theeya

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  287
 • Joined

 • Last visited

Everything posted by theeya

 1. வாழ்க்கை - 1 தென்றல்காற்று முகத்தில் பட்டுத்தெறித்தது. கண்ணில் பட்ட இடமெங்கும் வெட்டவெளியாக வயல்வெளி பரவிக்கிடந்தது. தென்றலின் இனிய வாசத்தை அள்ளிச் சுவைத்தபடி மூக்கின்வழியே இழுத்து ஆசைதீர வாய்வழியே விட்டு வெளியனுப்பி அனுபவித்தேன். இதமான காலைப்பொழுதில் குளக்கட்டின் வழியே பொங்கிப் பிரவாகிக்கும் வயற்காற்று மருதமர இலைகளை அசைத்து நடனம் பயிற்றிக்கொண்டிருந்தது. நிறைமாதமாய் தளதளத்து முட்டிமோதியது குளத்துநீர். வான் பாய்ந்து அடங்கியதற்கான ஆதாரங்கள் அங்குமிங்குமாக உருக்குலைந்திருந்தன. மூன்றாண்டுகளின்பின் என் சொந்த மண்ணில்… நான் பிறந்து ஓடியுலாவிய என் சொர்க்கபூமியில் காலடி வைத்த ஆனந்தத்தில் வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் நின்று பெரு நடனமாடியது இதயம். மூன்றாண்டுகள் நான் எப்பிடி இருந்தேன்… எங்கிருந்தேன்… என்பதெல்லாம் இப்போது எனக்குத் தேவையற்றதாகிப் போயிருந்தது. எந்த ஊர் என்றாலும் சொந்த ஊருக்கு நிகராக வராது என்ற உண்மையை இங்கு காலடியெடுத்து வைத்த இந்தக் கணத்தில் நான் உணரத் தலைப்பட்டேன். இப்போது என் உயிர்… மூச்சு… சுவாசம் எல்லாம் ஒன்று சேர்ந்து ‘செம்புலப் பெயல்நீராய்’ உருமாறக் கண்டேன். என் கைஇ கால் நரம்புகள் அனைத்திலும் மின்சார வேகம் பாய்ந்ததாய்ப் புத்துணர்வு பெற்று மீண்டுகொண்டிருக்கிறேன். செம்மண் கிரவல் வீதியில் ஆங்காங்கே புற்கள் முளைவிட்டிருந்தன. சேறும் சகதியுமாக பள்ளங்கள் நிரம்பியிருந்தன. பல பழைய மனிதர்களை ஊரில் காணமுடியவில்லை. ஒருவேளை முதுமையின் சீற்றத்தில் அவர்கள் மாண்டிருக்கலாமோ என்னவோ… ஊரில் புதிதாக யாரும் வேலிகள் போட்டதற்கான சுவடுகள் தென்படவில்லை. எல்லாரும் சகிப்புத்தன்மை பெற்றவர்களாகி புதுப்பிறப்பெடுத்திருப்பதா
 2. மூன்று கவிதைகள் இங்கு மூன்று கவிதைகள் பற்றிய தொகுப்பினை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். உங்களின் கருத்துக்களினை முன்வையுங்கள். சங்ககாலத்தில் கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய பாரி வஞ்சனையால் இறந்தபின்னர் பாரிமகளிரின் நிலைகண்டு எழுதப்பட்ட ஐந்து வரிகளில் அமைந்த கண்ணீர்க் காவியத்தின் தொடர்ச்சி இன்றுவரை நீண்டுகொண்டிக்கின்றது. "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையுமுடையேம் எம் குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் வென்றெறி முரசின் வேந்தர் எம் குன்றுங் கொண்டார் யாம் என்தையுமிலரே" (கலித்தொகை - முல்லை - 13) நீண்ட நெடிய தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக வரும் இன்றைய கவிதைகளிலும் சங்க காலத்தின் சாயலைக் காணமுடிகின்றது. "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவினில் அலையோர வெண்மணலில் நாம் பதித்த கால்த்தடங்கள் இல்லாத இடங்களில்லை. இற்றைத் திங்கள் அதே வெண்மணலில் என் கால்கள் தேடுகின்றன உன் தடங்களை…… ………………………… …………………………." எனத் தொடர்கின்ற விஜயலட்சுமி சேகர் எழுதிய கவிதையில் சங்க காலத்து தொடர்ச்சியாக இன்றும் கவிதைகள் படைப்பதைக் காணமுடிகின்றது. காட்சிகள் மாறவில்லை. களங்கள் மாறியுள்ளன. பொருள் மாறவில்லை. நடை மாறியுள்ளது. வடிவம் மாறவில்லை. வாழ்க்கை மாறவில்லை. அன்றும் இழந்தோம் இன்றும் இழந்தோம். கையறுநிலையே வாழ்க்கையாகி கவிப்பொருளாகி காலங்காலமாக தொடர்கின்றது. இதோ இதே பொருளில் அமைந்தஇ அண்மையில் மறைந்த படிமக் கவிஞர் சு.வில்வரெத்தினத்தின்(சு.வி) ஒரு கவிதை. "பறம்புமலை பாரி மறைந்து பருதியும் மறைந்த இருளில் அகதிகளாயினர் அங்கவையும் சங்கவையும் வெண்றெறி முழவம் வீழ்ந்த கையோடு குன்றிலே தோய்ந்த முகநிலவின் சோகம் படர்கின்ற ஒற்றையடிப் பாதையினூடே பாரிமகளிர் நடந்தனர் மலையின் இறங்கிப் பெயர்ந்து தானும் தளர்நடை நடந்தது நிலவும் தள்ளாத வயதின் கபிலர் துணைபோல நடந்துஇ இளைத்துஇ தேய்ந்து நுரைவிழுந்து போனது வெண்ணிலவம்தான் கபிலரும்தான் பாரிமகளிரும்தான் பறம்புமலை வாழ்வும்தான்… பாவம் அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின் பறம்பு மலைக்குன்றும்இ வென்றெரி முரசும் அந்தப்புரத்து அடிமைகளாகிவிட்ட அங்கவையும் சங்கவையும் இரங்கி அழுதவையெல்லாம் இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவிலும் ஏதிரொலிக்கின்றனவே" என்று முடிகின்றது சு.வி யின் கவிதை. சு.வி ஒரு யதார்த்தக் கவிஞன்இ படிமக் கவிஞன் என்ற எல்லைகளைக் கடந்து தன்னை ஒரு தொன்மக் கவிஞனாகவும் நிலைநிறுத்திக் கொள்ள அவருக்கு இக் கவிதை பேருதவியாக இருந்திருக்கிறது
 3. வறுமை கையில் பட்டதையெல்லாம் எடுத்தெறியும் வேகமாய் தொட்டேன் கையில் பட்டது என்னில் மீதியாக புடைத்துக் கொண்டு நிற்கும் விலா எலும்பும் பாழ் வயிறும் தான்…
 4. கனவுகள் வாழ்க்கையின் எண்ணங்களைத் தொலைத்து தினந்தினம் கனவுகள் காண்கிறோம். சொந்த ஊர் திரும்பும் நினைவுகள் இதயத்தை அழுத்த கனவுகளில் கூட அவைதானே வந்து தொலைக்கின்றன
 5. நன்றி நிலாமதியக்கா
 6. ஊனை உருக்கி உடலை வருத்தி தினம் சோற்றுக்கு வழியின்றி சொந்த மண்ணைப் பிரிந்து அகதி முகாமில் இடர்படும் தமிழன் உண்ட சோற்றில் உப்பில்லை கண்ணீர் துளி விழுந்து கசக்கிறது சோறு
 7. நிலாமதி, காந்தன், யாயினி உங்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி.
 8. கல் நெஞ்சும் கசிந்துருக, இன்று கையேந்தும் நிலை வந்தும் சொல் பொறுக்காச் சோர்விலராய் கைகட்டி நிற்காத ஏர் பிடித்த நல் மனிதர் வல் வினையால் வாழ்விழந்து வாழாவெட்டி ஆகி நின்று நெல் மணிக்கும் வரிசை கட்டி கையேந்தும் நிலை கொடிது. பார் போற்ற வாழ்ந்திருந்து பசி விலக்கி வாழ்ந்தவர்கள் ஏர் பிடித்த கையாலே அள்ளி அள்ளிக் கொடுத்தவர்கள்- வந்தாரை வரவேற்று ஊர் மெச்ச உபசரித்தோர் நாதியற்று நடுத் தெருவில் அகதியாய் அலைகிறாரே போர் ஓய்ந்த பின்னாலும் ஊர் ஏக முடியாத கொடுமையினை யாருணர்வார்
 9. நன்றி தொடர்ந்து கருத்துரையுங்கள்.
 10. அமாவாசை சிதறிய நட்சத்திரங்களுக்குள் செத்துக் கிடக்கிறது ஒரு நிலா.
 11. இப்படியும் ஒரு விளம்பரம் சென்னையில் உள்ள புளியந்தோப்பு மாவட்டத்தில்.... மக்களுக்கு மதிப்பில்லா இவ்வுலகில்...... நாய்க்கு இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி இதுதான் காலங் கலிகாலம் எண்டிறது....
 12. உங்கள் பதிலுக்கும் நன்றி சுஜி.
 13. நன்றி யாயினி உங்கள் கருத்துக்கு நன்றி
 14. நன்றி உங்கள் கருத்துக்கு நன்றி
 15. நாய் நாய் என்று பலர் ஏசியும் வெக்கம் கெட்டு உங்கள் வாயிலோரம் அலைகிறேன் என்று கீழ் தரமாய் எண்ணாதீர்.. நான் உங்களைப் போல் நன்றி மறப்பவனில்லை... இப்படிக்கு.. நன்றியுடன்... நாய்
 16. நன்றி நிலாமதி அக்கா உங்கள் பதிலுக்கு நம்பிக்கைதான் வாழ்க்கை
 17. நன்றி இளங்கவி, உங்கள் கருத்துக்கு நன்றி
 18. எல்லாம் என்பதன் அர்த்தம் புரியாதவரை எல்லாம் இங்கே புதுமையாகத்தான் இருக்கிறது. வாரி வழங்கிய கைகள் இன்று வாட்டம் கண்டன. ஏறு தழுவிய மார்புகள் எல்லாம் சோர்வு கொண்டன. ஏர் பூட்டி உழுதிருந்த நெல் வயல்கள் வான் பார்த்துக் காத்திருக்க வாழாவிருப்பதுவே வாழ்க்கையானது. வசந்தத்தை எதிர்பார்த்து காத்திருந்த வேளையிலே வறட்சி மட்டுமே மீதமானது... பட்டினி கிடந்து பழக்கப் பட்டதால் பசி கூடவே எம்மில் ஒட்டிக் கொண்டது நிரந்தரமாக... எதிர்பார்ப்புக்கள் எல்லாம் ஏமாற்றங்களாகி இன்னும் வாழ்தல் வேண்டி தொடர்கிறது சீவியம்.
 19. நல்ல கருத்துப் பொதிந்த கவிதை. தற்காலத்துக்கு மிகவும் அவசியமானது. இளங்கவி உங்கள் கவிதையில் தவழ்ந்து விழுகின்ற இலகு தமிழ்நடை தரமானதாக உள்ளது வாழ்த்துக்கள்
 20. இளங்கவி உங்கள் எழுத்துநடை எனக்கு பிடிச்சிருக்குது. உண்மையைச் சொன்ன கவி வரிகள் தரமோ தரம்
 21. அருமையான கவிதை தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்