புல்வெளியில் தூங்கும் நிழல்கள்!
நீண்ட பயணத்தின் இடையிடையே
பாலங்களைக் கடப்பதுபோல,
என் கடந்தகால நினைவுகளை மீட்டபடி
என்னைக் கடந்து செல்கின்றன.
ஒரு நிழலில் இருந்து இன்னொரு நிழலுக்கு,
மாறிமாறி நான் பயணப்பட்டேன் .
மகிழ்ந்து தூங்கும் மரங்களின் கீழ்
கருமையின் ஒளியால் சூழப்பட்ட நிழல்கள்.
ஆளுறக்கம் கொள்கின்றன.
பயங்கர சூறாவளி வீசுகிறது
மரங்கள் வேருடன் குடைசாய்ந்து
நிழல்களுடன் சல்லாபித்தபடி,
மண்ணில் புரண்டன.
என் நினைவுகள் ஒரு நிழல்
வெறுமையின் பாத்திரம்
தூக்கி வீசப்பட்டது.
-தியா-