளை நிகழ்த்தின. உதாரணத்துக்கு: போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி (Portuguese East India Company), போர்த்துக்கீச கம்பனியை ’Vereenigde Oost-Indische Compagnie’ (United East India Company)என்றும் கூறுவார்கள் டச்சு கிழக்கிந்தியக் கம்பனி (The Dutch East India Company (VOC)), பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி (British East India Company) என்கிற நிறுவனங்களை நினைவுக்குக் கொண்டு வரலாம். இலங்கையைப் பொறுத்தளவில் முதலாவது ஆங்கிலேய ஆளுநராக பிரடறிக் நோர்த் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனியிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்து முழுமையாகவும், நேரடியாகவும் பிரித்தானிய முடியின் கீழ் இலங்கையைக் கொண்டுவந்தார். போர்த்துக்கேயரிடம் இருந்து இலங்கைக் கைப்பற்றிய ஒல்லாந்தர்கள் 1640–1796 வரை சுமார் 156 ஆண்டுகள் ஆண்டார்கள். இன்னமும் சொல்லப்போனால் போர்த்துகேயரை விட, ஆங்கிலேயர்களை விட அதிகமான காலம் ஆண்டவர்கள் ஒல்லாந்தர்கள் தான். அவர்களின் ஆட்சிக்காலத்தில் மொத்தம் 42 ஆளுநர்கள் ஆண்டிருக்கிறார்கள். அவர்களில் 24 வது ஆளுநர் தான் இந்த பேத்ருஸ் வுயிஸ்ட். 1723 இல் ஆளுநர் ரம்ப் (Isaak Augustijn Rumpf) தனது அலுவலகத்தில் திடீர் என்று இறந்து விடுகிறார். அடுத்த மூன்று ஆண்டுகள் ஒவ்வொரு வருடமும் ஆர்னோல்ட் (Arnold Moll -1723 இல்), யோஹன்னஸ் (Johannes Hertenberg -1724இல்)(3), ஜோன் போல் (Joan Paul Schaghen – 1725இல்)(4) மூன்று ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு நிரந்தர ஆளுநரை நியமிப்பதில் இருந்த இழுபறியின் போது தான் அந்த இடத்துக்கு பேத்ருஸ் வுயிஸ்ட் (Petrus Vuyst) விண்ணப்பித்திருந்தார். பேத்ருஸ் வுயிஸ்ட் வாழ்க்கைப் பின்னணி வுயிஸ்ட் பத்தாவியாவில் இருந்து தான் வந்தார். அன்றைய பத்தாவியா (Bataviya என்பது இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள நகரம்) என்பது டச்சு கிழக்கிந்திய கம்பனியின் தலைமையகமாக இருந்தது. பல முடிவுகள் அங்கிருந்து தான் எடுக்கப்பட்டன. வுயிஸ்ட்டின் தந்தை Hendrik Vuyst டச்சு நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் தாய் Maria de Nijs இந்தோனேசிய ஜாவா பின்னணியைச் சேர்ந்தவர். தந்தை ஹென்றிக் வுயிஸ்ட் (Hendrik Vuyst (1656–1705)) கிழக்கிந்திய கம்பனியின் நீண்ட சேவைக்காலத்தைக் கொண்ட ஒரு அதிகாரி. வுயிஸ்ட் பிறந்ததும் பத்தாவியாவில் தான். 1691 இல் பிறந்த வுயிஸ்ட் தந்தையின் ஒல்லாந்து நாட்டில் தான் கல்வி கற்று தேறினார். கல்வியின் பின் ஒரு வரி வழக்கறிஞராக தொழிலைத் தொடங்கினார். ஒல்லாந்தைச் சேர்ந்த பார்பரா என்கிற பெண்ணை 1714இல் மணம் செய்துகொண்டார்.(5) பின்னர் 1717 இல் பத்தாவியா வந்து சேர்ந்த அவர் அங்கும் ஒரு வரி வழக்கறிஞராக கடமை புரிந்தார். பார்பராவின் குடும்பத்தினர் கிழக்கிந்திய கம்பனியில் செல்வாக்குள்ள குடும்பம் என்பதால் அதன் மூலம் வுயிஸ்ட்டும் பணியில் இணைந்து கொண்டார். 1721 இல் அவர் கிழக்கிந்திய கம்பனியின் கவுன்சிலுக்கு நியமிக்கப்பட்டார். 1722 இல் அவர் வங்காளத்துக்கு பொறுப்பான இயக்குனராக பொறுப்பேற்று இந்தியாவில் கடமையாற்றினார். இரண்டு ஆண்டுகளில் பத்தாவியாவுக்கு திருப்பி அழைக்கப்பட்டார். அங்கே அவருக்கு அரசாங்கத்தின் உயர் வழிகாட்டுனராக ஆனார்.(6) 1724 ஆம் ஆண்டு கவுன்சிலுக்கும் தெரிவானார். 1725 ஆம் ஆண்டு மே மாதம் அவர் நகரசபையின் தலைவராகவும் (president van Schepenen) தெரிவானார். சரியாக ஒரு வருடத்தில் அதாவது மே 1726 இல் அவர் இலங்கைக்கான ஆளுநராக நியமனம் பெற்று இலங்கை சென்றடைந்து செப்டம்பரில் இருந்து ஆதிகாரம் செலுத்தத் தொடங்கினார். அதன் பின் இலங்கையில் 1726 ஆம் ஆண்டு வுயிஸ்ட் இலங்கையின் கவர்னராக நியமிக்கப்படும்போது அவருக்கு முப்பது வயது தான் நிரம்பியிருந்தது. ஆரம்பத்தில் நல்லவராக வளர்ந்தாலும் இந்த பருவத்தின் போது அவர் மிகவும் குரூர குணம் உள்ளவராக மாறியிருந்தார். அவர் காலியை வந்தடைந்த போது ஒரு கண்ணை கறுப்புத்துண்டால் மூடியபடியே இருந்தார். அவரை வரவேற்ற ஒரு உயர் அதிகாரி அவரைப் பார்த்து உங்கள் கண்களுக்கு என்ன நேர்ந்தது என்று விசாரித்தபோது, இலங்கை போன்ற ஒரு சின்ன குட்டிமுட்டை நாட்டை ஆள்வதற்கு இரண்டு கண்கள் தேவையில்லை என்றும் ஒரு கண்ணே தனக்குப் போதும் என்று திமிராக கூறித்திருந்தார்.(7) அடுத்த வாரம்... அடிக்குறிப்புகள் 1727 இல் ஆளுநர் வுயிஸ்ட் வெளியிட்ட ஒரு ஆவணத்தின் அன்றைய தமிழ் கையெழுத்துப் பிரதியில் (Plakkaat) “பெதுருஸ் பொயிஸ்த்” என்றே குறிப்பிடுவதைப் பார்க்கலாம். இந்த ஆவணத்தின் விரிவான உள்ளடக்கம்; தனிநாயகம் அடிகளார் தொகுத்து, சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் 2014 இல் வெளியிடப்பட்ட “Tamil culture Vol.XI – 1964” என்கிற நூலில் எஸ்.தனஞ்சய ராஜசிங்கம் எழுதிய “A Phonological and Morphological Study of a Tamil Plakkaat” என்கிற கட்டுரையில் காணக் இருக்கிறது. Anczewska, Malgorzata , Sri Lanka, Singapore : APA Publications, 2015 19.10.1725 அன்று ஆளுநர் யோஹன்னஸ் திடீர் மரணமுற்றார். இன்றும் அவரது கல்லறை கல் வுல்பெண்டால் தேவாலயத்தில் காணலாம். ஜோன் போல் 19.10.1725 – 16.09.1726 வரையான ஒரே ஒரு மாதம் மட்டுமே தற்காலிக ஆளுநராக பதவி வகித்தார். A.K.A. Gijsberti Hodenpijl, De overgang van het bestuur van Ceylon van gouverneur Stephanus Versluys in handen van mr. diderik van Domburgh; 1732-1733, Nijh VI,, 1919. https://www.vocsite.nl/ David Hussly, Ceylon and World history II (1505 A.D. TO 1796 A.D), W.M.A.Wahid & bros, Colombo, 1932. நன்றி - தினகரன் 21.11.2021 https://www.namathumalayagam.com/2021/11/colomboVuyst.html?fbclid=IwAR3jOB_I6Rb2NgRBzBMGaKv4vReHOup1xY0u_Jx8a8HKt2Gck8c-T9nQbFU
 12. மீரா, எல்லா திரிகளிலும் பதியப்படும் எல்லா பதில்களையும் வாசிக்க எனக்கு விருப்பம் இருப்பினும், நேரம் கிடைப்பது இல்லை. அப்படி வாசித்தாலும் பின்னூட்டம் இட தோன்றுவதும் இல்லை. அப்படி தோன்றினாலும் உடனே பின்னூட்டம் இட்டு அதன் பின் அதைக் குறித்து வரும் பதில்களுக்கு பதில் சொல்ல நேரம் கிடைக்காது என தோன்றினால் பின்னூட்டம் இடுவதும் இல்லை. டொட்.
 13. கோத்தா எந்த விடயத்திலும் துறைசார் நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பதே இல்லை என்பது அவர் மீது ஏனைய எம் பிக்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளால் வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு. இது கொவிட் இரண்டாம் அலை தொடங்கியதில் இருந்து இரசாயன உரத்தை பயன்படுத்துவதை ஒரே அடியாக நிறுத்த சொன்னது வரைக்கும் தொடர்கின்றது. தன்னிச்சையாக, அனேகமான நேரங்களில் அவது பிரதர் பிரதமர் மகிந்தவுடன் கூட கலந்தாலோசிப்பது இல்லை.
 14. பகிர்வுக்கு நன்றி நுணா. மோசமான மொழிபெயர்ப்பு என்றாலும் கூட, இதை மொழிபெயர்த்து தமிழில் பதிவிட்ட தினக்குரலுக்கும் நன்றி. சிங்கள புத்திசீவிகளில் முக்கியமானவர் என்று போற்றப்படும் இந்த விக்டர் ஐவன் கூட, மகிந்தவின் முதலாவது ஆட்சியின் போது, இனப்படுகொலை மற்றும் இரசாயன ஆயுதங்கள் பாவித்து அடைந்த வெற்றியை போற்றி மகிந்த புகழ் பாடியவர். இனப்படுகொலையொன்றின் மூலம் ஈட்டப்படும் அமைதி என்பது ஒரு போதும் சாத்தியமாகாது என்ற விடயத்தைக் கூட உணராமல் தன் சிங்கள புத்தியை காட்டியவர். இப்ப கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்கின்றார்.
 15. கனவிலேம் நித்திரை ….. சாரத்தை இழுத்து தலையப்போத்த காலும், காலைப் போத்த காதும் குளிர்ந்திச்சுது. “அங்க பார் பக்கத்து வீட்டு அண்ணா இன்னும் நித்திரை கொள்ளாமல் இரவிரவாப் படிக்கிறான், நீ எழும்பாட்டி வாளியோட தண்ணியை ஊத்துவன்” எண்டு திட்டின படி அம்மா போனா. மழை பெய்யேக்க எழும்பீட்டு திருப்பி ஒருக்காப் ஐஞ்சு நிமிசம் படுக்கிறன் எண்டு படுக்கிற சுகம் இருக்குதே அது ……. . அப்ப மனிசியை சுழட்டேக்க ஒழங்கை வளிய நிண்டு மனிசியோட கதைக்கிற காலத்தில வந்து பத்து நிமிசத்திலயே மனிசி அவசரப்படும் “ யாரும் பாக்க முதல் வெளிக்கிடிறன் எண்டு” ஒரு ஐஞ்சு நிமிசம் எண்டு சொல்லிச்சொல்லி நிண்டு கதைக்கிறதும் அம்மாட்டை இதே dialog ஐ இன்னும் ஐஞ்சு நிமிசம் படுக்கிறன் எண்டு சொல்லி மழைக்குளிருக்க திருப்பித் திருப்பி படுக்கிறதும் கனவிலையும் இனிக்கும். ரெண்டும் வேற ஆனாலும் அது தாறது ஒரே சுகம் power nap மாதிரி. கிணத்தடீல கரியைத்தேடினா பல்லு மினுக்க காணேல்லை. கரிக்கட்டை துண்டை எடுத்து கொடுப்புப் பல்லால அருவல் நொருவல் ஆக்கீ மினுக்கீட்டு நிக்க , “நேற்றைக்கும் குளிக்கேல்லை இண்டைக்கு குளிச்சிட்டு வா “ எண்ட order வந்திச்சிது . நடுங்கி நடுங்கி தண்ணியை அள்ளி ஊத்தவா விடவா எண்டு ஒருக்கா யோசிக்க “ என்ன குளிக்கிற சத்தத்தைக் காணேல்லை எண்ட கிணத்தடி CCTV ஐ பாத்து கொண்டிருந்த குரல் வரவும் தண்ணி வாளி தலையில கவிண்டிச்சு. சூரியன் ஏற சுத்தி வர இருந்த மரம் இலைகளில இருந்து புகை ஆவியாக வர , நானும் ரஜனிகாந் மாதிரி வாயால விட்ட புகை வளையம் ஆகாமலே போச்சுது. முதல் வாளி மட்டும் குளிர மற்ற வாளி எப்படி சூடா இருக்கது எண்டு சந்தேகம் இடைக்கிடை வாறது , கன்னியா மாதிரி வெந்நீர் ஊத்து இருக்கிறதோ எண்டு எட்டியும் பாத்து இருக்கிறன் . சவக்காரம் எண்டது அப்ப தோயக்க மட்டுமே பயன் படுத்திறதெண்டு நாங்கள் நினைச்சபடியால் interval விடாமத் தான் குளிக்கிறது . குளிச்சிட்டு வீட்டுக்க போகேக்க ஒரு full body scan எடுத்து “ சாரம் நனையாமல் குளிக்கிறது உலகத்தில நீ ஒருத்தன் தான் , எப்பிடி முதுகில தண்ணியே படாம குளிக்கிறாய் “ எண்ட கன கேள்வி வாற படியால் குளிக்கேக்க சாரத்தை முழுசா நனையப் பண்ணிறதும் முதுகில தண்ணி ஊத்திறதும் முக்கியமன வேலையா இருந்தது . எனக்கென்னவோ அப்ப சுமந்த கன சுமைகளில மழை காலம் எண்டால் காலைக்கடனும் ஒரு சுமையா இருந்திச்சிது . காலைக்கடன்களை அடுத்த நாளுக்கு கடன் வைச்சு செய்யிறதும் இருந்தது குளிக்கிறது உட்பட. குளிக்கப் போகேக்க துவாயைக் கொண்டு போகாமல் குளிச்சிட்டு வந்து நிண்டு குளிருக்க நடுங்கேக்க துவாயைத்தாறவன் பாஞ்சாலியின் கண்ணன் மாதிரித் தெரிவான், “உன்னை ஆர் இப்ப தோயச்சொன்னது“ எண்டு “குளிக்கப்போ “ எண்ட வாயே பேசத்தொடங்கும். இதை எல்லாம் கணக்கெடுக்காம போக குசினிக்குள்ள இருந்து வெங்காயம் மிளகாய் போட்டுச் சுட்ட ரொட்டியும் சம்பலும் கொண்டு போன தம்பியைக் கண்டு alert ஆனன் ஏனெண்டால் பங்கீட்டில எல்லாருக்கும் ரெண்டு ரொட்டி தான் வாறது. நான் எப்பிடி மூண்டை எடுக்கலாம் எண்டு யோசிச்சுக் களைச்சுப் போய் கடைசி ஆயுதத்தை எடுத்தன்” அம்மான்டை ஒரு ரொட்டி எனக்கு” . மழை எண்டால் எல்லாருக்கும் பசிக்குமா இல்லை எனக்கு மட்டுமா , வயித்திக்குள்ள மழை meter இருக்கா எண்ட ஆராய்ச்சியைத் தவிர்தது அம்மாவின் பங்கில் பாதியை புடுங்கிச் சாப்பிட , பள்ளிக்கூடம் இல்லையாம் இண்டைக்கு புயல் கரையக்கடக்குதாம் எண்டு ஈழநாடு சொல்ல மீண்டும் தயார் ஆனேன் அடுத்த நித்திரைக்கு. நேற்றைக்கு கடலுக்கு ஆக்கள் போயிருக்க மாட்டினம் மூண்டு நாளைக்கு மழை இருக்கும் இண்டுக்கு கருவாட்டை வைப்பம் முருங்கைக்காய் இருக்கிதோ தெரியேல்லை , நாளைக்கு முட்டைக்ககறி எண்டு அம்மம்மா தன்டை department ஐ பற்றி கவலைப்பட்டா. மழை கொட்டத் தொடங்க அதை ஐன்னலுக்கால பாக்கத் தொடங்கினன். பெய்யிற மழைக்கும் ஓட்டால ஒழுகிற மழைக்கும் போட்டி வர, ஓட்டால ஒழுகிறதை வெல்ல , மழை அடை மழை யாகி ஓட்டு வெடிப்புக்களால நேர வீட்டுக்க இறங்கிச்சிது. வழமையா ஒழுகிற இடங்களில சட்டி வாளி எல்லாம் வைக்க சில புது வரவுகள் கூப்பிடாமல் உள்ள வந்தச்சிது. உவன் தான் அண்டைக்கும் பட்டம் விடிறன் எண்டு ஏறி நிண்டவன் எண்ட எட்டப்பனின் காட்டிக்கொடுப்பில் நான் மாட்டுப்பட , இல்லை இந்த மழைக்கு எல்லா இடமும் ஒழுகுது எண்டு ஆச்சியின் உதவிக்கரம் என்னைக் காப்பாத்திச்சுது. ஓழுகிற அளவுக்கு ஏத்த மாதிரி சட்டிகள் இடம்மாற, பழைய சாக்குகளும் வேட்டிகளும் அலுமாரிக்குள்ளால வெளீல வந்திச்சுது. சட்டையைப் போடு , குளிருக்க நிக்காத , சூடா இந்தப் பிளேன் ரீயைக் குடி , இந்தா போக்கிற bedsheet , பின்னேரம் பகோடா சுடுவம் , இரவுக்கு பாண் எண்டு அண்டைக்கு முழுக்க நல்ல நல்ல கருத்துக்கள் வர “ நல்லார் ஒருவர் அல்ல பலர் இருப்பதால் தான் இந்த அடை மழை எண்டு விளங்கிச்சுது. ஊறிற நிலத்துக்கு சாக்கும் துணியும் போட்டு மூட நிலத்திக்குப் போட்ட சிவப்புச் சாயம் சாக்குக்குக்கால பரவி காலில ஏறிச்சுது. நில ஈரம் இப்ப சிவரையும் ஊறத்தொடங்கிச்சுது. ஊறின சிவர் வெளி மழை வெள்ளத்தின் அளவு meter மாதிரி வெள்ளம் கூட உள்ளுக்க ஊறின சிவரின் உயரம் கூட இருக்கும் . கதவைத் திறந்தா மழைமட்டும் தெரிஞ்சது, வாசலில நனைஞ்ச கோழி என்னை நாளைக்கு வெட்டினாலும் பரவாயில்லை இந்த மழைக்கு வெளீல துரத்தாத எண்ட மாதிரிப் பாத்திச்சுது. கொஞ்சம் நனைஞ்ச காகம் மரத்திலேயே மழை படாத இடத்தை கண்டு பிடிச்சு் நீயும் காகக் குளியல் தானே குளிச்சனி எண்ட மாதிரி என்னைப் பாக்க நான் கவனிக்காம திரும்பினன். மழை பெய்யேக்க வாற சத்தம் எங்க இருந்து வாறதெண்டு ஆராய்ச்சி ஏன் யாரும் செய்யேல்லை எண்டு தெரியேல்லை. தகரக்கொட்டிலில விழுற சத்தம் சைக்கிள் கம்பி வெடி மாதிரி இருக்கும் ஆனால் காதுக்கு இதமா இருக்காது. முன் முத்தத்தில விழிற மழை ஒண்டோடொண்டு முட்டியும் தனியவும் நிலத்தில விழறது சோளம் வறுக்கேக்க பொரியிற மாதிரி சத்தம் இதமாயும் அந்த புழுதி மணமாயும் இருக்கும் . ஒரே மழையா இருந்தாலும் பகலில ரசிக்கிற ரசனையும் இரவில ரசிக்கிற ரசனையும் வேற , அதுகும் மனிசி மாதிரித்தான். இரண்டுமே பகலில் ஒரு சிலிர்ப்பையும் இரவில் கதகதப்பான அணைப்பையும் தரும். இரவு படுத்திருந்து ஓட்டில விழுகிற மழைச்சத்தம் கேக்கிறதும் home theatre இல ARR இன்டை பாட்டுக் கேக்கிற மாதிரி. நேர ஓட்டில விழுற மழை ஒரு சத்தம் , பக்கத்து அறை ஓட்டில விழிறது ஒரு சத்தம். சிவரில அடிக்கிற சாரல் ஒரு சத்தம், காத்து ஒரு சத்தம், காத்தில முறியப்போற மாதிரி ஆடுற மரம் ஒரு சத்தம், கூரையில ஓட்டைக்கால ஒழுகிறது ஒரு சத்தம் , அதோட சேந்து கத்திற மண்டுவம் ஒரு சத்தம் , பெய்யிற மழை அதுகும் stereo effect மாதிரி மழை கூடிக்குறையேக்க ஒரு சத்தம் எண்டு உண்மையான ஒரு இசை மழை கேக்கும் . இந்த சந்தங்களை கேட்டுக் கொண்டு படுக்க , முகட்டோடு மூலைக்கால விழுகிற ரெண்டு துளி காலில படும், அதுக்கு விலத்தி சிவரில சாய முதுகு பக்கம் ஒரு ஜஸ் அட்டை ஊரிற மாதிரி இருக்கும், இந்தக் குளிரோட காலுக்க ஒரு தலணியைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு போத்துப் படுக்க …. கனவே இல்லாமல் கனவிலேம் நித்திரை வரும். Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்.
 16. வளவன், கொரோனா தடுப்பூசி போட்டால் கொரனா வர மாட்டாது என்று எந்த தகுதிவாய்ந்த மருத்துவ / சுகாதார அமைப்புகளும் குறிப்பிடவில்லை. அவ்வாறு தடுப்பூசி போட்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகும் போது அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்று தான் கூறுகின்றனர். அதி தீவிர பிரிவில் அனுமதிக்கப்படும் அளவுக்கு அது பாரதூரமான நிலையை அடையும் வாய்ப்புகள் மிகக் குறைவு. ஒன்ராரியோவில் கொரோனா காரணமாக அதி தீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் இரண்டு டோசும் எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு ; ஆனால் பூச்சியம் அல்ல.
 17. ஒரு சிங்கள கட்சி ஒன்றின் தலைவர் இவ்வாறு சொல்வதைக் கேட்க ஆச்சரியமாக உள்ளது.
 18. இந்தக் கட்டுப்பாடு பிரித்தானியாவில் வழக்கத்தில் உள்ள வீசா கடனட்டைகளுக்கு மட்டுமே.
 19. ஏராளன், உள்ளூரில் / உள் நாட்டில் பதிவு செய்யப்பட்ட தொண்டு அமைப்பு ஒன்று வெளிநாட்டில் உள்ளவர்களின் நிதியையும் பொருளாதார உதவிகளையும் பெற்றுக் கொள்வது தொடர்பாக சட்ட மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் உள்ளதா தகுந்த வழக்கறிஞர்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள். இது முக்கியமான விடயம். எதிர்காலத்தில் உங்களதும் அமைப்பில் உள்ளவர்களதும் பாதுகாப்பு தொடர்பானது.
 20. இக் கோபுரமே படுகொலைகளை செய்த இராணுவத்தினரை போற்றுகின்ற கோபுரம். நான் ஒரு சிங்களவராக இருந்தால் மகிந்தவின் இந்த பேச்சு நிச்சயம் என்னைக் கவர்ந்து இருக்கும். இந்த உரையில் புலிகளால் எல்லைக் கிராமங்கள் தொடக்கம் கொழும்பு உட்பட சிங்களப் பகுதிகளில் சிங்களவர்களுக்கு எதிராக செய்ப்பட்டதாகச் சொல்லப்படும் படுகொலைகளை வரிசைப்படுத்தி விட்டு, இராணுவம் கொன்றழித்த பல இலட்சக்கணக்கான தமிழர்கள் பற்றி ஒரு சிறு குறிப்பும் இல்லாமல் அமைந்து முழுவதும் சிங்களவர்களை குஷிப்படுத்தும் உரையாக உள்ளது. தமிழர்கள் கூட்டாக படுகொலை செய்யப்பட்ட வல்வெட்டித்துறை, கொக்கட்டிசோலை, மயிலந்தனை, வந்தாறுமூலை, வாகரை, முள்ளிவாய்க்கால் என்று நீண்டு விரியும் கொலைக்களங்கள் பற்றி சிங்களவர்களுக்கும் சிங்கள தலைவர்களுக்கும் எந்தவொரு குற்றவுணர்ச்சியும் இல்லையென்பதும், தமிழர்கள் தம்மால் கொல்லப்பட மட்டுமே இலங்கையில் பிறந்தவர்கள் என்பதே சிங்களவர்களின் அடிப்படை மனநிலை என்பதையும் இந்த உரை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளது. தமிழர்களின் தோல்வியை பறைசாற்றும் இன்னுமொரு தாது கோபுரம் இது.
 21. சோகமான செய்தி.. ஆழ்ந்த இரங்கல்கள் நேற்று விளக்கீடு என்பதால் விளக்கு ஏதும் தீ பரவக் காரணமோ என சந்தேகம் வருகின்றது.
 22. ஒரு காலத்தில் கொழுப்புத்தான் உடலுக்கு தீங்கானது, சீனி மிக நல்லது என்று அரசும் ஊடகங்களும் சொல்லி, சீனி அதிகமாக தம் உணவில்/ தின்பண்டங்களில் உள்ளது என்று விளம்பரம் செய்து வருமானம் ஈட்டினர். இப்ப சீனி மிகக் கொடியது கொழுப்பு பரவாயில்லை என்று சொல்லி கொழுப்பை மட்டுமே உண்ணும் டயட் முறைகளை கொண்டுவந்து வருமானம் ஈட்டுகின்றனர். இதே போன்றது தான் கஞ்சா. அரசும் ஊடகங்களும் இது கொஞ்சம் பரவாயில்லை என்று விற்கின்றனர். நாளைக்கே இதை விட மோசமானது ஒன்றும் இல்லை என்று சொல்லி இன்னொன்றை ஊக்குவிப்பினர். நாங்கள் தான் பகுத்தறிந்து செயல்படல் வேண்டும்.
 23. இலங்கையில் கஞ்சா தடை செய்யப்பட்ட பயிர் என்பதால் கைது செய்கின்றார்கள். கனடாவில் இப்படித்தான் இருந்தது. ஆனால் தடையை நீக்கி சட்டபூர்வமாக்கி இப்பொழுது மதுக்கடைகள் போன்று பல இடங்களில் விற்கின்றார்கள். எதிர்காலத்தில் மது அருந்துவதைப் போன்று கஞ்சா அடிப்பதும் சாதாரணமான விடயமாகி விடும். அல்கஹோலால் உடலுக்கு நேரும் தீமையை விட கஞ்சாவினால் ஏற்படும் தீமைகள் குறைவு என்று சொல்கின்றனர். அத்துடன், மது அருந்தியவர்களால் இழைக்கப்படும் வன்முறைகள் மற்றும் பாலியல் அத்துமீறல்களை விட கஞ்சாவினால் குறைவு என்றும் சொல்கின்றனர். கஞ்சாவையும் அபின் போன்ற மோசமான போதைப் பொருட்களையும் ஒரே தராசில் வைத்து பார்க்க கூடாதாம். எனக்கு தனிப்பட்ட ரீதியில் கஞ்சாவை சட்டபூர்வமாக்கியதில் உடன்பாடில்லை. தற்போதைய லிபரல் அரசு மீதும் ருடோ மீதும் வெறுப்பு வரவழைத்ததில் கஞ்சாவை சட்டபூர்வமாக்கியது தான் முதன்மை காரணம் (ஆனால் இப்படி சட்டபூர்வமாக்கும் வேலையை முதலில் தொடங்கியது இன்றைய எதிர்க்கட்சியான கொன்சர்வேட்டிவ்)
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.