Jump to content

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2253
  • Joined

  • Last visited

  • Days Won

    3

vasee last won the day on October 23

vasee had the most liked content!

1 Follower

Recent Profile Visitors

6263 profile views

vasee's Achievements

Veteran

Veteran (13/14)

  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Reacting Well Rare
  • Posting Machine Rare
  • Collaborator

Recent Badges

1.1k

Reputation

  1. அடுத்த போட்டி அடிலேட்டில் இளஞ்சிவப்பு (பிங்) பந்தில் விளையாட உள்ளார்கள் அதுவும் பகல் இரவு ஆட்டம், பந்து அதிகமாக சுயிங் ஆகும் இந்தியாவினால் அது போன்ற சூழ்நிலையினை கையாள முடியாது, அடுத்த போட்டி அவுஸ் வெல்வதற்கே வாய்ப்புள்ளது. நாளை மறுதினம் போட்டி நடைபெறவுள்ளது, அந்த போட்டியினை அவுஸ் வெல்லும் என கூறினாலும் இந்தியர்கள் இந்தியா இலகுவாக வென்றுவிடும் என கூறுகிறார்கள், பேர்த் போட்டியில் பெரிய ஓட்டங்களை எடுத்த ஜெஸ்வால் மிக சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பார் என கருதுகிறேன், ரோகித், கோலி இருவராலும் இடது கை வேகப்பந்துவீச்சாளரான ஸ்ராக்கினை எதிர்கொள்வது கடினமாக இருக்கும், ராகுல் இந்த போட்டியிலும் திறமையாக விளையாட வாய்ப்புள்ளது, ஆனாலும் இந்த போட்டியினை இந்தியாவினால் வெல்ல முடியாது நியுசிலாந்திடம் முதல் போட்டியில் 46 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது போல இந்த மைதானத்தில் இந்தியா ஒரு சாதனையினை வைத்துள்ளதாக நினைவுள்ளது.
  2. தற்போதய Mark up (விலையினை அதிகரிக்கும் முயற்சி) அடுத்து அதிக விலையில் விற்கும் நிலை பின்னர் விலை வீழ்ச்சி நிலையாகும். இது குறுங்கால ஒரு மணிநேரத்திற்கான ஆயவகும, இது வரை விலை வீழ்ச்சி அடைவதற்கான அறிகுறி தென்படவில்லை, விலை 2.40 மேல் அடுத்த விலை அதிகரிப்புடன் அதிக எண்ணிக்கையுடன் காணப்பட்டால் அது ஒரு சாதகமானதாகும் அவ்வாறில்லாமல் விலை 2.00 கீழ் சென்றால் இது ஒரு போலியான முன்னேற்றமாக இருக்கலாம்.
  3. XRP hourly chart இதுவரை நிலவியிருந்த விலை 2.00 resistance level ஐ XRP கடந்துள்ளது அதன் விலை அதிகரிப்பினை அதன் அளவு உறுதி செய்துள்ளது, முன்னர் கூறிய 2.73 இனை எட்டுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. விலை 2.00 கீழ் கானப்பட்ட trading range ஒரு re accumulation ஆகவரையறுக்கலாம் இதனடிப்படையில் 2.70 அடையலாம் அதன்பின்னர் 2.73 முக்கிய resistance இல் விலை எவ்வாறு செயற்படுகிறது என்பதற்கு அமைவாக அடுத்த நகர்வு அமையலாம். இந்த 2.73 இனை விலை கடந்தால் மிகவும் சாதகமாகும்.
  4. அவுஸ்ரேலியாவில் மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக தமது பாரம்பரிய கிறிஸ்மஸ் நிகழ்வினை கைவிடும் நிலை போல இலங்கையில் உள்ல மக்கள் தம்து உறவுகளை நினைவு கூறுவது சட்ட விரோதமாக உள்ளது.
  5. இறந்தவர்களை அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் அமைதியான முறையில் நினைவு கூறுதலில் எந்த விதமான சட்டப்பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை, பல இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்ற இலங்கை படையினரை நினைவு கூறுவதனை தமிழர்கள் எதிர்க்கவில்லை, எதிர்க்க போவதுமில்லை, அது சாதாரண மனித பண்பு ஒருவர் உயிருடன் இருக்கும் போது எவ்வலவு மோசமானவர்களாக இருந்தாலும் அவர்கள் இறந்த பின்னர் அவர்களை பற்றிய கடந்தகாலத்தினை மறந்து விடுவார்கள். ஆனால் தமிழர்கள் மட்டும் தாம் சார்ந்தவர்களை நினைவு கூறுவதற்கும் மற்றவர்களின் அனுமதியினை கோரும் நிலையில் உள்ளார்கள், அதனை தடுத்து நிறுத்துவதற்கு பல வழிகளிலும் முனையும் தரப்பிடமிருந்து நியாயம் கிடைக்கும் என நம்பும் நிலையில் நாம் இருக்கின்றோம்.
  6. அனுர அரசினை இனவாதம் பேசாமல் ஆட்சிக்கு வந்த அரசு என சிறுபான்மையினரால் பார்க்கப்படும் அரசு, அதே சிறுபான்மையினரின் உரிமைகள், போர் குற்ற நீதி, சமூக நீதி என வரும் போது அப்போதும் இதே நிலை எடுத்தால் அனுர அரசு தனது முழு பதவிக்காலத்தினை மட்டுமல்ல இனி வரும் தேர்தல்களையும் எவ்வாறு எதிர் கொள்ளமுடியும் என தெரியவில்லை, மக்கள் திருட்டு பூனை கண்ணை மூடி பாலை குடிப்பது போல இருக்க விரும்புவது யதார்த்தத்தினை எதிர்கொள்ள விரும்பாத நிலை அல்லது ஒரு நப்பாசை அவர்களுக்கு முழுமையான ஆட்சி காலத்தினை முடிக்கும் வரை இலவு காத்த கிளியாக இருக்க விரும்புவதற்கு தயாரக இருப்பதற்கு தடையாக அனுர அரசின் மீது உள்ள குறைபாடுகளை கூறுபவர்களை மூர்க்கமாக எதிர்க்க முற்படும் இந்த வகை தீக்கோழி ஆபத்து வரும் போது மணலுக்குள் தலையினை புதைப்பது போன்ற ஒரு வகை நடவடிக்கையாகும். ஆனால் அனுர அரசிற்கு இவ்வாறான எந்த நெருக்குதலும் இல்லை, அவர்கல் தமது நிலைப்பாட்டை தேர்தலுக்கு முன்ன்னமே தெளிவாக கூறிவிட்டார்கள்.
  7. சுண்டைக்காய் மரத்தில் கத்தரி ஒட்டுவதன் நோக்கம் ஒட்டுக்கத்தரி சுண்டைங்காய் மரம் போல பெரிதாக வளர்ந்து 3 அல்லது 4 வருடங்கள் வரை பயன் தரும், அதே போல தக்காளியினையும் ஒட்டலாம். பூவரசினை ஒட்ட முடியாது எனவே கருதுகிறேன், நீங்கள் விளையாட்டாக கூறுவதாக முதலில் நினைத்தேன் ஆனால் உண்மையாக நீங்கள் முயன்றிருக்ககூடுமோ என தற்போது கருதுகிறேன், எந்த முயற்சியும் தவறல்ல ஒரு அனுபவம் மட்டுமே.
  8. பூவரசு மரமும் கத்தரியும் ஒரே குடும்பத்தினை சேர்ந்தவைகள் அல்ல, சுண்டைக்காய், தக்காளி மற்றும் கத்தரிக்காய் Solanaceae family குடும்பத்தினை சேர்ந்தது, சும்மா நீங்கள் என்னைக்கலாய்க்க இவ்வாறு கூறுகிறீர்கள் என கருதுகிறேன், நான் உங்களவிற்கு படித்த நபர் அல்ல.
  9. நல்ல பலனுள்ள பதிவுகள் சில நம்ப முடியாதளவிற்கு ஆச்சரியமூட்டுவதாக உள்ளது, முன்பு சுணடைக்காய் மரத்தில் கத்தரி ஒட்டி அது சரிவரவில்லை, இந்த காணொளிகளை பார்த்துவிட்டு தற்போது முதற்தடவையாக இந்த ஒட்டு வேலை செய்வதற்கான கத்தியினை இணையத்தில் வாங்கியுள்ளேன்.
  10. நான் அறிந்தவரை எதிரிகளின் கல்லறைகள் கொண்ட இடத்தினை ஆக்கிரமித்து இராணுவ முகாம் அமைத்து இறந்தவர்களுக்குரிய குறைந்த பட்ச மரியாதை செய்வதனை கூட விரும்பாத இனமாக எந்த இனமும் இருந்ததாக அறியவில்லை, ஆனால் இந்த சிங்கள இராணுவத்தினர் தமது மூதாதையர் மிருகத்திலிருந்து வந்தவர்கள் எனும் அவர்கள் மகாவம்ச கதையினை உண்மையாக முயல்கிறார்களோ என கருதுகிறேன்.
  11. இது இலங்கை அரசு தொடர்பான மோசமான விம்பத்தினையே பிரதிபலிக்கும், சட்டம் அனைவருக்கும் பொதுவானது ஆனால் சட்டத்தினை வலுவிலக்க செய்யும் இவ்வாறான நடவடிக்கைகளே பல மனித் உரிமை மீறல்கள் மற்றும் மக்களின் அடிப்படை உரிமை மீறல்களாக தொடர்கின்றது. தற்போதுள்ள அரசு கூட இந்த பயங்கரவாத தடை சட்டத்தினை நீங்க விரும்பாததன் மூலம் நாட்டில் இன முரண்பாட்டினை தொடர விரும்புகிறதோ எனும் சந்தேகத்தினை சிறுபான்மை மக்களிடம் ஏற்படுத்திவிடலாம். ஒரு நாட்டில் அவசரகால நிலை தொடர்ந்து நிலவுகிறது எனும் நிலை காணப்பட்டால் அது பொருளாதாரத்திற்கும் நல்லதல்ல, இந்த அடிப்படை புரியாமல் இவர்கள் என்ன ஆட்சி செய்து கிழிக்கப்போகிறார்களோ தெரியவில்லை.
  12. ஜெசி லிவர்மோர் பங்கு சந்தை வீழ்ச்சி ஏற்படலாம் என கணித்திருந்தார் ஆனால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்பதால் அதுவரை தனது ஓய்வை கழிக்க புளோரிடா சென்றார், ஒரு நாள் காலை பத்திரிகையினை பார்த்த போது TT எனும் பங்கு 155 இல் விற்பனையாகி கொண்டிருந்தது அவர் கடைசியாக பார்த்த போது அது 140 இல் இருந்திருந்தது. பொதுவான சந்தை நிலவரம் சரியில்லாத நிலையில் இந்த ஒரு பங்கு மாத்திரம் உயர்வடைவதற்கான காரணம் அவருக்கு விளங்கவிலை, ஆனால் அவர் நினைத்தார் அது மூலதன திரட்டலுக்காக அந்த நிறுவனத்தினர் பங்கின் விலையினவேணுமென்றே உயர்த்துகின்றனர் என உனர்ந்தார். அதனால் அந்த பங்கினை விலை 153 இலிருந்து விற்க ஆரம்பித்தார் விலை வீழ்ச்சியடைய அவரது நிலையினை அதிகரிக்க தொடங்கினார் விலை 133 எட்டிய போது 30000 பங்குகலை விற்றிருந்தார். அதே காலத்தில் மற்ற வர்த்தகர்களும் அந்த பங்கினை விற்றார்கள், ஆனால் விலை 133 இனை எட்டிய போது சாமானிய மக்களுக்கு அது ஒரு இலாபமான விலையில் வாங்குவத்ற்கு ஏற்ற பங்காக தெரிந்தமையால் அந்த பங்கினை வாங்கினார்கல் அதனால் சந்தையில் காணப்பட்ட Floating shares அனைத்தும் வற்றியது, இந்த சந்தர்பத்தினை பாவித்து அந்த நிறுவனத்தினர் ஒரு short squeeze நடவடிக்கையில் இறங்கினர் விலை மீண்டும் 150 தொட்டது விலை 150 தொட்டதும் அந்த பங்குடன் நேரடியாக மோதாமல் அந்த பங்கின் பெருமளவான உரிமையினை கொண்ட ECC இன் பங்குகள் 10000 லிவர்மோர் விற்றார். அந்த பங்கு TT பங்கு போலல்லாது சந்தையில் பெரிதாக கவனத்தினை ஈர்க்காத பங்கு 10000 ப்ங்குகள் விற்றதும் அந்த நிறுவன பங்கின் விலை பெருமளவில் சரியத்தொடங்கியது, இதனை பார்த்த மற்ற வர்த்தகர்கள் TT பலவீனத்தினை உணர்ந்தே ECC உயரதிகாரிகள் தமது பங்கினை விற்கிறார்கள் என கருதி TT பங்குகளை விற்க தொடங்கினார்கள், இந்த தடவை TT ஆல் எதுவும் செய்ய முடியவில்லை விலை 90 இற்கு கீழே சரியத்தொடங்கியது. இந்த சம்பவத்தில் சாமானியரகளின் பங்கு வாங்கல் நடவடிக்கையினை விகோப் Automatic rally என வகைபடுத்துகிறார். நடை முறையில் Automatic rally (AR) கீழே உள்ள வரைபடத்தில் (இந்த வாரம் AUDJPY) சிகப்பு கோட்டினால் காட்டப்பட்டுள்ளது, பின்னர் விலை ஒரு சிறிய ranging நகர்கிறது இதனை Re distribution என விகோப் வரையறுக்கிறார்.
  13. பொதுவாக சந்தையில் ஏற்படும் விலை மாற்றம் முதலீட்டாளர்களின் கவனத்தினை ஈர்க்கின்றது, இந்த விலை மாற்றங்கள் மேலோட்டமாக பார்க்கும் போது அது ஒரு எதேச்சையாக (Randomly) நிகழ்வது போல இருக்கும், ஆனால் அடிப்படையில் விலை மாற்றங்களின் பின்ணணி பற்றிய பார்வை சமானிய மனிதர்களில் இருந்து தொழில் முறையான முதலீட்டாளர்களின் பார்வையிலிருந்து வேறுபடுகிறது. சந்தையில் இரண்டு நிலைகள் காணப்படுகிறது 1. Trending market (விலை ஒரு இலக்கு நோக்கியதாக உயர்ந்தோ(up trend) அல்லது இறங்கி (Down trend) செல்லலாம்) 2. Ranging Market ( விலை எந்த வித இலக்கின்றி பக்க வாட்டாக நகருதல் (choppy) அதன் விலை வித்தியாசம் மிக குறுகியதாக இருக்கும்) இந்த இரண்டாவது நிலையான பக்கவாட்டான விலை (Ranging) இரண்டு சந்தர்ப்பங்களில் நிகழும் 1. Accumulation 2. Distribution ஒரு பங்கினை சாமானியர்களின் கண்களுக்கு புலப்படாத வகையில் அதன் விலையினை அதிகரிக்காமல் ( பொருள்களின் தேவை அதிகரிக்கும் போது அதன் விலை இயல்பாக அதிகரிக்கும்) அதனை வாங்கி குவிப்பார்கள் பின்னர் அதே பொருளை விலை ஏற்றி அதிக விலையில் ஆனால் அதிக விற்பனையின் போது ஏற்படும் விலை வீழ்ச்சி ஏற்படாமல் விற்பார்கள். இந்த வாங்கும் விற்கும் நடவடிக்கையே Accumulation & Distribution, இந்த நிகழ்வின் போது விலை பக்கவாட்டாக நகரும். விலை குறைவான பங்குகளை வாங்கியவர்கள் அதனை அதிக விலைக்கு விற்பதற்காக செய்யும் நடவடிக்கை Mark up என அழைக்கிறார்கள் அதே போல அதிக விலைக்கு விற்ற பங்குகளை திரும்ப வாங்குவதற்காக அந்த பங்குகளை சந்தையில் விற்று விலைச்சரிவினை ஏற்படுத்தும் நடவடிக்கையினை Mark down என அழைக்கிறார்கள். இந்த விலை ஏற்ற விலை வீழ்ச்சி நடவடிக்கையின் போது விலை இலக்கு நோக்கி நகரும் (Trending market). விக்கோப்பின் இரண்டாவது விதியான cause & effect இல் காரணமாக (Cause) Accumulation & Distribution உம் காரியமாக (Effect) Mark up Mark down உம் காணப்படும்.
  14. தப்பா நினைக்காதீர்கள், திரியினை சுவாரசியமாக்க குறிப்பிட்டேன் (இந்த பதிவு இட்டதிற்கு காரனம் கள உறுப்பினர்களை ஆர்வமாக பங்கு பற்றுவார்கள் என்பதற்காக).
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.