Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  1. அமெரிக்கா உலகம் முழுவதுலும் உள்ள கடற்பரப்புகளை உயர் தொழில் நுட்பம் மூலம் தன்னால் முடிந்த அளவுக்கு கண்காணிக்கிறது. இதில் என்ன ஆச்சரியம் உள்ளது. இதில் என்ன பகீரங்கப்படுத்துவதற்கு உள்ளது.
  2. எடுத்ததற்கெல்லாம் பழமைவாதம் பேசும் நீங்எள் ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய பதிவு திருமண முறையை மட்டும் ஏற்பதேனோ? இங்கு திரிக்கு திரிக்கு ஒரே விடயத்தை பலர் காவித்திரியும் போது இப்படி நீங்கள் அவர்களை கேள்வி கேட்டதில்லை. மாறாக அவர்களுடன் நீங்களும் இணைந்து லூட்டி அடித்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றீர்களே! அது ஏன் சார்? அவர்கள் உங்கள் நண்பர்கள் என்பதாலோ?
  3. இங்கு எனது கருத்தில் இனம் மதம் எங்கு வந்தது? சீமான் என்ற மூன்றாந்தர அரசியல்வாதியுடன் சேர்ந்து அடுத்தவன் நாடுவரை எல்லை தாண்டிச் சென்று நீங்கள் தூவும் இனதுவேசம் என்ற விசம் கண்டிக்கத்ததல்லவோ!
  4. ஐரோப்பாவில் வாழும் உங்களுக்கு நன்றாக தெரியும், இங்கு மத வெறி, மத அடிப்படைவாதம் இல்லை என்பது. அப்படி இருந்தால் அது ஆசிய/ ஆசிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வாழும் மக்களிடையே தான் அது வீரியத்துடன் இருக்கிறது என்பது. உங்களுக்கு தெரியும், ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது ஐரோப்பாவில் இனவெறி மிக குறைவான அளவில் உள்ளதென்பது. உங்களுக்கு தெரியும், இலங்கை தமிழர்களுக்கு இருக்கும் இனவெறியை விடவே ஐரோப்பியர்களுக்குள் இனவெறி மிக குறைவு என்பது . உங்களுக்கு தெரியும் வரட்டு கெளரவம், வெற்று பழமைவாதம் ஆசிய ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் போது இங்கு குறைவு என்பது. உங்களுக்கு அது நன்றாக தெரிந்ததால் தான் அப்படியான பிற்போக்குத்தனம் உள்ள நாட்டில் இருந்து இவ்வாறான தாராளமயமான நாடுகளில் குடியேறி அவர்களின் நாட்டு முன்னேற்றத்தால் பலன் பெற்று மகிழ்சசியாக வாழ்கின்றீர்கள். இவ்வாறாக, அனைத்தும் உங்கள் அறிவுக்கு தெரிந்த நீங்கள் அதை ஒப்புக்கொள்ளமாட்டீர்கள். காரணம் அதே வரட்டு கௌரவம், போலி பெருமை பேசுவதற்காக என்பதும் என்னை விட உங்களுக்கு நன்றாக தெரியும். இப்படி அனைத்தும் தெரிந்த உங்களுக்கு எனது அறிவுரை தேவையில்லை என்பது எனக்கு தெரியும்.
  5. அப்ப சீமான் இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தது என்ன கணக்கு. முப்பாட்டன் முருகன் இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தாதால் அதை பின்பற்றி செபஸ்டியன் சீமானும் வைத்திருந்தார் என்று கூறிவீர்களா புலவரே!
  6. மதவெறி, வரட்டு கௌரவம், வெட்டி வீரம், முட்டாள்தனமான பழமைவாதம் போன்வற்றை கைவிட்டு அறிவு பூர்வமாக அரசியலை செய்வதே நீங்கள் கூறிய இனங்களின் வெற்றிக்கான முதற்படி. அதை செய்யாதவரை அழிவுகளும் புலம்பல்களும் தொடரும்.
  7. ஆயுதங்களை மட்டும் வைத்து கொண்டு உணர்ச்சி மற்றும் வெற்று பிடிவாதத்துடன் அறிவில்லாமல் சண்டை செய்தால் அழிவு நிச்சயம் என்பதற்கு ஈரானும் உலகத்துக்கு எடுத்துக்காட்டு ஆகிவிட்டது.
  8. அடுத்த மூன்று மாதத்தில் விஜை ஆட்சிக்கு வந்தால் தனக்கு நீதி கிடைப்பது கடினமாகிவிடும் என்பதால் தான் ஆட்சிக்கு வர முதல் சங்கீதா வழக்கு போட்டுள்ளார் என்றால் அது சரியானதே.
  9. மேற்குலகில் இசை அல்பங்களை உருவாக்கும் படைப்பாளிகள் சுயமாக தாமே இசை நிறுலனங்களாக, தமது அல்பமாக அதை உருவாக்குகின்றனர். அதன் காரணமாக அவர்களால் உருவாக்கப்படும் அல்பங்களின் உரிமை அவர்களிடமே இருக்கும். ஆனால், இந்தியாவில் படங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் படத்தில் இசையமைத்து அதற்கான கூலியை இசையமைப்பாளர்கள் பெற்றுக்கொள்ளும் போது போது அந்த இசை அல்பங்களின் றோயல்ரி தானாகவே பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்றுவிடுவதே இதன் காரணம் என நினைக்கிறேன். எதிர்காலத்தில் இசைமைப்பாளர்கள் இசை தயாரிப்பு நிறுவனங்களைப் பதிவு செய்து அந்திறுவன உரிமையாக பாடல்களை உருவாக்கி, தாம் உருவாக்கும் பாடல்களை ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தில் பாவிக்கும் உரிமையை மட்டும் விற்பனை செய்தால் இவ்வாறான பிரச்சனைகள் எழாது என்பது எனது அபிப்பிராயம்.
  10. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் என்பதை இலங்கை இந்திய ஒப்பந்தம் அன்று எழுத்து மூலம் அங்கீகரித்தது. அதை அன்று ஏற்றுக் கொண்டு, அதை பலப்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும் எமது பங்களிப்பை வழங்கி, தொடர்ந்து அதில் இருந்த போதாமைகளுக்காக அரசியல் ரீதியில் போராடியிருந்தால், வட கிழக்கு தமிழரின் தாயகம் என்பது நடைமுறையில் உருவாகியிருக்க வாய்ப்புக்கள் அதிகமாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. அதை அடியோடு நிராகரித்த நாம் அதில் இருந்த நல்ல விடயங்களைக்கூட இழந்து இன்று அதை விட பலமடங்கு பின்னோக்கி சென்றிருக்கிறோம். சொற்களிலும் வசனங்களிலும் தொங்கிக் கொண்டு பிடிவாதம் பிடித்து ஈகோ பிரச்சனைகளை உருவாக்காமல் நடைமுறையில் தமிழர் பிரதேசங்களை தக்க வைக்க தந்திரோபாய நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ள வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு உடனடித்தேவை. அரசியல்வாதிகளுக்கு தேவைகள் வேறு இருக்கலாம்.
  11. எல்லாப் பாதையும் எப்போதும் ரோம் நகரை நோக்கியே டிசைன் செய்யப்பட்டுள்ளது.
  12. சுட்டது பிழை. அல்லைப்பிட்டில் வாகனத்தை நள்ளிரவில் பொலிஸ் மறித்தபோது வாகனத்தை நிறுதமாமல் மண்டைதீவுப்பக்கம் வாகனத்தை திருப்பியது முதல் பிழை. மண்டைதீவு பொலிஸாருக்கு தகவல் அனுப்ப அங்கு மண்டை தீவு பொலிசால் வாகனத்தை நிறுத்த முயற்சிக்க, அங்கும் வாகனத்தை நிறுத்தாமல் வாகனத்தை அல்லைப்பிட்டிக்கு திருப்பியது முதலாவது பிழையை விட அடுத்த பெரிய பிழை. அதன் பின்னர் அல்லைப்பிட்டில் இருந்து துரத்திவந்த அல்லைப்பிட்டிப் பொலிசார் சுட்டிருக்கின்றனர். இரண்டு முறை பொலிசாருக்கு டிமிக்கி கொடுக்க டிமிக்கி கொடுக்க முயற்சித்தது பாரிய தவறு, அதுவும் நள்ளிரவு நேரத்தில். கூட இருந்தவர்களாவது சிறுவனுக்கு அறிவுரை கூறியிருக்கலாம்.
  13. ஒம் கோசான்.இயக்கங்களின் கிளைகள் அமைப்பு ரீதியாக வளர்சசியடையாத காலகட்டம். ஒரு புளொட் உறுப்பினர் தனது இயக்கத்திற்கு நிதி சேகரித்தார். அதே வேளை புலிக்கு சேர்ததவரும் அந்த நகரத்துக்கு வந்து கூட்டம் வைத்தார். புலிக்கு காசு சேர்தவருக்கு இவர் ஊரிலேயே நெருங்கிய நண்பர். புலி உறுப்பினர் தூரம் காரணமாக அடிக்கடி வர முடியாத நிலை. எனவே ஏற்கனவே மக்களிடம் பேசி உறுதியளிக்கப்பட்ட பணத்தை சேர்க்க நம்பிக்கையான ஆள் தேவை. தனக்கு நம்பிக்கையான இந்த புளொட்உறுப்பினரிடம் உதவியை பெற்றார். இவரும் இரண்டு இயக்கத்துக்கும் நிதி சேர்தது புலிக்கு சேர்ந்த பணத்தை தனது நண்பரான புலி உறுப்பினருக்கும் , புளொட்டுக்கு சேர்ந்த பணத்தை தனது அமைப்புக்கும் அனுப்பினார். கணக்கு பார்த்து சரியாக அனுப்பினாரா அல்லது கணக்கு விட்டாரா நாமறியோம். 😂 அந்த நேர வேகத்தில் இது பற்றிய அக்கறையும் இல்லை.
  14. புளொட்டுக்கும், புலிக்கும் ஒரே ஆளே காசு சேர்த்ததும் ஒரு காலத்தில் இருந்தது கோசான். பகடிக்கு சொல்லவில்லை உண்மையில் நடந்தது.
  15. உண்மை தான். அப்பாவி தமிழர்களை ஏமாற்றி, தேசிய செயற்பாட்டாளர்கள் என்று தம்மை அழைத்துக்கொண்ட கூட்டதில் ஒரு கும்பல் தான் மக்களின் பணத்தை அடித்தது. இப்ப புலிக்காசை யாரே வேறு கிரகத்தில் இருந்து வந்து யாரோ அடித்தது போல் சம்பந்தப்பட்டவர்களே படம் காட்டுகின்றனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.