Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நிழலி

  1. மாற்றியாச்சு.............
  2. மின்னல் உங்கள் தளத்தின் சேவை மகத்தானது. ஒரு நாள் அனைத்து மாவீரர்களின் விபரங்களும் அடங்கிய ஒரு பெரும் புத்தகம் வெளியிடப்பட வேண்டும். வரலாற்றில் என்றுமே மறக்கக் கூடாத மகத்தான உயிர்கள் இவர்கள்
  3. மாற்றியாச்சு............ அனைவருக்கும், கூடியவரைக்கும் இந்த திரியில் அரட்டை அடிப்பதை தவிர்க்கவும். அரட்டை அடிப்பதால் இந்த திரியின் நோக்கம் அடிபட்டு போய்விடும் நன்றி
  4. கிளியவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
  5. நீங்கள் மாற்றக் கேட்கும் 'மலையூரன்' என்ற பெயருடன் கிட்டத்தட்ட ஒத்த பெயரான 'மல்லையூரன்' என்ற பெயரில் இன்னுமொரு கள உறவு இருப்பதால் 'மலையூரன்' என்று மாற்ற முடியாது. ..மாற்றியாச்சு..அத்துடன் ஏனைய பகுதிகளில் எழுதவும் அனுமதிக்கப்பட்டுள்ளது
  6. நான் முதன் முதலில் பார்த்த மாவீரர் இறுதிக் கிரியை ராதா அண்ணையின்ட தான். அப்ப நிதர்சனம் முதலாவது காலடியைக் எடுக்க தொடங்கிய காலப் பகுதியில் ராதா அண்ணையின் வீர மரணத்தை ஒளிபரப்பு செய்தினம் (அவர்களா அல்லது றீகல் எனும் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையா என்று சரியாக நினைவில் இல்லை). யாழ்ப்பாண கொமாண்டர் அண்ணை என்று பல முறை பார்த்தோம். அப்ப அண்ணைமார் சாரமும் சேட்டும் அணிந்து இருக்கும் போது மனசுக்கு மிக நெருக்கமாக இருந்தார்கள். பின்னை நாளில் ராதா அண்ணையின் பேரால் ஒரு பிரிவும் புலிகள் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு 'விமான எதிர்ப்பு பிரிவு' என்று பெயரிடப்பட்டதும் நினைவு (பிழையாக நான் சொன்னால் திருத்தவும்)
  7. மாற்றியாச்சு ஏற்கனவே சுடலை என்ற பெயரில் ஒரு உறுப்பினர் உள்ளார், எனவே சுடலை என்று மாற்ற முடியாது. மாற்றியாச்சு...... இன்றுதானே இப் பெயரில் உறுப்பினராகியுள்ளீர்கள்...?
  8. மூன்று வருடங்களுக்கு முன் என் கைத்தொலை பேசி அலறுகின்றது... மிகவும் விறைத்து போன நிலையிலிந்த மனம் கொஞ்ச நேரத்தின் பின் தான் தொலைபேசி அழைக்கின்றது என்பதை புரிந்து கொள்கின்றது... வன்னியில் இருந்த தொடர்புகள் மூலம் ஆரம்பத்தில் பல தகவல்களும் ஈற்றில் அவை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஒன்றிரண்டுமாக வந்து கொண்டு இருந்த வேளை... ஒவ்வொரு தொலைதூர இலக்கத்தை காட்டி வரும் தொலைபேசி இலக்கங்களும் சாவை தாங்கி வந்து கொண்டு இருந்தன.. 'மச்சான்...' என்று அழைத்தவனின் குரல் கரகரப்பாக கேட்டது 'சொல்லடா..'' கொஞ்ச இடைவெளியின் பின் 'சொர்ணம் அண்ணை செத்துப் போயிட்டார் என்று சொல்லினம்டா' 'எப்படி....டா...உண்மையாகவா...நீ கேள்விப்பட்டியா' 'ஆள் சயனைட் அடித்தது என்று சொல்லினம்...காயப்பட்டு இருந்தாராம்' ' மனம் ஏற்கனவே மோசமான செய்திகளை கேட்டுக் கொண்டு விறைத்து இருந்தாலும், சொர்ணம் அண்ணையின் சாவுச் செய்தி பேரதிர்ச்சி தந்ததாக அமைந்தது 'இனி தலைவரின் நிலமை என்னவாகப் போகுதடா" எவருக்குமே விடை தெரியாத கேள்வி என் நண்பனையும் மெளனமாக்கியது. சொர்ணம் அண்ணைக்கும் தலைவருக்குமிடையிலான நட்பை புரிந்தவர்களுக்கு என் கேள்வியும் புரிந்து இருக்கும் அவனுடன் கதைத்த பின் யாழைத்தான் உடனே மேய்ந்தேன். திண்ணையில் இந்த தகவலை பெரிய தளபதி ஒருவர் செத்துப் போயிட்டார் என்று போட்டு கொஞ்ச நேரத்தில் மோகன் அண்ணா தனி மடலில் 'எந்த தளபதி பெயர் என்ன" என்று கேட்டு இருந்தார். நான் பெயர் சொல்லி பதில் போட்டு 10 நிமிடங்களின் பின் அவரும் 'இப்பதான் எமக்கும் தகவல் வந்தது" என்று பதில் போட்டார் அன்று முழுதும் ஒரு நிமிடம் கூட நித்திரை கொள்ள முடியவில்லை. சாமம் 3 மணிக்கு எழும்பி மிச்சமிருந்த பிரண்டியை அடிக்கத்தொடங்கினேன்... மாவீரன்...மகா வீரன் சொர்ணம் அண்ணை... ஈழம் தந்த பெரும் தளபதி!! இவர்களின் வாழ்க்கை வரலாற்றை தகவல்கள் சேகரித்து கண்டிப்பாக ஆவணப்படுத்த வேண்டும்
  9. இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் புரட்சி
  10. பல காரணங்களால் இப்படிக் காண்பிக்கும். அதில் முக்கியமாக வேறு தளங்களில் உள்ள படங்களை இவ்வாறு avatar ஆக இணைக்கும் போது அந்தத் தளங்களில் இருந்து அந்தப்படம் நீக்கப்பட்டாலோ அல்லது அவ் இணையத் தளம் இயங்காது விட்டாலோ அல்லது யாழ் தளத்தில் தரவேற்றம் செய்து ஏதாவது ஒரு காரணத்தினால் அழிந்திருந்தாலோ இவ்வாறு காண்பிக்கும். யாழ் அன்பு தனது அவதாரை திருத்தும் போது இந்தப் பிரச்சனை சரியாகி விடும் என்று நம்புகின்றேன்
  11. நிலாமதி அக்காக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் அத்தான் என்ன கொடுத்தார் என்று கேட்பது நாகரீகமில்லாட்டியும் என்ன கொடுத்தார் என்று சொன்னால் எமக்கும் ஒரு கிக்காக இருக்கும் அக்கோய்
  12. பகலவனுக்கும் புலவருக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்
  13. கருத்துக்கள ஒழுங்கமைப்பு மற்றும் சில மாற்றங்களின் போது தமிழில் ஒரு கருத்தாவது எழுதியவர்களில் பெரும்பான்மையானோர் ஏனைய பகுதிகளுக்கும் அனுமதிக்கப்பட்டனர். எனினும் இனிவருங்காலங்களில் இந்த முறையில் இல்லாது குறைந்தபட்சம் 3 கருத்து தமிழில் எழுதியோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  14. கலைஞன் இந்தப் பிரச்சனை எந்த உலாவியில் உங்களுக்கு ஏற்படுகின்றது?
  15. அண்மையில் செய்த மாற்றம் (upgrade) பல முன்னைய விடயங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இப்பதான் ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்துள்ளோம். மாற்றக் கூடியவற்றை மாற்ற பார்க்கின்றோம்
  16. சகோதரி யாயினிக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள். இயலினி குட்டியும் தன் வாழ்த்தை யாயினிக்கு சொல்லுறா..
  17. இணையவனுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள். அர்ஜுனின் அப்பா இன்னும் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள்
  18. ரதிக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..... இந்த திரியினை சரியாக கவனிக்காததால் உடனே வாழ்த்து சொல்ல முடியவில்லை. என்றும் இதே துணிவுடனும், தன் கருத்தை தெரிவிக்க எதற்கும் அஞ்சாமலும் தொடர்ந்து இருங்கள்................
  19. இனிய இணையவழி நண்பன் புங்கையூரானுக்கு என் பிறந்த தின வாழ்த்துக்கள்
  20. பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நெடுக்குத் ... இன்னும் இன்னும் கற்று எம் தமிழ் கூறும் உலகிற்கும் மனித குலத்துக்கும் நன்மை சேர்க்க வாழ்த்துக்கள்
  21. தோழன் தமிழ் சிறிக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துகள். பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து பல நூற்றாண்டுகளுக்கும் யாழ் களத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க வாழ்த்துக்கள் தோழா...
  22. என் மிகச் சிறந்த நண்பன் நுணாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். யாழினூடாக நான் சந்தித்த மிக அன்பான முகமறியா நண்பன் நுணாவிலான்... என்றும் மனசின் மிகப் பக்கத்தில் இருக்கும் ஒரு உறவு...யாழில் எவரது மனசையும் புண்படுத்தாமல் தனக்கு பிடிக்காத அரசியல் கருத்தாளர்களிடம் கூட கண்ணியமாக உரையாடும் ஒரு உறவு வாழ்க பல்லாண்டு, வாழ்க வாழியவே. நுணா ஒரு வரம் யாழுக்கு....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.