theeya

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  287
 • Joined

 • Last visited

Everything posted by theeya

 1. உண்மையில் நன்றாகத் தான் எழுதியிருக்கிறிங்கள் இளங்கவி தொடர்ந்து நல்ல படைப்புக்களாக எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்
 2. பெருமைதான்... மழை வரும்போதும் உன்னை நினைக்கிறேன் வெயில் அடிக்கும் போதும் உன்னை நினைக்கிறேன் தயவுசெய்து திருடிட்டு போன என் குடையைக் கொடுத்திடு காதல் காதல் ஒரு மயக்க மருந்து மயங்கி விழுந்தால் கல்லறையில்தான் உனக்கு விருந்து பாவம் தூக்கத்தில் உன் சத்தங் கேட்டு எழுந்து விட்டேன் ஆனால் நீ இல்லை பின்புதான் தெரிந்தது அது என் பின் வீட்டுத் தெருநாய் என்று.. என்னத்த சொல்ல அவளை மறக்க நினைக்கும் போதெல்லாம் என் இதயம் கேட்குது வேற ஆளப் பாத்திட்டாய் போல என்று உங்களை மாத்தவே முடியாது மலரே உன் மீது விழும் துளிகள் பனித்துளி என்று நினைக்காதே நீ வாடாமல் இருக்க நான் விடும் கண்ணீர்த் துளிகள். அதைத்தான் நானும் சொல்லுறன் மெய்யுக்கும் பொய்யுக்கும் சின்ன வித்தியாசம்தான் நீங்க ரொம்ப அழகா இருக்கிறீங்க இதை நான்சொன்னா பொய் நீங்க சொன்னா மெய் அதுசரி நீயும் நானும் உலகில் சிறந்த ஜோடி நான் விரல் நீ நகம் நான் கடல் நீ மீன் நான் வானம் நீ நிலா நான் மரம் நீ குரங்கு தயவு செய்து கீழே இறங்கு கடைசியிலை இதுதான் மிச்சம் வாழ்க்கை என்பது பனை மரம் போல ஏறினா நுங்கு விழுந்தா சங்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? உன்மீதும் சில பூக்கள் என்மீதும் சில பூக்கள் நீயோ மணவறையில் நானோ கல்லறையில் (இவை அனைத்தும் நான் எழுதியவையல்ல. இவை குறுஞ் செய்திக் (SMS) கவிதைகள் முடிந்தால் நீங்களும் பயன் பெறுங்கள்)
 3. இளங்கவி உங்கள் கவிதைக்குப் பொருத்தமான படம் போட்டிருக்கிறீர்கள் கவிதை இன்றைய நிலையை, உண்மையை கூறுகின்றது. தொடர்ந்து எழுதுங்கள்
 4. நன்றி யாயினி நல்ல நட்புக்கு பிரிவில்லை என்பதை மிகவும் அiகாக திருக்குறள் மூலம் விளக்கியதற்கு நன்றி
 5. நன்றி இளங்கவி உங்கள் பதிலுக்கு நன்றி நன்றி சுஜி உண்மைதான் நல்ல நட்பு பிரியும் போது வலிதான் ஆனால் நட்புக்கு ஏது பிரிவு? சுஜி தொடர்ந்து கருத்துரைத்து வருகிறீர்கள் நன்றி
 6. நன்றி சுப்பண்ணா ஆழமான நட்பு பிரியும் போது வலியைத் தரும் ஆனால் நல்ல உண்மையான நட்புக்கு என்றும் பிரிவில்லை
 7. உன் கல்லூரி நண்பி மனிதக் கூடுகளைச் சுமந்தலையும் உயிர்களுக்கு மத்தியில் ‘மனிதம்’ காட்டி என்னை மயங்க வைத்த தோழனே ! உன்னைப் பிரிவதற்கு என் மனம் ஒப்பவில்லை நண்பா. வார்த்தையில் வர்ணஜாலங்களை வாரி இறைத்த என் கல்லூரிக் கலைஞனே என் உயிரை அழுத்திப் பெருவலியெடுக்க, உன்னைப் பிரிவதை எண்ணி நான் துடித்துப் போகிறேன். காயமற்ற இடங்களில் கூட உன் பிரிவு வலியைத் தருகிறது தோழா ! உடைந்த சிலம்பின் கதறலாய் தனித்து விடப்பட்ட சிறு தீவின் குமுறலாய் துயரெடுத்துப் புலம்புகிறது என் இதயம். என் உயிர் நண்பனே ! உன் கைப்பேசியில் என் எண்ணை அழுத்தி அடிக்கொரு ஒரு ‘குறுஞ் செய்தி’ அனுப்புவாய். இல்லையேல் நாளொரு பொழுது ‘எப்படிச் சுகம்? ’ என்ற ஓற்றை வரியிலாவது நலம் விசாரிப்பாய் என்ற நம்பிக்கையுடன் பிரிந்து செல்லும் கல்லூரி நண்பி. தியா
 8. யதார்த்தமான கவிதை இன்னும் பல கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள் இளங்கவி
 9. நன்றி ஈழமகள் நன்றி நிலாமதி, நல்ல நட்புக்கு நிகர் உலகில் ஒன்றுமில்லை
 10. நட்பை வளர்க்க வார்த்தைகள் தேவையில்லை. புன்னகை மட்டும் போதுமென்று புரிய வைத்த என் அன்பு நண்ப ! என் இதயப் பாலைவனத்தில் நீரூற்றிப் பூமரம் நட்டவனே வெறும் பனி மூட்டமாய் இருந்த என் இதயத்தில் மேக மூட்டம் தோன்றிப் பெருமழை பொழியக் காரணமானவனே கூட்டைப் பிரித்து றெக்கை விரிக்கும் பட்டுப் பூச்சியாய் கூட்டம் கூடிப் பறந்து திரியும் பட்டாம் பூச்சியாய் எத்தனை பரவசங்கள் நமக்குள் நடந்தேறின. என் ஆருயிர் நண்ப ! சிப்பிக்குள் பதுங்கிக் கொண்ட பனித்துளியாய் என் அன்புக்குள் உறங்கிக் கொள்ளும் முத்தானாய் நீ அந்தரத்தில் பறப்பது போல் ஆனந்த தாண்டவத்தைக் கற்றுத் தந்த என் வாலிப நண்பனே ! பனித்துளி தெளித்த ரோஜாவாய் முள்முடி தரித்த எண்ணத்தில் ஆர்ப்பரித்திருந்த நான் உன் உறவின் நெருக்கத்தை இழந்து கொண்டிருப்பதாக உணர்கிறேன். என் அன்பு நண்ப ! நட்புக்கு இலக்கணமான உன்னையும் உன் செயலையும் எப்போதும் மறக்க என் மனம் ஒப்பாது. என் இதயப் பாலைவனத்தில் நீரூற்றிப் பூமரம் நட்டவனே. ‘பிரிவு’ என்ற ஒற்றை வார்த்தையால் ‘நட்பு’க்கு முற்றுப்புள்ளி வேண்டாம். காலம் கடந்தும் எல்லை கடந்தும் எல்லாம் கடந்தும் என்றும் வாழும் இனிய தொடக்கமாம் - நட்பினை வலிமைப் படுத்த - இன்னும் வாழ்ந்து காட்டுவோம்.
 11. சுப்பண்ணா இன்றைய அவல வாழ்வின் உண்மைத் தன்மையை அப்படியே சொல்லி கண்ணீர் வர வைத்து விட்டீர்கள்
 12. தொடக்கம் நல்லாயிருக்குது. போகப்போகத்தான் கதையின் போக்கிற்கேற்ப விமர்சனங்களினை முன்வைக்க முடியும்
 13. சிவப்பு ஒற்றை ரோஜாவை பார்க்கும் போதெல்லாம் என்னிடம் காதல் வரவில்லை என் அன்புத் தோழியே என்னினம் சிந்திய குருதியின் விம்பங்கள் பட்டுத் தெறிக்கும் இதை இனிமேல் காதல் சின்னம் என்று சொல்லாதீர்கள்
 14. முதுபெருந் தலைவர்கள் முன்னைநாள் முதல்வர்கள் வெட்டிப் பேச்சளக்கும் அரசியல் கனவான்கள் கோணங்கிகள் கோமளிகள் என்று வேற்று நாட்டவனிடமே சாட்டையடி வாங்கிய பழுத்த அரசியல் மேதைகள் களங் காணும் தருணம் இது... "பாதணிகள் கழிவு விலை *கொசு வலைகள் மலிவு விலை" விளம்பரங்கள் தூள் கிளப்பும் பிரசாரப் புறநகர்கள். கிட்ட நின்று பேசினால் எச்சிலால் உமிழலாம் என்ற பயத்தினால் பந்தல் வைத்து பக்கத்தில் வர மறுக்கும் பெருந்தலைமைக் கூட்டங்கள்.... மேடையேறும் நாடகங்கள் மீண்டும் தெருக்கள் தோறும். செருப்பால் எறிவார்கள் என்ற பயத்தினால் *கொசு வலையின் பின்புறத்தில் கூச்சலிடும் தலைமைகளே பதில் சொல்வீர் "நாளை பாதணிகள் போட்டுவந்தால் பாயுமா? உங்கள் தடைச் சட்டம்...." ( *கொசு வலை - நுளம்பு வலை)
 15. சித்திரைத் தமிழ்மகள் சிலிர்ப்புடன் வருகின்றாள் நித்திரை விட்டு விரைவினில் எழுந்திடுவோம்... மருத்துநீர் தலை தடவி வெந்நீரில் குளித்திடுவோம் நெற்றியில் நீறணிந்து நெறிப்படி வணங்கிடுவோம் பெரியோர் தாள் பணிந்து கையுறை பெற்றிடுவோம்... எப்போதும் போலவே அந்த நினைவுகள் வந்தெம் மனத்திரைஊசலாடுகின்றன... முகமில்லா உருவங்களுக்கும் நிசப்தமான வார்த்தைகளுக்கும் உரிமை கொண்டாடியபடி நீண்டு கொண்டிருக்கிறது எம் இரவுகள்... நாய்களின் குரைப்பொலிகள் ஊமத்தங் கூவைகளின் உறுமல் ஓசைகள் ஊரடங்கு இராத்திரிகளின் சுதந்திர ராகங்களாக... பதற்றமின்றி பட்டாசு வெடிக்க ஈர்க்குவானம் விட்டு இராத்திரிகள் களிக்க மாக்கோலம் போட்டொரு சர்க்கரைப் பொங்கலிட எதுவுமே முடியவில்லை... சில்லறை வாங்கி உண்டியல் சேர்த்து உறவுகள் கூடி மருதடி சேர்ந்து மகிழ்ந்திருந்த அந்தக்காலம் மலையேறி விட்டது... அப்பு வன்னியிலே ஆச்சி வல்லையிலே தம்பி லண்டனிலே தவமிருந்து பெற்ற தனையன் சூரிச்சிலே... கொள்ளிக் குடமெடுக்க ஊரிலே யாருமில்லை இந்த லட்சணத்தில் வந்த வரிசத்தை ஆர் நினைப்பார் இந்த வேளையிலே...
 16. வாங்கண்ணா வாங்கோ
 17. இனிய தமிழ் வணக்கம் வருங்கள்
 18. வாங்கோ வந்தாரை வரவேற்க யாழ்களம் தயங்காது. உங்கள் ஆட்டத்தை பார்ப்போம் ம்... கிளம்புங்கள்
 19. வாங்கோ உங்களால் யாழ்களம் மேலும் சிறக்கட்டும்
 20. தணலில் வெந்து வெந்து பின் ஒளிர்கின்ற தங்கம் போல பல உளிகள் பட்டுப்பட்டு சிலையாகும் கற்கள் போல நாமும் மீண்டு வருவோம். திரியின்றி மெழுகுக்கு ஒளியில்லை எம் மண்ணின்றி எமக்கு விடிவில்லை. தலை குனிதல் தமிழரின் இயல்பல்ல தடைகளை உடைத்து எம்மினம் வெல்லும் இதை இனிவரும் வரலாறு சொல்லும். இப்படி ஒரு நிலை இனி எப்பதான் மீண்டும் வருமோ இதுவே ஒட்டு மொத்த தமிழரின் எதிர்பார்ப்பு