Everything posted by சுபேஸ்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகாறா அக்காவாவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
நல்ல அருமையான கவிதை! நன்றி கிருபன் தேடித் தந்ததிற்க்கு...
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
இறகின் கதை -நிலாரசிகன்- மலைச்சரிவில் பூத்திருக்கும் பூக்களின் நடுவில் வீழ்ந்து கிடக்கிறது ஓர் இறகு. வெளிமான்கள் மேயும் அம்மலையில் மார்கச்சை அற்ற யுவதி ஒருத்தி மலையேறுகிறாள். பூக்கள் நடுவில் கிடக்கும் இறகை பேரன்புடன் கைகளில் அள்ளிக்கொள்கிறாள். தன் தளிர் விரல்களால் இறகை வருடிக்கொடுக்கிறாள். சிலிர்த்த மலை ஒரு மாயக்கம்பளமாக உருப்பெறுகிறது. யுவதியும் இறகும் வெகு தூரம் பயணித்து சிற்றோடைகள் நிறைந்த வனத்தில் இறங்கி நடக்கிறார்கள். ஒளிக்கண்களுடன் அவளை நெருங்குகிறான் வனத்தின் இளவரசன். தன் செல்லப்பறவையின் இறகை திரும்பக்கேட்கிறான். இறகை கொடுத்தவுடன் தன்னுடலில் சிறகுகள் வளர்வதை உணர்கிறாள். வனத்தின் இளவரசனை தன் விழிப்பூக்களில் அமர்த்திக்கொள்கிறாள். பிரபஞ்சத்தின் புதிர் நிறைந்த பக்கங்களுக்குள் அவர்கள் பேரானந்தமாய் பறக்கிறார்கள் ஓர் இறகின் வடிவில். உன் மார்பில் பூக்கள் மலர்ந்திருந்தன.. -நிலாரசிகன்- 1. ஓர் உன்னதமான நிகழ்வின் முடிவில் அறையெங்கும் மணம் நிரப்பியபடி படுத்திருந்தாய். கனவில் தோன்றும் கவிதைவரியின் பூரிப்புடன் கண்கள் மூடி அமர்ந்திருந்தேன். காலமடியில் இசை வழிந்துகொண்டிருந்தது. செவி வழி உயிருக்குள் ஊடுருவியது உனதன்பின் அணுக்கள். மார்பு தாங்கும் வனப்பூக்களுடன் அறையெங்கும் பறந்து சிலிர்த்தாய். இசைக்குள்ளிருந்து இதயத்திற்குள் நுழைய துவங்கினேன் நான். 2. தவிர்த்தலையும் ரசனையுடன் என்னில் தெளிக்கிறாய். உன் விலகல் ஒரு நட்சத்திரம் போல் மிளிர்கிறது. வெறுமை நிறைந்த சொற்களை உதிர்த்தபடி செல்கிறதுன் இதழ்கள். எவ்வித உணர்வுகளுமின்றி புன்னகைக்க கற்றுக்கொண்டாய். மழை சத்தமின்றி பெய்து ஓய்கிறது. கண்ணீர் உடைந்த நிலாத்துளிகளாய் உருள்கிறது. என்றேனும் ஏகாந்தத்தின் செளந்தர்யத்தில் நீ லயித்திருக்கும் தருணத்தில் காற்றில் மிதந்து வரக்கூடும் சிறகறுந்த கனவொன்றின் குருதி தோய்ந்த இறகுகள் சில.
-
மேஜர் சிட்டுவின் நினைவு நாள் இன்று 01-08-1997
சிட்டுவின் பாடல்களுக்கு நான் அடிமை..நல்ல ஒரு கலைஞ்ஞன்.. தன்பாடல்களில் என்றைக்கும் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பான்..
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
மனைவி இழந்தவனின் டாங்கோ நடனம் -பாப்லோ நெருடா- ஓ மலைனா, இந்நேரம் என்மடல்களைப் பார்த்திருப்பாய், இந்நேரம் கோபத்தில் கத்தியிருப்பாய், வெறிநாயென்றும், நாய்களைப் பெற்றவன் என்றும் வசைபாடி என் தாயின் நினைவை இந்நேரம் இழிவுபடுத்தியிருப்பாய். வெப்ப நாடுகளையும், எனக்குப் பெரும் தொல்லை தந்த காய்ச்சல்களையும் இன்றும் நான் வெறுக்கும் ஆங்கிலேயர்களையும் அங்கே இப்போதும் நான் இருந்துகொண்டு குறைசொல்லிக்கொண்டிருப்பதாய் நினைத்து என்னைத் திட்டிக்கொண்டிராமல் என் இரவுநேரக் கனவுகளையும் என் உணவுமுறையையும் உன்னால் நினைவுகூர இயலாது. மலைனா, உண்மையில் இரவு எவ்வளவு பெரியது, உலகம் எவ்வளவு தனிமையானது! முன்புபோலவே, ஒற்றையறைகளுக்கும் உணவுவிடுதியின் ஆறிப்போன சாப்பாட்டிற்கும் நான் பழகிவிட்டேன். என் சட்டைகளையும் சிராய்களையும் தரைமீது கழற்றிப் போடுகிறேன். என் அறையில் உடைமாட்ட கொக்கிகள் இல்லை. சுவர்களில் எவருடைய படமும் இல்லை. உன்னை மீண்டும் பெறுவதற்காக என் ஆன்மாவில் உள்ள எவ்வளவு நிழலையும் நான் தருவேன். மாதங்களின் பெயர்கள் மிரட்டல்களைப்போல் ஒலிக்கின்றன. குளிர்காலம் என்றசொல் சாப்பறைபோல் ஒலிக்கிறது. என்னைக் கொன்றுவிடுவாயோ என்றஞ்சி தென்னை மரத்தடியில் நான் புதைத்த கத்தியை ஈரமணலடியே, செவிட்டு வேர்களுக்கிடையில் பின்னர் நீ கண்டுபிடிப்பாய். உன் கையின் அழுத்தத்திற்கும் உன் காலின் மினுங்கலுக்கும் பழக்கப்பட்ட அந்த சமையலறை எஃகைக் காணத் திடீரென விழைகிறேன். மனித மொழிகள் அனைத்திலும் வறியோர் மட்டுமே உன் பெயரறிவர். துளைக்கவியலா தெய்வீகப்பொருளான உன் பெயரைப் புரிந்துகொள்ள அடர்ந்தமண்ணுக்கும் இயலவில்லை. நிலைப்படுத்தப்பட்ட கதிரவனின் நீரைப்போல் ஓய்ந்திருக்கும் உன் கால்களின் பட்டப்பகலையும் உன் விழிகளில் உறங்கிப் பறந்துயிர்க்கும் குருவியையும் உன் இதயத்தில் நீ வளர்க்கும் வெறி நாயையும் எண்ணுகையில் துயர்மேலிடுகிறது. இதுபோலவே, நமக்கிடையே இருக்கும் மரணித்தவர்களையும் இனி மரணிக்கப்போகிறவர்களையும் பார்க்கிறேன் நான். சாம்பலை மூச்சாய் விடுகிறேன். காற்றிலேயே சாபம் விடுகிறேன். எனைச்சுற்றி எப்போதும் இருக்கப்போகும் அகண்ட இந்த வெறுமைவெளியையும் பூதாகரமான கடற்காற்றையும் உன்னை அடைவதற்காக நான் தருவேன்! குதிரைத்தோலின் அங்கமாகிடும் சாட்டையைப்போல் நினைவுமறதி கலக்காத நீண்ட இரவுகளில் கேட்கும் உன் இரைந்த மூச்சும், காற்று மண்டலத்தின் ஒரு பகுதியாகிவிடுகிறது. மெதுவாக, ஆடிக்கொண்டே, வெள்ளியென, பிடிவாதமான தேனை ஊற்றுவதுபோல் கொல்லைப்புறத்து இருளில் நீ சிறுநீர் கழிப்பதை கேட்பதற்காக, நான் வைத்திருக்கும் நிழல் கூட்டத்தையும், என் ஆன்மாவில் சண்டையிடும் பயனற்ற வாள்களின் போரொலியையும், மறைந்துபோனவற்றையும், மறைந்துபோன உயிர்களையும், புரிந்துகொள்ளவியலா அளவிற்குப் பிரிக்கமுடியாமல் தொலைந்து போனவற்றையும், என் நெற்றியின்மீது தனித்திருந்து அழைக்கும் குருதிப் புறாவையும் எத்தனை முறை வேண்டுமானாலும் தருவேனே.
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
சிறகுமுளைத்த பெண் ஸர்மிளா ஸெய்யித் நேற்றுவரை நானும் ஜன்னல் கம்பிகளின் பின்னிருந்துதான் ஓடும்மேகங்களைப் பார்த்தேன் நிலாவையும் வெள்ளியையும் ரசித்தேன் ஒருதுண்டு மேகத்தையும் அள்ளியெறிந்தாற்போல சில வெள்ளிகளையும் எத்தனை நாளைக்கென்று ஜன்னல் வழியே ரசிப்பது அக்கினிக் குண்டத்திலிருந்து தப்பித்தாற்போலதான் இந்த வெளியேற்றமும் ஆரம்பத்தில் நாட்படாத கோழிக்குஞ்சின் அளவுதான் சிறகிருந்தது சிறந்ததையே எண்ணினேன் சிந்தித்தேன் சிறந்தவற்றிற்காக உழைத்தேன் எப்போதும் இன்புற்றிருந்தேன் பிறரும் இன்புற்றிருக்க விரும்பினேன் குற்றம்காண முனைவதல்ல என் மனது எல்லாவற்றிலுமிருக்கும் நல்ல பக்கங்களை ஏற்று நடந்தேன் அக்கம் பக்கத்தார் அண்டியிருந்தோரெலாம் எனை உற்றுக் கவனிக்கக் கண்டேன் யாருக்கும் நெஞ்சுபொறுக்கவில்லை எனக்கு சிறகுமுளைத்ததுகண்டு இது எம் குலத்திற்காகாத குணமென்று எச்சரிக்கப்பட்டேன் கண்டுகொள்ளாது நடப்பதும் மௌனமாயிருப்பதுமே எம் குலப்பெருமையென அறிவுறுத்தப்பட்டேன் நேரிய என் விழிகள் இருட்டை நோக்கியதாயிருக்க பணிக்கப்பட்டேன் நிமிர்ந்த என் நெஞ்சுக்கும் தாழ்ப்பாழிட கோரப்பட்டேன் இத்தனை எல்லைகளை தாங்காத என்நெஞ்சு குமுறியது இடமா இல்லை அண்டத்தில் வேலி தாண்டிய என் வேர்களை இழுத்துக்கொண்டு பறந்தேன்… குலத்தையும் கூடயிருந்தவர்களையும் விட்டு பறப்பதொன்றும் சுகமான அநுபவம் கிடையாது அது சிலுவையை சுமப்பதுபோன்றது என் சிறகுகளை வெட்டியெறிய என் கால்களுக்கு விலங்கிட எண்ணற்ற முயற்சிகள் எல்லாம் எதிர்கொண்டேன்! என் பயணத்தில் உலகையறிந்தேன் மனங்களின் பாஷையைக் கற்றேன் வாழ்வின் போக்கையும், அது புகட்டும் போதனைகளையுமறிந்தேன் இவை கொஞ்சம்தான் கைம்மண்ணளவு! இன்னும் நெடுந்தூரம் பறப்பேன் அண்டத்தின் ஐஸ்வரியங்களை அறிவேன் நதியோரப் பள்ளத்தாக்கில் பெரும் விருட்சமொன்றின் கிளையில் தரித்து நிற்கின்றேன்… களைத்துப்போன என்னைத் தேற்றவும், காயம்பட்ட என் சிறகுகளை ஆற்றவும். வெளிச்சத்தை நோக்கிய எனது பயணத்தில் ஒருநாள் என் குலத்தை எனைக் குற்றம்கண்டோரை சந்திப்பேன் எங்கள் குலத்தின் பொக்கிஷமென அந்நாளில் அவர்கள் எனைப்போற்றவும் கூடும்!!! http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15194&Itemid=263
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
ஒரு பிரகடனத்தின் எதிர்வினை எங்களுடைய புன்னகையை சந்தேகிக்கும் எல்லோருக்கும் சொல்கிறோம்……. எங்கள் கடல் அழகாயிருந்தது எங்கள் நதியிடம் சங்கீதமிருந்தது எங்கள் பறவைகளிடம் கூட விடுதலையின் பாடல் இருந்தது….. எங்கள் நிலத்தில்தான் எங்கள் வேர்கள் இருந்தன… நாங்கள் நாங்கள் மட்டும்தான் இருந்தோம் எம்மூரில்… அவர்கள் எங்கள் கடலைத்தின்றார்கள்… அவர்கள்தான் எங்கள் நதியின் குரல்வளையைநசித்தார்கள்… அவர்கள்தான் எங்கள் பறவைகளை வேட்டையாடினார்கள்…….. எங்கள் நிலங்களைவிட்டு எம்மைத்துரத்தினார்கள் அவர்கள்தான் எங்கள் குழந்தைகளின் புன்னகைகளை தெருவில் போட்டு நசித்தார்கள்….. நாங்கள் என்ன சொல்வது நீங்களே தீர்மானித்து விட்டீர்கள் நாங்கள் மனிதர்கள் அல்ல என்று…… எங்கள்வயல்கள் பற்றி எரிகையில் எங்கள் நதிகளில் எம் தலைகளைக்கொய்த வாட்கள் கழுவப்படுகையில்நீங்கள் எங்கிருந்தீர்…. எப்போதுமிருக்கும் பச்சை வயல்வெளியை ஒற்றைப்பனை மரத்தை தெருப்புழுதிக் கிளித்தட்டை ஊர்க்கோயிலை என் பாட்டியின் ப+ர்வீகக் கிராமத்தையும் அதன் கதைகளையும் இழந்து நாங்கள் காடுகளில் அலைகையில் நீங்கள் எங்கிருந்தீர்கள் சப்பாத்துக் கால்கள் எங்கள் குரல்வளையில் இருக்கையில் எம் பிள்ளைகள் வீதியில துடிதுடித்து அடங்குகையில் துப்பாக்கிகளின்சடசடப்பு ஊருக்குள் வருகையில் நீங்கள் எங்கிருந்தீர்கள் நாங்கள் ஊர்பிரிந்து வருகையில் உயிர் தெறித்து விழுகையில் கண்ணீர் பிரியாத துயரம் எம்மைத் தொடர்கையில் நீங்கள் எங்கிருந்தீர்கள் நாங்கள் பசித்திருந்தோம் நாங்கள் பயமாயிருந்தோம் நாங்கள் விழித்திருந்தோம் நாங்கள் விக்கித்து வேறு வழியின்றி மூர்ச்சித்துச் செத்தோம் அப்போது நீங்கள் எங்கிருந்தீர் எப்போதும் எங்கள் கனவுகளைத் துப்பாக்கிகள் கலைத்தன குண்டுகள் விழுந்தமுற்றத்தில் பேரச்சம் நிறைய நாம் தனித்தோம் நாம் தவித்தோம் அப்போது நீங்கள் எங்கிருந்தீர் ஊரோடு கிளம்பி நாவற் குழியில் நசுங்கிச் செத்தோமே நவாலியில் கூண்டோடு நாய்களைப்போல் குமிந்த எம் உடல்களின் மேல் நாம் கதறி அழுகையில் அப்போது நீங்கள் எங்கிருந்தீர் நாம் வேர்களை இழந்து ஊர் ஊராய் அலைகையில் துர்க்கனவுகளில் துப்பாக்கிகளைக்கண்டு எங்கள் பிள்ளைகள் திடுக்கிட்டு அலறுகையில் எங்கள் பள்ளிக்கூடத்தில் குண்டுகள் வீழ்கையில் ஒழுகும் கூரையில் எம் குழந்தையின் கொப்பி எழுத்துக்கள் கரைகையில் அப்போது நீங்கள் எங்கிருந்தீர் நாங்கள் எங்கள் பனைமரங்களைவிட்டு துரத்தப்படுகையில தெருப்புழுதி எங்கள் பாதங்களில் ஏறிவர பாதங்களின் சுவடுகளேயறியாக் காடுகளிற்குள் நாம் துரத்தப்படுகையில் காடுகளில் எங்கள் குழந்தைகளின் புன்னகை மழையில் நனைகையில் மலேரியாவில் சாகையில் அப்போது நீங்கள் எங்கிருந்தீர் சப்பாத்துக்கள் எங்கள் முற்றத்தை மிதிக்கையில் உறுமும் வண்டிகள் எங்கள் வேலிகளைப்பிரிக்கையில் துப்பாக்கிகளின் குறி எம்மீது பதிகையில் உயிர் ஒழித்து நாங்கள் ஊர்விட்டோடுகையில் அப்போது நீங்கள் எங்கிருந்தீர் எங்கள் நதியின் சங்கீதம் துப்பாக்கி வாய்களில் சிக்கித் திணறுகையில் கடலின் பாடலை அவர்கள் கைது செய்தபோது எங்கள் குழந்தைகளை அவர்களின் வாட்கள் இரண்டாகப்பிளக்கையில் அப்போது நீங்கள் எங்கிருந்தீர் ஊரில் கந்தகம் மணக்கையில் வானில் மரணம் வருகையில் வயலில் அவர்கள் மரணத்தை விதைக்கஇயில் வரம்புகளில் உடல்களைக்கிடத்தையில் ஊரைப்போர் விழுங்கையில் ஊர் ஊராய் நாம் அலைகையில் அப்போது நீங்கள் எங்கிருந்தீர் எங்களுடைய தெருக்களில் சருகுகள் நிறைகையில் குருவிகளின் குரல் சப்பாத்துக்கால்களில் நொருங்கித்தேய்கையில் மனிதர்களின் சுவடுகளேயறியா இடங்களிற்கு நாம் துரத்தப்படுகையில் அப்போது நீங்கள் எங்கிருந்தீர் உறைந்துபோய்க்கிடக்கும் எங்கள் குழந்தைகளின் புன்னகையை குரல்களற்று அலையும் ஊர்க்குருவியின் பாடலை பச்சையற்றெரியும் எங்கள் வயல்களின் பசியை பேனாக்களை இழந்த எங்கள் குழந்தைகளிடம் இருந்து துப்பாக்கிகளை மீட்கமுடியாமல் நாங்கள் தத்தளிக்கையில் அப்போது நீங்கள் எங்கிருந்தீர் எங்களுடைய புன்னகையை சந்தேகிக்கும் எல்லோருக்கும் சொல்கிறோம்……. முகவரிகளற்றுத் தேசங்களில் அலையும் உறவுகளின் முகங்களை மாற்றங்கள் அற்றுப்போன வாழ்வின் சுவையை மறுபடியும் தரமுடியுமா உம்மால்? அப்போதெல்லாம் நாங்கள் ஏன் தனித்தோம் உலகே எங்கள் உணர்வுகளின் வலி எட்டவில்லையா உனக்கு எம்மூரின் நதியின் சலசலப்பில் வருடும் தென்றலின் தழுவலில் ஒவ்வொரு பூவின் முகத்திலும் விடுதலையின் விருப்பு மிளிர்கிறதே தெரிகிறதா உனக்கு நாங்கள் கனவுகள் சுமக்கிறோம் எங்களிடம் மிச்சமிருக்கும் சுதந்திர உணர்வுகளின் மீது எங்கள் கனவுகளைக் கட்டியெழுப்புகிறோம் நிறங்களற்றுப்போன இவ்வாழ்வின் நிறம்தருவார் யார்? - சஹானா http://www.agiilan.com/?p=10
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
எங்கேயோ வாசித்த ஒரு கவிதை,மனதில் விழுந்து ஏதோவொரு விபரிக்க முடியாத நிறைவை அளித்து நினைவுகளில் என்றுமே தங்கிவிவிட்டது.... "விவிலியத்தில் மத்தேயு அதிகாரத்தில் மயிலிறகாய் வருடும் மலைப் பிரசங்கத்தில் ஏகாந்தமாய் வாழும் வானத்துப் பறவைகள் நாம்.... விதைப்பதும் இல்லை அறுப்பதும் இல்லை.....!"
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
மூச்சை பிடித்தபடி இதை தொடர்ந்து வாசித்து வருகிறேன்..ஏதாவது கருத்து பதிய நினைப்பேன் ஆனால் கைகள் எழுதமறுத்துவிடுகிறது ஒவ்வொரு தடவையும்..இது என் உங்களின் எங்களின் வலிகளை வாழ்க்கையை ஒரு பாண்டிய சேர சோழ இராச்சியத்தின் வரலாற்றை பதிந்து கொண்டிருக்கும் ஒரு உண்மைப்படைப்பு...பலநூற்றாண்டிகளின் பின்னால் வன்னியின் மண்மேடுகளில் இந்த வரலாற்றுப்பதிவுடன் எங்கள் வீர வரலாறு வீழ்த்தப்பட்ட இடங்களில் என் பேரனும் பேர்த்தியும் நின்று எங்களின் தடங்களை தேடி அந்தப் புழுதி எழும் கடற்கரை வீதிகளில் நாங்கள் பட்ட துயர் வலிகளையும் அந்த மண்ணிற்காக எங்கள் வீரர்களின் தியாகங்களையும் எண்ணி ஒரு சொட்டுக்கண்ணிர் சிந்தலாம்......அதுதான் உங்களுக்கு கிடைக்கப்போகும் உண்மையான பாராட்டு..இங்கு நாங்கள் உங்களுக்கு தருவதல்ல.... இந்தப்பதிவு யாழுடன் நின்றுபோகக்கூடாது எங்களின் வரலாறுகள் வலிகள் எங்களுக்குப்பின்னால் வரப்போகிறவர்களையும் சென்றடையவேண்டும்..இந்தப்பதிவு நூலுருப்பெறவேண்டும்..புத்தகமாக வெளியிடப்படவேண்டியது..