theeya

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  287
 • Joined

 • Last visited

Everything posted by theeya

 1. நன்றி நிலாமதி அக்கா nige Posted Apr 9 2009, 12:40 AM இதிகாச சம்பவங்களை கவியில் இணைத்த விதம் அழகு .. தர்மத்தின் தாய்நாடாம் பாரதம் எமக்கு மட்டும் அதர்மம் செய்வது ஏன் என்றுதான் புரியவில்லை . நன்றி நிகே
 2. சேரன் உங்கள் கவிதை தமிழ்நாட்டின் இன்றைய நிலையினைச் சொல்கிறது. உண்மையில் நீங்கள் ஈழத்தமிழர் மீது மிகுந்த பற்றும் ஈடுபாடும் உடையவர் என்பதை உணர்த்தின உங்கள் வரிகள்
 3. நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் கவிதை பார்த்தேன் நம்பிக்கையான வரிகள்
 4. ம்............ இரத்தவாடை எங்கள் வீட்டில் இன்றும் கந்தகப்புகைஎங்கள் மண்ணில். இது தான் ஈழத்தமிழனின் அடையாளம் போலும்
 5. வாங்கோ கையாலாகாதென்று எதுவுமில்லை. முயன்றால் முடியும்
 6. எங்கள் சாம்பல் மேட்டில். காட்டுமிராண்டித்தனமாகவும் நயவஞ்சகமாகவும் எம் முன்னோர்கள் தோற்கடிக்கப்பட்ட எங்கள் மண்ணில், கனவான்களாகவும் கடவுளர்களாகவும் எங்களில் தம்மைத் திணித்தபடி இன்னும் எங்கள்மேல் தம் வன்மங்களைக் கொட்டித் தீர்க்கப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். மீட்பர்கள் என்று தம்மை அழைத்தபடி தமக்குத் தாமே பட்டங்கள் சூட்டிப் பாணங்கள் ஏவி எம்மைச் சூழ்ந்து கொண்டனர். தம்பக்கம் சார்ந்தால் அரியாசனம் இல்லையேல் அரக்கர் நாமம் காலங் கடந்தும் இதுவே தொடர்கதையாய் நீண்டு கொண்டிருந்தது. மறைந்திருந்து பாணங்கள் ஏவுவதில் வல்ல ராமர்கள் மீண்டும் நாவாய்கள் ஓட்டிப் புதர்களைக் கடந்து கரையைத் தொட்டனர். அம்புகள் வீழ்ந்து மீண்டும் ஆயிரம் துளைகள் போட்டன. நஞ்சு தடவிய பாணங்கள் நடுவில் பிஞ்சுகள் கூட வெந்து வதங்கினர். உமது பாணத்தின் நுதியல் தர்மம் குடியிருப்பதால் பாராமுகமாய் உலகம் இருக்குமா? உங்கள் தர்மம், நீதி, அகிம்சையென்ற பசப்பு வார்த்தைகள் வரும் நாளில் காற்றில் பறக்கலாம். தன்நெஞ்சே தன்னைச் சுட்டு நீவீர் செத்தும் போகலாம். அன்றி, காலங்கடக்கும் பின்னொரு நாளில் உங்கள் பாதங் கழுவி திருவடி தொழுதோரை அரக்கர் என்ற அவப் பெயர் நீக்கி அரியணை ஏற்றி ஆட்சியில் அமர்த்தலாம். அவர் காலந்தோறும் வாயில் காத்து நன்றியுடன் உம் காலடி கிடக்கலாம். ஆனால்!!! எங்கள் சாம்பல் மேட்டில் எருக்கலைகள் பூக்காது. ஒரு இனத்தின் சாபம், அவர்தம் வேட்கை காலங்கடந்தும் இன்னும் நீளும் வலிமையாக....
 7. கெதியாய் சொல்லி முடியுங்கள் படிக்க ஆவலாய் உள்ளேன் உங்கள் ஞாபகம் நல்லாயிருக்குது.
 8. உண்மை நிலை சொன்ன கவிதை இது படிக்க கவலையாக இருக்கிறது
 9. வணக்கம் வாங்கோ உங்கள் அறிமுகம் நல்லாயிருக்குது
 10. அப்புகாமி வாங்கோ
 11. வணக்கம் அஞ்சனன் வாங்கோ நல்ல பெயர் முன்னர் இலங்கையில் உள்ள ஒரு தனியார் வானொலியின் துடிப்பான அறிவிப்பாளர் ஒருவரின் பெயர்
 12. எச்சரிக்கை........!!!!! எச்சரிக்கை.........!!!!!!!!!!! எச்சரிக்கை.........!!!!!!!!!!!!!!!!!!! மறந்து போய் இஞ்சியும் உள்ளியும் போட மறந்திடாதையுங்கோ பிறகு வாய்வுக் கோளாறு வந்து அந்தரப் படுவிங்கள்
 13. கவலைப்படாதைங்கோ சுவி உங்களைப்பற்றியும் யாராவது கதைப்பினம் பொறுமையாக இருங்கள். அது சரி என்ன அனுபவமோ?
 14. வாங்கோ கறுப்பி எப்பிடி சுகமாய் இருக்கிறியள்தானே?
 15. லீனா வாங்கோ உங்கள் வரவும் நன்றாக அமையட்டும்
 16. நன்றி நிலாமதி அக்கா உங்கள் வரிகள் கேட்க நல்லாயிருக்குது. நம்புவோம் நல்லதே நடக்கட்டும். ஒரு உண்மை தெரியுமா உங்களுக்கு இந்தக் கவிதை புதிதல்ல. இது 2000ஆம் ஆண்டு நான் எழுதியது. 2001இல் இலண்டன் ரைம்ஸில் வாசிக்கப்பட்டது. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் கிட்டத்தட்ட 10 வருடங்களாக இந்தக் கவிதையை ஒரு வரிகூட மாற்றாமல் பிரசுரிக்க முடிகிறதெனில் இதை என்னண்டு சொல்லிறது..........................???????????????
 17. சமாதானத்தின் பெயரால்.. முந்தியெல்லாம் நாங்கள் விழிநீர் சிந்தியதே இல்லை தந்தனத்தோம் பாடி கெந்தித்தொட்டு ஆடி தெரு மந்திகளைப் போல வாழ்ந்திருந்தோம் முந்திய வாழ்க்கை எல்லாம் நாம் சந்தித்த எதிரியாலே பந்தி விட்டு ஓடியது சந்தி கூடிச் சிரித்தது... வந்தவன் ஆட்டி வைக்க சொந்த மண் விட்டு வெந்த புண் மனத்தோடு சொந்த பந்தமதைப் பிரிந்து குந்தியிருந்த நிலத்தையும் இழந்து மரம் விட்டு மரம் தாவும் மந்திகளைப் போல ஊர் விட்டு ஊரோடினோம் கூடு பிரிந்த வாழ்க்கையது தேடி வந்தது எம்மை கேடென்று நினைக்கலாமோ நாமதனை..? நாடற்ற நமக்கு வீடெதற்கு ? வீண் வம்பெதற்கென பாடித் திரிந்த பண்பட்ட குயிலொன்று ஆடி வந்த ஆட்டிலறியில் நாடித் துடிப்பிழந்து நடுத் தெருவில் கிடந்ததுவே... சாதிப்பேன் நானென்றும் சாதிப்பேய் நானென்றும் சரித்திரவாதியென்றும் வாசித்த கூற்றெல்லாம் வழி தவறிப் போயினவோ..? சுற்றும் பூமியது மொத்த மனிதரையும் பற்றிப் பிடிப்பது போல் முற்றும் கிரகணத்துள் மூழ்கிக் கிடந்தோமே... இன்று சுற்றம் இழந்து முற்றும் துறந்து பற்றற்ற முனிவராகி இந்தப் பாரினில் அலைகிறோமே... வேர்வையது சிந்தி விழிநீர் சிந்தி போர்வையது இன்றி பார்வையது மங்கி பசிப்பிணியால் நாம் வாழும் சோக நிலைதான் தீராதோ..? வானமதில் வலம் வந்து ஈனமின்றிக் கொன்றொழிக்கும் பாதக நிலையிந்த பாரினில் நீங்காதோ..? எருக் கும்பம் போன்ற சதைக் கும்பத்துக்குள்ளே எம் உறவுகளை தேட வைத்த கதையது செத்தொழிந்து போகாதோ..? அடுத்த ஊருக்கு எடுத்தவுடன் போவதற்கு என்னால் முடியவில்லை வீதியெல்லாம் மூடிக் கிடக்க வேண்டுமென்ற விதி எமக்கு உள்ளபோது நாதியற்ற தமிழன் சோதிக்காமல் போவதெப்படி? சோதிக்காதே எம்மைச் சோதிக்காதே நடு வீதியில் வைத்து எம்மை அங்கமெல்லாம் தடவி அரவணைப்புச் செய்யாதே. பாவியடா நாங்கள் சேதியொன்று தெரியுமோ? மீன்பிடிக்கப் போன மூன்று பேரைக் காணல்லையாம் ஊரெல்லாம் கூடி ஒப்பாரி வைக்கிறது... போன வாழ்வினை மீண்டும் ஒருமுறை கைதட்டி அழைக்க என்னால் முடியவில்லை போதுமடா சாமி நேற்றுவரை வாழ்ந்த கதை செத்தொழிந்து போய் நித்திய சமாதானம் இத்தீவில் உதயமாகி பத்தியமாய் நாம் வாழ்ந்திட சத்தியமாய் உனை வேண்டுகிறோம் நீ எமக்கு வரமளிப்பாய் எல்லோர்க்கும் பொதுவான சமாதான தூதுவனே
 18. http://imageshack.us/ இந்த இணைப்பினை பயன் படுத்தி முயன்று பாருங்கள் முடியவில்லையெனில் கூறுங்கள் விரிவாக எழுதுகிறேன்.
 19. உங்கள் பதிலுக்கு நன்றி சுஜி காலங்தான் பதில் சொல்ல வேண்டும்
 20. வணக்கம் வாங்கோ