Jump to content

theeya

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  416
 • Joined

 • Last visited

Everything posted by theeya

 1. எச்சரிக்கைக் காட்சிகளால், சிறகுகள் வெட்டப்பட்டு, நசுக்கப்பட்டபோதும், எங்களை அடக்கவென்று, வெறுப்பின் மேலாதிக்க விஷ வன்மங்கள் கொட்டி வரையப்பட்ட, சட்ட மூலங்கள் நிறைவேற்றப்பட்ட போதும், நித மரணத்தால் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய், குற்றமேதுமின்றி இன்றுவரை பலர், சிறைவாயிலை நிறைத்துக்கொண்ட போதும், எங்களுக்கு எதிராக அவர்களின் கதவுகள், இன்னும் மூடப்பட்டே இருக்கின்றன. தொலைந்துபோன தன் பிள்ளையை, கைதுசெய்யப்பட்ட தன் தந்தையை, கையளிக்கப்பட்ட தன் தமையனை, இன்னும் தேடியபடி, நீதிக்காக, அவர்தம் விடுதலை வேண்டி, எத்தனை நாட்கள் தவம் கிடக்கிறார்கள்? எங்களுக்கு வலித்தபோது, செத்துப்போன உங்களின் நீதிக்கான குரல்கள், இன்று “நீதி” என்ற சொல்லை, அடிக்கடி உச்சரிக்கின்றன. இப்போது அங்கே, தலைநகரின் வீதிகள் தோறும், ஆட்சியாளர்களுக்கு எதிரான கோஷங்கள் மலிந்துள்ளன. “வீட்டிற்கு செல்” என்ற சொல் தவிர, எதுவும் காதில் விழுவதில்லை. காலத்துயர் மறந்து, ‘தமிழா நீயும் போராட வா’ என்றால், எதை நாம் மறப்போம்? எப்படி நாம் வருவோம், கொடிபிடிக்க உன்னுடன்? -தியா-
 2. என் ஊர்க்காரர்... ஆழ்ந்த இரங்கல்கள் இப்புவியில் ஆரோக்கியமான நிலைமையில் வாழ்ந்து கொண்டு, 90 தடவைகள் சூரியனை சுற்றி வலம் வந்த ஈழ தமிழ் விஞ்ஞானி கலாநிதி. #வைத்திலிங்கம் - #துரைசாமி அவர்கள் தமது 90வது சுற்றுகையின் முடிவினை தமது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடியவர். தொடர்ந்து தமது 91வது சுற்றுகை வட்டத்தின் ஆரம்பத்தில் ஆண்டவரோடு அரவணைக்கப்பட்டு விட்டார். அந்த விண்வெளி ஆய்வுதுறை விஞ்ஞானியின் வாழ்வு இன்று அஸ்தமனமாகி விட்டது. இது இயற்கையின் நியதி! துயரப்பட வேண்டிய முடிவு அல்ல! போற்றி வணங்கி, துதித்து அனுப்பி வைக்க வேண்டிய பிரார்த்தனைகளுடன் சேர்ந்த ஓர் நிகழ்வு!  பிறப்பு என்ற தொடக்க புள்ளிக்கும் இறப்பு என்ற அவரது முடிவு புள்ளிக்கும் இடையில் அவர் கடந்து வந்த ஒவ்வொரு படி கல்லும் சாதனைகள் மிகுந்தது. (Accomplished by Superior ability, Special effort, Great courage and Heroic deed)  அவரின் வாழ்வும், அனுபவமும் இளைய தலைமுறைகளின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒரு பாடம் (Role Model)  மிகுந்த கூர்மையான கல்வியாளர்! விண்வெளி விஞ்ஞான ஆய்வு துறைகளில் அவரின் பங்களிப்புகள் ஏராளம். (Intelligental Educationist & Space Research contributor)  முதுமையிலும் சில ஓட்ட போட்டிகளில் பங்குபற்றிய ஓர் விளையாட்டு வீரர். (Physically active and Strong athletics)  தமது நிதியியல், பொருளாதார துறைகளையும் வளர்த்து கொண்டு வழிகள், ஆலோசனைகள் கேட்டும் ஏனையோருக்கும் வழிகாட்டும் நற்குணம் படைத்தவர். (Loyal Mentor)  நல்லதொரு குடும்பதலைவன்! உறவினர்கள், நண்பர்கள், கிராமத்தவர்களை அனுசரித்து செல்லும் பெருந்தன்மையானவர். (Greatest Gentleman) ஈழ மண்ணில் குப்பிழான் என்னும் கிராமத்தினை பிறப்பிடமாக கொண்டவர். [குப்பிழானில் இன்று சிவபூமியினால் நடத்தப்படும் சிவஞான ஆச்சிரமமாக உள்ள இல்லமே அவர் பிறந்து வளர்ந்த அவரது பெற்றோரால் உருவாக்கப்பட்ட மனையாகும். தாம் பிறந்த கிராமத்தின் மீது கொண்ட அபிமானத்தினால் அமெரிக்காவில் பிறந்து, இன்று அங்கு வசிக்கும் தமது கடைசி பிள்ளையின் நடுப்பெயரினை [Middle Name] அவர் பிறந்தபோது “குப்பிழான்” என வைத்து அதுவே இன்றும் பேணப்படுகின்றது. அதாவது அவரது பெயர் Mr. GANESH K THURAISAMY [திரு. கணேஷ் – குப்பிழான் - துரைசாமி] என்பதாகும். கலாநிதி – வைத்திலிங்கம் – துரைசாமி அவர்களின் தந்தை தமது இளமை காலத்தில் தாயக மண்ணிலிருந்து கடல் கடந்து சென்று 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் மலேசியாவில் புகையிரத பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது அன்னை திருமதி. சிவகங்சை வைத்திலிங்கம், கட்டைபிராய் என்னும் ஊரினை பிறப்பிடமாக கொண்டவர். ஓர் அற்புதமான, பண்பான சுபாவங்களினால் முக வசீகரம் கொண்ட தெய்வீக பெண் போன்ற ஓர் அம்மையார். இவருக்கு இரு அக்காமார். ஒரு தங்கை என கூட பிறந்தவர்கள் ஆவார்கள். குப்பிழான் விக்கினேஸ்வரா வித்தியாசாலை மற்றும் [இன்று விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்] புன்னாலைகட்டுவன் ஆங்கில பாடசாலையில் ஆரம்ப கல்வியினை தொடங்கி தொடர்ந்து சுன்னாகம் – ஸ்கந்தவரோதயா கல்லூரி அதனை தொடர்ந்து, யாழ் – மத்திய கல்லூரியில் உயர் கற்கை நெறியினை முடித்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணித துறையில் சிறப்பு பட்டம் (B.Sc. [Hons.] in Maths) பெற்றார். மாணவ பருவ காலங்களில் குப்பிழான் கிராமத்தில் தமது தந்தையின் விவசாய விளைநிலங்களில் இரவு பகலாக வேலை செய்வதும், சுன்னாகம் – ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு தினமும் கால்நடையாகவும், ஓட்டமுமாக சென்று படித்து வந்ததும் இவர் வாழ்வின் சுவையான காலங்களாகும். அந்த ஓட்டம் அவரை அந்த காலங்களில் விளையாட்டுப் போட்டிகளிலும் பல இடங்களில் வீரனாக்கியது. இலங்கை பல்கலைக்கழகத்தில் கணித, விஞ்ஞான துறையில் பட்டப்படிப்பினை முடித்தபின்பு, அங்கு பகுதிநேர விரிவுரையாளராக பணிபுரிந்து வந்த நேரம், அவர் ஏற்கனவே கல்வி கற்ற யாழ் – மத்திய கல்லூரி நிர்வாகம் இவரது பல்கலைக்கழக பேராசிரியர் ஊடாக தங்கள் கல்லூரியில் விசேட நியமனம் [Special Post with High Scale] வழங்க தயார் நிலையில் அழைப்பு விடுத்திருந்தது. தொடர்ந்து தமது வாலிப வயது காலங்களில் யாழ் – மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்புகளுக்கு கணிதம், பௌதிகவியல் கற்பிக்கும் ஆசிரியராகவும், மாணவர் விடுதி பொறுப்பாளராகவும் சில காலங்கள் பணிபுரிந்து வந்தபோது, தமது கல்விதுறை சார்ந்த தகைமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்னும் நோக்கில் இங்கிலாந்து சென்று “பட்டவியல் கணக்காளர்” [Chartered Accountant] கல்விதுறையில் பயில்வதற்கு மனு செய்து, அனுமதி பெற்று அங்கு செல்வதற்குரிய விசா, கப்பல் பிரயாண ஒழுங்குகளை மேற்கொண்டார். இவரது யாழ் – மத்திய கல்லூரியின் வெற்றிடமான ஆசிரியர் நியமனத்திற்கு குப்பிழானை சேர்ந்த அவரது உறவினரும் நண்பருமான திரு. சின்னதம்பி – நடராஜா அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதே யாழ் - மத்திய கல்லூரியின் பழைய மாணவரான திரு. சின்னதம்பி – நடராஜா அவர்கள் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் பௌதிகவியல் துறையில் சிறப்பு பட்டம் பெற்ற பட்டதாரியாவார். 1958ம் ஆண்டு! கடல் கடந்து அந்நிய நாடு ஒன்றுக்கு செல்பவரை ஒரு ஹுரோவாக பார்க்கும் காலம். விமான பிரயாணம் என்பது மிக செலவானதாகவும், அருமையானதாகவும் இருந்தமையால், கடல் மார்க்கமாக கப்பல் பிரயாணத்தின் மூலமே பலரும் பிரயாணம் செய்வார்கள். இவரது பிரயாணமும் கொழும்பு துறைமுகத்திலிருந்து, அந்த காலத்திற்குரிய 100 இங்கிலாந்து பவுண்ஸ் கப்பல் கட்டணத்துடன் ஆரம்பித்து மூன்று கிழமையின் பின்பு, ஐந்து நாடுகளின் துறைமுகங்களில் அவர் சென்ற பிரயாண கப்பல் தரித்து நின்று நின்று, [Bombay, Port of City of Aden in Arab Country, Suez in Egypt, Beirut Labanon, Marsailees in France] இறுதியில் இங்கிலாந்து நாட்டின் “சவுதம்ரன்” [Southamton] கப்பல் துறைமுகத்தினை போய் சேர்ந்தது. குப்பிழான் கிராமத்திலிருந்து கடல் மார்க்கமாக இங்கிலாந்து சென்ற முதல் நபர் என்ற சான்று இன்றும் இவருக்கே உரித்தானதாகும். லண்டனில் “கணக்காய்வு அலுவலகம்” [Small Chartered Accountancy Firm] ஒன்றில் அலுவலக பணியாளர் தொழில் கிழமைக்கு ஐந்து பவுண் ஊதியத்தில் உடனடியாக அந்த நேரம் கிடைத்தது. அதே துறையில் பணி புரிந்துகொண்டு பட்டய கணக்காளர் கல்வியினை தொடர்வதே அடுத்த அவரது நோக்கமாகவிருந்தது. “கணக்காளர்” தொழில் என்பது ஒரு சிறு கௌரவமான அலுவலக உத்தியோகத்தர் மட்டுமே என்றதொரு பார்வை முதல் ஐந்து மாதத்தினுள் அவர் மனதில் எழுந்தால் தமக்கு தமது எதிர்கால வாழ்வில், தமது ஆற்றல், திறமைகளை வெளிகொணர இது உகந்ததல்ல என்ற எண்ணங்கள் அவரது மனதில் அந்த நேரம் பல குழப்பங்களை உருவாக்கியிருந்தது. லண்டன் நகரின் நூலகம் ஒன்றுக்கு சென்றபோது, அந்த காலம் [1958ம் ஆண்டு] பிரித்தானிய காலணித்துவ நாடுகளில் ஒன்றான “ஜீமன்” [அராபிய நாடுகளில் Aden என்ற பெயரில முன்பிருந்தது.] நாட்டில் ஆசிரிய தொழிலுக்கு விண்ணப்பங்கள் கோரும் தகவல் கிடைத்ததும் அதற்கு மனு செய்தார். உடனடியாக அவர் பாதை மாறியது. அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டு லண்டனில் நேர்முக பரீட்சை நடத்தப்பட்டு பிரித்தானியாவின் காலனித்துவ ஆதிக்கத்திலிருந்த அந்த அராபிய நாட்டில் ஆசிரிய நியமனமும் கிடைத்து விட்டது. லண்டனில் தொடரவிருந்த பட்டய கணக்காளர் கனவினை நிறுத்திவிட்டு அராபிய நாடான ஜீமன் சென்று அங்கு ஆசிரிய தொழில் செய்தார். 1960ம் ஆண்டு! தாயக மண் திரும்பி வந்து இல்லற வாழ்வில் இணைந்து கொண்டார். Ms. யோகராணி! இவரது இல்லத்தரசி! யாழ்ப்பாணத்தில் ஊரெழு என்ற கிராமத்தினை பூர்வீகமாக கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரி! இவர்கள் இல்லற வாழ்வில் மூன்று பிள்ளைகள். மூத்த மகன் பிரகாஷ் பல் மருத்துவர். மகள் கல்பனா மருத்துவர். இளைய மகன் கணேஷ் தகவல் தொழில்நுட்பவியலாளர். தற்போது மூவரும் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர். திருமணத்தின் பின்பு மீண்டும் ஜீமன் நாடு சென்று தமது ஆசிரிய பணியினை தொடர்ந்தார். 1961ம் ஆண்டு! அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருந்த இவரது பல்கலைக்கழக கால நண்பன், பௌதிகவியல் நிபுணர் [Physist] கலாநிதி. அருணாசலம் அவர்களின் ஆலோசனைகள், வழிகாட்டல்களை ஏற்று அமெரிக்கா சென்று அங்குள்ள மசாசசு செற்ஸ் பல்கலைக்கழகத்தில் [University of Massachusetts] கல்வி பயின்று முதுமாணி [M.Sc.,] பட்டம் பெற்றார். தொடர்ந்து அமெரிக்காவின் “மேரிலான்ட் பல்கலைக்கழகத்தில்” (University of Maryland) பிரயோக கணிதத்தில் கலாநிதி பட்டம் (Ph.D.) பெற்றார். “கலாநிதி” பட்டம் பெற்றதனை தொடர்ந்து சர்வதேச ரீதியில் தொழில்நுட்ப தகவல்களை வழங்கும் அமெரிக்காவின் பிரபல்யமான தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி கம்பனியின் நுண்பரிசோதனை கூடத்தில் (Bell Comm Laboratory) தொழில்நுட்பவியல் விஞ்ஞானியாக தமது பணியினை தொடர்ந்தார். விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளும் சர்வதேச விண்வெளி பல்கலைகழகமான அமெரிக்க நாசா பல்கலைக்கழக (NASA – International University) விண்வெளி ஆய்வுகளுக்கு தொலைதொடர் தொழில்நுட்பங்களை வழங்கும் ஒரு நிறுவனமாக இவர் பணிபுரிந்த “பெல் நுண்பரிசோதனை மையம்” கூட்டாக சேர்ந்து பணிபுரிந்தது. இந்த காலங்களில் கூட்டாக இயங்கிய நாசா விண்வெளி விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பணிபுரிந்து, தமது கல்வி, புலமைகள், ஆளுமை திறமைகளை விண்வெளி ஆராய்ச்சி துறைகளுக்கு வழங்கி பல வெற்றிகரமான விஞ்ஞான ஆய்வுகளுக்கு கூட்டான கை கொடுப்பாக செயல்பட்டது அவர் வாழ்வில் ஒரு சாதனைமிகுந்த காலமாகும். 1969ம் ஆண்டு! யூலை 9ம் திகதி! உலக வரலாற்றில் ஒரு மறக்க முடியாத சாதனை கண்ட தினம். சந்திரனில் மனிதன் கால் பதித்த நாள். திரு. நீல் ஆம்ஸ்ரோங்க் (Mr. Neil Armstrong) என்ற விண்வெளி விஞ்ஞானி முதல் நபராக சந்திரனில் கால் பதித்து நடந்து அமெரிக்காவின் தேசிய கொடியினை சந்திரனில் நாட்டுகின்றார். இவரை தொடர்ந்து இரண்டாவது நபராக கால் பதித்து நடக்கின்றார் திரு. புஷ் ஆல்றின்! (Mr. Buzz Aldrin) மூன்றாவது விண்வெளி விஞ்ஞானியாக சந்தரனில் நின்றவர் திரு. மைக்கல் ஹொலின்ஸ் (Mr. Michael Collins). உலகநாடுகள் தொலைக்காட்சிகள் மூலம் இவ் சாதனைகளை பார்த்து கொண்டிருந்தனர். சந்திரனில் கால் பதிக்கும் இவர்களை தளத்திலிருந்து நாசா விண்வெளி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தொடர்ந்து தூக்கமேயின்றி வழி நடத்துகின்றனர். அவ் விஞ்ஞானிகள் குழுவில் தொடர்புகளை தொடரும் தொழில் நுட்பவியலாளர்களுள் (Communication Scientist) முக்கியமானவராக கலாநிதி. வைத்திலிங்கம் – துரைசாமி அவர்களும் செயல்பட்ட வண்ணமேயிருக்கின்றார். “நாசா அப்பலோ சாதனை விருது” (The Nasa Appollo Achivement Award) அமெரிக்க நாசா விண்வெளி மையத்தினால், யூலை|20|1969 யில் இவருக்கு வழங்கப்பட்டது. சந்திரனில் மனிதன் தடம் பதித்த அந்த காலம்! அவர்களை வெற்றிகரமாக தடம் பதிப்பதில் செயல்பட்ட விஞ்ஞானிகள் குழுவில் நமது தாயக மண்ணைச் சேர்ந்த இருவர் பணிபுரிந்தனர். ஒருவர் கலாநிதி சிறில் பொன்னம்பெருமா (Dr. Cyril – Ponnam Peruma) என்ற சிங்கள இனத்தினை சேர்ந்த இரசாயனவியல் நிபுணர். நாசா விண்வெளி ஆய்வு பல்கலைக்கழகத்தின் இராசயன கூர்ப்பு துறையின் பொறுப்பாளராக அந்த நேரம் பணிபுரிந்து வந்தவர் ஆவார். சந்திரனிலிருந்து எடுத்து வரப்பட்ட மண்ணை பரிசோதனை செய்யும் விஞ்ஞானியாக அவர் செயல்பட்டார். மற்றவர் கலாநிதி வைத்திலிங்கம் – துரைசாமி விண்வெளியில் சுற்றி சந்திரனில் தடம் பதித்து நிற்கும் வீரர்களுடன் தொலை தொடர்புகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் குழுவில் இயங்கியவர். இங்கு இன்னொரு விடயத்தினையும் குறிப்பிட்டேயாக வேண்டும். சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்த நாசா விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகளில் ஒருவர் தங்கள் நாட்டினை சேர்ந்தவர் கலாநிதி சிறில் – பொன்னம்பெருமா என பெருமையுடன் அன்றைய இலங்கை அரசு அந்த காலங்களில் பறைசாற்றி கௌரவித்தது. ஆனால், அதே குழுவில் பணிபுரிந்து சாதனை படைத்த இலங்கை தேசத்தினை சேர்ந்த இன்னொரு விஞ்ஞானியான கலாநிதி. வைத்திலிங்கம் – துரைசாமி அவர்களை தமிழன் என்ற காரணமாகவோ என்னவோ இலங்கை அரசு பெரிதாக திரும்பிப் பார்த்ததாக செய்திகள் எவையுமில்லை. ஆனால், தொடர்ந்து தமது விடுமுறை காலங்களில், அவர் தாயக மண் திரும்பியபோது அவரது பிறந்த ஊரான குப்பிழான் கிராமம் சிறுவிழா கோலம் கொண்டு அவரை கௌரவித்த நிகழ்வுகள் எனது சிறு வயதில் அங்கு நான் கண்ட காட்சிகளாகும். அதே நேரம் கிராமத்திலிருந்து முதன்முதல் Ph.D. பட்டம் (கலாநிதி) பெற்றவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. அமெரிக்காவில் ஓய்வு நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவரை சில வருடங்களின் முன்பு கனடாவில் இயங்கும் சுன்னாகம் – ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் தங்கள் ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராக அழைத்து கௌரவித்திருந்தனர். சந்திரனில் மனிதர்களை தடம் பதிக்க வைத்த அந்த கால தங்கள் அனுபவங்களை விழா மேடையில் தமது நீண்ட உரையின்போது தெளிவு பண்ணியிருந்தார். கனடாவில் இயங்கும் CTR என்னும் தமிழ் வானொலியும் அவரும் ஒருவராக நின்று சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி தடம் பதித்த அனுபவங்கள் தொடர்பாக அவரிடம் நேரடி செவ்வி கண்டது. கனடாவிற்கு அவர் வருகை தரும் காலங்களில் எங்கள் இல்லங்களில் நடக்கும் சந்திப்புகள், விருந்துபசாரங்களில் அவரின் கடந்தகால கல்விதுறை, விண்வெளி ஆராய்ச்சி துறைகளின் சாதனைகள் பற்றிய அனுபவங்களின் சம்பாஷணைகள் என்றும் எமக்கு மிக ஆர்வமாகவும், பல விடயங்களை கற்றுக் கொண்ட உணர்வுகளாகவும், எமது மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும். 1990ம் ஆண்டு எதிர்பாராத நிலையில் அவரது அன்பு மனைவியின் மரணம் என்பது துயரங்களோடு சேர்ந்த அவர் வாழ்வில் தொழில்துறைகளின் பாதையினை மாற்றி ஓய்வுபெறும் நிலைமைக்கு எடுத்துச் சென்றது. தொடர்ந்து அவர் இல்லற வாழ்வின் துணையாக வாழ்வில் ஒன்றிணைந்த ருக்மணி என்னும் மனையாளின் கரம் இணைப்புடன் மகிழ்வோடு அவர் வாழ்வு மீண்டும் தொடர்ந்தது. ஓய்வு பெற்று அமெரிக்காவில் வாழும் கடந்த 30 ஆண்டுகளில் தனி தனி மாணவர்களுக்குரிய விசேட கணித ஆசிரியராக நல்ல வேதனத்தில் பணிபுரிந்தார். (Private Maths Tutor) தமது பெயரில் பங்குகள் வாங்கி விற்பனை செய்யும் கம்பனி (Stock Trading Company) ஒன்று சட்டரீதியாக பதிவு செய்து, அவ் தொழில்துறையில் பல புதிய அனுபவங்களை எதிர்கொண்டார். சாதனைகள் நிறைந்த அவர் வாழ்வு இன்றுடன் (மார்ச்|17|2022) முடிந்து விட்டது. அவர் வாழ்வு, வாழ்வில் எதிர்கொண்ட சாதனைகள் வாழ்ந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கு ஓர் பாடமாக, வழிகாட்டலாக அமையட்டும். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக ஒன்றாக சேர்ந்து துதிப்போம். - கனடாவிலிருந்து சிவ - பஞ்சலிங்கம்.இப்புவியில் ஆரோக்கியமான நிலைமையில் வாழ்ந்து கொண்டு, 90 தடவைகள் சூரியனை சுற்றி வலம் வந்த ஈழ தமிழ் விஞ்ஞானி கலாநிதி. வைத்திலிங்கம் - துரைசாமி அவர்கள் தமது 90வது சுற்றுகையின் முடிவினை தமது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடியவர். தொடர்ந்து தமது 91வது சுற்றுகை வட்டத்தின் ஆரம்பத்தில் ஆண்டவரோடு அரவணைக்கப்பட்டு விட்டார். அந்த விண்வெளி ஆய்வுதுறை விஞ்ஞானியின் வாழ்வு இன்று அஸ்தமனமாகி விட்டது. இது இயற்கையின் நியதி! துயரப்பட வேண்டிய முடிவு அல்ல! போற்றி வணங்கி, துதித்து அனுப்பி வைக்க வேண்டிய பிரார்த்தனைகளுடன் சேர்ந்த ஓர் நிகழ்வு!  பிறப்பு என்ற தொடக்க புள்ளிக்கும் இறப்பு என்ற அவரது முடிவு புள்ளிக்கும் இடையில் அவர் கடந்து வந்த ஒவ்வொரு படி கல்லும் சாதனைகள் மிகுந்தது. (Accomplished by Superior ability, Special effort, Great courage and Heroic deed)  அவரின் வாழ்வும், அனுபவமும் இளைய தலைமுறைகளின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒரு பாடம் (Role Model)  மிகுந்த கூர்மையான கல்வியாளர்! விண்வெளி விஞ்ஞான ஆய்வு துறைகளில் அவரின் பங்களிப்புகள் ஏராளம். (Intelligental Educationist & Space Research contributor)  முதுமையிலும் சில ஓட்ட போட்டிகளில் பங்குபற்றிய ஓர் விளையாட்டு வீரர். (Physically active and Strong athletics)  தமது நிதியியல், பொருளாதார துறைகளையும் வளர்த்து கொண்டு வழிகள், ஆலோசனைகள் கேட்டும் ஏனையோருக்கும் வழிகாட்டும் நற்குணம் படைத்தவர். (Loyal Mentor)  நல்லதொரு குடும்பதலைவன்! உறவினர்கள், நண்பர்கள், கிராமத்தவர்களை அனுசரித்து செல்லும் பெருந்தன்மையானவர். (Greatest Gentleman) ஈழ மண்ணில் குப்பிழான் என்னும் கிராமத்தினை பிறப்பிடமாக கொண்டவர். [குப்பிழானில் இன்று சிவபூமியினால் நடத்தப்படும் சிவஞான ஆச்சிரமமாக உள்ள இல்லமே அவர் பிறந்து வளர்ந்த அவரது பெற்றோரால் உருவாக்கப்பட்ட மனையாகும். தாம் பிறந்த கிராமத்தின் மீது கொண்ட அபிமானத்தினால் அமெரிக்காவில் பிறந்து, இன்று அங்கு வசிக்கும் தமது கடைசி பிள்ளையின் நடுப்பெயரினை [Middle Name] அவர் பிறந்தபோது “குப்பிழான்” என வைத்து அதுவே இன்றும் பேணப்படுகின்றது. அதாவது அவரது பெயர் Mr. GANESH K THURAISAMY [திரு. கணேஷ் – குப்பிழான் - துரைசாமி] என்பதாகும். கலாநிதி – வைத்திலிங்கம் – துரைசாமி அவர்களின் தந்தை தமது இளமை காலத்தில் தாயக மண்ணிலிருந்து கடல் கடந்து சென்று 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் மலேசியாவில் புகையிரத பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது அன்னை திருமதி. சிவகங்சை வைத்திலிங்கம், கட்டைபிராய் என்னும் ஊரினை பிறப்பிடமாக கொண்டவர். ஓர் அற்புதமான, பண்பான சுபாவங்களினால் முக வசீகரம் கொண்ட தெய்வீக பெண் போன்ற ஓர் அம்மையார். இவருக்கு இரு அக்காமார். ஒரு தங்கை என கூட பிறந்தவர்கள் ஆவார்கள். குப்பிழான் விக்கினேஸ்வரா வித்தியாசாலை மற்றும் [இன்று விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்] புன்னாலைகட்டுவன் ஆங்கில பாடசாலையில் ஆரம்ப கல்வியினை தொடங்கி தொடர்ந்து சுன்னாகம் – ஸ்கந்தவரோதயா கல்லூரி அதனை தொடர்ந்து, யாழ் – மத்திய கல்லூரியில் உயர் கற்கை நெறியினை முடித்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணித துறையில் சிறப்பு பட்டம் (B.Sc. [Hons.] in Maths) பெற்றார். மாணவ பருவ காலங்களில் குப்பிழான் கிராமத்தில் தமது தந்தையின் விவசாய விளைநிலங்களில் இரவு பகலாக வேலை செய்வதும், சுன்னாகம் – ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு தினமும் கால்நடையாகவும், ஓட்டமுமாக சென்று படித்து வந்ததும் இவர் வாழ்வின் சுவையான காலங்களாகும். அந்த ஓட்டம் அவரை அந்த காலங்களில் விளையாட்டுப் போட்டிகளிலும் பல இடங்களில் வீரனாக்கியது. இலங்கை பல்கலைக்கழகத்தில் கணித, விஞ்ஞான துறையில் பட்டப்படிப்பினை முடித்தபின்பு, அங்கு பகுதிநேர விரிவுரையாளராக பணிபுரிந்து வந்த நேரம், அவர் ஏற்கனவே கல்வி கற்ற யாழ் – மத்திய கல்லூரி நிர்வாகம் இவரது பல்கலைக்கழக பேராசிரியர் ஊடாக தங்கள் கல்லூரியில் விசேட நியமனம் [Special Post with High Scale] வழங்க தயார் நிலையில் அழைப்பு விடுத்திருந்தது. தொடர்ந்து தமது வாலிப வயது காலங்களில் யாழ் – மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்புகளுக்கு கணிதம், பௌதிகவியல் கற்பிக்கும் ஆசிரியராகவும், மாணவர் விடுதி பொறுப்பாளராகவும் சில காலங்கள் பணிபுரிந்து வந்தபோது, தமது கல்விதுறை சார்ந்த தகைமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்னும் நோக்கில் இங்கிலாந்து சென்று “பட்டவியல் கணக்காளர்” [Chartered Accountant] கல்விதுறையில் பயில்வதற்கு மனு செய்து, அனுமதி பெற்று அங்கு செல்வதற்குரிய விசா, கப்பல் பிரயாண ஒழுங்குகளை மேற்கொண்டார். இவரது யாழ் – மத்திய கல்லூரியின் வெற்றிடமான ஆசிரியர் நியமனத்திற்கு குப்பிழானை சேர்ந்த அவரது உறவினரும் நண்பருமான திரு. சின்னதம்பி – நடராஜா அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதே யாழ் - மத்திய கல்லூரியின் பழைய மாணவரான திரு. சின்னதம்பி – நடராஜா அவர்கள் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் பௌதிகவியல் துறையில் சிறப்பு பட்டம் பெற்ற பட்டதாரியாவார். 1958ம் ஆண்டு! கடல் கடந்து அந்நிய நாடு ஒன்றுக்கு செல்பவரை ஒரு ஹுரோவாக பார்க்கும் காலம். விமான பிரயாணம் என்பது மிக செலவானதாகவும், அருமையானதாகவும் இருந்தமையால், கடல் மார்க்கமாக கப்பல் பிரயாணத்தின் மூலமே பலரும் பிரயாணம் செய்வார்கள். இவரது பிரயாணமும் கொழும்பு துறைமுகத்திலிருந்து, அந்த காலத்திற்குரிய 100 இங்கிலாந்து பவுண்ஸ் கப்பல் கட்டணத்துடன் ஆரம்பித்து மூன்று கிழமையின் பின்பு, ஐந்து நாடுகளின் துறைமுகங்களில் அவர் சென்ற பிரயாண கப்பல் தரித்து நின்று நின்று, [Bombay, Port of City of Aden in Arab Country, Suez in Egypt, Beirut Labanon, Marsailees in France] இறுதியில் இங்கிலாந்து நாட்டின் “சவுதம்ரன்” [Southamton] கப்பல் துறைமுகத்தினை போய் சேர்ந்தது. குப்பிழான் கிராமத்திலிருந்து கடல் மார்க்கமாக இங்கிலாந்து சென்ற முதல் நபர் என்ற சான்று இன்றும் இவருக்கே உரித்தானதாகும். லண்டனில் “கணக்காய்வு அலுவலகம்” [Small Chartered Accountancy Firm] ஒன்றில் அலுவலக பணியாளர் தொழில் கிழமைக்கு ஐந்து பவுண் ஊதியத்தில் உடனடியாக அந்த நேரம் கிடைத்தது. அதே துறையில் பணி புரிந்துகொண்டு பட்டய கணக்காளர் கல்வியினை தொடர்வதே அடுத்த அவரது நோக்கமாகவிருந்தது. “கணக்காளர்” தொழில் என்பது ஒரு சிறு கௌரவமான அலுவலக உத்தியோகத்தர் மட்டுமே என்றதொரு பார்வை முதல் ஐந்து மாதத்தினுள் அவர் மனதில் எழுந்தால் தமக்கு தமது எதிர்கால வாழ்வில், தமது ஆற்றல், திறமைகளை வெளிகொணர இது உகந்ததல்ல என்ற எண்ணங்கள் அவரது மனதில் அந்த நேரம் பல குழப்பங்களை உருவாக்கியிருந்தது. லண்டன் நகரின் நூலகம் ஒன்றுக்கு சென்றபோது, அந்த காலம் [1958ம் ஆண்டு] பிரித்தானிய காலணித்துவ நாடுகளில் ஒன்றான “ஜீமன்” [அராபிய நாடுகளில் Aden என்ற பெயரில முன்பிருந்தது.] நாட்டில் ஆசிரிய தொழிலுக்கு விண்ணப்பங்கள் கோரும் தகவல் கிடைத்ததும் அதற்கு மனு செய்தார். உடனடியாக அவர் பாதை மாறியது. அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டு லண்டனில் நேர்முக பரீட்சை நடத்தப்பட்டு பிரித்தானியாவின் காலனித்துவ ஆதிக்கத்திலிருந்த அந்த அராபிய நாட்டில் ஆசிரிய நியமனமும் கிடைத்து விட்டது. லண்டனில் தொடரவிருந்த பட்டய கணக்காளர் கனவினை நிறுத்திவிட்டு அராபிய நாடான ஜீமன் சென்று அங்கு ஆசிரிய தொழில் செய்தார். 1960ம் ஆண்டு! தாயக மண் திரும்பி வந்து இல்லற வாழ்வில் இணைந்து கொண்டார். Ms. யோகராணி! இவரது இல்லத்தரசி! யாழ்ப்பாணத்தில் ஊரெழு என்ற கிராமத்தினை பூர்வீகமாக கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரி! இவர்கள் இல்லற வாழ்வில் மூன்று பிள்ளைகள். மூத்த மகன் பிரகாஷ் பல் மருத்துவர். மகள் கல்பனா மருத்துவர். இளைய மகன் கணேஷ் தகவல் தொழில்நுட்பவியலாளர். தற்போது மூவரும் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர். திருமணத்தின் பின்பு மீண்டும் ஜீமன் நாடு சென்று தமது ஆசிரிய பணியினை தொடர்ந்தார். 1961ம் ஆண்டு! அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருந்த இவரது பல்கலைக்கழக கால நண்பன், பௌதிகவியல் நிபுணர் [Physist] கலாநிதி. அருணாசலம் அவர்களின் ஆலோசனைகள், வழிகாட்டல்களை ஏற்று அமெரிக்கா சென்று அங்குள்ள மசாசசு செற்ஸ் பல்கலைக்கழகத்தில் [University of Massachusetts] கல்வி பயின்று முதுமாணி [M.Sc.,] பட்டம் பெற்றார். தொடர்ந்து அமெரிக்காவின் “மேரிலான்ட் பல்கலைக்கழகத்தில்” (University of Maryland) பிரயோக கணிதத்தில் கலாநிதி பட்டம் (Ph.D.) பெற்றார். “கலாநிதி” பட்டம் பெற்றதனை தொடர்ந்து சர்வதேச ரீதியில் தொழில்நுட்ப தகவல்களை வழங்கும் அமெரிக்காவின் பிரபல்யமான தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி கம்பனியின் நுண்பரிசோதனை கூடத்தில் (Bell Comm Laboratory) தொழில்நுட்பவியல் விஞ்ஞானியாக தமது பணியினை தொடர்ந்தார். விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளும் சர்வதேச விண்வெளி பல்கலைகழகமான அமெரிக்க நாசா பல்கலைக்கழக (NASA – International University) விண்வெளி ஆய்வுகளுக்கு தொலைதொடர் தொழில்நுட்பங்களை வழங்கும் ஒரு நிறுவனமாக இவர் பணிபுரிந்த “பெல் நுண்பரிசோதனை மையம்” கூட்டாக சேர்ந்து பணிபுரிந்தது. இந்த காலங்களில் கூட்டாக இயங்கிய நாசா விண்வெளி விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பணிபுரிந்து, தமது கல்வி, புலமைகள், ஆளுமை திறமைகளை விண்வெளி ஆராய்ச்சி துறைகளுக்கு வழங்கி பல வெற்றிகரமான விஞ்ஞான ஆய்வுகளுக்கு கூட்டான கை கொடுப்பாக செயல்பட்டது அவர் வாழ்வில் ஒரு சாதனைமிகுந்த காலமாகும். 1969ம் ஆண்டு! யூலை 9ம் திகதி! உலக வரலாற்றில் ஒரு மறக்க முடியாத சாதனை கண்ட தினம். சந்திரனில் மனிதன் கால் பதித்த நாள். திரு. நீல் ஆம்ஸ்ரோங்க் (Mr. Neil Armstrong) என்ற விண்வெளி விஞ்ஞானி முதல் நபராக சந்திரனில் கால் பதித்து நடந்து அமெரிக்காவின் தேசிய கொடியினை சந்திரனில் நாட்டுகின்றார். இவரை தொடர்ந்து இரண்டாவது நபராக கால் பதித்து நடக்கின்றார் திரு. புஷ் ஆல்றின்! (Mr. Buzz Aldrin) மூன்றாவது விண்வெளி விஞ்ஞானியாக சந்தரனில் நின்றவர் திரு. மைக்கல் ஹொலின்ஸ் (Mr. Michael Collins). உலகநாடுகள் தொலைக்காட்சிகள் மூலம் இவ் சாதனைகளை பார்த்து கொண்டிருந்தனர். சந்திரனில் கால் பதிக்கும் இவர்களை தளத்திலிருந்து நாசா விண்வெளி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தொடர்ந்து தூக்கமேயின்றி வழி நடத்துகின்றனர். அவ் விஞ்ஞானிகள் குழுவில் தொடர்புகளை தொடரும் தொழில் நுட்பவியலாளர்களுள் (Communication Scientist) முக்கியமானவராக கலாநிதி. வைத்திலிங்கம் – துரைசாமி அவர்களும் செயல்பட்ட வண்ணமேயிருக்கின்றார். “நாசா அப்பலோ சாதனை விருது” (The Nasa Appollo Achivement Award) அமெரிக்க நாசா விண்வெளி மையத்தினால், யூலை|20|1969 யில் இவருக்கு வழங்கப்பட்டது. சந்திரனில் மனிதன் தடம் பதித்த அந்த காலம்! அவர்களை வெற்றிகரமாக தடம் பதிப்பதில் செயல்பட்ட விஞ்ஞானிகள் குழுவில் நமது தாயக மண்ணைச் சேர்ந்த இருவர் பணிபுரிந்தனர். ஒருவர் கலாநிதி சிறில் பொன்னம்பெருமா (Dr. Cyril – Ponnam Peruma) என்ற சிங்கள இனத்தினை சேர்ந்த இரசாயனவியல் நிபுணர். நாசா விண்வெளி ஆய்வு பல்கலைக்கழகத்தின் இராசயன கூர்ப்பு துறையின் பொறுப்பாளராக அந்த நேரம் பணிபுரிந்து வந்தவர் ஆவார். சந்திரனிலிருந்து எடுத்து வரப்பட்ட மண்ணை பரிசோதனை செய்யும் விஞ்ஞானியாக அவர் செயல்பட்டார். மற்றவர் கலாநிதி வைத்திலிங்கம் – துரைசாமி விண்வெளியில் சுற்றி சந்திரனில் தடம் பதித்து நிற்கும் வீரர்களுடன் தொலை தொடர்புகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் குழுவில் இயங்கியவர். இங்கு இன்னொரு விடயத்தினையும் குறிப்பிட்டேயாக வேண்டும். சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்த நாசா விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகளில் ஒருவர் தங்கள் நாட்டினை சேர்ந்தவர் கலாநிதி சிறில் – பொன்னம்பெருமா என பெருமையுடன் அன்றைய இலங்கை அரசு அந்த காலங்களில் பறைசாற்றி கௌரவித்தது. ஆனால், அதே குழுவில் பணிபுரிந்து சாதனை படைத்த இலங்கை தேசத்தினை சேர்ந்த இன்னொரு விஞ்ஞானியான கலாநிதி. வைத்திலிங்கம் – துரைசாமி அவர்களை தமிழன் என்ற காரணமாகவோ என்னவோ இலங்கை அரசு பெரிதாக திரும்பிப் பார்த்ததாக செய்திகள் எவையுமில்லை. ஆனால், தொடர்ந்து தமது விடுமுறை காலங்களில், அவர் தாயக மண் திரும்பியபோது அவரது பிறந்த ஊரான குப்பிழான் கிராமம் சிறுவிழா கோலம் கொண்டு அவரை கௌரவித்த நிகழ்வுகள் எனது சிறு வயதில் அங்கு நான் கண்ட காட்சிகளாகும். அதே நேரம் கிராமத்திலிருந்து முதன்முதல் Ph.D. பட்டம் (கலாநிதி) பெற்றவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. அமெரிக்காவில் ஓய்வு நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவரை சில வருடங்களின் முன்பு கனடாவில் இயங்கும் சுன்னாகம் – ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் தங்கள் ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராக அழைத்து கௌரவித்திருந்தனர். சந்திரனில் மனிதர்களை தடம் பதிக்க வைத்த அந்த கால தங்கள் அனுபவங்களை விழா மேடையில் தமது நீண்ட உரையின்போது தெளிவு பண்ணியிருந்தார். கனடாவில் இயங்கும் CTR என்னும் தமிழ் வானொலியும் அவரும் ஒருவராக நின்று சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி தடம் பதித்த அனுபவங்கள் தொடர்பாக அவரிடம் நேரடி செவ்வி கண்டது. கனடாவிற்கு அவர் வருகை தரும் காலங்களில் எங்கள் இல்லங்களில் நடக்கும் சந்திப்புகள், விருந்துபசாரங்களில் அவரின் கடந்தகால கல்விதுறை, விண்வெளி ஆராய்ச்சி துறைகளின் சாதனைகள் பற்றிய அனுபவங்களின் சம்பாஷணைகள் என்றும் எமக்கு மிக ஆர்வமாகவும், பல விடயங்களை கற்றுக் கொண்ட உணர்வுகளாகவும், எமது மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும். 1990ம் ஆண்டு எதிர்பாராத நிலையில் அவரது அன்பு மனைவியின் மரணம் என்பது துயரங்களோடு சேர்ந்த அவர் வாழ்வில் தொழில்துறைகளின் பாதையினை மாற்றி ஓய்வுபெறும் நிலைமைக்கு எடுத்துச் சென்றது. தொடர்ந்து அவர் இல்லற வாழ்வின் துணையாக வாழ்வில் ஒன்றிணைந்த ருக்மணி என்னும் மனையாளின் கரம் இணைப்புடன் மகிழ்வோடு அவர் வாழ்வு மீண்டும் தொடர்ந்தது. ஓய்வு பெற்று அமெரிக்காவில் வாழும் கடந்த 30 ஆண்டுகளில் தனி தனி மாணவர்களுக்குரிய விசேட கணித ஆசிரியராக நல்ல வேதனத்தில் பணிபுரிந்தார். (Private Maths Tutor) தமது பெயரில் பங்குகள் வாங்கி விற்பனை செய்யும் கம்பனி (Stock Trading Company) ஒன்று சட்டரீதியாக பதிவு செய்து, அவ் தொழில்துறையில் பல புதிய அனுபவங்களை எதிர்கொண்டார். சாதனைகள் நிறைந்த அவர் வாழ்வு இன்றுடன் (மார்ச்|17|2022) முடிந்து விட்டது. அவர் வாழ்வு, வாழ்வில் எதிர்கொண்ட சாதனைகள் வாழ்ந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கு ஓர் பாடமாக, வழிகாட்டலாக அமையட்டும். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக ஒன்றாக சேர்ந்து துதிப்போம். - கனடாவிலிருந்து சிவ - பஞ்சலிங்கம். https://www.facebook.com/Newkuppilan/
 3. ஈழத்தைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ள "பயங்கரவாதி" நாவல் இன்னும் புத்தக வடிவில் எனக்குக் கிடைக்கவில்லை, ஆனாலும் அமேசான் கிண்டல் தளத்தில் வாங்கிப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். ஈழ மண்ணிலிருந்து இப்படி ஒரு படைப்பை, உள்ளிருந்த படைப்பாக எழுதுவது அவ்வளவு இலகுவான காரியமல்ல, அது கத்தி முனையில் நடப்பதற்குச் சமமானது. இருந்தும், தான் கொண்ட கொள்கையில் எந்த சமரசமும் செய்யாமல் 2005 - 2009 வரையான 4 ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்த நிகழ்வுகளை மிகவும் நேர்த்தியான முறையில் கதையாகச் சொல்லியுள்ளார். தீபச்செல்வன் ஒரு சிறந்த கவிஞர் என்பதைத் தாண்டி ஒரு சிறந்த யதார்த்த எழுத்தாளர் என்பதை அவரின் "நடுகல்" நாவல் படித்தவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள். அதை இந்த நாவலின் மூலம் இன்னும் ஒரு முறை உரத்துக் கூறியிருக்கிறார். நான் 2000 - 2004 வரையான காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்தவன் என்றவகையில், "பொங்குதமிழ்" நிகழ்வின் ஆரம்ப காலம் பற்றியும் அதன் பின்னரான விளைவுகள் பற்றியும் பட்டுணர்ந்தவன், நன்கறிந்தவன். அதற்குப் பின்னர், இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுடனான சமாதான ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக முறித்துக்கொண்டு போரினை வலிந்து துவங்கிய 2006 இல் இருந்து போர் முடிவுற்ற 2009 வரையிலான காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள்ளும் வெளியிலும் நடந்த அத்தனை துன்பகரமான நிகழ்வுகளையும் உள்வாங்கிக்கொண்டு "பயங்கரவாதி" நாவல் நகர்கிறது. இந்தக் கதையைப் பற்றியோ கதையில் வரும் பாத்திரங்கள் பற்றியோ நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. கதையின் நாயகன் மாறன், மலரினி, துருவன், சுதர்சன், பாரதியம்மா, மகிழன், குமணன், மற்றும் சிறு சிறு பாத்திரங்களில் வரும் அனைவரும் கதையின் உயிரோட்டமாக நின்று தொய்வில்லாமல் கதையைத் தாங்கிச் செல்கின்றனர். தமிழீழப் போராட்டம் வெறுமனே ஆயுதப்போராட்டம் மட்டுமல்ல அதையும் தாண்டிப் பேசப்படவேண்டிய பல விடயங்கள் உள்ளன என்பதை இந்த நாவல் நிச்சயம் உங்களுக்குச் சொல்லும். ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பங்கு என்ன என்பதையும் அன்றைய யுத்த காலத்தில் மாணவர்கள் கடந்து வந்த கடினமான நாட்களையும் தாங்கி நகர்கிறது நாவல். இந்த நாவல் வாசிப்புக்கிடையில் பல இடங்களில் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. நட்பு, நம்பிக்கைத் துரோகம், குழிபறிப்பு, உற்ற சொந்தங்களின் இழப்பு, வலி மிகுந்த வாழ்க்கைக்கு இடையில் ஒரு மெல்லிய காதல், பல்கலைக் கழக மாணவர்களின் வழமையான குறும்புகள் என்று நகர்கிறது கதை. நாவலின் ஒவ்வொரு பக்கமும் படிக்கப் படிக்கக் கண்களின் முன் காவியமாய், படக் காட்சிகளாய் விரிந்து உயிர்ப்பயம் கொள்ளச் செய்கின்றன. உண்மையைச் சொல்வதானால், “பயங்கரவாதி” நாவல் வாசித்து முடித்த பின்னரும் என்மனம் பல்கலைக்கழககத்தையும் விடுதியையும் சுற்றி அலைகிறது. அன்பான வாசகர்களே, நண்பர்களே, தயவுசெய்து ஒருமுறையாவது “பயங்கரவாதி” நாவலை வாங்கிப் படியுங்கள். என் அதிகபட்ச ஆசை என்னவென்றால், ஈழம் பற்றிய நல்ல படம் (சினிமா) எடுக்க முனையும் தென்னிந்திய சினிமா படத் தயாரிப்பாளர்கள் / இயக்குனர்களில் யாராவது ஒருவர் இக்கதையை படமாகக் கொண்டுவர முயலவேண்டும். -தியா- 15/03/2022
 4. புல்வெளியில் தூங்கும் நிழல்கள்! நீண்ட பயணத்தின் இடையிடையே பாலங்களைக் கடப்பதுபோல, என் கடந்தகால நினைவுகளை மீட்டபடி என்னைக் கடந்து செல்கின்றன. ஒரு நிழலில் இருந்து இன்னொரு நிழலுக்கு, மாறிமாறி நான் பயணப்பட்டேன் . மகிழ்ந்து தூங்கும் மரங்களின் கீழ் கருமையின் ஒளியால் சூழப்பட்ட நிழல்கள். ஆளுறக்கம் கொள்கின்றன. பயங்கர சூறாவளி வீசுகிறது மரங்கள் வேருடன் குடைசாய்ந்து நிழல்களுடன் சல்லாபித்தபடி, மண்ணில் புரண்டன. என் நினைவுகள் ஒரு நிழல் வெறுமையின் பாத்திரம் தூக்கி வீசப்பட்டது. -தியா-
 5. ஒருநாள் சூரியன் பூமிக்கு இறங்கி வந்தான்! திறந்த விளையாட்டு மைதானம், ஆட்களற்று வெறுமையானது. மாணவர்கள் எங்கும் இல்லை! பறவைகள் அற்ற வனாந்தரமாய், தாயில்லாப் பிள்ளை போல், தனிமையில் கிடந்தது பாடசாலை. மரங்கள் நிழல்களைத் தின்று, ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தன. காகிதப் பறவைகள், காற்றில் சிறகு விரித்துப் பறந்தன. தூசி படிந்த பள்ளி மணி, அடிப்பாரற்று அநாதையாயிருந்தது. துண்டிக்கப்பட்ட இலைகள், காற்றின் அந்தரத்தில் நடம்புரிந்தன. பள்ளிகளைப் போர் சூழ்ந்த பின்னொரு நாளில், வகுப்பறை நாற்காலிகளை, கண்ணீர் பூக்கள் நிறைத்தன. கரும்பலகைகள் மழையில் நனைந்தன. மற்றும், மணிகள், தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தன. -தியா-
 6. விசித்திரமான நிகழ்வுகள் நிறைந்த வாழ்க்கையில் வரலாறு முக்கியமானது. அது என்னை விட என்னை அதிகம் அறிந்தது. துயரங்களைக் கடக்க, கடினமான நாட்களில் காலத்தைக் கழிக்க, வலி நிறைந்த அத்தருணங்களை எதிர்கொள்ள, இன்னும் என்னென்னமோ கற்றுத் தந்தது. காலப் பெருவெளியில் சிக்கி நான், சுழலில் சிதைந்த பந்துபோல் பேரழிவுகளுக்கிடையில் அலைந்தேன். பெருங்கடலின் ஆழத்தில், தொலைந்து போன, ஒரு பேய்க் கப்பலானேன். சில சமயங்களில் நான், மென்மையான நித்திய ஒளியில், என் உயரிய நேரத்தை இழந்தேன். இன்னும் சில நேரம், கனவுகள் பிடிப்பவர்களின் கைகளில் நான் அடைபட்டிருந்தேன். காலம் என்னைக் கட்டவிழ்த்து விட்டபின், என் கைகளை நீட்டி, நான் சுதந்திரமாக பறந்தபோதுதான், நான் உணர்ந்தேன், என்னாலும் பறக்க முடியும் என்று, நான் ஒரு சுதந்திரப் பறவை! -தியா-
 7. மேலைத்தேச நண்பரே! எதை நீங்கள் இன்று பார்க்கிறீர்களோ, அதை நாங்கள் பார்த்திருக்கிறோம் நண்பரே! உண்மையான உணர்ச்சிகள் கொப்பளிக்கின்ற, சோகத்தின் ஆழத்தை நாம் அனுபவித்திருக்கிறோம். போரின் நடுவே, வளர்ந்த குழந்தைகள் நாம்! ஆதலால் பலமுறை நாம், சொர்க்கத்தை உணர்ந்துள்ளோம் நண்பரே. மரணத்தின் வேதனையை, தனிமையின் கொடுமையை, கொடிய வறுமையை நாம் எதிர்கொண்டோம். பசியின் உக்கிரத்தில் பலநாள் தவித்திருக்கிறோம். போரின் நடுவே நம் இளமையைத் தொலைத்தோம். தினமரணத் துக்கத்துள் தவித்தோம். நாம் விடும் ஒவ்வொரு மூச்சிலும், எம் மண்ணின் ரணம் கலந்துள்ளது. பட்டவனுக்குத்தான் நோவு தெரியும் நண்பரே! ஆதலால் சொல்கிறோம், எங்கொருவன் குண்டு மழையில் செத்து மடியும்போதும், எங்களுக்கும் வலிக்கிறது நண்பரே! உங்களுக்கு வலிக்கும்போது, எங்கள் இதயத்தின் ஒரு சிறு ஓரம், இறந்துவிடுகிறது நண்பரே! நாங்கள் எம் இதயத்தையும் ஆன்மாவையும், உங்களிடம் காட்டுகிறோம். எங்களிடம் சாக்குப்போக்குகள் இல்லை, மறைக்க எதுவும் இல்லை. எப்போதும் நாம் வழங்கக்கூடியது எம் அன்பை மட்டுமே! -தியா-
 8. மிக்க நன்றி மிக்க நன்றி, உங்கள் பாராட்டுக்களை அவர்களுக்கும் சொல்கிறேன் மிக்க நன்றி, உங்கள் பாராட்டுக்களை அவர்களுக்கும் சொல்கிறேன்
 9. எனது தலைமையில் நடந்த பொங்கல் தினச் சிறப்புக் கவியரங்கம் நன்றி -தியா-
 10. மிக்க நன்றி நன்றி , உங்களை எல்லாம் பார்க்க வேணும் போல இருந்துது வெறுங்கையுடன் வாறது சரியில்லை என்று கவிதையுடன் வந்தேன் நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நிலாமதி அக்கா பகிந்த வீடியோவைப் பாருங்கள். எண்கள் வீட்டின் பின் புறத்தில் அதிகம் உள்ளன. நன்றி! நிலாமதி அக்கா நன்றி!
 11. எனக்கு உள்ளே ஒரு நெருப்பு கனன்று கொண்டிருக்கின்றது. மன அழுத்தம், சிதளூரும் காயங்கள், மற்றும் நெஞ்சு நிறைந்த வலிகள், எல்லாம் ஒன்றுகூடி ஒவ்வொரு நொடியும் என்னை விரட்டுகின்றன. இருள் ஆழமாக, அதிகமாக என்னைப் பின்தொடர்ந்து வருகிறது. மிகவும் சிக்கலான கோடுகள் என்னைச் சுற்றி வரையப்பட்டன. என் சுதந்திரம் சிறைபிடிக்கப்பட்டபோது யதார்த்தம் செத்துப்போனது. நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்த பின்னிரவில், நிலவு மறைந்து போனது, மீளா இருள் எங்கும் வியாபித்தது. மின்மினிகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை கட்டிப் பறந்தன. நீரோடி வியாபித்த நீர்நிலைகள் வற்றி வறண்டன. பள்ளத்தாக்குகள் சுக்குநூறாகப் பிளவுபட்டன. கண்ணுக்கெட்டிய திசையெங்கும் கந்தகப் புகை வியாபித்தது. மின்னலுடன் இடி முழக்கம், வானதிர்ந்தது. மிருகங்களின் உறுமல் சத்தம் இதயத்தை ரணமாக்கியது. இரவின் கறுப்பில், இருண்ட வெற்றிப் பதாகைள் காற்றில் அசைந்தன. பேயின் நகம் பட்ட மோசமான கீறல்கள் பெருவலியெடுத்தன. போர் முடிவுக்கு வந்த பிறகு, பற்கள் மற்றும் நகங்களை நிமிர்த்தியபடி பேய்கள் அங்குமிங்கும் உலாவின. லூசிபரின் சொந்த நரகத்தில் சபித்து வளர்க்கப்பட்ட கோர்கன்களின் கொடுஞ் செயலால், எண்ணற்ற உடல்கள் அங்கே பரிதாபமாக சுருண்டு கிடந்தன. எங்கள் சொந்த நிலத்தை விட்டு வெளியேறும்படி அவர்கள் வானதிரக் கூவினர். ஒருவர் பின் ஒருவராகச் சிறைப்பட நடந்த மக்களின் கூக்குரல்கள், அவர்களின் காதுகளை சென்றடையமுன் செத்துச் செயலிழந்தன. எதிரிகளின் மூச்சு மக்களுக்கு விஷ நெருப்பை சுவாசிக்கத் தந்தது. எங்கள் இனிய வாழ்க்கையின் மீது நிலவொளியின் இருண்ட பக்கங்கள் நுழைந்தன. ஆனாலும், பிரபஞ்சத்தின் அனைத்தையும் பார்க்கும் உணர்வு மட்டும் இன்னும் இழக்கப்படவில்லை. நரக கோபத்தில் பிறந்த மின்மினிப் பூச்சிகள், அழிந்தவர்களின் கடந்தகால பாவங்களை அள்ளிக் கோபத்தில் வீசின. அடர் மிகு இருளில் அந்தி பேய்கள், நிழல் உலகின் தாதாக்கள் போல நிமிந்து நின்றன... நான் முன்போல் மிகவும் சுதந்திரமாக இயங்க விரும்புகிறேன். மிளிரும் நட்சத்திரங்களைக் கண் முன்னே காண விருப்பம் கொள்கிறேன். என்னை உறுதியாக வெளிச்சம் போட்டுக் காட்டும் கடவுளின் கடிகாரத்திற்கு நன்றி! எங்கள் வீட்டின் பின்புறத்தே அடர்ந்து பரந்துள்ள டான்டேலியன்களைப் பார்க்கிறேன். நாங்கள் டான்டேலியன்களைப் போன்றவர்கள்! எந்தத் தழும்புகளுக்கும் மருந்தளிக்கும் வல்லமை படைத்தவர்கள். பதற்றம் கலந்த பயங்கரமான பயத்தின் சுவட்டால், நான் தூங்குவதற்காக அழுதேன். ஆனால், நான் இப்போது கண்ணீர் விடமாட்டேன்! நான் நெரிசலான தொழிற்சாலைகளில் இருந்து வளர்க்கப்படாத கோழி! நிம்மதியாக பறக்கும் ஒரு பில்லியன் பறவைகளில் ஒருவன். எனக்கு நன்கு தெரிந்த என் நிலத்தில் என்னை விட்டு விடுங்கள்... என் அற்புதமான காடுகளில் மட்டுமே என் மகிழ்ச்சியைத் நான் தேடுவேன்! இறுதியாக ஒன்றை மட்டும் சொல்கிறேன், நாங்கள் டெய்ஸி மலர் போன்றவர்கள் என்றும் சாம்பியன்களாக இருப்பதையே விரும்புகிறோம்! -தியா- நன்றி; பனிப்பூக்கள் https://www.panippookkal.com/ithazh/archives/23477?fbclid=IwAR2zMbJnH7bmVliDmTAMu2rrqxCNLMcnrA0JaGotxW6p7KuLtXMHqjxDb7o
 12. அன்புக்கு நிகர் இவ்வுலகில் வேறேது? மிகச் சிறப்பான நடை.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.