Everything posted by நிழலி
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
தாக்கியவர்கள் அல்ல... கேள்வி கேட்டவர்கள் மீதுதான் கோவம். நான் இறுதியில் உங்களை பற்றி எழுதியது நூற்றுக்கு நூறு விகிதம் சரி என்பதை நிறுவி விட்டீர்கள். ஒரு நுட்பமான கவிஞன் அரசியல் வாதியாக மாறும் போது, அந்த நுட்பங்களை எவ்வளவு சாமர்த்தியமாக பயன்படுத்தி பிழைப்புவாதியாக மாறுவான் என்பதை உங்கள் வாழ்வு எங்களுக்கு காட்டுகின்றது. நன்றி வணக்கம்
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
சபேசன், கவிஞருக்கு என்றைக்காவது தாயகம் போக வேண்டி தேவை இருக்கும் என்பதையும் அதற்காக எவரையும் நோகடிக்காமல் இருக்கும் தேவை இருப்பதையும் புரிந்து கொள்கின்றேன். அவ்வாறு தேவை இருப்பவர் தன் விடுதலைக்கு உழைத்தவர்களுக்கு பெரிய நன்றி என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம். பதிலாக மிக மோசமான மனித உரிமைகளை மீறியவர்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கவேண்டி வந்த தேவை என்ன? நீங்கள் சொல்வது போன்று, அங்கு கைது செய்யப்பட்டு பின் (காசு கொடுத்தோ கொடுக்காமலோ) விடுவிக்கப்பட்டவர்கள் பலரை எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் விடுதலையாகி வந்து மெளனமாகி இருக்கின்றார்களே ஒழிய, தன்னை நல்லவிதமாக நடத்தினார்களோ என்றோ நெஞ்சு வலியால் அவதிப்பட்டு ஆஸ்பத்திரியில் படுக்க போகும் போது ஒருவர் தன்னை கொலை செய்ய முனைந்தாரென்றோ, கோத்தாவை விட அவர் கொடியவர் என்றோ அறிக்கை விடவில்லையே? பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிரைக் குடித்தவர்கள் கையில் துப்பாக்கிகளுடன் நிற்கையில் அவர்கள் முன் நின்று "அம்மாவின் சமாதியைப் பார்க்க விடு அல்லது சுட்டுக் கொள்ளு" என்று ஆக்ரோசம் கொண்ட கவிஞர் பல்லாயிரம் மைல்கள் கடந்து அறிக்கை விடும் போது மட்டும் நிதானமாக இருக்கின்றார் என்பதை நம்பவேண்டும் என்கின்றீர்கள்.
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
வணக்கம் ஜெயபாலன் அண்ணா, மீண்டும் சுகமாக திரும்பி வந்ததையிட்டு மிக மகிழ்ச்சி. எங்கும் கலகக்காரனாக அறியப்பட்ட உங்கள் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. உங்கள் மீதான ஆயிரம் விமர்சனங்களுக்கும் அப்பால் உங்கள் கவிதைகள் எப்படி என்றுமே இனிமையாக இருக்கின்றதோ அதே போன்றே உங்கள் விடுதலையும் இனிமையான ஒரு விடயமாகவே எனக்கு என்றும் இருக்கும். ஆயினும் வந்து சேர்ந்த சோர்வு ஆறும் முன் நீங்கள் வெளியிட்ட முதல் அறிக்கையில் இருக்கும் உங்கள் அரசியல், அடக்கு முறைகளை - அது புலிகளின் அடக்கு முறைகளாக இருந்தாலும் சரி, இலங்கை பேரினவாதத்தின் அடக்கு முறையாக இருந்தாலும் சரி எதிர்க்கும் எவருக்கும் - உங்கள் அரசியலை ஆழமாக உணர்ந்தவர்களுக்கு அது பெரிய அதிர்ச்சியைக் கொடுக்காவிடினும் கூட - சிறிய அதிர்ச்சியையேனும் தரக்கூடிய ஒரு அறிக்கையாகவே பார்க்கப்படும் / பார்க்கப்படுகின்றது. உங்கள் கைதின் மூலம் சிங்கள அரசு தெளிவான பல செய்திகளை உலகுக்கு உணர்த்தி இருக்கின்றது. அவற்றில் முக்கியமானவை, புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து, அந்தந்த நாடுகளின் குடியுரிமை பெற்ற தமிழராகவோ அல்லது சிங்கள பேரினவாதத்தினை கேள்வி கேட்பவராகவோ இருந்தால் அவர்களை தாம் நினைச்ச மாதிரி கடத்தவும், கைது செய்யவும், காணாமல் போக்கவும் முடியும் என்பதும், அவ்வாறு அரசியல் / இலக்கியம் செய்ய வரும் எவரும் தம் நிகழ்ச்சி நிரலை ஏற்றுக் கொண்டவராக மட்டும் இருக்க வேண்டும் என்பதுவும், இவற்றினை எல்லாவற்றையும் விட அங்கு முதலீடு செய்ய முனையும் தமிழர்களின் இருப்பையும் ஒரு நிமிடத்தில் இல்லாமலாக்க முடியும் என்பனவும் ஆகும். ஆனால் பலரால் உணரப்பட்ட இந்த செய்திகளின் எந்தவொரு சாராம்சத்தினையும் உங்கள் முதல் அறிக்கை கொண்டு இருக்கவில்லை. அத்துடன், இன்று இலங்கை அரசு பற்றிய சரியான பிம்பம் உலகெங்கும் உறுதியாக உணரப்பட்டுக் கொண்டு இருக்கும் போது, உங்கள் கைது பற்றியும் அதன் பின் விடுதலை செய்யப்படும் வரைக்கும் நடந்த விடயங்கள் என நீங்கள் வெளியே வந்து சுதந்திரமாக வெளியிட்ட இந்த அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கும் விடயங்களும் அந்த பிம்பத்தினை வெகு சாமர்த்தியமாக உடைக்கும் காரியமாகவே படுகின்றது. உங்களை கைது செய்த TID பிரிவினரில் இருந்து, பசீர் சேகுதாவுத்தின் சொல்லைக் கேட்டு விடுதலை செய்யச் சொன்ன அச்சாப் பிள்ளை கோத்தா வரைக்கும் சிங்கள் மேலாதிக்கம் ஒரு நெகிழ்வான தன்மையைக் காட்டி இருக்கு என்று காட்டி விட்டு அந்த மேலாதிக்கத்தின் எதேச்சாதிகாரத்துக்கு ஒற்றைப் பிரதிநிதியாக ஒரு சிங்கள பொலிஸ் கான்ஸ்டபிளை மட்டும் காட்டி நிற்கும் உங்கள் சாமர்த்தியம் திட்டமிடப்படாமல் அறிக்கையில் வந்துள்ளதாக நான் நம்பவில்லை. ஒவ்வொரு சொல்லும் மிகவும் கனவமாக கையாளப்பட்டுத் தான் இந்த அறிக்கையை தயாரித்து இருக்கின்றீர்கள் என்பது தெளிவாக புலனாகின்றது. உங்கள் கடத்தலே ஒரு நாடகம் என்றோ ஜெயபாலன் இலங்கை அரசுடன் இணைந்து நடிக்கின்றார் என்றோ நான் இங்கு எழுத முனையவில்லை. 90 களில் வெள்ளவத்தை ரோகினி ரோட்டில் உங்களை சந்திக்கும் போது எந்தளவுக்கு நீங்கள் இலங்கை அரசின் ஆள் இல்லை என்று நம்பினேனோ அதே அளவுக்கு இன்றும் உங்களை நம்புகின்றேன். . ஆனால் கடத்தப்பட்டு பின் கைது செய்யப்பட்டு பின் விடுதலையாகி வந்த பின்னும் பலரை பகைக்க மனம் இன்றி அவர்களை நோகாமல் அரசியல் செய்யும் உங்கள் தந்திர / சாமர்த்தியமான அரசியலைத் தான் நான் கேள்வி கேட்க விரும்புகின்றேன். சாமர்த்திய அரசியல் செய்கின்றோம் என்று உங்களையும் மற்றவர்களையும் ஏமாற்ற முனையும் சாகசத்தினைத் தான் கேள்வி கேட்கின்றேன். மற்றவர்களின் கடுமையான கேள்விகளை நலித்துப் போகச் செய்யும் வாசகங்களை அறிக்கையில் கொண்டு வந்த உங்கள் இலக்கிய 'நேர்மை' பற்றியே வினவுகின்றேன். என் கேள்விகளிலும் வினாக்களிலும் தவறுகள் இருக்குமாயின் அதனை தெளிவுபடுத்தும் வரைக்கும் காத்து இருக்கின்றேன். அது வரைக்கும் நல்ல கவிதைகளை எழுதத் தெரிந்த, பலமுள்ளவர்களை கடுமையாக பகைக்கின் அரசியல் செய்ய முடியாது, என்று நம்புகின்ற புகழ்ச்சியை மிகவும் விரும்பும் ஒரு வெறும் கலகக்காரனாகவே உங்களை உணர்ந்து கொள்கின்றேன். நன்றி
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
இலங்கையில் முஸ்லிம் அமைச்சர்களுக்கு என்ன பலம் இருக்குது என்று நினைக்கின்றீர்கள் சுண்டல்? அவர்கள் எல்லாம் பொம்மை அமைச்சர்கள். இலங்கை அரச பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு சுண்டு விரலைக் கூட நீட்ட உரிமையற்றவர்களாகத்தான் அன்றும் இன்றும் இருக்கின்றார்கள். இந்த வாரம் நிந்தவூரில் அதிரடிப்படையினரின் அட்டகாசத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம் இளைஞர்கள் பலரை அதிரடிப்படையினரும், பொலிசாரும் கைது செய்துள்ளனர். அவர்களில் சிலர் எங்கு இருக்கின்றார்கள் என்று கூட தெரியவில்லை. முஸ்லிம் இளைஞர்களை கைதைக் கூட எதிர்க்க முடியாதவர்களாகத்தான் முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர். அஸ்வராலும், ஹக்கீமாலும் இலங்கை பேரினவாததுக்கு எதிராக எப்போது குரல் கொடுக்கினமோ அன்றே அவர்களுக்கும் இதே நிலைதான் வரும். இது தான் யதார்த்தம்.
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை படையினரால்; கைது:- கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை காவற்துறையால் கைதுசெய்யப்பட்டு உள்ளார். மாங்குளத்தில் உள்ள அவரின் தாயின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது இன்று இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதனை அவரது உறவினர்கள்; உறுதி செய்துள்ளனர். நோர்வே குடியுரிமை பெற்ற வ.ஐ.ச ஜெயபாலன் தற்போது பெரும் பகுதி காலத்தை தமிழகத்தில் கழித்து வந்தார். கடந்த வாரம் இலங்கை சென்ற அவர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். தாயின் நினைவு தினமான இன்று மாங்குளத்தில் உள்ள தாயின் சமாதியை பார்க்க சென்ற வேளை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வவுனியா காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99359/language/ta-IN/article.aspx
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
மாங்குளத்தில் உள்ள தாயின் சமாதியைப் பார்க்க (இது இப்ப இராணுவத்தினரின் பண்ணை / முகாம் பிரதேசத்தில் இருப்பதாக முன்னர் அறிந்து இருந்தேன்) செல்லும் போது கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டு செல்கின்றனர் என்பதை அறிய முடிகின்றது. இன்னும் முழுவிபரமும் கிடைக்கவில்லை,
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கடந்த சில வாரங்களாக முகப்பு மட்டும் அடிக்கடி தானாக mobile theme இற்கு சென்று சிறிது நேரம் கழித்து மீண்டும் சரியான theme இற்கு செல்வதை அவதானித்துள்ளோம். கருத்துக்களம் இணைப்பை அழுத்தி செல்லும் போது எல்லாம் சரியாக தெரிகின்றது. ஸ்கிரிப்ட் இல் அல்லது settings இல் எங்காவது சின்ன தவறு உள்நுழைந்துள்ளது போன்று இருக்கின்றது. விரைவில் சரிபடுத்த முயல்வோம்.
-
பெயர் மாற்றங்கள்.
மன்னிக்கவும் எக்காரணம் கொண்டும் அவ்வாறு மாற்ற முடியாது. ஒருவரின் கல்வித் தகமைகள் அவர் சார்ந்த தொழில் துறைக்குரியனவே அன்றி யாழ் போன்ற கருத்துக்களத்துக்கு உரியன அல்ல. அவ்வாறான ஒரு வழக்கமும் இதுவரைக்கும் இல்லை. இனியும் இருக்கப்போவது இல்லை. நன்றி வணக்கம்.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
விக்கி சொல்லி இருப்பது போன்று தமிழக தலைவர்களை அரசியல்வாதிகளை நம்புவதை விட பன்மடங்கு சிங்கள அரசியல்வாதிகளை நம்பலாம். முதலில் இந்திய இறையாண்மையைத் தாண்டி ஒரு சிறு துரும்பும் தமிழக அரசியல்வாதிகளால் தலைவர்களால் செய்ய முடியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு அடிமை இன்னொரு அடிமையின் விடுதலை பற்றி செயலாற்ற முடியாது என்பதுதான் கசப்பான உண்மை. நன்றி வணக்கம்! (நிழலி எஸ்கேப்)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிறைகுடமாக சலசலப்பில்லாமல் அமைதியாக இருந்து வரும் கள உறவு உதயத்துக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துகள். எழுத நேரம் கிடைக்கும் போது நிறைய எழுதுங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவாக்கு என் பிந்திய வாழ்த்துகள். எனக்கு வேலை மாற்றம் நிகழ்வதால் உடனடியாக கவனிக்க முடியவில்லை. விசுகுக்கும் என் இனிய பிறந்த தின வாழ்த்துகள். ஐம்பதை தொட்டாச்சு என்று சும்மா இருக்க கூடாது. 75 ஆவது வயதில் 24 வயது மகன் / மகள் ஒருவர் இருக்கின்ற மாதிரி பிளான் பண்ணுங்கள். உங்களுக்காக..
-
இன்று குயிலினம் பாடமறந்தது..
திலீபன் அண்ணாவின் நினைவு தினம் வரும் ஒவ்வொரு முறையும், அவர் உண்ணாவிரதம் இருந்ததில் இருந்து இந்திய துரோக தேசத்தின் அலட்சியத்தினால் கொல்லப்பட்ட நாட்கள் வரைக்குமான தினங்களின் நினைவுகளும் வந்து போகும். மக்களே புலிகளாகவும் போராளிகளாகவும், புலிகளே மக்களாகவும் ஒன்றுடன் ஒன்றாக கலந்து இருந்த நாட்கள். ஒவ்வொரு தினமும் திலீபன் அண்ணாவுக்காக மெய்யுருகிப் போய் போராட்ட பணி செய்யும் மாணவர்களாக இருந்த நாட்கள் அவை. துண்டுப் பிரசுரம் அடிக்க வசதி இல்லாத மாணவர் பருவம் என்பதால், கையால் எழுதி எங்கள் ஊர் முழுதும் சின்ன சின்ன சுவரொட்டிகள் செய்த காலம் அது. அண்ணாவின் இறுதி மூச்சும் நின்று விட்ட அறிந்து கோபம் கொண்டு இந்திய அமைதிப் படையினைக் காணும் போதெல்லாம் காறி துப்பித் திரிந்தோம். வாழை மரங்களை ஒவ்வொரு வீதி சந்திகளிலும் தோரணங்களுடன் கட்டி சாத்தி இருந்தோம். ஊரெங்கும் மலர்களாள் அஞ்சலி செலுத்தி கண்ணீர் மல்கிக் கிடந்த காலம் அது. இன்று நினைக்கும் போதும் அன்று அந்த நாட்களில் எம் நாசிக்குள் போயிருந்த சோகம் கலந்த ஒரு வாசனை/ நெடி இன்னும் மறக்காமல் மனசுக்குள் எழுகின்றது. அண்ணாவின் இறுதி மூச்சினை கலந்து வந்த நெடி அது. சாவின் பின்னும் கூட மறக்காது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த தின வாழ்த்துகளுக்கு உரிய ஒரு திரியில் இறந்த ஒருவரிற்கு நினைவு கூர்வது சரியாகப் படவில்லை (அவர் கள உறவே ஆனாலும்). துயர் பகிர்வோம் பகுதியில் புதிய திரி திறந்தோ அல்லது ஏற்கனவே இருக்கும் வசம்பு தொடர்பான திரியிலோ நினைவு கூர்வதே சரி என்று நினைக்கின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிரியாவுக்கும், நல்ல இசை ஆர்வமுள்ள மல்லிகை வாசத்துக்கும் என் மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று குதூகலமாகத் தன் பிறந்த நாளை கொண்டாடும் 'கிருபன்' இற்கு எம் இனிய பிறந்த தின வாழ்த்துகள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஓரளவுக்கு பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டு வருகின்றோம். ஆயினும் இடைக்கிடை சில தடங்கல்கள் ஏற்படுகின்றது. முற்றாக நிவர்த்தி செய்ய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
-
மே 18ந்திகதி தமிழர் வாழ்வில் ஒரு பெரும் அவலத்தின் ஆரம்ப நாள்.
விசுகு, நான் தெளிவாக கூறியுள்ளேன். இவை தனி மனிதர்களாக எம்மால் செயற்படுத்தக் கூடியவை என்று. தனி மரம் தோப்பாக மாறாவிட்டாலும் தோப்பாக முயன்று வேர்களையே இழப்பதை விட தனி மரமாக நின்று கொண்டு சிலருக்காவது கனிகளை தரலாம் என நினைக்கின்றேன். அத்துடன் எல்லோரும் சேர்ந்து இயங்கும் ஒரு பொது வேலைத்திட்டத்தினை முன்வைக்க கூடியளவுக்கு எனக்கு தொடர்புகளும் இல்லை; நம்பிக்கைகளும் இல்லை. நன்றி.
-
மே 18ந்திகதி தமிழர் வாழ்வில் ஒரு பெரும் அவலத்தின் ஆரம்ப நாள்.
வெறுமனே அவலம் என்றும் நினைவு கூறல்களும் என்றும் சொல்லிக்கொண்டு இருப்பதும் சரி அல்ல என நினைக்கின்றேன். இந்த அவலத்திற்கு நாங்களும் ஒரு காரணம் என்பதாலும், எங்களது செயற்பாடுகள் இன்னமும் காத்திரமான வழியில் செல்லாது வெறுமனே குழு அரசியலிலும், முடி சூடுவதிலும் கழிவதாலும் தனி மனிதர்களாக எம்மால் என்ன செய்ய முடியும் என சிந்திப்போம். அடுத்த மே 18 இற்குள் பின்வருவனற்றை செய்ய ஆரம்பிப்போம். 1. இரண்டு குடும்பங்கள் சேர்ந்து, இன்னும் கல்வி வசதி அற்று இருக்கும் போரால் பாதிக்கப்பட்ட 3 சிறுவர்களின் கல்விக்கும் வாழ்க்கைக்கும் தேவையான விடயங்களை பொறுப்பெடுப்பது. 2. ஒரு வருடத்தில் நாம் செய்ய நினைத்து இருக்கும் களிப்பூட்டும் நிகழ்வுகளில் ஒன்றினைக் குறைத்து அதற்கான செலவை போரால் பாதிக்கப்பட்டு இருக்கும் பாடசாலை ஒன்றுக்கு உதவித் தொகையாகக் கொடுப்பது 3. தாயகத்தில் உள்ள நில புலங்களை விற்க நேரிடும் போது அதில் கிடைக்கும் பணத்தில் ஆகக் குறைந்த 2 சத வீதமெனினும் ஒரு முன்னால் போராளியின் சுயதொழிலுக்கு வழங்குவது. இதன்படி பத்து இலட்சத்துக்கு ஒரு வீட்டை / காணியை விற்றால் கூட 20,000 ரூபாவாவது கொடுக்க முடியும் (இன்று வடக்கில் உள்ள காணிகளின் வீடுகளின் விலை பல மில்லியன்கள்) 4. உதவ விருப்பம் இருப்பினும் இன்னும் உதவாமல் இருக்கும் பல்லாயிரக்கணக்கானோர் புலம்பெயர் நாடுகளில் உள்ளனர். அவ்வாறான உறவினர்களில் ஒருவரையாவது நேர்மையுடன் உதவி புரியும் அமைப்பின் தொடர்புகளை எடுத்து கொடுத்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்து உதவ வைப்பது. இவை தனி மனிதர்களாக எம்மால் செய்யக் கூடியவற்றில் சில. உங்களுக்குத் தோன்றும் விடயங்களையும் எழுதவும்.
-
மே 18ந்திகதி தமிழர் வாழ்வில் ஒரு பெரும் அவலத்தின் ஆரம்ப நாள்.
நல்ல விடயம். ஆனால் அவலத்தின் இறுதி நாள் என்பது தவறான பதம் என நினைக்கின்றேன். பெரும் அவலம் ஒன்றின் ஆரம்ப நாள் தான் இது. எம் இனத்தின் மீது பூட்டப்பட்ட அடிமை விலங்கை நிரந்தரமாக்கிக் கொண்ட நாள் இது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வேறு எவரும் இன்னும் இது பற்றிக் குறிப்பிடவில்லை. நான் மூன்று உலாவிகளிலும் முயன்று பார்த்தேன், படக் என்று யாழ் திறக்கின்றது. வேறு யாருக்காவது இந்தப் பிரச்சனை இருக்கா? எடுக்கும் அநேகமான படங்களில் உராங்குட்டான் மாதிரி மூஞ்சியை 'உர்' என்று வைத்துக் கொண்டு இருக்கின்றன் என்று தான் எல்லாரும் குறை சொல்லுவினம். இருக்கும் படங்களில் 'ஈ' என்று சிரிக்கும் படத்தினை எடுத்துப் போட்டால் அதுக்கும் இந்த பெண் இப்படி குறை சொல்றா...
-
பெயர் மாற்றங்கள்.
purmaal என்ற உறுப்பினரின் பெயர் அவர் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க 'பெருமாள்' என்று தமிழில் மாற்றியுள்ளேன்.
-
பெயர் மாற்றங்கள்.
இன்று தான் கவனித்தேன்... udayam என்ற ஆங்கில எழுத்தில் இருந்த பெயரை 'உதயம்' என தமிழ் எழுத்துக்கு மாற்றியுள்ளேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அக்காவுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துகள். வாதவூரானுக்கு என் பிந்திய பிறந்த தின வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மெசோ அக்காவுக்கு என் பிந்திய பிறந்த தின வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புத் தங்கை யாயினிக்கு மீண்டும் என் மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.